Loading

காலைவேலை கிளிகள் கீச்சிட , காகங்கள் கரைந்திட, குயில்கள் கூவிட, பக்கத்து வீட்டு நாய்களும் தெரு நாயோட போட்டி போட்டு குரைத்திட,

இவ்வளவு ஆர்பாட்டத்திலும் அந்த கதிரவனும் சேர்ந்து கொண்டு பல்லை காட்டிட, அலாரத்தின் சத்தத்தோடு அரக்க பறக்க எந்திரித்தாள் அவள்.

எழுந்து கண்ணை கசக்கியவளின் விழியில் சிக்கியதோ, “ஆறடி நீள முடியை நான்கடியாக்கிய”, அவளின் உடன் பிறப்பு தான்.

நன்றாக மல்லாந்து படுத்து குறட்டை விட்டுக் கொண்டிருந்தது, அந்த குட்டி அரிசிமூட்டை.

கிறிஸ்துமஸ் விடுமுறை காலங்களின் கொடுமை என்னவென்றால் இவளுக்கு கல்லூரி, அவள் உடன்பிறப்புக்கு விடுமுறை.

இருபது நிமிடத்திற்குள் தயராகியவளின் கண்களுக்கு தென்பட்டது, அலைபேசி.

எடுத்தவளின் முகம் பிரகாசித்தது, நோட்ஃபிக்கேஷனை கண்டு.

எப்பியை திறந்து மீம்களுக்கு வாரி வாரி லைக்ஸையும், ஹா… ஹாவையும் கொடுத்தவளின் மனம் இதமாக இருந்தது.

பின் காலை உணவு உட்கொண்டு முடித்தவள் நேராக கல்லூரிக்கு பயணமாகினாள்.

கேம்பஸில் நுழைவதற்கு முன் தன்னின் அலைபேசியை மறக்காமல் மியூட் போட்டு விட்டு நேராக வகுப்பறையை நோக்கி செல்ல.

அங்கோ, அவளது தோழிகள் முதற்கொண்டு அனைவரும் புத்தகமும் கையுமாக திரிந்துக் கொண்டிருந்தனர்.

இவளுக்கு அதுவரை இருந்த அமைதியும், நொடியில் கலவரமாக வேகவேகமாக தன்னின் அலைபேசியை எடுத்து “லேப் சைக்கிளை” படித்துக் கொண்டிருந்தாள்.

இவளை அப்போது தான் கண்டு கொண்ட அவளது தோழிகள் அவளிடம் நெருங்க, இவள் இப்போது தான் படு சீரியஸாக படித்துக் கொண்டிருந்தாள்.

அதில் ஒரு தோழி, படிச்சிட்டியா எருமை என்று அவளிடம் வினவ, அவளுக்கோ தலை எல்லா திசையிலையும் தானாக ஆடியது.

என்னடி ஆமா வா, இல்லையா என மேலும் அவள் துருவ.

படிச்சிடேன் ஆனா ரிவைஸ் பண்ணனும் டி…. என அவள் பதில் மொழியவும், லேப்பிற்கு விரைந்து வருமாறு ஆசிரியை கூறியதாக ஒரு பெண் வந்து கூறவும் சரியாக இருந்தது.

அப்பனே “விநாயகா” இன்னும் கூட நாலு தடவை படிச்சு எழுதி பாத்திருக்கலாம் கேட்டேனா…. இல்ல கேட்டனாங்கிறேன்…. போச்சு கஷ்டமான பிரோகிராம் வந்தா, கோடிங் தெரியாம அசிங்கப்படனும்.

இவ்வாறு அவள் புலம்பியவாரே பெயர் வரிசை படி மூன்றாம் ஆளாக லேப்பிற்குள் நுழைந்தாள்.

கடவுளே, இந்த அம்மா அப்பா ‘A’ல தான் பேர் வெக்கனுமா ‘z’ல வெச்சிருக்க கூடாதா என புலம்ப அதற்குள் லேப் அசிஸ்டெண்ட் கையொப்பம் இட ஒரு தாளையும், சூப்பர்வைசர் அவள் பதிவு எண்ணை சரி பார்த்து அவளுக்கான வினா தாளையும் வழங்க.

வினா தாளை நோக்கியவளின் இதயம் இடமாறி துடிக்க ஆரம்பித்தது (ஸ்ப்பாஆஆ…. இன்னுமா புரிலே படிச்சது வரலை பா).

கேள்வி தாளை நன்றாக உத்துவிட்டு சரி, நம்ம முன்னாடி ஒரு நாள்… என்னிக்கோ படிச்சது தான் இதோட ஆன்சர்.

கவலை படாதே டா பொம்முக் குட்டி நீ கரெக்டா எழுதிடுவே, எரர் மட்டும் வராம இருந்துட்டா போதும் கடவுளே…….

ம்ம்….. எழுதுடா கை புள்ள என்று மனதில் இறைவனை வழிபட்டு எழுத தொடங்கி, கேள்விக்கான விடையை அறிய அவளது எண்ணம் பின்னோக்கி நகர்ந்தது.

முக புத்தகத்தை திறந்த சிறிது காலத்திலேயே பல குரூப்புகளில் நல்ல பிள்ளையாக “இருக்கிற இடம் தெரியாம இருந்திடும்” என்னும் கொள்கையோடு வந்து கொண்டிருந்தவளின் கண்களில் பட்டது, அந்த ஒரு குழு.

குழு ஆரம்பத்தில் மிக மிக அமைதியாக சென்றாலும், அடாவடியாக சிரிப்பு மழையில் தத்தளிக்க வைத்த தருணம் அந்த “பட்டாசு போட்டி”.

சிலர் கண்டரியாத மற்றும் கேள்விபடாத பட்டாசுகளின் பெயரை எழுத்தாள களஞ்சியங்களுக்கு வாரி, வழங்கி, வதக்கி விட்டனர் குழு உறுப்பினர்கள்.

அதில் சில பட்டாசுகளின் பெயரை உச்சரிக்க தெரியாமல் தொபக்கென விழுந்து விழுந்து இளித்து வைத்து, அந்த பட்டாசுகளிடமிருந்து செல்ல பாராட்டையும் முறைப்பையும் ஓரங்கே பெற்ற தருணமெல்லாம் இப்போது நினைத்தாலும் சிரிப்பு மழைக்கு பஞ்சம் இராது.

அடியே எருமேஏஏஏ… மலரும் நினைவுகளே எல்லாம் மூட்ட கட்டிட்டு, கோடிங் எப்படி எழுதணும்ன்னு யோசி டி எருமை மாடு என மனசாட்சி காரி உமிழே அதையும் பெற்றுக் கொண்டு விடை காண முயன்றாள்.

முந்தைய நாள் கன்டெண்ட் கொடுக்கும் “அம்மு கா” விற்காக ஊசி பட்டாசு, சிவஸ்ரீ, ஜானு க்ரூஸ் இவர்கள் போட்ட மீம் வரை நியாபகம் இருக்க.

மூஞ்சி புத்தகத்தில் ஒரு கண்ணும் பயிற்சி புத்தகத்தில், ஒரு கண்ணும் வைத்து கொண்டு அன்று முழுவதும் படித்து பத்து பக்கத்திற்கு மறுபடி… மறுபடி எழுதி பார்த்த கோடிங்கும் நினைவில்லை, அதற்கு உபயோகிக்கும் கான்செப்டும் நினைவில்லை.

இப்படியே யோசித்து யோசித்து எப்படியோ அவள் அரும்பாடு பட்டு பெரும்பாடாக அந்த லேப்பை விட்டு வருவதற்குள் ஒரு வழி ஆகிப்போனாள்.

இவ்வளவு ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்புக்காக, மறுபடியும் அதே மூஞ்சு புத்தகத்தை திறக்க.

அங்கு “சுபா”கா வே ஒரு நாள் கன்டெண்ட் அக்கா வா மாத்திட்டு, ஆல்ரெடி மீம்களுக்கு கன்டெண்ட் கொடுத்திட்டு இருக்கிற “அம்மு”காக்கு ரெஸ்ட்ன்னு சொல்லிட்டாங்க.

சரி நம்ம மேகா அக்கா எங்கன்னு வலை வீசி தேடினா, தஞ்சை “பிரகதீஸ்வரர் கோவில்” கோபுரத்தை பார்த்துட்டேன்னு ஃபோட்டோ ஷேர் பண்ணுறாங்க.

இதெல்லாம் ஒரு ஒரு போஸ்டாக தள்ளியவளுக்கு, “அட யாருமே என்னையே தேடலையா பா” சிவா, ஊசி, ஜானு கா மாறி மீம்ஸே வாரி இரைக்கலைனாலும் நானும் ஒரு மீம் கிரியேட்டர்ங்கிறதே மறந்துட்டாங்களா.

ஆமா, அம்மு கா எப்போ வருவாங்க மீம் எல்லாம் அவங்கள பத்தி இல்லாம இருந்தா எப்படி, என வெகுவாக யோசித்து.

நாளின் இறுதியில் கன்டெண்ட் கொடுக்கும் “அம்மு” க்கா நல்ல உடல் ஆரோக்யத்துடன் எழுந்து வந்து பல கன்டெண்டுகளை கொடுக்குமாறு, ஒரு போஸ்ட்டை போட அதில் பல நல்ல உள்ளங்கள் தன்னையும் தேடியதாக தெரிந்ததில் மகிழ்ச்சியின் கடலில் ஒருபுறம்,

அதற்கு அடுத்த நாள் மீம் கன்டெண்ட் கொடுக்கும் அம்முக்கா வே ஒரு போஸ்ட் போடும் அளவு தான் பூஸ்ட் செய்து விட்டதை முன்பே ஞான திருஷ்டியில் அறிந்தது போல, அன்றையே நாளை கழித்து விட்டு உறங்க சென்றாள் பல மனங்களை கொள்ளை கொண்ட அர்ச்சனா என்கின்ற “அர்ச்சு மா”🙈🙈🙈🙈

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
10
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    8 Comments

    1. 😍😍archu baby un malarum ninaivukala padichu unoda mind kula poi suthi partha feel da.

      Namba thoorigai amaithiya adavadi akiyatha ninacha perumaiya iruku.

      Examla kuda ammu ninaipave irunthuruka 🤣🤣🤣🤣🤣 una ambutu yosika vachatha ninacha romba perumaiya iruku da

      1. Author

        Ama ka ammu ka mela avlo loves athaan exam hall la kooda avanga nyabagam varanga🤣🤣🤣🤣

    2. ஆர்வமா படிக்க வந்தா என்னடா பண்ணி வச்சிருக்க 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 உன் வரலாற எழுத சொன்னா என்னைய வதக்கி வச்சிருக்க.. 🤣🤣🤣🤣 . உன் மண்டகுள்ள நா மட்டும் தான் இருக்கானா அப்போ 🤣🤣 இது தெரியாம நேத்து nyt நான் luv failure aagitanu feeling pannitane 😭😭😭😭😭😭😭😭….

      1. Author

        🤣🤣🤣🤣 kanna moodi therantha ungala kalikurathu thaan nyabagam varuthu ka🤣🤣🤣

    3. பரீட்சைக்குப் போய், பதில் எழுதாம கனவு கண்டுட்டு, அத போஸ்ட் வேற போடுற… போடா டேய், படிச்சுட்டு நல்லா கெக்கெபிக்கன்னு சிரிச்சுட்டேன்…🤣🤣🤣🤣 நா போட்ட மீம்ஸெல்லாம் ஞாபகம் வச்சுருந்தியா டா??? இதுக்காகவே உனக்கு ஸ்பெஷலா, நாலு மீம் போடலாம் போலயே🤣🤣🤣

      1. Author

        Podra oosi meme thaana tharalama enra perumaiye ellam pugzhandhu podu🙈🙈🙈 sariya🤣😁

    4. டேய் 🤣🤣🤣 உனக்கு அம்முக்காவ மட்டும் தான்டா ஞாபகம் வருது… எனக்கு யாரைப் பார்த்தாலும் மைன்ட் அந்த க்ரூப் உள்ளயே போய் ஏதாவது ஒன்ன நெனச்சி தனியா சிரிக்கிறேன்டா🤣🤣🤣🤣🤣🤣🤣