Loading

அத்தியாயம் 15

“ஏன்டா இப்டி செஞ்ச? குடிக்குற அளவுக்கு உனக்கு தைரியம் வந்துடுச்சா பிரவீனு? ப்ரெண்டுன்னு நான் ஏன்டா இருக்கேன்? எதுக்கு இருக்கேன்? எவ்ளோ திமிரு இருந்தா இப்டி செஞ்சு இருப்ப?”

“ப்ச், அப்டி இல்லடி… ப்ச் இல்ல இதழ்”

“நீங்க பேசாதீங்க பிரவீன். என்னதான் நடக்கட்டுமே ஏன் குடிக்குற அளவுக்கு?” இளையாவாலும் தாங்கமுடியவில்லை. இரவோடு இரவாக இருவரும் பிரவீனின் வீட்டிற்கு வந்திருந்தனர். அவனின் நிலைமையோ இன்னும் கவலைக்கிடமாகத்தான் இருந்தது.

மாலை ருக்மணி தெய்வானையிடம், “இந்தா தெய்வா நீ கேட்டன்னு எல்லாம் மல்லியப்பூவயும் ராஜி கட்டிட்டா. நேரத்துக்கு ரெண்டு பேரயும் உள்ள அனுப்பிடு. அப்ரோம் உன் மருமவ தீட்டாமே அப்டியா?”

“அப்டிலாம் இல்லையே அத்த. எதுவா இருந்தாலும் பிறையோ இதழோ சொல்லி இருப்பாங்களே. அவளுக்கு அடுத்த வாரம் தான்.”

“ஆமா, இல்லன்னா சாமி ரூமுக்குள்ள கூட விட்டுருக்க மாட்டேன். இங்க பாரு, இப்போவே மருமவ மருமவன்னு அவளுக்கு ரொம்ப இடம் கொடுக்காத. கொஞ்சம் இறுக்கிபுடி. இல்லன்னா, உன் பையன இழுத்துட்டு தனியா போய்டுவா.”

“தனியா போனாலும் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லத்த. ரெண்டு பேரும் சின்ன புள்ளைங்க கிடையாதே. ரெண்டு பேரும் வேலைக்கு போறாங்க. சொந்தமா சம்பாதிக்குறாங்க. தனியா இருந்தாதான், எப்டி சரியா குடும்பத்த கொண்டு போக முடியும்னு தெரியும். நம்ம கூடயே வச்சிட்டு இருந்தா எப்டி? தனியா போறதும் கூட இருக்குறதும் அவங்க விருப்பம். நேரமாகுது, நான் போய் இதழ ரெடி பண்றேன்” என்றபடி அந்த பேச்சிலிருந்து இலாவகமாக விலகினார் தெய்வானை. இல்லையேல் ருக்மணியின் பேச்சு காதை கிழித்துவிடும்.

ஆனால், இதழுக்கோ இந்த வகை பேச்சு சுத்தமாக பிடிக்கவில்லை. இன்னமும் இத்தகைய கருத்துக்களை தலையில் வைத்துக்கொண்டு வாழும் மக்களை என்னவென்று சொல்வது என்றே எண்ணினாள்.

தெய்வானை அவளருகில் வந்தபின்னரே தன்னிலை அடைந்தாள் இதழ். அவளை உறுத்துக் கவனித்த தெய்வானை புரிந்துக் கொண்டார்.

“அவங்க சொல்றத எல்லாம் மனசுல வச்சிக்கிட்டு இருந்தா இந்த காலத்துல நம்மளால நிம்மதியா இருக்க முடியாது சரியா இதழ். அவங்க அப்டித்தான். என்னைப் பொறுத்தவரை மனசு சுத்தமா தெளிவா இருக்கணும். உனக்கு இன்னைக்கு முடியாதுன்னு தெரியும். நான் அவன்கிட்ட சொல்லிக்குறேன். ஆனா, இவங்கக்கிட்ட சொல்லமுடியாது இல்லயா? அதனால ப்ர~; ஆகிட்டு ஒரு காஃபி குடிச்சிட்டு ரெடியா இரு. ஒரு ஏழு மணிபோல ரூமுக்கு போய்டு என்ன?” என்றிட,

தன் அத்தையின் புரிதலையும் தெளிவான பேச்சையும் கேட்டு ஆச்சரியத்தாள் இதழ்.

“ச்சோ ஸ்வீட் அத்தம்மா! நான் திகழ் ரூம்ல இருக்கேன்” என்றபடி அவள் சென்றுவிட, இந்த மகிழ்வு எப்போதும் அனைவர் வாழ்விலும் இருக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டார் தெய்வானை.

திகழோ இன்னும் அகிலனின் பேச்சில்தான் உழன்றுக்கொண்டிருந்தாள். அகிலன் வெகுநேரமாக மண்டபத்தில் மகிழாழி பின்னோடே சுற்றிக்கொண்டிருக்க, திகழ் கோபத்தோடு அகிலனை பின்தொடர்ந்தாள். பிரவீனும் இதைக்கவனித்துக் கொண்டுதான் இருந்தான்.

“மகிழ்…”

“சொல்லு பிரவீன்.”

“இதழோட ட்ரெஸ் அன்ட் திங்க்ஸ்லாம் அந்த ரூம்ல இருக்கு. பேக் பண்ணிடு. அவங்க கோவிலுக்கு போய்ட்டு வந்த உடனே நாம எடுத்துட்டு வீட்டுக்கு போகணும்.”

“ம்ம், சரிடா. அப்ரோம் கேட்கணும்னு இருந்தேன். திகழ எப்போ ஓகே பண்ணப் போற?” என்றுக் கேட்டாள் சிரித்துக் கொண்டே.

“முதல்ல சொன்ன வேலைய போய் செய்.” என்று அவளின் தலையில் கொட்டி அனுப்பியவன் அகிலனை நோக்கி சென்றான்.

திருமணம் முடிவானதிலிருந்தே திகழுக்கும் அகிலனிற்கும் ஏதோ சரியில்லை என்பதை கணித்துவிட்டான் பிரவீன். ஆனால் சரியான காரணம் மட்டும் புலப்படவில்லை. எப்படி யோசித்தும் அதில் ஒரு காதல் மறைந்து இருக்குமா என்ற சந்தேகம் அவனுக்கு துளியளவும் தோன்றவேயில்லை.

“நீங்க கோவிலுக்கு போகலயா பிரவீன்?”

“இல்ல ப்ரோ! இங்க மண்டபம் காலி பண்ணணும். செட்டில்மென்ட் இருக்கு. லக்கேஜ்லாம் எடுக்கணும் இல்லயா? அதான், நானும் மகிழும் இங்க இருக்கோம். நீங்க போகலயா?”

“இல்ல பிரவீன். உண்மைய சொல்லணும்னா போக தோணல. எனக்கு இளையா மேல ஒரு கோபம், அதான். லீவ் இட்”

“அகிலன், உங்க கிட்ட முக்கியமான விசயம் சொல்லணும். மகி” என்;று அவன் துவங்கும் முன்,

“அகி…” என்று வந்து நின்றாள் திகழினி.

“ப்ச், திகழ் அப்டி கூப்டாதன்னு சொல்லி இருக்கேன்ல. ஏன் இரிட்டேட் பன்ற?”

“நான் இரிட்டேட் பன்றனா?” என்று பல்லைக் கடித்துக் கேட்டவள், கண்களை மூடி தன்னை சமன்செய்துக் கொண்டாள். பின், பிரவீனை பார்த்தவள், “பிரவீன் நான் இவர்கிட்ட தனியா பேசணும். சோ…”

தலையசைத்தவன் குழப்பத்தோடு நகரப்போக, “பிரவீன் எங்கயும் போகத் தேவயில்ல. எதுவா இருந்தாலும் பிரவீன் முன்னாடியே சொல்லு.”

“இல்ல அகிலன். நீங்க பேசுங்க அங்க மகிழ் தனியா பேக் பண்ணிட்டு இருப்பா” என்றவன் விலக போக,

“அதான் சொல்றேன்ல பிரவீன். இருங்களேன். திகழ் என்னன்னு சொல்லு”

“எதுவா இருந்தாலும் இவர் முன்னாடியே கேட்கலாமா? ஃபைன்! நானும் நேத்துல இருந்து பாக்றேன், மகிழாழி பின்னாடியே சுத்திட்டு இருக்கீங்க? என்ன நினச்சிட்டு இதெல்லாம் செய்றீங்க? இப்போ உங்க மகி நியாபகம் வரலயா?” என்று காய்ந்தாள்.

அகிலன் பேச வர, அவனை கையமர்த்தி தடுத்தவள் “இப்போ கூட நான் இளையா தங்கச்சியாதான தெரியுறேன்? அதத்தான சொல்ல வரீங்க?” என்று அவளே பதிலையும் கூறிவிட, அகிலன் அவளையே வெறித்துக் கொண்டிருந்தான். தற்போதுதான் பிரவீனிற்கு விளங்கியது. என்னவென்று விவரிக்க முடியாத அளவிற்கு இருந்தது பிரவீனின் மனது. உள்ளுக்குள் ஆழிப்பேரலையே நிகழ்ந்துக் கொண்டிருந்தது. திகழின்மேல் உண்டான பிடித்தம் எப்போது காதலாக மாறியது என்று அவனே அறியாத ஒன்று. தற்போது தன்னவளின் விருப்பம் வேறொருவரின்மீது இருக்கின்றது என்ற அறிந்த நொடி செத்துப்பிழைத்தான் பிரவீன்.

திகழே தொடர்ந்தாள், “சோ உங்களுக்;கு லவ் பன்றதுல பிரச்சனை இல்ல. என்னை லவ் பன்றதுல தான் பிரச்சனை. ரைட்?” திகழும் அதற்குமேல் பேசாமல் அவ்விடத்தை விட்டு அகன்றாள்.

“புரிஞ்சிக்கவே மாட்டிங்குறா பிரவீன். சின்ன வயசுல இருந்து இவள பாக்குறேன். எந்த இடத்துலயும் இவமேல அந்த மாதிரி எண்ணம் வந்ததே கிடையாது.” என்றவனின் சொல்லில் சிந்தனை முடிச்சுகளோடு நகர்ந்தான் பிரவீன்.

தன் வலி தீர குடித்து முடித்தவன் கால் போன போக்கில் சென்றுக் கொண்டிருந்தான். வழியில் பிரவீனும் மகிழும் வந்துக் கொண்டிருக்க, போதை தலைக்கேறியதில் தான் செய்யும் செயலின் தீவிரத்தை மறந்து போனான் அகிலன்.

“மகி… எப்போ இருந்து நீ இவன்கூட சுத்திட்டு இருக்க?”

“அகிலன்… என்ன பன்றீங்க? குடிச்சிருக்கீங்களா? என்ன ஆச்சு?”

“நான் உன்கிட்ட பேசல பிரவீன். அவ என்னோட மகி. ஆனா என்னையவே தெரியாத மாதிரி எப்படி ரியாக்ட் பன்ற நீ?”

“மகிழ் நீ முன்னாடி வீட்டுக்கு போ!”

“நீ யாருடா அவள போக சொல்ல? என்னை பாத்தா பைத்தியம் மாதிரி தெரியுதா? மகி, நில்லுடி. என்னை மறந்துட்டியா? நீ செத்துட்டன்னு சொன்னாங்கடி. இவனும் கூடத்தான் இருந்தான். ஏன் மகிமா என்னை விட்டுப் போன?” கண்களில் வலியைத் தேக்கி அவன் கேட்டிட, ஒருபக்கம் மிரண்டு போனாள் மகிழாழி.

“மகி, உன்ன முன்னாடி போக சொன்னேன்” என்று மறுபக்கம் பிரவீன் சத்தம்போட, சரியென்று தலையசைத்தவள் வேக எட்டுகளில் அகிலனை கடந்து செல்ல முற்பட்டாள். அதற்குள் அவளின் கையைப் பிடித்து நிறுத்தியவன், “மறுபடியும் என்னை விட்டு எங்க போற மகி.?”

“கைய விடுங்க” அவனின் பிடி அழுத்தமாய் இருந்ததில் அவளால் விடுவிக்க முடியவில்லை.

பிரவீனும் அகிலனின் கையை விலக்க முற்பட்டான். “மகிழ் கைய விடுங்க அகிலன். நீங்க நினைக்குற மாதிரி மகிழ் உங்க லவ்வர் கிடையாது.”

அவனின் கூற்றில் கோபமுற்றவன், “அத சொல்ல நீ யாருடா? அவ என்னோட மகி. வா மகி நாம இளையாக்கிட்ட போகலாம். நீ அவன்கிட்டயே என்ன நடந்துச்சுன்னு சொல்லு.”

“முதல்ல என் கைய விடுங்க. வலிக்குது.” அவளின் கண்ணீரில் சற்று கையைத் தளர்த்தியவன் முழுவதுமாக விடவில்லை. அதற்குள் பிரவீனும் மகிழை தன்பக்கம் இழுக்க, தடுமாறியவள் அகிலனின்மேல் விழுந்திட போதையின் தாக்கத்தால் பின்விளைவுகள் அறியாது அவளின் இதழ்மேல் தன்னிதழை பொருத்தினான் அகிலன்.

“அகிலன் என்ன பன்றீங்க? அவள விடுங்க?”

அகிலன் அவனின் பிடியே இறுக்கமாக இருந்திட மகிழோ அவனின் கைகளிலேயே துவண்டு போனாள்.

பிரவீனுக்கு வந்த கோபத்தில் அகிலனை இழுத்து அறைந்தே விட்டான். அப்போதும் மயக்கம் தெளியாதவன் பிரவீனை பதிலுக்குத் தாக்க, இருவரும் மயங்கி விழுந்த மகிழாழியை கவனிக்காமல் போயினர். அந்த நேரம் மழையும் வலுக்க, சிறிது நேரம் கழித்து மகிழாழியே தன்னிலை வந்து இவர்களை பிரிக்க வேண்டியாதாகிற்று.

இருவரும் கந்தர்வகோலமாக காட்சியளித்தனர். அவர்களின் நிலையைக் கண்டவள் மிகவும் பயந்துபோனாள். உடனே இதழுக்கு அழைத்து அனைத்தையும் கூறிவிட்டாள் மகிழ்.

இதோ, இருவரும் தற்போது கிளம்பி வந்துவிட்டனர். இவர்கள் வந்தது அங்கு யாருக்கும் தெரியாது என்றிருக்கையில் அனைத்தையும் கவனித்துக் கொண்டு பின்னோடே வந்து சேர்ந்தாள் திகழினி.

நடந்த அனைத்தையும் கேட்டவள் சத்தம் வராமல் தன் இல்லம் நோக்கியும் புறப்பட்டுவிட்டாள் திகழினி.

இளையாதான் தலையில் கையை வைத்து அமர்ந்துவிட்டான்.

“இவனுக்கு என்ன பிரச்சனை இதழ்? ஏன் இப்டிலாம் செஞ்சான்? மகி இழப்புக்கு நானும் காரணம்னு இன்னும் எனக்கு உறுத்திக்கிட்டே இருக்கு இதழ். இதுல இவன் வேற மகிழாழி கிட்ட இப்டி நடந்து இருக்கான். என்னை மன்னிச்சிடுங்க பிரவீன். எனக்கு என்ன செய்றதுன்னே தெரியல.” அவனின் வலி மிகுந்த குரல் துணைவியாக இதழையும் நண்பனாக பிரவீனையும் ஒருசேர தாக்கியது.

“மகிய கண்டுபிடிக்குறது என்னோட கடமை ப்ரோ. எதுக்கும் கவலபடாதீங்க. கண்டிப்பா மகிய பத்தியும் அவங்க இறந்ததுக்கான காரணத்த பத்தியும் சீக்கிரம் கண்டுபிடிச்சு சொல்றேன்.”

“அதென்ன சொல்றேன், சொல்றோம். என்னைய விட்டு நீ மட்டும் கேஸ கண்டுபிடிக்க போய்டுவியா?” என்று அப்போதும் மல்லுக்கு நின்றாள் இதழினி.

“யம்மா தெய்வமே, முதல்ல ரெண்டு பேரும் யார் கண்ணுலயும் படாம வீட்டுக்கு போங்க. ஆல்ரெடி மணி ரெண்டு ஆச்சு? இதுக்கு மேல நான் எதயும் சொல்ல முடியாது. கிளம்புங்க”

இரண்டுபேரும் வந்த வழியிலேயே யாரும் அறியாமல் அறைக்குள் புகுந்து கொண்டனர். அவ்வாறுதான் அவர்கள் எண்ணியது. ஆனால், உறவுக்கார பெண்மணி ஒருவரும் திகழினியும் பார்த்து விட்டனர்.

‘என்ன பிள்ளைங்களோ? இந்நேரத்துல எங்க போய் சுத்திட்டு வருதுங்க பாரேன். முதல்ல இத தெய்வானை கிட்ட சொல்லணும்.’ என்று எண்ணியபடி அந்த பெண்மணி சென்றிருக்க,

“மாட்டிக்காம வர தெரியுதா பாரேன்!” என்று தலையில் அடித்தபடி தன்னறைக்குள் புகுந்துக் கொண்டாள் திகழினி.

மனதெல்லாம் பாரமாக இருந்தது. சிறுவயதில் இருந்து அவனின் மேல் எந்தவித ஈர்ப்பும் கிடையாதுதான். ஆனால் பிடித்தம் என்பது அண்ணனின் தோழனாய், ஆபத்தில் இருந்து காப்பாற்றுபவனாய், ஜாக்கியுடன் விளையாடும் குழந்தையாய் அகிலனை அத்தனை பிடிக்கும். அவன் என்று எந்த காரணத்திற்காக வெளிநாடு சென்றான் என தெரியாது. ஆனால், அவன் இல்லாத இத்தனை நாட்கள் அவன்பால் துளிர்விட்ட நேசம் காதலாய் மாறியதாய் அவள் உணர்ந்தாள். மொட்டு விட்டு தன்னுள் மலர்ந்த நேசம் முழு மலராகும் முன்பே உதிர்ந்து விட்டது. அதுவும் அதற்கு அவன் தந்த விளக்கம் ‘இதுவரை இளையாவின் தங்கையாக மட்டுமே பார்த்திருக்கிறேன். உன்மேல் காதல் என்பது துளியளவும் இல்லை’ இதுவே அவளின் அடிமனதை தாக்கியது.

மகிழாழி வீட்டில் தன் படுக்கையறையில் அகிலன் தன் கையை பிடித்ததையும் அவன் நடந்து கொண்ட விதமும் இன்னும் உள்ளுக்குள் உதறல் எடுத்தவண்ணம் இருக்க, கையை தடவியபடி சிந்தித்துக் கொண்டிருந்தாள் மகி.

“அவங்களுக்கு என்ன ஆச்சு? என்கிட்ட அப்டி ஏன் நடந்துக்கிட்டாரு.? அவர பத்தி பிரவீன் நல்ல விதமா தான சொன்னான். ஆனா, ஏன் இப்டி?” மண்டை குடைந்தது மகிழாழிக்கு.

இத்தனை பேரின் மனநிலையை பாதித்தவனோ, “மகி என்னை உனக்கு அடையாளம் தெரியலயா? நீ ஏன்டி என்னை விட்டு போன?” என்று புலம்பியபடியை நித்திரையை தழுவினான்.

தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்