ஜாலம் 10
காலையில் எழுந்துகொண்ட மீனாட்சி, தன்னை இறுக அணைத்தபடி உறங்கிககொண்டிருந்தவனுக்கு நெற்றியில் ஒற்றை முத்தத்தை வைத்து, குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள்…
தயாராகி வெளியே வர.. அவனோ அப்போதுதான் எழுந்தவன், அமர்ந்து அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்..
“குட் மார்னிங் ஆரு கண்ணா… எழுந்துடீங்களா?..“
“ம்ம்ம் மீனும்மா… டாமும் மகியும் எங்க?..” என்றான் கண்களை கசக்கியபடி..
“எனக்கும் தெரியலையே கண்ணா.. நான் எழும் போதும் அவங்க இல்லையே… ஓகே நீங்க வருவீங்களாம் அம்மா உங்கள குளிக்கவெச்சு ரெடி பண்ணுவேனாம்.. அப்பறம் நாம ரெண்டு பேரும் போய் அவங்கள தேடுவோமாம்..” என்றவள் அவனை தூக்கிகொண்டாள்…
__________________________________________
“யம்மி.. சூப்பரா இருக்குப்பா?.. என்னப்பா இது?…”
“இது குரக்கன் கஞ்சி டா.. என் மகிக்குட்டி சீக்கிரம் அப்பா போல பெரிய ஆளாகணும்ல..” என்று அங்கே சமயலறை மேடையில் அமர்ந்திருந்தவளின் மூக்கை செல்லமாய் பிடித்து இழுத்துவிட்டபடி சொன்னான்..
“ஆரு அதான் என்ன விட பிக் பாயா இருக்கானாப்பா…”
“ஆமாடா தங்கம்.. மகிக்குட்டியும் சீக்கிரமே அப்படி ஆகலாம்…”
“அப்பாவும் மகளும் எங்கள விட்டுட்டு இங்க கதை பேசுறீங்களா?…” என்று மீனாட்சி ஆருவுடன் உள்ளே நுழைத்தாள்..
“பின்ன நாங்க என்ன உன்ன போல கும்பகர்ணியா?..” என்ற மகி, வேந்தனுடன் கையடித்துக்கொண்டாள்..
“அது என்ன நாங்கனு உன்னையும் சேத்துகிற… நேத்துவரை நீயும் அதே கும்பகர்ணிதான்டி…” என்ற மீனாட்சி ஆருவை தூக்கி மகி அருகில் அமரவைத்தவள்.. அவளும் பாய்ந்து அமர போக.. அதற்குள் வேந்தனே இடை பற்றி தூக்கி அவளை அமர வைத்திருந்தான்…
மீனாட்சிக்கு ஒரு நிமிடம் உலகமே உறைந்த நிலை தான் அவன் ஸ்பரிசத்தில்.. அவளிடையில் அவன் விரல்களின் குறுகுறுப்பு இன்னும் மிகுதி இருப்பது போல் ஒரு தோற்றம்…
அவனும் வேண்டும் என்றெல்லாம் செய்யவில்லை.. அவள் உயரத்துக்கு கஷ்டமே என்று தான் தூக்கி இருந்தான்…
“மீனும்மா.. மீனு..” என்ற குழந்தைகளின் சத்தத்திலே நிதர்சனதுக்கு வந்தாள் பெண்ணவள்…
அவள் நிமிர்ந்து பார்க்க.. வேந்தனோ, “எத்தன வாட்டி கூப்பிடுறது.. கஞ்சி குடி… என்ன தூக்கம் இன்னும் போகலையா?.. இன்னும் கொஞ்ச நேரம் தூங்கி இருக்கலாமே.. பிரேக்பாஸ்ட் டென் மினிட்ஸ்ல ரெடி ஆகிடும்.. சாப்பிட்டு உங்க அம்மா வீட்டுக்கு போகலாம்.. நேத்து இருக்க சொல்லியும் கேக்காம கூட்டிட்டு வந்துட்டேன் ஏதும் நினைச்சிக்க போறாங்க…” என்றதும் தான் தாயின் எண்ணமே வந்தது அவளுக்கு..
அவனுக்கு முன் எழுந்துகொள்ள வேண்டும்.. டீ கொடுக்க வேண்டும்.. சமையல் செய்யவேண்டும்.. குழந்தைகளை தயார்படுத்த வேண்டும்.. என்றெல்லாம் வைதேகி தான் அத்தனை சொல்லி அனுப்பி இருந்தாரே.. ஒன்று கூட செய்த பாடில்லை அவனே அனைத்தையும் செய்து அவளையும் கவனிக்கிறானே..
“அப்பா குமரேசா உன் பொண்டாட்டி மட்டும் இத பாக்கணும்.. பாட்டு போடவே தேவையில்லை, உன் பொண்டாட்டி பாட்டே இல்லாம ஆடி இருப்பாங்க?..” என்று மனதுக்குள் பேசி சிரித்துக்கொண்டாள்..
“என்ன சிரிப்பு.. வீட்டுக்கு போறன்னதும் போதுமே இந்த பொண்ணுங்களுக்கு?..”
“இல்ல எங்கம்மா..” என்று ஆரம்பித்தவள் நேற்று அவர் சொன்னவற்றை அவனிடம் சொல்ல..
ஆருவிடமும் மகியிடமும் அவர்கள் கஞ்சி குடித்த பத்திரத்தை கழுவும் படி சொன்னவன்… அவர்களை சாப்பாடு மேசைக்கு அனுப்பி மீண்டும் மனைவியிடம் வந்தான்.
“இதுல என்ன இருக்கு மீனா, அதென்ன பொண்ணுங்க தான் செய்யணும் பசங்க செய்யக்கூடாதுனு, இப்படி வீட்டுல பொண்ணுங்கள சொல்லியே வளக்குறதால தான்.. கூட வளருற பசங்களுக்கும் நம்ம பையன் இதெல்லாம் பண்ணக்கூடாதுனு ஒரு கர்வம் ஆரம்பத்துலேயே போர்ம் ஆகிடுது.. அதையே அவங்க வைஃப்கிட்டயும் திணிக்கிறது தான் இன்னைக்கு நிறைய டிவோர்ஸுக்கு காரணமும் கூட..” என்றான் ஆழமான அர்த்தத்துடன்
அவளோ “ம்ம்ம்” என அவனை கருத்தை ஆமோதிக்கவும் செய்தாள்..
“அம்மா சொல்லுறாங்கனு நீயும் இதெல்லாம் பண்ணனும்னு கட்டாயம் இல்ல.. அவங்க கேட்டா நீதான் பண்ணணு சொல்லிடு.. பட் ரெண்டு பேரும் சேர் பண்ணி பண்ணிக்கலாம்… ரெண்டு பேரும் ஒர்க்குக்கு போறோம்.. பசங்களையும் பாத்துக்கணும்.. நம்ம பசங்களுக்கு நாம தான் முதல் பாடப்புத்தகம்.. நம்ம ஆக்டிவிட்டீஸ் பாத்துத்தான் அவங்க கத்துப்பாங்க..”
“ரொம்ப நல்லா பேசுறீங்க.. உங்கள போலவே உங்க பேச்சும் ஸ்வீட்..”
“அப்படிங்களா மேடம் ரொம்ப ஸ்வீட்டோ.. பட் டேஸ்ட் பண்ண இன்னும் நாளாகுமே.. எப்படி தெரிஞ்சிகிடீங்கலாம்?..” என்றான் கள்ள புன்னகையுடன்.. மீனாட்சி முறைக்க
மீண்டும், “அதான் மா.. இன்னும் லவ் வர வைக்கலையே நீ.. பாரு ஒரு நாள் வேஸ்ட்டா போச்சு.. சீக்கிரம் வர வைக்கிற வழிய பாரு.. அப்பறம் ஸ்வீட் டேஸ்ட் பண்ண முடியாம போய்ட போகுது..” என்றான் மயக்கும் புன்னகையுடன்..
“உங்கள பத்தி தெரிஞ்சும் பேசுறேன் பாத்தீங்களா?… என்ன சொல்லணும்…”
“என்ன சொல்லணும்.. ஸ்வீட் டேஸ்ட் பண்ண சொல்லனுமா?… அதுசரி என்னபத்தி முழுசா தெரியுமா?.. வாய்ப்பில்லையே அதான் ஒன்னும் நடக்கலயேமா…”
“ஐயோ.. ஆள விடுங்க.. நான் ஓடிட்டேன்..” என்றவள் அவன் எடுத்து வைத்திருந்த உணவு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு சாப்பாட்டு மேசைக்கு ஓடினாள்..
“இன்னைக்கு நீதான் ஊட்டி விடணும்… அதுவும் எப்படினு தெரியும்ல…” என்று சமையலறையில் இருந்தே அவன் கத்த அவளோ காதை மூடிகொண்டாள்.. இவனை சமாளிக்க முடியாமல்..
__________________________________________
“வாங்க மாப்பிள… உள்ள வா மீனு.. மகி ஆரு வாங்கடா…” என்று பல நாள் பிரிந்திருந்தவர் போல ஒவ்வொருத்தராய் அழைத்தார் குமரேசன்..
“வர்றேன் மாமா… காலைல சாப்டீங்களா?.. கொஞ்சம் களைப்பா தெரியுறீங்களே..” என்றான் அவரை பார்த்தபடி..
“நல்லா சொல்லுங்க மாப்பிள.. நானும் காலைல இருந்து மருந்து போடணும் சாப்பிடுங்கனு சொன்னா கேக்கல, வாசலையே பாத்துட்டு உக்காந்திருக்காரு..” என்றார் வைதேகி கணவரின் முறைப்பையும் மீறி..
“ஏன்ப்பா மார்னிங் சாப்பிடல.. லஞ்சுக்கு வர்றதா தான சொன்னேன்.. சாப்பிடிருக்கலாம்ல..”
“அதெல்லாம் இல்ல மீனு அப்பாக்கு பசி இல்லடா அதான்…”
“மா சாப்பாடு எடுத்து வை… நீ எந்திரிப்பா..” என்றவள் விடாமல் அவரை சாப்பிட வைத்துவிட்டே நகர்ந்தாள்..
சாப்பிட்டு வந்து குமரேசன் வேந்தன் அருகில் அமர, வைதேகி வந்தவர்களுக்கு வெயிலுக்கு இதமாக பலரசம் கொண்டு வந்திருந்தார்..
“மகி, ஆரு.. மேல போய் விளையாடுங்கடா..” என்று அவர்கள் செல்லும் வரை காத்திருந்தவன்..
குமரேசனிடம் திரும்பி “என்ன மன்னிச்சிடுங்க மாமா.. மீனாவ நேத்து அப்படி அழைச்சிட்டு போனது தப்புதான்.. நீங்க எதிர்பார்த்திருக்க மாட்டீங்க.. நைட் இங்க தங்கி இருந்தா எப்படியும் பசங்கள உங்க கூட தூங்க வெச்சிக்கிறதா தான் சொல்லி இருப்பீங்க..” என்றதும் அவரின் பார்வை அப்படிதான் என்பதை சொல்லாமல் சொல்லியது..
“அதுல எனக்கு விருப்பம் இல்ல.. வந்த முதல் நாளே அப்பாவையும் அம்மாவையும் அவங்ககிட்ட இருந்து பிரிச்சிட்டோம்னு குழந்தைங்கல்ல ஒருத்தர் கூட நினைச்சிட கூடாதுல மாமா.. அதனால தான் அங்க போய்ட்டோம்.. அது உங்கள பாதிக்கும்னு யோசிக்க மறந்துட்டேன் சாரி மாமா..”
“ஐயோ மாப்பிள அப்படியெல்லாம் இல்ல..”
“அப்போ ஏன் மாமா சாப்பிடாம உங்கள நீங்க வருத்திக்கணும்.. நேரடியவே பேசுறேன்னு தப்பா நினைக்காதீங்க.. உங்கள நீங்க தான பாத்துக்கணும்.. மகள பிரியிரதும் கஷ்டம் தான் இல்லைங்கல.. ஆனா உங்களையும் பாத்துக்கணும் தான..”
“இவ்வளவு நாள் கூடவே இருந்துட்டு சட்டுனு இல்லனதும் ஒரு மாதிரி ஆகிடிச்சுப்பா..” என்றவருக்கும் சங்கடம் தான்.
“ஆனா நீங்க பண்ணது தப்பு தான மாமா.. இப்படி இனி பண்ணாதீங்க.. டைமுக்கு சாப்பிடணும்…” என்றவன் அத்தனை உரிமையாய் பேச அவரும் ஆமோதிப்பாய் தலையசைத்தார்..
“அத்த.. மாமா சாப்பிடலனா எனக்கு கால் பண்ணுங்க.. நான் பாத்துகிறேன்..” என்றான் வைதேகியிடம்
அம்மாக்கும் மகளுக்கும் அத்தனை பூரிப்பு.. குமரேசன் குழந்தையாய் அமர்ந்திருக்க, தகப்பனாய் அதட்டி கொண்டிருந்தான் வேந்தன்.. பார்க்கவே வைதேகிக்கு மனம் குளிர்ந்து போனது…
மீனாட்சியோ, “எத்தன வாட்டி பாரி உங்க மேல என்ன காதல்ல விழ வைப்பீங்க.. பார்க்காமலே மனசுக்குள்ள வந்தீங்க.. உங்க வெளிதோற்றத்தை விட உங்க மனசு எனக்கு இன்னும் பிடிக்குதே… லவ் யூ பாரி…” என்று அவனோடு மானசீகமாக உரையாடினாள்.
பகல் உணவு வைதேகியின் கைவண்ணத்தில் அத்தனை அசத்தலாயிருந்தது…
வேந்தனோ இன்னைக்கு ஒரு பிடி என்று தான் உண்டு எழுந்திருந்தான்.. கேட்டு வாங்கி சாப்பிடவும் அவன் தயங்கவில்லை.. அதுவே அந்த மூத்த தம்பதியினருக்கு மனநிறைவை கொடுத்திருந்தது..
நண்பர்கள் பட்டாளமும் விருந்துக்கு வந்திருக்க, கொண்டாட்டதுக்கு பஞ்சமில்லாமல் தான் சென்றது..
ஸ்ருதியோ சும்மா இராமல்.. “ஏன் பாரிணா, எங்க பொண்ணு உங்கள நல்லா பாத்துகிறாளா?.. காலையிலயேயே எழும்பி எல்லா வேலையும் முடிச்சு உங்கள எழுப்பி இருப்பாளே…” என்றாள் நக்கல் சிரிப்புடன்… அவளுக்கு தான் தெரியுமே தோழியின் சோம்பேறித்தனம்…
“அத ஏண்டா ஸ்ருதி கேக்குற.. பொய்யான வாக்குறுதிய நம்பி ஏமாந்து போனது தான் மிச்சம்… எல்லாம் அரசியவாதி பேச்சு தான்… ஓட்டு போட்டதும் காணாம போயிடிச்சு…”
மீனாட்சியோ அவனை முறைக்க.. அவனோ, “ஸ்ருதி அண்ணா சொன்னது உனக்கு ஒன்னுமே கேக்கல தானடா?..”
“கேக்கவே இல்லையேணா.. நீங்க பேசுனீங்களா என்ன?… நீங்க பொண்டாட்டிக்கு பயந்தவருல பொலச்சுபீங்க…” என்க அங்கே சிரிப்பலை தான்..
அந்த நேரம் விக்ரமின் தொலைபேசி ஓசை எழுப்ப எடுத்து பேசியவன்.. மீனாட்சியிடம், “மீனு, விஜய் அண்ணா தந்த கிப்ட் பிடிச்சிருக்கான்னு கேக்குறாங்கடி..” என்றதும் மீனுவின் பார்வை வேந்தனை தான் துளைத்தது… அவனோ பார்த்தும் பார்க்காதபடி திரும்பிக்கொண்டான்…
“ரொம்ப பிடிச்சிருக்குனு சொல்லு விக்ரம்…” என்றவளது குரலில் இருந்த கோபம் வேந்தனவனுக்கு மட்டுமே புரிந்தது…
இருவர் கண்ணும் சந்தித்து கொள்ள நேற்றைய இரவின் சம்பவம் கண் முன் விரிந்தது…
எங்கே பிரித்து பார்க்க விட்டான் அவன்.. அத்தனை அட்டகாசம் அதனை பிரிக்கவே கூடாது என…
அதெப்படி அவன் உனக்கு தேடி வாங்குவான் என்று ரகலையை கூட்டி இருந்தான்…
மீனுவுக்கு எட்டாத உயரத்தில் அதனை தூக்கி போட்டவன் அவன் பாட்டுக்கு வேறு வேலை செய்ய தொடங்கிவிட்டான்…
தன் மனைவி அவள் என்பதாய் புதிதாய் ஒரு உரிமை போராட்டம் ஆணவனின் நெஞ்சுக்குள்.. எவராயினும் தனக்கு பின்னே என்று பொறாமை கொள்ளும் உரிமைபோராட்டம்… பொறாமை கூட காதலின் ஆரம்பபுள்ளி தானே..
அவளுக்கும் அதனை எடுக்க முடியாமலில்லை.. எடுக்கவேண்டும் என்றால் எப்படியும் எடுத்திருக்க முடியும்.. ஆனால் அவன் பேச்சையும் தாண்டி எடுக்க தோணவில்லை.. அவன் வேண்டாம் என்ற ஒன்று தனக்கும் வேண்டாம் என்பதாய் ஒரு எண்ணம்…
அவனை காதலிப்பவள் அவள்… அவன் என்றால் அதில் அவன் உணர்வுகளும் அடக்கம் தானே…
____________________________________________
அங்கே அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாய் நடந்துகொண்டிருந்தான் விஜய்… அவள் சொன்ன பதிலிலே புரிந்து போனது, அதனை பிரித்து பார்க்கவில்லை என்பது… அவள் விடயத்தில் மீண்டும் தோல்வி அவனுக்கு…
திருமணம் தான் இமைக்க நேரமில்லாமல் நடத்திக்கொண்டானே வேந்தன்.. தடுக்க அவகாசம் இல்லாமல் போனது.. அதனாலேயே பரிசில் அவர்களுக்கான திட்டத்தை வைத்திருந்தான்…
ஆனால் இன்று அதுவும் தோல்வி… ஏதாவது செய்தாக வேண்டும் என்றே நடந்து கொண்டிருக்கிறான் விஜய்… விஜயவரதன்….
“விடமாட்டேன்டி… உன் தங்கச்சிய விடவே மாட்டேன்… செத்தும் என்னடி சிரிப்பு உனக்கு… என்ன வேணான்னு அவன் பின்னால போன உன்ன, உன் குடும்பத்தை கொன்ன இதே கையாள அவளை எனக்கே எனக்கா எடுத்தப்பறம் அணு அணுவா கொள்ளுவேன்… உன் சாவுதான் சட்டுனு முடிஞ்சிடிச்சு… அவளை ரசிச்சு கொள்ளுவேன்… குறுக்க யாரு வந்தாலும் கொள்ளுவேன்….” என்று முன்னே படத்தில் இருந்தவளிடம் கொடூரமாய் கத்திகொண்டிருந்தான்…
ஆனால் அந்த புகைப்படமோ மாறா புன்னகையுடன் அப்படியே வீற்றிருந்தது…
அவள் மஞ்சரி அம்மாள்… மீனாட்சியின் இரட்டை சகோதரி… அன்பான கணவன் அவர்களுக்கென்றே அளவான குருவி கூடு என சந்தோசமாய் வாழ்ந்த வாழ்க்கை இந்த கயவனிடம் வீணாய் பறிகொடுத்தவள்…
இன்று அவன் பார்வை மீண்டும் அவளைப்போலவே இருக்கும் தங்கையையும் விடாமல் துரத்துகிறது… விஜயவரதனின் திட்டமது நிறைவேறுமா?.. என்ற கேள்விக்கான விடை காலத்தின் கைகளில்….
ஜாலம் தொடரும்
_ஆஷா சாரா_
என்னடா விஜய்ய வில்லன் ஆகிட்ட பாவம் alar chellam vijay kettale da 😄😄
அதான் அப்போவே நினைச்சேன் சிரிச்சேன்னு கமெண்ட் போட்டேனே 🤣🤣🤣
இந்த விஜய்க்கு அப்படி என்ன கோவம் மஞ்சரி மேல அவ குடும்பத்தை கொலை பண்ண நினைக்கிற அளவுக்கு.???
Thank u sis ❤❤❤
வரபோற udsla தெரியும் da…
சோ விஜய் தான் வில்லனா.? பார்ப்போம் என்ன பண்றாங்கனு..
பட் நீங்க இன்னும் ஆருவை பத்தி எதுவும் சொல்லல டைட்டன் மேடம்