Loading

முதல் முறை முயன்றேன்
உடைந்தாய்

மறுபடியும் செய்தேன்
பிளவுப்பட்டாய்  

ஏதோ செய்து மீண்டும் முயல
சரியாக வந்தாய்

எண்ணெயில் பொரித்தப்பின்
சர்க்கரை பாகில் நீ மிதக்க

எனக்கோ பொறுமை இல்லை
சீக்கிரம் ருசிக்க துடித்தேன்

விளம்பரத்தில் வரும் குண்டு குண்டு
குலாப் ஜாமுனாக வரவில்லை

என்றாலும் என் கைவண்ணத்தில்
அழாகாகவே இருந்தாய்

முதல் முறை முயன்ற
என் இனிய குலாப் ஜாமுனே

என்றும் உன் சுவைக்கு

நான் அடிமையே..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    5 Comments

    1. மறுபடியும், சர்க்கரை இப்படி வரும் என்பது என் கருத்து..

      அருமையான கவிதை. முதல் முறை செய்த உங்கள் குலாப் ஜாமுன் அனுபவம் சுப்பர். இறுதியில் ஏதோ ஒன்று சேர்த்திருக்கலாம் போல.. அப்படி தோன்றியது எனக்கு.

      வாழ்த்துக்கள் மா..

      1. Author

        நன்றி மா.
        தவறை திருத்தி விட்டேன்

    2. உங்களின் முதல் இனிப்பு நன்றாய் உள்ளது சகி . அடுத்த முயற்ச்சியில் இன்னும் இனிப்பாய் அமைய வாழ்த்துக்கள் ..

      எனது கருத்தாய் ஒன்று : பதிப்பிக்கும் முன் ஒருமுறை எழுத்துப் பிழைகளை சரி செய்ய முயற்ச்சியுங்கள் சகி.

      வாழ்க வளமுடன் …

      1. Author

        நன்றி மா.
        தவறை திருத்தி விட்டேன்

    3. இதை படிக்கும்போது நான் முதல்முறை செய்த குளோப்ஜாமூன் அனுபவம் நியாபகம் வந்தது..உங்களின் அனுபவமும் அருமை சிஸ்…