Loading

18+ 

சிறுமியைச் சிதைக்கத் துடித்த சாதி வெறி! 

(உண்மையும் கொஞ்சம் புனைவும்..)

 

சொக்கலிங்கபுரம் கிராமத்தில், காலை 10 மணி வெயிலிலும் மது அருந்திக்கொண்டிருந்தான் மேல் ஜாதியைத் சேர்ந்த சுந்தரன். பெயரில் மட்டுமே சுந்தரனானவன், அழகிலும் குணத்திலும் கேடுகெட்டவன். 

கமலா, ‘ஒழுங்கா பள்ளிகூடம் போன்னா கேக்குறியா? இப்ப வீட்டுலதான இருக்க, கடைக்குப்போய் கொஞ்சம் சக்கரையும், தக்காளிப் பழமும் வாங்கிட்டு வந்தாதான் என்னவாம்? போய்ட்டுவாடி..’ எனத் தன் மகள் மலரை விரட்டிக்கொண்டிருந்தார்.

மலர், ‘இப்போ நான் அங்கிட்டு போனேன்னா… அந்தக் குடிகாரக் கும்பல் வம்பிழுக்கும்மா. நீயே போயேன்.’ என்று மறுத்தாள். 

கமலா, ‘அடுப்புல நிக்கும்போது வெளிவேலையா அலையமுடியாதுன்னுதான சொல்றேன். பக்கத்துலதான, போய்ட்டுவாடி’ என்று மீண்டும் விரட்ட, வேறுவழியில்லாமல் கிளம்பினாள் மலர். 

கடைக்கு செல்லும் வழியில்.. 

சுந்தரன், ‘அடியே என்னடி இந்நேரம் பள்ளிகூடம் போகாம இங்கன சுத்திட்டு இருக்க. என்னைய பார்க்கணும்னு ஆசையோ? அப்ப வா, நாம அப்படி மறைஞ்ச இடமா பார்த்து பேசிட்டு வரலாம்.’ எனப் பிதற்றினான்.

மலர், ‘இந்தாரு, நான் உன் வழில வந்தேனா.. நான் பாட்டுக்கு என் வழில போறேன்.. என்னத்துக்கு வம்பிழுக்கீக’ என்று சொன்னபடியே, விறுவிறுவெனக் கடையை நோக்கி நடந்தாள்.

சுந்தரன், ‘அடிங் *** கீழ் சாதிக்காரி நீ, என்கிட்ட பதிலுக்குப் பதில் பேசுவியோ?’ என அவள் மார்பில் கைவைத்தான். 

சுதாரித்த மலர், அவனிடம் இருந்து தப்ப நினைத்து ஓட, அவளது நைட்டி அவன் கையில் சிக்கிக் கிழிந்தது. அதில் சுந்தரன் ஒரு நொடி திகைக்க, அந்த ஒரு நொடியைப் பயன்படுத்தி, அங்கிருந்து தப்பி தன் வீட்டுக்கு ஓடினாள் மலர்.  

வீட்டுக்குள் நுழைந்தவள், நடந்ததை ஜீரணிக்க முடியாமல் அழ ‘ஏன்டி அழற? என்ன ஆச்சு? நைட்டிய கிழிச்சிட்டு வந்திருக்க?’ எனப் பதறினார் அம்மா கமலா.

இருவரும் பேசியதைக் கவனித்த மலரின் அண்ணன் ஜீவா, ‘உன்ன எத்தனை தடவ அவளை பாதி நேரத்துல வெளிய அனுப்பாதன்னு சொல்லிருக்கேன். சமைக்க ஆரம்பிக்கும் முன்னாடியே எல்லாம் இருக்கான்னு பார்க்கமாட்டியா?’ எனத் தாயிடம் காய்ந்தவன், மலரிடம் இதமாகப் பேசி விஷயத்தை வாங்கினான். 

நடந்தை கேட்டு ஆத்திரமான ஜீவா, ‘இன்னைக்கு அவனை என்ன பண்ணுறேன் பாரு? அவன் பெரிய இவன், அவனுக்குப் பதில் சொன்னா மேல கைவப்பானா?’ எனத் சுந்தரனைத் தேடி விரைந்தான். 

‘எவ்வளவு தைரியம் இருந்தா என் தங்கச்சி மேல கை வைப்ப? உனக்கு கை இருந்தாத்தானே வைப்ப?’ என்று ஆவேசமாக சுந்தரனைத் தாக்க முற்பட, ‘டேய் ***** மவனே அப்படிதான்டா வைப்பேன்’ என அவனும் எகிறியடித்தான். 

இருவரும் ஒருவரை ஒருவர் மாறிமாறித் தாக்க, அப்போது அங்கு வந்த சுந்தரனின் தந்தை ரத்தினம், ‘ஏன்டா  **** நீ என் மகன் மேலயே கை வைக்கிறியா!’ என ஜீவாவை அவரும் தாக்கினார். 

இந்த கைகலப்பைப் பார்த்த சுந்தரனின் அக்கா வள்ளி, மலரின் கன்னத்தில் அறைந்து, தலை முடியைப் பிடித்து இழுத்து ‘அடியே ****** மவளே! நீ பெரிய ரதியோ? ஏன் என் தம்பி கை வச்சா கொறஞ்சா போய்டுவ? இனி அவன் கூப்பிடுறப்ப எல்லாம் அவன் கூட படுக்கப் போகனும். இல்லன்னா நைட்டோட நைட்டா உன் வீட்ட வெளிய பூட்டி கொளுத்திருவோம் ஜாக்கிரதை..’ என மிரட்டிவிட்டுச் சென்றாள்.  

உடலாலும் மனதாலும் பாதிக்கப்பட்ட மலர், சட்டத்தையும் நீதியையும் நம்பி தனது லிமிட்டில் உள்ள காவல்நிலையத்துக்கு சென்றாள்.  

கிராமங்களில் சாதி வெறி அடங்கும் நாள் எதுவோ? 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்