Loading

 

இந்த படைப்பு நான் படித்த சில செய்திகள் கொண்டு எனது கற்பனை வாயிலாக எழுதப்பட்ட சிறுகதை.

இதில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுவது அல்ல.! இவ்வாறும் சமூகத்தில் நடக்கிறது என்பதை உணர்த்துவதே தவிர யாரையும் குறிப்பிட்டு எழுதிய படைப்பு அல்ல.
©தமிழினியா. இதை யாரும் மறுபதிப்பு செய்ய அனுமதி இல்லை.

நன்றி.!

அச்சம் தவிர்.! ஆண்மை தவறேல்!

அழகான இளங் காலை பொழுது.. வசந்தம் வீசும் காலம்.. அதை ரசிக்க மனமில்லாமல் பாவையவள் வதனத்தில் அத்துணை சோகம்..

‘சாதிக்க துடிக்கும் வாழ்க்கை இன்று தறிகெட்டு ஓடியது என்ன விந்தையோ.?’ என்று தன் நிலையை எண்ணி வறுத்த முறுவலை விடுத்தாள் பதினாறு வயது நிரம்பிய ஆதர்ஷினி.

வயது பதினாறு.. ஆனால் குணமோ குழந்தை குணம்.. பயந்த சுபாவம். எந்த கஷ்டத்தினையும் தன் மனதில் பூட்டி வைத்து கொள்வாள்.

அழைப்பு மணி சத்தம் கேட்க கண்களை மீறி வெளிவந்த கண்ணீரை அவசர அவசரமாகத் துடைத்துக்கொண்டு வாயிலை நோக்கி ஓடினாள்.  அதற்கு முன் தன் தமையனின் அறையில் ஒரு பார்வையை பதித்து விட்டு சென்றாள். 

கதவின் அருகில் செல்ல, யாரென்று அறிந்தும் அவனாக இருக்கக்கூடாது என்று நினைத்துக்கொண்டே திறக்க, ஏனோ அவளின் எண்ணம் பொய்யாய் தான் போனது. 

கதவு திறக்கும் முன்னே முழு போதையில் விரைந்து அவளை நெருங்கினான் மூர்க்கத்தனம் கொண்ட மனித உருவில் இருக்கும் மிருகம். அவன் மேல் வீசிய மதுவின் வாடை, பெண்ணவளுக்கு குமட்டலை கொடுக்க அவனிடம் இருந்து வலுக்கட்டாயமாக விலகினாள்.

ஆனால் அவளின் விலகலை ஏற்காதவன் கூடம் என்றும் பாராமல் தன் காம வெறியை தீர்த்து கொண்டான் பஞ்சு போன்ற அவள் மேனியில். பின் அவன் அங்கேயே படுத்து விட, தன் கிழிந்த ஆடையை பார்த்து கொண்டு விம்மி விம்மி அழுதாள்.

அவனால் ஏற்பட்ட துயரத்தில் உடலில் வலி மிகுந்த காயங்கள் ஏற்பட, வேறு வழியின்றி தன் வலியை கண்ணீரால் கரைக்க முற்பட்டாள். கண்ணீரில் இவள் கரைய, காலம் எனும் கடிகாரமோ தன் கடமையை சரியாய் செய்திட, மீண்டும் அவன் எழுவதற்குள் விரைந்து தன் அறைக்கு சென்று உடை மாற்றினாள்.

துயில் கலைந்த தமையன் பத்து வயது பாலா தன் அக்காவை தேடி வந்தான். பாலா‘அக்கா.! அக்கா.! இன்னைக்கும் அப்பா வாமிட் பண்ணிட்டாரு, வா அக்கா.!’என்று கூடத்தில் கிடந்த தந்தையின் நிலையை அவன் கூச்சலிட்டு சென்ற வேகத்தில், விரைந்து கூடத்திற்கு வந்து இருந்தாள்.

ஆதர்ஷினி “பாலா! நீ சித்தப்பாவை கூட்டிப்போ!.. பாத்ரூம்ல விட்டுறா. நான் இதை கிளீன் பன்றேன்”என்றிட.
தமக்கையின் கட்டளைப்படி அறுபது கிலோ கொண்ட மனித மிருகத்தை பாலா இழுத்துக்கொண்டு சென்றான்.

அவனோ போதையில் பிணாத்திக் கொண்டு இருக்க, இங்கு கூடத்தில் சுத்தம் செய்து கொண்டு இருந்தவள் அடிவயிற்றை பிடித்துக்கொண்டு “அம்மா” என்ற சத்தத்துடன் அமர்ந்துவிட்டாள்.

தமக்கையின் குரலில் பதறியடித்துக் கொண்டு வந்த பாலா, அவளை சுற்றி இரத்தமாக இருப்பதை பார்த்து பயந்து போனான்.

பாலா “அய்யோ.! அக்கா.. என்ன ஆச்சு.? எங்கேயாவது கிழிச்சிகிட்டியா? அக்கா இவ்ளோ இரத்தம் அக்கா.. பயமா இருக்கு அக்கா.. வா அக்கா.. டாக்டர் கிட்ட போலாம்!” என்று தேம்ப,

ஆதர்ஷினிக்கே என்னவென்று புரியாத நிலையில் அவனுக்கு என்ன ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் இவளும் அழுது கொண்டு தான் இருந்தாள்.

பாலா அவளின் அழுகையை பார்த்து “ரொம்ப வலிக்குதா கா.?” என்று கேட்க, பதில் அளிக்க இயலாது மேலும் விசும்பினாள் ஆது. எவ்வளவு நேரம் அழுதார்கள் என்று தெரியவில்லை, பள்ளிக்கு நேரமாவதை வெளியில் கேட்கும் தனியார் பள்ளி வாகனங்களின் சப்தத்தால் உணர்ந்த பிறகு, தங்களது பள்ளிக்கு கிளம்ப ஆயுத்தமானார்கள்.

தந்தை, தாய் மற்றும் ஆதர்ஷினி சிறிய அழகான குடும்பம். மூன்று வயதிலேயே தந்தையை பறிகொடுத்தவள் தாயின் அரவணைப்பில் தான் வளர்ந்தாள். சுற்றமும் உறவினரும் அவளது தாயை மறுமணத்திற்கு வற்புறுத்த ஆதர்ஷினியின் எதிர்கால வாழ்வையெண்ணி அவரும் ஒப்புக்கொண்டார். முதல் இரண்டு வருடங்கள் நன்றாகவே சென்றது. புதிதாக தம்பி எனும் உறவை பெற்றாள். விவரம் அறியாத குழந்தையை கொஞ்சுகிறேன் என்ற பெயரில் முத்தம் கொடுப்பதும், தவறான தொடுகையும் பெண்ணவளை பயம் கொள்ள வைத்தது தன் புதிய தந்தையிடம்.

எப்போதும் தாயுடனே இருப்பாள். அவள் அன்னை இல்லையெனில் அறைக்குள் முடங்கி விடுவாள். இவ்வாறு காலங்கள் செல்ல, அவளின் வாழ்வில் அடுத்த இடியாக புற்று நோயால் தன் அன்னையை இழந்தாள். வேறு வழியின்றி தம்பிக்கு தாயாய் மாறினாள் அச்சிறுவயதில்.

சிறுவயதில் இருந்தே அவளின் அமைதியான குணம், தந்தை எனும் காமுகனுக்கு சாதகமாகிவிட, அனுதினமும் அவளை நெருங்கினான்.

உறவினர்கள் இவனை குடிக்க வேண்டாம் என்று கூறினால்,
“என் பொண்டாட்டிய இழந்த சோகத்த மறக்க எனக்கு வேற வழி தெரியல.. வாழ்ந்தது கொஞ்ச நாளா இருந்தாலும் அவ மேல அவ்ளோ பிரியம் வச்சிட்டேன்.. இந்த ரெண்டு பேரையும் சேர்த்து என்னையும் அனாதையா விட்டு போய்ட்டாளே..! ரெண்டு பேரையும் என்கிட்ட விட்டுட்டு புண்ணியவதி போய் சேந்துட்டா.. குடிச்சாதான் அவ இழப்பு மறந்து கொஞ்சம் புள்ளைங்க நியாபகம் வருது” என்று தன் பொய் புலம்பலை முன் வைப்பான்.

நேரம் ஆக ஆக ஆதர்ஷினியின் வயிற்று வலி அதிகமாகியது. பள்ளிக்கு சென்றதும் உடன்பயிலும் மாணவர்களின் மூலம் ஆசிரியருக்கு விஷயம் தெரிவிக்கப்பட்டது. ஆசிரியர் அவளின் தந்தையான மிருகத்திற்கு தகவல் அளிக்க, அவனின் ஆசை வெறி அளவு மீறியது.

ஆசிரியர் ஆதர்ஷினியின் தாய் இறந்ததை அறிந்து இருந்ததால், ஆதர்ஷினியிடம் “இங்க பாரு மா.. இப்போ நீ பெரிய பொண்ணாகிட்ட.. Monthly period time ல ரொம்ப clean ஆ இருக்கணும். First தன் சுத்தம் ரொம்ப முக்கியம். அப்புறம் உன்னோட உடம்புல சில குறிப்பிட்ட இடங்களை யாரையும் தொட விடக்கூடாது. முத்தம் கொடுக்க விடக்கூடாது சரியா..?”

ஆதர்ஷினி திருத்திருவென விழிக்க, பெண்களின் அந்தரங்க உறுப்புகளை சுட்டிக்காட்டி, “இங்க மட்டும் இல்ல.  உன் கன்னம், உதட்டுல கூட புரியுதா..? அப்படி யாராவது உன்கிட்ட தவறா நடந்துகிட்டா வீட்ல அப்பா கிட்ட சொல்லணும்.. இல்லன்னா என்கிட்ட சொல்லணும் சரியா.” என்று குட் டச், பேட் டச் என்ன என்பதையும் சொல்லி கொடுத்தார்.  

அவளை வீட்டிற்கு அழைத்து வந்தவன், உறவுகள் சூழ இருந்ததால் “தர்ஸு மா.. அத்தை சொல்ற மாதிரி நடந்துக்கணும்.. சரியா.” என்று அவளின் கன்னத்தை கிள்ள, இதுவரை எதுவும் உணராது இருந்த பெண்ணவளின் எச்சரிக்கை குணம் விழித்துக் கொண்டது.

ஆதர்ஷினியின் அத்தை சக்தி. கணவனை இழந்த இளம் வயது கைம்பெண். “தர்ஸு மா.. இனிமே எதுவா இருந்தாலும் அத்தை கிட்ட சொல்லு.. இனிமே கொஞ்ச நாள் நான் இங்கே தான் இருப்பேன்” என்று சொல்ல, அப்போது தான் அவளுக்கு இனம் புரியாத தைரியம் ஏற்பட்டது.

ஆனால் இதை ஏற்காதவன் “அதுலாம் வேணாம் சக்தி.. அவளுக்கு புதுசா யாராவது கூட இருந்தா அசௌகரியமா feel பண்ணுவா” என்றிட,

ஆதர்ஷினி எங்கே இவள் சென்று விடுவாளோ என்று பயந்து “அப்படியெல்லாம் இல்ல அத்தை.. நீங்க இங்கேயே இருங்க” என்றாள் வேகமாக..

அதில் அவனுக்கு இயலாமையுடன் கோபமும் வர எதுவும் கூறாமல் இருந்து விட்டான்.

அவளை குளியறைக்கு அழைத்து சென்ற சக்தி “இங்க பாரு மா.. இது தான் நாப்கின். நீ periods time ல கண்டிப்பா இதை யூஸ் பண்ணனும்.. ஆனா 4 மணி நேரத்துக்கு மேல ஒரே பேட் ட யூஸ் பண்ண கூடாது புரியுதா.. எப்போவும் யூரின் போனா அந்த இடத்தை சோப் போட்டு கிளீன்னா வச்சுக்கணும். எப்போவும் உடம்புக்கு சரியா இருக்கிற துணிய தான் போடணும்.. ரொம்ப இறுக்கமான துணி போடக் கூடாது.” என்று அறிவுரைகளை கூறி மேலும் குட் டச் பேட் டச் என்பதையும் சொல்லி கொடுத்தாள்.

பாலா “அப்பா இனிமே.. அக்கா என் கூட விளையாட வர மாட்டாளா.?” என்று கேட்க,

“அதுலாம் வருவா டா. அப்டி இல்லைனாலும் நான் அவளை இழுத்துட்டு வரேன்” என்றான்.

சடங்குகள் முடிந்திட, ஒரு வாரத்திற்கு பிறகு பள்ளி சென்றாள் ஆதர்ஷினி.
மாலை நேரம் பாடம் சொல்லிக் கொடுக்க சக்தி, பாலாவையும் ஆதர்ஷினியையும் அமர வைத்தாள்.

சக்தி “டேய் பாலா.  உன் diaryஆ காட்டு, என்ன homework..?”

பாலா “அத்தை.. எனக்கு maths ல homework”

சக்தி ” சரி டா நீ அதை செய்.. doubtனா கேளு.. ஆது உனக்கு மா.?”

ஆதர்ஷினி “அத்தை ஒரு competition அத்தை.. தலைப்பு child abuse” என்று தடுமாறியவளை ஆதரவாக பார்த்தவள், “இதுக்கு ஏன் தடுமாறுற ஆது. எல்லா குழந்தைகளும் தெரிஞ்சிக்க வேண்டியது தான். நிறைய இடத்துல பெண் குழந்தைகளும் ஆண் குழந்தைகளும் உடலாலும் மனதாலும் காயப்படுத்தப்படுறாங்க.. அம்மா அப்பா இல்லாத குழந்தைங்க தான் இதுல அதிகமா பாதிக்கப்படுறாங்க..”

ஆதர்ஷினி “உடலாலன்னு சொல்றது எனக்கு ஓரளவு புரியுது அத்தை… மனதால எப்படி..?”

சக்தி “நம்மள கொடுமைப்படுத்துறது, தகாத வார்த்தைகள் பேசி மெண்டல்லா நோகடிக்குறது கூட வன்முறைல தான் சேரும். First குழந்தைங்க புரிஞ்சிக்கணும். இது அவங்க தப்பு இல்லை. எதுவா இருந்தாலும் தைரியமா எதிர்க்கணும். அப்புறம் child help lineக்கு தகவல் சொன்னா கண்டிப்பா அந்த குழந்தைங்க காப்பாற்ற படுவாங்க.” என்று விளக்கம் கூறினாள்.

இது முழுக்க முழுக்க பாலா மற்றும் ஆதர்ஷினி மனதில் ஆழமாக பதிந்தது.

சக்தி ஆறுமாதம் கழித்து சென்றுவிட, அதுவரை அமைதி காத்து நல்லவன் போல வேடமிட்டவன், மீண்டும் தன் வேலையை காட்ட ஆரம்பித்தான்.

இன்றும் அதே போல் குடித்து விட்டு வீட்டிற்கு வர, தினமும் தமக்கைக்கு உதவி புரிபவன், இன்றும் உதவி புரிந்து கொண்டு இருந்தான் பாலா.

மீண்டும் ஆதர்ஷினியிடம் தவறாக நடக்க முயல்கையில் பாலா இதை பார்த்து விட, தந்தை செய்யும் தவறு அவனுக்கு புரிய, காய் நறுக்கி கொண்டு இருந்த கத்தியை கொண்டு அவன் கையில் வெட்டினான்.

வலியில் அவன் கத்த, “யோ.. ஒழுங்கா வெளிய போ.. அக்கா மேல கைய வச்ச குத்திடுவேன்..” என்று கத்த, தம்பியின் இத்தைரியத்தை பார்த்து ஆது பிரமித்துப் போனாள்.

“டேய்.. நான் உன் அப்பன் டா.. அவ உனக்கு அக்கா இல்ல.. வா நீ வா.. அப்பா சொல்ற மாதிரி அவள செய்” என்று பிஞ்சு மனதில் நஞ்சை விதைக்க முயல,

“நீ பொய் சொல்ற.. நீ நீ தப்பு பண்ற.. நான் நான் போலீஸ் கிட்ட போவேன்.  நீ போ.. இங்க நிக்காத.. குத்திடுவேன்” என்றான் தன் பயத்தை வெளியில் காட்டாதபடி.

இப்போதைக்கு இதை ஆற போடுவோம் என்று எண்ணி அவ்விடம் நகர்ந்தான் அவன்..

பாலா “அக்கா.. அக்கா.. அப்போ அப்பா தினமும் குடிச்சிட்டு உன்கிட்ட இப்டி தான் பண்ணுவாறா.?” என்று விசும்பிட,

ஆதர்ஷினி அழுது கொண்டே “ஆம்” என்று தலையசைத்தாள். “அப்போ ஏன் கா இவ்ளோ நாளா யார்கிட்டயும் சொல்லல.? “என்று பாலா அழுது கொண்டே கேட்க,

ஆது “அவர் நம்ம அப்பா டா.. எப்டி டா நம்ம அப்பாவே இப்டின்னு வெளிய சொல்ல..?”

பாலா “அதுக்குன்னு.. அத்தை தான் சொல்லி இருக்காங்கள இப்டி நடந்தா இது நம்ம தப்பு இல்ல.. வெளிய சொல்லணும்னு” என்று அவளை அதட்டியவனுக்கு ஏதோ யோசனை தோன்றியது.

“அக்கா.. அழாத.. இந்தா.. இந்த கத்தியை கையிலேயே வச்சிக்க.. நான் இதோ வரேன்” என்று வெளியேற,

“எங்க டா போற.?. இங்கேயே இரு பாலா” என்றாள்.

“இருக்கா வரேன்” என்று வெளியேறியவன். விரைந்து தன் அறைக்கு சென்று சக்திக்கு தெரியாமல் எடுத்து வைத்திருந்த அவளின் அலைபேசியை எடுத்து வந்தான்.

சிறு குழந்தைகள் சிறு வயதிலேயே மன ரீதியாக வளர்ந்து இருப்பார்கள். சிலர் வளர்ந்தாலும் அந்த குழந்தைத்தனம் அகலாது. இதற்கு சான்றே நம் ஆது பாலா தான்.

ஆது அதிர்ச்சியுடன்  “பாலா.. யார் போன் இது.?”

பாலா “சக்தி அத்தையோடது.. அவங்க 2 போன் வச்சிருந்தாங்களா.. நான் அன்னைக்கு இதுல விளையாண்டுட்டு இருந்தேன்.. என்கிட்ட போன் இருக்குறது தெரியாம அத்தை கிளம்பிட்டாங்க” என்று சில எண்களை அழுத்தினான்.

ஆதர்ஷினி “என்ன டா பண்ற..?” என்று பதட்டத்துடன் வினவ,

பாலா “அக்கா.. அத்தை அன்னைக்கு ஒரு நம்பர் சொன்னாங்கல.  நீ போட்டிக்கு கேட்டப்போ.. அந்த நம்பர் தான் கா.. யாராவது உதவி பண்ணுவாங்கள்ல.” என்று மீண்டும் அழுத்தினான்.

ஆதர்ஷினி “டேய் வேணாம் டா. போலீஸ் வரும். சித்தப்பாவ பிடிச்சிட்டு போயிடுவாங்க.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு” என்றாள் கேவலுடன்.

பாலா “பரவாயில்லை கா. அவர் தப்பு செய்றாறு கா. நம்மலாள அவரை ஒன்னும் செய்ய முடியாது..  போலீஸ் வரட்டும். “

ஆதர்ஷினி “அப்பா ஏதோ தெரியாம பண்ராறு டா. வேணாம் பாலா.. அவரும் இல்லைன்னா நம்ம நிலைமை..? வேண்டாம் டா” என்று எதிர்கால வாழ்வை நினைத்து பதற.

பாலா ” எனக்கு எப்போவும் தைரியம் சொல்றது நீ.. நீயே இப்டி பயப்படுற.? பாரு கா.. உன்னை எப்டி அடிச்சு இருக்கான் அந்த மனுஷன்.”

இருவரும் அறியவில்லை. பாலாவின் கைப்பட்டு சைல்டு லைனிற்கு அழைப்பு சென்று இருப்பதையும் தகுந்த ஆட்களோடு காவல் துறையினர் அங்கு வர இருப்பதையும்.

ஆது ” என்ன டா.. அப்பாவ அவன் இவன்னு பேசுற..? பாலா.  எனக்கு பயமா இருக்கு டா..” என்று கதற, இத்தனை நாள் தாயாக இருந்த தமக்கைக்கு தம்பியவன் இன்று மடி தந்து தாயாகி போனான்.

அந்த மிருகமோ இதையெல்லாம் அறியாது, தன் மகனும் தன் பேச்சை கேட்கவில்லை என்ற ஆத்திரத்தில் குடியில் மூழ்கினான். “இவளை இப்போவே தயார் செய்தா தானே தொழிலுக்கு அனுப்ப முடியும்.. இவ அம்மாக்காரிய அனுப்பின அடுத்த நாளே செத்துப்போய்ட்டா.. இப்போ இவளை ரெடி பண்ணலாம்னு பாத்தா.. நம்ம ரத்தமே நமக்கு எதிரா இருக்கே.” என்று கடும் கோவத்தில் இருந்தான் அறிவீலி.

சிறிது நேரத்தில் வீட்டின் காலிங்பெல் அடிக்க இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்

ஆது ‘நீ தான் யாருக்கும் போன் பண்ணல ல.. யாரு வந்துருப்பா?’

பாலா ‘தெரியலக்கா..! நீ இரு நான் போய் பாக்கறேன்.’ என்று எழும்ப, இவர்களை நோக்கி அவன் வர, பாலா தான் அவனை அருவருப்பாக நோக்கினான்.

“இங்க பாருங்க யாரோ ரெண்டு பேர் உங்கள தேடிட்டு தான் வந்து இருக்காங்க. ஒழுங்கா முகத்த கழுவிட்டு வரீங்க.! அங்க வந்து ஏதாவது சொன்னீங்க அப்ரோம் பிள்ளைங்கனு பார்க்க மாட்டேன் கொன்னுடுவேன்” என்று மிரட்டினான்.

இருவரும் வெளியில் வர இரு பெண்களுடன் ஒரு ஆண் கம்பீரத்துடன் நின்று கொண்டிருந்தனர்.

‘இங்க ஆதர்ஷினி, பாலா நீங்க தானா?’

பாலா ‘ஹான்.! ஆமா’

ஆதர்ஷினி ‘நீங்க’

“நாங்க டிரஸ்டுல இருந்து வரோம். நீங்க ரெண்டு பேரும் நல்லா படிக்கிற ஸ்டுடண்ஸ்னு உங்க ஸ்கூல்ல சொன்னாங்க. எங்க டிரஸ்டு சார்பா உங்களுக்கு புக்ஸ் கொண்டு வந்து இருக்கோம் வந்து வாங்கிக்கோங்க” என்றிட,

பாலா ‘எப்படியாவது இவர்களோடு சென்று உண்மையை கூறி உதவி கேட்கலாம்’ என்று எண்ணி ‘ம்ம் வரோம்’ என்றவாறே நகர,

‘பிள்ளைகளயெல்லாம் அனுப்ப முடியாது நீங்க இங்கயே கொண்டு வந்து கொடுங்க’ என்றான் அவன்.

அவர்கள் ‘இல்லைங்க கண்டிப்பா பிள்ளைங்க வரணும்’ என அப்படி இப்படி பேசி இருவரையும் அழைத்து சென்றனர்.

இருவரும் உடன் செல்ல, இவன் தன் அறைக்கு சென்று மதுவில் மூழ்கினான். அங்கு சுவற்றில் மாட்டப்பட்டிருந்த ஆதுவின் நிழற்படத்தை தவறான கண்ணோட்டத்தில் கண்டு கொண்டே..

‘தம்பி நீங்க  தானே சைல்டு லைன்கு கால் பண்ணீங்க?’ என்று கேட்க

அதில் இருவரும் அதிர, ஆதர்ஷினி ‘இல்லை’ என்றும், பாலா ‘ஆம்’ என்றும் தலையாட்டினர்.

காவல்துறை அதிகாரி, ‘எது வா இருந்தாலும் பயப்படாம சொன்னாதான் உங்கள மாதிரி இன்னும் நிறைய குழந்தைகள் கண்டுபிடிக்க முடியும். யாருக்கும் இனிமே இந்த நிலைமை வரக்கூடாது இல்லையா?’ என்றதில் தன்னிலை யாருக்கும் வரக்கூடாது என எண்ணியவள் அனைத்தையும் அவரிடம் கூறினாள்.

இவளின் கூற்றில் பாலாக்கு தான் அத்தனை கோபம் அவன் தீர்க்கமான முடிவொன்றை எடுத்தான். குழந்தை பாதுகாப்பு துறையினர் தகப்பன் எனும் கொடூரனை கைது செய்து சிறை தண்டனை பெற்றுக் கொடுத்தனர். இருவரும் ஆசிரமத்தில் சேர்க்கப்பட்டனர். ஆனால் சக்தியோ  அதனை மறுத்து, தன் சகோதரன் செய்த தவறுக்கு பிராயசித்தம் செய்வதாக கூறி இருவரையும் அழைத்து வந்து தன்னோடு வைத்துக் கொண்டாள்.
தன் கணவன் இறந்த நிலையில் தனித்து சக்திக்கு ஆதரவாக இருவரும் இருந்தனர்.

பத்து வருடங்களுக்கு பின்….
ஒருவனை தர்ம அடி அடித்துக் கொண்டே, ‘ஏன்டா பொண்ணுங்கன்னா உனக்கு அவ்ளோ இளக்காரமா போச்சா? வெறும் உடம்புக்கு மட்டும்தான் பொண்ணுங்க இல்ல. தண்ணி அடிச்சா பெத்த அம்மாக்கும், கூடப் பொறந்த பொறப்புக்கும், கட்டுன பொண்டாட்டிக்கும், அவ்வளவு ஏன் பெத்த பொண்ணுக்கும் கூட உங்களுக்கு வித்தியாசம் தெரியாதுல. பணம் இருக்குன்ற திமிருல ஆடுறீங்க. ****** உனக்கு அப்படி சுகம் கேட்குதோ, அதுவும் நாலு வயசு குழந்தை. ச்ச்சே.!’

அப்போது அழைப்பு வர ‘த்ரீ நாட் ஒன் இவன செல்-ல போடுங்க.! நான் போன் பேசிட்டு வரேன்’ என்று சென்றான் காவல்துறை ஆய்வாளர் பாலா.

மேலதிகாரி ‘பாலா….. அந்தப் பையன் மேல கேஸ் எல்லாம் போட வேண்டாம். இன்னும் கொஞ்ச நேரத்துல அவன் வக்கீல் வருவாங்க அனுப்பி வைங்க’ என்றதில் ஆத்திரமடைந்தவன்.

சார் அவன் நாலு வயசு குழந்தைய..’ என்று வார்த்தைகளை முடிக்காமல் ஆத்திரத்தில் கை முஷ்டியை இருக்கினான்.
‘டூ வாட் ஐ சே’ என்றிட

‘சார், அந்த குழந்தையோட பேரன்ட்ஸ் கேட்டா, என்ன பதில் சொல்றது.?’

‘சீரியஸ்ஸா தேடிட்டு இருக்கோம்.! சீக்கிரமே கண்டுபிடிப்போம்னு சொல்லு’ என்றதுடன் இணைப்பை துண்டித்தார்.

பாலா தன் அழைபேசியை கோபத்தில் தூக்கி எறிய, உள்ளிருந்தவனோ எக்களித்திக் கொண்டே, தன் வழக்கறிஞருடன் வெளியே சென்றான்.

குழந்தைகள் காப்பகத்தில் தான் பெற்ற வேதனை இனி யாருக்கும் வரக்கூடாது என்ற எண்ணத்தில் அனைத்து குழந்தைகளுக்கும் பாலியல் பற்றிய விழிப்புணர்வு மற்றும் தற்காப்பு நடவடிக்கைகள் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தாள், ஆதர்ஷினி.

‘எப்போவும் தைரியமா இருக்கனும். இதுல உங்க தப்பு இல்லேங்குறத புரிஞ்சுக்கோங்க.! நீங்க பயப்பட பயப்படதான் குற்றங்கள் அதிகமாகிட்டே போகும். கொட்ட கொட்ட குனியக் கூடாது. ஒருநாள் நிமிர்ந்து பார்த்தா தான் அவங்க பயப்படுவாங்க.! உங்கள காப்பத்திக்க நீங்க கொலை செய்றது கூட தப்பில்ல.!’ என அறிவுரை கூறியவள்,

‘இப்போ பாலா அண்ணா வந்து டிஃப்பென்ஸ் கிளாஸ் எடுப்பாங்க.! அதுவரைக்கும் கண்ண மூடி மனச  ஒருநிலைப்படுத்துங்க.!’ என்று கூறி தன் பழைய நினைவுகளிலிருந்து மீண்டு வந்தாள் ஆதர்ஷினி.

த்ரீ நாட் ஒன் வேகமாக ஓடி வந்து, ‘சார்.. சார்.. இரண்டு நாளுக்கு முன்னாடி நாம அரெஸ்ட் பண்ணோம்ல.. அதான் சார் அந்த நாலு வயசு பொண்ணு கேசு. அந்த நாயி அந்த குழந்தைய கடத்துன இடத்துல கந்தர்வ கோலமா செத்து கிடக்கிறான் சார்.!’ என்று கத்த

பாலா ‘ஓ… சரி ஜீப்ப எடுங்க’ என்று சாவகாசமாக கிளம்பினான்.

அவன் வந்ததும் உடலானது உடற்கூறு அனுப்பி வைக்க, அதில் வந்த தீர்வு கண்டு அனைவரும் அதிர்ந்தனர்.

‘அவன் உயிரோடு இருக்கும்போதே அவனின் ஆணுறுப்பு வன்மையாக காயப்படுத்தப்பட்டும், இரண்டு தினங்களாக உணவு, நீர் இல்லாமல் சித்திரவதை செய்யப்பட்டும், உயிரோட இருக்கும்போதே கை கால்கள் முறிக்கப்பட்டும், துருப்பிடித்த கம்பியால் ஆங்காங்கே கீறப்பட்டும், இரண்டு நாட்களாகவே உடலில் ஆடைகள் இன்றி இருந்ததாலும் உடலாலும் மனதாலும் காயப்பட்டு நொந்து அவனே தன் உயிரை மாய்த்து இருக்கிறான்’ என்று கூற, பாலாவை தவிர அனைவரும் அதிர்ந்தனர். ஏனெனில் செய்ததே அவன் தானே.

மேலதிகாரியிடம் இருந்து இணைப்பு வர,‘த்ரீ நாட் ஒன்.. ஒரு டீ சொல்லுங்க’ என்றவன் வாகாய் ஜீப் ஷீட்டில் சாய்ந்து கொண்டே, ‘சொல்லுங்க சார்..!’
‘என்ன பாலா உங்க  ஏரியாவுல இப்படி ஒரு மர்டர்… என்னப் பண்ணீட்டு இருக்கீங்க?’ என்று காய்ச்ச, தன் ஒற்றை விரலை காதில் விட்டு ஆட்டிக்கொண்டே,

‘சார் அவங்க பேரண்ட்ஸ் எனக்கு மி்ஸ்ஸிங் கம்ப்ளைன்ட் கூட தரல. இப்போ இப்படி ஆகிடுச்சு. ரொம்ப ரொம்ப சீரியஸ்ஸா தேடிட்டு இருக்கோம் சார். சீக்கிரம் கண்டுபிடிப்போம். இப்போ நான் என் டியூட்டிய பாக்குறேன் சார்’ என்று விட்டு இணைப்பை துண்டித்தான். 

பாவம் அவர் தான் ஆடிப்போனார்.
தேநீர் அருந்திவிட்டு காப்பகத்திற்கு பயணத்தை தொடர்ந்தவனின் கண்ணில் பட்டது பாரதியின் வாசகம்.

அச்சம் தவிர்! ஆண்மை தவறேல்!

இது என் மனசுல ஆழமா பதிஞ்ச ஒரு விஷயம்.. இன்னைக்கு பல செய்தி படிக்குறோம்.. இப்போ சில நியூஸ் வெளில வந்தாலும், பல மூடி மறைக்கப்படுது. முக்கியமா இதுல பெண் குழந்தைகள் மட்டும் இல்ல, ஆண் குழந்தைகளும் தான் பாதிக்கப்படுறாங்க. அவ்வளவு ஏன் பல மிருகங்களின் சுகத்துக்காக திருநங்கைகளும்/திருநம்பிகளும் கூட இந்த பாதிப்புக்கு ஆளாகுறாங்க.! இது வெளில வந்தாலும் தினம் கடந்து போற செய்தியா பாத்துட்டு போற மனநிலைல நாம இருக்கோம்.. இந்த கதை படிக்குறவங்க இதுல குறிப்பிட்டு இருக்க பல வார்த்தைகள அறுவருப்பா படிச்சு இருக்கலாம். இன்னமும் பலர் வீட்ல ஆண்கள் முன்னாடி நாப்கின் வார்த்தையை கூட உபயோகிக்க தயக்கம் இருக்கு. பெண்கள் கடைக்கு போய் அதை வாங்க கூட ஒரு தயக்கம் காட்டுறாங்க (முக்கியமா படிச்ச பெண்கள்). இந்த மனநிலைமையை மாத்திக்க எல்லாரும் முயற்சி பண்ணனும். தனக்கு தாய்மை கிடைக்கலன்னு ஏங்குற பலர் ஆண்கள் மத்தியில தான் இந்த மாதிரி மிருகங்களும் வாழுறாங்க. காமம் ன்னு வந்துட்டா இதுல ஆண் பெண் இரண்டு பேரும் விதி விலக்கு இல்ல. எல்லாரும் மிருகம் தான். இதை வெளிய கொண்டு வந்து மத்தவங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துறதும் விழிக்காமலே இருக்க வைக்கிறதும் ஒரு எழுத்தாளருடைய (சமூகத்துடைய) கடைமையா நான் நினச்சு இந்த பதிவை போட்டு இருக்கேன்.

நன்றி..!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
2
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்