Loading

அத்தியாயம் -18

அவர்களின் குடும்ப லாயரான செந்திலை சந்தித்தான் வருண்.
அவனிடம் முழு விவரத்தையும் கூறி அவனின் ப்ராஜெக்ட் ப்ராஃபிட் ஷேர்ஸை கார்த்திக்கும் அவனின் அண்ணன் அசோக்கிற்கும் சரி பாதியாக பிரித்து எழுத கூறினான்.

உண்மையை அறிந்த செந்திலிற்கு அதை உள் வாங்கி கொள்ளவே சில நிமிடங்கள் தேவைப்பட்டது.

” உன்கிட்ட மட்டும் தான் சொல்லிருக்கேன், யாராச்சி ஒருத்தவங்களுக்காவுது முழு உண்மை தெரியனும்ல அதான் “

” வருண் நா சொல்லுறத”

“நீ என்ன சொல்லுவனு எனக்கு தெரியும் செந்தில். டிரீட்மென்ட் எடுதுக்க சொல்லுவ.. என் வாழ்கையில்ல எல்லாமே என் அண்ணனும் என் அப்பாவும் கொடுத்தது தான். இந்த பூமியில்ல பொறந்ததுக்கு நம்ம பேர் சொல்லுற மாறி எதாவுது ஒன்னாச்சி நாம பண்ணி இருக்கனும்ல? அது மட்டும் இல்லாம எனக்கு கடைசியா இருக்கற டைம்ம என் குடும்பத்தோட செலவழிக்கனும்னு நெனைக்கறேன். மாத்திர மருந்து வலியோட இல்ல. தயவ செஞ்சு இதுக்கு மேல எந்த கேள்வியும் கேக்காத. நாளைக்கு சென்னை போறேன், அங்க எங்க ப்ராஜெக்ட்டுக்கு லீகல் அப்ரூவல் கிடச்சிரும். அதான் உன்னயும் இங்க பேப்பர்ஸ் மாத்தி எழுத சொன்னேன்.
எனக்கு எதாவுது நல்லது பண்ணனும்னு நெனச்சின்னா இந்த விஷயத்த வீட்டுல்ல சொல்லி அவங்கள நோகடிச்சிராத..! அவங்கனால இத தாங்கிக முடியாது “

இருந்தாலும் மனம் பொறுக்காமல் கார்த்தியிடம் இதை சொல்லிவிட்டான் செந்தில். எப்படியாவது வருணை டிரீட்மென்டிற்கு சம்மத்திக்க வைத்துவிட மாட்டானா என்ற நப்பாசையில் தான்..!

கார்த்தியின் வீட்டில அமர்ந்திருந்தனர் கண்மணியும் வருணும்.

” உனக்கு என்ன குழந்தைனு நெனப்பா? அடிச்சு பல்ல எல்லாம் கழட்டிருவேன் டா”

” உயிரே போக போகுது பல்லு போனா என்ன? உனக்கு தானே மாப்ள எடுத்துக்க “

“டேய்..”

“டேய்.. நீ நிறுத்து டா. சும்மா சொன்னதயே திரும்ப திரும்ப சொல்லிட்டு இருக்க? என்ன நிம்மதியாவே விட மாட்டியா? எனக்கு விரும்பம் இல்லனு சொல்லறேன்ல இதுக்கு மேல இது பத்தி பேசாத”

“ஏன் ஏன்.. பேச கூடாது?” வெகுண்டு எழுந்தாள் கண்மணி.

“இல்ல எனக்கு புரில? என்ன தான் நெனச்சிட்டு இருக்கீங்க உங்க மனசுல? குழந்தை மருந்து சாப்பிட மாட்டேனு அடம் பண்ணுற மாறி ஹாஸ்ப்பிட்டல் வர மாட்டேன், டிரீட்மென்ட் பண்ண மாட்டேனு சொல்லுறீங்க, சரி அவரு தான் லூசு மாறி சொல்லுறாருனா நீயும் அத கேட்டுட்டு மலமாடு மாறி நிக்கற? இங்க பாருங்க நீங்க இப்போ ஹாஸ்ப்பிட்டல் கிளம்பறீங்க, அவளோ தான். இல்லனா நாளைக்கு தான ப்ராஜெக்ட் ப்ரெசென்டேஷன்? அத நானு பண்ண மாட்டேன் உங்களயும் பண்ண விட மாட்டேன். லேப்டாப், பென் டிரைவ் எல்லாமே என்கிட்ட தான் இருக்கு, அதயும் மீறி நாங்க சொல்லுறத நீங்க கேக்கலனா இப்போவே மது அக்காக்கு போன் பண்ணி எல்லா விஷயத்தையும் சொல்லிருவேன் பாக்கறீங்களா?”

என்றவள் உடனே போனை எடுத்து நம்பரை தேட,

“ஏய்..” என்ற கர்ஜனையுடன் அவளிடம் இருந்து போனை பிடுங்கினான் வருண்.

“உன் லிமிட்குள்ள இரு கண்மணி..! நீ எது பண்ணாலும் நா பொறுத்து போய்ட்டு இருப்பேனு நெனச்சிக்காத எல்லாத்துக்கும் ஒரு அளவு இருக்கு..! என்ன சொல்ல உனக்கு என்ன உரிமை இருக்கு? உன் வேலைய மட்டும் பாரு ” கண்கள் இடுங்க கத்திய அவனின் கோவ குரல் அவள் மனதை அதிர வைத்தாலும் அதை வெளிக்காட்டி கொள்ளாமல் அதே கோவ குரலில்,

“அதானே எனக்கு என்ன உரிமை இருக்கு உங்கள சொல்ல..! பைத்தியகாரி மாறி ஒவ்வொரு நாளும் உங்கள மட்டுமே நெனச்சு சுத்தி சுத்தி வந்தேன்ல எனக்கு என்ன உரிமை இருக்கு? என் வாழ்கை முழுக்க நீங்க என் கூட இருக்கனும்னு ஆசப்பட்டேன்ல எனக்கு என்ன உரிமை இருக்கு? உங்களுக்கு ஒரு பிரச்னைனு தெரிஞ்ச உடனே சரி பண்ணனும்னு துடிக்கறேன்ல எனக்கு என்ன உரிமை இருக்கு? உங்களுக்கு என்ன புடிக்கும் புடிக்காது, என்ன சொன்னா சம்மதிப்பீங்கனு உங்கள பத்தி மட்டுமே யோசிக்கறேன்ல எனக்கு என்ன உரிமை இருக்கு ” கோவமாய் ஆரம்பித்த அவளின் குரல் கடைசியில் கேவலாய் முடிய,

” ப்ளீஸ் என்ன விட்டு போய்றாதீங்க ஆதி ” என்றவள் இரு கைகளாலும் முகத்தை மூடி கொண்டு குலுங்கி குலுங்கி அழுதாள். மனதில் அடைத்து வைத்திருந்த அத்தனை காதலும் கண்ணீராய் பெருக்கெடுத்து ஓடியது.

அவளின் பேச்சில் அதிர்ந்தவன், சிலையாய் உறைந்து நின்றான்..!

இரவு மாத்திரை சாப்பிட்ட வீரியத்தில் நன்கு தூங்கி கொண்டிருந்தாள் சாத்வி. மெல்ல கண்களை திறந்தவளிற்கு கண்கள் இருட்டி கொண்டு வருவது போல் இருக்க தட்டு தடுமாறி எழ முயற்சித்து கொண்டிருந்தாள், மறந்து அடிப்பட்ட கையிலேயே ஊன்றி விட,

“ஸ்ஸ்ஆஆ..” என்றாள் முனகலாக, சத்தம் கேட்ட துருவ் உள்ளே ஓடி வந்தான்.

“என்ன கூப்பிட மாட்டியா ” என கடிந்து கொண்டவன் அவள் முதுகிற்கு தலையணை வைத்து அவளை ஒழுங்காக அமர வைத்தான்.

அப்பொழுது தான் நேரத்தை பார்த்தவளிற்கு மணி பத்தரை காட்ட நெஞ்சம் அடைத்தது.

“மகி… மகி எங்க? ஸ்கூல்..”

” அது எல்லாம் நான் ரெடி பண்ணி ஸ்கூல்ல விட்டுட்டு வந்துட்டேன், நீ போய் ப்ரஷ் பண்ணிட்டு வா. நா இட்லி எடுத்து வைக்கறேன் “

அவனை இன்னும் அவள் கேள்வியாய் பார்த்து கொண்டிருக்க,

” ஒரு வாரத்துக்கு ஒர்க் ஃப்ரம் ஹோம் வாங்கிட்டேன் “

சின்ன தலையசைப்புடன் பாத்ரூமிற்கு சென்றாள்.

குளித்து விட்டு வந்தவளிடம், அவன் சாப்பாடு தட்டை நீட்ட மறுபடியும் அவனை கேள்வியாய் பார்த்தாள்.

” ஹோட்டல்ல தான் வாங்குனேன் “

சாப்பிட்ட பிறகு தான் சற்று தெம்பாக உணர்ந்தாள். நேற்று இரவும் சாப்பிடாமலேயே தூங்கியவளிற்கு நல்ல பசி. சாப்பிட்டு விட்டு அவனை பார்க்க லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருந்தான்.

சிறிது நேரத்தில் சமையல் அறையில் சத்தம் கேட்க அவளை தேடினான். சாத்வி தான் ஏதோ செய்து கொண்டிருந்தாள்.

‘இவள.. ‘ என பல்லை கடித்தவன்.

“டாக்டர் தான் ரெஸ்ட் எடுக்க சொன்னாங்கள? அப்றம் என்ன சாத்வி பண்ணிட்டு இருக்க? ” என்றான் சலிப்பாக.

அதற்கும் ஒரு பார்வை மட்டுமே.

‘திமிரு புடிச்சவ வாய தொறந்து பேசறாளா பாரு ‘ என எண்ணியவன்.

“ம்ம்ச் உன் கிட்ட தான் பேசிட்டு இருக்கேன் ” என்றான்.

“மகிக்கு தான் கொஞ்சமா பண்ணுறேன். அவ வீட்டுக்கு வந்த அப்றம் சாப்பிடறதுக்கு வேணும்ல, வெளி சாப்பாடு காரம் அவளுக்கு ஒத்துக்காது “

“அத முன்னாடியே சொன்னா என்னவாம் ” என்றவன் அவன் வேலையை பார்க்க சென்றுவிட்டவன்.

‘பெரிய அக்கறை, எல்லாம் நடிப்பு..! ஒத்த கைய வெச்சிட்டு வேல செய்யறியே எதாச்சி ஹெல்ப் பண்ணட்டுமானு கேட்கறாரா பாரு..!’மனதினுள் பொறுமினாள்.

அதற்குள் காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்க, துருவ் தான் கதவை திறந்தான்.

” அக்கா..! என்னக்கா தீடிர்னு வந்துருக்க? வாக்கா, வாங்க மாமா சாத்வி யார் வந்துருக்கானு
வந்து பாரு “

துருவ்வின் உற்சாக குரல் வைத்தே யார் வந்திருப்பார்கள் என யூகித்தவள் புன்னகையோடு அவர்களை வரவேற்றாள்.

துருவ்வின் அக்கா தேவியும் அவர் கணவர் வேலுவும் தான் வந்திருந்தனர்.

மாதவனை பார்ப்பதும் அவனிடம் ஏதோ பேச வருவதும், பின் தயங்கி செல்வதுமாக இருந்த அஷ்வினியை கண்டு கொண்ட மாதவ் எவ்வளவு தூரம் இந்த கண்ணாம் பூச்சி விளையாடு போகிறது பார்ப்போம் என அவளை நோட்டமிட்டு கொண்டிருந்தான்.

இப்படி அப்படி என ஒரு அளவிற்கு அவள் தைரியத்தை வரவைத்து கொண்டு அவனிடம் செல்ல,

” என்ன அஷ்வினி வேலய பாக்காம இங்க அங்க சுத்திட்டு இருக்க? சாத்விகா மேம் வேற ஒரு வாரம் லீவ் எடுத்து இருக்காங்க, பொறுப்பா போய் வேலய பாரு. போ போ என்ன முழிச்சிட்டு இருக்க “

“அ.. அது… வந்து ம்ம்.. சரி ” என்றவள் மூஞ்சியை தொங்க போட்டு கொண்டு செல்ல அடக்கப்பட்ட சிரிப்போடு அவளை பார்த்தான் மாதவன்.

சாய்ந்தரம் வேலை முடித்து ஆட்டோவிற்காக காத்து கொண்டிருந்தாள் அஷ்வினி.

“ஓய் பஞ்சுமிட்டாய்..! இங்க என்ன நிக்கற?”

“ஆட்டோக்கு வைட் பண்ணுறேன் “

“சரி என்கிட்ட என்னமோ கொடுக்கனும்னு கைல வெச்சிருந்தியே அது என்ன கொடு “

அவனை ஆச்சிரியமாக பார்த்தவள்,

“ஹேய் எப்படி உங்களுக்கு தெரியும்”

“அதான் உன் மூஞ்சிலயே எழுதி ஒட்டியிருக்கே..! சரி நீயா வருவனு பாத்தா ம்ஹ்ம்ம்… எப்பவுமே உன் விஷயத்துல்ல நா மட்டும் தான் அக்ஷன் எடுக்கனும் போல “

அதில் சிரித்தவள், ” அன்னிக்கு நீங்க சொன்னீங்கள கேரட் அல்வா ரெசிபி அத செஞ்சேன். அதான் உங்க கிட்ட காட்டலாம்னு.. ” என்றவள் ராகம் இழுக்க.

” அல்வாவ காட்ட சொன்ன பல்ல காட்டிட்டு இருக்க? ” என அவன் அவளை வாரி விட, சின்ன சினுங்களோடு அவனிடம் டப்பாவை நீட்டினாள் அஸ்வினி.

” என்னனு தெரில கேரட் டேஸ்ட்டே வரல. கொஞ்சம் சும்மாரா தான் இருக்கும் “

ஒரு வாய் எடுத்து வாயில் வைத்தவன்,

” ஹேய்..சூப்பர்ப்பா ” என்றான் மெச்சுத்தல் பார்வையோடு.

அதில் ஒரு நிமிடம் மலர்ந்தவள் பின் உடனே முகம் சுறுக்கி, “பொய் சொல்லாதீங்க. நானு தான் சாப்பிட்டு பாத்தேன், அவளோ ஒன்னு டேஸ்ட் இல்ல “

“அதான் உனக்கே தெரியுதுல அப்றம் என்ன ” என்றான் சிரிப்போடு.

” அப்போ என்ன கலாய்க்கறதுக்கு தான் அப்படி சொன்னீங்களா ” என்றாள் உள்வாங்கிய குரலில்.

“சேச்சே..! சத்தியமா இல்ல, நா சூப்பர்னு சொன்ன உடனே இங்க ஒரு பல்ப் எறிஞ்சிதுல்ல அதுக்காக தான்..!” என்றான் அவள் முகத்தை சுட்டிகாட்டி.

” யாருமே இங்க பெர்ஃபெக்ட் கிடையாது அஷ்வினி. ஏன் இப்போ நல்லா சமைக்கற நா கூட நேரிய சொதப்பல்ஸ்க்கு அப்றம் தான் கத்துக்கிட்டேன், தப்பு பண்ணுறது தான் மனித இயல்பே, அத குத்தி காட்டி அவங்கள ஹர்ட் பண்ணுறதுல்ல ஒரு ப்ரியோஜனமும் இல்ல..! நம்மள டிமோட்டிவேட் பண்ணி கொற சொல்ல புதுசா யாரும் தேவ இல்ல, சுத்தி இருக்கறவங்களே போதும். ஆனா நம்மள உற்சாகம் படுத்த, பாராட்ட தான் நமக்கு ஆள் தேவையே, இதுல இருக்க தப்ப விட இத செய்ய நீ போட்ட உழைப்பும், அக்கறையும் தான் எனக்கு பெருசா தெரியுது..! கேரட்ட துருவி போடனும், நீ கட் பண்ணி போட்டுட்ட அதான் டேஸ்ட் வரல ஓகேவா? சரி என்னோட பார்ட் டைம் ஜாப்புக்கு டைம் ஆச்சு நா கெளம்பறேன் பை பஞ்சுமிட்டாய்..!” என்றவன் அவளிடம் விடை பெற்று செல்ல, அவன் சென்ற வழி தடத்தையே விழி விலகாமல் பார்த்துக்கொண்டிருந்தாள் அவள்.

எப்பொழுதும் அவன் அழைக்கும் அதே பஞ்சுமிட்டாய் என்னும் அழைப்பு தான். இருப்பினும் இன்று அது அவளிற்குள் ஒரு சிலிர்ப்பையும் பிடித்ததையும் உண்டு பண்ண,

‘பஞ்சுமிட்டாய் ‘ என முனுமுனுத்த அவள் இதழ்களில் புன்னகையோடு சேர்த்து சிறு வெட்கமும் குடி கொண்டது..!

” டாக்டர் வேற வழியே இல்லயா? “
இறஞ்சும் குரலில் கேட்டாள் கண்மணி.

” என்னம்மா நீங்க கேட்டதையே திரும்ப திரும்ப கேக்கறீங்க? நாங்க டாக்டர்ஸ் தான் ஆனா கடவுள் கிடையாது. வருணுக்கு வந்து இருக்கறது ஒரு ரேர் டிஸ்சீஸ், இதுக்கு சரியான மருந்து இன்னும் கண்டுப்புடிக்கவே இல்ல, பட் ஒரு அளவுக்கு டெக்னாலஜி வளந்து இருக்கனால அத கண்ட்ரோல் தான் பண்ண முடியுமே தவர வேற ஒன்னும் பண்ண முடியாது. வாழ்நாள் முழுக்க இதோட அவரு வாழ்ந்து தான் ஆகணும்..! அவரோட பிரைன் செல்ஸ் ரொம்பவே பாதிப்பு அடஞ்சிருக்கு, எவ்வளவு சீக்கிரம் ஆப்ரேட் பண்ணுறோமோ அவ்வளவு சீக்கரம் அவருக்கு நல்லது. நா முன்னாடியே வருண் கிட்ட இத சொல்லிட்டேன், மறுபடியும் உங்களுக்கு சொல்லுறேன். ஆப்ரேஷனோட சக்ஸஸ் ரேட் 50-50 தான். பெயிலியர் ஆச்சுன்னா கண்டிப்பா அவரோட உயிருக்கே அது ஆபத்தா வந்து முடியலாம், இல்ல கோமா ஸ்டேஜ்க்கு கூட போகலாம். உங்க கிட்ட பொய் சொல்லி எனக்கு என்னம்மா வர போகுது..! பட் லெட்ஸ் ஹோப் ஃபார் தி பெஸ்ட். புல் தடுக்கி செத்தவனும் உண்டு, யானை மிதிச்சி பொழச்சவனும் உண்டு..! “

இதை கேட்டு மிகவும் நடுங்கி போனாள் கண்மணி. டாக்டர் அறையில் இருந்து வெளியே வந்த கண்மணியை முறைத்து பார்த்தான் வருண். ஆனால் அதை எல்லாம் கண்டு கொள்ளும் நிலையில் அவள் இல்லை. நேரே கார்த்தியிடம் வந்தவள்,

“நாளைல இருந்து டிரீட்மென்ட் ஸ்டார்ட் பண்ணிக்கலாம்னு சொல்லு உன் ஃப்ரண்டு கிட்ட “

” நா கஷ்டப்பட்டு சாகறத பாக்கனும்னு அவ்வளவு ஆசை இருந்தா, சரி அந்த ஆசையும் நிறவேத்திட்டு ஓரேடியா போய் சேந்துரேன். சந்தோசமா உங்க ரெண்டு பேருக்கும் ” என்றவன் வார்த்தைகளை கடித்து துப்பி விட்டு வெளியே சென்றான்.

இருவருக்குள்ளும் நடக்கும் பனி போரில் இடையில் சிக்கி கொண்டது என்னவோ கார்த்தி தான்.

தன் மனதில் உள்ள காதலை சொல்லி அழுது தீர்த்த பிறகு, தீர்கமான முடிவோடு வருணிடம் வந்தாள் கண்மணி.

” நீங்க டிரீட்மென்ட்டுக்கு ஒத்துழைச்சி தான் ஆகனும், முடியாதுனு சொன்னா சரி, ஒன்னும் பிரச்னை இல்ல. நான் செத்தனா அதுக்கு முழுக்க முழுக்க நீங்க தான் காரணம்னு லெட்டர் எழுதி வெச்சிட்டு உங்களுக்கு முன்னாடியே நா செத்துருவேன் ” என்றவள் சொன்ன வேகத்தில் ஓடி கத்தியை எடுத்த தன் மணி கட்டில் வெட்டி கொண்டாள்.

மிரட்டலுக்காக சொல்கிறாள் என நினைத்து கொண்டிருக்க, அவளின் இந்த திடீர் செய்கையில் அதிர்ந்தவர்கள் அவளிடம் இருந்து கத்தியை பிடுங்கி அருகில் இருந்த மருந்தவமனைக்கு அவ கூட்டி போக எத்தினிக்க, வரேவே மாட்டேன் என ஒரேடியாக அடம்பிடித்தாள்.

“பைத்தியமாடி நீ..! செத்துருவ” வருணின் அதட்டலுக்கு எல்லாம் கொஞ்சம் கூட அசரவில்லை,

” நீங்க ட்ரீட்மெண்டுக்கு ஒதுக்குகோங்க அப்போ தான்.. நா.. ” சொல்லும் போதே அவளிற்கு மூச்சு வாங்க, நிற்க கூட திராணி இல்லாமல் தள்ளாடினாள்.

“அய்யோ.. கடவுளே சரி வா..”

” என்னம்மா நெனச்சிட்டு இருக்கீங்க உயிர்னா அவளோ விளையாட்டா போச்சா உங்களுக்கு எல்லாம்? இன்னும் கொஞ்சம் ஆழமா வெட்டு பட்டுருந்தா கூட இன்னேரம் என் முன்னாடி நீ உக்காந்து இருப்பியானு தெரியாது. நியாயப்படி உங்கள எல்லாம் சூசைட் கேஸ்னு சொல்லி போலீஸ்ல கம்பளைண்ட் கொடுத்து இருக்கனும், கார்த்தி ரொம்ப ரெக்வஸ்ட் பண்ணி கேட்டதால சும்மா விடறேன். இந்த காலத்து பிள்ளைங்களுக்கு கொஞ்சம் கூட பொறுமையே இல்ல..!”

டாக்டரின் திட்டுகள் எதுவும் அவள் காதில் விழுந்தபாடில்லை. வருணின் மருத்துவரை சந்திக்க வேண்டும். அவரிடம் பேச வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அவள் மனதில் மேலோங்கி இருந்தது.

ப்ராஜெக்ட் ப்ரெசென்ட்டேஷன் முடிந்து, அப்ரூவல் வாங்கிய பிறகு தான் டிரீட்மென்ட் என வருண் சொல்லி விட டிரீட்மென்டிற்கான நாளும் வந்து விட்டது.

ஆனால் கண்டிப்பாக வீட்டில் இதை பற்றி சொல்ல கூடாது என்றான் கட்டளையாக. அவன் சம்மதித்ததே பெரிது என ஒற்று கொண்டனர்.

கார்த்தி அவனின் வீட்டில் தான் தங்க வேண்டும் என சொல்லி விட , அங்கிருந்தே டிரீட்மென்ட்டை ஆரம்பித்தனர்.

கண்மணி, மாதவ்விற்கும் அஷ்வினிக்கும் இங்கு வேலை முடியாததால் இன்னும் சில நாட்கள் தங்க வேண்டி வரும் என்ற தகவலை மட்டும் பகிர்ந்து இருந்தாள்.

” ஆப்ரேஷனுக்கு முன்னாடி உங்க பாடிய அதுக்கு ஏத்த மாறி ரெடி பண்ணனும். நேரிய மெடிசின்ஸ், கீமோ எல்லாம் கொடுப்போம் கொஞ்சம் பெயின் ஃபுல்லானா ப்ரோஸஸ் தான் பட் வேற வழி இல்லை. அப்றம் உங்களுக்கு சிம்ப்டம்ஸ் அதிகமா தெரியும், சோ எப்பவுமே உங்க ஹெல்ப்புக்கு பக்கத்துல்ல யாராவது இருக்கற மாறி பாத்துகோங்க இத எல்லாம் தாண்டி நீங்க, அதாவுது பேஷன்ட் கோ-ஆப்பரேஷன் தான் ரொம்ப முக்கியம். “

இன்றில் இருந்து பத்து நாட்கள் கழித்து ஆப்ரேஷனுக்கு டேட் குறித்து இருந்தனர்.

ட்ரீட்மெண்டின் முதல் கட்ட நடவடிக்கையாக வருணின் முதுகு தண்டில் ஊசி போட்டனர்.

வலியில் மிகவும் துடித்து போனான் வருண்.

அவன் சாப்பாட்டை விட அதிகமாக இருந்தது அவன் எடுத்து கொள்ளும் மாத்திரைகள்.

ஏற்கனவே டாக்டர் சொன்னது தான் என்றாலும் அவன் அதை அனுபவிக்கும் பொழுது கண் கொண்டு பார்க்க முடியவில்லை.
அவனின் வலி கண்டு கண்மணியும் கார்த்தியும் நொறுங்கி போனர். எதற்காக டிரீட்மென்ட் வேண்டாம் என அவன் மறுத்தான் என்ற காரணம் இப்பொழுது புரிந்தது. ஆனால் அவன் முன்பு அதை வெளி காட்டி அவனை கலங்க வைக்க அவர்கள் விரும்பவில்லை.

பெட்டில் படுத்திருந்த வருண்.எழுந்து அவன் அருகில் இருந்த போனை எடுக்க எத்தனிக்க, கால்கள் நடுங்கி அப்படியே கீழே விழுந்தான்.

அவன் விழுந்த சத்ததில் பதறி அடித்து கொண்டு வந்தனர் கண்மணியும் கார்த்தியும். கார்த்தி அவனை தூக்கி படுக்கவைத்து,

“நீ ஏன் எந்திரிச்ச எதுனாலும் கூப்பிட்டு இருக்கலாம்ல..”

” நா கஷ்டப்படறத பாக்கனும்னு தான விருப்பப்பட்ட இப்போ என்ன புதுசா
நல்லவனாட்ட பேசுற? “

வார்த்தைகள் கார்த்தியை குறிப்பிட்டு இருந்தாலும் அவன் கண்கள் கண்மணியையே குறி வைத்தது.

சிதறிய பொருட்களை அள்ளி கொண்டிருந்தவள். அவன் பேச்சில் நிமிர்ந்து கையில் இருந்த பொருட்களை டம்மென்று மீண்டும் கீழே கிடாசி விட்டு அவனை முறைத்து விட்டு விறுவிறுவென வெளியேறி விட்டாள்.

கார்த்தி தான் இரு தலை கோழியாக யாருக்கு பரிந்து பேசுவது என தெரியாமல் தவித்தான்.

வருணின் இந்த கோவமும் வெறுப்பும் அவனிற்கு புதிது என்றால், அதை விட புதிது கண்மணியின் இந்த அழுத்தம்.
எப்பொழுதும் ஓயாமல் வாயடித்து சிரிக்க வைக்கும் கண்மணியை தான் பார்த்திருக்கிறான். அவளுக்குள் இப்படி ஒரு பிடிவாதம் இருக்கும் என அவன் எதிர்ப்பார்க்கவே இல்லை.

ஆனால் ஒன்று மட்டும் சர்வ நிச்சயமாக புரிந்தது. வருணை ஆட்டுவிக்கும் சாவி கண்மணி இடத்தில் மட்டுமே இருக்கிறது என்று..!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
24
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்