மாளிகையில் பூஜை நடந்து முடிந்த வேலையில் தான் உள்ளே வந்தான் ஆதித்யன்.
தங்கை மைதிலி அவனைப் பார்த்ததும் அம்மா அண்ணன் வந்துட்டாங்க என்று பூஜை அறையில் இருக்கும் அம்மாவிற்கு குரல் கொடுத்தாள்.
அண்ணா எங்க போயிருந்தீங்க?
தங்கையை ஒரு பார்வை பார்த்தான்.
அதற்கு அர்த்தம் இந்தக் கேள்விக்கு கண்டிப்பா பதில் தெரியனுமா என்றிருந்தது..
இதுதான் ஆதித்யன் அவனுடைய பார்வையில் எதிரில் இருப்பவரின் வாயை அடைத்து விடுவான்…
அவனுடைய அம்மா தங்கையை தவிர அவன் அருகில் யாரும் நெருங்க முடியாது அவனுடைய உயரம் அத்தகையது முப்பத்தி ஐந்து வயதில் உலகில் தலைசிறந்த அனைத்து தொழில்களிலும் முத்திரை பதித்து விட்டான். அவனது வெற்றியின் கூடவே அகங்காரம் வந்துவிட்டது. ஆனால் அவனிடம் இருக்கும் சுயநலமும் இறக்கம் அற்ற தன்மையும் அவனுடைய தந்தையினால் வந்தது.
காரணம் ஆதித்யன் தாய் பார்வதி வேலை செய்து கொண்டு இருந்த முதலாளி தான் அவனுடைய தந்தை சதாசிவம். அவனுடைய முதல் மனைவிக்கு திருமணம் ஆகியும் பல வருடங்கள் கடந்த பின்னும் குழந்தை பாக்கியம் இல்லை.
அவருடைய சொத்திற்கு வாரிசு வேண்டிய காரணத்தினால் பார்வதியின் ஏழ்மை நிலை கொண்டு அவளுடைய பெற்றோர்கள் இரண்டாம் தாரமாய் திருமணம் செய்து விட்டார்கள்.
சதாசிவத்திற்கு பார்வதி மீது காதல் எள் அளவும் இல்லை.
காரணம் அவளின் கருமை நிறமும் அவளுடைய ஏழ்மையும்.
திருமணமாகி ஒரு வருடத்தில் ஆதித்யா பிறந்துவிட்டான் அவனின் பிறப்பைக் கொண்டும் சதாசிவம் பெரிதாக மகிழ்ச்சி ஏற்படவில்லை ஏனென்றால் அவன் தாயை கொண்டு பிறந்திருந்தான் அவனைத் தொடர்ந்து மைதிலியும் பிறந்தாள் இதற்கிடையில் அவருடைய முதல் மனைவிக்கும் குழந்தை பிறந்தது அதுவும் ஆண் குழந்தை அந்த காரணத்தினால் <span;>இவர்களை முழுவதுமாக ஒதுக்கிவிட்டார் .
ஆதித்யன் படிப்பிற்கும் மைதிலியின் திருமணத்திற்கும் சில சொத்துக்களை கொடுத்தார்.
ஆதித்யன் அவனுடைய இருபத்தி மூன்று வயதில் இருந்த எல்லாம் சொத்தை அடமானம் வைத்து தொழில் துவங்கினான்.
அவனுடைய கடுமையான உழைப்பு. இரவு பகலும் தூக்கமின்றி <span;> அவன் கால்பதித்த அனைத்து தொழிலிலும் வெற்றி..
அவனை சுற்றியிருக்கும் அனைத்தையும் அவனுக்கு சாதகமாக அவனுக்கு பலமாக மாற்றிக்கொண்டான் .
அவனுக்கு இருக்கும் ஒரே பலவீனம் அவனுடைய தங்கை மீது கொண்ட அளவுக்கதிகமான பாசம் .
ஆதி ஏன் இவ்வளவு லேட் என்று பார்வதி கேள்வி கேட்க
வேலை இருந்தது அம்மா என்றான் ஆதி..
சரி போய் உடை மாற்றிக் கொண்டு வா நான் உணவு எடுத்து வைக்கிறேன்
சரிமா
நீயும் வா சாப்பிட என்று அழைத்தார்
மைதிலியை
உணவு மேஜையில் உணவு எடுத்து வைத்து கொண்டு இருக்கும் வேலையில் படியில் இறங்கி வரும் தன் மகனை பார்த்த பார்வதி விழியில் கண்ணீர்.
35 வயது ஆகியும் இன்னும் திருமணத்திற்கு பிடிகொடுக்காமல் வேலை வேலை என்று ஓடும் மகனின் மீது கோவம் வந்தது இன்று இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். என்ன நடந்தாலும் இன்று சம்மதம் வாங்காமல் விடக்கூடாது என்று எண்ணிக்கொண்டார்.
உணவு பரிமாறி கொண்டு இருக்கும் தாய் அண்ணனின் முகத்தை பார்ப்பதும் தயங்குவதுமாய் இருப்பதைப் பார்த்ததும் புரிந்துவிட்டது மைதிலிக்கு இது அண்ணனின் திருமணம் விஷயம் என்று இது தினமும் நடக்கும் கதைதான் என்று தெரியும்.
ஆதியும் தாயின் பார்வையை கண்டுகொண்டான்.
அம்மா என்ன சொல்லணும் சொல்லுங்க என்றான்?
ஆதி இன்னிக்கி ஊரிலிருந்து கல்யாண பத்திரிக்கை கொடுக்க வந்தாங்க ஊரில் இருக்கும் எல்லாருக்கும் கல்யாணம் நடக்குது அப்படியே உனக்கும் பாக்க சொல்லவா
அம்மா இப்போ என்னோட கல்யாணத்துக்கு என்ன அவசரம் ஃபர்ஸ்ட் நம்ம மைதிலிக்கு பார்க்கலாம் நான் இன்னும் தொழில் நிறைய சாதிக்க வேண்டியது இருக்கு என்றான்
ஆதியின் இந்த வார்த்தையை கேட்டு திக்கென்று ஆனது பார்வதிக்கு.
ஏன் சொல்ல மாட்டா ஆதி இப்பவே 35 வயது ஆகிவிட்டது. ஏற்கனவே அங்கங்க வெள்ளை முடி வந்துருச்சு இதிலே நிறத்திலேயே என்ன கொண்டே பிறந்திருக்க. இன்னும் சைட் வொர்க் அலைச்சல் அதிகம் அதிலேயே இன்னும் கருத்திட்ட. இப்போ பொண்ணு பாக்க ஸ்டார்ட் பண்ணாத பொண்ணு கிடைக்க சரியா இருக்கும்.
இப்ப என்னம்மா நான் நல்லா இல்லைன்னு சொல்ல வரிங்களா!!!!
நான் எப்படா அப்படி சொன்னேன்.
உன்னோட ஆறு அடி உயரத்துக்கும் கலையான முகமும் போதும். அந்த புல்லாங்குழல் வச்சிருக்க மாயவன் கருமை நிறத்தை கொண்டு பிறந்திருக்க.
என்னதான் இருந்தாலும் வயசு அதிகமா ஆகுது இல்ல அதிமா.
இப்ப பொண்ணு பார்த்தா தானே கல்யாணத்துக்கு சரியா இருக்கும்.
அதுவும் இல்லாம உனக்கு முடித்ததற்கு அப்புறம் தான் மைதிலிக்கு பண்ணனும்.
சாப்பிட்டுக் கொண்டிருக்கும் மைதிலிக்கு இவர்கள் பேசுவதைக் கேட்டதும் புறகை ஏறிவிட்டது.
அம்மா ஃபர்ஸ்ட் மைதிலிக்கு பண்ணிடுங்க அதுக்கப்புறம் எனக்கு பண்ணலாம்
அண்ணா எனக்கு என்ன அவசரம் இப்போ கல்யாணத்துக்கு முதல்ல உங்களுக்கு முடியட்டும்.
இல்லம்மா மைதிலிக்கு முதல்ல பண்ணிக்கலாம்.
இதற்குமேல் அண்ணனை எதிர்த்துப் பேச மைதிலிக்கு துணிச்சல் இல்லை.
நாளைக்கு முதல் வேலையா ரகு கிட்ட நம்ம லவ்வ பத்தி சொல்லணும் என்று எண்ணிக் கொண்டால் மைதிலி.
சரி அண்ணா நான் போய் படுக்கவா?
அம்மா நீங்களும் போய் படுங்க என்று தனது அலுவலக அறைக்கு சென்று வேலை பார்த்து விட்டு தூங்கச் சென்றால் ஆதித்யன்….
மன மோகனா
ஆஆ மன மோகனா ஆ
ஆ என் உயிர் கண்ணா
ஆஹா கார்முகில் வண்ண
வாராயோ கோதையின்
குரலை கேளாயோ
விடை பெற்று
வாராய் காசி மதுர விடை
வாராய் வாழ்க்கை
புதிரா
நீயின்றி சுயம்
வரமா கார்முகில் வண்ணா
வாராயோ கண்ணா கோதையின்
குரலை கேளாயோ
துவாரகனே
இருளும் ஒளியும் இரு
விழி அருகே துரத்திடுதே
இருதயத்தில் துணையாக
நீ இருக்க மாட்டாயா
இரு வழிகள்
சந்திக்கும் இடத்தில்
கால்கள் ரெண்டும்
குழம்பிடுதே என்
பாதை சொல்வாயா
தேவகியின்
நாதலாலா திசை ஏது
சொல்வாயா
பிருந்தாவன
நந்தகுமாரா சகியின்
வேண்டுதல் அறிவாயா
நீங்காமல் வருவாயா நகம்போல பிரிவாயா
- எப்பொழுதும் போல இன்றும் அலாரம் முழு பாடலையும் பாடி முடிக்கும்வரை கண்கள் மூடி ரசித்துக் கொண்டிருந்தாள் அகல்யா. கலையான முகம் பார்ப்பவரை வசீகரிக்கும் கண்கள் எப்பொழுதும் இந்த கண்களில் நான்தான் குடியிருப்பின் என்று இடம் பிடித்திருக்கும் அச்சம். மருண்ட மான்விழி கொண்ட இருபத்தி இரண்டு வயது பாவை. இவள் பயத்தின் காரணத்தினால் படிப்பில் பாதியில் நிறுத்திவிட்டால் அனால் சமையல் காலை அற்புதமாக வாரும். இவளுடைய பயந்த சுபாவத்தை கொண்டு இவள் விருப்பப்படி வீட்டில் இருக்க விட்டுவிட்டார்கள். இவளுடைய அப்பா ராமநாதன் ஒரு வங்கியில் கிளார்க் வேலை செய்கிறார் அம்மா சந்தியா இல்லத்தரசி. அண்ணன் ரகுராம் இன்ஜினியரிங் முடித்துவிட்டு படிப்பு சார்ந்த கம்பெனியில் வேலை செய்கிறான் மிடில் கிளாஸ் குடும்பம். எப்போதும் சந்தோஷம் நிரம்பியிருக்கும் அகல்யா என்றால் குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் உயிர் காரணம் சிறுவயதிலிருந்தே எதுவும் கேட்டு அடம்பிடித்த மாட்டாள் அனைவரையும் கண்டு பயந்து பயந்து ஒதுங்குவதினால் தனியாக எங்கும் செல்ல மாட்டாள் அகல்யாவை பொறுத்தவரையிலும் குடும்பம் தான் எல்லாம் அதுவும் அவளுடைய அப்பா அண்ணன் என்றால் உயிர் அதற்கேற்றார்போல் அவளுடைய அப்பாவும் அண்ணனும் அவளை உள்ளங்கையில் வைத்து தாங்குவார்கள் அவள் எதையும் கேட்க தயங்குவால் என்று அறிந்து அவள் கேட்கும் முன் எல்லாமே கிடைத்து விடும் அகல்யாவின் உலகம் மிகவும் சிறியது..
அண்ணா உனக்குப் பிடிக்குமே என்று மதிய உணவிற்கு பிரியாணி சமைத்து வைத்திருக்கிறேன் மிச்சம் வைக்காமல் எல்லாத்தையும் சாப்பிடுங்கள்..
உன் சமையல் ருசி என்னோட ஆஃபீஸ் முழுவதும் பரவியிருக்கிறது. என்னுடைய டிபன் பாக்சை திறந்தாலே போதும் அனைவரும் வந்து பங்கிட்டுக் கொள்கிறார்கள் இதில் முக்கியமாக என்னுடைய பாஸ் தங்கை மைதிலி எனது உணவில்
முதல் ஆளாய் பங்குக்கு வருகிறார்கள்..என்ன ரகு சொல்ற என்றார் சந்தியா?
அவர்களைப் பற்றி தான் நாம் தினமும் கேள்விப்பட்டு கொண்டிருக்கிறோமே உன் முதலாளி ஒரு சுயநலக்காரன் என்று இரக்கமற்றவன் என்றும் அவனுடைய தங்கையுடன் எதற்கு சகவாசம் வைத்துக் கொள்கிறாய்?
என்னம்மா பண்றது ஆபீஸ்ல அப்படித்தான் இருக்கும் யாரையும் நம்ப ஒதுக்கலாம் முடியாது நான் என்னோட வேலையில கரெக்டா இருக்கேன்
எதுக்கோ பார்த்து நடந்துக்கோ பழகு என்றார் சந்தியா..
இவர்கள் இருவரும் பேசுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் அகல்யா இவர்கள் பேசி முடித்ததும்தான் அங்கு அகல்ய நின்று கொண்டிருப்பதை கவனித்தார்கள் அவள் கண்களில் தோன்றிய அச்சத்தை பார்த்து அவளை சமாதானப்படுத்தும்வாதற்குள் அம்மா என்னம்மா சொல்றீங்க அண்ணா வேலை செய்த இடம் இவ்வளவு மோசமான இடமா அம்மா அப்பா அம்மா அண்ணன் இந்த வேலைக்கு அனுப்ப வேண்டாம்.
இதைக்கேட்ட ராகுவும் அகல்யா நீ நினைக்கிற மாதிரி நான் என்ன கள்ளக்கடத்தல் பண்ணுகிற கும்பல் கூட வேலை செய்கிறேன் நான் படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை தானே செய்கிறேன் அவருக்கு இருக்கிற ஆயிரம் தொழில்களை அவர் எந்த வழியில் பார்த்தால் நமக்கு என்ன நம்ம வேலை செய்ற இடம் நமக்கு நிம்மதியாக இருந்தால் போதும். என்னுடைய வேலையில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று பல சமாதனம் கூறிய பின்புதான் அகல்யா சமாதானம் ஆனால்……………
மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதல் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.
மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதலோடு சேர்த்து குடும்ப உறவுகளின் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.