Loading

மிதமான வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தான் சிவா ….அவனது முகத்தில் தெரிந்த உணர்ச்சி “  எதற்காக வாழ்கிறோம்”  என்றிருந்தது… அவனது தொலைபேசி அலற

” சொல்லுங்க மாமா “

  எப்படா என் பொண்ண கல்யாணம் பண்ணிக்க போற” மாமா 

” மாமா எத்தன தடவ சொல்றது அவள என் தங்கச்சி மாதிரி தான் பார்க்கிறேன் ” என்று கத்திக் கொண்டிருந்தான் சிவா

அவன் மாமாவும் திட்டிவிட்டு போனை வைத்தார் 

      இவன் ஆத்திரத்தில் தங்கையாக நினைக்கும் அவளை எவ்வாறு திருமணம் செய்வது என்று யோசித்துக் கொண்டே காரை வேகத்தை கூட்டினான்

      திடீரென்று டமால் என்று சத்தம், யாரையோ இடித்துவிட்டோம் என்று பதறி இறங்கினான்  ரத்த வெள்ளத்தில் கிடந்த சரண்யா அருகில் சென்று அவளை மடியில் கிடத்தினான் …

“ஹலோ எந்திரிங்க கண்ண முழிச்சு பாருங்கள் ” இவன் கண்களிலிருந்து கண்ணீர் இதயம் படபடத்தது  வலி யார் என்று தெரியாத பெண்ணிற்கு நாம் ஏன் இவ்வளவு வலி கொள்ள வேண்டும் 

அவளோ அவன் கன்னங்களை தன் ரத்த கைகளோடு தொட்டுப் பார்த்தாள்  அவ்வளவு வழியிலும் அவன் முகத்தைப் பார்த்து சிரித்து மயங்கினாள்.

யார் இவள்?  என்ன பார்த்து ஏன்  மகிழ்ச்சியுற்றாள் ?  என்று யோசித்துக் கொண்டு  அவளை காரில் தூக்கிப் போட்டு ஹாஸ்பிடலுக்கு சென்றான் .

அங்கே ஒரு மணி நேர சிகிச்சைக்கு பிறகு வெளியே டாக்டர் வந்தார் உயிருக்கு ஆபத்தில்லை என்று கூறியவுடன் தான் சிவாவிற்க்கு உயிரே வந்தது… அவனின் டிரைவரை செல்பேசியில் தன் இருக்கும் இடம் வருமாறு பணித்தான்….. அவளின்  பெற்றோருக்கு விஷயம் தெரிவிக்க வேண்டும் என்று அவளது பையை எடுத்து  ஏதாவது கிடைக்குமா என்று தேடினான் முதலில் கையில் கிடைத்தது டைரி… பிறகு ஒரு சாக்லேட் பிளாஸ்டிக் கவரால் சுற்றி இருந்தது தண்ணீர் புகா வண்ணம் ….. அடுத்து , செல்பேசி  விழுந்ததில்  உடைந்து இருந்தது அதை எடுத்து அவனது டிரைவரிடம் கொடுத்து சரி செய்து வருமாறு கொடுத்தான்….

டைரியில் ஏதாவது கிடைக்குமா என்று படிக்க ஆரம்பித்தான்…. திறந்து பார்த்ததும் அதிர்ச்சியுற்றது கண்கள் முதல் பக்கத்தில் அவனது புகைப்படம் கீழே 

      ” எனது பெண்மையை காத்தவனே “  என்ற வாசகம் இவனுக்கு குழப்பம்… யார் இவள்? …டைரியை படிக்க ஆரம்பித்தான்

ஐந்து வருடங்களுக்கு முன்பு  

        தனது அண்ணன் கார்த்திக்கிடம் எப்பொழுதும் வாங்கும் அர்ச்சனைகளை பெற்றுவிட்டு கல்லூரிக்கு கிளம்பினாள் . சரண்யா பஸ் ஸ்டாப்பில் நிற்கும் போது அவள் அருகில் இருந்த ஒரு பெண் …” ஒருவழியா அவன கவுத்திட்டேன் ..அவன் கிட்ட பணம் உருவிர  வேண்டியது தான் …. அழகா இருக்கிறது கூட  ஒரு யூஸ் தான் போல “  என்று சொல்லிக்கொண்டிருந்தாள்….அனைத்தும் சரண்யாவின் காதில் விழ   என்ன பெண் இவள் யாரை ஏமாற்ற போகிறாள் என்று சிந்தித்தாள்…. அவளது சிவா  ஏமாறுவது அறியாது. 

வகுப்பிற்கு சென்றதும் உள்ளே வந்தவனை  பார்த்து அதிர்ச்சியானாள் ஆம் வந்தது அவளின் சிவா  தான் . யாரை இவ்வளவு நாள் தேடினாளோ யாரை  பார்த்து நன்றி கூறவேண்டும் என்று காத்திருந்தாளோ  அவனேதான் ….அவனை தேடிய நினைவுகள் எல்லாம் அவன் மேல் உள்ள மரியாதை  நன்றியுணர்வு எல்லாம் தன்னை மீறி காதல் விதை விதைக்க…. 

இன்று அவனை  இரசிக்க ஆரம்பித்தாள்…. பிறகு தோழிகளிடம் அவனை பற்றி விசாரிக்க ஆரம்பித்தாள்…. அவனோ ஐடி மாணவன்  , படிப்பில் கெட்டிக்காரன், பெண்களுக்கு மதிப்பு கொடுத்து நடப்பவன், அவ்வளவாக பெண்களிடம் பேசாதவன் என்று தெரிந்து கொண்டாள்….வேறு என்ன தகுதி வேண்டும் ஒரு பெண்ணை கவர….

     அவள் இதயம் அவனை பார்க்கையில்  புரியாத உணர்ச்சி கொண்டு படபடத்தது … இதுதான் காதலோ ??..  நிமிடம் விடாமல் அவள் நினைப்பிலேயே இருந்தாள் வீட்டிற்கு சென்றாலும் அவன் நினைப்பு…..தினமும் காலேஜ் வருவதே நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவனின் தூரத்திலிருந்து ரசிப்பாள் .

தூரத்தில் தோன்றிடும் மேகத்தை போலவே…

நான் உனை பார்க்கிறேன் அன்பே…

சாரலாய் ஓர் முறை நீ எனை தீண்டினால்…

உனக்கது தெரிந்ததா அன்பே…

என் மனம் காணலின் நீர் என ஆகுமோ…

கால்களில் சேறுமா…

நேசிக்கும் காலம் தான் வீனென போகுமா…

நினைவுகள் சேர்க்கிறேன் இங்கே…

வாசிக்கும் சிவாவின் இதழில் புன்னகை..இப்படி ரசித்திருகீகிறாளே… தொடர்ந்தான் வாசிப்பை

இவ்வாறு அவனை ரசிப்பதிலே கல்லூரியை ஓட்டினாள்….. ஒருநாள் தேர்வு இருக்க சிவாவோ  டாப்பர் அதனால் அவன் வகுப்பில் இரண்டாம் மதிப்பெண் எடுப்பானோ எப்படியாவது அவனை  கொஸ்டின் பேப்பர் திருடிய சாக்கில் மாற்றிவிட வேண்டும் என்று அவனை மாட்டிவிட்டான் அதனை அறியாத சிவா …..தான் செய்யவில்லை என்று பிரின்ஸ்பல் இடம் மன்றாடிக் கொண்டிருந்தான் …..அங்கு வந்திருந்த மற்றொரு ஆசிரியர் கொஸ்டின் பேப்பர் திருடிய மாணவர் கிடைத்து விட்டார்  என்றும் …. இவனை எக்ஸாம் எழுத அனுமதிக்குமாறும் கூறினார்.

       அவரும் சரி என்று இட சிவாவும் விரைவாக சென்று  தேர்வு எழுதி வழக்கம்போல் அதிக மதிப்பெண் எடுத்து எடுத்தும் விட்டான்…இது ஒருத்தி செய்ய தியகத்தினாள் என்று அறியாமலே ….

நடந்தது என்ன

சிவா எக்ஸாம் எழுத முடியாமல் கெஞ்சிக் கொண்டிருந்ததை பார்த்த சரண்யா வேறு ஒருவரிடம்  தான் தனது தோழிகாக இவ்வாறு செய்ததாகவும் மன்னித்துவிடுமாறும் கூறினாள்….

  இங்கு  பிரின்ஸ்பெலோ… அவளை திட்டி விட்டு

” ஒரு பெண்ணாக இப்படி திருட உனக்கு அசிங்கமாக இல்லை “என்று உரைத்து அவளை 15 நாள் சஸ்பெண்ட் செய்தார்…

இதனை நினைத்து வேதனை கொண்டாலும் அனைத்தும் அவள் சிவாவுக்காகவே   என்று நினைத்து மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு சென்றாள்… இது தெரிந்த அவனது அண்ணன் கார்த்திக் அவளிடம் விசாரிக்கையில் தெரியாமல் செய்ததாக பொய் கூறினாள்…அவளை கன்னம் சிவக்க  ஓங்கி அறைந்தான்

  ஏன் இவ்வாறு செய்கிறாய் ” 

அவளோ எதுவும் சொல்லாமல் தனது அறைக்கு சென்று விட்டாள்… அழுகையும் வரவில்லை தனது அண்ணனின் அடித்தது நினைத்து வருத்தம் மட்டுமே. சிவாவிற்காக  தான் செய்த உதவியை நினைத்து மகிழ்ந்து கொண்டிருந்தாள். சிவாவிடம் தன் காதலை கல்லூரி திறந்ததும் சொல்ல வேண்டும் என்று முடிவுக்கு வந்தாள்.

       சஸ்பென்ஸ் முடிந்து  எப்பொழுதும் போல் ஸ்கார்ஃப் கட்டி கல்லூரிக்கு வந்தாள் … சிவாவை தூரத்தில் பார்த்த சரண்யா  அவனை நோக்கி சென்றாள். அப்பொழுது சிவாவின்  நண்பன் கொஸ்டின் பேப்பர் திருடியதாக கை காட்டினான் சரண்யாவை  .இதைப் பார்த்த சரண்யா சிவாவிடம் சென்று நடந்ததை கூறு கூறலாம் என்று   அவனை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். சிவாவின்  பார்வை அவளை கொன்றது அவன் பார்வை தாங்கிய பொருள்  ” அருவெறுப்பு  ” . அவ்வளவுதான் அவள் இதயம் நொறுங்கிவிட்டது திரும்பி விருவிரு வென  வீட்டிற்கு சென்றுவிட்டாள் .அழுகை முட்டிக் கொண்டு வந்தது அழுதாள் விடாமல். அவள் அண்ணன் அறைந்தபோது அழாத  அழுகை எல்லாம் அவன் பார்த்த ஒற்றைப் பார்வையில் வந்தது .தன் காதலை தெரிவிக்காத பொழுதே  இவள் இவ்வளவு வேதனை கொள்கிறாள்  என்றால் , தன் காதலை அவனிடம் கூறி  அவன் ஏற்கவில்லை என்றால்  என்ன செய்வள் வாழ்க்கையை முடித்துக் கொள்ளவும் தயங்க மாட்டாள்.

இரத்த காயம் தராத வலியை

நின்

ஒற்றை பார்வை தந்ததடா !!..

    இதைப் படித்துக் கொண்டிருந்தவனுக்கு மனமெங்கும் வலி அழுகை வெளியே வராமல் தொண்டை  வலியை ஏற்படுத்தியது கட்டுப் படுத்திக் கொண்டு மீண்டும் வாசிப்பது தொடர்ந்தான்…

    தன் காதலை அவனிடம் மறைப்பதை மேல் என்று முடிவு செய்து … தான் மட்டும் அவளை காதல் அவனை காதல் செய்து கொண்டே இருக்கலாம் என்று எண்ணினாள் .விடாமல் அழுததாள் காய்ச்சல் வர , இரண்டு நாள் கழித்து காலேஜ் சென்றாள். அவளுக்கு இருந்த ஒரே மகிழ்ச்சி தான் ஸ்கார்ப் கட்டியிருந்ததால் தன் முகத்தை அவன் பார்க்கவில்லை என்று மட்டுமே.

வழக்கம்போல் அவளின் தொழிலான அவனை தூரத்திலிருந்து காதலிப்பதை செவ்வனே செய்து கொண்டிருந்தாள். அவள் காதல்  நாளுக்குநாள் அவளது அனுமதியற்று  கூடிக்கொண்டே இருந்தது.. ஒரு நாள் இவள் நடந்து வருகையில் ஒரு குழந்தை தடுக்கி விழுவதை பார்த்து குழந்தையை தூக்க ஓடினாள் அவள் போகும் முன்னே இரு கரங்கள் குழந்தையை தூக்கியது அவன் தான் அவளின் கள்வன் தான் . குழந்தையை தட்டி விட்டு சிரிப்பு காட்டி சிரிக்க வைத்து தன் கையிலிருந்த சாக்லெட்டை கொடுத்து குழந்தையின் கன்னத்தில் இதழ் பதித்தான் அவன்.  இங்கு அவளுக்கோ அவள் கண்ணத்தில் பதித்தது போன்று ஈரம்முற்றது.

சீண்டினால் தான் உடம்பு சிலிர்க்கும் என்று யாரடா சொன்னது..

நின் ஒற்றை பார்வை போதுமடா 

நான் மோட்சம் கொள்ள….

      அதை பார்த்து சிரித்துக்கொண்டு அவன் போன பின்பு அந்தக் குழந்தையிடம் சென்று அவன் கொடுத்த சாக்லேட்டை வாங்கி விட்டு தன் பையிலிருந்த பெரிய சாக்லெட் குழந்தையிடம் கொடுத்தாள். அதை பார்த்த குழந்தையின் அம்மா என்ன விசித்திரமான பெண் என்று பார்வை பார்த்தாள்.

     அன்று கல்லூரியில் அவனைப்பார்த்து தூரத்தில் பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள் சிவாவின் முகமோ அளவில்லா சந்தோஷம்  மகிழ்ச்சி அதனைப் பார்த்து.. அவள் இதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டு நின்றிருந்தாள் …அவன் எதிரே அன்று சரண்யா பஸ் ஸ்டாப்பில் பார்த்த பெண் வெட்கத்துடன் நடப்பதுபோல் நடித்து நடந்து  வந்தாள். சிவாவோ  அவள் முன் மண்டியிட்டு தனது காதலை வெளிப்படுத்தினான்.

      அவ்வளவுதான் கண்களில் தாரை தாரையாக ஊற்ற அவ்விடம் விட்டு ஓடினாள் . வீட்டிற்கு வந்தாள் சரண்யா அவ்வளவு  வலி  இவ்வளவு நாள் அவன் பின்னால் சுற்றியும் ஒருமுறைகூட தன்னைக் காணாது அந்தப்பெண்ணின் பொய்யான காதலை உண்மை என நம்பி அவனின் காதலை அவளிடம் கொடுக்கப்போகும் வேதனை அவளைக் கொன்றது … அருவியாய் கண்ணீர் கொட்டியது உடல்வலுவிழுந்து மயங்கி விழுந்தாள்…  அப்பொழுது வேலை முடிந்து வந்த கார்த்திக் அவள்  இருந்த நிலையை கண்டு பதறி அருகில் சென்று அவள் முகத்தில் தண்ணீர் தெளித்தான்.. முகமெல்லாம் வீங்கி கண்கள் ரத்த சிகப்பு கொள்ள உதடு தண்ணீர் இல்லாமல் வறண்டு இருக்க  .. விடாமல் அழுதுகொண்டே இருந்தாள். அண்ணன் என்னவென்று கேட்ட ஓடி சென்று அண்ணனை அனைத்து அழுதுகொண்டே இருந்தாள். பிறகு நடந்தது எல்லாம் கூறினார் அவன் தன்னை காப்பாற்றியதிலிருந்து கல்லூரியில் பார்த்து காதல் செய்தது வரை இன்று அவன் ஒரு பொய்யான காதலை ஏற்று வரை கூறினாள்.

    அவன் அண்ணனும் ” விடுமா உனது உண்மையான காதலை பெற அவனுக்கு தகுதி இல்லை ” என்றான்

    எவ்வளவு சமாதானப்படுத்தும் அவள் மனம் ஏற்கவில்லை அழுது அழுது ஓய்ந்து போனாள் அவள் அண்ணன் உணவு கொண்டுவர சாப்பிட மறுத்தாள் . அவனும் சாப்பிட மாட்டேன் என்று தூங்க செல்ல , அண்ணனுக்காக சாப்பிட்டாள் அழுது கொண்டு தூங்கினாள் அதற்கு பலன் காய்ச்சல் . அழுது அழுது கரைந்தாள்  சரியாக சாப்பிடாமல் தன்னைத்தானே வருத்திக் கொண்டாள்.ஒரு மாதம் கல்லூரிக்கு செல்ல முடியாத அளவுக்கு காய்ச்சல் உடம்பு வலி அவளைப் பார்க்கவே வலித்தது .அதனால் சிவாவை பார்த்து நடந்ததை கூறி காதலை சேர்த்து வைக்க வேண்டும் என்று எண்ணி விசாரிக்க ஆரம்பித்தான். அப்பொழுதுதான் தெரிந்தது சிவாவின்  செழுமை அளவில்லா பணம் .இவர்களோ சாதாரண மிடில் கிளாஸ் அவனைப் பற்றிய விஷயங்களை அறிந்ததால் ,தன் தங்கையை பற்றி கூறும் எண்ணத்தை விட்டு விட்டான். 

        தனது தங்கையை சந்தித்து  அவனை பற்றி கூறினான்  சிவா அவளது காதலை ஏற்றுக் கொண்டாலும் அவனது வீட்டில் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் , அவன் வீட்டைவிட்டு உனக்காக வந்தாலும்  பெற்றோர் இல்லாமல் வருத்தத்துடன் வாழ்வது உனக்கு சம்மதமா என்று கேட்டான் .

   இந்த சுயநலமற்ற சரண்யாவூம் “இல்லை”  சிவா  சந்தோஷத்துடன் வாழ வேண்டும் .நான் இனி அவனை எண்ணி வருந்த மாட்டேன் என்று அண்ணனிடம்  கூறினாள் .தன்னைத்தானே  சமாதனப்படுத்தி மறுநாள் கல்லூரிக்கு கிளம்பினாள் .ஆனால் தனது காதலை மட்டும் அவளால் சமன்படுத்த  முடியவில்லை சிவாவையும் அந்த பொய்யான பெண்ணின் காதலையும் இருவரையும் சேர்ந்து பார்க்கையில் எல்லாம் இவள் தனியே சென்று அழ வேண்டிய நிலைமை இருந்தது .

    பிறகு நன்கு யோசித்து விட்டு எப்படியாவது அந்த பெண்ணிடம் சென்று சிவாவை  விட்டுச் செல்லுமாறு கூற சென்றாள். 

அவளோ அவனது பணத்தில் குளித்தாள் , அவளது பொய்யான காதலையே உண்மையென நம்பி சிவாவும் அவனது காதலை  கொட்டினான். அவளுக்கு அவன் போர் அடிக்க எப்படிடா கழட்டி விடுவது என்று யோசித்துக் கொண்டிருந்தாள் . அந்த நேரம் பார்த்து சரண்யா அவளிடம் சென்று அவள் பஸ் ஸ்டாப்பில் அவள் பேசியதை கேட்டதாகவும் அவள் சிவாவை  விட்டுச் செல்லுமாறும் கூறி கொண்டிருந்தாள் கூறிக்கொண்டிருந்தார் . ஆனால் அதைக்கேட்ட அவள் ” இதுதான் சாக்கு ” என்று கார்த்திக்கும் உனக்கும் என்ன உறவு “அவன் உன்னை   முடித்துவிட்டானா  ” என்று அசிங்கமாக பேச ஆரம்பித்தாள்.சரண்யாவின் முகம் கோபத்தில் சிவக்க அவள் கன்னத்தில் கைரேகை பதிய அறைந்து விட்டு சென்றாள். 

    சிவாவிடம் இடம் சென்று அவன் பேச வாய்ப்பளிக்காமல் 

  ஒரு பெண் உன்னை விட்டு விடுமாறு கூறினாள் அப்படியானால் அவளை நீ காதலித்து ஏமாற்றி இருக்கிறாய் இனி என்னிடம் வராதே என்னை பார்க்காதே” 

      என்று வார்த்தைகளைக் கொட்டி பிரேக்கப் செய்து கொண்டு சென்றுவிட்டாள்.

    சிவாவோ  சிலையானான் அவளது பேச்சில் தனது உண்மையான காதலை இவ்வாறு சந்தேகம் கொண்டாலே என்று உயிரற்ற உடலாய் நின்றுகொண்டிருந்தான் . வலி மனதெங்கும் வலி  இதயம் சுக்குநூறாய் நொறுங்க கண்ணில் கண்ணில் கண்ணீர் அருவியாய் பெருக அவ்விடம் விட்டு நகர்ந்தான்  யாருமில்லா ஒரு இடத்தில் நின்று அழுது கொண்டிருந்தான். தனது காதல் தோற்றுவிட்டது, உண்மையான காதலை சந்தேகத்தை கொண்டு முடித்து  விட்டாலே ,இனி பார்க்க வரக்கூடாது என்று கூறிவிட்டாளே, தனது வாழ்வு  அவ்வளவுதானா என்று அழுது கொண்டிருந்தான் .அவனும் இதுவரை எந்த பொண்ணையும்  ஏறெடுத்து பார்த்தது இல்லை அவன் இதயம் கவர்ந்த ஒரே ஒரு பெண் இவள் மட்டுமே அதற்கு காரணம் அவளின் பொய்யான நடிப்பு என்று தெரியாமல், அவள் மேல் எல்லை இல்லா காதலை கொண்டு கொட்டினான் அதற்கு பலன் இன்று அனுபவிக்கிறான். 

      இவ்வாறு புலம்பிக் கொண்டு அழுது கொண்டிருக்கும் போது எதார்த்தமாக அங்கு வந்த சரண்யா அதனை பார்த்தாள்… அவன் நிலையைப் பார்த்து உலகமே  இருண்டது  அவள் நிலை தடுமாறி   கீழே விழும் நிலையில் போய்விட்டாள் .ஏனென்றால் அவனின் அழுகை அப்படி இருந்தது .

    யார் சொன்னால் ஆண்கள் அழ மாட்டார்கள் என்று ?…அவர்களின் அழுகை எந்த பெண்ணையும் எந்தப் பெண்ணின் இதயத்தையும் நொறுங்க செய்யும் .அவ்வாறு நொறுங்க செய்தது அவளின்  சிவாவின் அழுகை தூரத்திலிருந்து அதனைப் பார்த்து சரண்யாவும் தனது கண்ணீரை கொட்டிக்  கொண்டிருந்தாள் .அவனை மடிமீது சாய்த்து சமன்படுத்த  கை துடித்தது… கண்ணெல்லாம் சிவந்து விட்டது அம்மனிக்கு எவ்வளவு நேரம் அழுதால் என்று தெரியவில்லை சிறிது நேரம் கழித்து சிவாவின் நண்பன்  வந்து அவனை சமன்படுத்தி கூட்டிச்சென்றான். 

       பிறகு விசாரிக்கையில் சிவா  காதலித்த பெண் அவனை பிரேக்கப் செய்ததால்தான் இவன் இவ்வாறு இருக்கிறான்.சரண்யாவிற்க்கு  அளவில்லா சந்தோஷம் பொய்யான காதல் தோற்றுவிட்டது என்று ஆனாலும்,  தனது சிவா அழுவதை பார்த்து மனம் வேதனை கொள்ள தானசெய்தது. இரு கொள்ளி எறும்பாய் துடித்தது மனம் வீட்டிற்கு சென்றாள். தனது பெற்றோர்கள் மாலையிட்ட படத்தின் முன் நின்று வேண்டிக் கொண்டிருந்தாள் சிவாவை  சரிசெய்து தருமாறு… ஆம் சரண்யாவிற்கு அவன் அண்ணன் மட்டுமே சொந்தம்..

மறுநாள்   வழக்கம்போல் சிவாவை ரசிக்கும் எண்ணத்தோடு கல்லூரிக்கு சென்றான் கிடைத்தது தகவல் அவள் இதயத்தை நொறுக்கியது… சிவா கல்லூரியை விட்டு சென்றுவிட்டதாக வந்தது செய்தி . தனது காதல் முடிந்தது என்று வழக்கம்போல் மடைதிறந்த கண்ணீரை கொண்டு மனதை தேற்றிக் கொண்டு இருந்தாள் . நாட்கள் எல்லாம் சிவா  இன்றி நரகமாய் கழிய கல்லூரியும் முடித்துவிட்டாள். ஒரு வேலையிலும் சேர்ந்துவிட்டால் .ஆனால் , அவளது காதல் முடியவில்லை மறுபடியும் சிவாவை தேடும் எண்ணம் வந்தது  முடிந்தவரை தேடினாள் கிடைக்கவே இல்லை அவனைப் பற்றிய சிறு துரும்பு கூட  கிடைக்கவில்லை .

” என்றும் தேடுவேனடா  என் உண்மையான காதல் உன்னிடம் சேர்க்கும் என்ற நம்பிக்கையில்…. “

    அவன் தான் தன்னைப் பார்க்க வரும் யாரையும் அவன் அனுமதிக்கவில்லை .

       அனைத்தையும் படித்து முடித்த சிவாவின் மனதில் அவ்வளவு வலி . ” ஒருவரை இந்த அளவு காதலிக்க முடியுமா அதுவும் ஒரு தலையாய் இன்னும் இவள் என்னை காதலிக்கிறாளா  ” .மனதெங்கும் வழி ஒரு பொய்யான காதலை உண்மை என நம்பிய ஏமாந்தது அதற்காக இன்று வரை திருமணம் செய்யாமல் இருந்தான். ஆனால் இவளோ இன்னும் தன்னை காதலிக்கிறாளே. ஏன் இவள் காதல் எப்படித் தன் கண்முன் தெரியவில்லை என்று  கடவுளிடம் முறையிட்டான்.அதனால்தான் அவள் அடி பெற்று அவளிடம் சென்றபோது தனது இதயம் படபடத்தோ  தனது காதல் சேர வேண்டிய இடத்தில் வந்து சேர்ந்தது என எண்ணிக் கொண்டிருந்தான்.

அவனுக்கு இவ்வளவு காதல் கொடுத்த அவளோ இன்னும் கண்ணை திறக்காமல் இருந்தாள்.

    போன் சரி செய்து உள்ளே வந்த டிரைவர் சிவாவிடம் போனை கொடுக்க அவன் அதனை திறந்து அவள் அண்ணனுக்கு இச்செய்தியை தெரிவித்து ஹாஸ்பிடல் வருமாறு கூறினான்.  அவளின் போனை செக் செய்தான் கேலரி இயங்கும் அவள் அவனுக்கு தெரியாமல் ஒளிந்து ஒளிந்து எடுத்த புகைப்படமே அதையெல்லாம் பார்த்து தன்னையறியாமல் கண்ணீர் சிந்து கொண்டிருந்தான் சிவா .

      ” ஏண்டி உனக்கு என் மேல இவ்வளவு காதல் எழுந்து எனக்கு பதில் கூறு”  என்று கேட்கையில்,  அப்போது அங்கு வந்த  கார்த்திக் சிவாவை  பார்த்து இவன் எப்படி இங்கு என்று சிந்தித்தான்.

     பிறகு சிவா நடந்ததைக் கூறி சரண்யாவின் காதலை டைரியை படித்து புரிந்து கொண்டதாகவும் , தனக்கு அவளை மணம் புரிய சம்மதமா என்று கேட்டான் . அவன் அண்ணனுக்கும் அளவில்லா சந்தோஷம் தன்னிடம் இருந்து பெற்றோர்களைப் அழித்த கடவுள் இன்றுதான் தனக்கு சந்தோசத்தை கொடுப்பது போன்ற உணர்வு .. அவன் பார்த்து இருக்கிறானே   அவனுக்காக அவள் அழுத அழுகை எல்லாம். அவனும் சரி என்ன சொல்ல  ,

     சிறிது நேரத்தில்  கண்விழித்தாள் சரண்யா . எதிரே இருந்த அண்ணனைப் பார்த்தாள். சிவோ கட்டிலின் பின்னால் ஒளிந்து கொண்டான் சிறிதுநேரம் கண்ணாமூச்சி ஆடிட,

     கண் விழித்ததும்  கேட்ட முதல் கேள்வி ” என்னை  காப்பாற்றியவன் எங்கே”

” அதற்கு தனக்கு தெரியவில்லை என்றும் நான் வரும் போது இங்கு யாருமில்லை ” என்றான் . மனதில் சிரிப்பை அடக்கிக் கொண்டு .

    சரண்யா கைகளை இறுக்கமாக மூடி கண்ணீரை அடக்கிக் கொண்டிருந்தாள் நர்ஸ் அங்கு வர அவளுக்கு ஸ்லீபிங் பில் கொடுத்து தூங்கச் சொன்னார். அவளும் சிறிது நேரத்தில் உறங்கி போக பின்னாலிருந்து வந்த சிவா  அவளைப் பார்த்து அருகில் இருந்த நாற்காலியை இழுத்து அவள் பக்கத்தில் அமர்ந்து பெட்டில் தலையசாய்த்து அவளைப் பார்த்தான். தலையில் பெரிய கட்டு முகத்தில் சிராய்ப்பு கையில் கட்டு இந்த நேரத்திலும் தன்னை கேட்கிறாளே என்று சந்தோசப் படுவதா இல்லை இவள் காதல் தெரியாமல்  தவிக்க விட்டு விட்டோமே என்று நொந்து கொள்வதா தெரியாமல் தவித்தான். அவளைப் பார்த்து அப்படியே உறங்கியும் போனான்.

      சில மணி நேரங்களுக்குப் பிறகு கண்விழித்த சரண்யாக்கோ  தெரிந்தது அவளின் சிவாவின் முகமே அவ்வளவு அருகில்  படுத்திருந்தான் .. ஏழ எத்தனித்தாள் ,தூக்கம் கலைந்த சிவா அவளுக்கு உதவி செய்தான் .

   அவளுக்கு வார்த்தை வரவில்லை சிறிது நேரத்தில் சமன்படுத்தி கொண்டு தனக்கு உதவி செய்ததற்காக நன்றி என்றாள்.

சிவாகோ  ஆதங்கம் இப்பொழுதுகூட அவளது காதலை தன்னிடம் கூறவில்லையே என்று கோபம் கலந்த ஆதங்கம் , அவள் முகம் அருகே சென்றான் அவளுக்கோ நடுக்கம் இதயம் தாறுமாறாகத் துடித்தது. அவளிடம் சென்று அவள் வறண்ட உதடுகளை  ஈரம் செய்தான் சரண்யா அதிர்ச்சியடைந்தாலும் சிறிது நேரத்தில் மயங்கினாள் அவனது இதழ் முத்தத்தில்.. இத்தனை நாள் பட்ட காயம் வேதனை எல்லாம் இதில் மறந்தது.

      கண்களிலிருந்து  தாரை தாரையாக வடிய , சிவா அவளது கண்ணீரை துடைத்துவிட்டு  ஐ லவ் யூ என்றான் .அவளோ வார்த்தைகளின்றி தடுமாறினாள்  தன்னிடம் காதல் சொல்கிறானே தனது காதலன் தன்னிடம் காதல் சொல்கிறானா , என்று அளவில்லா மகிழ்ச்சி கொண்டாலும் ,அவள் மனம் எண்ணியதோ அவ்வளவு பெரிய பணக்காரனை தன் காதலனா இருந்தாலும் ஏற்க யோசிக்க வைத்தது. பதில்  ஏதும் கூறாமல் கண்ணை மூடி படுத்துக்கொண்டாள்.  

      அவள் நிலை புரிந்து , அறையை விட்டு வெளியே சென்றான்.

     சிவாவோ வீட்டிற்கு சென்று தனது மாமனிடம் தான் காதலிப்பதாகவும் அவளைப் பெண் பார்க்க ஒரு வாரம் கழித்து செல்ல வேண்டுமென்று  உத்தரவு விட்டுக்கொண்டிருந்தான். அவர்களோ அவன் பிடிவாதம் தெரிந்து ஒத்துக் கொண்டார்கள்.

    ஒரு வாரத்தில் சரண்யா ஓரளவு குணமாகி வீட்டிற்கு வந்தாள். எப்பொழுதும் போல் வீட்டில் இருக்கையில்  சிவாவின் குடும்பம் வருவதை பார்த்து இருவரும் அதிர்ச்சியானார்கள். பிறகு பெண் கேட்க வந்து இருப்பதாகவும் கூறினார்கள்.

     சரண்யா அதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியமல் அவள் அண்ணனை பார்த்தாள் , கார்த்திக்கோ சரி என்றான் .

           அடுத்த வாரத்தில் திருமணம் இருக்க வேலை தடபுடலாக ஓடியது. ஆனால்,  சிவா மட்டும்  ஒரு வார்த்தை கூட அவளிடம் பேசவில்லை  . அவள் எண்ணத்தை பூர்த்தி செய்து தான் பேச வேண்டும் என்று இருந்தான்.

    கல்யாணமும் அழகாய் அரங்கேற அங்கே இருந்த அவளின் மாமன் இடம் அவன் ஒரு பத்திரத்தை கொடுத்தான். அவர் பார்த்து அதிர்ந்தேவிட்டார். ஏனெனில் , அதில் இருந்தது அவனுடைய அத்தனை சொத்தும் அவனுடைய மாமன் பெயரில் .

     ஏன் என்று கேட்கையில் 

  எல்லாரும் என்  சொத்துக்காக கூட இருக்காங்கன்னு எனக்கு தெரியும்,  நீங்க கூட உங்க பொண்ணு எனக்கு கல்யாணம் பண்ணிவச்சா  சொத்த நமக்குள்ளேயே இருக்கும் தான் நினைச்சிங்க ,என் அப்பா அம்மா என்ன விட்டு போகயில் ஒருவேளை எனக்கு எந்த சொத்தும் சேர்க்காமல் போயிருந்தால்  கண்டிப்பா  யாரும் யாரையும் கூட இருந்திருக்க மாட்டீர்கள்.  ஆனா இவ அப்படி இல்லை இவளுக்கு நான் மட்டும் தான் முக்கியம் நான் மட்டும் தான் வேணும்  அதனால இதுல எனக்கு வேணாம் என்றான் என். பிறகு ஒரு உதவியும் கேட்டான் தான் வேறு ஒரு வீட்டில் இருக்கப் போவதாகவும்  இனி நமது கம்பெனியின் உரிமையாளர் இல்லை என்றும்  என் பெற்றோர்கள் அந்த கம்பெனியை வளர்த்ததால் தனக்கு அங்கே ஒரே ஒரு வேளை தருமாறும் கேட்டான் . அருகிலிருந்த சரண்யாகோ கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது இத்தனை நாள்  தான் சம்மதம் சொல்லாத காரணத்தை அறிந்து கொண்டானே என்று அழுகை முட்டிக்கொண்டு வந்தது சிவா அவளை பார்த்து கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டான்.

     அனைத்தும் நல்லபடியாக நிறைவேற முடிய இரவு அறையில்  சரண்யாவிற்கு காத்திருந்தான் .அங்கே அவள் இந்த நினைவிடம் கடவுள் அவளது உயிரை எடுத்துக் கொண்டாலும்  மகிழ்ச்சியே என்ற எண்ணத்துடன் உள்ளே சிறிது வெட்கத்துடன் நடந்து வந்தாள்.

    அவளை அருகில் அமர்த்தி  பேச ஆரம்பித்தான். உனது டைரியில் நான் உன்னை காப்பாற்றியதாக எழுதியிருக்கிறாய், எப்போ நான் உன்னை காப்பாற்றினேன் . அவளோ கூற ஆரம்பித்தால்

சில வருடங்களுக்கு முன் நடந்ததை

       இரவில் ஒருவன் தன்னை பலவந்தப்படுத்தி நினைத்து  தரதரவென்று வாயை பொத்தி இழுத்துச் செல்லும் போது , எதர்ச்சியாக ஏதோ கோபத்தில் வந்த சிவா  அவன் காரை எடுக்கையில்  இவளைப் பிடித்து இருந்தவனின் கால் இடித்து முடிந்ததாகவும், அதனால்தான் அவள் தன்னை காப்பாற்றிக் கொள்ள முடிந்ததாகவும்  கூறினாள் . அவனுக்கோ கண் சிவந்தது அன்று ஒருவன் காலை ஏற்றியதால் இன்று வரை அவனுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறோமே. ஆனால் ,அவன் தன்னவளை தொட முயற்சித்திக்கின்றனே  என்ற ஆத்திரத்தில் ஆத்திரத்தில் இருந்தான்.

சரண்யா அன்று அனுபவித்த வேதனையை எண்ணி அவளை இறுக அணைத்துக் கொண்டான். அவளோ அவன் முகம் ஏறெடுத்து பார்த்து ஐ லவ் யூ என்று கூறி அவனை இன்னும் இறுக அணைத்துக் கொண்டாள்.

     அவளுக்கு கண்ணீர் தான் தனது காதல் வென்றுவிட்டது அவ்வளவு ஆனந்தம் அவளின் கண்ணீர் அவனது உடலை நனைத்தது.

     அவள் மணம்  அறிந்து இல்லை மெத்தையில் படுத்து அவளை தன் மார்பில் கிடத்தி தூங்க தயாரானான். 

இனி அவளை  வருடமெல்லாம்  வாரமெல்லாம் நாட்களெல்லாம் மணிகளெள்லாம் நிமிடமெல்லாம்  நொடிகளெல்லாம் காதல் செய்ய வேண்டும் என்று செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு உறங்கியும் போனான். அவளும்  தன்னவனோடு இனி உயிர் உள்ளவரை மகிழ்ச்சியோடு இருக்கபோகிறோம் என்ற எண்ணத்தோடு உறங்கிப் போனாள்…

” வலிகொண்ட என் இதயம் 

உன்னோடு இணைந்ததே

காதல் மழையில் நனைந்தே உண்மையான காதல் உன்னிடம் என்னை சேர்த்ததடா ” .மிதமான வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தான் சிவா ….அவனது முகத்தில் தெரிந்த உணர்ச்சி ”  எதற்காக வாழ்கிறோம்”  என்றிருந்ததுஅவனது தொலைபேசி அலற

சொல்லுங்க மாமா

”  எப்படா என் பொண்ண கல்யாணம் பண்ணிக்க போறமாமா 

மாமா எத்தன தடவ சொல்றது அவள என் தங்கச்சி மாதிரி தான் பார்க்கிறேன்என்று கத்திக் கொண்டிருந்தான் சிவா

அவன் மாமாவும் திட்டிவிட்டு போனை வைத்தார் 

      இவன் ஆத்திரத்தில் தங்கையாக நினைக்கும் அவளை எவ்வாறு திருமணம் செய்வது என்று யோசித்துக் கொண்டே காரை வேகத்தை கூட்டினான்

      திடீரென்று டமால் என்று சத்தம், யாரையோ இடித்துவிட்டோம் என்று பதறி இறங்கினான்  ரத்த வெள்ளத்தில் கிடந்த சரண்யா அருகில் சென்று அவளை மடியில் கிடத்தினான்

ஹலோ எந்திரிங்க கண்ண முழிச்சு பாருங்கள்இவன் கண்களிலிருந்து கண்ணீர் இதயம் படபடத்தது  வலி யார் என்று தெரியாத பெண்ணிற்கு நாம் ஏன் இவ்வளவு வலி கொள்ள வேண்டும் 

அவளோ அவன் கன்னங்களை தன் ரத்த கைகளோடு தொட்டுப் பார்த்தாள்  அவ்வளவு வழியிலும் அவன் முகத்தைப் பார்த்து சிரித்து மயங்கினாள்.

யார் இவள்என்ன பார்த்து ஏன்  மகிழ்ச்சியுற்றாள்என்று யோசித்துக் கொண்டு  அவளை காரில் தூக்கிப் போட்டு ஹாஸ்பிடலுக்கு சென்றான் .

அங்கே ஒரு மணி நேர சிகிச்சைக்கு பிறகு வெளியே டாக்டர் வந்தார் உயிருக்கு ஆபத்தில்லை என்று கூறியவுடன் தான் சிவாவிற்க்கு உயிரே வந்ததுஅவனின் டிரைவரை செல்பேசியில் தன் இருக்கும் இடம் வருமாறு பணித்தான்….. அவளின்  பெற்றோருக்கு விஷயம் தெரிவிக்க வேண்டும் என்று அவளது பையை எடுத்து  ஏதாவது கிடைக்குமா என்று தேடினான் முதலில் கையில் கிடைத்தது டைரிபிறகு ஒரு சாக்லேட் பிளாஸ்டிக் கவரால் சுற்றி இருந்தது தண்ணீர் புகா வண்ணம் ….. அடுத்து , செல்பேசி  விழுந்ததில்  உடைந்து இருந்தது அதை எடுத்து அவனது டிரைவரிடம் கொடுத்து சரி செய்து வருமாறு கொடுத்தான்….

டைரியில் ஏதாவது கிடைக்குமா என்று படிக்க ஆரம்பித்தான்…. திறந்து பார்த்ததும் அதிர்ச்சியுற்றது கண்கள் முதல் பக்கத்தில் அவனது புகைப்படம் கீழே 

      ” எனது பெண்மையை காத்தவனே ”  என்ற வாசகம் இவனுக்கு குழப்பம்யார் இவள்? …டைரியை படிக்க ஆரம்பித்தான்

ஐந்து வருடங்களுக்கு முன்பு  

        தனது அண்ணன் கார்த்திக்கிடம் எப்பொழுதும் வாங்கும் அர்ச்சனைகளை பெற்றுவிட்டு கல்லூரிக்கு கிளம்பினாள் . சரண்யா பஸ் ஸ்டாப்பில் நிற்கும் போது அவள் அருகில் இருந்த ஒரு பெண் …” ஒருவழியா அவன கவுத்திட்டேன் ..அவன் கிட்ட பணம் உருவிர  வேண்டியது தான் …. அழகா இருக்கிறது கூட  ஒரு யூஸ் தான் போல ”  என்று சொல்லிக்கொண்டிருந்தாள்….அனைத்தும் சரண்யாவின் காதில் விழ   என்ன பெண் இவள் யாரை ஏமாற்ற போகிறாள் என்று சிந்தித்தாள்…. அவளது சிவா  ஏமாறுவது அறியாது

வகுப்பிற்கு சென்றதும் உள்ளே வந்தவனை  பார்த்து அதிர்ச்சியானாள் ஆம் வந்தது அவளின் சிவா  தான் . யாரை இவ்வளவு நாள் தேடினாளோ யாரை  பார்த்து நன்றி கூறவேண்டும் என்று காத்திருந்தாளோ  அவனேதான் ….அவனை தேடிய நினைவுகள் எல்லாம் அவன் மேல் உள்ள மரியாதை  நன்றியுணர்வு எல்லாம் தன்னை மீறி காதல் விதை விதைக்க…. 

இன்று அவனை  இரசிக்க ஆரம்பித்தாள்…. பிறகு தோழிகளிடம் அவனை பற்றி விசாரிக்க ஆரம்பித்தாள்…. அவனோ ஐடி மாணவன்  , படிப்பில் கெட்டிக்காரன், பெண்களுக்கு மதிப்பு கொடுத்து நடப்பவன், அவ்வளவாக பெண்களிடம் பேசாதவன் என்று தெரிந்து கொண்டாள்….வேறு என்ன தகுதி வேண்டும் ஒரு பெண்ணை கவர….

     அவள் இதயம் அவனை பார்க்கையில்  புரியாத உணர்ச்சி கொண்டு படபடத்ததுஇதுதான் காதலோ ??..  நிமிடம் விடாமல் அவள் நினைப்பிலேயே இருந்தாள் வீட்டிற்கு சென்றாலும் அவன் நினைப்பு…..தினமும் காலேஜ் வருவதே நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவனின் தூரத்திலிருந்து ரசிப்பாள் .

தூரத்தில் தோன்றிடும் மேகத்தை போலவே

நான் உனை பார்க்கிறேன் அன்பே

சாரலாய் ஓர் முறை நீ எனை தீண்டினால்

உனக்கது தெரிந்ததா அன்பே

என் மனம் காணலின் நீர் என ஆகுமோ

கால்களில் சேறுமா

நேசிக்கும் காலம் தான் வீனென போகுமா

நினைவுகள் சேர்க்கிறேன் இங்கே

வாசிக்கும் சிவாவின் இதழில் புன்னகை..இப்படி ரசித்திருகீகிறாளேதொடர்ந்தான் வாசிப்பை

இவ்வாறு அவனை ரசிப்பதிலே கல்லூரியை ஓட்டினாள்….. ஒருநாள் தேர்வு இருக்க சிவாவோ  டாப்பர் அதனால் அவன் வகுப்பில் இரண்டாம் மதிப்பெண் எடுப்பானோ எப்படியாவது அவனை  கொஸ்டின் பேப்பர் திருடிய சாக்கில் மாற்றிவிட வேண்டும் என்று அவனை மாட்டிவிட்டான் அதனை அறியாத சிவா …..தான் செய்யவில்லை என்று பிரின்ஸ்பல் இடம் மன்றாடிக் கொண்டிருந்தான் …..அங்கு வந்திருந்த மற்றொரு ஆசிரியர் கொஸ்டின் பேப்பர் திருடிய மாணவர் கிடைத்து விட்டார்  என்றும் …. இவனை எக்ஸாம் எழுத அனுமதிக்குமாறும் கூறினார்.

       அவரும் சரி என்று இட சிவாவும் விரைவாக சென்று  தேர்வு எழுதி வழக்கம்போல் அதிக மதிப்பெண் எடுத்து எடுத்தும் விட்டான்இது ஒருத்தி செய்ய தியகத்தினாள் என்று அறியாமலே ….

நடந்தது என்ன

சிவா எக்ஸாம் எழுத முடியாமல் கெஞ்சிக் கொண்டிருந்ததை பார்த்த சரண்யா வேறு ஒருவரிடம்  தான் தனது தோழிகாக இவ்வாறு செய்ததாகவும் மன்னித்துவிடுமாறும் கூறினாள்….

  இங்கு  பிரின்ஸ்பெலோஅவளை திட்டி விட்டு

ஒரு பெண்ணாக இப்படி திருட உனக்கு அசிங்கமாக இல்லைஎன்று உரைத்து அவளை 15 நாள் சஸ்பெண்ட் செய்தார்

இதனை நினைத்து வேதனை கொண்டாலும் அனைத்தும் அவள் சிவாவுக்காகவே   என்று நினைத்து மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு சென்றாள்இது தெரிந்த அவனது அண்ணன் கார்த்திக் அவளிடம் விசாரிக்கையில் தெரியாமல் செய்ததாக பொய் கூறினாள்அவளை கன்னம் சிவக்க  ஓங்கி அறைந்தான்

”  ஏன் இவ்வாறு செய்கிறாய் ” 

அவளோ எதுவும் சொல்லாமல் தனது அறைக்கு சென்று விட்டாள்அழுகையும் வரவில்லை தனது அண்ணனின் அடித்தது நினைத்து வருத்தம் மட்டுமே. சிவாவிற்காக  தான் செய்த உதவியை நினைத்து மகிழ்ந்து கொண்டிருந்தாள். சிவாவிடம் தன் காதலை கல்லூரி திறந்ததும் சொல்ல வேண்டும் என்று முடிவுக்கு வந்தாள்.

       சஸ்பென்ஸ் முடிந்து  எப்பொழுதும் போல் ஸ்கார்ஃப் கட்டி கல்லூரிக்கு வந்தாள்சிவாவை தூரத்தில் பார்த்த சரண்யா  அவனை நோக்கி சென்றாள். அப்பொழுது சிவாவின்  நண்பன் கொஸ்டின் பேப்பர் திருடியதாக கை காட்டினான் சரண்யாவை  .இதைப் பார்த்த சரண்யா சிவாவிடம் சென்று நடந்ததை கூறு கூறலாம் என்று   அவனை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். சிவாவின்  பார்வை அவளை கொன்றது அவன் பார்வை தாங்கிய பொருள்  ” அருவெறுப்பு  ” . அவ்வளவுதான் அவள் இதயம் நொறுங்கிவிட்டது திரும்பி விருவிரு வென  வீட்டிற்கு சென்றுவிட்டாள் .அழுகை முட்டிக் கொண்டு வந்தது அழுதாள் விடாமல். அவள் அண்ணன் அறைந்தபோது அழாத  அழுகை எல்லாம் அவன் பார்த்த ஒற்றைப் பார்வையில் வந்தது .தன் காதலை தெரிவிக்காத பொழுதே  இவள் இவ்வளவு வேதனை கொள்கிறாள்  என்றால் , தன் காதலை அவனிடம் கூறி  அவன் ஏற்கவில்லை என்றால்  என்ன செய்வள் வாழ்க்கையை முடித்துக் கொள்ளவும் தயங்க மாட்டாள்.

இரத்த காயம் தராத வலியை

நின்

ஒற்றை பார்வை தந்ததடா !!..

    இதைப் படித்துக் கொண்டிருந்தவனுக்கு மனமெங்கும் வலி அழுகை வெளியே வராமல் தொண்டை  வலியை ஏற்படுத்தியது கட்டுப் படுத்திக் கொண்டு மீண்டும் வாசிப்பது தொடர்ந்தான்

    தன் காதலை அவனிடம் மறைப்பதை மேல் என்று முடிவு செய்துதான் மட்டும் அவளை காதல் அவனை காதல் செய்து கொண்டே இருக்கலாம் என்று எண்ணினாள் .விடாமல் அழுததாள் காய்ச்சல் வர , இரண்டு நாள் கழித்து காலேஜ் சென்றாள். அவளுக்கு இருந்த ஒரே மகிழ்ச்சி தான் ஸ்கார்ப் கட்டியிருந்ததால் தன் முகத்தை அவன் பார்க்கவில்லை என்று மட்டுமே.

வழக்கம்போல் அவளின் தொழிலான அவனை தூரத்திலிருந்து காதலிப்பதை செவ்வனே செய்து கொண்டிருந்தாள். அவள் காதல்  நாளுக்குநாள் அவளது அனுமதியற்று  கூடிக்கொண்டே இருந்தது.. ஒரு நாள் இவள் நடந்து வருகையில் ஒரு குழந்தை தடுக்கி விழுவதை பார்த்து குழந்தையை தூக்க ஓடினாள் அவள் போகும் முன்னே இரு கரங்கள் குழந்தையை தூக்கியது அவன் தான் அவளின் கள்வன் தான் . குழந்தையை தட்டி விட்டு சிரிப்பு காட்டி சிரிக்க வைத்து தன் கையிலிருந்த சாக்லெட்டை கொடுத்து குழந்தையின் கன்னத்தில் இதழ் பதித்தான் அவன்இங்கு அவளுக்கோ அவள் கண்ணத்தில் பதித்தது போன்று ஈரம்முற்றது.

சீண்டினால் தான் உடம்பு சிலிர்க்கும் என்று யாரடா சொன்னது..

நின் ஒற்றை பார்வை போதுமடா 

நான் மோட்சம் கொள்ள….

      அதை பார்த்து சிரித்துக்கொண்டு அவன் போன பின்பு அந்தக் குழந்தையிடம் சென்று அவன் கொடுத்த சாக்லேட்டை வாங்கி விட்டு தன் பையிலிருந்த பெரிய சாக்லெட் குழந்தையிடம் கொடுத்தாள். அதை பார்த்த குழந்தையின் அம்மா என்ன விசித்திரமான பெண் என்று பார்வை பார்த்தாள்.

     அன்று கல்லூரியில் அவனைப்பார்த்து தூரத்தில் பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள் சிவாவின் முகமோ அளவில்லா சந்தோஷம்  மகிழ்ச்சி அதனைப் பார்த்து.. அவள் இதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டு நின்றிருந்தாள்அவன் எதிரே அன்று சரண்யா பஸ் ஸ்டாப்பில் பார்த்த பெண் வெட்கத்துடன் நடப்பதுபோல் நடித்து நடந்து  வந்தாள். சிவாவோ  அவள் முன் மண்டியிட்டு தனது காதலை வெளிப்படுத்தினான்.

      அவ்வளவுதான் கண்களில் தாரை தாரையாக ஊற்ற அவ்விடம் விட்டு ஓடினாள் . வீட்டிற்கு வந்தாள் சரண்யா அவ்வளவு  வலி  இவ்வளவு நாள் அவன் பின்னால் சுற்றியும் ஒருமுறைகூட தன்னைக் காணாது அந்தப்பெண்ணின் பொய்யான காதலை உண்மை என நம்பி அவனின் காதலை அவளிடம் கொடுக்கப்போகும் வேதனை அவளைக் கொன்றதுஅருவியாய் கண்ணீர் கொட்டியது உடல்வலுவிழுந்து மயங்கி விழுந்தாள்…  அப்பொழுது வேலை முடிந்து வந்த கார்த்திக் அவள்  இருந்த நிலையை கண்டு பதறி அருகில் சென்று அவள் முகத்தில் தண்ணீர் தெளித்தான்.. முகமெல்லாம் வீங்கி கண்கள் ரத்த சிகப்பு கொள்ள உதடு தண்ணீர் இல்லாமல் வறண்டு இருக்க  .. விடாமல் அழுதுகொண்டே இருந்தாள். அண்ணன் என்னவென்று கேட்ட ஓடி சென்று அண்ணனை அனைத்து அழுதுகொண்டே இருந்தாள். பிறகு நடந்தது எல்லாம் கூறினார் அவன் தன்னை காப்பாற்றியதிலிருந்து கல்லூரியில் பார்த்து காதல் செய்தது வரை இன்று அவன் ஒரு பொய்யான காதலை ஏற்று வரை கூறினாள்.

    அவன் அண்ணனும்விடுமா உனது உண்மையான காதலை பெற அவனுக்கு தகுதி இல்லைஎன்றான்

    எவ்வளவு சமாதானப்படுத்தும் அவள் மனம் ஏற்கவில்லை அழுது அழுது ஓய்ந்து போனாள் அவள் அண்ணன் உணவு கொண்டுவர சாப்பிட மறுத்தாள் . அவனும் சாப்பிட மாட்டேன் என்று தூங்க செல்ல , அண்ணனுக்காக சாப்பிட்டாள் அழுது கொண்டு தூங்கினாள் அதற்கு பலன் காய்ச்சல் . அழுது அழுது கரைந்தாள்  சரியாக சாப்பிடாமல் தன்னைத்தானே வருத்திக் கொண்டாள்.ஒரு மாதம் கல்லூரிக்கு செல்ல முடியாத அளவுக்கு காய்ச்சல் உடம்பு வலி அவளைப் பார்க்கவே வலித்தது .அதனால் சிவாவை பார்த்து நடந்ததை கூறி காதலை சேர்த்து வைக்க வேண்டும் என்று எண்ணி விசாரிக்க ஆரம்பித்தான். அப்பொழுதுதான் தெரிந்தது சிவாவின்  செழுமை அளவில்லா பணம் .இவர்களோ சாதாரண மிடில் கிளாஸ் அவனைப் பற்றிய விஷயங்களை அறிந்ததால் ,தன் தங்கையை பற்றி கூறும் எண்ணத்தை விட்டு விட்டான்

        தனது தங்கையை சந்தித்து  அவனை பற்றி கூறினான்  சிவா அவளது காதலை ஏற்றுக் கொண்டாலும் அவனது வீட்டில் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் , அவன் வீட்டைவிட்டு உனக்காக வந்தாலும்  பெற்றோர் இல்லாமல் வருத்தத்துடன் வாழ்வது உனக்கு சம்மதமா என்று கேட்டான் .

   இந்த சுயநலமற்ற சரண்யாவூம்இல்லை”  சிவா  சந்தோஷத்துடன் வாழ வேண்டும் .நான் இனி அவனை எண்ணி வருந்த மாட்டேன் என்று அண்ணனிடம்  கூறினாள் .தன்னைத்தானே  சமாதனப்படுத்தி மறுநாள் கல்லூரிக்கு கிளம்பினாள் .ஆனால் தனது காதலை மட்டும் அவளால் சமன்படுத்த  முடியவில்லை சிவாவையும் அந்த பொய்யான பெண்ணின் காதலையும் இருவரையும் சேர்ந்து பார்க்கையில் எல்லாம் இவள் தனியே சென்று அழ வேண்டிய நிலைமை இருந்தது .

    பிறகு நன்கு யோசித்து விட்டு எப்படியாவது அந்த பெண்ணிடம் சென்று சிவாவை  விட்டுச் செல்லுமாறு கூற சென்றாள்

அவளோ அவனது பணத்தில் குளித்தாள் , அவளது பொய்யான காதலையே உண்மையென நம்பி சிவாவும் அவனது காதலை  கொட்டினான். அவளுக்கு அவன் போர் அடிக்க எப்படிடா கழட்டி விடுவது என்று யோசித்துக் கொண்டிருந்தாள் . அந்த நேரம் பார்த்து சரண்யா அவளிடம் சென்று அவள் பஸ் ஸ்டாப்பில் அவள் பேசியதை கேட்டதாகவும் அவள் சிவாவை  விட்டுச் செல்லுமாறும் கூறி கொண்டிருந்தாள் கூறிக்கொண்டிருந்தார் . ஆனால் அதைக்கேட்ட அவள்இதுதான் சாக்குஎன்று கார்த்திக்கும் உனக்கும் என்ன உறவுஅவன் உன்னை   முடித்துவிட்டானா  ” என்று அசிங்கமாக பேச ஆரம்பித்தாள்.சரண்யாவின் முகம் கோபத்தில் சிவக்க அவள் கன்னத்தில் கைரேகை பதிய அறைந்து விட்டு சென்றாள்

    சிவாவிடம் இடம் சென்று அவன் பேச வாய்ப்பளிக்காமல் 

”  ஒரு பெண் உன்னை விட்டு விடுமாறு கூறினாள் அப்படியானால் அவளை நீ காதலித்து ஏமாற்றி இருக்கிறாய் இனி என்னிடம் வராதே என்னை பார்க்காதே” 

      என்று வார்த்தைகளைக் கொட்டி பிரேக்கப் செய்து கொண்டு சென்றுவிட்டாள்.

    சிவாவோ  சிலையானான் அவளது பேச்சில் தனது உண்மையான காதலை இவ்வாறு சந்தேகம் கொண்டாலே என்று உயிரற்ற உடலாய் நின்றுகொண்டிருந்தான் . வலி மனதெங்கும் வலி  இதயம் சுக்குநூறாய் நொறுங்க கண்ணில் கண்ணில் கண்ணீர் அருவியாய் பெருக அவ்விடம் விட்டு நகர்ந்தான்  யாருமில்லா ஒரு இடத்தில் நின்று அழுது கொண்டிருந்தான். தனது காதல் தோற்றுவிட்டது, உண்மையான காதலை சந்தேகத்தை கொண்டு முடித்து  விட்டாலே ,இனி பார்க்க வரக்கூடாது என்று கூறிவிட்டாளே, தனது வாழ்வு  அவ்வளவுதானா என்று அழுது கொண்டிருந்தான் .அவனும் இதுவரை எந்த பொண்ணையும்  ஏறெடுத்து பார்த்தது இல்லை அவன் இதயம் கவர்ந்த ஒரே ஒரு பெண் இவள் மட்டுமே அதற்கு காரணம் அவளின் பொய்யான நடிப்பு என்று தெரியாமல், அவள் மேல் எல்லை இல்லா காதலை கொண்டு கொட்டினான் அதற்கு பலன் இன்று அனுபவிக்கிறான்

      இவ்வாறு புலம்பிக் கொண்டு அழுது கொண்டிருக்கும் போது எதார்த்தமாக அங்கு வந்த சரண்யா அதனை பார்த்தாள்அவன் நிலையைப் பார்த்து உலகமே  இருண்டது  அவள் நிலை தடுமாறி   கீழே விழும் நிலையில் போய்விட்டாள் .ஏனென்றால் அவனின் அழுகை அப்படி இருந்தது .

    யார் சொன்னால் ஆண்கள் அழ மாட்டார்கள் என்று ?…அவர்களின் அழுகை எந்த பெண்ணையும் எந்தப் பெண்ணின் இதயத்தையும் நொறுங்க செய்யும் .அவ்வாறு நொறுங்க செய்தது அவளின்  சிவாவின் அழுகை தூரத்திலிருந்து அதனைப் பார்த்து சரண்யாவும் தனது கண்ணீரை கொட்டிக்  கொண்டிருந்தாள் .அவனை மடிமீது சாய்த்து சமன்படுத்த  கை துடித்ததுகண்ணெல்லாம் சிவந்து விட்டது அம்மனிக்கு எவ்வளவு நேரம் அழுதால் என்று தெரியவில்லை சிறிது நேரம் கழித்து சிவாவின் நண்பன்  வந்து அவனை சமன்படுத்தி கூட்டிச்சென்றான்

       பிறகு விசாரிக்கையில் சிவா  காதலித்த பெண் அவனை பிரேக்கப் செய்ததால்தான் இவன் இவ்வாறு இருக்கிறான்.சரண்யாவிற்க்கு  அளவில்லா சந்தோஷம் பொய்யான காதல் தோற்றுவிட்டது என்று ஆனாலும்தனது சிவா அழுவதை பார்த்து மனம் வேதனை கொள்ள தானசெய்தது. இரு கொள்ளி எறும்பாய் துடித்தது மனம் வீட்டிற்கு சென்றாள். தனது பெற்றோர்கள் மாலையிட்ட படத்தின் முன் நின்று வேண்டிக் கொண்டிருந்தாள் சிவாவை  சரிசெய்து தருமாறுஆம் சரண்யாவிற்கு அவன் அண்ணன் மட்டுமே சொந்தம்..

மறுநாள்   வழக்கம்போல் சிவாவை ரசிக்கும் எண்ணத்தோடு கல்லூரிக்கு சென்றான் கிடைத்தது தகவல் அவள் இதயத்தை நொறுக்கியதுசிவா கல்லூரியை விட்டு சென்றுவிட்டதாக வந்தது செய்தி . தனது காதல் முடிந்தது என்று வழக்கம்போல் மடைதிறந்த கண்ணீரை கொண்டு மனதை தேற்றிக் கொண்டு இருந்தாள் . நாட்கள் எல்லாம் சிவா  இன்றி நரகமாய் கழிய கல்லூரியும் முடித்துவிட்டாள். ஒரு வேலையிலும் சேர்ந்துவிட்டால் .ஆனால் , அவளது காதல் முடியவில்லை மறுபடியும் சிவாவை தேடும் எண்ணம் வந்தது  முடிந்தவரை தேடினாள் கிடைக்கவே இல்லை அவனைப் பற்றிய சிறு துரும்பு கூட  கிடைக்கவில்லை .

என்றும் தேடுவேனடா  என் உண்மையான காதல் உன்னிடம் சேர்க்கும் என்ற நம்பிக்கையில்…. “

    அவன் தான் தன்னைப் பார்க்க வரும் யாரையும் அவன் அனுமதிக்கவில்லை .

       அனைத்தையும் படித்து முடித்த சிவாவின் மனதில் அவ்வளவு வலி . ” ஒருவரை இந்த அளவு காதலிக்க முடியுமா அதுவும் ஒரு தலையாய் இன்னும் இவள் என்னை காதலிக்கிறாளா  ” .மனதெங்கும் வழி ஒரு பொய்யான காதலை உண்மை என நம்பிய ஏமாந்தது அதற்காக இன்று வரை திருமணம் செய்யாமல் இருந்தான். ஆனால் இவளோ இன்னும் தன்னை காதலிக்கிறாளே. ஏன் இவள் காதல் எப்படித் தன் கண்முன் தெரியவில்லை என்று  கடவுளிடம் முறையிட்டான்.அதனால்தான் அவள் அடி பெற்று அவளிடம் சென்றபோது தனது இதயம் படபடத்தோ  தனது காதல் சேர வேண்டிய இடத்தில் வந்து சேர்ந்தது என எண்ணிக் கொண்டிருந்தான்.

அவனுக்கு இவ்வளவு காதல் கொடுத்த அவளோ இன்னும் கண்ணை திறக்காமல் இருந்தாள்.

    போன் சரி செய்து உள்ளே வந்த டிரைவர் சிவாவிடம் போனை கொடுக்க அவன் அதனை திறந்து அவள் அண்ணனுக்கு இச்செய்தியை தெரிவித்து ஹாஸ்பிடல் வருமாறு கூறினான்அவளின் போனை செக் செய்தான் கேலரி இயங்கும் அவள் அவனுக்கு தெரியாமல் ஒளிந்து ஒளிந்து எடுத்த புகைப்படமே அதையெல்லாம் பார்த்து தன்னையறியாமல் கண்ணீர் சிந்து கொண்டிருந்தான் சிவா .

      ” ஏண்டி உனக்கு என் மேல இவ்வளவு காதல் எழுந்து எனக்கு பதில் கூறு”  என்று கேட்கையில்அப்போது அங்கு வந்த  கார்த்திக் சிவாவை  பார்த்து இவன் எப்படி இங்கு என்று சிந்தித்தான்.

     பிறகு சிவா நடந்ததைக் கூறி சரண்யாவின் காதலை டைரியை படித்து புரிந்து கொண்டதாகவும் , தனக்கு அவளை மணம் புரிய சம்மதமா என்று கேட்டான் . அவன் அண்ணனுக்கும் அளவில்லா சந்தோஷம் தன்னிடம் இருந்து பெற்றோர்களைப் அழித்த கடவுள் இன்றுதான் தனக்கு சந்தோசத்தை கொடுப்பது போன்ற உணர்வு .. அவன் பார்த்து இருக்கிறானே   அவனுக்காக அவள் அழுத அழுகை எல்லாம். அவனும் சரி என்ன சொல்ல  ,

     சிறிது நேரத்தில்  கண்விழித்தாள் சரண்யா . எதிரே இருந்த அண்ணனைப் பார்த்தாள். சிவோ கட்டிலின் பின்னால் ஒளிந்து கொண்டான் சிறிதுநேரம் கண்ணாமூச்சி ஆடிட,

     கண் விழித்ததும்  கேட்ட முதல் கேள்விஎன்னை  காப்பாற்றியவன் எங்கே

அதற்கு தனக்கு தெரியவில்லை என்றும் நான் வரும் போது இங்கு யாருமில்லைஎன்றான் . மனதில் சிரிப்பை அடக்கிக் கொண்டு .

    சரண்யா கைகளை இறுக்கமாக மூடி கண்ணீரை அடக்கிக் கொண்டிருந்தாள் நர்ஸ் அங்கு வர அவளுக்கு ஸ்லீபிங் பில் கொடுத்து தூங்கச் சொன்னார். அவளும் சிறிது நேரத்தில் உறங்கி போக பின்னாலிருந்து வந்த சிவா  அவளைப் பார்த்து அருகில் இருந்த நாற்காலியை இழுத்து அவள் பக்கத்தில் அமர்ந்து பெட்டில் தலையசாய்த்து அவளைப் பார்த்தான். தலையில் பெரிய கட்டு முகத்தில் சிராய்ப்பு கையில் கட்டு இந்த நேரத்திலும் தன்னை கேட்கிறாளே என்று சந்தோசப் படுவதா இல்லை இவள் காதல் தெரியாமல்  தவிக்க விட்டு விட்டோமே என்று நொந்து கொள்வதா தெரியாமல் தவித்தான். அவளைப் பார்த்து அப்படியே உறங்கியும் போனான்.

      சில மணி நேரங்களுக்குப் பிறகு கண்விழித்த சரண்யாக்கோ  தெரிந்தது அவளின் சிவாவின் முகமே அவ்வளவு அருகில்  படுத்திருந்தான் .. ஏழ எத்தனித்தாள் ,தூக்கம் கலைந்த சிவா அவளுக்கு உதவி செய்தான் .

   அவளுக்கு வார்த்தை வரவில்லை சிறிது நேரத்தில் சமன்படுத்தி கொண்டு தனக்கு உதவி செய்ததற்காக நன்றி என்றாள்.

சிவாகோ  ஆதங்கம் இப்பொழுதுகூட அவளது காதலை தன்னிடம் கூறவில்லையே என்று கோபம் கலந்த ஆதங்கம் , அவள் முகம் அருகே சென்றான் அவளுக்கோ நடுக்கம் இதயம் தாறுமாறாகத் துடித்தது. அவளிடம் சென்று அவள் வறண்ட உதடுகளை  ஈரம் செய்தான் சரண்யா அதிர்ச்சியடைந்தாலும் சிறிது நேரத்தில் மயங்கினாள் அவனது இதழ் முத்தத்தில்.. இத்தனை நாள் பட்ட காயம் வேதனை எல்லாம் இதில் மறந்தது.

      கண்களிலிருந்து  தாரை தாரையாக வடிய , சிவா அவளது கண்ணீரை துடைத்துவிட்டு  லவ் யூ என்றான் .அவளோ வார்த்தைகளின்றி தடுமாறினாள்  தன்னிடம் காதல் சொல்கிறானே தனது காதலன் தன்னிடம் காதல் சொல்கிறானா , என்று அளவில்லா மகிழ்ச்சி கொண்டாலும் ,அவள் மனம் எண்ணியதோ அவ்வளவு பெரிய பணக்காரனை தன் காதலனா இருந்தாலும் ஏற்க யோசிக்க வைத்தது. பதில்  ஏதும் கூறாமல் கண்ணை மூடி படுத்துக்கொண்டாள்.  

      அவள் நிலை புரிந்து , அறையை விட்டு வெளியே சென்றான்.

     சிவாவோ வீட்டிற்கு சென்று தனது மாமனிடம் தான் காதலிப்பதாகவும் அவளைப் பெண் பார்க்க ஒரு வாரம் கழித்து செல்ல வேண்டுமென்று  உத்தரவு விட்டுக்கொண்டிருந்தான். அவர்களோ அவன் பிடிவாதம் தெரிந்து ஒத்துக் கொண்டார்கள்.

    ஒரு வாரத்தில் சரண்யா ஓரளவு குணமாகி வீட்டிற்கு வந்தாள். எப்பொழுதும் போல் வீட்டில் இருக்கையில்  சிவாவின் குடும்பம் வருவதை பார்த்து இருவரும் அதிர்ச்சியானார்கள். பிறகு பெண் கேட்க வந்து இருப்பதாகவும் கூறினார்கள்.

     சரண்யா அதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியமல் அவள் அண்ணனை பார்த்தாள் , கார்த்திக்கோ சரி என்றான் .

           அடுத்த வாரத்தில் திருமணம் இருக்க வேலை தடபுடலாக ஓடியது. ஆனால்சிவா மட்டும்  ஒரு வார்த்தை கூட அவளிடம் பேசவில்லை  . அவள் எண்ணத்தை பூர்த்தி செய்து தான் பேச வேண்டும் என்று இருந்தான்.

    கல்யாணமும் அழகாய் அரங்கேற அங்கே இருந்த அவளின் மாமன் இடம் அவன் ஒரு பத்திரத்தை கொடுத்தான். அவர் பார்த்து அதிர்ந்தேவிட்டார். ஏனெனில் , அதில் இருந்தது அவனுடைய அத்தனை சொத்தும் அவனுடைய மாமன் பெயரில் .

     ஏன் என்று கேட்கையில் 

”  எல்லாரும் என்  சொத்துக்காக கூட இருக்காங்கன்னு எனக்கு தெரியும்நீங்க கூட உங்க பொண்ணு எனக்கு கல்யாணம் பண்ணிவச்சா  சொத்த நமக்குள்ளேயே இருக்கும் தான் நினைச்சிங்க ,என் அப்பா அம்மா என்ன விட்டு போகயில் ஒருவேளை எனக்கு எந்த சொத்தும் சேர்க்காமல் போயிருந்தால்  கண்டிப்பா  யாரும் யாரையும் கூட இருந்திருக்க மாட்டீர்கள்ஆனா இவ அப்படி இல்லை இவளுக்கு நான் மட்டும் தான் முக்கியம் நான் மட்டும் தான் வேணும்  அதனால இதுல எனக்கு வேணாம் என்றான் என். பிறகு ஒரு உதவியும் கேட்டான் தான் வேறு ஒரு வீட்டில் இருக்கப் போவதாகவும்  இனி நமது கம்பெனியின் உரிமையாளர் இல்லை என்றும்  என் பெற்றோர்கள் அந்த கம்பெனியை வளர்த்ததால் தனக்கு அங்கே ஒரே ஒரு வேளை தருமாறும் கேட்டான் . அருகிலிருந்த சரண்யாகோ கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது இத்தனை நாள்  தான் சம்மதம் சொல்லாத காரணத்தை அறிந்து கொண்டானே என்று அழுகை முட்டிக்கொண்டு வந்தது சிவா அவளை பார்த்து கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டான்.

     அனைத்தும் நல்லபடியாக நிறைவேற முடிய இரவு அறையில்  சரண்யாவிற்கு காத்திருந்தான் .அங்கே அவள் இந்த நினைவிடம் கடவுள் அவளது உயிரை எடுத்துக் கொண்டாலும்  மகிழ்ச்சியே என்ற எண்ணத்துடன் உள்ளே சிறிது வெட்கத்துடன் நடந்து வந்தாள்.

    அவளை அருகில் அமர்த்தி  பேச ஆரம்பித்தான். உனது டைரியில் நான் உன்னை காப்பாற்றியதாக எழுதியிருக்கிறாய், எப்போ நான் உன்னை காப்பாற்றினேன் . அவளோ கூற ஆரம்பித்தால்

சில வருடங்களுக்கு முன் நடந்ததை

       இரவில் ஒருவன் தன்னை பலவந்தப்படுத்தி நினைத்து  தரதரவென்று வாயை பொத்தி இழுத்துச் செல்லும் போது , எதர்ச்சியாக ஏதோ கோபத்தில் வந்த சிவா  அவன் காரை எடுக்கையில்  இவளைப் பிடித்து இருந்தவனின் கால் இடித்து முடிந்ததாகவும், அதனால்தான் அவள் தன்னை காப்பாற்றிக் கொள்ள முடிந்ததாகவும்  கூறினாள் . அவனுக்கோ கண் சிவந்தது அன்று ஒருவன் காலை ஏற்றியதால் இன்று வரை அவனுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறோமே. ஆனால் ,அவன் தன்னவளை தொட முயற்சித்திக்கின்றனே  என்ற ஆத்திரத்தில் ஆத்திரத்தில் இருந்தான்.

சரண்யா அன்று அனுபவித்த வேதனையை எண்ணி அவளை இறுக அணைத்துக் கொண்டான். அவளோ அவன் முகம் ஏறெடுத்து பார்த்து லவ் யூ என்று கூறி அவனை இன்னும் இறுக அணைத்துக் கொண்டாள்.

     அவளுக்கு கண்ணீர் தான் தனது காதல் வென்றுவிட்டது அவ்வளவு ஆனந்தம் அவளின் கண்ணீர் அவனது உடலை நனைத்தது.

     அவள் மணம்  அறிந்து இல்லை மெத்தையில் படுத்து அவளை தன் மார்பில் கிடத்தி தூங்க தயாரானான்

இனி அவளை  வருடமெல்லாம்  வாரமெல்லாம் நாட்களெல்லாம் மணிகளெள்லாம் நிமிடமெல்லாம்  நொடிகளெல்லாம் காதல் செய்ய வேண்டும் என்று செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு உறங்கியும் போனான். அவளும்  தன்னவனோடு இனி உயிர் உள்ளவரை மகிழ்ச்சியோடு இருக்கபோகிறோம் என்ற எண்ணத்தோடு உறங்கிப் போனாள்

வலிகொண்ட என் இதயம் 

உன்னோடு இணைந்ததே

காதல் மழையில் நனைந்தே உண்மையான காதல் உன்னிடம் என்னை சேர்த்ததடா ” .

                                                                                               கனிமொழி

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. சரண்யாவோட லவ் சூப்பர்..சிவா அவனுக்குத் தெரியாமையே ஒரு பொண்ணோட கற்பை காப்பாத்திருக்கான்..சிவாவுக்காக சரண்யா பழி ஏத்துகிட்டது,போலியா லவ் பண்ணவகிட்ட போய் பேசுனது எல்லாம் சூப்பர்.. கார்த்திக் நல்ல அண்ணன்..சரண்யாவோட காதலுக்காக சிவா செய்த விஷயம் பாராட்ட வேண்டிய ஒன்று..நைஸ் சிஸ் வாழ்த்துக்கள் 💐 💐💐💐💐..இரண்டு தடவை ஸ்டோரிய போஸ்ட் பண்ணிருக்கீங்க..செக் செய்துக்கோங்க