Loading

. ஆதிரை தன் அம்மாவிடம் சொன்னது

போல காலை ஆறு மண் கெல்லாம்

ரெடியா ஆரம்பித்துவிட்டாள் . “ஆதிமா

ரெண்டு இட்லி சூடா சாப்டு போடாமா ?”

நான் தான் உன்னை கஷ்டபடவேண்டாம்

வெளிய பாத்துக்கறேனு சொன்னேன்

இல்ல ஏன்மா இப்படி பண்ற “இட்லி

ஊத்த என்னடா கஷ்டம்  மாவு என்னமோ

இரண்டு நாளைக்கு  முன்னாடியே

ஆட்டிட்டேன்  சட்னி கூட பாத்தினா 

தேங்காய் சட்னி தான்

செஞ்சிருக்கேன்.சாப்பாடுதான்

நேரமாகும் சரி நீயும் வெளியில

பாத்துக்கறேனு சொன்னதால

விட்டுட்டேன்  ” என்றவள்

அப்பொழுதுதான் அவளை முழுதாய் 

பார் தாள்  . வெளிர் நீல நிற புடவையில்

சிகப்பும் வெள்ளையுமாய் சிதரவிட்ட

பூக்கள்  தலையில்  ஒற்றை ரோஜா என

தன் கண்ணே பட்டு விடும்  போல

அழகாய் இருந்தாள்  தங்கசிலைபோல்

நிறம்  கரு வண்டு கண்கள் அடர்த்தியான

புருவம் அழகி என் மகள் என பெருமிதம்

கொண்டாள் “என்னம்மா புதுசா பாக்குற

மாதிரி  பாக்குர ” என் கண்ணே பட்டும்டி

கொஞ்சம் இரு வரேன் “என அடுபடிக்கி

சென்றவள்   கையில்  கல் உப்பு காய்ந்த

மிளகாயுடன் வந்து திருஷ்டி கழித்தாள் .

“என்னமா இது காலங்காதால” நீ சும்மா

இரு ஆதி உனக்கு  ஒன்னும் தெரியாது

“சுற்றிய தை எடுத்துக்கொண்டு

சென்றாள் ” “அம்மா காஃபி என்றவாரு “

சூர்யா வர ஆதியை கண்டதும் wow 

super க  அழகான  புடவை ஒத்த ரோசா

கலக்குற போ”சும்மா  இரு சூர்யா “என

சிறிது காரத்துடன் அவளறியாது

வெட்கம் கொண்டாள்  “சூர்யாமா 

எழுந்துட்டியா இரு அம்மா காஃபி

கொண்டுவரேன்” என்று உள் சென்றவள்

கையில் டிபன் தட்டுடன்  வந்தாள்  ,

“இந்தா சூர்யாமா சாப்டு என்று நீட்ட”,

“டைமாச்சு மா ” ப்ச் இருமா என்ற சூர்யா

ஒரு வில்லை விண்டு வாயில் திணிக்க

“இப்படி வைக்கறத விட்டுட்டு கெஞ்சிக்

கிட்டு இருக்க என வினவ என் தங்கம் டி

என சூர்யா விற்கு  நெட்டி முறித்தாள் 

ஆதிரை யும் அவளை அணைத்தபடி

நெற்றியில் இதழ் பதிக்க  மென்மையான

புன்னகை அங்கு தென்றலானது.

                  வினோ  பார்மல்  சர்ட் பேண்டில்

டிப்டாப்பாய் ரெடிஆகிவர ராகவன்

எப்பொழுதும் போல கோட்சுட்டில் வர

இருவரும் டைனிங் டேபிளில் அமர முத்து

சுடசுட  தோசையும் கார  சட்டினியும்

பரிமாற  இருவரும்  ருசித்து சாப்பிட

ஆரம்பித்தனர். “அங்கிள் உங்க டேஸ்டே 

செம தான் போங்க ” ஆமா முத்து  நீ

வைக்கிற ரசமே  போதும் அல்டிமேட்

“போதும் ஐய்யா ரொம்ப ஜாஸ்தியா

சொல்றீங்க ” இல்ல அங்கிள் அப்பா

கரெக்டா தான் சொல்றார்”போதும் தம்பு

நீங்க சாப்பிடுங்க நீ  உங்க வயிறு

நெறையறதை தவிர எனக்கு பெரிய

பரிசு ஏதுமில்லை “வினோ  இன்னைக்கு

ஒரு மீட்டிங் இருக்கு கண்ணா… “

தெரியும்பா  யஸ்ஆர்  கிச்சன்

எக்யுப்மென்ட் கம்பனி யிலிருந்து நம்ம

கம்பனிக்கு ஆள் வராங்கடீல் பேச

நேத்தே அதோடு ஃபயில்ஸ் 

பாத்துட்டேன்  ஷார்பா 9.30க்கு

அபாய்மென்ட் குடுதிருக்கு  அது

மட்டும்தான் மெயின் மத்த தெல்லாம்

ஆஸ்யூஸ்வல்தான் கரெக்டா “, “

பரவாயில்லை யே அசத்துர பிடிக்காது

னு செய்யறதயே இவ்வளவு நல்லா

செய்யும் பொழுது அதயே பிடிச்சு

செஞ்சா நம்ம கம்பனிய இன்னும் நல்ல

கொண்டு வரலாம் “நோ கமெண்ட்ஸ், நா

என்ன சொல்வேனு உங்களுக்கு

தெரியும் விடுங்க நா போய்

கைகழுவிட்டு வரேன் நாம கிளம்புவோம் 

ப்ளீஸ்பா  இந்த பேச்ச இத்தோட

மறந்துடுங்க  ஆக வேண்டியத பாப்போம்

என்ன புரிஞ்சிகோங்க தப்பா

எடுத்துக்காதிங்க ப்ளீஸ் ” என அவன்

சென்றிட அவரும் அத்தோடு

விட்டுவிட்டார். இருவரும்  கிளம்பி

விட்டனர்.
                ஆதிரை  தன் ஸ்கூடியை 

நிருதிவிட்டு  கம்பனிக்கு ள் சென்றாள்

தன் கேபினுக்குள் நுழையும் முன்

“வெல்கம் டூ யுஎஸ்ஆர் கம்பனி ஆதி

மேடம்” உனக்கு எப்ப பாத்தா லும்

விளையாட்டு தான் நித்தி “, இன்னைக்கு 

ஒரு கம்பனிக்கு மீட்டிங் போகனும்

உனக்கு நியாபகம் இருக்கா? ” ஏன்

இல்லாமா ? “வினோ  கிச்சன்

எக்யுப்மென்ட் ” கரெக்டா ‘அத மட்டும்

தெரிஞ்சிகிட்டா போதுமா  அதுக்கு

பிர்பேர் செய்ய

வேண்டாமா”விளையாடிறியா

நீ ,கிட்டதட்ட நீயும் நானுமா சேர்ந்து ஒரு

மாசமா பிர்பேர் செஞ்சு எக்ஸாட்டா

எல்லாமே நீட்டா  ஃபையில்  செஞ்சு

வச்சிருக்கோம் இப்ப என்ன டானா

மறுபடியும் மொதல்ல இருந்து

ஆரம்பிக்கற “கோசிக்காத நித்தி

மறுபடியும் ஒரு வாட்டி கோ துரு பண்

வேண்டாம்? ” நேத்திக்கு

அதுக்காகத்தான் லேட் போய் நா எங்க

அம்மா கிட்ட வாங்கி கட்டிகிட்டது”ஸாரிடி

எல்லாம் என்னால தான்… “போதும்

ஆரம்பிக்காத  வேலைல இதெல்லாம்

சகஜம்  எத்தனை மீட்டிங் அடெண்ட்

செஞ்சிருப்பே ஆனா ஒவ்வொரு

வாட்டியும்   ஏன் இப்படி டென்சன் ஆற”

ப்ச் எனக்கே தெரியல டி சரி கொஞ்சம்

வா மறுபடியும் செக் பண்ணிரலாம்

“உனக்கு எப்படியோ தெரியலா  நா

முழுசா பைத்தியம் பிடிச்சு தான்

ரிடயர்ஆக போறேன் “, ” புலம்பாம

வாடி”இருவரும் மறுபடியும்

அனைத்தையும் சரி பார்த்துக்கொண்டு 

கிளம்பி  ஸ்கூட்டி இருக்கும் இடத்துக்கு

வர  “ஆதி  சாப்டியா  ? ” இல்ல பொய்

உங்க அம்மா போய் உன்னை

சாப்பிடாமல் அனுப்புவாங்தளா  ? “ஆனா

என் நித்தி சாப்பிடல  இல்ல அதனால

நானும் அவளோடு சேர்ந்து ஹோட்டல்ல

சாப்பிட போறேன்” அவள் தோள்களை

தொட்டு திருப்பிய நித்தி “உண்மைய

சொல்லு சாப்டியா ?இல்லையா? “

சாப்டேன் ஏன் உன் கூட சாப்பிட கூடாதா

இல்ல நீதான் வாங்கிதர மாண்டியா”?

அதானே பார்தேன் எனக்கு ஆன்டிய

பத்தி தெரியாதா என்ன ? “டி இப்ப

எதுக்கு இந்த பேச்சு ஏற்கனவே

டைம்ஆச்சு இப்ப கிளம்பினாதான்

சாப்பிட்டு போக சரியா இருக்கும்”சரி சரி

ஆனா நீ தான் டிபன் வாங்காதரனும்” ஏறு

டி இவ  ஒருத்தி”என்றவாறு  அவர்கள்

ரதத்தில் கிளம்பினர். பத்தே நிமிடத்தில்

பக்கத்து ஓட்டலில் எதிரெதிரெ  ஆதியும்

நித்தி யும் அமர்திருந்தனர் அவர்கள் முன்

இட்லி யும் காஃபி யும் ஆவி பறக்க

காத்திருந்தது. சாப்பிடும்பொழுது தான்

ஆதியை நித்தி கவனித்தாள்  “இப்ப

இருக்குற  ஜெனரேஷன் எப்படி

எப்படிலாம் டிரெஸ் பண்றாங்க  நீ மட்டும்

ஏன் இப்படி இருக்க? ” ஆதி அவளை

முறைக்க “ஆனா இது கூட உனக்கு

அம்சமாதான்  இருக்கு” ப்ச்  அதெல்லாம்

அப்புறம் பேசிக் கலாம் இன்னும்

அரமணிநேரந்தான் இருக்கு சீக்கிரம்

கிளம்பு  நித்தி ப்ளீஸ் “சரி சரி  கூல்

இதோ ஆச்சு” என்றவாறு சாப்பிட்டு

கிளம்பிவிட்டனர்  இருவரும்.

         

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்