கல்யாண வானில் 15
ரவி, “ஹேய், நிவேதிதா நில்லு நீ எதுக்காக இப்ப முன்னாடி ஓடுற,ஷாப்பிங் பண்றது தாரணி தான். அவளுக்கு தேவையானதை வாங்க வந்துருக்கா, நீ எதுக்கு முந்திரிபருப்பு மாதிரி முன்னால போற..
நிவேதிதா, “ஏங்க நானும் இங்க ஷாப்பிங் பண்ண போறேன்.இதுவரைக்கும் எனக்கு ஒரு கைக்குட்டை வாங்கி கொடுத்து இருப்பீங்களா,
ரவி, “ஏன்டி இப்படி பொய் சொல்ற “உன்னோட பீரோவினில் சேலையெல்லாம் குவிந்து இருக்கிறதே, அத யாரு எடுத்துக் கொடுத்தாங்க,
நிவேதிதா, “அதுல பாதி சேலை எங்க வீட்டுல எடுத்து கொடுத்தாங்க! “
ஹாசினி, “அண்ணா,அண்ணி நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருக்கீங்க,எதுவும் ஷாப்பிங் பண்ணலயா?,
நிவேதிதா, “இதோ வந்துட்டேன் ஹாசினி என புன்னகையோடு சென்றாள். “
தாரணி, “ஹாசினி நீ எதுவும் எடுக்கல”
ஹாசினி, “இல்லக்கா எனக்கு எதுவும் எடுக்க தோணல..
பவித்ரா, “அனிதா சந்தோஷ் இன்னும் சாப்பிட வரலயா,
அனிதா, “அவங்கள தான் எதிர்பார்த்துட்டு இருக்கிறேன்.
பவித்ரா, “ஏங்க நம்முடைய கடையில் வேற யாரும் இல்லையா?,
கார்த்திகேயன், “இன்னும் சாப்பிட வரல”
பவித்ரா, “என்னடி சொல்ற, சந்தோஷ் சாப்பிட வரலையா?,
கார்த்திகேயன், “இரு நானே போன் கேட்குறேன் என கைப்பேசியை எடுத்து நம்பரை அழுத்திய போது, வாசலில் பைக் சத்தம் கேட்க, அழைப்பைத் துண்டித்து விட்டு சந்தோஷ் வந்துட்டானா பாரும்மா?
அனிதா, “வெளியே சென்று பார்க்க, சந்தோஷ் தான் வந்திருக்கிறாங்க என மரியாதையுடன் சொன்னாள்.
சந்தோஷ், “அப்பா நீங்களும் இப்ப தான் வந்தீங்களா?”
கார்த்திகேயன், “டேய் நான் வருவது இருக்கட்டும், நீ சாப்பிட வர்ற நேரமா இது?
சந்தோஷ், “அப்பா ரைஸ்மில் அரிசியெல்லாம் இன்னிக்கு தான் லோடு வந்து இறங்கியது. அதான் எத்தனை மூட்டை என கணக்கிட்டு இருந்தேன் .அதுல ஏற்கனவே அவங்களுக்கு கணக்கு முடிக்காமல் இருந்தேன். அதான் சாப்பிட லேட் ஆயிடுச்சு.
பவித்ரா, “அனிதா புள்ள வந்து ரொம்ப நேரமா உட்கார்ந்து இருக்கிறான்.நீ அவனையே பார்த்துட்டு இருக்குற.சாப்பாட்டைப் பரிமாறும்மா!
அனிதா, “சரிங்க அத்தை எனப் பரிமாற அபிஷேக் அழுது கூச்சலிட, அதைக் கேட்டதும் ஆகாஷ் வேகமாக சென்றான்.
ஆகாஷ், “அபிஷேக் செல்லம் ஏன்டா அழுகிற,
அபிஷேக், “அம்மா ,அம்மா “
ஆகாஷ், “அண்ணி அபிஷேக் அழுதுட்டு இருந்தான்.நானே தூக்கிட்டு வந்துட்டேன்.
அனிதா, “அபிஷேக் கண்ணா இதோ அப்பா,கூப்பிடுறாங்க பாரு என்றதும்,அழுகையை நிறுத்தாமல் அழுது கொண்டே இருந்தான்.
ஆகாஷ், “அண்ணி அவனை என்னிடம் கொடுங்க,அப்படியே பைக்கில் ஒரு ரவுண்டு கூட்டிட்டு போயிட்டு வாரேன் .
அனிதா, “மாமா ஆகாஷ் பைக்கில் கூட்டிட்டுப் போறேனு சொல்றேனு சொல்றானே? “
கார்த்திகேயன், “மும்ம் போயிட்டு வரட்டும்மா என உத்தரவிட்டார். “
ஆகாஷ்,”அபிஷேக் செல்லம் அழக்கூடாது. நீ இப்படி பைக்கில் முன்னால உட்கார்ந்துக்கோ சித்தப்பா இங்க உட்கார்ந்துட்டு பைக் ஓட்டுறேன். நம்ம பஸ் ஸ்டாப்பை சுத்தி பார்க்கலாம்.
பவித்ரா, “ஏங்க நான் ஒன்னு சொல்வேன் நீங்க தப்பா நினைச்சுக்க கூடாது. “
கார்த்திகேயன் ,”சொல்லு அப்புறம் பார்த்துக்கலாம்.
அனிதா ,”ஏங்க இன்னும் சாப்பிடுங்க “
சந்தோஷ்குமார், “போதும்.. போதும் “என்றான். நீ சாப்பிட்டீயா?
அனிதா ,”அப்பவே சாப்பிட்டேன்” என்றாள்.
பவித்ரா, “இத எல்லாத்தையும் எடுத்து வைச்சுடும்மா? “என அதிகாரத்தோடு கூற..
அனிதா, “அத சலித்துக் கூட பார்க்காமல் புன்னகையோடு செய்தாள்.
சந்தோஷ், “சற்று நேரமாக ஓய்வாக இருக்க,
அனிதா, “என்னங்க, நானே நாளைக்கு நம்முடைய ரைஸ்மில்லுக்கே சாப்பாடு எடுத்து வரட்டும்மா? “
சந்தோஷ், “அதெல்லாம் வேணாம்டி “இன்றைக்கு மட்டும் தான் தாமதம் ஆயிடுச்சு, நாளைக்கெல்லாம் சீக்கிரமா வந்துருவேன். நீ எதையும் நினைச்சுட்டு ஆசையை வளர்க்காதே!
அனிதா, “எனக்கும் ரைஸ்மில் ரைஸ்மில் பார்க்கனும்னு ஆசையாக இருக்காதா? “
சந்தோஷ், ‘இவ வேற இந்த பேச்சை விடமாட்டாளோ!என மனதில் நினைத்தான். ‘
அனிதா, “ஏங்க உங்ககிட்ட தான் கேட்டுட்டு இருக்கேன் என்று கூற ..
சந்தோஷ், “சரிம்மா நாளைக்கு பார்க்கலாம் “.என்றவனோ கிளம்பினான்.
அனிதா, ‘நீங்க அப்படியே பட்டுபடாமலும்பேசுறீங்க?,.. “நாளைக்கு எப்படியாவது உங்ககூட ரைஸ்மில்லுக்கு வருவேன் என தனக்குள்ளேயே கூறிக் கொண்டாள்.’
பவித்ரா, “ஆகாஷ் இப்படி வீட்டுலயே இருக்கிறது தான் நரக தண்டனையா கஷ்டப்படுறான். அவனை கொஞ்ச நாளைக்கு அவனோட இஷ்டத்துல விடுங்களேன்.
கார்த்திகேயன், “அவனை அப்படியே விட்டுட்டா!,திரும்பவும் அந்தப் பொண்ணுக்கிட்ட பேச ஆரம்பிச்சுடுவானோ என்று பயமாக இருக்குது. நம்ம மேல உள்ள கோபத்தை ஆகாஷ் மேல காட்டிடுவாங்களோனு ஒரே பதற்றமாக இருக்குது..
பவித்ரா, “எங்க வீட்டுல உள்ளவங்க அப்படி பண்ணமாட்டாங்க!”எனத் தயங்கி மெல்லமாக வார்த்தைகளை விட்டாள்.
கார்த்திகேயன், “எப்போதுமே உங்க வீட்டுல உள்ளவங்கள விட்டுகொடுக்க மாட்டீயே? “
பவித்ரா, ” அப்படியெல்லாம் எதுவும் இல்ல “
கார்த்திகேயன், உன்னைப் பத்தி எனக்கு தெரியாது. நீ சொன்னது போலவே நடக்கும். அதற்கு கொஞ்ச நாள் ஆகலாம் என்று சொல்லிட்டு சென்றார்.
சந்தோஷ், “ஹலோ எங்கடா இருக்க, கொஞ்சம் சீக்கிரமா வா என எரிச்சலோடு கூறினான்.
கார்த்திகேயன், “சந்தோஷ் நீ கிளம்பி போயிட்டேனு நினைச்சேன். இன்னும் போகலயா?”
சந்தோஷ், “அப்பா ஆகாஷ் என்னோட பைக்கை எடுத்துட்டு போயி ரொம்ப நேரமாகுது “,
கார்த்திகேயன் ,”இப்ப வந்துருவான் டா “நீ பதற்றப்படாமல் இரு” என அன்பாக கூறினார்.
சந்தோஷ் ,”அதோ வந்துட்டான் “என்று கூற.. அப்போது ஆகாஷீன் முகத்தில் சிரிப்பை பார்த்ததும் நெகிழ்ந்து போனார்.
கார்த்திகேயன், ‘இவனோட முகத்துல சிரிப்பைக் கண்டதும் மனசே பாரமில்லாத மாதிரி இருக்குது. ஆகாஷ் மட்டும் அந்த பொண்ணை காதலிக்காமல் இருந்திருந்தால் இவனோட வாழ்க்கை வேற மாதிரியெல்லாம் கடந்திருக்கும் என தனக்குத்தானே பேசிக் கொண்டான்.
சந்தோஷ், “அப்பா அபிஷேக்கை உள்ளே கூட்டிட்டு போங்க “இன்னிக்கு ரைஸ்மில்லுக்கு ஆகாஷை அழைச்சுட்டு போறேன் என்றான்.
கார்த்திகேயன், “சற்று யோசித்தவரோ சீக்கிரமாக வீட்டுக்கு வந்திடனும். முக்கியமாக ரைஸ்மில்லைத் தவிர வேற எங்கேயும் போகவே கூடாது “என்றார்.
சந்தோஷ், “சரிங்கப்பா வாரேன் என விடைபெற்றான். “
ரவி, “ஹாசினி ரொம்ப நேரமாயிடுச்சு”,ஷாப்பிங் முடிந்து விட்டதா?
தாரணி, “அண்ணா இன்னும் ஐந்தே ஐந்து நிமிஷம் “
ஹாசினி, “அண்ணா இவுக பர்ஜெஸ் பண்ணி முடிக்க விடிஞ்சுரும் போல என நக்கலாக சொல்ல, “
ரவி, “அதிலேயும் உங்க அண்ணியைப் பாரு ,போட்டி போட்டு எடுக்குறா?”
ஹாசினி, “ஆமா, அண்ணா என வாயை மூடி சிரித்தாள்.
வார்த்தைகளின் எண்ணிக்கை :627
வானில் தொடரும்..
Super ud sis….. Keep going….