Loading

கல்யாணமே! வைபோகமே!

டீசர் 1

 

                 “உன்ன வச்சுட்டு ஒன்னுமே பண்ண முடியாது ரோ… எல்லாத்தையும் காட்டி காட்டி குடுத்துடுற… போச்சு அம்புட்டும் ப்ளாப் ஆனது தான் மிச்சம்… அத்தனையும்  வேஷ்ட்… இனி எப்போ தான் அவ புடவை கட்டி நிக்குறத பார்க்கப்போறேனோ!… போடா…” என்று செல்லக்கோபத்தோடு உரையாடிக்கொண்டிருந்தவளின் இதழ்களும் முகமும் கொஞ்சம் கூட கடினத்தை காட்டவேயில்லை…

 

                   “அவ புடவை கட்டி வந்து பங்சன்க்கு வர்றவனெல்லா அப்டியே தெரிச்சு ஓடுறதுக்கா! அப்புறம் யாருக்காது சேதாரம் ஆச்சுன்னா நான் காம்பண்சேட் பண்ண முடியாதுப்பா…” என்று வாய்கிழிய பேசியபடியே இருந்தவனின் முன்னே நின்றவள் ஒருமாதிரி சிரித்துவைக்க, அப்பொழுது தான் தன் உணர்வு வந்து சுதாரித்தவனாய் தன் முதுகிற்கு பின்னே நின்றிருந்தவளை திரும்பி பார்த்து அசடு வழிந்தான்….

 

                “ஹீஹீஹீ…. மாயா… என்னடி அதுக்குள்ள ரெடியாகி வந்துட்ட… மகி என்னமோ நீ புடவை கட்டிட்டு வரப்போறன்னு சொன்னா! நீ இப்டி டூ மினிட்ஸ் மேகி போல ஒரு டாப்ப மட்டும் போட்டுட்டு வந்து நிக்குற?…” என்று ஒன்றுமே தெரியாதவனைப் போல் கேட்க, 

  

                  “ஓவரா நடிக்காதா… நம்ம அல்ரெடி மகிக்கிட்ட மாட்டிக்கிட்டாச்சு… நீ ஷட் அப் பண்ணிட்டு கிளம்புற வழியப்பாரு…” என்று அவனை விரட்டிவிட்டு, “இந்த ட்ரெஸ் ஓகே தானே மகி…” என்று தோழியிடத்தில் பூவாய் புன்னகைத்து வைத்தாள்…

 

😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

 

                  “உனக்கு கொஞ்சமாச்சும் சீரியஸ்னஸ் புரியுதா ரோ!… என்ன காரியம் பண்ணி வெச்சிருக்க?…” என்று கேட்டபடியே கண்ணாடியில் தெரிந்த தன் முகத்தை கண்ணீர் வழிய பார்த்தபடியே கிட்டத்தட்ட கதறிக்கொண்டிருந்தாள் மாயா… இவளின் அதிகாரம் கலந்த குரலோசையில் மாயாவால் ரோ என்று அழைக்கப்பட்டவன் கண்களில் வழியும் கண்ணீரை துடைக்கக்கூட மறந்தவனாய் நின்றிருக்க, அவளுக்கு அருகினில் நின்றிருந்த மருத்துவர் மட்டுமே சூழ்நிலை உணர்ந்து,

 

                   “காம்டவ்ன் மாயா… இப்போ இருக்க உங்க ஹெல்த் கண்டிஷனுக்கு நீங்க அழக்கூடாது… ஸ்ரெயின் பண்ணிக்காதிங்க…” என்று சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார்… ஆனால் அவளோ மருத்துவரின் வார்த்தைகளை கொஞ்சமும் ஏற்காதவளாய்…

 

                    “என்னால எப்டி டாக்டர் அழாம இருக்க முடியும்? எனக்கு இந்த முகத்தை பார்க்க பார்க்க மனசெல்லா அவ்ளோ வலிக்குது… பயமா இருக்கு… இந்த முகத்தோட எப்டி என் வாழ்க்கைய வாழப்போறேன்! எப்டி எல்லாரையும் ஃபேஸ் பண்ண போறேன்னு அவ்ளோ பயமா இருக்கு… இது எல்லாத்தையும் விட இந்த முகத்த வச்சுட்டு ஒருத்தி மாயா மாயான்னு அத்தனை பாசமா சுத்தி சுத்தி வருவாளே! இப்போ அவ இல்லையேன்னு நினைக்க நினைக்க வேதனையா இருக்கு…” என்று மழலையாய் மாறி தேம்பி தேம்பி அழுதவளை தேற்றக்கூட முடியாத நிலை தான் அனைவருக்கும்…

😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😥😥

 

                  “ஹேய் மாமா… ஒருவழியா உன்னோட ஏஞ்சல் அப்பத்தா ஐயாவோட அறுபதுக்கு கெளம்பி வந்துட்டு இருக்கா போல…” என்று ஆரம்பித்தவனை வெட்கம் வழியும் புன்னகையோடு எதிர்கொண்டவன் அவனை சமாளிக்கும் விதமாய்,

 

                    “ஆரம்பிச்சுட்டியா? போய் பொழப்ப பாத்து புள்ளகுட்டிகள படிக்கவைக்கிற வேலய பாருங்கடா… ஏன்டா என்கிட்டேயே ஒரண்டை இழுக்க வாரீங்க?…” என்று சிரித்தபடியே சொல்லிவிட்டு, அவ்விடத்தை விட்டு நழுவிவிட வேண்டுமே என்கின்ற முனைப்போடு, “ஹோய்.. இந்தா அதாருப்போய் கழனிக்குள்ள ஆடுமாட ஓட்டிவுடுறது?… ஏலேய் ஏலேய் ஒன்னத்தேன் சொல்லிட்டு இருக்கேன்…” என்றபடியே ஓட,

 

                       “மாறா… என்கிட்டயே சாமாளிச்சுப்புட்டு ஓடுறியா? மகி மட்டும் வரட்டும் அப்புறமிருக்குது ரெண்டுபேத்துக்கும் கச்சேரி… போனமுறை என்னையும் என் பொண்டாட்டியையும் என்ன ஓட்டு ஓட்டுனிங்க?…” என்று கத்த, இவனை திரும்பி திரும்பி பார்த்தபடியே சிரித்தபடி சென்றவன்,

 

                      “அதெல்லா நடக்கும்போது பாப்போமுடேய்…” என்றுவிட்டு ஓடிவிட்டான்…

 

😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

 

                   “அடேய் கலியாண வேல எம்புட்டு குமிஞ்சு போய் கெடக்கு நீயென்னடான்னா தேமேன்னு விட்டத்த விட்டத்த வெறிச்சு பாத்துக்குட்டு கெடக்குறவேன்… எழுந்திரிச்சு வாடா… உன் கூட்டாளிக எல்லா வாசல வாசல பாத்துக்குட்டு திரியுறாய்ங்க…” என்ற கணீர் குரலில் சட்டென்று சுதாரித்தவன் கண்கள் தாண்டி காதிற்குள் புகுந்து நமைச்சல் கொடுத்த  கண்ணீரை துடைத்துவிட்டபடி எழுந்து அமர, கும்மென்று இருந்த இருட்டு அறை பளிச்சென்று விளக்கொளியில் மின்னி அவனின் கண்களை கூசசெய்து இமைகளை மூடவைத்தது….

 

                        “ப்ச்… ஏம்ப்பத்தா இப்டி உசுர வாங்கிட்டு இருக்க? முடியல யாரும் வந்து தொந்தரவு பண்ணாதிங்கன்னு சொல்லிட்டு தானே வந்து படுத்துக்கெடக்கேன்… அதுக்கு பொறவும் வந்து இப்டி சதி பண்ணுறியே!…” என்று விழிகளை இறுக்க மூடியபடியே கத்த… அவனின் முகத்தையே விழியகலாது உற்று பார்த்தவர்,

 

                         “முடியலன்னு சொல்லிட்டு வந்து அழுதுக்குட்டு கெடந்தியாடா போக்கெத்தவனே!… எம்பேத்தி வந்துட்டாளாம் கூப்புடுறதுக்கு நீ போறியா இல்ல வேற ஆறயாச்சும் அனுப்பவான்னு கேக்கத்தேன் நான் வந்தேன்… போவ முடியாதுன்னா சொல்லு நாம்பாட்டுக்க வேற ஆள அனுப்பிவுடுறேன்… ரொம்பத்தான் சலம்பிக்கிட்டு….” என்று சொன்னது தான் தாமதம், வயதான கிழவி என்று கூட பார்க்காமல் கைகளில் கொத்தாக அள்ளி தூக்கியவன்,

 

                         “இப்ப முடியாதுன்னு எந்த கிறுக்கன் சொன்னதுப்பத்தா… நீ எதுக்கு முடியாத நேரத்துல படியேறி வர்றன்னு தான்… சத்தம்போட்டு ஒரு வார்த்த சொல்லியிருந்தா நானே துள்ளி துள்ளி ஓடி வந்துருக்க மாட்டேனா!..” என்று குதூகலிப்போடு சொல்லிவிட்டு, பூவைப்போல பத்திரமாய் அப்பத்தாவை மாடிப்படிகளில் தூக்கி வந்தபடியே கீழே இருந்த ஹாலில் இறக்கி விட்டுவிட்டு, சிறகு முளைத்த பட்டாம்பூச்சி போல வெளிவாசலை நோக்கி பறந்திருந்தான்… 

   

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
4
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்