Loading

கண்ணாலே அனுப்பினாய் அஞ்சல்- எபிலாக்

திருமண மண்டப வரவேற்பறையில் சதாசிவமும் மூர்த்தியும் மிகவும் மகிழ்ச்சி உடன் உறவினர்கள் அனைவரையும் வரவேற்றுக் கொண்டு இருந்தார்கள். லக்ஷ்மி மேடையில் நின்று அனைத்து வேலைகளையும் சரி பார்த்துக் கொண்டு இருக்க மணமகன் அறையில் பட்டு வேஷ்டியில் ஆண் அழகனாய் ஜொலித்துக் கொண்டு இருந்தான் யுகன். காதலியே மனைவியாக அமைவது எவ்வளவு பெரிய வரம்.. ஆனால் அந்த சந்தோசத்தை அனுபவிக்க முடியாமல் தயாராகிக் கொண்டு இருந்தான். அவன் மனதில் ருத்ராவே தனக்கு மனைவியாக வருவது பெரும் இன்பமாக இருந்தாலும் அவள் அவனை தந்தைக்காக தான் ஏற்றுக் கொள்கிறாள் என்ற வருத்தம் அவன் மகிழ்ச்சிக்கு தடையாக நின்றது. இருந்தும் மனம் தளராமல் மணமேடையை நோக்கி சென்றான். அவனின் காதல் மனது இனி ஒரு பொழுதும் அவளை கலங்க விடக் கூடாது என்று முடிவெடுத்தது. மந்திரங்கள் ஓதிக் கொண்டு இருக்க ஐயர் மணப்பெண்ணை அழைத்து வர கூற அவனின் காதல் தேவதை மெல்ல மணமேடையை நோக்கி வந்தாள். அவள் அழகில் சொக்கி போனான் யுகன். அவள் மீது இருந்து கண்களை அவனால் அகற்ற முடியவில்லை. அவன் அருகே வந்து அமர்ந்த ருத்ரா ஆழமாய் மூச்சை வெளியிட்டவள் யுகனை பார்த்து லேசாய் புன்னகைத்தாள். அவள் எண்ணம் அவனை மனதார ஏற்றுக் கொள்ளும் முன்பு அவனை காயப்படுத்தாமல் இருக்க வேண்டும் என்று நினைத்தது. இன்னொருவனை நினைத்துக் கொண்டு திருமண பந்தத்தில் நுழைவது எவ்வளவு பெரிய வலியை அவனுக்கு குடுக்கும் என்று அறிந்தவள் முழு கவனத்தையும் யுகன் மீது திருப்பினாள். அவளின் பதட்டம் அறிந்தவனோ அவளின் மென் கரங்களை பற்றிக் கொண்டு அமர்ந்தான். சதாசிவத்திற்கு கண்களில் ஆனந்தக் கண்ணீர்.. இந்த ஒரு காட்சியை பார்க்க தானே அவர் காத்திருந்தார். கன்னிகா தானம் செய்யும் நொடியில் மேடையிலே அழுது விட்டார். ஒவ்வொரு சடங்காய் நடைபெற்றுக் கொண்டு இருக்க இருவரும் அமைதியாய் அர்ச்சதையை அக்னி கூடத்தில் தூவிக் கொண்டு இருந்தார்கள்.

 

“ருத்ரா.. இந்த அக்னி சாட்சியா நான் உனக்கு ஒரு பிராமிஸ் பண்றேன்.. உன்ன நான் என்னைக்குமே காயப்படுத்த மாட்டேன்.. ஒரு ஹஸ்பண்டா உன் கூட எப்போதும் எந்த சூழ்நிலையிலும் உன் பக்கம் நான் இருப்பேன்.. நம்மளோட வாழ்க்கைய இந்த நொடியில இருந்து ஆரம்பிப்போம்.. நான் உன்னோட யுகாவா நீ என்னோட தாராவாவும் ஆரம்பிப்போம். உன்ன வாழ்க்கை முழுக்க நான் இதே தீராத காதலோட பாத்துப்பேன்.. வெறும் வார்த்தையா சொல்றதை விட வாழ்ந்து காட்டுறேன்.. இப்போ தாலி கட்டவா?” என ஒட்டு மொத்த உணர்வுகளையும் கண்களில் தேக்கி வைத்து ஐயர் குடுத்த தாலியை வாங்கியவன் அவள் சம்மதத்திற்காக காத்திருந்தான். விழி அகலாது அவனை பார்த்துக் கொண்டு இருந்த ருத்ரா சம்மதமாய் தலை அசைக்க, நல்ல நண்பனாய், காதலனாய், கணவனாய் இருப்பேன் என்று மூன்று முடிச்சை இருக்கமாய் போட்டான். ருத்ரா ஒரு நொடி கூட கண்களை மூடாமல் அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள். ஒன்று மட்டும் தான் அவள் மனதில் ஓடியது. இது வரை எப்படி இருந்து இருந்தாலும் இனி தாம் யுக வேந்திரனின் மனைவி என்று அழுத்தமாய் பதிந்தது. 

 

நள்ளிரவு நேரத்தில் ஆளே உறைய வைக்கும் பனி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை நடுங்க வைத்துக் கொண்டு இருந்தது. இந்தியாவிற்கும் பாக்கிஸ்த்தானுக்கும் இடையே இருக்கும் எல்லை பகுதியில் ஆங்காங்கே ரோந்து பணியில் இராணுவ வீரர்கள் இருந்தார்கள். எல்லையின் கடை ஓரத்தில் அதிகப்படியான பனி சூழ்ந்து இருக்க எதிர் இருக்கும் ஆட்களே கண்ணிற்கு இருட்டில் தெரியவில்லை. ஒருவன் மூச்சிரைக்கும் சத்தம் மட்டும் இருட்டில் கேட்டது. பணியில் மல்லாக்க படுத்த இருந்த ஸ்ரீ வானத்தை பார்த்து சிரித்தான். நெஞ்சின் மீது துப்பாக்கியை வைத்து இருந்தவன் இடது கையில் வழியும் உதிரத்தோடு அவன் கையில் இருக்கும் பிரேஸ்லைட்டை பார்த்தான். அதனை கழட்டியவன் தன் நெஞ்சில் மீது வைத்துக் கொண்டு வலியுடன் புன்னகைத்தான். 

“ருத்ரா.. கைக்கு கிடைச்சும் உன்ன நான் மிஸ் பண்ணிட்டேன்.. இது என் முட்டாள் தனம்ன்னு சொல்றதா இல்லை கோழைத்தனம்ன்னு சொல்றதா.. என்ன கேட்டா உன் மேல வச்சி இருந்த காதல்ன்னு சொல்லுவேன்.. உன்ன அளவுக்கு அதிகமா நேசிச்சனால தான் என்னவோ உன்ன தவிக்க விடக் கூடாதுன்னு நினைச்சேன். என் பயம் எப்போ எந்த நிமிஷம் வேண்ணாலும் உண்மை ஆகலாம்.. என் அம்மா பட்ட கஷ்ட்டத்தை நீயும் படக் கூடாது.. சாரி ருத்ரா.. நீ என்னைக்குமே ஹாப்பியா இருப்ப.. எனக்கு அது போதும்..” என்று கூறிய ஸ்ரீ வெளிவர துடித்த அழுகையை தொண்டைக்குள்ளே முழுங்கியவன், “ஐ லவ் யூ பாரேவேர்” என்று சொல்லியவன் அந்த பிரேஸ்லைட்டில் இருக்கும் இதயத்தில் அழுத்தமாய் முத்தமிட்டான் ஸ்ரீ. அதனை அப்படியே கைக்குள் இறுக மூடிக் கொண்டவன் அமைதியான உறக்கத்தில் ஆழ்ந்தான். 

 

ஆறு மாதங்களுக்கு பிறகு…

மாலை நேரம் பீச்சில் மக்கள் கூட்டம் அலை மோத கரையின் ஓரம் நின்ற ருத்ரா கடலையே வெறித்து பார்த்துக் கொண்டு இருந்தாள். ஓர் நிலையில் இல்லாத கடல் அலையை போல் அவளின் மனமும் அலைந்துக் கொண்டு இருந்தது. இந்த ஆறு மாதத்தில் நிறைய விடையங்கள் அவள் வாழ்வில் மாறியது. திருமணத்திற்கு பின் யுகன் வீட்டிற்கு சென்றவள் வழமை போல் அவள் வீட்டில் இருப்பது போல் வேலைக்கு செல்ல துவங்கி இருந்தாள். ஆனால் மாற்றம் அவள் மனதில் உண்டாகி இருந்தது. யுகனின் ஒவ்வொரு செயலும் அவளை குற்ற உணர்விற்கு தள்ளியது. அவனின் சுயநலமற்ற காதல் அவளை தவிக்க வைத்தது. கடலையே பார்த்து யோசித்துக் கொண்டு இருந்தவள் அருகே பஞ்சு மிட்டாய் உடன் வந்து நின்றான் யுகன். 

“என்ன ரொம்ப தீவிரமா யோசிக்குற போல.. நீ ரிலாக்ஸ் ஆகணும் தான் உன்ன வாரத்துக்கு ஒரு முறை எங்கையாவது வெளிய கூட்டிட்டு வரேன்.. அஞ்சு நிமிஷம் தனியா விடக் கூடாதே எதையாவது யோசிப்பியே..” என்று போலியாக கடிந்துக் கொள்ள அவனை இமைக்காமல் பார்த்தாள் ருத்ரா. 

“என்ன அப்படி பாக்குற? ஒரு வேலை புருஷனை சைட் அடிக்குரியா? அடி அடி.. உனக்கு இல்லாத உரிமையா?” என்று வேண்டும் என்றே அவளின் எண்ணத்தை திசை திருப்ப வம்பிழுத்தான் யுகன். ருத்ராவை கவரும் எண்ணத்தில் முதல் முறையாக அவளிடம் நெருங்க அவளை வம்பிழுத்த முறையையே இப்பொழுதும் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறான். அது அவன் நினைத்தது போலவே வேலை செய்தது. ருத்ரா லேசாய் முறைத்தாள். 

“அட முறைக்குரப்போ உன் கன்னம் பஞ்சு மிட்டாய் மாதிரி மாறுதே” என இன்னும் சீண்டிட இம்முறை பொறுமை இழந்தவள், “யுகா கிரிஞ் பண்ணாத..” என்று தலையிலே அடித்துக் கொண்டாள். அவனுக்கே அது மொக்கையாய் இருந்தாலும் அவளின் கவனத்தை தன் பக்கம் திருப்பிக் கொண்டோம் என்ற மகிழ்வு அவனுக்கு. லேசாய் சிரித்தவன் அவளுடன் சேர்ந்து கடலை வேடிக்கை பார்த்தான். ஏனோ அதனை பார்க்கும் பொழுது மட்டும் சுற்றி இருக்கும் ஓசை எல்லாம் நிசப்த்தமாகி கடலின் ஓசை மட்டும் கேட்பது போன்ற ஒரு உணர்வு. ருத்ரா உடன் இப்படியே வாழ்க்கை முழுக்க அவள் அருகில் இருக்க வேண்டும் என்று மட்டும் தான் அவனின் ஆசை. அவளிடம் இருந்து அவன் எதையுமே எதிர் பார்க்கவே இல்லை. இப்படியே சீண்டிக் கொண்டு காதலை அவள் மீது பொழிந்தால் போதுமானது யுகனுக்கு. ருத்ரா வேறு ஒன்றை யோசித்தாள். அவள் கையில் இருக்கும் பிரேஸ்லைட்டை பார்த்தவள் அதில் கையை வைத்தாள். அதை கண்ட யுகன், “என்ன பண்ற ருத்ரா அதை கழட்ட போறியா?” என கேட்க அவனை அமைதியாய் பார்த்தாள். அதனை கழட்ட தான் நினைத்தாள். அதனின் வரலாறு யுகனுக்கு தெரியாதா என்ன?

“கழட்டாத.. நீ எப்போ முழுசா என்ன ஹஸ்பண்டா ஏத்துக்க நினைக்குறியோ அப்போ கழட்டு” என தீவிரமான குரலில் கூறியவன் அவளை பார்த்து புன்னகைத்து, “அது வர இருக்கட்டும்.. அப்போ தான் என் பொண்டாட்டிய இன்னும் இம்ப்ரெஸ் பண்ணனும்ன்னு எனக்கு மோடிவேட் ஆகும்” என விளையாட்டாக கூறி அவளின் செருப்பையும் அவனின் செருப்பையும் எடுத்துக் கொண்டு முன்னே நடந்தான். ருத்ராவிற்கு அவன் வலி உணர்ந்தது. அவன் இப்படி சொல்லி இருந்தாலும் இல்லை என்றாலும் அவள் அதனை கழட்டி இருப்பாள். கடைசி ஒரு முறை அந்த பிரேஸ்லைட்டை பரிவாக வருடியவள் அதனை அப்படியே கழட்டி கீழே போட்ட ருத்ரா வேகமாய் நடந்து யுகன் கையை பிடித்துக் கொண்டாள். கீழே விழுந்த பிரேஸ்லைட் அவளின் கால் தடம் அருகே விழுந்தது. யுகனை பார்த்து லேசாய் புன்னகைத்தவள், “வீட்டுக்கு போலாம் யுகா” என்க அதில் மகிழ்ந்த யுகன் அவளின் கையை கோர்த்துக் கொண்டு நடந்தான். 

 

கடல் அலை போல உன் கால் தொட்டு உரசி

கடல் உள்ள போறவன் நான் இல்லடி

கடல் மண்ண போல உன் காலோட ஒட்டி

கரை தாண்டும் வரை நான் இருப்பேனடி

கண்ணான கண்ணே நீ கலங்காதடி

என் உயிரோட ஆதாரம் நீதானடி

கண்ணான கண்ணே நீ கலங்காதடி

யார் போனா என்ன நான் இருப்பேனடி….

       

                       ~•முற்றம்•~

 

                       

                                           -மஹி 💕

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    5 Comments

    1. Super da ❤️❤️romba emotional thaan but heart touching ❤️❤️first time nnu sonna but vera level 😍😍oruvazhiya yuga ruthra senthaachchu irunthalim sri paavam thaan avan appadi pesinappo ரொம்ப kastama irunthuchu irunthalum ஏதோ காரணம் irukku nnu thonuchu but thaan kadhali sandhosama இருக்கனுன்னு அவன் kaadhala thyakam panren vera level ❤️❤️nalaikku review perusa poduren ippothaikku chinma comment thaan 😍😍

        1. இங்கையுமா விட மாட்ட mudyala un thanks ketu kettu 😂😂

    2. ஸ்ரீயோட விலகலுக்கு இதுதான் காரணமா இருக்குன்னு முன்னாடியே ஒரு யோகம் இருந்தது ஆனாலும் இப்படி அவன் காதலே தியாகம் பண்ணி ஒரே காதலை விட்டு பிரிஞ்சிடுவான்னு நினைக்கல
      இப்படி ஒரு முடிவை நிஜமாய் எதிர்பார்க்கல.

      இவனோட எதிர்பார்ப்பில்லாத உண்மையான காதல் சூப்பர் ருத்ரா அவனை புரிந்து அவனோட காதலை மதித்து நிதர்சனத்தை புரிந்து கொண்டு தன்னை மாற்றிக் கொள்ள முனைவதும் ரொம்ப யதார்த்தமா நல்லா இருந்தது சூப்பர்👌👌 வாழ்த்துக்கள்💐💐💐

      1. Author

        மிக்க நன்றி அக்கா🥰😍 தொடர்ந்து சப்போட் பன்னதுக்கு நன்றி♥️