Loading

கண்ணாலே அனுப்பினாய் அஞ்சல்-14

வீடே தலைகீழாய் இருந்தது. பெரியவர்கள் மூவரும் ருத்ரா மற்றும் யுகன் சண்டையை சிரிப்புடன் பார்த்துக் கொண்டு இருந்தார்கள். இங்கு வந்த நாளில் இருந்தே ருத்ராவை சீண்டி அவளை கடுப்பேற்றி கத்த விடுவதே யுகனின் தலையாய கடமையாய் இருந்தது. இப்படி செய்தாலாவது அவளுடன் அதிக நேரம் செலவழிக்கலாம் என நினைத்து செய்கிறான். யுகனுக்கு செமஸ்டர் விடுமுறையாக இருக்க அவன் தந்தை உடனே இங்கு தங்கி விட்டான். தினமும் ருத்ரா பள்ளிக்கு சென்று வர அவளை வம்பிலுத்துக் கொண்டே பள்ளியில் விடுவதும் அழைத்து வருவதுமாய் இருந்தான். 

அவர்களின் சிறு சிறு ஊடல்களை பார்த்த ராமமூர்த்திக்கு சதாசிவம் உடன் நட்பை தாண்டி சொந்தமாகிக் கொள்ள ஆசை எழுந்தது. ஆனால் சிறுவர்கள் மனதை களைக்க வேண்டாம் என்று ஆசையை நண்பனிடம் மட்டும் கூறினார். சதாசிவம் தயங்கவில்லை. ஆனால் ருத்ரா விருப்பம் தான் முதன்மை என்று கூறினார். ராமுக்கு மகிழ்ச்சி. பெரியவர்கள் இப்படி எல்லாம் பேசுவதை பற்றி தெரியாமல் இருவரும் மேகி சாப்பிட அடித்து பிடித்துக் கொண்டு இருந்தார்கள். 

இது மட்டும் யுகனுக்கு தெரிந்தாள் தலை கீழாய் நடனமாடுவான். 

 

இருவரும் பேசி பழகுவதே தனிதுவமாய் இருக்கும். சண்டையில் தான் ஆரம்பித்து முடிப்பார்கள். ஆனால் அதில் கோவமா வெறுப்போ இருக்காது. யுகன் விடுமுறை முடிய இருவரும் அங்கு இருந்து கிளம்பினார்கள். ருத்ராவிற்கு என்னவோ போல் இருந்தது. வீட்டில் ஒற்றை பிள்ளையாய் தனித்து இருந்தவள் வாழ்வில் தனிமையை போக்கியவன் இப்பொழுது இல்லாததை உணர்ந்து வருத்தம் கொண்டாள். குறிப்பாக அவனுடன் சண்டை போடாமல் இருப்பது அவளுக்கு என்னவோ போல் இருந்தது. நாட்கள் கடக்க அவள் படிப்பில் கவனம் செலுத்தினாள். 

 

அங்கு யுகன் அவளின் நினைவில் நாட்களை கடத்தினான். ருத்ரா பன்னிரெண்டாம் பரீட்சை முடிவு வெளியாகும் நாளில் கூட அவனால் அவளை பார்க்க செல்ல முடியாத சூழல் உண்டானது. அதனால் கோவித்துக் கொண்டாள் ருத்ரா. அதன் பின் ருத்ரா கல்லூரியில் சேர்ந்திட அவனும் அவன் படிப்பில் கவனம் செலுத்தினான். அவ்வப்போது ராமமூர்த்தி மட்டும் அவர்களை பார்க்க வருவார். சட்டம் படித்துக் கொண்டு இருந்த யுகன் நான்காம் ஆண்டிலேயே புகழ் பெற்ற கிரிமினல் வழக்கறிஞர்ரிடம் ஜூனியராக சேர்ந்து பணியாற்ற துவங்கினான். அதனால் அவனுக்கு ருத்ராவை பார்க்க நேரம் இல்லை. ஆனாலும் தினமும் இரவில் அவளின் புகைப்படத்தை பார்த்து பேசி விட்டே உறங்குவான். 

 

ருத்ரா நாட்போக்கில் படிப்பில் கவனம் செலுத்தியவள் படிப்பில் முதல் ஆளாய் வருவதையே நோக்கமாய் வைத்திருந்தாள். காலம் ஒடிட ருத்ரா இளங்கலை கடைசி செமஸ்டர் பரிட்சைக்கு தயாராகிக் கொண்டு இருந்தாள். ஒரு நாள் தாமதமாய் லேப் விட்டு வெளியே வந்த ருத்ரா கேன்டீன் சென்று தேநீர் குடிக்க சென்றாள். பின் பக்கத்தில் இருந்து ஏதோ சத்தம் வருவதை கேட்டு குழப்பத்துடன் அங்கு சென்றாள். கல்லூரி முடிந்து அனைவரும் வீடு சென்று இருக்க சில பேர் மட்டுமே பரீட்சைக்காக ஆங்காங்கே அமர்ந்து படித்துக் கொண்டு இருந்தார்கள். கேன்டீன் பின் பக்கம் குப்பைகளை கொட்டும் இடம் தான் இருக்கிறது. அங்கு இருந்து என்ன சத்தம் என யோசித்தவள் சென்று பார்க்க நான்கு ஐந்து பேர் கூட்டமாக நின்று பேசிக் கொண்டு இருக்க ஒருவன் காசை எண்ணிக் கொண்டு இருந்தான். 

நடப்பது சரி இல்லை என்று உணர்ந்த ருத்ரா அமைதியாய் நடப்பதை வீடியோ எடுக்க துவங்கினாள். பணத்தை எண்ணியவன் அவள் கல்லூரியை சேர்ந்த மாணவன் ஒருவனிடம் வெள்ளை நிற பவுடரை சிறிய சிறிய பாக்கெட்டாக பை நிறைய குடுத்தவன், “இது ரொம்ப விலை அதிகம்.. போட்டா கைலாசத்துக்கே போலாம்.. அடிச்சா போதை அப்படி ஏறும்.. காலேஜ்ல மத்த யாராவது கேட்டாலும் என் கிட்ட கூட்டிட்டு வா.. இந்த விசயம் வெளிய யாருக்கும் தெரியாம பாத்துக்க” என்று எச்சரித்தவன் அங்கு இருந்து வெளியே கிளம்பினான். 

 

போதை என்று அவன் கூறியதில் அதிர்ந்தாள் ருத்ரா. அவனை பார்த்தாள் அந்த கல்லூரியை சேர்ந்தவன் போல் இல்லை. அப்படி இருக்கையில் எப்படி உள்ளே வந்தான் என பலவாறாக யோசித்தாள். அனைத்தையும் பதிவு செய்து இருந்தவள் உடனே வீட்டிற்கு சென்று தன் தந்தையிடம் போட்டு காட்டினாள். சதாசிவம் உடனே இதனை பற்றி நிர்வாகத்திற்கும் காவல் துறையினருக்கும் தெரிவிக்க நினைத்தார். கல்லூரி உள்ளே வந்து போதை பொருள் விற்கும் அளவிற்கு அவனுக்கு அவ்வளவு தையிறியம் இருக்கிறதா என்று தோன்றியது. மாணவர்கள் கையில் போதை பொருள். இதனை விட கொடியது ஏதேனும் உண்டா? அது ஒன்றால் எத்தனை பேர் வாழ்க்கை சீரழியும். காவல் நிலையத்தில் அவர் பெயரில் சென்று புகார் தெரிவித்தார். தன் மகளுக்கு இதனால் ஒன்றும் ஆகி விடக் கூடாது என்று நினைத்தார். 

 

ஆனால் போதை மருந்தை விற்ற நிலவன் தகவல் அறிந்து உடனே மறுநாள் ருத்ராவை தேடி கல்லூரிக்கு வந்து விட்டான். கம்ப்லைன்ட் குடுத்த நபரின் முகவரியை கண்டுக் கொண்டு ஒரே இரவில் சதாசிவம் குடும்பத்தை பற்றி அறிந்துக் கொண்டவன் ருத்ராவை தேடி வந்து விட்டான். கல்லூரியை விட்டு ருத்ரா வெளியே வர அவளை அவனும் அவனின் ஆட்களும் சூழ்ந்துக் கொண்டார்கள். அவன் தான் நிலவன். அந்த ஏறிய தாதாவின் மகன். ஊரில் இருக்கும் கட்ட பஞ்சாயத்து வேலை எல்லாம் செய்துக் கொண்டு திரிபவன் பள்ளி மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கு போதை பொருட்களை விற்பதையே வழமையாய் வைத்திருக்கிறான். அதற்கு அடிமை ஆகுபவர்களை அவனின் அடியாளை சேர்த்துக் கொண்டு அவன் இஷ்ட்டம் போல் ஆட்டி படைப்பான். நிலவன் ருத்ராவை சூழ்ந்துக் கொள்ள, ருத்ரா முதலில் அதிர்ந்தாலும் தையிரியமாய் நின்றாள். 

 

“எவ்ளோ தையிரியம் இருந்தா விடியோ எடுத்து நீ குடுப்ப உன் அப்பன் என் மேலையே கம்ப்ளைன்ட் குடுப்பான்.. அவ்ளோ அதுப்பாச்சா உனக்கு.. மவளே இப்போவே என் கூட வா டி.. உன் அப்பன் மட்டும் கம்ப்ளைன்ட் வாபஸ் வாங்கலை உன்ன உண்டு இல்லன்னு பண்ணிடுவேன்” என கோவத்துடன் கூறியவன் ருத்ரா கையை பிடிக்க அவன் கன்னத்திலே பளார் என்று அறை விட்டு இருந்தாள் ருத்ரா. சுற்றி இருக்கும் அனைவரும் அதிர்ச்சி உடன் அவர்களை பார்த்தார்கள். நிலவனுக்கு பெருத்த அவமானமாய் இருந்தது. ஒரு பெண் தன்னை இத்தனை பேர் முன்னிலையிலும் அடித்து விட்டாளே என்ற ஆத்திரம் அவனுக்கு தலைக்கு ஏற அதே வேகத்துடன் பளார் என்று ருத்ரா கன்னத்திலே விட்டான். நிலவன், “பொட்ட சிறுக்கி.. எவ்ளோ திமிரு இருந்தா என் மேலையே கைய வைப்ப.. உன் கிட்ட நின்னு பேசி இருக்க கூடாது.. நீயும் உன் குடும்பமும் வாழ்நாள் முழுக்க தல நிமிர முடியாதபடி உன்ன அசிங்கப்படுவேன் டி. வா டி” என பல்லை கடித்தவன் அவளின் பின்னந்தலை முடியை கொத்தாக பற்றி அவனின் கார் பக்கம் இழுத்தான். ருத்ரா அவனின் கையை அடித்து அவனிடம் இருந்து விடுபட முயல பிடியை இன்னும் இறுக்கி அவளை தர தரவென இழுத்தான். சுற்றி இருப்பவர்கள் எல்லாம் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டு இருக்க ஒருத்தர் கூட வாயை திறக்கவில்லை. நம் மக்கள் எல்லாம் மறைமுகமாக சமுகவளைதலத்தில் மட்டுமே குரல்குடுக்க வருவார்கள். நிஜத்தில் அநியாயத்தை தட்டி கேட்க எவனோ ஒருவன் வரட்டும் என்று வேடிக்கை பார்க்கும் கூட்டம். மதிய வேளையில் பொது இடத்தில் வயது பெண்ணை ஒருவன் இழுத்து செல்கிறானே என்று பார்த்தார்களே தவிர ஒருத்தர் கூட காவல்துரையினற்கு அழைக்க முன்வரவில்லை. ருத்ரா, “என்ன விடு டா.. பொருக்கி ராஸ்கல்.. பண்றது எச்ச வேல இதுல உனக்கு இவ்ளோ திமிரா.. என் அப்பா கம்ப்ளைன்ட்ட வாபஸ் வாங்க மாட்டாரு.. என்ன டா பண்ணுவ” என்று அவன் பிடியில் இருந்தபடியே திமிறினாள் ருத்ரா. அதில் இளக்காரமாய் சிரித்தான் நிலவன். அவளை அவன் காரின் உள்ளே வலுக்கட்டாயமாக இழுத்து சென்றவன், “உன் அப்பனை எப்படி வாபஸ் வாங்க வைக்கணும்ன்னு எனக்கு தெரியும் டி” என திமிராக கூறி காரில் ஏறிக் கொள்ள கார் புறப்பட்டது. ருத்ராவிற்கு லேசாய் பயம் எடுக்க ஆரம்பித்தது. அவனிடம் இருந்து எப்படி தப்பிப்பது என்று யோசித்துக் கொண்டு இருக்க சட்டென்று அவளின் கைகளை இருக்கமாய் கட்டினான் நிலவன். அவள் வாயில் பிளஸ்டர் ஒட்டியவன் அடுத்த நொடியே ஊசியை எடுத்து அவள் மறுக்க மறுக்க அவள் உடலில் செலுத்தினான்.

 

“இது என்ன தெரியுமா? ட்ரக் இன்ஜெக்சன். இதை எதுக்கு போடுறேன் தெரியுமா? இது எடுத்து கிட்டா அடுத்த நாலுமணி நேரத்துக்கு உன்ன என்ன பண்ணாலும் உனக்கு நினைவே இருக்காது.. நீ சொர்கத்துல இருப்ப.. நீ போதை மருந்து யூஸ் பண்றன்னு நான் விடியோ எடுத்து அதை உன் அப்பனுக்கு நானே அனுப்புவேன்.. எப்புடி வசதி..” என்று ஆணவமாய் சிரித்தபடியே நிலவன் கூற ருத்ராவிற்கு கண்களில் நீர் கோர்த்தது. ஒரு பக்கம் அவன் என்ன செய்ய போகிறான் என்று பயம் அவளின் உயிரை எடுக்க போதை மருந்து கொஞ்சம் கொஞ்சமாய் அவளின் கண்ணை சொக்க வைத்தது. தடுமாற்றத்தில் அவள் இருக்க உடனே நிலவன் சதாசிவத்திற்கு அழைத்தான். ருத்ராவிற்கு மயக்கம் வரவில்லை ஆனால் உடல் எல்லாம் அவளை என்னவோ செய்ய மூச்சு வாங்கியவளுக்கு வேர்த்து கொட்ட துவங்கியது. பார்வை அவளுக்கு மங்கலாக துவங்க தள்ளாட்டத்துடன் அமர்ந்து இருந்தாள். ருத்ரா முகத்தாடையை பிடித்து நிமிர்த்திய நிலவன் போனை அவள் முகத்தருகே காட்டி, “இன்னும் ஒரு டோசேஜ் உன் பொண்ணுக்கு அதிகமா குடுத்தா அவ பொணத்தை நீ வாங்கிட்டு போக வேண்டியது தான்.. என்ன பண்ணனும்ன்னு நான் சொல்லனும்ன்னு அவசியம் இல்ல..” என்று கூறியவன் அந்த விடியோகாலை கட் செய்தான். சதாசிவத்திற்கு நெஞ்சம் படபடத்தது. பெற்ற மகள் எவனோ ஒரு பொருக்கி கையில் இருப்பதை பார்க்கவே நெஞ்சம் வலி எடுக்க அவசராவசரமாய் உடனே போலீஸ் ஸ்டேஷன்க்கு கிளம்பினார். லக்ஷ்மியோ தலையில் அடித்துக் கொண்டு அழுக அந்த நேரம் தான் பல வருடங்களுக்கு பிறகு ருத்ராவை சந்திக்கும் ஆவலுடன் அவன் படிப்பை முடித்த நல்ல செய்தியோடு வீட்டின் உள்ளே நுழைந்தான் யுகன். லஷ்மி அழுவதை பார்த்து பதட்டம் கொண்டவன் விரைந்து அவரிடம் ஓடி, “அத்தை.. என்ன ஆச்சு? ஏன் இப்படி அழுவுரிங்க? மாமா எங்க? ருத்ரா எங்க?” என பதட்டத்துடன் அவன் கேட்க நடந்த அனைத்தையும் கூறினார் லக்ஷ்மி. அதில் சிலையான யுகனுக்கு நிலவன் மீது பயங்கர ஆத்திரம் வந்தது. உடனே அவனின் வண்டியை எடுத்துக் கொண்டு காவல் நிலையத்திற்கு புறப்பட்டான் யுகவேந்திரன்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
5
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    4 Comments

    1. பாவம் ருத்ரா 🤧🤧 இப்படிலாம் பன்றவன சும்மாவே விட கூடாது😏😏 அடுத்து என்ன fight aa

    2. பாவம் ருத்ரா அவன் இப்படி இழுத்துகிட்டு போறான் எல்லாரும் வேடிக்கை பாக்குறாங்க 😡😡😡

      எப்படியோ சரியான நேரத்துக்கு யுகம் வந்துட்டான் அவன் ருத்ராவை காப்பாத்திடுவானா??