Loading

பாட்டியைத் தெரியும் என்று அழைத்துச் சென்றவன் எல்லாத் திருடர்கள் போல ஷாம்பவிக்கு மயக்க மருந்து கலந்த பிஸ்கட்டைத் தந்தான். பசியிலிருந்த குழந்தை ஒன்றுக்கு இரண்டாக வாங்கி சாப்பிட்டது. அந்தத் திருடன் குழந்தை மயங்கியவுடன் அவளின் கை, கழுத்து, காது என அணிந்திருந்த நகைகளை உருவிக் கொண்டு அந்த குழந்தையை இன்னொருவனிடம் கொண்டு போய் விட்டான். அவன் ஷாம்பவியைத் தூக்கிக் கொண்டு இன்னொருவனிடம் வந்தான்.

“அண்ணே இன்னைக்கு ஒரு குழந்தை வந்துருக்கு.”

“சந்தோஷம்டா. இன்னைக்கு போனி நல்லா இருக்கு போல, ஏற்கனவே நாலு குழந்தை இன்னைக்கு வந்துருச்சு. நம்ம காட்டுல மழை தான்.”

“அப்ப நமக்கு கமிஷனும் நிறைய கிடைக்கும்னு சொல்லுங்க.”

“டேய் அது எனக்கு மட்டும் தான். அது என்ன நமக்கு?? என்ன குளிர் விட்டு போச்சா??” கோபமாகக் கேட்டான்.

“அய்யோ அண்ணே என்னை மண்ணிச்சுடுங்க. ஏதோ தெரியாதனமா பேசிட்டேன்.”

“போடா போய் வேலையைப் பார். இன்னைக்கு பார்ட்டி வராங்க. அவங்ககிட்ட இந்த பத்து குழந்தைகளையும் ஒப்படைக்கனும். அப்ப தான் கைல துட்டு வரும். சொல்றதை மட்டும் செய்றதுனு நீ உயிரோட இருப்ப இல்ல என்னைப் பத்தி தெரியும்ல??” மிரட்டும் தொனியில் சொல்ல,

“அய்யோ அண்ணே உன்ன பத்தி தெரியாமலா. உனக்கு வரத தான் நமக்குன்னு சொன்னேன் அண்ணே. இப்பவே போய் எல்லா ஏற்பாடையும் பார்க்குறேன்.” என்று கூறிவிட்டுச் சென்று விட்டான்.

குழந்தைகள் கை மாற்றப் பட்டு பாண்டிச்சேரி வந்தனர். அங்கு எல்லா குழந்தைகளையும் பிச்சை எடுக்க வைத்தனர். ஒரு வேளை உணவு மட்டுமே தந்தார்கள். தினமும் ஒருத்தர் ஐந்நூறு ரூபாயாவது கொண்டு வர வேண்டும். இல்லாவிடில் அந்த ஒரு வேளை உணவும் கிடையாது. கிட்ட தட்ட ஆறு மாதம் காலம் ஷாம்பவி அவர்களிடம் தான் இருந்தாள். யார் செய்த புண்ணியமோ அங்கு போலிஸ் ரெய்ட் வந்துவிட்டார்கள். அதனால் கைக்குக் கிடைத்தக் குழந்தைகளை கூட்டிக் கொண்டு லாரியில் ஏறி தமிழ்நாடு நோக்கி வந்தனர் அந்த கும்பல். ஆனால் ஷாம்பவியின் கெட்ட நேரம் அவர்களுடன் அவளும் இருந்தாள். போலிஸும் அவர்களைத் துரத்திக் கொண்டு வந்தன. கோவை அவுட்டரில் அவர்கள் லாரி விபத்துக்கு உண்டாகியது. அப்பொழுது கோவை இன்ஸ்பெக்டராக இருந்த ராம் அங்குச் சரியான நேரத்திற்கு வந்து குழந்தைகளைக் காப்பாற்றினார். அந்த கடத்தல்காரர்களைக் காப்பாற்ற முடிந்த போதும் ராம் அதைச் செய்யவில்லை. அவர்கள் அங்கேயே இறந்தனர். ராம் அதில் சில குழந்தைகளைத் தவிர அனைவரையும் அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைத்தார். இரண்டு குழந்தைகள் மட்டும் தங்களுக்கு யாருமில்லை என்று சொல்லிவிட்டனர். ஷாம்பவிக்கு தன் குடும்பத்தின் மீது இருந்த கோபத்தில் அவள் தனக்கு யாருமில்லை என்று கூறிவிட்டாள். அதனால் அவளை தங்களின் ஆஸ்ரமத்தில் சேர்த்தனர்.

இதைக் கேட்டவுடன் அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். “என்னை மண்ணிச்சிடு மா. உன்னை என் வீட்டுக்கு கூட்டிட்டு வரும் போதே உன் பாட்டிகிட்ட உன்னை நல்லா பார்த்துக்குறேனு சொல்லித் தான் கூட்டிட்டு வந்தேன். வீட்டில் இருக்கும் பெண்களை நம்பினேன். இப்படி பண்ணுவாங்கனு நான் கனவுல கூட நினைக்கல. நீ இறந்துட்டதா தான் நாங்க நினைச்சோம். அப்பவே ரொம்ப குற்றவுணர்ச்சியாக இருந்தது. இப்ப நீ சொன்னதை எல்லாம் கேட்ட பிறகு எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குமா. ” என்று மனதார வருந்தினார் முரளி.

“என்னது நான் இறந்துட்டதா நினைச்சீங்களா??”

“ஆமா மா.” என்று கூறி முரளி அன்று அவள் சென்றவுடன் என்ன நடந்தது என்று கூறினார்.

ஷாம்பவி காணாமல் போய்விட்டாள் என்ற செய்தி கேட்டு முரளி வேகமாக வீட்டிற்கு வந்தார். அவரோடு ப்ரகாஷும் வந்தார். இருவரும் தேடாத இடமில்லை. ஆனால் அவள் கிடைக்கவில்லை. போலிஸில் புகார் அளித்தனர். அவர்களின் நேரம் அந்த ஸ்டேஷனில் போலிஸ் மாறிவிட்டார். இவர்களின் புகாரும் தொலைந்து விட்டது. திரும்பப் போய் கேட்ட பொழுது யாரோ ஒரு சிறுமியின் உடலைக் கொண்டு வந்து குடுத்து அது தான் ஷாம்பவி என்று நம்ப வைத்தார். இவர்களும் அவள் இறந்துவிட்டதாக நினைத்து அடுத்து வேலையைப் பார்க்கச் சென்றுவிட்டனர்.

“பாட்டி நீங்க என்னை பார்த்ததை ஏன் வீட்டுல சொல்லலை??”

“ஏன்டிமா நான் எப்ப உன்னைப் பார்த்தேன்??”

“பாட்டி எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு என்னைப் பார்த்ததும் நீங்க திரும்பிட்டீங்க. அந்த கோவத்துல தான் உங்களோட முகத்தைக் கூட நான் ஞாபகம் வச்சிருந்தேன். வேற யார் முகமும் எனக்கு ஞாபகம் இல்லை.”

“அப்படி என்னை பார்த்திருந்த னா என்ன கூப்பிட்டிருக்க வேண்டியது தான??”

“எனக்கு உங்க கூட வரப் பிடிக்கலை அதான் கூப்பிடல.”

“அப்படி சொல்லு. அத விட்டுட்டு என்னமோ நான் உன்னை பார்த்தேனு பொய் சொல்ற??”

“நான் பொய் சொல்லலை. நீங்க தான் பொய் சொல்றீங்க. எனக்கு நல்லா தெரியும் நீங்க என்னை பார்த்தீங்க.”

“போதும் நிப்பாட்டு. அன்னைக்கே இதோ நிக்குறாங்கல இந்த ஆகாஷும் சம்யுக்தாவும் உனக்குப் பெரிய ஷாக் தர போறோம். அதுல இருந்து உங்களால தப்பிக்கவே முடியாதுனு என்கிட்ட சொன்னாங்க. இப்ப தான் அதுக்கு அர்த்தம் புரியுது. என்ன எல்லாரும் சேர்ந்து என் குடும்பத்துல பிரச்சனை கொண்டு வரப் பார்க்குறீங்களா??” என்று கத்த, அனைவரும் ஒரு நிமிடம் அவரை அதிர்ச்சியாகப் பார்த்தனர்.

“ஷாம் விடு. சரி சொல்லு அவங்க உன்னை பார்த்தாங்கனு ப்ரூவ் பண்ணி என்ன பண்ண போற??”

“நான் ஒன்னும் பண்ண போறது இல்லை சமி.”

“அப்போ விடு. ஒரு நாள் இல்லனா ஒரு நாள் உண்மை வெளில வரும். அப்போ பார்த்துக்கலாம்.” என்று சமி கூற, ஷாம்பவி தலையை ஆட்டினாள்.

“சரி நம்ம வீட்டுக்குப் போகலாமா??” என்று ஷாம்பவி கேட்க,

“என்னமா நம்ம வீடு இருக்கும் போது நீ எங்க போற??” என்று முரளி கேட்க,

“டேய் முரளி அது என் வீடு. இந்த ஓடுகாலிக்குலாம் என் வீடு இடம் கிடையாது. எப்பல இருந்து நீயா முடிவு எடுக்க ஆரம்பிச்ச??” என்று கோவத்துடன் கங்கா பாட்டி கேட்டார்.

“அம்மா என்னமா பேசுறீங்க நீங்க?? ஆர்த்தி மாதிரி அவளும் எனக்கு பொண்ணு தான் மா.”

“என்னடா புதுசா பாசம் பொத்துக்கிட்டு வருது. அவளை பெத்தவளே பேசாம தான இருக்கா. உனக்கு என்னடா வந்தது??”

“அம்மா கொஞ்ச நேரம் சும்மா இருங்க. ஷாம்பவி அவங்க சொல்றது எதுவும் கண்டுக்காதமா. நீ நம்ம வீட்டுக்கு வா மா.” என்று கூறினார். பாட்டி ஏதோ கூறும் முன் ஷாம்பவியே,”இல்லை அது என் வீடு இல்லை. நான் இருக்குற வி.ஒய்(V.Y)ஆஸ்ரமம் தான் என்னோட வீடு.” ஆணித்தரமாகக் கூறினாள்.

“அப்படி சொல்லாத மா. வாசுகி என்ன பார்த்துட்டு இருக்க?? அவ உன் பொண்ணு. மறந்துட்டியா நீ??”

“ஆமாங்க நான் மறந்துட்டேன். என்ன அவ நினைச்சு பார்த்திருந்த அவ போய்ருக்க மாட்டா. எல்லாம் திமிரு. அவ அப்பா மாதிரி.” என்று கூற,

“போதும் நிறுத்துங்க. என் அப்பாவ பத்தி தப்பா பேச உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை.” கோவமாகக் கத்தினாள் ஷாம்பவி,”லக்ஷ்மி மா வாங்க நாம போகலாம். எனக்கு இங்க இருக்கவே பிடிக்கலை. ஆகாஷ் அண்ணா இதை நான் உங்ககிட்ட எதிர்பார்க்கலை. நான் உங்களுக்கு என்ன பாவம் செய்தேன்?? எனக்குன்னு நீங்கலாம் இருக்கீங்கன்னு நினைச்சேன். ஆனால் உங்களுக்கு நான் பாரமாக இருக்கேன்னு இப்ப புரியுது. இங்க இருந்து கோவை போனதும் நான் வேற எங்கயாவது போய்டுறேன்.” என்று கூற, ஆகாஷ் கோவத்துடன்,”லூசு மாதிரி பேசாத ஷாம். இங்க உன்னை கூட்டிட்டு வந்தது உனக்கு நியாயம் கிடைக்கத் தான். அவங்க கூட சேர்த்து வைக்க இல்லை. இனிமேல் இப்படி பேசாத. அப்புறம் என்ன செய்வேன்னு எனக்குத் தெரியாது.” என்று கூறினான்.

“என்னை மண்ணிச்சுடுமா எல்லாம் என்னால தான். உனக்கு எங்க இருந்தா சந்தோஷமோ அங்கேயே இரு மா.” என்று முரளி கூற, ஷாம், லக்ஷ்மி, ஆகாஷ், சமி மற்றும் ராம் அவர்கள் வீட்டிற்குச் சென்றனர்.

முரளிக்கு என்ன சொல்வதென தெரியவில்லை. அவர் தன் மனைவியை முறைத்து விட்டு வீட்டுக்குச் சென்று விட்டார். வாசுகி அதைத் தூசி போல் துடைத்து விட்டு அவரும் அங்கிருந்து சென்று விட்டார்.

“ஆர்த்தி மா நீ வீட்டுக்கு போடா. நான் இங்க கொஞ்சம் பேசனும்.” என்று கங்கா பாட்டி கூற, ஆர்த்தி எதுவும் கூறாமல் அங்கிருந்து சென்றாள்.

“ப்ரகாஷ் நான் உன்கிட்ட பேசனும்.” என்று கூறி அங்கிருந்த ஆஃபிஸ் ரூமுக்குச் சென்றனர்.

சஞ்சய்க்குச் சந்தேகமாக இருந்தது. ரிஷிக்கோ கடுப்பாக இருந்தது. எங்கு அவர் பாட்டியிடம் பேசிவிட்டு வந்ததும் ஆர்த்தியைக் கல்யாணம் பண்ணச் சொல்லிவிடுவாரோ என்று.

“சஞ்சய் நான் யுகி வீடு வரைக்கும் போய்டு வரேன்.”

“அண்ணா நானும் வரேன்.”

“நீ எதுக்கு அங்க வர??” ரிஷிக்கு சமியிடம் ஒரு விஷயம் பேச வேண்டியுள்ளது. அதனால் தான் அவன் சஞ்சயிடம் அப்படி கேட்டது. ரிஷி அப்படி கேட்டவுடன் சஞ்சய் ரிஷியை ஒரு மாதிரி பார்த்துவிட்டு,”என்னாச்சு அண்ணா உனக்கு?? நான் அங்க வந்தா உனக்கு என்ன பிரச்சனை??”

“ப்ச் சாரி சஞ்சய். எனக்கு யுகிகிட்ட சில விஷயம் கேட்கனும். அதான் அப்படி கேட்டுட்டேன் டா.”

“பரவால இருக்கட்டும்னா எனக்கும் அவங்ககிட்ட பேச சில் விஷயம் இருக்கு.” ரிஷி சந்தேகமாக சஞ்சயைப் பார்த்தான். எங்கு அவனும் தான் கேட்க வேண்டியதை தான் கேட்க நினைக்கிறானோ என்று.

“என்ன விஷயம் சஞ்சய்??”

ஓர் நிமிடம் யோசித்த சஞ்சய், ரிஷியைப் பார்த்து,”அண்ணா அன்னைக்கு நம்ம அப்பாவைக் கடத்தினது சமியும்,ஆகாஷும் தான்.” இதைக் கேட்ட ரிஷி அதிர்ச்சி அடைந்தான்.

“என்ன சொல்ற சஞ்சய்??”

“ஆமா அண்ணா. அவங்க பேசிட்டு இருந்ததை நான் கேட்டேன். அவங்ககிட்ட கேட்டதுக்கு கொஞ்ச நாள் டைம் தா. நாங்களே எல்லா உண்மையையும் சொல்றேன்னு சொன்னாங்க. அதான் இப்ப கேட்கலாம்னு நானும் வரேன்.” என்று சஞ்சய் கூற,

“சரி டா, வா போகலாம்.” என்று அமைதியாகக் கூற, சஞ்சய் ஆச்சரியமாகப் பார்த்தான். அவனின் பார்வை உணர்ந்த ரிஷி அவன் எதற்காக சமியைப் பார்க்கப் போகிறேன் என்று கூறியதைக் கேட்டு சஞ்சய் பல மடங்கு அதிர்ச்சி அடைந்தான்.

“என்ன அண்ணா சொல்ற??”

“இது சந்தேகம் தான்டா. யுகி சொல்றதுல தான் உண்மை இருக்கு. சரி வா போவோம்.” என்று கூறி வெளியே வர, அங்கு ஆர்த்தி நின்று இருந்தாள். அவளைப் பார்த்ததும் சஞ்சயும் ரிஷியும் கண்டு கொள்ளாமல் செல்ல, ஆர்த்தி ரிஷியின் கையைப் பிடித்து,”ரிஷி.” என்று கூற, ரிஷி வேகமாக அவளின் கையை தட்டிவிட்டான்.

“உன் மேல எனக்கு ஒரு மரியாதை இருந்துச்சு. உன்னை ஏமாத்துரோமேனு குற்றவுணர்ச்சியா இருந்துச்சு. ஆனால் நீ?? உண்மைலே என்னை லவ் பண்ணிருந்த இப்படி ஒரு நாடகம் போட்டு என்னை ஜெயில்ல வச்சுருக்க மாட்ட. இனி என் முகத்துலயே முளிக்காத.” என்று கோவமாகக் கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டான். சஞ்சயும் ரிஷியின் பின்னால் சென்று விட்டான். ஆர்த்தி அழுதுக் கொண்டே அவள் வீட்டுக்குச் சென்றுவிட்டாள்.

இங்கு சமியின் வீட்டில், ஆகாஷ் ஷாம்பவியின் காதைப் பிடித்துக் கொண்டு,”எவ்ளோ கொழுப்பு இருந்தா அங்க அப்படி பேசிருப்ப??”

“அய்யோ அண்ணா வலிக்குது. நீங்க சொன்ன மாதிரி தான செஞ்சேன். அதுக்கு எதுக்கு திட்டுறீங்க??” என்று சின்ன குழந்தை போல சொன்னாள்.

“நாங்க எழுதிக் கொடுத்த டயலாக்க விட ஜாஸ்தியாவே ஃபெர்ஃபார்ம்(perform) பண்ணிட்ட.” என்று ஆகாஷ் கூற,

“சரி விடுங்க. நேட்சுரலா இருந்துச்சுல. அது தான் வேண்டும்.” என்று ஷாம்பவி கூற,

“டேய் விடு டா. நான் கூட பயந்துட்டேன் எங்க இவ சொதப்பிடுவாளோனு. ஆனால் சூப்பரா பண்ணிட்டா.” என்று லக்ஷ்மி கூறினார்.

“அம்மா அப்படி சொல்லுங்க.” என்று அவரைக் கட்டிக் கொண்டாள் ஷாம்பவி.

“அண்ணா நீங்க சொன்னது உண்மை தான். இந்த பொண்ணு நம்ம ஷாம்பவி இல்லை.” என்ற குரல் கேட்க, அனைவரும் வீட்டின் வாசலைப் பார்த்தனர்.

“ரிஷி,சஞ்சய் நீங்க எங்க இங்க??”

“அது இப்ப முக்கியம் இல்லை. இந்த பொண்ணு ஷாம்பவி இல்லை தான??” என்று சஞ்சய் கேட்டான். ஆகாஷ்,ராம்,சமி மற்றும் லக்ஷ்மி அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தனர். ரிஷி சமியை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தான்.

“சொல்லுங்க இவங்க ஷாம்பவி இல்லனா எதுக்கு இந்த நாடகம்?? அப்ப இவங்க சொன்னது எல்லாம் பொய்யா??” என்று சஞ்சய் கோவத்துடன் கேட்க,

“இல்லை சஞ்சய் அவங்க சொன்னது எல்லாம் உண்மை தான். ஒன்னே ஒன்னு தவிர்த்து. அதாவது இங்க நிக்குறாங்கள அவங்க நம்ம ஷாம்பவி இல்லை. ஏனா நம்ம ஷாம்பவி இதோ நிக்குறால இவ தான். அதாவது இப்ப சம்யுக்தா அப்போ ஷாம்பவி. நான் சொல்றது சரியா.” என்று கேட்க, சஞ்சய்க்கு அதிர்ச்சி என்றால், மற்றவர்களுக்கு அவனுக்கு எப்படி இந்த உண்மை தெரிந்தது என்று அதிர்ச்சி.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
0
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்