கஞ்சனடா கவிஞ்சா நீ!!
அத்தியாயம் – 16
அமுதனும் வந்திதாவும் தங்கள் திருமண வாழ்க்கையை துவங்கி இரண்டு வாரம் கடந்திருந்தது. இவ்விரண்டு வாரங்களும் புதுமண ஜோடி புறாக்கள் தங்கள் காதல் வானில் சிறகடித்து பறந்தனர். அவர்களுக்குள் இருந்த ஒற்றுமையை கண்டு அவர்களது நலம் விரும்பிகள் அனைவரும் ஆனந்தம் கொள்ள , கௌரியோ தன் அக்கா இதே போன்று என்றும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக்கொண்டாள்.
இரண்டு வார விடுமுறை முடிந்து அமுதனும் , வந்திதாவும் , மறுநாள் வேலைக்கு செல்ல வேண்டியிருக்க , இரவு தூங்க செல்லும் முன் அமுதன் விடியற்காலை இரண்டு மணிக்கு அலாரம் வைத்து விட்டு தூங்க சென்றான்.
மறுநாள் காலை அலாரம் அடித்ததில் அரக்க பறக்க எழுந்த அமுதன் , எங்கே வந்திதா எழுந்து விடுவாளோ என்று பயந்து அவள் புறம் திரும்ப , ஆனால் வந்திதா அங்கே இல்லாததை கண்டு அதிர்ந்தான். சுற்றி முற்றி அவளை தேட துவங்கியவன் , அப்போது தான் சமையலறையில் லைட் எரிந்து கொண்டிருப்பதை கண்டு , சமையலறைக்குள் நுழைய , அங்கோ தன் மனைவி தனக்காய் வேர்க்க விறுவிறுக்க காலை உணவு சமைத்து கொண்டிருப்பதை கண்டு ஒருபுறம் அகமகிழ்ந்தவன் , மறுபுறம் அவளிடம் உண்மையை கூறாமல் தான் அவளுக்கு எத்தனை மன உளைச்சலை குடுத்து கொண்டிருக்கிறோம் என்ற குற்ற உணர்ச்சியில் வேதனை அடைந்தான்.
பின் நேரமாவதை உணர்ந்து பத்து நிமிடத்தில் அரக்க பறக்க தயாராகி வந்த அமுதன் , வந்திதா தயார் செய்து வைத்திருந்த காலை உணவை எடுத்து கொண்டு , அவளை ஒரு முறை இருக்கி அணைத்து ,கன்னத்தில் இதழ் பதித்தவன் , அவள் இமைக்கும் நொடியில் தன் இருசக்கர வாகனத்தில் ரூபன் இன்ஸ்டிடியூட்டை நோக்கி பறந்திருந்தான்.
அமுதனை வாசல் வரை சென்று வழி அனுப்பிவிட்டு மீண்டும் அறைக்குள் செல்ல விழைந்த வந்திதாவை தடுத்த வல்லி பாட்டி ” என்ன வந்தி , உன் புருஷன் இப்படி ரெண்டும் கெட்டான் நேரத்துல வெளியில போறான் ? என்ன புருஷனும் பொண்டாட்டியும் சேர்ந்து எனக்கு தெரியாம ஏதாச்சும் கேடி வேல பாக்குறீங்களா ? ” என்று அனைத்தும் தெரிந்திருந்தே எதுவும் தெரியாதவர் போல் வினவ , வல்லி பாட்டியின் பேச்சிலிருந்த நக்கலை வைத்தே அவருக்கு , அமுதன் வேலைக்கு செல்வது தெரியும் என்பதை யூகித்து கொண்ட வந்திதா, வேண்டுமென்றே அவரை வெறுப்பேற்ற விழைந்தாள்.
” ஹலோ கிழவி , என்ன யார பார்த்து கேடினு சொல்லுற ? என் புருஷன் யார் தெரியுமா ? ” என்று முகத்தை சற்று கடுமையாக வைத்து கொண்டு வினவ ,
அவள் கேட்ட கேள்வியில் , ஒரு வேலை அவளுக்கு உண்மை எல்லாம் தெரிந்து விட்டதோ என்று பயந்த வல்லி பாட்டி , அவளை பார்த்து பேந்த பேந்த விழிக்க , வந்திதாவோ , தான் சற்று அதட்டி பேசியதில் வல்லி பாட்டி பயந்து விட்டார் போல என்று சரியாக தப்பு கணக்கு போட்டவள் , ” என்ன கிழவி என் புருஷன் யாருன்னு தெரியறதுக்கு முன்னாடியே இப்படி பயந்து நடுங்குறியே , அவர் யாருன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் உன் நிலமை என்னாக போகுதோ ? “
” ஆமா நிஜமாவே உன் புருஷன் யாருன்னு உனக்கு தெரியுமா ? ” என்று வல்லி பாட்டி வந்திதாவை பார்த்து கேட்க ,
” ஏன் தெரியாது , என் புருஷன பத்தி எனக்கு தெரியாம , வேற யாருக்கு தெரியும் ? “
” சரி , உன் புருஷன் யாரு ? “
” கிழவி , உன்ன நம்பி தான் இந்த சீக்ரெட்ட உன் கிட்ட சொல்லுறேன். வேற யார் கிட்டையும் சொல்லிடாத ” என்றவள் , முகத்தை தீவிரமாக வைத்து கொண்டு அவர் காதருகே குனிந்தவள் ” என் புருஷன் ஒரு சி.பி.ஐ ஆஃபீஸர். அவர் ஒரு பயங்கரமான கேஸ ஹாண்டில் பண்ணி கிட்டு இருக்காரு. அந்த கேஸ் விஷயமா சில பல ஆதாரங்கள திரட்ட தான் இப்படி இந்த ரெண்டும் கெட்டான் நேரத்துல வெளியில போறாரு.” என்றவள் தன் பாட்டிற்கு கதை அடித்து விட , வல்லி பாட்டியோ , அவளுக்கு நிஜமாகவே உண்மை அனைத்தும் தெரிந்து விட்டது போல என்று பயந்தவர் , அவளை பேய் அறைந்தது போல் ஓர் பார்வை பார்த்து விட்டு , குடு குடுவென தன் அறைக்குள் சென்று அடைந்து கொண்டார்.
வல்லி பாட்டி தான் கூறிய பொய்யை நம்பி பயந்து விட்டார் போல , என்று தனக்கு தானே பெருமை பீற்றி கொண்ட வந்திதா , அவர் அறையின் கதவருகில் நின்று , ” கிழவி , என்ன பயந்துட்டியா ? இதுக்கே இப்படியா உனக்கு இன்னும் நிறையா சர்பிரைஸ் இருக்கு. ” என்று அவரிடம் நிஜமாகவே விளையாட்டாய் கூறியவள் , தூக்க கலக்கத்தில் கை தவறி அருகிலிருந்த பூ ஜாடியை தட்டி விட , அறைக்குள்ளிருந்த வல்லி பாட்டியோ
” வந்தி என்னை ஒன்னும் பண்ணிடாத மா. உன் புருஷன் தான் அவன் ஒரு சி.பி.ஐ ஆஃபீஸருங்குற உண்ம உனக்கு எக்காரணத்த கொண்டும் தெரிய வேண்டாம்னு சொன்னான். வேற எதுவும் எனக்கு தெரியாதுமா. நா அவன் சொன்னத தான் அப்படியே பாலொவ் பண்ணேன் ” என்று தனக்கு தெரிந்ததையெல்லாம் கூறி முடிக்கும் முன்பே , அவரது அறை கதவின் தாப்பாள் உடைந்து விழுந்தது.
கதவின் தாப்பாளை உடைத்து கொண்டு அறைக்குள் புயலென நுழைந்த வந்திதா , வல்லி பாட்டியின் தோளை அழுந்த பற்றி தன் புறம் திருப்பியவள் ” இப்போ நீங்க என்ன சொன்னீங்க ? ” என்று கர்ஜிக்க ,
வல்லி பாட்டியோ பயத்தில் நாக்கு தந்தியடிக்க ” அதான் உன் புருஷன் சி.பி.ஐ ஆஃபீஸர்னு … ” என்றவர் முடிக்கும் முன்பே ,
” யூ ப்ளடி சீட் , டேய் அமுதா , உனக்கு இருக்கு டா கச்சேரி. ” என்று கண்ணில் கனல் போங்க கத்தியவள் , ” கிழவி ஒழுங்கு மரியாதையா , உனக்கு தெரிஞ்ச எல்லா உண்மையையும் இப்போ நீ வெளிய கக்குற. இல்ல உன் கொரவளைய கடிச்சு துப்பிடுவேன். சொல்லு எனக்கு தெரியாம , என் முதுகுக்கு பின்னாடி நீயும் , அந்த அமுதன் குரங்கும் , என்னென்ன பிராடு வேலை பாத்து வச்சிருக்கீங்க. சொல்லு எல்லாத்தையும் ஒன்னு விடாம சொல்லு … ” என்ற வந்திதா ஹிஸ்டிரியா வந்தவள் போல் கத்த ,
வல்லி பாட்டியோ , ” அப்போ உனக்கு எந்த உண்மையும் தெரியாதா ? நானா தான் வான்டெட்டா வந்து உளறி கொட்டிட்டேனா ? ” என்று தலையில் கைவைத்து அருகிலிருந்த சோபாவில் அமர்ந்து விட ,
அவர் அருகில் சென்று , அவரை ஒட்டி கொண்டு அமர்ந்த வந்திதா ” அமுதன் சி.பி.ஐ ஆஃபீஸர்னு சும்மா விளையாட்டுக்கு பொய் சொன்னா , நீங்க பயந்து போய் வாடகை கேட்டு டார்ச்சர் பண்ண மாட்டிங்கன்னு நினைச்சு தான் நா அப்படி சொன்னேன். ஆனா அதுவே உண்மையா இருக்கும்னு எனக்கு தெரியாது.
ப்ளீஸ் பாட்டி தயவு செஞ்சு உண்மைய சொல்லுங்க. எனக்கு தலையே வெடிச்சிடும் போல இருக்கு …. ” என்று கண்ணில் வழிந்த கண்ணீரை கூட துடைக்க மறந்தவளாய் வந்திதா , வல்லி பாட்டியை உலுக்க ,
வல்லி பாட்டியும் அவள் அழுவதை காண இயலாது , அவரின் தோழி தேவகியை சந்தித்த நொடியிலிருந்து நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் ஒப்பிக்க , வந்திதாவின் வலது கண் இடைவிடாமல் கோவத்தில் சிவந்து கொண்டிருக்க , அவளது இடது கண்ணோ , தன்னை சுற்றி இருந்தவர்கள் அனைவருமே தன்னை ஏதோ ஒரு விதத்தில் ஏமாற்றி விட்டனரே என்னும் ஆற்றாமையில் கண்ணீரை சுரந்து கொண்டே இருந்தது.
பொய்மையும் வாய்மையும்
நேருக்கு நேர் மோதிக்கொள்ள
பொய்யுரைத்தவன் மெய்யுணர
பொய்யுணர்ந்தவள் மெய்தவற
நிலவரம் கலவரமானது …..
தொடரும் …
உங்கள் கருத்துகளை ஆவலுடன் எதிர் நோக்கி காத்திருக்கும் நான் உங்கள் பென்சிலு …
பாவம் டா வந்தி இந்த லூசு பயலுக்காக எல்லாம் செஞ்சிட்டு கடைசிலே பைத்தியக்காரி பட்டத்தையும் வாங்கிட்டு நிக்குறா, ஆமா வந்தியும் அமுதனும் ஒரே காலேஜ் படிச்சாங்கன்னு சொன்ன அப்புறம் எப்படி இவன் சிபிஐ ஆனான்.
andha loosu paiyan en appadi senjaanu , adutha epi la soldren sweety …. ore college la dhaan padichaanga , but adhuku apuram vandhi civil service exam ezhudhi food safety officer aana maadhiri , ivanum ssc cgl exam ezhudhi cbi aagi irukaan ….