Loading

கஞ்சனடா கவிஞ்சா நீ!!
அத்தியாயம் – 12 ( 12.2 )

இதற்கு மேல் தான் இங்கிருந்தால் தன்னையும்  மீறி எங்கே உண்மை அனைத்தையும் வந்திதாவிடம் உளறி கொட்டி விடுவோமோ என்று பயந்த சரண் , 

” சரி வந்தி அத்தாச்சி நீங்க வேற நியூ கப்பில்ஸ் , கொஞ்சம் அப்படி இப்படி இருப்பீங்க , அதையெல்லாம் பார்த்தா இந்த குழந்தை பையன் மனசு கெட்டு போயிடும். சோ நீங்க என்ஜோய் பண்ணுங்க , நா போய் என் டார்லிங்க சைட் அடிக்க போறேன். பை , டாடா … ” என்றவன் அனைவரிடமும் விடைபெற்று வெளியில் செல்ல, அவனை தடுத்து நிறுத்திய அமுதன் 

” வந்தி எனக்கும் வெளியில கொஞ்சம் வேல இருக்கு. நானும் அவன் கூடவே போயிட்டு ஒரு அரை மணி நேரத்துல வந்துறேன் ” என்றவன் சரணயுடன் வீட்டிலிருந்து வெளியேறினான். 

” அமுதனுக்கு திடீர்னு என்னாச்சு வல்லி பாட்டி ? காலைல எல்லாம் நல்லா தான இருந்தான் , இப்போ திடீர்னு ஏன் இப்படி அப்நார்மலா பீஹேவ் பண்றான்னு தெரியலையே ? ” என்ற வந்திதா , அமுதனின் செய்கைகளை கண்டு வருத்தம் கொள்ள , 

” அடி போடி கிறுக்கி , உன் புருஷன் இந்நேரத்துக்கு எதுக்கு வெளியில போறான்னு உனக்கு தெரியலையா ? ” 

என்று வினவிய வல்லி பாட்டியை பாவமாக பார்த்தவள் , 

” தெரியலையே ” 

” அட ட்யூப் லைட் ” என்று தலையில் அடித்து கொண்ட வல்லி பாட்டி , வந்திதாவின் காதருகில் குனிந்து , ஏதோ ரகசியம் சொல்ல , அதை கேட்டவளது முகம் நொடிப்பொழுதில் செந்தாமரையாய் சிவந்து விட்டது. 

” ச்சீ போங்க பாட்டி , நீங்க ரொம்ப மோசம் ” 

” ஏன் டி , உன் புருஷன் கிட்ட சொல்லவேண்டியத எல்லாம் என் கிட்ட சொல்லிக்கிட்டு இருக்க ? ” என்று வல்லி பாட்டி அவளை கிண்டல் செய்ய , 

” ஐயோ கிழவி , அமுதன் சொல்ற மாதிரி நீ நிஜமாவே சென்சார் கிழவி தான். எனக்கு ஒரே வெக்க வெக்கமா வருது. ” என்ற வந்திதா அறைக்குள் சென்று கதவை தாளிட்டு கொண்டாள்.

” கடவுளே என் புள்ளைங்க எல்லாரும் நல்லா இருக்கனும். கூடிய சீக்கிரமே அவுங்க கஷ்டமெல்லாம் தீர்ந்து அவுங்க எல்லாரும் சந்தோஷமா இருக்கனும் ” என்று இறைவனிடம் ஓர் வேண்டுதலை வைத்த வல்லி பாட்டியின் நினைவுகளோ பல வருடங்களுக்கு பின் சென்றது ….

” அடியே தேவு , என்ன டி செல்லம் முகமெல்லாம் ஒரு மாதிரி சொங்கி போயிருக்கு ? என்ன இந்த தடவ சோம்பு கொஞ்சம் பலமா அடிவாங்கிடுச்சோ ” என்று நகைத்த மரகத வல்லியை , வெறியாக முறைத்து கொண்டிருந்தார் தேவகி.

” ஏன் மரகதம் உனக்கு எல்லாத்துலயும் விளையாட்டு தானா ? நா எவ்ளோ சீரியசான விஷயத்தை பத்தி யோசிச்சுகிட்டு இருக்கேன். நீ என்ன டானா , என்னை கிண்டல் பண்ணி கிட்டு இருக்க ? ” 

” ஸ்யபா இன்னும் நீ அந்த பழைய பஞ்சாங்கத்த விடலையா ? இப்போ உனக்கு என்ன தான் டி பிரச்சனை ? உனக்கு உன் காப்பகத்துல வளர்ந்த பத்மாவ உன் புள்ள ஆதி கேசவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு ஆசையா இருக்கு , ஆனா ரெண்டு பேர் மனசுலையும் என்ன இருக்குனு தெரியல அதான ? ” என்று வினவிய வல்லியிடம் 

” ஆமா மரகதம் , எனக்கு அந்த பொண்ண பாக்கும் போது மனசுக்கு அவ்ளோ நிறைவா இருக்கு, அதே மாதிரி என் வீட்டுக்காரர் கிட்டயும் என் ஆசைய சொன்னேன் , அவருக்கும் இதுல பரிபூரண சம்மதம்னு சொல்லிட்டாரு. ஆனா என் புள்ள தான் கல்யாணத்த பத்தின பேச்ச எடுத்தாலே சிடு மூஞ்சி மாதிரி எரிஞ்சு எரிஞ்சு விழறான். சரி இவன் தான் அப்படினா , அந்த பொண்ணு கிட்ட போய் கல்யாணத்த பத்தி பேசலாம்னு பார்த்தா , அந்த பொண்ணு  ” நா ஆசைப்பட்ட படிப்ப படிக்க முடியலையே “னு எப்ப பார்த்தாலும் சோக கீதம் வாசிக்குது. ” என்று குறைபட்டு கொண்ட தேவகியை,  இடைமறைத்த வல்லி 

” அடிங் கொய்யாலே , படிக்குற புள்ளைக்கா கல்யாணம் பண்ணி வைக்க பிளான் பண்ணுற ? ஏய் தேவகி ஒழுங்கா அந்த புள்ள படிப்பு முடியுற வரைக்கும் கல்யாணத்த பத்தின பேச்ச எடுக்கவே கூடாது  .நா சொல்றதையும் மீறி  எனக்கு தெரியாம கோல்மால் வேல ஏதாச்சும் பார்த்த , அப்புறம் உன் சங்க கடிச்சு துப்பிருவேன் ஜாக்கிரதை. ” 

வல்லியின் மிரட்டலில் அதிர்ந்த தேவகி 

” அடியே இப்போ நா என்ன தப்பா சொல்லிட்டேன்னு நீ என் சங்க கடிச்சு துப்புற அளவுக்கு யோசிக்குற. அந்த புள்ள ஒன்னும் சின்ன பொண்ணு இல்ல , அதுக்கு பதினெட்டு வயசாகுது. ஆமா படிக்குற புள்ள , படிக்குற புள்ளனு சொல்லுறியே , உனக்கு எனக்கெல்லாம் படிப்ப பாதில நிறுத்திட்டு தான கல்யாணம் பண்ணி வச்சாங்க. நாம இப்போ நல்லா இல்லாமலா போயிட்டோம்  ? ” 

” நா சொல்லுறத கொஞ்சம் காது குடுத்து கேளு தேவு. நம்ம காலம் வேற இப்போ இருக்க காலம் வேற. இந்த காலத்துல ஆம்பள புள்ளையா இருந்தாலும் சரி , பொம்பள புள்ளையா இருந்தாலும் சரி , அவுங்களுக்கு படிப்பு ரொம்ப முக்கியம். படிப்பு ஒருத்தருக்கு பணம் சம்பாதிக்கிறதுகான வழிய அமைச்சு தருவது மட்டுமில்லாம , அவுங்களுக்கு ஒரு தெளிவையும் , தன்னம்பிக்கையையும் அது கூடவே பக்குவத்தையும் குடுக்கும். ” என்று வல்லி தேவகிக்கு நிதர்சனத்தை புரிய வைக்க முயன்றார்.

” ஆமா போ டி , சும்மா நூத்து கிழவி மாதிரி பேசாத. நா மட்டும் இப்போ படிக்க வேணாம்னா சொன்னேன் , என் புள்ளைய கல்யாணம் பணி கிட்டு அவ விருப்பத்துக்கு என்ன படிக்கணும்னு ஆசை படுறாளோ அது எல்லாத்தையும் படிக்கட்டும். அது மட்டுமில்லாம என் புள்ளையும் காலேஜ்ல ப்ரோபஸரா இருக்கான் , அவனும் தன்னால முடிஞ்ச உதவிய கண்டிப்பா செய்வான். அதுனால தான் சொல்லுறேன் ” என்ற தேவகி வல்லியிடம்  வாதாட , பதிலுக்கு வல்லியும் 

” ஏட்டிக்கு போட்டியா பேசாத தேவு. நீ தான் அந்த புள்ளைக்கு அவ அனாதைங்குறதுனால தான் , அவள பார்த்து அனுதாப பட்டு எல்லாரும் அவ கிட்ட அன்பு காட்டுறாங்கன்னு , ஒரு தாழ்வு மனப்பான்மை இருக்குன்னு சொன்ன. பத்தாததுக்கு இப்போ அந்த பொண்ணு , தான் ஆசைபட்ட படிப்ப படிக்க முடியலையேங்குற வேதனையில இருக்கு. இந்த நேரம் பார்த்து நீ கல்யாண பேச்ச எடுத்தா அந்த புள்ள என்ன நினைக்கும் ? நம்ம வாழ்க்கையில ஆசை பட்டது எதுவுமே நடக்க மாட்டேங்குது, இதுவே நம்ம அப்பா , அம்மா மட்டும் உயிரோட இருந்திருந்தா நமக்கு இந்த நிலமை வந்துருக்கும்மானு ஏங்க ஆரம்பிச்சிருவா. 

வேண்டாம் தேவு , ஏற்கனவே அப்பா , அம்மாவ இழந்துட்டு தவிச்சிக்கிட்டு இருக்க அந்த புள்ளைக்கு, ஆறுதல் சொல்லலனா கூட பரவாயில்ல , ஆனா அந்த புள்ள மனச கஷ்ட படுத்திட கூடாது. நா சொல்றது உனக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்குறேன் ” என்று பொறுமையாக எடுத்து கூறினார். 

” நீ சொல்றது எல்லாம் சரி தான் மரகதம் , ஆனா என் பையன் ஜாதகப்படி அவனுக்கு இன்னும் மூணு மாசத்துக்குள்ள கல்யாணம் நடந்தாகணும்னு ஜோசியர் சொல்லியிருக்காரே.ஒரு வேல அதுக்குள்ள  கல்யாணம் நடக்கலைனா , என் பையனுக்கு இந்த ஜென்மத்துல கல்யாணமே நடக்காதாம். அதுனால தான் யோசிக்குறேன் ” என்ற தேவகியை , வெட்டவா குத்தவா என்பது போல் பார்த்த வல்லி 

” அறிவுகெட்டவளே , உனக்கு எத்தனை தடவ சொல்லியிருக்கேன் , இந்த மாதிரி மூட நம்பிக்கை எல்லாத்தையும் தூக்கி தூர போடுன்னு . ஏன் டி என் பேச்ச கேட்கவே மாட்டேங்குற ?  ” 

பதிலுக்கு தேவகியும் ” என்ன மரகதம் நீ , ஏதோ நாத்திகவாதி மாதிரி பேசுற ? ” என்று வினவ 

அக்கூற்றில் கடுப்பான வல்லி ” அடிங்க நா நாத்திகவாதினு உன் கிட்ட சொன்னேனா ? நா உன்னை சாமிய நம்பாதேன்னு சொல்லல சாமியார நம்பாதேன்னு தான் சொல்லுறேன். நீயும் உன் புருஷனும் அந்த ஜோசியக்காரன் மேல வச்ச நம்பிக்கைய , ஏன் டி கடவுள் மேல வைக்க மாட்டேங்குறீங்க ? ஆனா ஒன்னு சொல்லுறேன் நல்லா கேட்டுக்கோ , இந்த மூட நம்பிக்கையால நீ வாழ்க்கைல ரொம்ப கஷ்ட பட போற. ஜாக்கிரத .. ” என்று எச்சரித்த வல்லி , தான் இத்தனை தெளிவாக எடுத்துரைத்தும் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்று பிடிவாதம் பிடிக்கிறாளே என்னும் கோவத்தில் தேவகி வீட்டிலிருந்து , அவரிடம் கூட  சொல்லி கொள்ளாமல் வெளியேறினார்.

வல்லியின் பேச்சை அலட்சிய படுத்திய தேவகி சில திட்டங்களை வகுத்து , அவர் எண்ணம் போலவே தன் மகன் ஆதி கேசவனுக்கும் , பத்மாவதிக்கும் மூன்று மாதங்களுக்குளே திருமணம் செய்து வைத்துவிட்டார்.

இத்திருமண செய்தி வல்லியின் காதுக்கு எட்டினால் , எங்கே அவர் கோவித்து கொள்வாரோ என்று பயந்த தேவகி , திருமண விழாவிற்கு வல்லியை அழைக்காமல் விட்டுவிட்டார்.

 

வல்லியும் அதை பெரிதாக எடுத்து கொள்ளாமல், தான் உண்டு தன் வேலை உண்டு என இருந்து விட்டார்.

எட்டு வருடங்களுக்கு பின் ….

இரவு தூக்கமின்மையின் காரணத்தினால் , வெகு நேரம் கழித்து தூங்கிய வல்லி , விடியற்காலை நான்கு மணியளவில் வீட்டின் அழைப்பு மணி சத்தத்தில் கண் விழித்தவர்.

” அட ச்ச , இந்த பால் பிஸினெஸ் பண்ண ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சோம் , காலங்காத்தாலையே வீட்டு கதவை தட்டி பால் வேணும் , நெய் வேணும் , வெண்ணை வேணும்னு உயிர எடுக்குறானுங்க. ச்ச மனுஷிய செத்த நேரம் நிம்மதியா தூங்க விடுறானுங்களா ” என்று தனக்கு தானே புலம்பிக்கொண்டு , வாசல் கதவை திறந்த வல்லிக்கு , வாசலில் மூன்று வயது பெண்பிள்ளையையும் , கையில் ஓர் கை குழந்தையையும் வைத்துக்கொண்டு கண்ணீர் வழிய நின்றிருந்த தேவகியை காண நெஞ்சம் பதறியது.

” ஏய் தேவு , என்னடி இது ? இப்படி கை குழந்தைய தூக்கி கிட்டு பனியில வந்திருக்க ? முதல்ல உள்ள வா , குழந்தை ரொம்ப நேரம் இந்த பனில இருந்தா உடம்புக்கு முடியாம போயிடும் ” என்று தேவகியை உள்ளே அழைத்தவர் , குழந்தையை தன் கரங்களை ஏந்தி கொண்டார்.

வீட்டிற்குள் நுழைந்த மறுநொடியே தேவகி வல்லியை கட்டி கொண்டு ஓவென கதறி அழத்துவங்கினார்.

தேவகி அழுவதை கண்டு வந்திதாவும் அழ துவங்கினாள். 

” ஐயோ தேவு முதல்ல ஒப்பாரி வைக்கறத நிறுத்து , பாரு நீ அழுகறத பார்த்து பயந்து போய் பாப்பாவும் அழுகுறா பாரு ” என்று வல்லி தேவகியை அதட்ட , 

தேவகியும் முயன்று தன் அழுகையை விழுங்கி கொண்டு , ஜோசியனை நம்பி அவரும் , அவர் கணவரும் செய்த முட்டாள்தனத்தை விவரித்தவர் , அவர்களின் வினைக்கு பயனாய் அவர் கணவர் தவறியதையும் கூறி தன் நெஞ்சில் அடித்து கொண்டு மீண்டும் அழ துவங்கினார்.

” அன்னைக்கே நீ சொன்ன , இந்த ஜோசியன எல்லாம் நம்பாதேன்னு. நா தான் கேக்கல. இப்போ நா செஞ்ச தப்புக்கு , என் மருமகளும் , மகளும் இந்த குழந்தைங்கள தண்டிக்க போறாங்க ” என்றவர் , பத்மாவும் , ஆதியும் பிள்ளைகளை கவனிக்காமல் வேலை வேலை , பணம் பணம் என்று ஓடுவதை கூறி தன் பேத்திகளின் நிலையை எண்ணி வருந்தினார்.

” ஷூ நீ முதல்ல அழுகுறத நிறுத்து தேவு. நடந்ததை யாராலையும் மாத்த முடியாது. இனிமே நடக்க போறதை பத்தி மட்டும் பேசுவோம். ” என்ற வல்லி , தன் கை சூட்டில்  குளிருக்கு அடக்கமாய் தூங்கிக்கொண்டிருந்த பெண் குழந்தையை கண்டவர் , அதன் அழகில் சொக்கி தான் போனார்.

” ஏய் தேவு பாப்பா எவ்ளோ அழகா இருக்கு. ஸ்யபா குண்டு கன்னம், குட்டி மூக்கு , நல்லா அடர்ந்த நெத்தி. அப்படியே மெழுகு பொம்மை மாதிரி அழகா இருக்குல்ல ” என்றவர் குனிந்து குழந்தையின் நெற்றியில் முத்தமிட போக , அவரை தடுத்த வந்தியோ ” அது என் பாப்பா. என் பாப்பா … என் பாப்பா. என் பாப்பாவ டச் பண்ணாத ” என்று தன் தலையை இடது வலதாய் ஆட்டி , வல்லியின் கையிலிருந்து குழந்தையை தூக்க வந்தாள்.

வந்திதாவின் செய்கையில் பெரியவர்கள் இருவரும் தங்கள் கவலை மறந்து சிரிக்க , வந்தியோ அவர்கள் அசந்த நேரம் , வல்லியின் கையிலிருந்து குழந்தையை தூக்கி தன் மடியில் போட்டு தனக்கு தெரிந்த மழலை மொழியில் ” லொ லொ லாயி , லாயி லாஹி ” என்று கத்தி கத்தி தாலாட்டு பாட , அவள் கத்திய கத்தில் தூங்கி கொண்டிருந்த குழந்தை விழித்துக்கொண்டு , தூக்கம் களைந்த கோவத்தில் வீழ் வீழ் என்று அழ துவங்கியது.

குழந்தை அழுவதை கண்டு, வந்திதாவும் அழ துவங்கினாள். வந்தி அழ துவங்கிய மறுநொடியே , குழந்தை தன் அழுகையை நிறுத்தி அவளை பார்த்து சிரிக்க துவங்கியது. 

குழந்தைகளின்  குறும்பில் மெய் மறந்திருந்த வல்லியை  உசுப்பிய தேவகி  , அவரிடம் தான் எடுத்திருக்கும் முடிவுகளை விவரிக்க துவங்கினார்.

“என் பேத்திங்களோட எதிர் காலத்த நினைச்சா எனக்கு ரொம்ப பயமா இருக்கு மரகதம். எனக்கு அப்புறம் என் பேத்திங்கள , என் மகனும் , மருமகளும் எப்படி பாத்துப்பாங்கன்னு எனக்கு தெரியல. ” 

” தேவு முதல்ல இந்த மாதிரி பேசுறத நிறுத்து. உனக்கு ஒன்னும் ஆகாது. ” 

” இல்ல மரகதம் , எனக்கு ரொம்ப பயமா இருக்கு. நா இருக்க வரைக்கும் அவுங்கள நல்லா பாத்துப்பேன் , ஆனா நா போயிட்டா இவுங்க ரெண்டு பேரோட நிலமை என்னாகும் ? “

” ஏய் தேவு இன்னொரு தடவ இந்த மாதிரி பேசுன , அப்புறம் நானே உன்ன கொன்னு போட்டுருவேன். எனக்கு தெரிஞ்சு நீ ரொம்ப தனிமையில இருக்கறதுனால தான் இப்படி எல்லாம் பேசுற. பேசாம நீ என் கூட வந்து , நம்ம வீட்ல இரு. கைலாசம் போன என் புருஷன் எப்ப வருவான்னு யாருக்கும் தெரியாது. 

அதுனால உன் பேத்திங்கள கூட்டிகிட்டு நம்ம வீட்ல வந்து இரு. எனக்கும் என்னனு தெரியல , உன் பேத்திங்கள பாத்தவுடனே ஒரு மாதிரி அவுங்க கூடவே இருந்து , அவுங்கள நல்லா பாத்துக்கணும்னு ஆசையா இருக்கு. ” என்ற வல்லியை இடை மறைத்த தேவகி 

” இல்ல மரகதம், என் பேத்தி கௌரிக்கு ஏதோ நடக்க போற மாதிரி எனக்கு அடிக்கடி கனவு வருது. அது மட்டும் இல்லாம , என் பேத்திங்களுக்கு வெளியிலயிருந்து ஆபத்து வர போகுதுன்னு என் உள் மனசு சொல்லி கிட்டே இருக்கு. ” 

” ஏய் தேவு , அதெல்லாம் ஒன்னுமில்ல , உன் மனசுல நிறையா எதிர்மறை எண்ணங்கள் இருக்கு, அதுனால தான் உனக்கு அப்படியெல்லாம் கனவு வருது. “

” இல்ல மரகதம் , எனக்கு ஏதோ தப்பா நடக்க போகுதுன்னு தோணுது. இங்க பாரு , எனக்கு ஒரு சத்தியம் பண்ணி குடு. என் பேத்திங்க எப்பவுமே உன் கண் பார்வையில இருக்கனும், ஆனா அவுங்களுக்கு நீ யாருன்னு தெரிய கூடாது. என் மேல சத்தியம் பண்ணு … சத்தியம் பண்ணு. என் பேத்திங்கள எப்பவும் கைவிட்டுட மாட்டேன்னு சத்தியம் பண்ணு .. ” என்று சற்று உணர்ச்சிவசப்பட்ட தேவகி , வல்லியின் கையை தன் தலையில் வைத்து சத்தியம் வாங்கிக்கொண்டார். 

” ஐயோ தேவு ஏன் டி இப்படி எல்லாம் பண்ணுற. இவுங்க உனக்கு பேத்திங்கனா , எனக்கும் பேத்திங்க தான டி. நீ கவலைய விடு , இனி என்னைக்கும் நா அவுங்களுக்கு அரணா இருப்பேன் ” என்று சத்தியம் செய்து கொடுத்தார் வல்லி.

வருடங்கள் காலில் சக்கரத்தை கட்டி கொண்டு யாருக்கும் நில்லாமல் தன் போக்கில் ஓடியது …. 

  தன் பேத்திகளை பற்றியும் , தன் குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகளையும் , தேவகி வல்லியிடம் ஒன்று விடாமல் ஒப்பிப்பார். வல்லியும் தூரத்திலிருந்தே கௌரியையும் , வந்தியையும் , அவர்களை சுற்றி இருப்போரையும் தொடர்ந்து கண்காணித்து வர , அப்போது தான் கௌரியின் நடவடிக்கைகளில் சிலவற்றை கண்டு அதிர்ந்தார். 

பொதுவாகவே கௌரிக்கு வந்திதா என்றால் உயிர். சிறு வயதில் ” அப்பா , அம்மா ” என்று தான் கேட்கும் போதெல்லாம், தன் அக்கா அழுகிறாள் என்பதை புரிந்து கொண்டவள் , அன்றிலிருந்து அவர்களை பற்றி அவளிடம் கேட்பதை தவிர்த்தாள். 

அதே போல் கௌரி , தேவகியிடம் ஒரு முறை தேவனை பற்றி விசாரிக்க , தன் கணவனை நினைத்து வருந்திய தேவகி கண்ணீரில் கரைய , தன் ஆசை பாட்டி அழுவதை காண விரும்பாமல் , அன்றிலிருந்து கௌரி தேவகியிடம் தேவனை பற்றி கேட்பதை நிறுத்திக்கொண்டாள்.

முதலில் இதை கவனித்த வல்லி , அதை சாதாரணமாக எடுத்து கொண்டார். ஆனால் நாளாக நாளாக , கௌரிக்கு தன்னை சுற்றி இருப்போரிடம் தான் ஏதும் பேச சென்று , கடைசியில் அவர்களை அது காய படுத்தி விடுமோ ? என்ற பயம் ஆட்கொண்டது. அதன் விளைவாக , தன் அக்காவிடம் கூட , தன் விருப்பு , வெறுப்புகளை , சுக , துக்கங்களை பகிற தயங்கினாள். 

அப்பா , அம்மாவின் பாசத்திற்காய் ஏங்கினாலும் , தன் அக்காவிடம் அதை பகிர தயங்கினாள். மெல்ல மெல்ல வெளியுலகிலிருந்து தன்னை தனிமை படுத்தி கொண்டவள் , தனக்கு தானே ஓர் உலகை அமைத்து கொண்டு வாழ துவங்கினாள். 

கௌரியின் இந்நிலையை கண்டறிந்த வல்லி , தன் தோழி தேவகியை அழைத்து , கௌரியை ஓர் மருத்துவரிடம் காட்ட சொன்னார்.

தேவகியும் அவர் கூறியது போலவே செய்ய , கௌரியை முழுமையாய் பரிசோதித்த மருத்துவர் , அவளுக்கு ஏற்பட்டிருக்கும் வியாதியின் பெயர் ” ஸ்கிசாய்டு ஆளுமை கோளாறு ” ( schizoid personality disorder ) என்று கூறியவர். பொதுவாக இது போன்ற மன நோயிற்கு ஆளாக்க பட்டவர்கள் , பிறரிடம் தங்களை பற்றி அதிகம் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள் என்றும் , கொஞ்சம் கொஞ்சமாக தங்களை தாங்களே தனிமை படுத்தி கொள்வார்கள் , அதன் விளைவாக , மன அழுத்தம் அதிகமாகி , சிலர் தற்கொலை கூட செய்து கொள்வார்கள் என்றும் கூற , அவர் கூறியதை கேட்டு தேவகியும் , வந்திதாவும் துடித்து போயினர்.

மருத்துவரிடம் எப்படியாவது கௌரியை காப்பாற்றுமாறு கெஞ்ச , மருத்துவரோ அது உங்கள் கையில் தான் இருக்கிறது என்று சொல்லிவிட்டார்.

பின் கொஞ்ச கொஞ்சமாக அவளை அந்நோயிலிருந்து  வெளி கொண்டு வர , தேவகியும் , வந்திதாவும் எப்போதும் அவள் அருகில் இருந்து அவளை கண்ணும் கருத்துமாக பார்த்து கொண்டனர்.

கௌரியும் கொஞ்சம் கொஞ்சமாக அந்நோயிலிருந்து வெளியில் வர , பாவம் யாரும் எதிர் பாரா நேரத்தில் திடீரென்று நெஞ்சுவலி வந்து தேவகி இயற்கை எய்தினார். 

இதில் முழுதாக உடைந்து போன வந்திதா , கௌரியை கவனிக்க தவறி விட்டாள். 

மீண்டும் கௌரி தனிமையை விரும்ப துவங்கினாள். சரியாக அதே நேரம் அவளுக்கு மருத்துவ கல்லூரியில் படிக்க இடம் கிடைக்க , தனக்கு ஆறுதலாய் இருந்த வந்திதாவையும் விடுத்து , விடுதியில் சென்று தங்கினாள்.

கல்லூரி காலத்திலும் சக மாணவர்களுடன் ஒதுங்கியே இருந்தாள். தன்னிடம் தானாக வந்து பேசும் நித்யாவிடம் கூட அதிகம் பேச மாட்டாள் , அளவாகவே பழகுவாள்.

இதில் கொடுமை என்னவென்றால் , அவளுடன் படித்த மாணவர்கள் அனைவரும் கௌரியின் ஒதுக்கத்தை தவறாக புரிந்து கொண்டு , அவளை ” திமிரு பிடித்தவள் ” என்று அவளிடம் பேசுவதையே தவிர்த்து வந்தனர்.

கௌரி தனிமையின் பிடியில் சிக்கி , இறுதியில் மன அழுத்தம் தாங்காமல் தற்கொலை செய்யும் முடிவிற்கு வந்தாள். 

கௌரி படும் பாட்டை  கண்டு வல்லி துடித்து போனார்.

ஆதி கேசவன் குடும்பம் செய்த தவறுக்கு , பாவம் கௌரி தண்டனை அனுபவித்து கொண்டிருந்தாள்.

பாவம் ஒரு பக்கம் , பழி ஒரு பக்கம் ….

தொடரும்…

உங்கள் கருத்துகளை ஆவலுடன் எதிர் நோக்கி காத்திருக்கும் நான் உங்கள் பென்சிலு …

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
3
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. Archana

      கௌரி பிரண்டு நித்யா இது புரிஞ்சிடுச்சு வல்லி பாட்டியே ஏன் தேவகி பாட்டி ஒதுங்கி நின்னே பார்த்துக்க சொன்னாங்க 🤔🤔🤔🤔

      1. colour pencils
        Author

        Ada irungo sweety innum oru 15 epi irukulla, adhu la neenga ketta oru oru que ku ans pandren 😍😍😍
        Poruthaar boomi aazhvaar 🤣🤣🤣🤣
        So wait and watch…. 😎😎😎