Loading

கஞ்சனடா கவிஞ்சா நீ!!
அத்தியாயம் – 10 ( 10.1 )

 

இரண்டு மாதங்களுக்கு பின் ….

வி.கே.சி திருமண மண்டபம் 

” பொண்ண அழைச்சிட்டு வாங்கோ ” என்று ஐயர் குரல் குடுக்க , 

தோழிகள் படை சூழ , மயில் கழுத்து நிற பட்டில் , மணபெண்ணுக்கே உரிய வெட்கத்துடன் , பூமி பார்த்து நடந்து வந்த வந்திதா,  மணமேடையில் அமர்ந்து கண்ணும் கருத்துமாக ஐயர் கூறும் மந்திரங்களை வழி மொழிந்துக்கொண்டிருந்த அமுதனின் அருகில் அமர்ந்தாள்.

” ச்ச சரியான ரோபோ , இவ்ளோ அழகா ஒரு பொண்ணு பக்கத்துல வந்து உட்கார்ந்திருக்கேன், இவன் என்ன டானா இப்படி ஐயர் மூஞ்சையே வெறிச்சி வெறிச்சி பார்த்துக்கிட்டு இருக்கான். இரு டா மவனே உன்னை பாஸ்ட் நயிட்ல கவனிச்சுக்கிறேன் ” என்று மைண்ட் வாயிசில் தனக்கு  தானே பேசிகொண்டவள் அமுதனை முறைத்துக்கொண்டே அவன் அருகில் அமர்ந்திருந்தாள்.

இங்கே வந்திதா அவனை மனதில் வறுத்தெடுத்து கொண்டிருக்க , அமுதனோ கடமையே கண்ணாக , ஐயர் கூறும் மந்திரங்களை ஒப்பித்தவன் , ஒரே ஒரு முறை மட்டும் அருகில் அமர்ந்திருந்த வந்திதாவின் புறம் திரும்பி உதடு குவித்து பறக்கும் முத்தத்தை காற்றில் பறக்க விட்டவன் , மீண்டும் ஐயர் புறம் திரும்பி ஒன்றுமே அறியாத பச்சை பிள்ளையை போல் முகத்தை வைத்துக்கொண்டு மந்திரம் கூற துவங்கினான்.

அமுதனின் சைகையில் வந்திதாவின் கன்னங்கள் வெட்கத்தில் சிவந்துவிட , இவர்கள் இருவரும் அடிக்கும் லூட்டியை துணை மாப்பிளையாகவும் , துணை மணப்பெண்ணாகவும் அவர்கள் அருகில் நின்று கவனித்துக்கொண்டிருந்த சரணும் , கௌரியும் ” டேய் ரொம்ப எல்லை மீறி போறீங்க டா ” என்று தலையில் அடித்துக்கொண்டனர்.

அமுதனையும் , வந்திதாவையும் அரை மணி நேரம் மந்திரம் ஓதியே காக்க வைத்த ஐயரிடம்  , “இதுக்கு மேல என் பாடி தாங்காது சீக்கிரம் முடியா ” என்று எரிந்து விழுந்த அமுதனை பார்த்து ” மாப்பிள்ளைக்கு ரொம்ப அவசரம் போல ” என்று ஐயர் கிண்டல் செய்ய மண்டபத்திலிருந்த அனைவருமே கல கலவென சிரிக்க துவங்கினர்.

அதே கலகலப்புடன் ஐயர் ” கெட்டி மேளம் , கெட்டி மேளம் …. மாங்கல்யம் தம்துனானே ” என்று மந்திரம் ஓத , பத்மா வல்லி பாட்டியை தாலி எடுத்து குடுக்க சொல்ல , ஆனால் வல்லி பாட்டியோ ” ஏய் பத்மா , நானே ஒரு மலடி, என்னைய போய் தாலி எடுத்து குடுக்க சொல்லுற ? வளர்ர புள்ளைங்க வாழக்கை நல்லா இருக்க வேணாமா ? அதுனால நீயும் கேசவனுமே தாலி எடுத்து குடுங்க ” என்று ஒதுங்கி கொள்ள , 

அதில் கோவம் கொண்ட பத்மா ” மம்மி ” மலடி “ங்குற வார்த்தைய இன்னொரு தடவ சொன்ன , அப்புறம் என் சின்ன பொண்ணுகிட்ட சொல்லி உன் சங்க கடிச்சு துப்பிட சொல்லிடுவேன். உனக்கு எத்தனை தடவ சொல்லிருக்கேன் அந்த வார்த்தைய சொல்லாத சொல்லாதன்னு, ஏன் என் பேச்சை கேக்கவே மாட்டேங்குற ? ” என்று நொந்துகொள்ள , 

அதற்குள் இடையில் புகுந்தஅமுதனும் , வந்திதாவும் ” பாட்டி நீங்க இல்லாம எங்க கல்யாணமே நடந்திருக்காது , அதுனால கண்டதையும் யோசிக்காம நீங்களே தாலி எடுத்துக்குடுங்க ” என்று சமாதானம் செய்ய , 

அதை மறுத்த வல்லி பாட்டி மீண்டும் ஏதோ கூற வர , அவரை முந்திக்கொண்ட கௌரி ” கிழவி , எங்க அக்காவும் மாம்ஸும் நல்லாயிருக்கனும்னு முதல்லயிருந்தே போராடுன ஜீவன் நீ தான், அதுனால தாலி எடுத்து குடுக்குற உரிமை உனக்கு மட்டும் தான் இருக்கு. அடுத்தவன் நம்மல பத்தி என்ன யோசிப்பான்னு கவலை படாத. நீ நிஜமாவே  என் அக்கா , மாமா வாழ்க்கை நல்லாயிருக்கனும்னு நினைச்சினா , உன் கையால தாலி எடுத்து குடு ” என்க , 

கௌரி கூறியதை கேட்டு அகமகிழுந்து போன வல்லி பாட்டி , தன் குலசாமியை வேண்டிக்கொண்டு  தன் கையால் தாலி எடுத்து குடுக்க , தன் இத்தனை வருட காதல் நிறைவேற போகும் மகிழ்ச்சியில் அமுதன் தன் வந்திதாவின் கழுத்தில் மங்கள நாண் பூட்டி , அவள் உச்சி வகிட்டில் குங்குமம் இட்டு , அவள்பிறை  நெற்றியில் இதழ் பதிக்க , அங்கே கூடியிருந்த அனைவரும் அர்ச்சதை தூவி அவர்களை ஆசிர் வதித்தனர்.

தொடரும் ….

உங்கள் கருத்துகளை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கும் நான் உங்கள் பென்சிலு …

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
7
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. Archana

      என்ன பென்ஜில் இப்படி என்னோட ஆசமான லவ் ஸ்ட்டோரியே வல்லி பாட்டி நாசம் பண்ணிட்டாங்க🤧🤧🤧🤧🤧