Loading

அத்தியாயம் -21

தேவியும் வேலுவும் கிளம்பி இருக்க, அதுவரை கலகலத்த வீடு மீண்டும் அமைதி ஆனது. இருவருக்குள்ளும் ஒரு வித தடுமாற்றம், என்ன பேசுவது எப்படி ஆரம்பிப்பது என ஒன்றும் பிடிப்படவில்லை.

இரவு தூங்கி கொண்டிருந்த சாத்விக்கு தாகம் எடுக்க,  அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை தேடினாள்,அங்கு காணவில்லை. மெல்ல எழுந்து சமையல் அறைக்கு வர ஹாலில் லேப்டாப்புடன் அமர்ந்து வேலை பார்த்து கொண்டிருந்தான் துருவ். மணியை பார்த்தாள் இரவு இரண்டை காட்டியது.

அவள் கொலுசு சத்தம் கேட்டு அவன் நிமிர்ந்து பார்க்க, உடனே அறைக்குள் ஓடி புகுந்து கொண்டாள்.

‘ என்ன பூச்சாண்டிய பாத்த மாறி ஓடுறா?’ என அவன் நினைக்க, இங்கு அறையில் தனக்கு தானே சிரித்து கொண்டிருந்தாள் சாத்வி.

‘ஹையோ லூசி..! ஏன் இப்படி பண்ண?’ என நொந்துக்கொண்டாள்.

ஒரு வாரமாக சவரம் செய்யாத அவனின் தாடியும் வேலை செய்யும் போது மட்டும் அவன் அணித்திருக்கும் அந்த கண்ணாடியும் சாத்விக்கு கொள்ளை இஷ்டம். தீடிரென கிடைத்த தரிசனம் போல் அவனை அவள் வைத்து கண் வாங்காமல் பார்த்து, இல்லை ரசித்து கொண்டிருக்க எங்கே அவன் தன்னை கண்டு கொண்டானோ என்ற பதட்டத்தில் தான் உள்ளே ஓடி வந்துவிட்டாள்.

அதை நினைத்து தான் இப்பொழுது சிரித்து கொண்டிருக்கிறாள்.

‘இவளோ நாளா இவளோ அழகா தெரிலயே ‘ அவள் யோசிக்க, ‘சண்ட போடறதுக்கு மட்டும் மூஞ்ச பாத்தா அப்படி தான் இருக்கும் ‘ என மானசாட்சி எடுத்து கூற அலைபேசியில் இருக்கும் அவர்களின் படத்தை பார்த்தவள் ஆசையாக அதை வருடி கொடுத்தாள்.

காலையில் மகிக்கு மட்டும் கொஞ்சமாக சமைத்து லஞ்ச்சை பேக் செய்து கொண்டிருந்தாள் சாத்வி , துருவ் குழந்தையை குளிக்க வைத்து யூனிப்பார்ம் போட்டுவிட்டான்.

தலை சீவி ஹேர் பேண்ட் போட்டுவிட வந்தவனை தடுத்தவள்.

“ப்பா.. எனக்கு குடுமி தான் வேணும் “

“அதுக்கு மொத முடி வேணும்மா.. முடி வளத்திட்டு அப்றம் போட்டுக்கலாம் “

“முடியாது முடியாது எனக்கு வேணு.. ம்மாஆஆ..”

” அம்மாக்கு கைல அடி பட்டுருக்கல தங்கம் அம்மானால போட முடியாது”

” எனக்கு குடுமி தான் வேணும்” என்றவள் அவன் அணிவித்த சாக்சை கழட்டு எறிய,

“மகிஷா..!” சாத்வியின் அதட்டலில் துருவ்வை கட்டி கொண்டு அழுக ஆரம்பித்துவிட்டாள் அவள்.

சாத்வியை ஒரு இரஞ்சும் பார்வை பார்த்தவன்.

” என் செல்லம்மால அழ கூடாது பாப்பு குட்டி..! இரு இரு அப்பா உனக்கு போட்டு விடுறேன் அம்மா எனக்கு சொல்லி தருவா “

சாத்வி சொல்ல சொல்ல ஏதோ அவனிற்கு தெரிந்தவாரு போட்டுவிட்டான். முத்து பல் தெரிய சிரித்தவள் சாத்விடம் வந்து தலையாட்டி காட்ட, ” ம்ம்ம் நல்லாதா இருக்கு மண்டையில்ல ஒரு தென்ன மரம் மொளச்ச மாறி..!” தாயின் கேலியில் உடனே சென்று கண்ணாடியை பார்த்தவள்.

“நல்லவே இல்லா எனக்கு வேணா..ம்ஹ்ம்ம்ம்…” என தரையில் உருண்டு அழுக ஆரம்பித்து விட்டாள்.

பிறகு சாத்வி தான் அவளை சமாதானம் செய்து ஹேர் பேண்டை போட்டு விட்டாள்.

அம்மா மகள் கூட்டணியை பாவமாக பார்த்து கொண்டிருந்தான் துருவ். அவன் முகத்தை பார்த்து சிரித்தவள், ” ஆட்டோ அண்ணாவ வர சொல்லிருக்கேன், நானே போய் அவள ஸ்கூல்ல விட்டுட்டு வரேன். நைட் எல்லாம் வேலை பாத்தீங்கள நீங்க ரெஸ்ட் எடுங்க. அண்ணி கெளம்பும் போதே மாவாட்டி வெச்சிட்டு தான் போனாங்க இட்லி ஊத்தி வெச்சிட்டேன். பொடி போட்டு சாப்பிட்டுக்கலாம் மதியம் மட்டும் வெளிய வாங்கிகலாம். “

துருவ்விற்கு புதிதாக இருந்தது அவளின் செயல். எப்பொழுதும் அவனின் வேலையில் அவள் எதுவும் தலையிட்டு கொள்ள மாட்டாள்.

ஸ்கூலில் மகளை விட்டுட்டு சாத்வி வர, அவளிற்காக காத்து கொண்டிருந்தான் துருவ்.

” நீங்க இன்னும் சாப்பிடலயா? “

” இல்ல உனக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.  சேந்து சாப்பிடலாம் வா ” என்றவன் அவளிற்கும் சேர்த்தி பரிமாற, 

அவனின் செயலில் மெய் உருகி போனாள் பாவை அவள்..!

வாழ்கையின் சூட்சமமே அவ்வளவுதான்.

யார் முதல் அடி எடுத்து வைக்கிறார்கள் என்ற கேள்வியிலேயே பலரின் வாழ்கை முடிந்து விடுகிறது.

நீ ஒரு அடி வைத்தால், உன்னை நோக்கி சந்தோசம் நூறு அடி எடுத்து வைக்கும்.

மிகவும் சோர்வாக அமர்ந்திருந்தான் வருண். காலையில் சாப்பட்ட அனைத்தையும் வாந்தி எடுத்திருந்தான்.

அப்படி என்ன ஒற்று கொள்ளாமல் போய் இருக்கும் என கண்மணி டாக்டரை அழைத்து கேட்க, இது பொதுவாக நடப்பது தான் அவர் கூறி விட, வாடிய கொடியாய் அமர்ந்திருந்தவனை பார்க்க முடியவில்லை அவளால்.

இது போல் ஏதாவது நடக்கும் பொழுது மிகவும் மனம் தளர்ந்து விடுகிறான் அவன்.

அவனை உற்ச்சாகப்படுத்தும் பொருட்டு கார்த்தியை சத்தம் போட்டாள் அவள்.

” ஹெலோ.. மிஸ்டர் ப்ளேயர்..! ஒருத்தி இங்க மூணு வேளையும் சமைச்சு போட்டு சேவகம் செய்யறாளே அவளுக்கு எதாவுது கைமாறு செய்வோம்னு கொஞ்சமாவுது தோணுது?”

” கைமாறு எல்லாம் செய்ய முடியாது வேணும்னா ரெண்டு வெளக்கமாறு வாங்கி தரேன். உன் வூட்டுக்கு எடுத்துட்டு போ..!”

மேல் மூச்சு வாங்க அவனை முறைத்தவள், வருணிடம் திரும்பி

” ஆதி..! எனக்கு வெளிய போகனும் இப்போவே, நீங்க கூட வரீங்களா இல்லயா?”

” எனக்கு டையர்டா இருக்கு கண்மணி..! நீங்க போய்ட்டு வாங்க “

“ம்ஹ்ம்.. அதுலா முடியாது இந்த கொரங்கு கூட எல்லாம் நா போக மாட்டேன். நீங்க தா கூட்டிட்டு போகனும் “

அடம் பிடித்து அவனை இழுத்து வந்துவிட்டாள் வண்ண பூங்கவிற்கு..!

அங்கு இருந்த ஊஞ்சலில் அவள் அமர்ந்து கொள்ள, அருகில் இருந்த மேஜையில் அவன் அமர்ந்து கொண்டான்.

“உங்கள சும்மா உக்காரவா கூட்டிட்டு வந்தேன்..! வாங்க வந்து ஊஞ்சல் ஆட்டி விடுங்க “

” எதே “

” அதே தான்! இப்போவே ப்ராக்டீஸ் பண்ணிக்கோங்க அப்போ தான் ஃபியூச்சர்ல யூஸ் ஆகும் “

” இது எதுக்கு யூஸ் ஆகும் ” என்றான் அவளிற்கு ஆட்டி விட்டே.

“ம்ம்க்கும் இப்படி சரியான டியூப்லைட்டா இருந்தா என்ன பண்ணுறதாம் !”

” யாரு நா டியூப்லைட்டா? “

“ஆமா, பின்ன இல்லனு வேற சொல்லுவீங்களோ? கேர்ள் ஃப்ரண்ட அவுட்டிங் கூட்டிட்டு போனும் டேட்டிங் கூட்டிட்டு போகணும்னு ஏதாவது தோணுதா பாரு”

“ஓஹோ சாரி மேடம் எங்களுக்கு அது எல்லாம் தெரியாது “

“அது எனக்கே தெரியுமே..! அதான் நானே உங்கள கூட்டிட்டு வந்துட்டேன்.”

“ஆண்டி,  இங்க வந்தா எப்பவும் நா இந்த ஊஞ்சல்ல தான் ஆடுவேன். ப்ளீஸ் எனக்கு இடம் கொடுக்கறீங்களா?”

குட்டி மழலை ஒன்று அவளிடம் வந்து கேட்க,

அந்த குழந்தையை சுவாரசியமாக பார்த்தவள், ” இந்த பொம்மு குட்டிக்கு பேர் என்ன? “

“பூஜா..”

” ஓ.. பூச்சியா “

“பூச்சி இல்ல பூஜா ” என அவள் கொஞ்சம் கத்தி சொல்ல,

“அதே மாறி தான் நா ஒன்னும் ஆண்டி இல்ல அக்கா ” சற்று குரல் உயர்த்தி அவள் சொல்ல பயந்து விட்டது குழந்தை.

” ஹேய்.. இப்படியா பயம்பூத்துவ..! நீங்க வாங்க பூஜா இந்த ஆண்டிய நா எந்திரிக்க சொல்லறேன் ” என்றவன் வலுக்கட்டாயமாக அவளை எழுப்பி விட்டு பூஜாவை அமரவைத்தான்.

“பார்றா..!” என்றவள் அவனை பார்க்க, குழந்தைக்கு ஆட்டி விட்டு அவளோடு விளையாடி கொண்டிருந்தான்.

” ஹெலோ என்ன நடக்குது இங்க? ” இடிப்பில் கை வைத்து வருணை முறைத்து கொண்டிருந்தாள் கண்மணி.

பூஜாவோடு சேர்ந்து மணல் வீடு கட்டிகொண்டிருந்தான் வருண்.

” என்னய கழட்டிவிட்டுட்டு இவளோட விளையாடறீங்க?”

” உன்ன யாரு விளையாட வேண்டாம்னு சொன்னா? ” என்றவன் வீடு கட்டுவதில் மும்மரமாக இருக்க,

“குழந்தைனா ரொம்ப புடிக்குமோ?”

“ரொம்ம்ம்ம்ப..! நா வீட்டுல இருந்தா எப்பவுமே நானு க்ருஷும் தான் ஒன்னா சுத்துவோம் “

” எனக்கு குழந்தைகள சமாளிக்கற அளவுக்கு எல்லாம் பொறுமை இல்லப்பா “

“ஆண்டி என் வீட்ட ஏன் கலைக்கறீங்க!? அங்கிள் பாருங்க ” பூஜா குற்றம் சாட்ட,

“இந்தாடி..! சும்மா தொட்டு தான் பாத்தேன். உன் வீட்டுக்கு நீ தான் ஒழுங்கா பவுண்டேஷன் போட்டு கட்டி இருக்கணும்..!”

” குழந்தை கிட்ட சண்ட போடாத..! ” என்றவன் பூஜாவிற்கு மறுபடியும் அழகாக செட் செய்து கொடுக்க. கண் இமைக்காமல் அவனையே பார்த்து கொண்டிருந்தாள் கண்மணி.

பூஜா இடத்தில் குட்டி கண்மணி இருப்பது போல் ஒரு பிரம்மை உண்டாக அந்த அழகிய தருணத்தை போனில் போட்டோ எடுத்து பொக்கிஷப்படுத்தி கொண்டாள்.

அவன் குழந்தையை கையாளும் பாங்கும், பொறுமையும், நிதானமும் அவளை வெகுவாக ஈர்த்தது.

வீட்டுக்கு வந்து இரவு குளித்து முடித்து வெளியே வந்த வருண் அவனின் அறை நிலை கண்ணாடியின் முன்பு நின்று தன்னை சரி பார்த்து கொண்டிருந்த கண்மணியை பார்த்தான்.

“நா கொஞ்சம் குண்டாயிட்டேன்ல..? என்ன பதில் பேச மாட்டேங்கறீங்க அப்போ உண்மை தானா? தொப்ப வேற போட்டுருச்சி ” என்றவள் அவள் நெஞ்சின் கீழ் ஒரு கையும் அடி வயிற்றில் ஒரு கையும் வைத்து கர்ப்பிணி பெண் போல் போஸ் கொடுக்க பக்கென சிரித்து விட்டான் வருண்.

“கைய அப்படி வெக்காத   எடு “

“ஏன் சிரிக்கறீங்க, த்ரீ மன்த்ஸ் மாறி இருக்கா இல்ல டூ மன்த்ஸ் மாறி இருக்கா? ” என்றவள் உதட்டை பிதுக்கி கேட்க,

அவள் அருகில் வந்தவன் அவள் கையை எடுத்து அவன் நெஞ்சில் வைத்து கொண்டு,

” எனக்கு பொண்ணு உனக்கு? “

அவன் கேள்வி விளங்காமல் அவள் அவனை பார்க்க,

“யாரோ என்ன டியூப்லைட்னு சொன்னாங்க ” என்றவன் குறுகுறுவென பார்க்க அவனின் பார்வை வீச்சு தாங்காமல் சட்டென தலை தாழ்த்தி கொண்டவளிடம்,

” அய்யயோ இது என்ன புதுசா? வெக்கம் எல்லாம் வருது அம்மணிக்கு? ” என்றவன் அவளை வம்பிழுக்க,

“ம்ஹ்ம்ம்.. போங்க ஆதி..!” என்றவள் அவனிடம் இருந்து விடுப்பட்டு ஓடி விட்டாள்.

மாதவ்வின் பாரா முகம் அஷ்வினியை வெகுவாக பாதித்தது. இதோடு நூறாவது முறையாக மன்னிப்பு கேட்டுவிட்டாள்.

“வேணாம்மா.. இப்போ வந்து நா எல்லாம் மறந்துட்டேன் பழச நெனச்சி அழுக மாட்டேன்னு சொல்லுவ அப்றம் தீடிர்னு உனக்கு அந்த நியாபகம் வந்துச்சினா உக்காந்து ஒப்பாரி வைப்ப திரும்ப திரும்ப உன் கூட மல்லுக்கட்ட எனக்கு தெம்பில்லப்பா “

அவன் இப்படி சொல்லி விட்டு செல்ல செய்வதறியாது விக்கித்து நின்றாள் அஷ்வினி. 

அலுவலகம் முடிந்து ஆட்டோவிற்காக காத்திக்கொண்டிருவளின் முன்பு அவன் பைக்கை முறுக்கினான் மாதவன்.

அந்த சத்ததை கேட்டு திடுக்கிட்டவள் அவனை பார்க்க, ” இன்னிக்கு ஆட்டோ ஸ்ட்ரைக் அது கூட தெரியாதா ” என்றான் காட்டமாய்.

“தெரியாதே!” 

” வா வந்து ஏறு உன்ன ட்ராப் பண்ணுறேன்”

பைக்கில் ஏறி அமர்ந்தவள், ” எனக்கு பசிக்குது ” என்றாள் சின்ன குரலில்.

ஹோட்டலில் நிறுத்தியவன் அவளிற்கு உணவை ஆர்டர் செய்து விட்டு அமர்ந்திருக்க பாவமாக அவனையே பார்த்து கொண்டிருந்தாள் அஸ்வினி.

‘ இப்படி மூஞ்ச வெச்சே ஆள கவுக்க வேண்டியது ‘ என நினைத்தவன்,

” சரிஈஈ.. சாப்பிடு பஞ்சுமிட்டாய் எவ்வளவு நேரம் என்னயவே பாத்துட்டு இருப்ப? “

அவனின் அழைப்பில் சட்டென்ன கண்கள் கலங்கிவிட்டது அவளிற்கு.

” இவளோ நாள் ஆச்சா உங்களுக்கு என் கூட பேச ” மூக்கை உறிஞ்சி கொண்டே அவள் கேட்க, அதில் இன்பமாக அதிர்ந்தவன் ‘ என் மௌனம் அவளை பாதித்ததா? அடடா மாதவா இப்படி தெரிஞ்சிருந்தா எப்பயோ அவளுக்கு ஷாக் டிரீட்மென்ட் கொடுத்து உன் வழிக்கு கொண்டு வந்திருக்கலாமே!? சரியான லேட் பிக் அப்புடா நீயு..!!’ என எண்ணியவன் அடுத்து பேச வருவதற்குள்,

“உங்களுக்கு எப்படி?” என்றாள்.

“என்ன எப்படி?” அவன் புரியாமல் கேட்க,

“உங்களுக்கு எ…எப்படி எ.. என் மேல லவ்..” ஒரு வழியாக திக்கி திக்கி கேட்டவள் தலை கவிழ்ந்து கொண்டாள்.

” எப்படினு இல்ல எப்போல இருந்துனு கேக்கனும் ” என்றவன் அவளை முதல் முதலில் பார்த்ததில் இருந்து அனைத்தையும் சொல்ல, அதை கேட்டு பேச்சற்று உறைந்து அவனின் ஒவ்வொரு வார்த்தையிலும் இருந்த காதலை உணர்ந்தவள் சிலையாக சமைந்தாள்..!

“இது என்ன பேக்?” சோஃபாவின் அந்த பக்க மூலையில் இருந்த துணியை பார்த்து கேட்டாள் சாத்வி.

“அது அன்னைக்கு உன் பர்த்டேக்கு சப்ரைஸா கொடுக்கலாம்னு வாங்கிட்டு வந்தேன். ஆனா அதுக்குள்ள தான்..” என்றவன் அமைதியாக, அந்த அமைதி அவள் மனதை பிசைந்தது.

பையை திறந்து பார்த்தாள். இரண்டு குர்த்தா செட் இருந்தது.

” அழகா இருக்கு “

“உனக்கு பிடிச்சு இருக்கா?” என்றான் ஆர்வமாக.

“ரொம்ப..!”

” சாரி சாத்வி குட்டி உன்ன ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்ல “

அவனின் வார்த்தையில் கலங்கியவள்,

“இல்ல இல்ல நா தான் சாரி கேக்கனும் உங்கள புரிஞ்சிக்காம..” அவளை பேச விடாமல் தடுத்தவன்.

” பழச எல்லாம் வேணாம் விடு..! புதுசா லைஃப்ப ஸ்டார்ட் பண்ணலாம். ” அவன் சொல்ல, முகம் கொள்ளா புன்னகையோடு அவனை கட்டி கொண்டாள்.

சட்டென்ன அவன் முகத்தை அந்த பக்கம் திருப்பி கொள்ள. அதன் காரணம் தெரியாமல் பதறியவள், 

“ஏன் என்னாச்சு ” என்றாள் பரிதவிப்பாக.

” போடி இவ்ளோ நாள் என்ன கண்டுக்கவே இல்லல..? இப்போ மட்டும் ஏன் வந்து கொஞ்சுற போ ” அவன் பொய் கோவம் அவளுக்குள் சிரிப்பை மூட்ட,

” அச்சோ மை புருஷ் இப்படி எல்லாம் கொச்சிக்க கூடாது,

ஏ செல்ல குட்டி

மாமா குட்டி

முயல் குட்டி

ஆம குட்டி

முட்ட குட்டி என்ன பாருங்க”

“எதே முட்ட குட்டியா , ஆங் அடுத்தது குருவி ரொட்டி எல்லாம் சொல்லுவ போல?  ஆள விடு எனக்கு வேள இருக்கு ” 

” அதுலா முடியாது நா கொஞ்சுவேன்.. நீங்க கேட்டு தான் ஆகணும்..!”

 நாளை வருணிற்கு ஆபரேஷன்.  ஒரு வித இறுக்கமும் பதட்டமுமாக இருந்தது இருவரின் மனநிலையும்.

” ஒன்னும் ஆகாதுல.. ” வருணின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தவித்தாள் கண்மணி. அவனை விட அவள் தானே இன்னும் பயந்து போய் இருக்கிறாள். அவளின் மனநிலை அறிந்தவன்,

” இங்க வாயேன் ” என அழைத்து அவள் அருகில் அமர்த்தி கொண்டவன், அவள் மடியில் தலை வைத்து படுத்து கொண்டான். அவனின் செய்கையில் அவள் உடல் ஒரு முறை சிலிர்த்து அடங்கியது. அவளை இடையோடு கட்டிக்கொண்டவனின் கண்ணீர் அவள் டாப்ஸை நனைக்க, கஷ்டப்பட்டு அவள் கண்ணீரை அடக்கினாள் கண்மணி. யாரேனும் ஒருத்தர் ஆவது தைரியமாக இருக்க வேண்டும் அல்லவா!?

” எனக்கு.. “

“ஷ்ஷ்ஷ்..! எதுவும் பேசாதீங்க இன்னிக்கு முழுக்க இப்படி ஒரு விஷயம் இருக்கறதயே மறந்தராலாம்.  சாதாரணமா சந்தோசமா இருக்கலாம் ப்ளீஸ் எனக்காக!” கரகரத்து வந்த அவள் குரலில் அவளை கஷ்டப்படுத்துகிறோம் என உணர்ந்தவன், உடனே அவன் கண்களை துடித்து கொண்டு அவளை நிமிர்ந்து பார்த்தான். அவன் தலையை மீண்டும் அவள் மடியில் சாய்த்து கொண்டவள்,

மெல்ல அவன் தலையை கோதி விட்டாள்.

அவளின் இடை சூட்டு கதகதப்பிலும் தலை கோதும் இதத்திலும் சில நிமிடங்கள் அப்படியே கண்ணயர்ந்தான் வருண்.

மெல்ல அவனிற்கு முழிப்பு தட்ட அவளை பார்த்தான். இன்னும் தலை கோதி கொண்டு தான் இருந்தாள். அதை பார்த்து புன்னகைத்தவன்,

“கண்மணி..!”

“ம்ம்?”

“அன்போடு காதலன் நா எழுதும் கடிதமே..”

“ஹேய்.. என்ன பாட்டுபாடறீங்க?” அவள் சிரிக்க.

” ஆமா நீ எனக்கு ஒரு பாட்டு பாடு..!”

“நானா?”

“ஆமா நீயே தான். இப்போவே பாடு”

“சரி.. அப்போ இந்த பாட்டே பாடறேன் “

கண்ணனே..அன்போடு காதலி நான் எழுதும் கவிதையே…!என் மன்னனே நீ அங்கு மகிழ்ச்சியா..?உன்னை அறிய ஆவலே…!!

உன்னை நினைத்து பார்க்கையில் பூக்கள் பூக்குது..!

அதை சொல்ல நினைக்கையில் வெட்கம் தடுக்குது…!!!

ஓஓஹோ.. கண்ணனே அன்போடு காதலி நான் எழுதும் கவிதையே…!

உன்டான காயம் யாவும் தன்னாலே மாறி போகும்..உந்தன் பார்வை என்… மேனி..பட்டாலே…!!!

எந்த காயம் ஆன போதும் என் மேனி தாங்கிக் கொள்ளும்கைக்கோர்த்து… உன்…..காதல் சேர்ந்தாலே..!!!!

எந்தன் காதல் என்னவென்றுசொல்லாமல் ஏங்க ஏங்கஅழுகை வந்தது…!!!

எந்தன் காதல் நீ தான் என்றுஅறிந்த பின்பு அந்தஅழுகை நின்றது..!!

மனிதர் உணர்ந்து கொள்ள..இது மனித காதல் அல்ல.. நமக்கு மட்டும் சொந்தமானது…!!!!

அன்பனே தாளாட்டும் கண்ணனே நீ தானே தெரியுமா??

கள்வனே என் தாயில் நீயும் பாதியேஅதுவும் உனக்கு புரியுமா??

அவளின் பாட்டில் அப்படியே பூரித்து போய் அவளை இறுக அணைத்து கொண்டான் வருண்.

” ஐ லவ் யூ..! லவ் யூ சோ மச் கண்ணம்மா..! ” என்றவன் அவள் முகம் முழுக்க முத்தம் வைக்க விரும்பிய அவனுள் கரைந்து போனாள் கண்மணி..!

” கண்மணி “

“ம்ம்ம் “

“என்ன பாரு “

“எதுவா இருந்தாலும் சொல்லுங்க எனக்கு காது கேக்கும் “

ஏனோ அவன் முகம் பார்க்கவே வெட்கம் பிடுங்க தின்றது அவளிற்கு..!

” அடிபாவி.. ஒரு முத்தாவுக்கே இப்படி வெட்கப்படுற.. உன்ன கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்தி கொஞ்ச கஷ்டம் தான் போலயே “

அதில் உதட்டை சுளித்து அவனை முறைத்து பார்த்தவள்,

” என்ன வேணும் அத மட்டும் சொல்லுங்க “

” அதுவா எனக்கு.. ” என்றவன் அவளை நெருங்கி வர, உடனே அவள் பதறி அடித்து பின்னே அடி எடுத்து வைக்க  அதில் சிரித்தவன்.

” நீ நினைக்கற மாறி எல்லாம் ஒன்னும் இல்ல பயப்படாம என்கிட்ட வா.. அன்னைக்கு ஒரு தடவ எனக்கு பண்ணி கொடுத்தியே ஸ்வீட் லஸ்ஸி..! அது வேணும் “

” என்னது லஸ்ஸியா? அது எல்லாம் இப்போ சாப்பிட கூடாது “

” இல்ல எனக்கு வேணும் “

” அச்சசோ இது என்ன வம்பா போச்சு..! ஆதி அது எல்லாம் முடியாது. “

“ஹேய்.. ஹேய்.. ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் என் செல்லம்ல பட்டூல ஒரே ஒரு வாட்டி ” அவன் கன்னம் கொஞ்சி கேட்க வேறு வழி இல்லாமல் தலையசைத்து வைத்தாள் அவள்..!

யாரு சொன்னது சிணுங்களும், கொஞ்சலும், கெஞ்சலும் பெண்களுக்கே உரியது என்று..?

 அவர்தம் துணைகளிடம் மட்டுமே வெளிப்படும் ஆண்களின் குழந்தை தனம் பேரழகு..! 

”  ஏன் என் கிட்ட முன்னாடியே சொல்லல..? ” ஆற்றாமையோடு கேட்டாள் அஷ்வினி அவனின் இத்தனை வருட காதலை அறிந்தவளிற்கு மனதில் கணம் கூடி போனது.

” சரி.. விட்டு அதான் இப்போ சொல்லிட்டேன்ல.. “

” இல்ல என் தப்பு தான். முன்னாடியே உங்கள கவனிச்சிருக்கணும் லூசு மாறி இருந்துட்டேன் ” என்றவள் கண்ணை கசக்க அதில் பதறியவன்.

” அடி ஆத்தா..! மறுபடியும் மொதல்ல இருந்து, பழைய குருடி கதவ தொறடினு ஆரம்ப்பிச்சறாதா..! என்னால சத்தியமா முடியாது. எல்லாமே நம்ம நெனச்ச மாறி நடக்காது பஞ்சுமிட்டாய், அத மொதல்ல புரிஞ்சிக்கோ..! என்ன நடந்தாலும் நன்மைக்கேனு அக்சப்ட் பண்ணிட்டு முன்னேறி போய்ட்டே இருக்கனும், எல்லாத்துக்கும் காரணம் தேடிட்டு இருந்தா வாழ்கையே முடிஞ்சிரும்..!

சோ இப்போ இந்த நிமிஷ சந்தோசத்துக்கு மட்டும் தான் முக்கியத்துவம் கொடுக்கனும் ஓகே!? “

என்றவன் அவள் முகத்தை கையில் ஏந்தி பெருவிரலால் அவள் கண்ணீரை துடைத்து விட்டு.

” இனி எதுக்கும் எப்பவும் அழ கூடாது..!”

 அதற்கு ம்ம் கொட்டியவள் புன்னகையோடு அவன் தோளில் தலை சாய்த்து கொண்டாள்.

” நிஜமா தான் சொல்லுறியா டா? ” கார்த்தி கவலையாக கேள்வி கேட்க தீர்க்கமாக தலையசைத்தான் வருண்.

இன்று தான் வருணிற்கு ஆபரேஷன்.

கண்மணி எழுவதற்கு முன்னயே ஹாஸ்பிட்டலிற்கு சென்று அட்மிட் ஆக முடிவு செய்திருந்தான் வருண் எங்கே அவளை பார்த்தால் உடைந்து விடுவோமோ என்ற பயம் அவனிற்கு..!

“கோவப்படுவா தெரியும். கண்டிப்பா நா நல்லபடியா திரும்பி வந்து அவள சமாதானம் படுத்துவேங்கற நம்பிக்கை எனக்கு இருக்கு “

காலை எழுந்த கண்மணிக்கு கார்த்தி தான் விஷயத்தை சொன்னான். ஆர்ப்பாட்டம் ஏதும் செய்யாமல் அமைதியாக அதை கேட்டு கொண்டவளை ஹாஸ்பிட்டலிற்கு அழைத்து சென்றான்.

” ஆப்ரேஷன் நல்லா படியா முடிஞ்சிருச்சு ஒரு வாரம் அப்சர்வேஷன்ல வெச்சிருப்போம் அப்றம் நீங்க டிஸ்சார்ஜ் பண்ணி கூட்டிட்டு போகலாம் “

வருணிற்கு சாப்பாடு, துணிமணி என எல்லாம் பாத்து பாத்து செய்தவள் மறந்தும் கூட அவனை ரூம்மிற்கு வந்து பார்க்கவில்லை. கார்த்தியும் எத்தனை முறை அழைத்து பார்த்து விட்டான். ஒரேடியாக மறுத்து விட்டாள்.

அன்று வருணின் டிஸ்சார்ஜ், ஹாஸ்பிட்டலிற்கு வராமல் கோவிலிற்கு சென்று விட்டாள் கண்மணி. வீட்டிற்கு வந்தவள் பூஜை அறையில் கோவில் பிரசாதத்தை வைத்து விட்டு வருணின் அறைக்கு சென்றாள். ஒரு வாரம் கழித்து இப்பொழுது தான் அவன் முகத்தையே பார்க்கிறாள்..!  ஒரு வாரமாக அடைத்து வைத்திருந்த கோவம்  அனைத்தும் வெடித்து சிதறியது அவள் வார்த்தையில்,

“என்கிட்ட ஒரு வார்த்த சொல்லிட்டு போகனும்னு கூட தோனலைல..! ஏன்டா எப்ப பாத்தாலும் என்ன அழுக வெக்கறதுலையே குறியா இருக்க!? “

” என்னது டாவா!? “

” ஆமா டா டால்டா மண்டையா, எனக்கு வர ஆத்தரத்துக்கு உன்ன அப்படியே..!!” அவள் வார்த்தையில் இருந்த கடினம் அவள் தொடுகையில் இல்லை. பூவை போல் அவனை கையாண்டு மென்மையாக அவனை அணைத்து கொண்டாள்.

” இதுக்கு எல்லாம் சேத்தி வெச்சி பனிஷ்மென்ட் இருக்கு நியாபகம் வெச்சிக்கோங்க. எங்க அவன் அந்த வளந்து கெட்டவன்..! ஃப்ரண்ட்டுக்கு நல்ல புத்தி சொல்லனும்னு அவனுக்காச்சி தோணுச்சா? இருக்கு உங்க ரெண்டு பேர்த்துக்கும்..!”

அவள் பேச்சில் சிரித்தவன், ” சரியான சண்டகாரி ” என்றான் அவள் தலை கோதி..!

ஆம் உண்மையில் அவனின் சண்டகாரி தான் அவள்..! சண்டையிட்டு சண்டையிட்டு அவனை காதலித்தும், வாழவைத்தும் கொண்டிருக்கிறாள்.

ஐந்து வருடங்களுக்கு பிறகு..

மழை சடசடக்க ஆரம்பிக்க, மாடியில் காய போட்டு இருந்த துணியை எடுத்து வர  ஓடினாள் அஷ்வினி. வேகமாக துணியை உருவி கொண்டு இருந்தவளை பின் இருந்து அணைத்தது ஒரு கரம், யார் என்றும் தெரிந்ததும் முகம் புன்னகை பூத்தது.

“ம்ம்ச் விடுங்க மழை வருது துணி எடுக்கனும் ” என அவள் நெளிய,

“அதுலாம் அப்றம் எடுத்துக்கலாம் பஞ்சுமிட்டாய்..! ” என்றவன் அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்து கொண்டான்.

” மிஸஸ்.மாதவன்..!”

“ம்ம் “

“சந்தோசமா இருக்கீங்களா!?”

“ம்ம் “

“ஐ லவ் யூ..!”

“ம்ம் “

“அடியே.. என்ன எல்லாத்துக்கும் வெறும் ம்ம் தானா? “

அவள் இடை சுற்றி இருந்த கரைத்த விடுவித்து கொண்டவள். அவன் முகம் பார்த்து சட்டென அவன் கன்னத்தில் ஒரு முத்தமிட்டு கீழே ஓடி விட்டாள்.

” ஓய்.. பஞ்சுமிட்டாய் இதுலா பொங்கு நில்லுடி..!” அவள் சென்ற பாதையையே பார்த்து கொண்டிருந்தான் அவன். தன் வாழ்கையை அவனாலேயே நம்ப முடியவில்லை..! ஒரு காலத்தில் கனவாய்,  காணல் நீராய் தோன்றிய அனைத்தும் இப்பொழுது நிஜமாய் நடந்து கொண்டிருக்கிறது..!

எப்படியோ ஒரு வழியாக அவனின் கேட்டரிங் பிஸ்னஸை தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வர. இதோ ஆறு மாதங்களுக்கு முன்பு தான் இருவீட்டாரின் சம்மதத்தோடு அவர்களின் திருமணம் நடந்தது. எந்த ஊர் அஷ்வினியை ராசி இல்லாதவள் என பழித்தார்களோ அதே ஊரிலேயே அவளின் பேரிலேயே மற்றோர் பிரான்ச்சை  ஆரம்பித்து லாபகரமாக நடத்தி வருகிறான்..!

ஆசைப்பட்ட தொழில்

ஆசைப்பட்ட வாழ்கை என அனைத்து கூடி வர நிம்மதியான நிறைவோடு இருக்கிறான் மாதவன். நடக்கும் பொழுது தான் அனைத்தும் நடக்கும் என்பதற்கு சிறந்த எடுத்து காட்டு அவனே..!!

தன் முன் நின்ற துருவை முறைத்து கொண்டிருந்தாள் சாத்வி.

அய்யயோ மறுபடியும் சண்டையா!? அப்படினு யாரும் ஷாக் ஆக வேண்டாம், இது சண்டை தான் ஆனா செல்ல சண்டைங்கோ..! புரிலயா? நம்ம துருவ்வுக்கு ப்ரோமோஷன் வந்துருச்சி ஆஃபிஸ்ல இல்ல லைப்ல..! எஸ்.. எஸ்.. நீங்க நினைக்கறது கரெக்ட் தான் சாத்வி மறுபடியும் கன்சீவா இருக்கா..! டாக்டர் வேற ட்வின்ஸ்னு சொல்லிட்டாங்களா ஒரே டபுல் டமாக்கா தான் போங்க, சரி வாங்க அவ ஏன் முறைக்கறானு போய் பாத்துட்டு வந்துருவோம்.

“இப்போ தானே மாதுளை ஜூஸ் குடிச்சேன் மறுபடியும் சாத்துகுடி ஜூஸ் கொடுக்கறீங்க என்னால முடியாது”

“மாதுளை ஜூஸ் குடிச்சி இருபது நிமிஷம் ஆச்சு..! அதுலாம் குடிக்கலாம் குடி..!”அவன் அதட்ட சிணுங்கலாய் அவனிடம் இருந்து குவளையை பெற்று கொண்டாள் சாத்வி.

இப்பொழுதெல்லாம் வார இறுதி நாட்களை நிச்சயமாக குடும்பதிற்கு என ஒதுக்கி விடுகிறான் துருவ்..! அது ஒன்றே போதாதா சாத்வியை மகிழ்விக்க? என்றும் பதினாறு போல் அவர்கள் வாழ்வில் எப்பொழுதும் காதலும் இனிமையும் நிறைந்திருப்பதை பார்க்க கண் இரண்டு போதவில்லையப்பா..!!

இவங்க இருக்கட்டும் எங்க நம்ம மெயின் பீஸ்ஸ கானோ? அதாங்க நம்ம கண்மணி..!

அவ வீட்டு கிட்சேன்ல என்னமோ உருட்டிட்டு இருக்கா என்னனு போய் பாப்போம் வாங்க..!

” பெரிம்மாஆஆ… அம்மா ஜூஸ்ஸ கீழ கொட்டறாங்க சீக்கிரம் வாங்கஆஆ.. “

கண்மணியின் மூன்று வயது மகன் அபிநந்தன் கத்திய கத்தில் திடுக்கிட்டு அவள் பார்க்க, அதற்குள் மொத்த குடும்பமும் அங்கு வந்துவிட்டது.

டாக்டர் அறிவுரைத்தது போல் மொத்த குடும்பமும் ஹெல்தி லைப் ஸ்டைலிற்கு மாறி இருந்தனர். ஆனால் இந்த அருகம்புல் ஜூஸ் மட்டும் கண்மணிக்கு பிடிக்காத ஒன்று…! யாரும் பார்க்கா வண்ணம் அதை கொட்டிவிடலாம் என அவள் நினைக்க இதோ போட்டு கொடுத்து விட்டான் அவளின் சீமந்த புத்திரன்..!

தவறு செய்து மாட்டி கொண்ட பள்ளி சிறுமி போல் அவள் முழித்து நிற்க, அவளை காப்பாற்றி விட்டார் அவளின் மாமியார்.

“அபி கண்ணா, நீ கேட்டையில்ல ஐயர்ன் மேன் பொம்ம தாத்தா வாங்கிட்டு வந்தாங்க அத நீ பாக்கலயா?”

” அப்படியா…!?அண்ணா வா போலாம் ” என்றவன் க்ருஷையும் அழைத்து கொண்டு ஓடி விட, அப்பொழுது தான் அவளிற்கு மூச்சே வந்தது. ஏன் என்றாள் அவள் மகன் செய்யும் காரியம் அப்படி, ஏதாவுது தவறு செய்து மாட்டி விட்டோம் என்றால் பனிஷ்மென்ட் செய்தே ஆக வேண்டும் என அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிவிடுவான்.

அன்று அப்படி தான் கண்மணியை இருபது தோப்புகரணம் போடசொல்லி விட்டான்.

” என்ன மாட்டிகிட்ட போல.. ” வருணின் கேலி பேச்சில் அவனை முறைத்தவள்.

” நா ஒன்னும் மாட்டிக்கல.. சும்மா அந்த ஜூஸ்ஸ சிங் பக்கத்துல்ல வெச்சிட்டு தான் நின்னுட்டு இருந்தேன். அதுக்குள்ள கத்தி கூப்பாடு போட்டுட்டான் உங்க புள்ள, உங்கள மாறி அமைதியா கியூட்டா ஒரு குட்டி பாப்பா வரும்னு பாத்தா என்ன மாறியே பொறந்திருக்கான் ரெட்ட வாலு..!” அவள் நொடிந்து கொள்ள அவளின் பேச்சில் சிரித்தவன்.

“அப்போ இன்னொரு பாப்பா பெத்துக்குவோமா?”

“அதுவும் இவன மாறியே வாலு தனம் பண்ணுச்சினா?” நிஜமாக அவள் கேள்வி கேட்க, 

“அப்போ அதுக்கு அப்றமும் இன்னொனு பெத்துக்க வேண்டியது தான்..!” என்றவன் அவளை இடைவளைத்து அவனோடு இறுக்கினான்.

” என்ன ஓகேவா சொல்லு ” என்றான் அவள் நாடி பிடித்து.

எவ்வளவு பெரிய துன்பம் வந்தாலும் தாங்கி கொள்ள முடிந்த அவளால், ஏனோ அவனின் விழி வீச்சை மட்டும் இன்னும் தாங்கி கொள்ள முடிவதில்லை..!தலை தாழ்த்தி கொண்டவளிடம் அவன் வம்பை தொடர, 

” ஹா.. மதுக்கா இதோ வந்துட்டேன் ” என கூப்பிடாத அக்காவை தேடி சட்டென அவனிடம் இருந்து விடுப்பட்டு ஓடி விட்டாள் அவள்..!

குடும்பம் இல்லை என ஏங்கியவளிற்கு இன்று அழகிய பூஞ்சோலையாய் ஒரு குடும்பம் அமைய, தினம் பூக்கும் பூவாய் பூத்து குலுங்கியது அவள் வாழ்வு..!

தீரா துயரில் தத்தளித்த வருணின் வாழ்வின் நீங்காத நிலவொளி அவள்.

இனி என்றும் அவர்கள் வாழ்வில் வசந்தம் மட்டுமே நிலைக்கட்டும் என வாழ்த்தி விடை பெறுவோம்.

இந்த மனித பிறவி பெண் அன்பினில் அடங்கிடும்..!

            ❤️சுபம் ❤️

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
39
+1
1
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்