Loading

  1. அத்தியாயம்-03

     அந்த அறைக்குள் நுழைந்தவளுக்கு ஆச்சரியத்தில் கண்கள் விரிந்தது. அந்த மாளிகை வெளி புறத்தில் வெள்ளை மற்றும் தங்க நிறத்தில் அலங்கரிக்கப்பட்டு இருக்க உள்ளையோ சந்தன வெள்ளை மற்றும் தங்க வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்டு கண்களை சாந்தம் படுத்தும் வகையில் இருந்தது.

   ஆனால் அதற்கு அப்படியே நேர்மாறாக இந்த அறையில் உள்ள அலங்காரம் அனைத்தும் கருப்பு மற்றும் சாம்பல் நிறத்தால் நிறைந்து இருந்தது. கொடுக்கலாம் அந்த நிறத்திற்கு ஏற்றபடியே அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. தரையின் டைல்ஸ் முதற்கொண்டு சீலிங் வரை அந்த நிறத்தினாலே நிரம்பி இருந்தது.

     அதுவும் ஒரு வித அழகாக இருந்தாலும் இந்த அறையில் இருப்பவர்களின் ரசனை மாறுபட்டதாக இருப்கும் என்பதை  காட்டும் வகையில் அங்கு இருக்கும் பொருட்கள் அனைத்தும் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது.கண்ணை உறுத்தாத வகையில் நேர்த்தியாக இருந்த அந்த அறையை டிசைன் செய்தவர். கண்டிப்பாக மிகுந்த ரசனை மிக்கவராக தான் இருந்திருப்பார்.
தான் வந்த விஷயத்தையும் மந்து அறையின் அலங்காரத்தை விழி விரித்து பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு மீண்டும் உடையும் சத்தம் கேட்டதும் தான் உணர்வு பெற்றாள்.

    அந்த ஹாலிலே  இரண்டு அறைகள் வலப்பக்கமும் இரண்டு அறைகள் இடப்பக்கமும் இருந்தது.  அதில் இரண்டாவது உள்ள அறையில் இருந்து சத்தம் வருவதை உணர்ந்து கதவில் கையை தான் வைத்திருப்பாள். அவளின் இடப்புறம் இருந்த சுவரில் உடைந்த கண்ணாடிக் குடுவையே அதிர்ச்சியுடன் மூச்சு விட கூட மறந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.அதன் பிறகு அறை எங்கும் மயான அமைதி நிலவ ஒரு சீரற்ற மூச்சுக்காற்றின் சத்தம் தான் கேட்டுக் கொண்டிருந்தது.

   தானாக ஆடிய கை கால்களை சமநிலைப்படுத்தி எதிரே பார்த்தவளுக்கு இன்னும் பயம் மனதை கவ்விக் கொண்டது. கருப்பு நிற ஷார்ட்ஸ் ஆம்கட் பனியன் அணிந்திருந்தவனின் திண்மையான உடல் கட்டு அவன் கடுமையான உடல் பயிற்சி செய்பவன் என்பதை பறைசாற்றிக் கொண்டிருந்தது.

   முகம் முழுவதும் மறைக்கும் மீசை தாடியுடன் இருந்தவனின் கண்களோ முழுவதும் சிவந்து இருந்தது. தோள்பட்டை வரை வழிந்த கேசத்தை ஒரு ரப்பர் பேண்டில் அடக்கி இருந்தான். அவனைப் பார்த்ததும்  கை கால்கள் தானாக நடுங்க ஆரம்பிக்க அவனோ அழுத்தமான நடையுடன் அவளை நோக்கி வந்து கொண்டிருந்தான்.

   அவன் வரும் வழி அனைத்தும் உடைந்த கண்ணாடித் துகள்கள் சிதறி இருந்தது. அவன் காலில் அணிந்திருந்த பூட்ஸ்சினால் அவனின் பாதம் தப்பித்தது இல்லை. எனில் தரை முழுவதும் ரத்த களரியாக மாறி இருக்கும்.

     சார் என்று தான் கூறியிருப்பாள் அடுத்த நிமிடமே வேகமாக சுவற்றில் அவளை சாய்ந்தவன். கூர்மையாக அவளை பார்க்க அவளோ இன்னும் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தாள். அவனின் சிவந்த விழிகள் பயத்தை உண்டு பண்ண அவனை பார்க்காமல் வேறு புறம் திரும்ப அவனோ அவள் கழுத்தில் கையை பதித்தவன். அதில் அழுத்தத்தைக் கொடுக்க ஹக் என்ற சத்தத்தோடு தன் மூச்சை நிறுத்தியவள்.

  அடுத்த நிமிடமே “சார் என்னை ஒன்னும் பண்ணிடாதீங்க நான் தெரியாமல் வந்துட்டேன்” என கதற ஆரம்பிக்க கூர்மையான பார்த்துக் கொண்டிருந்தவன்.அவளை அப்படியே விட தடுமாறி கண்ணாடி உடைந்த இடத்தில் விழுந்தாள்.

இறுதி நொடியில் சூதாரிதிருந்ததால் கை மூட்டில் மட்டும் லேசான கீறல் இருக்க வலியும் ரத்தத்தை தான் கண்கள் கலங்க பார்த்துக் கொண்டிருந்தாள். இதை பார்த்த பிறகாவது தன்னை விட்டு விடுவான் என பார்க்க அவனோ எங்கையோ பார்த்தபடி புருவம் சுருக்கி ஏதோ யோசனையில் இருந்தான்.

    அப்படியே ஓடி விடலாம் என கதவின் அருகில் செல்ல போனவளின் கரத்தைப் பற்றி தடுத்தவன். யார் நீ என்று அதட்ட “நான் மதிவதனி. யாகவி மேம் குழந்தைகளை டேக்கர் பண்ணிக்க வந்திருக்க நர்ஸ் “என்று குரல் நடுங்க கூறினாள். இவ்வளவு நேரம் கோபத்தில் சிவந்திருந்த அவன் முகம் ஒரே நொடியில் இளகி மீண்டும் இறுக்கியது.

   அருகில் அவனின் முகத்தையே இவள் ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருக்க அவனும் எங்கோ பார்த்தபடி அவளை போ என்று தள்ளிவிட மீண்டும் கண்ணாடியில் விழ போனவள்.. தன்னை நிலைப்படுத்திக் கொண்டு செல்லப் போக ஏதோ யோசனையில் “சார் கீழே கண்ணாடியா இருக்கு.நான் வேணா கிளீன் பண்ணிடவா” என்று கேட்க அவளை கடுமையாக முறித்தவன். ” நீ நர்ஸ் தானே இல்லை வேலைக்காரியா கெட் அவுட்”என்று கத்த அடுத்த நிமிடமே அடித்து பிடித்துக் கொண்டு அங்கு இருந்து சென்றாள்.

   வேலை ஆட்களோ அவளை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தார்கள்.பின்னே போனவள் எவ்வித சேதாரமும் இல்லாமல் திரும்பி வந்ததை கண்டு அனைவருக்கும் ஆச்சர்யம் தான். அவனின் அறைக்கு சென்றால் ஆண் பெண் சேதமின்றி அனைவருக்கும் அடி பலமாக தான் விழும் அறைக்கு வந்த மதிக்கோ ஏதோ நரகத்திலிருந்து தப்பித்து வந்தது போல் இருந்தது.

    அந்த சிவந்த கண்களை போட்டு அவன் மிரட்டும் போது உயிரே போவது போல் பயம் தொற்றிக் கொள்கிறது. இனி அவன் அறைப்பக்கமே செல்லக்கூடாது என்ற முடிவு எடுத்தவளுக்கு அவளின் கையில் வழிந்த ரத்தம் நினைவு வர மருந்திட்டு கட்டியவளுக்கு அப்போதுதான் அவன் கையிலும் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது நினைவு வந்தது.

   யாகவி அறைக்கு சென்று பார்க்க குழந்தைகளுடன் யாகவியும் நன்றாக உறங்கிக் கொண்டிருக்க அவர்களை தொந்தரவு செய்யாமல் அங்கேயே அமர்ந்தவர்களுக்கு மனம் கேட்காமல் மீண்டும் அவ்வறைக்கு சென்றாள். இம்முறை அறை பூட்டி இருக்க சரி அவரையே மருந்து போட்டு பாரு என செல்ல போனவள்.அறையில் இருந்து உடைந்த பொருட்களை அள்ளிக் கொண்டு ஒருவர் செல்வதை கண்டு புருவம் சுருக்கி யோசித்தவள். அடுத்த நிமிடமே அந்த அறைக்குள் கையில் ஃபர்ஸ்ட் எய்ட் கிட்டுடன் நுழைந்து இருந்தாள்.

    அரை முழுவதும் சுத்தமாக திருத்தி இருக்க தரையில் புஷப்ஸ் எடுத்துக் கொண்டிருந்தவனுக்கு கேட்ட மெல்லிய கொலுசு ஒலியும் ஒரு வித வித்தியாசமான நறுமணமும் அது  யார் என்பதை உணர்த்த அடுத்த நிமிடமே “கெட் அவுட் யூ இடியட் யாரை கேட்டு பர்மிஷன் இல்லாமே என்னோட ரூம்க்கு வந்த” என்ற கர்ஜனை அந்த அறை முழுவதும் எதிரொலிக்க அவளோ ரத்தம் வழியும் அவனின் கரங்களை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

   அந்த இனிய மணம் இன்னும் அறையில் இருப்பதே அவள் இன்னும் தனது அறையை விட்டு செல்லவில்லை என்பதை உணர்த்த புஷ்அப் எடுப்பதை நிறுத்திவிட்டு வேகமாக எழுந்தவன். அவளை நோக்கி செல்ல போக வேலையாள் வந்து சுத்தம் செய்ததால் சிறிது நகர்த்தி போட்டு இருந்த கட்டிலின் காலிலே இடித்து அப்படியே மண்டியிட்டு அமர்ந்தான். அதில் பதறி அய்யோ சார் என்று அவன் அருகில் சென்று அவனைத் தூக்கப் பார்க்க அதில் கோபம் கொண்டு  அவளை தள்ளி விட்டதில் இரண்டு அடி தள்ளி போய் விழுந்தாள்.

   ” யூ இடியட் டோன்ட் டச் மீ”என்று எங்கோ பார்த்து கத்திக் கொண்டிருந்தவனை கண்டவளுக்கு அப்போதுதான் அவன் நிலை புரிய சார் என்று குரலில் வலிகளை ஒன்று திரட்டி அவள் கூற அந்த குரலில் என்ன கண்டானோ அப்படியே மெத்தையில் அமர்ந்து விட்டான். இவளும் சிதறி கிடந்த மருத்துவ பொருட்கள் அனைத்தையும் ஃபர்ஸ்ட் எய்ட் கிட்டில் போட்டவள். சிறிது தயக்கத்துடன் அவன் அருகில் சென்றாள்.

    அவள் மெல்லிய கொலு சொலியில்  அவள் எந்த புறம் இருந்து வருகிறாள் என்பது தெரிந்து அவளை நோக்க அவனின் நிலை புரிந்தாலும் அவன் பார்வை அவளை ஏதோ செய்ய தயக்கத்துடன் அவனை நெருங்கியவள்.ஃபர்ஸ்ட் எய்ட் பாக்ஸை மெத்தையில் வைத்து விட்டு அவன் கைகளை எடுத்து சுத்தம் செய்ய ஆரம்பிக்க அதிசயமாக எதுவும் கூறாமல் அமைதி காத்தான்.

    இரண்டு கையிலும் சிறு சிறு கண்ணாடி துகள்கள் கீறி இருக்க அனைத்தையும் சுத்தம் செய்து மருந்து கட்டியவள். டிடி இன்ஜெக்ஷனை எடுத்து அவனைப் பார்த்தபடியே “சார் இன்ஜெக்ஷன் போடணும். போட்டுவிடவா” என மென்மையான குரலில் கேட்க  இவ்வளவு நேரம் அமைதியில் இருந்தவனுக்கு கோவம் எங்கிருந்துதான் வந்ததோ அவளை பிடித்து இழுத்து கதவின் வெளியே தள்ளி விட்டான்.

   வேகமாக இழுத்து வந்திருந்தாலும் தள்ளிவிடும் போது நிலைப்படுத்தியே தள்ளி விட்டிருந்ததால் மெதுவாகவே விழுந்திருந்தாள். அந்த சூழலில் இருவருமே அதை கவனிக்கவில்லை. “இன்னொரு தடவை என் ரூமுக்கு வந்த.மறுபடியும் ரூமை விட்டு உயிரோட போக மாட்ட” என கதவை அரைத்து சாற்றினான்.அதை கேட்டு ஒரு நொடி அதிர்ந்தவள்.அடுத்த நிமிடமே கீழே விழுந்து கிடந்த ஃபர்ஸ்ட் அய்ட் கிட்டை கூட விட்டு விட்டு தனது அறைக்கே ஓடிவிட்டாள்.

    இங்கு அறையில் இருந்தவனுக்கு தன்னை நிலைப்படுத்திக் கொள்ளவே முடியவில்லை.கால் இடித்ததிலே கட்டல் எப்பொழுதும்  இருக்கும் இடத்தை விட்டு சிறிது தள்ளி இருப்பதை உணர்ந்தவன். பிடிக்கவில்லை என்றாலும் கைகளை முன்னால் நீட்டி தடவியபடியே கட்டலை அடைந்து அதில் அமர்ந்து கொண்டான்.

   தன் நிலையை எண்ணி கழிவிரக்கத்தில் தோன்றிய கோபத்தில் கத்த ஆரம்பித்தான். தலைவலி மண்டையை பிளக்க தலையை அழுத்த கோதி கொண்டிருந்தவனுக்கு தன்னை நிலைப்படுத்தி கொள்ளவே முடியவில்லை. கோவம் ஆற்றாமை வலி அனைத்தும் மனதை சூழ்ந்திருக்க அப்படியே மெத்தையில் சாய்ந்து உறங்கிப் போனான்.

   தனது அறைக்கு செல்லப் போனவளுக்கு பக்கத்து அறையில் கேட்ட குழந்தைகளின் சினுங்களில் அங்கு சென்றாள். குழந்தைகள் இரண்டும் எழுந்து கை கால்களை ஆட்டிக் கொண்டிருக்க யாகவியும் எழுந்திருந்தாள். அவளின் மெடிக்கல் இஸ்யூ தெரியும் என்பதால் குழந்தைகள் இருவரையும் அவள் அருகில் படுக்க வைத்து முதலில் பசி ஆற்றினார்கள்.

   பசியில் எழுந்ததால் குழந்தைகள் இருவரும் நீண்ட நேரம் பால் குடிப்பார்கள் என்பதை உணர்ந்த மதியும் இரண்டு டம்ளர்களில் மாதுளை ஜூஸ் கொடுக்க அதை வாங்கி பருகியதும்தான் யாகவிக்கும் சிறிது தெம்பு பிறந்தது. இருவரும் மெல்லிய குரலில் கதை பேசியபடியே அந்த பொழுதை கழித்தார்கள்.

    யாகவியின் அறிவு மிகுந்த ஆச்சரியத்தை அளித்தது.பல துறைகளில் பல விஷயங்களை எளிதாக கூறினாள். ஆனால் யாகவிக்கோ அதற்கு சமமான அறிவுடன் இருந்த மதிவதனியையும்  ஆச்சரியமாக தான் பார்த்தாள். அவளின் உள் மனமோ இவ்வளவு அறிவுடன் ஒரு நர்சா என்று நினைக்காமல் இல்லை.

     குழந்தைகள் இருவரையும் பெட்டில் படுக்க வைக்க அவர்களும் கைகளை ஆட்டிக்கொண்டு மழலை குரலில் பேசிக் கொண்டிருக்க அதை சிரிப்புடன் சிறிது நேரம் நோக்கிக் கொண்டிருந்த யாகவியை பார்த்த மதிவதனிக்கு மனம் நிறைந்திருந்தது.

     ஓகே யாகவி நீங்க பிரஷ் ஆயிட்டு வாங்க என கூற பெட்டி விட்டு எழுந்தவள்.நடக்க சிரமப்பட அவளை தாங்க வந்தவலளை கண்டு யாகவியின் முகம் சற்றென்று இருகியது. ஐ மேன்ஜ் திஸ் என்று கூறியபடியே நொண்டிக்கொண்டு நடக்கும் அவளை வேதனையுடன் பார்த்தாள்.ஒரு கால் அப்படியே வளைந்து இருக்க பாரம் மொத்தமும் மறுக்காலில் போட்ட படி அந்த வளைந்த காலுக்கு அழுத்தம் தராமல் நடந்து சென்றாள்..

    குழந்தைகள் இருவரும் சிசேரியன் மூலமாகவே பிறந்து இருந்தனர்.அதுவே அவளுக்கு சிரமம் என்றால். குழந்தை பிறந்த 15வது நாளில் தையல் போடப்பட்டிருந்த இடம் முழுவதும் இன்பெக்ஷனால் பாதிக்கப்பட்டு மீண்டும் பிரித்து தையல் போடும்படி  ஆகிற்று. அதில் மிகவும் சிரமப்பட்டு இருக்கிறாள் என்பது அவளின் உடல் மெலிவும் கண்களில் இருந்த கருவளையம் காட்டிக் கொடுத்தது.

    அவளின் நினைவிலே இருந்தவள். குழந்தைகள் சத்தம் எழுப்பி அவளின்  கவனத்தை கவர அவர்களின் அருகில் அமர்ந்து யாகவியின் மெடிக்கல் ரிப்போர்ட்டை பார்த்தவளுக்கு அவ்வளவு திருப்தியாக இல்லை. அவளின் உணவு பழக்கங்கள் எடுத்துக் கொள்ளும் மருந்துகள் எதுவும்  திருப்திகரமாக இல்லாததால் அதை மாற்றி சில மருந்துகளை எழுதியவள்.

   அங்கிருந்த பெல்லை அடிக்க அடுத்த நிமிடமே வேலையாள் வந்து நின்றார். அவரிடம் சில மெனுவை கொடுக்க அவரோ தயங்கப்படி நிற்பதை கண்டு அதட்டல் குரலில் கூற அவளின் தோரணை அப்படியே மாறி இருப்பதை ஆச்சரியமாக பார்த்த அந்த வேலையாலோ அவள் கட்டளை குரலை மீற முடியாமல் அதை செய்ய சென்றார்.

    அதன்படியே அடுத்த பத்து நிமிடத்தில் உணவு வந்துவிட அனைத்தையும் அங்கிருந்த இரண்டு ஆள் அமர்ந்து உண்ணும் டைனிங் டேபிளில் எடுத்து வைத்தாள். யாகவியோ டேபிளில் இருக்கும் உணவுகளை ஆச்சரியமாக பார்த்தாள். இரண்டு ராகி சப்பாத்தி அதற்கு தொட்டுக் கொள்ள காய்கறிகள் மற்றும் பூண்டு நிறைய போட்ட கடாய் கிரேவி.

   மறுபுறம் சிறு கப்பில் ஃப்ரூட் சாலட்டும் இன்னொரு புறம் வெஜிடபிள் சேலட்டும்  அடுக்கப்பட்டிருந்தது.ஒரு டம்ளர் முழுக்க பால் இருக்க அதை ஆச்சரியமாக பார்த்தபடியே அமர்ந்தவள்.நீ உண்மையா நர்சா ஒரு நியூட்ரிஷன் மாதிரி டயட் சொல்ற என்று கூறுபடியே சாப்பிட ஆரம்பிக்க இவளுக்கு தான் திக் என்று இருந்தது.ஆனால் அதை நொடியில் சமாளித்தவள் வேறு ஏதோ கதைகள் பேசவும் யாகவியும் அதில் மூழ்கிப் போனாள்.குழந்தைகள் மீது இருவரும் ஒரு கண்ணை வைத்து பேசிக்கொண்டு இருக்க ஹாலிலோ அம்சவள்ளியின் குரல் ஓங்கி ஒலித்தது.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
16
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்