அத்தியாயம் ஐந்து
சித்தின்அறை :
உறங்க படுத்தவன் கண்களை நித்திரை தழுவ மறுக்க புரண்டு புரண்டு படுத்தான் . எப்போதும் மேல் சட்டை இல்லாமல் உறங்குவான் இன்று மகி இருப்பதால் டீ சர்ட்டை கலட்டாமல் படுக்க , எங்கே தூக்கம் தான் வரவில்லை . பொருத்து பார்த்தவன் பின்பு முடியாமல் மகியை பார்க்க ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் . மதியம் தூங்கியும் இப்போதும் மகி தூங்கிக் கொண்டு இருந்தாள் .
‘ இவளுக்கு எப்படி தான் இப்படி தூக்கம் வருதோ ‘ என்று மனதினுள் நினைத்தவன் , தன் டீ சர்ட்டை கழட்டி விட்டு மறுபடியும் ஓரத்தில் படுத்தவன் கால் மணி நேரத்தில் உறங்கி விட்டான் . நன்றாக நாளாக மாறுமா !!!..?
___
யாருக்காகவும் காத்திருக்க விரும்பாத வெய்யோன் நிலவை முழுங்கி தன் கதிர்களை பரப்பிக்கொண்டு வெளியே வந்தாள் . மகியின் காஃபி நிற விழிகளை பார்க்க ஆசைப்பட்டு சித் அறையின் சன்னல் வழியாக தன் கதிர்களை நேராக மகியின் முகத்திலையே படர விட , அவளும் வெய்யோனை அதிக நேரம் காக்க வைக்காமல் தனது காஃபி நிற விழிகளை திறந்தாள் . கண்ணை கசக்கியவள் மிக அருகில் சித் தான் படுத்திருந்தான் . அவன் அமைதியாக தூங்கும் முகத்தை தன்னை மறந்து இரசிக்க ஆரம்பித்தாள் . ஒரு சிரித்த முகம் கண் முன்னாடி வர , இப்பொழுது மகியின் இரசித்த முகத்தில் சோகம் குடி கொண்டது . அவன் ஹாக்கி ஸ்டைல் முடி காற்றில் பறக்க , அதை கோத நினைத்த கையை அடக்கி வைத்தாள் . ஒரு பெறு மூச்சை விட்டவள் அப்போது தான் கவனித்தாள் சித் சட்டையில்லாமல் உறங்குவதை . அவன் கட்டுக் கட்டான தேகத்தை பார்த்து மூச்சு வாங்க, இரண்டு புஜங்கள் வெடைத்துக் கொண்டு இருக்க , இனியும் தாக்குபிடிக்க முடியாமல் எழுந்து குளிக்க ஓடி விட்டாள் . குளித்து முடித்து வெளியே வந்தவள் மணியை பார்க்க அது ஆறு என காட்டியது . சரி காபியை போட்டு அனைவருக்கும் கொடுக்கலாம் என்று கீழே சென்றாள் . என்ன தான் பணம் புரண்டாலும் சித் வீட்டில் புஜை அறை மற்றும் சமைப்பதை ராதாவே செய்வார் இது அவரின் விருப்பம் . தானே சமைத்தே கொடுக்க விரும்புவார் என்பது மகிக்கும் தெரியும் . கீழே சென்றவள் பாலை காய்ச்சி காஃபி பௌடரை போடும் போது ராதா கிட்சனுள் நுழைந்தார் .
” இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கி எந்திரிக்கலாம்ல மகி ” என கூற ,
ஒரு சின்ன புன்னகையுடன் ” இல்ல அத்தை தூக்கம் வராது … எப்போதும் சீக்கிரம் எழுந்திருவேன் ” என்றவாறே காஃபி கப்பை அவரிடம் நீட்டினாள் . அவரும் ஒரு மிடக்கு வைத்து விட்டு
” சூப்பரா இருக்கு டா ”
இவள் நன்றாக தான் போடுவாள் , எனவே இவர் கூறுவது பெரியதாக தெரியவில்லை .
” என்ன அத்தை சமைக்க மார்னிங் ”
” நா சமைக்குறேன் …நீ போ ” என்றவரை பேசி பேசியே கவிழ்த்து கடைசியில் காலை என்ன சமைக்க வேண்டும் என்ற மெனுவை வாங்கினாள் . கொஞ்சம் நேரத்தில் ஜாக்கிங் சென்ற சித்தின் தந்தை வாசுதேவன் வந்து விட சிரித்த முகத்துடனே அவருக்கு ஒரு காஃபி கப்பை நீட்டினாள் . அவரும் குடித்துவிட்டு
” ஹாப்பாடா ” என பெருமூச்சு விட்டவரை என்னவென்று பார்க்க ,
” இல்ல மகி இனிமே நல்ல காஃபி குடிக்கலாம் ஹா ஹா ஹா ” என்று தன் மனைவியை கலாய்க்க அவரோ தன் கணவனை தான் முறைத்து கொண்டு இருந்தார் . பிறகு மகியும்
” அப்போ இனி நல்ல சாப்பாடும் சாப்பிடலாம் மாமா ” என்று அவளும் சேர்த்து கூற இருவரும் சிரித்தனர் . ராதா தான் முகத்தை தூக்கி வைத்து கொண்டார் . கீழே கேட்கும் சிரிப்பு சத்தத்தை கேட்டவாறே இறங்கி வந்தான் சித் . அவன் முகத்தில் தான் எள்ளும் கொள்ளும் வெடித்து . தன் வாழ்க்கையில் மகியை தினித்து விட்டு என்னை தவிர மற்ற அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பது சித்திற்கு கடுப்பாக இருந்தது .
” கொஞ்சம் சிரிச்சது போதும்னா…எனக்கு காஃபி கொண்டு வரிங்கலா அம்மா ” என்று கேட்க அனைவரும் அவரை திரும்பி பார்த்தனர் . மகியின் முகம் சட்டென்று சிரிப்பு மங்கி நின்றது . உள்ளே சென்று அவனுக்கு காபியை எடுத்து அவனிடம் நீட்ட , சித் முறைத்துக் கொண்டே வாங்கினான் . நேற்று சித் பேசியது ராதாவுக்கு கஷ்டமாக இருந்ததால் எதுவும் பேசாமல் அவர் அமைதியாக அமர்ந்து காபியை அருந்தினார் .
மகி சமைக்க சென்று விட , மற்ற மூவரும் எதுவும் பேசாமல் இருந்தனர் .
வாசுதேவன் காபியை அருந்திவிட்டு அலுவலகம் கிளம்ப அவர் அறைக்கு செல்ல , அவரை பின்தொடர்ந்தவாரு ராதாவும் சென்று விட்டார் . எப்போதும் காபி அருந்தும் நேரம் சித்தார்த் , ராதா , வாசுதேவன் மூவரும் ஏதாவது பேசி சிரிப்பர் . இன்று தான் வந்ததும் அனைவரும் எழுந்து சென்று விட்டார்களே! என அவனுக்கு வருத்தமாக தான் இருந்தது . காஃபியை குடித்த போதே உணர்ந்து விட்டான் இது மகி போட்டது என்று , இருந்தும் எதுவும் அலட்டிக்கொள்ளாமல் அருந்தி விட்டு அவனும் அவனுடைய அலுவலகத்திற்கு செல்ல அறைக்கு சென்றான் .
கொஞ்சம் நேரத்தில் அனைவரும் வந்து டைனிங் டேபிளில் ஆஜர் ஆக , மகியும் செய்த சாப்பாட்டை பரிமாறினாள் .
இருவரும் மாறி மாறி பாராட்டினார்கள் . அங்கு சித்திற்கு தான் கடுப்பாக இருந்தது. அது அவன் முகத்திலும் பிரதிபலிக்க , மகி தான் இவன் இப்படி நடந்து கொள்வது வருத்தமளித்தது . சாப்பிட்டு முடித்தவன் வேலைக்கு கிளம்ப பார்க்க
” சித் கம்பெனிக்கு கொஞ்சம் நாள் போகாத , சந்துரு பாத்துப்பான் ” என்றார் வாசுதேவன்
” அப்பா உங்களுக்கு தெரியும் தானே நா இப்போ கவர்ன்மென்ட் புராஜெக்ட் பண்ணிட்டு இருக்கேன்னு …அத வெற்றிகரமாக செய்து விவசாயிகளுக்கு தரனும் என்னால எப்படி போகாம இருக்க முடியும் ”
வாசுதேவன் ” நீ எப்போ பண்ண போறேன்னு தெரியும் , சொன்னத மட்டும் செய். ஒருவாரம் கழித்து போ… இப்போ கிளம்பி மகியை அவ வீட்டுக்கு கூட்டிட்டு போய்ட்டு வா, விருந்துக்கு கூப்டாங்க ”
சித் ” இது ஒன்னு தான் இப்போ குறைச்சல்” என மனதில் தான் சொன்னான் . எங்கு வாய் விட்டு சொன்னாள் அவன் அப்பாவிடம் திட்டு வாங்குவது . இதுவரை அவர் கூறியதை மறுத்தும் பேசாதவன் எழுந்து அவன் அறைக்கு கிளம்ப சென்றான் . வாசுதேவனும் ராதாவும் தங்கள் மகன் இவ்வாறு மகியிடம் ஒட்டாமல் இருப்பது தாங்கள் தவறு செய்து விட்டோமோ என்றிருந்தது. ஆனாலும் இருவருக்கும் பேராசை தான் . மகி அமைதியாக அவர்கள் அறைக்கு சென்ற , அவர்களும் அவர் அவர் வேலையை பார்க்க சென்றனர் .
” இப்போ உங்க வீட்டுக்கு விருந்துக்கு கூப்பிடலேனு யார் அழுதா ” என்று அவள் அறையினுள் நுழைந்ததும் சித் கத்த
” அதை மாமா சொல்லும் போது சொல்ல வேண்டியது தானே ” என்றாள் கைகளை குறுக்கே கட்டி சிறிது முறைப்புடனே, பின்ன மகியே மனதை மாற்றி சித்துடன் வாழ இரவும் முழுவதும் தன் மூளையை சலவை செய்தால் , இவன் வேறு கடுப்பேத்துவது போல் பேசுவது எரிச்சலாக வெளியே காட்டினாலும் அவளுக்கும் கஷ்டமாக தான் இருந்தது .
சித் ” உனக்கு உடம்பு முழுக்க திமிரு ”
” என்கிட்ட மரியாதையா பேசுனா நானும் மரியாதை கொடுத்து பேசுவேன் , திமிறா பேசுனா அப்படி தான் நானும் பேசுவேன் ” என்றவள் கிளம்ப தயாராக குளியலறையினுள் நுழைந்வளின் கண்ணீர் வடிய அதை துடைத்துக் கொண்டாள் . முகத்தை நன்றாக துடைத்துக்கொண்டு வெளியே வந்து கிளம்பினாள் . அந்த நேரம் கதவை தட்டும் சத்தம் கேட்க , கதவை திறந்தவள் சந்துருவின் சிரித்த முகத்தையே பார்த்தாள் . அவன் இரவு வம்பிலுத்தது நியாபகம் வர வந்த சிரிப்பை அடக்கி கொண்டாள் .
” ஹாய் மகி … சாப்பாடு செம்ம ” என்றான் தன் வயிற்றை லேசாக தடவிக் கொண்டு .
” தேங்க்ஸ் சந்துரு ” என்றவள் அவனுக்கு வழிவிட , எரிக்கும் பார்வையுடனே அமர்திருந்த சித்தை பார்த்ததும் ” ஐயோ நைட் பண்ண கடுப்பு இன்னும் போல போலையே ” என்று முனு முனுத்தவறே
” என்ன மச்சான் நேத்து நைட்லாம் எப்படி போச்சு “என்று எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்ற ,சந்துரு வயிற்றிலே ஒரு குத்து விட்டான் பாரு ….கதி கலங்கி விட்டது சந்துருவிற்கு . வயிற்றை பிடித்துக் கொண்டு ” அம்மாமா…மச்சான் அடிக்காத டா ” என்று கத்தியே விட்டான் .
” அடேய் அடிக்காதா டா ” என்று கதவை திறந்து ஓடப் பார்க்க , எட்டி பிடித்து அடி பின்னிவிட்டான் . சில நிமிடத்தில் இருவரும் மூச்சு வாங்கி அமர்ந்தனர் . சித் முறைத்துக் கொண்டே
” ஒரு வாரம் கம்பெனி வர மாட்டேன் டா … பாத்துக்க ”
” சரிங்க புது மாப்பிள்ளை நிறைய வேலை இருக்கோ ” என்றான் இவ்வளவு குத்து வாங்கியும் சந்துருவிற்கு வாய் அடங்க வில்லை .
” இருக்குற கடுப்பில சாவடிச்சுருவேன் உன்ன… அமைதியா இரு ” என்ற போது ஐய்ஸ் பேக்குடன் மகி வந்தாள் . சந்துரு நுழைந்ததும் இதை தான் எடுக்க கீழே சென்றாள், அதை கொண்டு வந்து சந்துருவிடம் நீட்டினாள் . அவளை உறுத்து விழித்தவன் கொஞ்சம் நேரத்தில் சிரித்து விட , மகியும் சேர்ந்து சிரித்தாள் . அதில் சித் புரியாமல் பார்க்க இருவரும் சிரிப்பை நிறுத்திய பாடு இல்லை . அதில் சித்திற்கு கடுப்பாகி விட
” இப்போ கிளம்பலாமா இல்ல இங்க இவன் கூட சிரிச்சிட்டே இருக்க போறியா ” என்று கத்திவிட , பட்டென்று இருவரும் சிரிப்பை நிறுத்தி விட்டனர் . மகி வெளியே சென்று விட , சந்துருவிற்கே கடுப்பாகியது
” மச்சான் நீ பண்றது சரி இல்ல …மகியும் உன்ன ஒன்னும் விரும்பி கல்யாணம் பண்ணல, அதுவும் இல்லாம உனக்கு மாறி தான் அவளுக்கு கல்யாணம் நடந்தது. நீங்க எல்லாரும் சேர்ந்து தான் மகியை சூழ்நிலைக்கு பயன் படுத்திட்டிங்க … அவள எப்போ பாரு திட்டிட்டே இருக்காத ” என்றான் .
” நீ எனக்கு ஃபிரண்ட் ஆ இல்ல அவளுக்கா… நேத்துல இருந்து அவளுக்கே சப்போர்ட் பன்ற ”
” சப்போர்ட் இல்ல நடந்ததை சொல்லுறேன் , அவளே மனச மாத்திட்டு சந்தோசமா இருக்க டிரை பண்றா நீயும் நிதர்சனத்தை உணர்ந்து வாழ பாரு…நான் கிளம்புறேன் ” என்று கிளம்பினான் .
சித் ” ஒரு நிமிசம் ”
சந்துரு ” இப்போ என்ன டா ”
” அது எதுக்கு ரெண்டு பேரும் சிரிச்சிங்க ” என்று சித் கேட்க , சந்துருவிற்கு சிரிப்பு தான் வந்தது .
” அதுகெல்லாம் அறிவு வேணும்டா சோனமுத்தா ” என்று கலாய்த்து சென்று விட்டான் .
கார் மகிழ்தினியின் வீட்டை நோக்கி செல்ல, இருவரும் அமைதியாக வந்தனர் . மகி சன்னல் புறம் திரும்பி வேடிக்கை பார்த்த படி வந்தாள் . காரில் அதிகமாக ஏசி இருக்க இரு கைகளையும் இருக்கி தேய்த்தபடி கட்டி கொண்டாள். முதலில் கவனிக்காதவன் கொஞ்சம் நேரத்தில் கவனித்து ஏசியை குறைத்து வைத்தான்
” குளுருச்சுனா சொல்ல வேண்டியது தானே ” என்ற சித் குரலில் திரும்பியவள் .
” எதுக்கு சித்… கொஞ்சம் நேரம் குளிர்ல இருந்த செத்துர மாட்டனு சொல்லுவிங்கனு நினைச்சு சொல்லல ” என்றாள் அவனுக்கும் வலிக்க வேண்டும் எண்ணத்துடனே . அதில் சித் வாயை மூடிக் கொள்ள, ரொம்ப ஓவரா போரோமோ … அமிழ் செஞ்ச தப்புக்கு இவ என்ன பண்ணுவா என்று மனதினுள் நினைத்தவன் .
” சாரி ” என்றான் மொட்டையாக , அதில் மகிதான் அதிசயமாக பார்த்தான் . நிமிடத்தில் மாறி விடுகிறானே என்று சிந்தித்தவள் தன் கண்ணாவின் நினைவில் மூழ்கினாள் .
நினைவை விட்டு செல்ல மறுப்பதேனோ !!
என் உயிரே .. 😍💋
பிரியாமல் தொடரும்…😍💋
உங்களின் புல்லட் வெடி 🎉
Chandru 🤣🤣🤣🤣
Superbbb 😍😍😍😍😍😍
😂😂😂… thankyou
அடேய் சித்….உனக்கு.ஃபிரண்டா இருக்கத தவிர்த்து வேற என்னடா தப்பு பண்ணான் சந்த்ரு….அவன போய் அந்த அடி அடிக்குறியே….பாவம் அந்த பச்ச மண்ணு தாங்குமா….
தம்பி…நீ கோவத்துல மகிய திட்டுற….ஆனால் அவளுக்கும் அந்த கோவம் இருக்கும்…நீ திட்டுற கேட்டுட்டு இருக்காம அவளும் திட்டிடுவா….யாருகண்டா அடிச்சாலாம் அடிச்சிருவாள்…அதனால சூதானமா இருப்பா….
😂😂😂…நன்றி சகி 🥰🥰
நல்லா கும்மினான் ஆனாலும் வாய் குறையவே இல்ல🤣🤣🤣🤣 அடுத்த எபிலே அமி பத்தி சொல்லுங்க அந்த செல்லத்தே அப்படியே தூக்கி போட்டு கொஞ்சனம் போல இருக்கு😏 நோகாமா அவங்க மாட்டுக்கு லெட்டர் எழுதி வெச்சிட்டு போயிடுவாங்களாம் இப்ப மகி தான் இந்த குரங்கு கிட்ட டார்ச்சர் அனுபவிக்குறா🏃🏻♀️🏃🏻♀️🏃🏻♀️🏃🏻♀️🏃🏻♀️
ஒகே சகி 🥰…நன்றி 😌🥰
Semma ud sis…. Chandru character rmba piduchuruku…. Sidh seekaram mahi a purunjupan…. Ami msg pannunathu sidh ku terunjale avanuku purunjurukum…. So sad … Waiting for next ud sis…
Thankyou 🥰🥰
சந்துரு அடி பலமா? நிறைய எழுத்துப்பிழை இருக்கு சரிபார்க்கவும்.
Okay 😁
❤️❤️❤️❤️❤️❤️❤️nalla iruku sonamuthaaa 😂
😂😂😂😂😂😂 நன்றி சகா 🥰🥰😁
I’m expecting sidh manasu maari mahiya love panna arambichuruvan papom enna aguthunu waiting for next epi….✌️
நன்றி 🥰😁❤️
நண்பர்களின் குறும்பு அட்டகாசம். நட்பின் பிணைப்பை வெகு ஆழமாகவும் அதே நேரம் மனதை வருடும் படியும் அமைத்துள்ளார் எழுத்தாளர். வேற லெவல்
நன்றி சகி 🥰🥰
Dai chandru avvalavu pattum innum vaaya viduriye
😂😂😂