Loading

அத்தியாயம் மூன்று

          தன் செல்பேசியை எடுத்துப் பார்த்தவளுக்கு மயக்கம் வராதா குறை தான் . தன்னை இந்த சூழ்நிலையில் தள்ளிவிட்டவளிடம் இருந்து தான் வந்திருந்தது . அமிழ்தினியிடம் இருந்து தான் ஒரு செய்தி வந்திருந்தது  , அதை எடுத்து ஓடவிட்டாள்

” மகி யாரும் தன்னோட தங்கச்சிக்கு செய்ய கூடாதா  பாவத்தை தான் பண்ணிட்டேனு புரியுது ..ஆனா எனக்கு வேற வழி தெரியல. எத்தனையோ முறை நான் சொல்ல பார்த்தேன் இந்த கல்யாணம் புடிக்கலைனு ஆனா யாரும் சொல்ல விடல . நா ஆனந்த் ஆ தான்  ரொம்ப காதலிச்சேன் . இவ்வளவு நாள் அவரு வெளிநாட்டு வேலையா சிக்கிட்டாரு அதான் வந்து கூப்பிடமுடியல நேத்து தான் வந்தான் , வந்தது கூட்டிட்டுப் போய்டான் . என்னை மன்னிக்க முடிஞ்சா மன்னிச்சிடு. சித் ரொம்பவே நல்லவரு  , அவரு காதல் ரொம்ப ரொம்ப உண்மை …ஆனால் , என் மனசுல ஆனந்த் தான் இருக்கான்.  சோ…எனக்கு புரியுது உனக்கு மனசு இருக்குனு, பட் என்ன மன்னிச்சிடு. சித் ஆ கண்டிப்பா நீ மாத்துவ …எனக்கு நம்பிக்கை இருக்கு . கடைசியா ஒரு முறை மன்னிச்சிடு மகி ” என்று ஒரு வாய்ஸ் நோட்டை அனுப்பியிருந்தாள் , அதை கேட்டவள் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவம் ஆடியது .  அமிழ் காதலித்து ஏமாற்ற வில்லை என்பது நன்றாகவே புரிந்தது . சித் தான் அவளை விரும்பியிருக்கிறான் என்பதை நினைக்கவும் கவலையாக இருந்தது . பல உணர்ச்சிகளை அவள் மனம் மாறி மாறி காட்டிக் கொண்டு இருக்க , அவள் உடலோ தூக்கத்தை கேட்டது , நேற்று இரவு முழுவதும் கண்ணீராலே அழுது கரைந்தாள் , விடியலின் போது தான் நித்திரை கண்ணை தழுவ  , அப்போது வந்து செல்வி அமிழை  காணவில்லை என எழுப்பி விட்டு விட்டார் . இப்போது தான் உடம்பு அசதியாய் இருப்பதை உணர்ந்து, அப்படியே மெத்தையில் சரிந்தாள் .

    ___

    நண்பனை நன்கு அறிந்தவனாய் சந்துரு அவன் கம்பெனிக்கு தான் வண்டியை விட்டான் .
அவர்கள் பல கம்பெனிகளை நடத்தி வந்தாலும் சித் விருப்பமாக ஆசைப்பட்டு உயிருக்கு உயிராக மதிப்பது இந்த இயற்கை உரங்களை தயாரிக்கும் இடங்களை மட்டுமே , அதுமட்டும் இல்லாமல் நர்சரி போன்றவகைகளையும் உருவாக்கி அவன் தாவரங்கள் மீது கொண்டுள்ள காதலை அங்கு வித விதமாக செடிகளை தயார் செய்து வளர்கிறான் . இங்கிருந்து தான் பல இந்தியத் தாவரங்களை வெளிநாட்டில் வளர்க்க கேட்பவர்களுக்கு அனுப்புகிறான் . இவன் ஊரில் இருக்கும் விவசாயிகளுக்கும் இயற்கை உரத்தை பயன் படுத்தவே உபாயம் அளிப்பான் .

இயற்கை உரம் என்பது ஒரு வேதியியல் பொருட்களை கூட உபயோகிக்காமல் காய்கறிகள், பழங்கள் , இலை தலைகள் , வாழ்ந்து இறந்த மரத்தண்டுகள் போன்ற இயற்கை பொருட்களை மக்கி அதன் மூலம் எடுக்கப்படுவது தான் .   விலங்குகள் , பறவைகள்   கழிவிலிருந்தும் எடுக்கலாம் . பறைவையின் கழிவுகளில் யூரியா அதிகமாக இருக்கும்  அதெல்லாம் வேலாண்மையில் பயன்படுத்துவது  தாவரங்களுக்கு மட்டும் இன்றி அதை சாப்பிடும் மனிதர்களுக்கும் அவர்களில்  உடல் நலத்திற்கும் மிக மிக நல்லது . இயற்கை உரங்களால் பல நன்மைகள் உள்ளன .

      இயற்கை உரம் பயன்படுத்துவதன் மூலம்
பல நூற்றாண்டுகளாக, விலங்கு உரம் மண்ணின் தரத்தை மேம்படுத்துவதற்கான பங்களிப்புகளின் காரணமாக இருக்கிறது .  உரம் மற்றும் உரம் ஊட்டச் சத்துக்கள் பயன்படுத்தப்பட்டால் மற்றும் சிறந்த மேலாண்மை நடைமுறைகளைப் பின்பற்றி நேரம் மற்றும் இட ஒதுக்கீடு செய்தால், எரு பயன்பாடு மூலம் சுற்றுச்சூழல் நன்மைகள் சாத்தியமாகும். வழக்கமான உரத்துடன் ஒப்பிடும் போது, ​​நிலத்தில் சரியாகப் பயன்படுத்தப்படும் உரமானது சுற்றுச்சூழல் நன்மைகளை வழங்கும் திறன் கொண்டது.

அதிகரித்த மண் கார்பன் மற்றும் குறைந்த வளிமண்டல கார்பன் அளவு
குறைக்கப்பட்ட மண் அரிப்பு மற்றும் ஓட்டம்
நைட்ரேட் கசிவு குறைக்கப்படும் .
இயற்கை எரிவாயு-தீவிர நைட்ரஜன் (Nitrogen) உரங்களுக்கான ஆற்றல் தேவைகள் குறைக்கப்படும் .

மண்ணின் கரிமப் பொருட்களில்
எருவில் நைட்ரஜன், பாஸ்பரஸ் , பொட்டாசியம் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள்  உள்ளிட்ட தாவர வளர்ச்சிக்குத் தேவையான பெரும்பாலான கூறுகள் உள்ளன. இருப்பினும், உரத்தின் கரிம கார்பன் அதன் சாத்தியமான சுற்றுச்சூழல் மதிப்பை வழங்குகிறது. மண்ணின் கரிமப் பொருள் ஒரு உற்பத்தி மண்ணின் இயற்கையின் கையொப்பமாகக் கருதப்படுகிறது. எருவில் இருந்து வரும் கரிம கார்பன், செயலில் உள்ள, ஆரோக்கியமான மண்ணின் நுண்ணுயிர் சூழலுக்கான ஆற்றல் மூலத்தை வழங்குகிறது, இவை இரண்டும் ஊட்டச்சத்து மூலங்களை நிலைப்படுத்தி அந்த ஊட்டச்சத்துக்களை பயிர்களுக்கு கிடைக்கச் செய்கிறது.

   எரு ஒரு தாவர உணவாக வணிக உரத்துடன் ஒப்பிடத்தக்கது மற்றும் ஒரு நல்ல ஊட்டச்சத்து திட்டத்தின் படி பயன்படுத்தினால், வணிக உரத்தை விட சுற்றுச்சூழல் நன்மைகள் உள்ளன. cc2.5 உரம் ஊட்டச்சத்து மேலாண்மை குழு
பல நீண்ட கால உரம் பயன்பாட்டு ஆய்வுகள், விளைநிலத்தின் குறைந்து வரும் மண்ணின் கரிம அளவை மெதுவாக அல்லது மாற்றியமைக்கும் அதன் திறனை விளக்குகின்றன .

உரம் மற்றும் மண்ணின் தரம்
உரம் மூலம் மண் கரிமப் பொருட்களை உருவாக்குதல்
மண்ணின் கரிமப் பொருட்களின் அளவை பராமரிக்க அல்லது கட்டமைக்கும் உரத்தின் திறன் பயிர் செய்யப்பட்ட மண்ணில் கார்பன் வரிசைப்படுத்தலின் அளவை அதிகரிப்பதில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது

உரம் கரிமப் பொருட்கள் மேம்பட்ட மண்ணின் கட்டமைப்பிற்கு பங்களிக்கிறது, இதன் விளைவாக மேம்பட்ட நீர் ஊடுருவல் மற்றும் அதிக நீர்ப்பிடிப்பு திறன் ஆகியவை பயிர் நீர் அழுத்தம், மண் அரிப்பு மற்றும் அதிகரித்த ஊட்டச்சத்து தக்கவைப்புக்கு வழிவகுக்கும். யுனைடெட் ஸ்டேட்ஸைச் சுற்றியுள்ள 7 இடங்களில் 70 அடுக்கு ஆண்டுகளின் வரலாற்று மண் பாதுகாப்பு பரிசோதனை நிலையத் தரவுகளின் விரிவான இலக்கிய மதிப்பாய்வு, மண் அரிப்பு (13%-77%) மற்றும் நீரோட்டத்தில் (1%-68%) கணிசமான குறைப்புகளை உருவாக்கியது. அதிகரித்த உரமிடுதல் விகிதங்கள் மண் அரிப்பு மற்றும் நீரோட்டத்தில் அதிக குறைப்புகளை உருவாக்கியது. மேலும்… எரு பயன்பாட்டிற்குப் பின் வரும் ஆண்டுகளில் கூடுதல் ஆய்வுகள் கடந்த எரு பயன்பாட்டின் கூறுகின்றன .

இவ்வாறு பல இயற்கை வழிகள் உள்ளது . தாவரங்களை வளரவும் ஊட்டச்சத்து மிக்கதாக மாத்தவும் , ஆனால் நாம் இதையெல்லாம் தெரிந்துக்கொள்வது இல்லை. ( ஏன் இதை வாசிக்கும் பல பேர் மேலே எழுதி இருக்கும் நன்மைகளை  skip செய்திருந்தாலும் ஆச்சிரியப்படுவதற்கு இல்லை ) . 

சித்தும் இந்த இலக்கை நோக்கி தான் ஓடுகிறான் . செயற்கை உரங்களை ஒழித்துக் கட்ட சொல்ல வில்லை . இயற்கையிலே நன்மை இருக்கும் போது எதற்காக செயற்கை மட்டும்… வேதியல் கலந்த பொருட்களை பயன் படுத்த வேண்டும் . இதுதான் சித்தின் தாரக மந்திரம் எந்த விவசாயிகளை சந்தித்தாலும் முடிந்த அளவு பேசி அவர்களுக்கு புரிய வைப்பான் . தான் தயாரிக்கும் இயற்கை உரங்களையும் அளித்து உபயோக படுத்த ஊக்கப் படுத்துவான் .

   இப்பொழுதும் அங்கு தான் சித் நின்று கொண்டிருந்தான் . எவ்வளவு கவலைகள் இருந்தாலும் இங்கு வந்தால் அவனுக்கு எல்லாம் மறந்து விடும் .  தாவரங்களை,  மலர்களை இயற்கை காற்றை சுவாசிப்பவன் சிறிது நேரத்தில் அதில் மயங்கி ரசிக்க ஆரம்பிப்பான் . அவ்வாறு சன்னல் அருகே நின்று வெளியே  பார்த்துக் கொண்டிருந்தவனை , சந்துருவின்  பேச்சு சத்தம் கலைத்தது .

” ஏன் டா இப்படி பன்ற … அந்த பொண்ணு மூஞ்சில அடிச்ச மாறி நடந்துக்கிற ” என்று ஆதங்கமாக கேட்டான் .  சித்திற்கு பெண் பார்க்க சென்ற இடத்தில் மகியும் சந்துருவும் நண்பர்களை தாண்டி அண்ணன் தங்கையாக மாறினர் . இப்போதும் ஒரு அண்ணனாக வந்து தான் கேட்கிறான்  , சிறிது  கோபத்துடனே

” அவளுக்கும்   சப்போர்ட் பண்ண வந்திருந்தா தயவு செஞ்சு கிளம்பிரு  ” என்று எரிந்து விழுந்தான்.

சந்துரு ” மகி மேல என்ன டா தப்பு இருக்கு “

” என்ன டா தப்பு இல்ல …இப்போ என்னோட அமிழ் இருக்க வேண்டிய இடத்தில அவ இருக்க ” என்று சித் கூற

” எது உன்னோட அமிழா அவ உன்ன வேணாம்னு தான் தூக்கி எரிஞ்சிட்டு போய்ட்டா ” என்று சந்துருவும் பதிலுக்கு எகிறினான்

” பிலீஸ்  டா நீயும் வார்த்தையாள கொள்ளாத …என்னால ஏத்துக்க முடியல டா.. அவ போனத ” என்றான் உடைந்த குரலில் , கொஞ்சமும் நம்ப முடியவில்லை  அவள் தனக்காக வர்ணித்து எழுதிய கவிதைகள் , கூறிய  வார்த்தைகள் எல்லாம் மண்டையை குடைந்தது .

” நீ ஏத்துக்கலனாலும் இது தான் டா உண்மை .. அவ போய்ட்டா ”
என்றவன் மீண்டும் தொடர்ந்தான்

” உன்ன‌‌ மட்டும் பத்தி யோசிக்காத டா … உன்ன ஏமாத்திட்டு போனவள நினைச்சு வருந்துர …ஆனா , எந்த தப்பும் செய்யாமல் அந்த மகி என்ன டா பண்ணா உனக்கு …அவள ஏன் வெறுக்குற  அவளும் உன்ன மாறி தானே!  சூழ்நிலையால எல்லாரும் மகியை உனக்கு கல்யாணம் பண்ணி வச்சாங்க ” என்று சந்துரு கூற  , சித்திற்கும் இப்போது தான்  புரிந்தது  அமிழ் செய்த தவறுக்காக மகியை எவ்வாறு தண்டிப்பது சரியாகும் .. அவளை பற்றியும் நன்றாக தெரியும் தானே !! .

சித் யோசிப்பதே சந்துருவிற்கு மகிழ்ச்சியாக இருந்தது , அதை வெளிக்காட்டி கொள்ளாமல்

” மகியை பத்தி நல்லாவே தெரியும்ல டா … துரு துருனு எப்போ பாரு சிரிச்சிட்டே இருப்பா டா … ஆனா இன்னைக்கு எதையோ பறிகொடுத்த மாறி இருக்கா. அவங்க வீட்ட விட்டு வரப்போ கூட அழுகல … அவளுக்கும் மனசு இருக்கின்றத புரிஞ்சுக்கோ டா “

” சரி டா நா பாத்துக்கிறேன் ” என்றான் மெல்லிய குரலில் ,

” சரி வா அதான் ஈவ்னிங் ஆக போகுது …வீட்டுக்கு போலாம்  டா,  அப்பா வேற உன்ன கூட்டிட்டு வர சொன்னாரு ” என்க , அவனும் நிலைமை உணர்ந்து வீட்டிற்கு புரப்பட்டான் . ஆனால் , சித்தின் மனது முழுவதும் அமிழின் நினைவு தான் இருந்தது . மனதை மாற்ற முயன்றாலும் முடியவில்லை அந்த ஆண் அழகனுக்கு . கொஞ்சம் நேரத்தில் இருவரும் வீட்டிற்குள் நுழைய , வாசுதேவன் தான் சித்தை எரிக்கும் பார்வையோடு பார்த்திருந்தார்

” சித்தார்த் என்ன நினைச்சுகிட்டு இருக்க, ஒரு பொண்ண லவ் பண்றேனு சொன்ன… நாங்கலும் சம்மதிச்சு கல்யாணம் ஏற்பாடு பண்ணா ?  அமிழ்தினி கல்யாணத்தை விட்டு போறா… அப்படினா நீ கட்டாய படுத்தி தான்  அமிழை கல்யாணம்  பண்ண நினைச்சியா ” என்று வெந்த புண்ணில் வேலை பாய்ச்ச

” அப்பா அவ என்ன தான் லவ் பன்னா … அதுவும் ரொம்ப “

” நீ புரிஞ்சு தான் பேசுறியா டா…அப்பறம் ஏன் அந்த பொண்ணு போனா ”
என்று கேட்க , சித்திற்கும் இதுதானே புரியவில்லை பதில் பேசாது அமைதியாய் நின்றான் . அதனால் மீண்டும் தொடர்ந்தார் வாசுதேவன்

” சித் புரிஞ்சிக்க டிரை பண்ணுடா … எல்லாரையும் விட்டுட்டு அந்த பொன்னு போய்ட்டா அவ்வளவு பேரு பிரஸ் , மீடியா  எல்லாத்தையும் சரி பண்ண வேற வழி தெரியல. அதான் மகியை புரிஞ்சு நடந்துக்க டா ” என்று கூறி அவர்  அறைக்கு சென்றார் .
மகனின் வதங்கிய முகத்தை பார்க்கவே ராதாவிற்கு  கஷ்டாமாக இருந்தது , மேலே செல்ல போனவனை அழைத்தவர்

” இன்னும் யாரும் சாப்பிடல சித்  மகியும் தான் … போய் சாப்பிட கூட்டிட்டு நீயும்  வா   ” என்றார் . அதற்கும் பதில் பேசாது தன் அறைக்குச் சென்றான் .  அங்கு சென்று கதவை திறந்தவன் கண்களிலில் முகம் முழுவதும் குழப்பத்துடனே துயில் கொண்டிருந்த மகியே தெரிந்தாள் . பட்டுச்சேலை  காலையில் மகியின் மேனியை ஜொலி ஜொலித்த நகைகள் எல்லாம் அவள் உடலை விட்டு விரட்டி அடிக்கப்பட்டு எப்போதும் அவள் வீட்டில் இருப்பது  போல ஒரு சர்ட் மட்டும் ஜீன்ஸ் பேண்ட்டை அனிந்து  ,இரண்டு புருவங்களும் சுருக்கம் கொண்டு இருக்க , கால்களையெல்லாம் மடக்கி  இரண்டு கைகளும் ஒன்றின் மேல் ஒன்றிருக்க அமைதியாக உறங்கிக் கொண்டு இருந்தாள் . அவள் சற்று சுருண்ட கூந்தலோ அவள் உறங்கும் நேரம் அவளுக்கு தெரியாமல் வந்து பிறையை தொட்டு தொட்டு ஓடியது .  அவளை தான் விழி அகலாமல் பார்த்திருந்தான் . 

பிரியாமல் தொடரும் 😍💋….

உங்களின் புல்லட் வெடி 🎉

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
26
+1
0
+1
1

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  22 Comments

  1. Pinnnadi puriyumaaa 😂😂nalla visayatha story la add panneenga paaru
   👏👏 Waiting to know that pinnadi puriyu 😂

   1. Author

    😂😂😂😂..நன்றி சகா 🥰🥰❤️

   2. Super , அப்புறம்இயற்கை உரம் பத்தி சொன்னது ரொம்ப நல்லா இருந்தது. கல்யாணம் பன்னறதுக்கு முன்னாடி, பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இருக்கா , இல்லையானு கேக்கறது இல்ல, அப்புறம், escape ஆகாம , என்ன பண்ணுவாங்க, அப்புறம் , ஓடி போய்ட்டான்னு சொல்லறது, அதுக்கு மேல, இன்னொரு புள்ளையா புடிச்சி கட்டி வச்சிற்றது. அந்த புள்ள வாழ்கையும் அந்தரத்தில் தொங்க விட்டறது.. எவ்ளோ மாற்றம் வந்தாலும் இந்த விசியம் மட்டும் மாறாது..

  2. Waiting for that word pinnadi puriyum 😁😁
   You added very good news in this story.👌🏻👌🏻All the best 🥰🥰🥰

  3. எதுக்கு பின்னாடி புரியணும்🙊 ஒருவேலை அவங்க ட்வின்ஸ் தானோ. மேலே சொன்ன உரம், மண் தரத்தை பத்தியும் அதற்கான குறிப்பும் சூப்பர் 😍😍😍😍.

  4. Apa da ipo yachu maagiya paaka vanthaney😏 I hope sidd poga poga purinchupan ellathayum…….. ❣️&Waiting for next epi🤗

  5. பின்னாடி புரியும்னு சொல்றதுலயே ஏதோ உள்குத்து ஒழிஞ்சு இருக்க மாதிரி இருக்கே🤔🤔🤔🤔

   நல்லா இருக்குமா அமிழு நீ பண்றது….நீ கல்யாண மண்டபத்துல இருந்து போய்ட்டா மகிய கட்டி வச்சிருவாங்கனு தெரிஞ்சும் நீ போய் இருக்கனா நீ எம்புட்யு பெரிய சுயநலவாதி….
   இப்போ கருத்து சொல்றியா….சித்தார்த் நல்லவன்ன ஈரவெங்கயாம் உனக்கு முன்னாடியே தெரிஞ்சிருந்தா அவன் கிட்டயே நீ வேறொருத்தன லவ் பண்றத சொல்லி கல்யாணத்தை பிறுத்தி இருக்கலாமே…அதவிட்டுட்டு கல்யாணம் அன்னைக்கு சொல்லாம கொள்ளாம கெளம்பிட்டு இப்போ வியாக்கியானம் பேசுறியா😤😤😤….
   சித்தார்த்….உன் கோவத்தை நீ காட்ட வேண்டியது அமிழ் கிட்ட அவள் கிட்ட காட்டாம..உன் குடும்ப கௌரவம் பாதிக்க கூடாதுனு உன்ன கல்யாணம் பண்ண பொண்ண கடுபாக்குறியே….இதெல்லாம் நல்லாவா இருக்கு🤷‍♂️🤷‍♂️🤷‍♂️🤷‍♂️🤷‍♂️…..

  6. எப்பவுமே இயற்கை தான் சிறந்த வாழ்வை தரும் சூப்பர் Waiting for next ud

  7. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதலோடு சேர்த்து குடும்ப உறவுகளின் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.

  8. உங்களுக்கு விவசாயத்து மேல ஆர்வம் இருக்குமோனு தோணுது ரைட்டரே..எனிவே தாவரம் வளர ஊட்டச்சத்து இயற்கை உரம் னு கொடுத்த தகவல்கள் 👏👏👏👏👏👏👏👌👌….அமிழ்தினி காதலிக்கலனு போன்ல சொல்லிருக்கா..சித் அவ ஏதோ கவிதை,வர்ணனை மண்டையை குழப்பம்தான்..முரணாக உள்ளது..பார்க்கலாம்

   1. Author

    நன்றி சகி 🥰🥰… கண்டிப்பா இயற்கை மேல் காதல் உள்ளது ❤️❤️

  9. Ami yen ipdi pannuna…. Anand ah love panrava ethuku wrong hope kudukanum…. Pavam ilaya aven….. Sidh oda iyargai uram dream love it…. Thnks for lots of info sis…. Santhuru semma …. Oru frnd ah mahi situation ah sidh ku puriya vakka try pannirukan…. Nice going sis….

   Ore oru request….. Unga story ya thodar kadhaila add pannirukanga la pathukonga…. Yenna story mothamum oru link la irukum unga story link ila…. Apdi varalena admin ah contact pannunga…. Read panna enkaluku easy ya irukum…..

  10. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதல் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.