Loading

அத்தியாயம் இருபத்து ஏழு

 தற்போது சித்தின் உயிரான கதிர்களை தாக்கி இருந்த பிளைட் பாக்டீரியாவை ஆராய்ச்சி செய்தவளுக்கு ஆச்சரியமாக இருந்தது, எந்த ஒரு உயிரினமும் இயற்கையாய்  அவ்வளவு எளிதில் வீரியம் பெற்று விடாது, குறைந்தது இரண்டு மூன்று ஆண்டுகள் ஆகும். மனிதர்கள் ஏதாவது நோய் வந்தால் தடுப்பூசி போட்டுக் கொள்வதாலே அதை  எதிர்க்கும் சக்தி ஓரிரண்டு ஆண்டுகள் கிடைக்கின்றது.

ஏற்கனவே சித் நன்றாக பாக்டீரியா பிளைட் நோயை ஆராய்ந்து அதற்கு ஏற்றார் போல தான்  விதை நெல்லின் மரபணு மாற்றங்களை செய்து எதிர்ப்பு சக்தியை கூட்டினான். ஆனால் எப்படி அதை மீறி அந்த நோய் கதிர்களை தாக்கியது என குழப்பம் அடைந்தவள் முதலில் ஆராய நினைத்தது பாக்டீரியாவை தான். அவள் நினைத்து போலவே பல மடங்கு வீரியம் மிக்கதாய் இருந்தது இப்போது சித்தின் உயிரான நெற் கதிர்களுக்கு வந்த பாக்டீரியா. 

‘ அது எப்படி சாத்தியம் இவ்வளவு வீரியம் ‘ என தனக்குள் குழம்பி போனாள்.

இரண்டே வாய்ப்புகள் தான் ஒன்று வேறு நாட்டிலிருந்து விதை நெல்லை இறக்குமதி செய்திருந்தது அந்த நாட்டில் பிளைட் நோய் வீரியம் அதிகம் இருந்திருக்கலாம் இல்லையெனில் வேறு யாராவது தான் ஒரு பாக்டீரியாவை எடுத்து அதன் வீரியத்தை கூட்டி அதை கல்ச்சர் ( வளர்த்து) செய்திருக்க வேண்டும்.

வேறு நாட்டிலிருந்து வந்திருக்க வாய்ப்பே இல்லை, ஏனெனில் சித் தான் விதை நெல்லை உருவாக்கியதே! அப்படியானால் அதை வேண்டும் என்றே எவரோ தான் உருவாக்கி இருக்கின்றனர் என தெளிவாக புரிந்தது. 

‘ யார் இதை பண்ணிருப்பா…அதுவும் இப்படி கொடுரமா…இந்த நோய் எல்லா இடத்திலையும் பரவி நெல்லை எல்லாம் அழிச்சிட்டா சாப்பாடுக்கு என்ன செய்வாங்கனு கொஞ்சம் கூட யோசிக்கலையா …சீ இப்படியு மனிசங்க இருக்குறாங்களா ‘ என வாய் விட்டே புலம்பியவள்  ‘ சரி நம்ம இதை சரி பண்ணலாம் , இந்த ஆராய்ச்சி நம்ம பி.ஹச்.டி படிக்கும் போது செய்ய வேண்டியது சரி இப்போவே பண்ணுவோம் . என் கண்ணா எப்பையும் கவலை படவே கூடாது . கவலை படாத கண்ணா நான் எப்படியும் இதை சரி பண்றதுக்கு டிரை இல்லை கண்டிப்பா செய்வேன் ‘ என உறுதி எடுத்தவள் அதற்கான வேலைகளை ஆரம்பித்திருந்தாள்.

இப்போது மகி செய்ய வேண்டியது பாக்டீரியா எடுத்து அதனுடைய ஆன்டிஜெனை பிரிக்க வேண்டும் அதில் உள்ள வீரியத்தை ஆராய்ந்து அதற்கு ஏற்றார் போல் ஒன்று சித் ஏற்கனவே உற்பத்தி படுத்தி இருந்த உரங்களில் உள்ள ஆற்றலை அதிகரிக்க வேண்டும் அல்லது  பாக்டீரியாவை எளிதில்  கொள்ளும் மண்ணில் வளரும் பாக்டீரியா மற்றும் பூஞ்சையில் ( fungi ) உள்ள இயற்கையான  நுண்ணுயிர் எதிர்ப்பிகளை  (  ஆன்டிபயாட்டிக் ) அதிகரிக்க வேண்டும். அதில் முதல் முயற்சி சற்று கடினமே … ஏனென்றால் சித் உருவாக்கிய இயற்கை உரங்களை பற்றி படிக்க நாட்கள் வேண்டும் அதற்குள் சித் பயிர்கள் அனைத்தும் வீணாகி விடும் . அதனால் இரண்டாவது முயற்சியை தான் மகி செய்தாக வேண்டும். எளிதில் மண்ணில் இருந்து பாக்டீரியாவை பிரித்தெடுக்கலாம் அதின் எதிர்ப்பு சக்தியை கூட்ட வேண்டுமானால் மணி நேரங்கள் எடுக்கலாம் , பாக்டீரியாவை எளிதில் வளர்த்து விடலாம்  இருபது நிமிடத்தில் ஒரு பாக்டீரியா இரண்டாக இனப்பெருக்கம் கொள்ளும். அதனால் இந்த முறையே எளிதில் அல்ல இதுவும் கடினம் தான் முதல் முறையை ஒப்பிடும் போது இது எளிதே . ஒரு கிராம் மண்ணில் பத்து பில்லியன் பாக்டீரியா செல் இருக்கும் அதில் ஒரு நூறின் சக்தியை அதிகரித்தால் இருபது நிமிடத்தில் மூன்னுறாய் மாறி விடும் ஒரு ஐந்து மணி நேரத்தில் சித்தின் நிலத்திற்கு தேவையான பாக்டீரியாவை உருவாக்கி விடலாம். இப்போது மகி செய்ய வேண்டியது  மண்ணில் உள்ள பாக்டீரியாவின் சக்தியை அதிக படுத்துவது தான். அதை உருவாக்கும் முயற்ச்சியிலும்  இறங்கினால்.

நடந்தது என்ன? 

” ஹலோ கதிரவன்  ” என்று எகத்தாளமாய் பேச ஆரம்பித்தான் ஆனந்த். 

” ம்ம் யாரு ” என மறுபுறம் ஒழித்தது.

” இப்போ மட்டும் நீங்க நான் சொல்லறத கேட்கல..அப்புறம் உங்க பொண்ண உயிரோட பாக்க முடியாது ” என பயத்தை காட்ட,

” ம்ம்ம்…அப்பறம் போன வை டா லூசு பயலே ” என அவர் நக்கலாக கூற , அவனுக்கு தான் ஒரு முறை யோசனையாக இருந்தது, தாம் அடித்தது சரியான கதிரவன் எண் தானா என்று மீண்டும் ஒரு முறை செக் செய்தான்.

” நான் சொல்லறது மேல நம்பிக்கை இல்லேனா …அனுப்புற போட்டோ பாத்திட்டு சொல்லுங்க ” என்று மிரட்டியவன் தன்னவளுடன் எடுத்த படத்தை எடுத்து அனுப்பி வைத்திருந்தான்.

அதை பார்த்த கதிரவனின் கண்கள் கண்ணீரால் நிறைந்தது. மகளை பற்றிய எந்த செய்தியும் கிடைக்காமல் துடித்தனர் இருவரும் , இப்போது எப்படியோ அமிழை  பற்றிய துப்பு கிடைத்தும் அது உயிர் பணயமாய் அல்லவா இருக்கிறது. கண்களில் இருந்து லேசாக நீர் எட்டி பார்த்தது. அவர் யாரோ சித் எதிரிகள் தான் மகியை பற்றி கூறுகிறார்களோ என நினைத்தார், சித் அப்படி மகியை விட்டு விட மாட்டான் என நம்பிக்கை . அவர் துளியும் நினைக்கவில்லை  பேசியவன் தன் காணாமல் போன தன் இன்னொரு மகளை பற்றி கூறுகிறான் என.

” ஹலோ…அமிழ் …அவ எங்க இருக்கா ? தயவு செஞ்சு சொல்லிங்க… அட்லீஸ்ட் பேச வாச்சு சொல்லுங்க …ஹலோ …ஹலோ ” என்று கதிரவன் பதற, இப்போது தான் ஆனந்திற்கு நன்றாக இருந்தது.

” என்ன மாமா…இப்படி பதறிங்க, அமிழ் என் கூட தான் இருக்கா, என்ன தான் கல்யாணம் பண்ணிருக்கா, இப்போ சந்தோசமா இருக்கா ” என்று அவன் கூறியதும் கதிரவனின் கண்ணீர் அவரின் மார்பை நனைத்தது. அமிழ் இப்படி மிரட்டும் இவனை திருமணம் செய்திருக்கிறாளா என நினைத்தே துடித்து விட்டார் கதிரவன்.

” அப்படி எதுவும் செய்யாதிங்க…  என் மகள திருப்பி அனுப்பு பா. அவ ரொம்ப அப்பாவி ” என்று குரலில் பயத்தை வைத்து கொண்டு கூறினாலும் அவர் கூறியதில் துளியும் பொய் இல்லை.

அது ஆனந்தும் உணர்ந்ததே, அவனுக்கோ ஏன் போன் செய்தோம் என்றிருந்தது. எத்தனை நாட்களாய் இந்த திட்டம் வேண்டாம் , தன்னவளை பணயம் வைக்க கூடாது என நினைத்திருந்தான் , ஆனால் என்று சித்தின் விதைகள் அதன் முட்டுக்களை விட்டு வளர ஆரம்பித்ததோ! அப்போதிலிருந்தே அவன் மனம் இரண்டாய் இருக்க, போனை அழுத்தி விட்டான் கதிரவனுக்கு.

” உங்க பொண்ணுக்கு எதுவும் ஆக கூடாதுனா… நா சொல்ற நீங்க செய்யனும் ” 

” அது …அது …பிலிஸ் என் பொண்ண விட்டுருங்க” என கெஞ்ச ஆரம்பித்தார் கதிரவன்.

” அது உங்க கைல தான் இருக்கு…உங்க புது மருமகன் கண்டுபிடிச்ச விதை நெல்லை பத்தின ஃபுல் டீடைல்ஸ் எல்லாத்தையும் எனக்கும் போட்டோ எடுத்து அனுப்புனா …உங்க பொண்ணு உங்க வீட்டுக்கு எண்ணோட சந்தோஷமா  வருவா. இல்லேனா…நா சொல்ல தேவை இல்லேன்னு நினைக்குறேன் . உங்களுக்கு இரண்டு நாள் டைம் , இப்போ என்கிட்ட ஆர்கியூ பண்ணாம , உங்க பொண்ண காப்பாத்த யோசிங்க ” என்றவன் அழைப்பை துண்டித்திருந்தான். 

என்ன செய்வதென்றே புரியாமல் கதிரவன் குழம்பி போனார். யாரிடம் கூறினாலும் இந்த விடயம் கண்டிப்பாக வேறு மாறி செல்ல வாய்ப்பிருக்கிறது , எப்படி அமிழை காப்பாற்றுவது என சிந்தனையில் மூழ்கினார் கதிரவன். 

அழைப்பை துண்டித்தவனுக்கு குற்ற உணர்ச்சியாய் இருந்தது. பல முறை இதை செய்ய கூடாது என உறுதியாய் இருந்தான் , என்ன தான் நினைத்தாலும் கடைசியில் தன்னவளை பயன்படுத்தியே விட்டான். 

தன் மகளின் உயிரை காப்பாற்ற வேறு வலி இல்லாமல் யோசிக்காது அன்றே கதிரவன் கிளம்பி விட்டார். மகியிடம் போன் செய்து பேசலாம் என நினைக்கையில், ஏற்கனவே மகி விருந்திற்கு வந்தபோது இதெல்லாம் தேவையா என்று கேட்டாளோ! அப்போது இருந்து மகியின் தாயும் சரி தந்தையும் சரி போன் செய்வதே இல்லை , மகிக்கு இங்கு இருக்கும் பிரச்சனைகளை  பார்ப்பதற்கே நேரம் சரியாக இருக்கும், இதில் தன் பெற்றோர்கள் நினைவு வந்தாள் பேதை அழ மட்டுமே செய்வாள். 

எப்படியும் தனக்கு உதவி செய்ய வேண்டி மகியிடம் கேட்பது , தனக்கு வேண்டுமானலும் அமிழை காப்பாற்றும் முக்கியம் இருக்கும், ஆனால் மகி தன் கணவனின் கனவை கொன்று தங்களுக்காக உதவி செய்வாளா என்றது கொஞ்சம் சந்தேகமாக இருந்தது. எப்படியும் தன் உடன் பிறந்தவளை காப்பாற்ற நினைப்பாள் அதில் சந்தேகம் இல்லை, அதற்கு வேறு வழியை தான் தேடுவாளே தவிற , தன் கணவனை கீழே தள்ளி வேடிக்கை பார்க்கும் ரகம் இல்லை, தன் மகளை பற்றி நன்கு அறிந்தவராய் தாமே இந்த செயலை செய்தாக வேண்டும் என்று அவரே சித்தார்த்தின் அலுவலகம் சென்றார். 

திருமணத்திற்கு வந்த அனைவருக்குமே கதிரவனை தெரியும் அதனால் அவர் வந்ததும் வரவேற்று சித் அறையில் அமர வைக்க, அவர் நல்ல நேரமோ அல்லது சித்தின் கெட்ட நேரமோ ? கதிரவன் வந்த போது சித் ஏன் சந்துரு கூட இல்லாமல் இருந்து விட, அது அவருக்கு உதவியாக இருந்தது. அரைமணி நேரமாய் இருந்து தேவையான அனைத்தையும் போட்டோ எடுத்து  ஆனந்திற்கு அந்த நைட்டே அனுப்பி வைத்தார். 

சித்திற்கு கதிரவன் வந்து போனார் என்பது மட்டுமே தெரியும் , அந்த குடும்பத்தின் மேல் இருந்த கடுப்பில் எதற்காக வந்தார் என ஒரு போனை போட்டு கேட்க கூட அவன் விரும்பவில்லை. அது கதிரவனுக்கு கொஞ்சம் படபடப்பை குறைத்தது. அவருக்கு தன் பொண்ணை ஒன்றும் செய்ய மாட்டேன் என உறுதி அளித்தவன் தினமும் ஒரு போட்டோவை அனுப்பி வைப்பான் அதில் இருவரின் காதலும் தெரியும். அவனே நினைத்தாலும் கண்டிப்பாக அமிழை துன்புறுத்த அவன் மனம் இடம் கொடுக்காது. அவன் செய்த தவறுகள் பல இருக்கலாம் ஆனால் அமிழ் மேல் வைத்த காதல் மற்றும் உண்மையாய் இருக்க இன்று அதையும் பயன்படுத்திய மனம் குற்ற உணர்ச்சியை தூண்டியது.

கதிரவன் கொடுத்த அனைத்து செய்திகளையும், அவன் ஒரு ரிசர்ச் செய்பவரிடம் கொடுத்து , பத்து கோடி ஒப்பந்தமாய் இருந்தது அந்த புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட பாக்டீரியாவிற்கு. இதை எதையும் அறியாத சித்தோ தன் கண்டுபிடிப்பில் தான் குறை என்று உடைந்து போனான்.

____

” மகி எங்க இருக்க நீ…அம்மா உன்ன காணோம்னு எனக்கு கால் பண்ணி கேட்குறாங்க ” என்று காரை ஓட்டியவாரே கேட்டான் சந்துரு. காலையில்  தன் மச்சானை தேடி  வெளியே சென்றவன் தான் இன்னும் தேடுகிறான் கிடைத்த பாடில்லை. கடைசியில் தெரிந்த தன் போலீஸ் நண்பனிடம் சித்தின் நம்பரை கொடுத்து ஜீபீஎஸ்  டிரேஸ் செய்து அவன் இருக்கும் இடத்தை அறிந்து கொண்டான் , இப்போது அங்கு தான் செல்கிறான்.

”  நான் அவரோட ஆபிஸ்ல தான் இருக்கேன் சந்துரு…போன்ல சார்ஜ் இல்லை சத்துரு ” என்றவள் தன் செய்யும் செயல்களை மூடி காற்று புகா வண்ணம் ஒரு அறையில் வைத்தவள்  வீட்டிற்கு கிளம்ப தயாரானாள். சில மரபணு மாற்றம் செய்த பிளைட் பாக்டீரியாவை கொள்ளும் பாக்டீரியாவை நிலத்தில் பரப்பி விட்டிருந்தாள் மகி.

” சந்துரு,  கண்ணா…அது சித் எங்க இருக்காரு ” என்றாள் மெல்லிய குரலில். 

” இதோ அவன தேடி தான் போறேன் …எங்க போனானே  தெரியல. இப்போ தான் எங்க இருக்கானு தெரிஞ்சது ” என்றவன் அவளை வீட்டிற்கு செல்லுமாறு கூறி காரின் வேகத்தை கூட்டினான்.

பல முறை ராதா , சந்தருவிற்கு அழைத்து கேட்டு விட்டார். மகியும் சித்தும் வீட்டிற்கு வராது இருக்க பதறி போனார்.  பிறகு சந்தரு தான் இருவரும் அலுவலகத்தில் இருக்கிறார்கள் நீங்கள் சாப்பிட்டு தூங்குமாறு கூறி அவரை நிம்மதி படுத்தினான். அவருக்கு அதில் அதிக ஆனந்தமே, இருவரும் ஒன்றாய் இருப்பது அவருக்கு மகிழ்சியாய் இருக்க ராதாவும் உறங்க சென்றார்.

நெற் கதிர்களின் நிலைமை இன்னும் யாருக்கும் தெரியவில்லை. மகியும் யாருக்கும்  தெரியப்படுத்த விரும்பவில்லை.  எல்லாவற்றையும் ஒருவழியாய்   தயார் செய்து வைத்தவள் வீட்டிற்கு கிளம்பினாள்.

_____

காரை கிளப்பி கொண்டு வந்திருந்த சந்தரு கார் ஓர் இடத்தில் நின்றது. அந்த இடத்தை பார்க்கவே கொஞ்சம் முகம் சுழிப்பது  போல் இருந்தது.  

‘ சீ எங்க வந்து கடக்கானு பாரு …இவன ‘ என்று தனக்குள் சித்தை திட்டியவன் ஒவ்வொரு டேபிளாக தாண்டி சித்தை தேடிக்கொண்டு சென்றான். ஒவ்வொரு இடத்திலும் குடிமகன்கள் தங்கள் குடும்ப கவலையை கொட்டிக் கொண்டு இருக்க, சித்தோ கண்ணீர் மட்டும் லேசாக எட்டிப் பார்க்க குடித்துக் கொண்டு இருந்தான். அவன் குடிகாரன் ஒன்றும் இல்லை மீட்டிங், பார்ட்டி என்று சென்றாள் குடிப்பான், இன்று ஏதோ வரிசையாக பாட்டிலை உள்ளே தள்ளினான்.

சித் இருப்பதை பார்த்தே அவனை நோக்கி வந்த சந்துரு தலையிலே அடித்து கொண்டான்.

” அடேய் மச்சான் உன்ன ஊரே தேடிட்டு வரேன்…நீ இங்க குடிச்சிட்டு இருக்க, அநியாயமா என்ன விட்டு ஆறு பாட்டில் உள்ள தள்ளிருக்கியே …ஐயோ ஐயோ ” என்று தன் நெஞ்சிலே அடித்துக் கொண்டான். பிறகு குடித்து குடித்து வரிசையாக காலி பாட்டிலை அடுக்கி வைத்திருந்தான் அல்லவா !. 

” அடேய் எந்திரி டா…வா டா வீட்டுக்கு போவோம் மணி பதினொன்னு , பாவி பயலே குடிச்சது இல்லாமா கவுந்து கடக்குறானே ” என புலம்பி சித்தை உளுக்கினான். அதில் லேசாக தன் விழிகளை திறந்தவன் மங்கலாக தெரிந்த சந்துருவை கண்ணை கசக்கி பார்த்து 

” எல்லாம் போச்சு சந்துரு …எல்லாம் போச்சு , நா தோத்துட்டேன் ” என புலம்ப ஆரம்பித்தான் மகியின் கண்ணா.

‘ அதான் உன்ன லவ் பண்றவ அங்க எதையோ கண்டுபிடிக்குறாளே !… ‘ என தனக்குள் நினைத்து அவனை தூக்கி நிறுத்த, சித்தோ எண்ணெய் போல வலுக்கி மீண்டும் சரிந்தான்.

பிரியாமல் தொடரும் 😍💋….

உங்களின் புல்லட் வெடி 🎉

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
17
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    8 Comments

    1. Mahi all the best for ur project…..👍🏻👍🏻👍🏻
      Sidhuu chandru vittu epidi yellam pannalam 😂😂😂😂

    2. சந்துரு🤣🤣🤣🤣🤣குடிக்காத டா குடிக்கார நாயேன்னு திட்டி அடிப்பான்னு பார்த்தா என்ன வேலை பண்ணுறான் 🤣🤣🤣

    3. ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டீங்க கதிரவன் சார்….அமிழ் உங்க பொண்ணு தான்…அவளுக்கு ஒரு ஆபத்துனா பெத்த மனசு துடிக்கும் தான்…இல்லனு சொல்லல….ஆனா ஒரு கண்ணுல நெய்யும் இன்னொரு கண்ணுல சுண்ணாம்பும் வச்ச மாதிரி வேலை பாத்துட்டீங்களே….
      அமிழ காப்பாத்த ஆனந்த் கேட்டத பண்ணி குடுத்துட்டீங்க….ஆனந்த் அமிழ ரொம்ப லவ் பண்றான் அது உங்களுக்கு தெரியாது அதனால பயத்துல அவன் கேட்டத அனுப்பிட்டீங்க….ஆனா இத பண்ணது நீங்க தான்னு சித்துக்கு தெரிய வந்து அவன் மகிமேல கோவப்பட்டா என்ன பண்டுவீங்க….
      சித்தோட மதிக்கு கல்யாணம் நடந்தது என்ன நிலமையிலனு உங்களுக்கே தெரியும்ல..அவள் லவ் பண்றது சித்துக்கே இன்னும் தெரியாது…உங்கள எல்லாம் பொறுத்த வர உங்க மானத்தை காப்பாத்த தானே அவள் கல்யாணம் பண்ணாள்….
      உங்க மரியாதைய கெடுத்துட்டு போன பொண்ணுக்காக உங்க மானத்தை காப்பாத்தின பொணீணுக்கு துரோகம் பணீணிட்டீங்கல…..

      ஆனந்த்….பாசத்தை பகடையா வச்சு விளையாடியிருக்க….இப்போ அதுல நீ ஜெயிச்ச மாதிரி இருக்கலாம் ஆனா உண்மை என்னனா நீ சீக்கிரமே தோத்து போகப்போற….
      மகி அவளோட கண்ணாவுக்காக என்ன வேணா பண்ணுவாள்….இப்போ பண்ண வேண்டியத பண்ணிட்டாள்…சோ நீ பண்ண முயற்சி வேஸ்ட் தான்…ஆனா நீ பண்ண இந்த கேவலமான காரியம் அமிழுத்கு தெரிஞ்சா உன் நிலமை என்ன? கண்டிப்பா அவள் உன்ன் மன்னிக்க மாட்டாள்….
      பண்ற பாவம் எல்லாம் பூமராங் போல திரும்பி வரும்…காத்திட்டு இரு….

      1. Author

        மிக்க நன்றி சகி 🥰🥰😁❤️❤️❤️❤️❤️….நீங்க கமெண்ட் போடுறது
        அதை படிச்சு மீ அவ்வளவு மகிழ்ச்சி 😁😁❤️❤️

    4. Viduuu sidhu…..maki paathupaa
      Sarakula adikathaa thavarana seyal🚶