அத்தியாயம் இருபத்து இரண்டு
ஒரு மாதம் கழித்து :
புதியதாய் முளைத்த மொட்டு விரியும் போது இருக்கின்ற பூவை போலவே இருந்தது மகியின் முகம். அவ்வளவு சந்தோஷம் கையில் ஏழாயிரம் இருக்க, அதை பெற பட்ட பாடுகள் கொஞ்சமா நஞ்சமா . அதை தன் கையில் இருந்து பைக்குள் வைத்தவள் வீட்டை நோக்கி பயணித்தாள்.
____
சித் அலுவலகம் :
சாகுபடி செய்ய போகும் நெற் பயிர்கள் எல்லாம் அடர் பச்சை போற்றிய போர்வை போல அந்த நிலம் முழுக்க பரவி இருக்க, அதை கண்கள் குளிர்ந்து பார்த்துக் கொண்டு இருந்தான். அவ்வளவு சந்தோஷம் கிடைத்தும் ஏதோ மனதில் ஓரத்தில் உறுத்தியது. அதை மறைத்துக் கொண்டு இப்போது சந்தோஷத்தை மட்டும் நினைக்க முயன்றான். தூரத்தில் நடந்து வந்து கொண்டிருந்த சந்துருவை ஓடிச் சென்று கட்டி அனைத்தான்.
” ஐயோ காப்பாத்துங்க காப்பாத்துங்க..ஹெல்ப் …ஹெல்ப்..என்ன ஹராஸ் பண்றான் ” என்று சித் லேசாக அணைத்திருந்தை ஏதோ சந்துரு பெண் போலவும் சித் தப்பாக நடந்து கொள்வது போல தொண்டை குழி வற்றும் அளவு சற்று சத்தமாகவே கத்தி திமிற சித் தான் பயந்து விட்டான்.பதறி விலகியவன் சந்துருவை முறைக்க , அவனோ விலகிய அவன் சட்டையை அட்ஜெஸ்ட் செய்வதில் மும்முரமாக இருந்தான்.
” ஏன்டா… பன்னி பயலே , எதுக்கு டா இப்படி கத்துர “என முறைத்துக் கொண்டு கேட்க, அவனோ தன் சட்டையில் காலர் பட்டனை போடுவதில் மும்மரமாக இருந்தான்.அதில் சித் தான் தலையில் அடித்து கொண்டான்.
” மச்சான் இந்த பிரண்ட்சிப்லாம் பேசுறது , உன் சாப்பாட எனக்கு தரதோட இருக்கனும். வந்து சந்தோஷதுல கட்டி பிடிக்குற வேலை எல்லாம் வச்சுக்க படாது ” என நெளிந்து கொண்டு சந்துரு கூறினான்.
” அடேய்…அடேய் ரொம்ப பண்ணாத டா, பொண்ணு பாத்ததும் பல்லை காட்டுற நீலாம் இப்படி பேசாத” என்று நண்பனின் குட்டையை போட்டு உடைக்க, திரு திருவென முழித்தான் சந்துரு.
அவனுக்கும் அளவில்லா மகிழ்ச்சியே ஒரு வழியாய் நண்பனின் இத்தனை வருட உழைப்பு வெற்றி அடைய போகிறதே ! என்று மகிழ்ந்து தான் இருந்தான். இருந்தாலும் அமைதியாக இருந்தால் அது சந்துரு இல்லையே ஏதாவது செய்து கொண்டே இருக்க வேண்டும் , அதை தான் இப்போது செய்தான் .
” மச்சான் சொல்லிட்டேன் இனிமே அந்த கட்டிபிடிக்குற வேல எல்லாம் வச்சுக்காத ” என்று முகத்தை வேண்டும் என்றே அருவருப்பாக வைப்பது போல் வைத்துக் கொண்டு பேச, நண்பனின் நடிப்பு தெரியாதவனோ அவனை சீண்டும் பொருட்டே திரும்பவும் அணைக்க வந்தான்.
” அடேய் … வராத ட … வராத ” என்று வளைந்து வளைந்து ஓட, வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் சித்தும் அவனை துரத்தினான்.
” அடேய் … அதான் கட்டி பிடிக்க உன் பொண்டாட்டி இருக்கால, அப்பரம் எதுக்கு என்ன ஹக் பண்ண வர” என்று சந்துரு கூறியதும் சிரிப்புடன் வந்த சித்தின் முகம் ஓட்டமும் அப்படியே நின்றது. கட்டாயமாக வரவழைத்திருந்த புன்னகையும் நின்று போனது. திரும்பி பார்த்து கொண்டு ஓடிய சந்துரு , சித் நின்றதும் அவனும் தனது கால் முட்டியில் கையை வைத்து மூச்சு வாங்க நின்றான்.
கருத்து போன சித்தின் முகமோ கவலையை காட்டி இருந்தது. வேகமாக தன் அலுவலக அறைக்கு சென்றவன் கதவை பூட்டி தலையில் கையை வைத்து குனிந்து கொண்டான். நண்பனின் இந்த செயல் சந்துருவை சிந்திக்க வைத்தது, ஒரு மாதமாக அலுவலக வேலையில் எங்கும் செல்ல வில்லை சந்துரு, மகியிடம் பேசி பல நாள் ஆகிவிட்டது . சித்தை பார்க்க அவன் அறையினுள் நுழைய பார்க்க அவனோ உள் பக்கமாக பூட்டி இருந்தான்.
” என்னாச்சு இவனுக்கு … ” என்று தலையை சொறிந்து கதவை தட்டினான்.
சித்தின் எண்ணோட்டங்களோ ஒரு மாதம் முன்பு நடந்த சம்பவத்தில் திளைந்திருந்தது. அன்றிலிருந்து இன்னும் கூட மகி சித்தின் முகத்தை நேருக்கு நேர் பார்க்க வில்லை . அவன் விழித்து இருக்கும் போது மட்டுமே, அவன் உறங்கிய பிறகு அவளின் கண்ணாவின் முகத்தை பார்த்து ஊமையாக கண்ணீர் வடிப்பாள். அது சித்திற்கு தெரியாது அல்லவா ? அது தான் அவனின் கவலையும் கூட. எப்போதும் யாரிடமாவது உரண்டை இழுப்பவள் , சித் இருக்கும் போது சிரிப்பதை ஏன் பேசுவதை கூட குறைத்து இருந்தாள். மகியும் யாரிடமும் காட்டிக் கொண்டது இல்லை . அதனால் , ராதாவிற்கும் வாசுதேவனுக்கும் துளியும் சந்தேகம் வரவில்லை. மனதில் பாரம் அழுத்த இனம் புரியாத வலி ஒன்று சித்தை கொள்ள, அதை தவிர்க்கவும் முடியாமல் , ஏற்றுக் கொள்ளவும் முடியாமல் குழம்பி போனான்.
” மச்சான் கதவை திற டா ” என்று இத்தோடு ஒரு பத்து தடவை கத்தி இருப்பான் இருந்தும் ஒரு பதில் ஏன் சத்தம் கூட உள்ளிருந்து வெளியே வர வில்லை .
” என்ன டா சந்துரு வெளிய நிக்கிற… சித்தார்த் எங்க ” என்ற கம்பிரமான குரல் பின்னே கேட்க , தலையை திருப்பி வந்தவரை பார்த்து புன்னகைத்தாலும் மனதில் தன் நண்பனின் நடவடிக்கைகள் தான் வந்தது.
” வாங்க அப்பா… நீங்க வரிங்கனு மச்சான் சொல்லவே இல்லை, என்னபா திடீர்னு ” என வரிசையாய் கேட்டான்.
” எங்கடா என் பையன் ? நீங்க பண்ற விதை நல்லா வளர்ந்ததா நியூஸ் வந்துச்சு அதான் பாராட்டலாமே வந்தேன் ” என்று கூறிய வாசுதேவன் தன் மகனை விழிகளை சுழல விட்டவாறு தேடினார். அவரின் பார்வை தேடுவதை பார்த்த சந்துரு இப்போது என்ன சொல்லி சமாளிப்பது என தெரியாமல் தினறி போனான்.
” அவன் எங்க டா ? ” என்று சந்துரு விடம் கேட்க, அவனோ திருடன் போல முளித்தான்.
” அது அப்பா உள்ள தான் இருக்கான் ” என்று கூறயவன் கதவை தட்ட, சித்தோ திறப்பதாய் இல்லை. எங்கே அவன் தான் மகியின் நினைவில் மூழ்கி இருந்தானே!.
” சித்தார்த் உள்ள என்னடா பண்ற ” என் வாசுதேவனே கதவை தட்ட , அப்போதும் சித் திறப்பதாய் இல்லை. அவனுக்கு தான் காதில் எதுவும் கேட்கவில்லையே. மகி கடைசியாக பேசிய வார்த்தைகளும் கண்களில் தெரிந்த ஏக்கமும் மட்டுமே திரும்ப திரும்ப வந்து போனது . எத்தனையோ முறை தவிர்க்க நினைத்திருந்தான் ஆனாலும் இப்போது அமிழை தான்டி மகியின் நினைவு அதிகம் வந்தது. அதற்கும் சில காரணங்கள் இருந்தது.
“மச்சான் ” என கதவை ஓங்கி அடித்து தட்டியதும் தான் சித்திற்கு கேட்கவே செய்தது. வெளியே தந்தையின் குரலும் கேட்க , அவசரமாக தன் இருக்கையில் இருந்து எழுந்தவன் ஓடி வந்து கதவை திறந்தான்.
” வாங்க அப்பா … எப்போ வந்திங்க ” என்று கேஷுவலாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்க, வாசுதேவன் தான் தன் மகனை வித்தியாசமாக பார்த்தார்.
” என்ன டா இவ்வளவு நேரமா கதவ திறக்க… சந்துரு எவ்வளவு கத்திட்டு இருக்கான் என்ன பண்ணிட்டு இருந்த உள்ள ” என்று கேட்க, சித்தோ என்ன கூறுவது என தெரியாமல் தினறினான். நண்பனை காக்கும் பொருட்டு சந்துருவே கடைசியில் காப்பாற்றினான்.
” அது அப்பா சாரு சாதிச்ச கலைப்பில தூங்கி இருப்பாரு…இல்லடா மச்சான் ” என கூறியதும் தன் நண்பனை நன்றியுடன் பார்த்தவன் அதற்கு ஏற்றார் போல் ஏதோ பேசி சமாளித்தான். ஆனாலும் பிள்ளையை பற்றி பெற்றவர்களுக்கு தெரியாத என்ன ? மகனின் முக வாட்டத்தை கண்டுபிடித்தாலும் அதை கேட்டு சங்கட படுத்த விரும்பாமல் அப்படியே விட்டு விட்டார்.
” உள்ள வாங்க அப்பா ” என்று தன் தந்தையை அழைத்த சித் , அவரை பயிரை வளர்த்த இடத்திற்கு அழைத்து சென்றான். அங்கு ஸ்பிரிங்கலர் முறையில் பயிர்களுக்கு நடுவிலிருந்து அழகாக தண்ணீர் சுழன்று சுத்திக்கொண்டு நெற் கதிர்களை செழிக்க வைத்திருந்தது. உரங்களும் ரெடியாக இருப்பதை பார்த்து வாசுதேவன் தன் மகனின் செயலிலும் அவன் இத்தனை நாள் கனவு நிறைவேற போவதையும் நினைத்து முகம் கொள்ள சிரிப்புடன் அனைத்தையும் பார்த்தார். இருவரும் அவர் பின்னே சென்று கொண்டு இருந்தனர்.
” சித்தார்த் ரொம்ப சந்தோஷமா இருக்கு டா… உன்னோட இந்த கண்டுபிடிப்பு உனக்கு மட்டும் பயன் தராமா எப்போ எல்லா மக்களுக்கும் கிடைக்குனும்னு நினைச்சியோ அப்போவே நீ ஜெய்ச்சிட்ட ” என்று புன்னகை தவழ தன் மகனிடன் பேசியவருக்கு தன் அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்தது.
” சரி டா நா கிளம்புறேன் … சித்தார்த் நீயே வந்து உன் அம்மாகிட்ட சொல்லு ரொம்ப சந்தோஷம் படுவா.. அப்பறம் ரெண்டு பேரும் இனிமேலாவது கொஞ்ச நேரம் தூங்குங்க ” என்று கூறி கிளம்ப பார்த்தவர் மறுபடியும் சந்துருவிடம்
” அடேய் சந்துரு வீட்டுக்கு வந்துட்டு போடா… ரொம்ப நாள் ஆச்சு நீ வந்து . உங்க ராதா அம்மா வேற புலம்புறா ” என்று அவன் தோளில் தட்டி சென்றார்.
அவர் சென்றதும் தான் சந்துருவிற்கு மூச்சு விட முடிந்தது. என்ன தான் சகஜமாக பேசினாலும் அவர் மேல் சந்துரு விற்கும் பயம் எப்போதும் இருக்கும் . பயம் என்பதை விட மரியாதை அவர் இருக்கும் போது தன் வாளை அப்படியே சுருட்டி உள்ளுக்குள் வைத்துக் கொள்வான் அந்த சேட்டை பிடித்தவன்.
” என்னடா மச்சான் ஆச்சு , தலை ஏதும் வலிக்குதா ” என்று புரியாமல் தன் நண்பனை பார்த்து கேட்க , அவனோ பதில் கூறாது இருந்தான்.
‘ இவனுக்கு என்னாச்சு எப்போ பாரு கனவு உலகத்தில இருக்க ஆரம்பிச்சுட்டான், இம்புட்டு நேரம் நல்லா தானே சிரிச்சிட்டு இருந்தான் . ஒரு வேல பேய் கீய் புடிச்சிருச்சோ ‘ என தன் மனதுக்குளே பல வாரு யோசனையை போட்டான்.
கடினபட்டு தன்னை மீட்டுக் கொண்டவனோ வராத புன்னகையை வரவளைத்திருந்தான்.
” சாரி மச்சான் ஏதோ டென்சன்ல கதவை திறக்கல ” என்று தன் நண்பனிடம் மன்னிப்பை கேட்க, சந்துருவிற்கு ஹார்ட் வெளியே வராத குறை தான். தன் நெஞ்சை பிடித்துக் கொண்டு சாய்ந்து மறுபடியும் எழுந்து நின்றான்.
” அடேய் இப்படி திடுதிப்புனுலாம் மாறாத டா… அம்புட்டு அடி அடிச்சு சாரி கேலுனாலும் கேட்க மாட்ட? இப்போ இந்த கதவை திறக்காதுக்கு போய் சாரி கேட்குறியே டா . உனக்கு இதெல்லாம் ஓவரா இல்லை ” என்று அதிர்ச்சி ஆனவன் போல் பேசி சித்தின் மனதை மாற்ற பார்க்க, நண்பனை புரிந்து கொண்டு அவனும் லேசாக சிரித்து வைத்தான்.
” சரி டா நா வீட்டுக்கு கிளம்புறேன் நீயும் வரியா … அப்பா சொன்னாரு தானே வந்து அம்மாவ பார்த்திட்டு போடா ” என தன்னை மாற்றிக் கொண்டு கேட்டான் .
” இல்லடா இந்த ஒரு மாசமா வீட்டுக்கு கூட ஒழுங்கா போகல ..எங்க ஆத்தா தோள உரிக்க காத்திட்டு இருக்கு. நா இன்னைக்கு போய் நல்லா அடிய வாங்கிட்டு நாளைக்கு அங்க வந்து மருந்து போட்டுக்கிறேன். அம்மாவ சிக்கன் பிரியாணி செஞ்சு வைக்க சொல்லு ” என தன் மொத்த பல்லையும் காட்டி கூற, சித்திற்கு இப்போது நிஜமாகவே சிரிப்பு வந்தது . அவனிடம் தலையசைப்பை கொடுத்தவன் கிளம்ப பார்க்க, ஏதோ ஒரு சின்ன வேலை வரவும் அதை முடித்து கிளம்புவதாய் சந்துருவை மட்டும் அனுப்பி வைத்தான்.
கொஞ்சம் நேரத்தில் வேலையை முடித்துக் கொண்டு அவனும் வீடிற்கு கிளம்பினான்.
ஏற்கனவே தன் மகனின் வெற்றி காற்றோட்டமாக ராதாவிற்கு வந்திருந்தது. தன் மகனிற்கு பிடித்த அனைத்தையும் சமைத்து வைத்து ரெடியாக காத்திருந்தார்.
வெளியே கார் சத்தம் கேட்கவும் வாசலை நோக்கி வேகமாக வந்து நின்றார் ராதா. அவரின் நடவடிக்கைகளை பார்த்து வாசுதேவனுக்கு சிரிப்பு சிரிப்பாக வந்தது.
காரிலிருந்து இறங்கியவன் தன் தாய் வாசலிலே நிற்பதை பார்த்து சிரிப்புடனே வந்து அவரை கட்டிக் கொண்டான். அவருக்கும் அவ்வளவு மகிழ்ச்சி , தன் மகனின் முதல் வெற்றி அல்லவா! பல மீட்டிங் சென்று வென்று இருக்கிறான் ஆனால் அது எல்லாம் தன் கணவரின் தொழில். இப்போது தன் மகனே சொந்தமாக ஒரு அலுவலகத்தை உருவாக்கி அதில் வெற்றி பெற்று விட்டது அளவில்லா மகிழ்ச்சியை அவருக்கு கொடுத்தது. அவரை கட்டிக் கொண்டவன் தான் அவரின் மகிழ்ச்சியில் கலந்து கொள்ள நினைக்க , அதை அழிக்கும் எண்ணத்தோடு அவள் வரவில்லை . ஆனால் அவனுக்கு அப்படி தான் இருந்தது. லேசான கொலுசு சத்தத்துடன் மகி வேலை முடிந்து வர, ராதா வாசல் பக்கம் பார்த்து நின்றதாள் , அவள் வருவதை பார்த்து விட்டு தன் மகனை விட்டு மருமகளை ஓடி சென்று கட்டிக் கொண்டார். தன் தாயின் பார்வை செல்லும் இடத்தை பார்த்தவனுக்கு மறுபடியும் விட்ட கவலை வந்திருந்தது. எவ்வளவு முயற்சி செய்தாலும் மீண்டும் மீண்டும் வந்து கொள்கிறவளை எதிர் கொள்ள முடியாமல் அமைதியாக அப்படியே நின்றான்.
அங்கு மகிக்கோ எதுவும் புரியவில்லை, தன் கண்ணா நிற்பதை காம்பௌன்ட் கதவை திறக்கும் போதே தன்னவனின் முதுகை பார்த்து விட்டவள் , அவனின் முகத்தை பார்க்க முடியாமல் தான் மெதுவாக நடந்து வந்தாள் . ஆனாலும் ராதா கவனித்து வந்து விட்டார்.
” மகி சித் செஞ்சிட்டு இருந்த அந்த விதை எல்லாம் நல்லபடியா வளர்ந்திருச்சாம் ” என்று அவளை கட்டி கொண்டு குதித்தவரை பார்த்து சிரித்தவள், தன்னவனின் வெற்றியில் தானும் அளவில்லா மகிழ்ச்சி கொண்டாள். ஆனால் அதை வெளியே காட்டிக் கொண்டாள் மீண்டும் ஏதாவது அவளின் கண்ணா கூறிவிடுவானோ என்று பயமாக இருந்தது. தன் முகத்தில் சிரிப்பை மட்டும் பூசிக்கொண்டவள் தன் அத்தையை விட்டு பிரிந்து அவளின் மன்னவன் நின்ற இடத்தை பார்க்க அதுவோ காலியாக இருந்தது. மகியை பார்க்க முடியாது தவித்தவன் நேராக தன் அறைக்கு சென்று விட்டான்.
” ராதா கொஞ்சம் என் மருமகளை உள்ள அனுப்பு… பாவம் அவ ரொம்ப டயர்டா இருப்பா ” என்று சிரித்துக் கொண்டே கூற , ராதா தன் தலையில் அடித்துக் கொண்டு மகியை உள்ளே அழைத்துக் கொண்டு சென்றார். மகிக்கோ அறைக்கு செல்லவே பயமாக இருந்தது. எப்போதும் தன்னவன் வரும் முன்னே அறையில் அடைந்து இருப்பவள் இன்று அவன் அறையில் இருக்க, இவள் செல்வதற்கே ஏதோ ஒரு மாறியாக இருந்தது.
” சரி மகி போய் ஃபிரஸ் ஆகிட்டு சாப்பிட வா… நானே இன்னைக்கு என் மகனுக்காக பல வித சமையல பண்ணி வச்சிருக்கேன். அப்படியே நீ வரும் போது அவனையும் கூட்டிட்டு வந்திடு ” என்று கூறியவர் உணவு பதார்த்தங்களை டைனிங் டேபிளில் எடுத்து வைக்க சென்று விட, மகியோ தயங்கி கொண்டே படி ஏறினாள்.
பிரியாமல் தொடரும் 😍💋….
உங்களின் புல்லட் வெடி 🎉
Inaki epi super jolly ya fun na irunthuchu (chandru)waiting for next epi ❣️❣️❣️
நன்றி சகி 🥰😁
நான் சந்துரு ஃபேன் ஆகிட்டேன் 🤣🤣🤣🤣🤣🤣
🥰😂😂..நன்றி சகி 🥰😁❤️
Chandru romba shy type pola 😂😂😂
தம்பி சித்து…அவளை பேசினது தப்புனு நீ உணர்ந்தது ரொம்ப சந்தோஷம்…ஆனா அத அவள் கிட்ட பேசினா தானே அவளுக்கும் உன்ன புரியும்…
அவளும் உன்ன பாக்க தயங்கிட்டு இருக்காள்…நீயும் அவள திட்டிட்டு ஒண்ணும் சந்தோஷமா இல்ல…மனசு விட்டு பேசினா தானே பிரச்சினை சரி ஆகும்…அத பண்ணுங்க ரெண்டு பேரும் முதல்ல….
நன்றி சகி 🥰🥰😁❤️❤️
🤩🤩🤩🤩❤️❤️ chandru nee nalla pandraa ya😂😂😂
நன்றி சகா 🥰🥰
Enna da nee manasu vitu pesalam la.. atleast oru sorry yavathu sollalam Thane.. nee ketta kelvi ku avala vanthu pesuvannu ninachiyo … Poi pesuda neeyum ipo prsuva apo pesuvannu orunoru epi ya wait panren nee pesura mathiriye ila… Poda Tomato…
🤭🤭🤭😂😂… thankyou 🥰🥰❤️