Loading

அத்தியாயம் இருபது

” என்ன ஆச்சு ஆனந்த்  , ஏன் ஒரு மாறி இருக்க ” என்று தன்னவன் முகம் சுருங்கி இருப்பதை பார்த்து கேட்க, அவனோ அமிழிடம் என்ன கூறுவது என தெரியாமல் திணறினான். உண்மை அனைத்தும் ஏன் அதில் கால் வாசி கூட அமிழுக்கு தெரிந்தால் என்ன ஆவது. அமிழை பொறுத்தவரை தன் தந்தையை போலவே ஆனந்தும் நல்லவன் தன்னை  நன்றாக பார்த்துக் கொள்கிறவன், ஆனால் அது நிதர்சனம் அல்லவே!.

” அது ஒன்னும் இல்லை பாப்பா ” என கூறி சிரித்தவனை நம்பாத பார்வை ஒன்றை செழுத்தியவள் , அவன் மடியில் சென்று அமர்ந்துக் கொண்டு  ,  ஒரு கையை  தன்னவன் கழுத்தில்  மாலையாக கோர்த்து மற்றொரு கையால் அவன் கேசத்தை லேசாக வருடி கோதியவாறே

” பிச்…  என்னானு சொல்லுங்க ஆனந்த்  ” என்று மீண்டும் கேட்க,

” அது ஒன்னும் இல்லை பாப்பா … நமக்கு எதிரா ஒரு கம்பெனி வருது அதான் “

” இதுக்கு எதுக்கு நீங்க வருத்தப்படுறிங்க … நீங்க தான் எல்லா வகையான பயிர்களுக்கும் கொஞ்சம் கெமிக்கல்ஸ் கலந்த உரத்தை தயாரிச்சு அதிகம் பாதிப்பு வராம  நல்லபடியா குடுக்கிறிங்க தானே ! ”
என்று எந்த  உண்மையையும்  அறியாமல் வெகுளியாய் கேட்க ,

” அது இல்லை பாப்பா , இந்த கம்பெனி வந்தா …நம்ம புராடெக்ட் எல்லாம் டௌன் ஆகிடும் ” என்று  மேலோட்டமாக நடக்கப் போகும் உண்மையை கூறினான்.

” பிச் அப்போ அவங்க நிறையா கெமிக்கல்ஸ் கலப்பாங்க தானே !!…நீங்க அவங்க என்ன என்ன செய்றாங்கனு கண்டுபிடிச்சு கவர்மெண்ட் கிட்ட போட்டுகுடுத்து அந்த கம்பெனியவே குளோஸ் பண்ண  வச்சிடுங்க …சிம்பிள் ” என்று தோளை குலுக்கி அவன் கண் நோக்கி  கூறியவளை  பார்த்ததும் , அமிழ் கூறியதிலிருந்து ஒரு ஐடியா அவனுக்குள் உதித்தது . அதற்கு விசமாக சிரித்துக் கொண்டவன் அமிழின் கன்னங்களை ஈரமாக்கினான் .

                           ❤️

சித்தார்த்  வீடு :

காலையிலே சீக்கிரம் எழுந்தவளாய் தன் வேலைகளை முடித்துக் கொண்டு டிஃபனையும் தயார் செய்ய ஆரம்பித்திருந்தாள். ராதா எவ்வளவு கூறியும் அவரை கழுத்தை பிடித்து வெளியே தள்ளாத குறையாய் அவரிடம் ஏதாவது பேசி வெளியே அனுப்பி விடுவாள் .  எல்லாருக்கும் சமைத்து பரிமாறியவலாள்  இன்று தனக்கென்று ஒரு வாய் உணவை கூட வைக்க முடியவில்லை. ஒருவழியாய் அனைத்து வேலைகளையும் முடித்தவள் தங்களின் அறைக்கு சித்தை பார்க்க அவனோ  எந்த கவலைகளும் இல்லாம அமைதியாக உறங்கிக் கொண்டு இருந்தான். அவன் முகத்தை பார்க்கும் போதெல்லாம் அவன் நேற்று கூறியதை தான் மூளை சுட்டிக்காட்டியது இருந்தாலும் அவன் மேல் கோபம் மட்டும் வரவில்லை அந்த பேதைக்கு . அவன் கூறிய வார்த்தைகளே கத்தியாய் இதயத்தை கிழிக்க,  காலையிலே சோகம் கீதம் வாசிக்க விரும்பாமல் ஒரு போலி புன்னகையை பூட்டி முகத்தை ஸ்கார்ஃப் போட்டு மறைத்துக் கொண்டாள் . அங்கே வாசுதேவனையும் சித்தையும் தெரியாத ஆளே இருக்க மாட்டார்கள் அத்தனை பிரபலம். அவர்கள் செய்யும் நல்லதாக இருக்கட்டும் அவர்களின் தன்மையுமே அனைவரிடமும் வேகமாக தெரிய வைத்தது . அதனாலே , யாருக்கும் அந்த குடும்பத்தின் மருமகள் பேருந்தில் வருவது தெரிந்தால் ஏதாவது தேவையில்லாத பேச்சுகள் வரக்கூடும் என நினைத்து தன் முகத்தை மறைத்துக் கொண்டாள். தன் அத்தையிடம் மட்டும் கூறியவள் கிளம்பி வெளியே சென்றாள். ராதாவிற்கு இது பிடிக்கவே இல்லை , இருந்தும் மகியின் சந்தோஷத்திற்காக மட்டுமே இருவரும் அனுமதித்தனர். தன்னிடம் இருந்த பணத்தை வைத்து அடித்து பிடித்து பேருந்தில் ஏறி ஒருவழியாய் கல்லூரி வந்து தனது முகத்தில் இருந்த ஸ்கார்ஃபை கலட்டி தன் வகுப்பறையை நோக்கி நடந்தாள் . இதுவே முதல் முறை பள்ளி படிக்கும் போது மகியின் தந்தை கதிரவன் வந்து டிராப் செய்வார் . அவள் கல்லூரி முதல் வருடம் கிளம்பும்போதும் சீட்டாவில்  செல்வாள் , இன்று இந்த பேருந்து பயணம் சற்று வித்தியாசமாகவும் கொஞ்சம் கஷ்டமாகவும் தான் இருந்தது . அதை எல்லாம் கட்டிக்கொண்டாள் தான் அவள் மகி இல்லையே !. நேராக  வகுப்பிற்கு சென்றவள் களைப்பாக தன் தோழிகள் அருகில் அமர , அவர்களோ மகியை ஏதோ பிச்சை எடுத்து கல்லூரி வருபவள் போல் பார்த்தனர் .

கல்லூரி :

” எதுக்கு டி ரெண்டு பேரும் இப்படி பாக்குறிங்க … பஸ்ல தானே வந்தேன். ஏதோ நடந்து வந்த மாறி என்ன பாவம் போல பாக்குறிங்க ” என சிரித்துக் கொண்டே கேட்க , அந்த சிரிப்பில் கொஞ்சம் கூட உண்மை இல்லை என அறிந்தவர்கள் மகியை மௌனமாக பார்த்தனர்.

” ஐயோ சரி இதை விடுங்க…சந்தியா இப்போ கை ஓகே வா ” என்று சந்தியாவின் கையை பார்த்து பரிவுடன் கேட்க , ” ம்ம் இப்போ பரவாயில்லை மகி ” என பதிலளித்தாள். நேற்று தான் மருத்துவமனையில் இருந்து வீடே திரும்பியிருந்தாள் சந்தியா.

” சௌமி உன்கிட்ட நேத்து சொன்னது என்ன ஆச்சு ” என அவளிடமும் ஒரு கேள்வியை கேட்க ,

” உனக்கு மொத என்ன ஆச்சுன்னு சொல்லு … எதுக்காக இப்போ வேலை தேடுற ” என மகியை முறைத்துக் கொண்டு கேட்க,  அதற்கு எல்லாம் சட்டம் செய்யாதவள்

” பிளீஸ் டி அதெல்லாம் கேட்காத … நீ பாக்க முடியலேனா சொல்லு நா  பாத்துக்கிறேன் ” என்று கெஞ்சலாக கேட்க, சௌமியோ முறைத்துக் கொண்டே கூறினாள்.

” ம்ம் ஒரு கடைல டைப்பிங் அன்ட் டேட்டா என்ட்றி ,  ஐந்து  மணி நேரம் வேலை…மாசம் ஏழாயிரம் மா. எங்க அப்பாவுக்கு தெரிஞ்ச கடை தான்” , அது சௌமியின் கடை தான் வேறு எங்கும் மகி அலைவதை பிடிக்காமல் அவளுக்கே தெரியாமலே இந்த ஏற்ப்பாட்டை செய்தவள் தன் தந்தையிடமும் ஏழாயிரம் ஒப்பந்தம் போட்டாள் அதிகம் கூறினாலும் மகிக்கு சந்தேகம் வந்துவிடும் அல்லவா !.

” செம்ம இது போதுமே ” என்று மகிழ்ச்சியாய் கூறியவள் ” நாளைக்கு வந்து ஜாயின் பண்ணிறேன் டி ”  என்று அவர்களிடம் கூறி உரையாடலை முடித்தாள்.  ஆனால் அவள் மனதினுள் உரைகள் எதுவும் நிற்கவில்லை .  பல எண்ணங்களில் மகியின் மனம் திளைத்திருந்தது. சித் கிட்ட ஐயாயிரம் சாப்பாட்டுக்கு குடுத்திடுவோம் … நம்ம பஸ்கு பாஸ் எடுத்திடலாம் … இனி என் கண்ணா நா காசுக்காக அவன்கிட்ட இருக்குறேனு சொல்ல மாட்டான் ” என தனக்குள் பேசி பெருமூச்சு விட்டாள். அன்றைய நாள் யாருக்கும் நன்றாக செல்லவே இல்லை.

___

சித்தார்த் வீடு:

மணி கடந்து எழுந்த சித்தோ , மகி கல்லூரிக்கு நேரமாகும் என்பதை உணர்ந்து வேகமாக குளித்து கீழே வர , வீடோ வழக்கம் போல இருப்பதை பார்த்து குளம்பினான். மகியின் நடமாட்டம் இருப்பது போல் தெரியவில்லை அவனுக்கு, நேராக தன் தாயிடம் சென்றவன்

” அம்மா அவ காலேஜ் போய்டாளா ” என மொட்டையாக தன் விழிகளை சுழலவிட்டவாறே கேட்க , மகனின் இந்த  மாற்றத்திற்கு புன்னகையை கொடுத்தவர்

” மகி தான் பஸ்ல போறேனு  சொன்னாளே மறந்துட்டியா  டா ” என்று தன் தாய் கூறியதும் தான் அவனுக்கு தான் பேசிய வார்த்தைகளும் அதற்கு மகி எப்போதும் போல் சின்ன சின்ன சீண்டல்கள் கூட செய்யாமல்  தன்னிடம் ஒதுக்கம் காட்டுவதும் நியாபகம் வந்ததது. தாயிடம் ஏதேதோ  கூறி சமாளித்து தன் அறைக்கு மீண்டும் சென்றவனுக்கு மனது என்னவோ செய்ய காரணம் தெரியாதனாய் குழம்பினான்.
‘ எதுக்கு நம்ம இப்போ இவ்வளவு ஃபீல் பண்றோம் அதான் அவளே என்ன விட்டு ஒதுங்கி போறாதானே …இது தானே நம்ம ஆச பட்டதும் , சரி நம்ம வேலைக்கு கிளம்புவோம் ‘ என்று மனதுக்குள் பேசி தன்னை சமன்படுத்தி கொண்டவனோ  தன் அலுவலகத்திற்கு கிளம்ப தயாரானான்.

 ஆனந்த் வீடு  : 

      இப்போது தன்னவன் முகம் கொஞ்சம் சரி ஆனது போல் இருக்க , அவன் கன்னங்களை பிடித்து கொஞ்சியவளோ

” இதுக்கெல்லாம் உன்ன வருத்திகிறாத டா ” என்று அவன் பிறையில் அழுத்தமான முத்தத்தை கொடுத்தவள் , சமையல் வேலை இருப்பதாக கூறி சென்றாள். தன்னவளையே சென்ற திசையை பார்த்தவனுக்கு இவ்வளவு நேரம் இருந்த மோக நிலை கலைந்து  மீண்டும் சித்தார்தை எப்படி வீழ்ந்து என்ற யோசனையில் ஆழ்ந்தான் . தன் அறைக்கு சென்று ஒரு சின்ன குளியலை போட்டவன் , அவர்கள் வீட்டிளே அவனுக்கென்று ஒரு அலுவலக அறையை உருவாக்கி இருந்தான் , இப்போது அந்த அறையில் நுழைந்து கொண்டவன் தன் போனை எடுத்து ஒரு எண்ணிற்கு அழைத்தான் . மறுபக்கம் எடுத்ததும்

” என்ன கேட்ட தகவல் எல்லாம் கிடைச்சதா “

” இல்ல சார் கொஞ்சம் கூட கண்டுபிடிக்க முடியல ” என்று சென்னையில் ஒரு புகழ்பெற்ற டிடெக்டிவ் கூறினார்.

” நம்பர் ஒன் டிடெக்டிவ்னு சொன்னா பத்தாது , எந்த வேலையுலையும் செஞ்சு காட்டனும் ” என்று கடுப்புடன் மறு பக்கம் அழைப்பில் இருந்தவனை திட்டித் தீர்த்தான்.

” சார் புரியாம பேசாதிங்க … நாங்களும் டிரை பண்ணோம் பட், அந்த சித்தார்த் யார்கிட்டையும் எந்த டிடைல்ஸ் உம் குடுக்கல . அவன் ஒருத்தர் கிட்ட மட்டும் தான் அவனோட கண்டுபிடிப்ப சொல்லிருக்கான் ” என்று பெருமூச்சுடன் கூறினார் அந்த புகழ் பெற்ற டிடெக்டிவ்.

” சரி அவன்கிட்ட ஏதாவது பண்ண முடியுமானு பாருங்க “

” அந்த ஒருத்தன் சித்தார்த் ஓட பாதி உயிர் மாதிரி வேற யாரும் இல்லை அந்த சந்துரு தான் . நமக்கு  அவன்  கண்டுபிடிப்ப சொல்ல வாய்ப்பே இல்லை “

” ஷிட்… எதாவது பண்ணுவனு உன்ன நம்புனே பாரு என்ன சொல்லனும் ” என்று கடு கடுத்தவன் அழைபேசியை துண்டித்தான். சித்தார்த் கண்டுபிடிப்புக்கு அரசு ஒப்புதல் அளித்ததை ஜிரனிக்க முடியவில்லை ஆனந்திற்கு , ஏதாவது ஒரு வகையில் அதை கண்டிப்பாக தடுக்க வேண்டும் என்று தான் டிடெக்டிவை நாடினான், ஆனால் அவருக்கு தான் துரும்பு அளவு கூட எந்த விடயமும் கிடைக்கவில்லை . அவ்வளவு எளிதில் கிடைத்திடுமா என்ன நம்ம சித் ஆராய்ச்சி பேப்பர்கள் .
என்ன செய்வது என்று தெரியாமல் கையை தலைக்கு குத்தகைக்கு கொடுத்து பலவாறு யோசித்த ஆனந்திற்கு பாவம் எந்த ஐடியாவும் தான் வரவில்லை. மூளை குழம்பி பைக் இஞ்சின் போல சூடானது தான் மிச்சம் .
‘ கண்டிப்பா ஒரு வழி இருக்கும் . அவன நான் இதை பண்ண விட மாட்டேன் . சித்தார்த் நீ எப்படி இந்த ஆராய்ச்சிய ஃபுல்லா முடிக்குறேனு பாக்குறேன் ‘ என்று யாருமில்லா அறையில் கத்திக் கொண்டவன் அவனுடைய மேஜையை பார்க்க , அவனுடையவளின் புகைப்படம் தான் கண்ணில் பட்டது. தன்னவளை பார்த்தவனுக்கு முதல் முறையாய் அவளை பகடைகாயாய் மாற்றும் யோசனை வர, ‘ சே  கண்டிப்பா  நம்ம இப்படி பண்ண கூடாது , என் பாப்பா வ நா கண்டிப்பா பயன்படுத்த மாட்டேன் ‘ என கூறிக் கொண்டவன் வேறு வழி இருக்கிறதா என்ற சிந்தனையில் மூழ்கினான்.

” உள்ள வரலாமா ” என்று ஒரு சின்ன சிரிப்பை உதிர்த்து அந்த அறையின் வாயிலிலிருந்து கொக்காட்டாம் தலையை மட்டும் உள்ளே நீட்டி கேட்டவளை பார்த்வனுக்கு அவ்வளவு நேரம் இருந்த யோசனை காற்றாய் மறைந்தது . தலையை மட்டும் மேலும் கீழுமாக அசைத்து உள்ளே  வருமாறு அழைத்தவன், தன்னவளை இழுத்து மடியில் அமர்த்தி கொண்டு அவள் சங்கு கழுத்தில் முகத்தை புதைத்தான். 

” ஐயோ விடு ஆனந்த் கைல சாப்பாடு இருக்கு பாரு ” என்றவள் அவன் பிடியிலிருந்து விலகி அவனுக்கென்று கொண்டு வந்த உணவை டேபிளில் வைத்து அவனருகில் வந்தாள்.  ஆனந்தின் மனதோ நிலையில்லாத காற்றை போலவே இருந்தது . ஒரு இடத்தில் நிலையாய் நிற்காமல் அவனது என்ன அலைகளோ சித்தார்த் தன் கண்டுபிடிப்பை வெற்றிகரமாக செய்து விட்டால் தான் அதிகம் பாதிக்க படவேண்டும் என யோசிக்க, அமிழ் மன்னனின் மனதை மாற்ற எதாவது செய்தாள்.  நிலையில்லாமல் இருந்தவனுக்கு ஆயிரம் ஆயிரம் கவலைகள்.
‘ நீ மட்டும் சின்ன வயசுல இருந்து என்கூட இருந்திருந்தா !!…  நா இவ்வளவு கெட்டவனா மாறி இருக்க மாட்டேன் பாப்பா . உன்கிட்டையும் நான் உண்மையை நடந்தது இல்லை பாப்பா , எங்க நான் உண்மையை எல்லாம் சொன்ன நீ என்ன விட்டு போய்டு வேனோனு பயமா இருக்கு பாப்பா…என்னை விட்டுப் போகிட மாட்ட தானே பாப்பா ?!  ‘ என்று வந்த அழுகையை முழுங்கி மறைத்து அவளை இன்னும் இருக கட்டிக் கொண்டான் அமிழின் உயிரானவன்.

_____

எஸ்.கே  அலுவலகம் :

சித் வருவதற்கு முன்னே அலுவலகம் வந்திருந்த சந்துருவோ , வேலை எதுவும் இன்றி டேபிளில் தலையை வைத்து உறங்கி தன் சந்தியாவுடன் காதல் செய்ய ஆரம்பித்திருந்தான் கனவில் தான் ஹி ஹி. சித் வந்ததை கூட அறியாமல் தூக்கத்தில் பல்லை காட்டுபவனை பார்த்த சித் எதுவும் கூற விரும்பாமல் அவன் எதிரே அமர்ந்தான்.

தூக்கத்தில் இருந்தவன் கனவில் கிஸ் செய்ய , நினைவிலும் ஃபிரண்ட்ஸ் திரைப்பட கிருஷண மூர்த்தி செய்வது போல ஆள் இல்லாமல் வாயை முத்தம் கொடுப்பது போல் வைத்து ” ம்ம்ச்…ம்ம்ச்…ம்ம்ச்ச் ” என நிறுத்தாது பல முத்தங்களை காற்றில் கொடுக்க , ஏற்கனவே மகி தன்னிடம் ஒதுக்கம் காட்டுவதில் கடுப்பாக இருந்த சித்தோ எதிரில் இருந்தவனை ஓங்கி மிதித்தான். எதற்காக வருந்திகிறோம் என்று ஆராய சித் விரும்பவில்லை என்பதை விட அவனுக்கு அது தெரியவில்லை. ஆனால் மகிமாவின் முகம் வாடி இருந்தாள் சித்தின் மனமும் வாடுகிறதே !.

” ஐயோ சந்தியா அடிக்காத  தெரியாம கிஸ் பண்ணிட்டேன்  ” என்று கூறி பதறி தன் கன்னங்களை பிடித்து எழுந்தவன்  சித் தான் உதைத்தான் என்பதை உணர்ந்து அவனை முறைக்க, சித்தோ கடுப்புடன் சந்துருவை பார்த்தான்.

‘ டேய் எதுக்கு டா இப்போ என்ன மிதிச்ச …சே நல்ல கனவு எல்லாம் போச்சே. இனி என்ன பண்ணுவேன் எப்போ கிஸ் பண்ணுவேன்  ” என தலையில் கைவைத்து மீண்டும் உறங்க பார்த்த நண்பனின் தலையில் நலங்கு வைத்தவன், செய்ய வேண்டிய வேலைகளை கூறினான்.

பிரியாமல் தொடரும் 😍💋…

உங்களின் புல்லட் வெடி 🎉

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
23
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    12 Comments

    1. Irunthalum chandru ku dream extreme level la pothu paa😍😍💞 dream la kuda sila Peru duyet paada vida maatanga😠 pavom chandru🤣 ivare ellame solluvara apro ivare feel pannuvara ava poita unna vittu (clg ku) ni tha late ta enthuruchu avala kanom nu thedura nallaki achum sikiram enthuruchu mahi kuda pesu sidh ….. Apo tha ellam sari agum first sry kelu Ava kitta …….. waiting for next epi ❣️❣️❣️

      1. Chandru semma mass..😂😂
        Romeo juliet kuda romance panna start pannitaru …😍😍😍😍

    2. Janu Croos

      இருந்தாலும் சித்து… சந்ருவ நீ இப்படி அடிக்க கூடாதுப்பா… நீதான் உன் பொண்டாட்டிய கரைச்சு கொட்டுவனா அழனும் அவன் லவ் பண்ற பொண்ணு கூட கனவுல கூட டூயட் ஆட கூடாதா….என்னடா நீ இப்படி பண்றியேடா….

      டேய் ஆன்ந்து….த்தூ….நீ எல்லாம் ஒரு ஆளு…நீயும் நல்லது பண்ண மாட்ட….நல்லது பண்ண நினைக்குறவனுக்கும் குடைச்சல் குடுப்பியா நீ….இதுல இவருக்கு லவ்ஸ் ஒண்ணுதான் கேடு….
      அமிழ பகடையா மாத்த இப்போ பதறுற ஆனா ஏற்கனவே நீ அவள பகடையா மாத்திட்ட டா…..அவள் தனக்கு கல்யாணம்னு சொன்னதும் அவள் வீட்டல போய் பேசாம….சித்த அவமானப்படுத்தனும்னதுக்காகவே கல்யாணம் வரைக்கும் இழுத்தடிச்சவன் தானே நீ….நீ எல்லாம் பேசுற….

    3. Archana

      மீ-சந்துரு இந்த கனவுலே கூட நியாயம் வேண்டாமா கோபி🤣🤣🤣🤣🤣 இந்த ஆனந்த் கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவனோ🤔🤔🤔🤔

    4. Sangusakkara vedi

      Magi ku intha nilama varum nu Nan ethir pakala…. Ithellam sidh kun terunja avanoda reaction epdi irukum … Trailer pathu anand pathila ami ya kalatti vitruvannu ninachen… But aven ami serious ah love panran… Rmba cute ah iruku anand ah ami kuda pakkum pothum. Ami love pannum pothum…. Aana sidh ninacha mattum anand anniyana mariruran…. Ithula Namma Chandru ku Vera puthusa love feel summa Vera level dreams la lovez vidurathu…. So sweet…..