Loading

அத்தியாயம் எட்டு

சித் வீடு :

பதறி ஓடி வருபவளை பார்த்து சந்துருவும் ராதாவும் எழுந்து நிற்க , அவளை கட்டிக் கொண்டிருந்தவனோ எந்த வித உணர்சிசிகளையும் காட்டாமல் அமைதியாக  அமர்ந்து இருந்தான் .

” என்னாச்சு மகி  ஏன்  மா இப்படி ஓடி வர ” என்று ராதா கலவரத்தோடும்

” மகி என்னாச்சு “என சந்துருவும்  கேட்க , மகியோ சற்று கலங்கிய   சற்று முன் நடந்ததை கூறினாள்  .

அறையில் கடுப்புடன் அமர்ந்திருந்த மகிக்கு கால் (call ) வரவ,  அதனை எடுத்தாள் . சௌமியா  தான் அழைத்திருந்தாள்  தன் நலத்தை விசாரிக்க அழைக்கிறாள் என்று தான் இருக்கும் கடுப்பில் அதனை  நினைத்து அவள் எடுக்க வில்லை , விடாது   அவள் அழைக்க வேறு வழியின்றி அதை அட்டென் செய்து

” என்ன டி இப்போ ” என்று மகி ஆரம்பித்திலே கத்த , மறு பக்கம் அழுகை குரல் கேட்டு திடுக்கிட்டாள் .

” சௌமி  என்ன ஆச்சு ஏன் அழுற  ” என்று கேட்க , மறுபக்கம் அழுகையே மீண்டும் கேட்டது .

” அடியேய் சொன்னா தானே தெரியும் சொல்லு என்னாச்சு ” என்று மகி அதட்ட , விசும்பளுடன் கூற ஆரம்பித்தாள்

” மகி சந்தியா கையை கட்பண்ணிகிட்டா  “

” வாட் !!  என்ன ??!  ஏன் ?? ” என அடுக்கடுக்காக கேள்விகளை அடுக்க

” அந்த ஸ்ரீ இவள வேணாம்னு சொல்லிட்டான் போல  அதான் அவ இப்படி பண்ணிட்டா இரண்டு நாளா என் கூட தான் இருந்தா  , நா இல்லாத நேரமா பார்த்து இப்படி செஞ்சிட்டா “

மகி ” இதெல்லாம் எப்ப  நடந்தது “

” அது …அது  உன் கல்யாணம்  முன்னாடி நாள் தான் அந்த ஸ்ரீ அப்படி சொன்னான் ,  அப்போ  எப்படி உன்கிட்ட  சொல்ல முடியும் அதான் சொல்லல “

” சரி அழாத  இன்னும் கொஞ்சம் நேரத்தில் நா வரேன் வை ” என்றவள் அவர்கள் இருக்கும் இடத்தை கேட்டுவிட்டு அழைப்பை துண்டித்தாள் .

” ஆண்டி என் பிரண்ட் சூசைடு அட்டென் பண்ணிட்டா  ( suicide attend )  ஹாஸ்பிடல் ல  அட்மிட் பண்ணிருகாங்க நா போய் பாத்திட்டு வரட்டுமா  பிலீஸ் ஆண்டி, கொஞ்சம் நேரத்தில் வந்திரேன் “

” அட இதுக்கெல்லாம் எதுக்கு பிலீஸ் ,  போய்ட்டு வா மா .  சித்  மகியை கூட்டிட்டு போ  டா ” என்கவும் அவனுக்கு மேலும் கோபம் ஏறியது  ஏற்கனவே அவளிடம் சண்டை போட்டு தான் இங்கு வந்து அமர்ந்திருந்தான் . இப்போது அவளுக்கு உதவி செய்ய நான் போகனுமா என்ற கடுப்பு ஆனால் , இப்போது தான் அம்மாவை கஷ்டப்பட்டு சமாதானம் செய்தோம்  சரி செல்வோம் இல்லையென்றால் தாய் தன்னுடன் பேச மாட்டார்கள் என்று தனக்குள்ளே யோசித்தவன் காரை உயிர்ப்பிக்க  செல்ல மகியும் அவன் பின்னே ஓடினாள் .

” சந்துரு நீயும் போட இல்லேனா மகிய திட்டிட்டே கூட்டிட்டு போவான் ” என்று ராதா கூறவும் சந்துருவும்  சென்றான் .

” சே நிம்மதியா சாப்பிட விடுறாங்களா இன்னொரு ரவுண்டு சிக்கன் பிரியாணி சாப்பிடலாம்னு நினைச்சா,   வேலைய குடுத்து தொரத்துரானுங்க  நமக்கு எட்டுனது ஒரு ரவுண்டு தான் போல ” என்று புலம்பி அவனும் ஓடிச்சென்று முன் இருக்கையில் அமர்ந்தான்.   சந்துருவிற்கு அவன் கவலை .

மகி  மிகவும் நொந்து போனாள்  நிம்மதியே சில நாட்களாக அவள் வாழ்வில் இல்லை என்று ஆகியது . இதில் தோழி வேறு இவ்வாறு செய்வது அவளும் எத்தனை பிரச்சினைகளை தான் தாங்குவாள் . கடவுள் மகிழ்ச்சி மகியின் வாழ்க்கையில் வரக் கூடாது என்று நினைத்துவிட்டார் போல ?! .

காரை வேண்டுமென்றே சித் உருட்டிக் கொண்டு போக மகி கையை பிசைந்துக் கொண்டு கண்ணீரை வெளியே கொட்டிராமல் அடைக்கி வைத்திருந்தாள் . இப்போது சந்துருவிற்கு தான் யாரிடம் சமாதானம் பேசுவது என்று தெரியவில்லை . சரி சித்திடமே ஆரம்பித்தான்

” மச்சான்  வேகமா போ டா  எதுக்கு இப்படி மெதுவாக போகிறாய் ” என்று கிசு கிசுப்பாக அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் கேட்க ,

”  அமைதியா வரேனா வா  இல்லைனா கீழ இறங்கிக்கோ , என்னை கல்யாணம் பண்ணாள படட்டும் நல்லா ” என்று வில்லன் போல் கூற , சந்துரு தான் தலையில் அடித்துக் கொண்டான் .

” மகி எதுவும் இல்லை  கூல் அதான் ஒன்னும் இல்லைனு சொல்லிட்டாங்கல   ” என்று சந்துரு மகியிடம் பேச

” இல்லை சந்துரு அவளுக்கு யாரும் இல்லை , அம்மா அப்பா ரெண்டு பேரும் இரண்டு வருசம் முன்னாடி தான் இறந்தாங்க  சின்ன வயசுல இருந்து என்னோட ஃப்ரண்டு…  எப்பவும் எந்த சூழ்நிலையிலும் என் கூட இருப்பா , அவ அப்பா , அம்மா போனதும்  காலேஜ் வந்து தினமும்  அழுதிட்டு தான் இருப்பா ஒரு வழியா நானும் சௌமியும் தான் கொஞ்சம் கொஞ்சமா மாத்தினோம்  இப்போ ” என்று அடக்கி வைத்த கண்ணீர் மகியின் காபி நிற விழிகளில் இருந்து  அருவியாக கீழே வடிந்தது , அதை பார்த்து சந்துருவிற்கு என்னவோ போல் ஆகிவிட்டது .

” சித் கொஞ்சம் வேகமாக போறிங்களா ” என்று மகி  மூக்கை உறிஞ்சி கூற , சித்திற்கு என்ன  சண்டையை மறந்து விட்டாளா என்ற யோசனையுடனே திரும்பி பார்த்தான் .  மனைவியின் கண்ணீர் முகம் தான் தெரிந்தது  சற்று நேரம் அழுததற்கே முகம் நன்றாக சிவந்து விட்டது ,  மகியின் கண்ணீர் சித்தின்  மனதை துளைத்து  ஏதேதோ செய்தது , கியரை மாற்றி வண்டியை பறக்க விட்டான் .

மருத்துவமனை :

கொஞ்சம் நேரத்தில் மூவரும் மருத்துவமனையை அடைந்து விட சித்  காரை நிறுத்தியதும் மகி இறங்கி ஓடி விட்டாள் .  சந்துருவும் இறங்கி காரில்  சன்னலில் இரு  கைகளையும்  வைத்துக் கொண்டு

” என்ன மச்சான் மனைவி கண்ணீரை பார்த்ததும் துடிச்சு  காரை பறக்க விட்ட போல ” என்று நக்கலாக கேட்க , பதில் பேசாது  அவனை முறைத்து விட்டு காரை பார்க் செய்ய கிளம்பி விட்டான் . அவனும் இரு தடவை உணர்ந்து விட்டான் மகியின் வருத்தம் ஏதோ தன்னை மாற்றுகிறது என்று .

‘  இல்லை அமிழ் இருக்கிற இடத்தை யாருக்கும் கொடுக்க மாட்டேன்   மகியை துரத்தனும் ‘ என்று மனதில் சபதம் இட்டுக்கொண்டு பார்கிங் ஏறியாவிற்கு சென்றான் .

மருத்துவமனையில் அனுமதித்த தன் தோழி சந்தியாவை   பார்க்க வந்தவள் நலம் விசாரிக்காமல் கன்னத்திலே  விரல் பதிய ஓங்கி ஒரு அறையை விட்டாள் . சௌமியா  தடுக்க வருவதற்கு முன்னே  சந்தியாவின் கன்னம் சிவக்க  அடித்து விட்டாள் . அடித்தும் கோபம் குறைய வில்லை மகிக்கு  . காதலித்தவன் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால்  உடனே இறந்து விட வேண்டுமா என்ன? என்ற ஆதங்கம் அதிகம் இருக்க ,  தன் தோழியை மீண்டும் அடிக்க கை ஓங்கியவள்  சந்தியாவின்   வதங்கிய முகத்தை பார்த்து அவள் அருகே சென்று கட்டிக் கொண்டாள் மகி .

” எப்போ இருந்து டி இப்படி   மாறுன ,  சொல்லி தொலை அவன் விட்டுட்டு போனா  நீ சாக பாப்பியா எங்கல நீ நினைச்சு பார்க்கலேல  ” என்று ஆதங்கத்துடன் கேட்க , அழுகையே பதிலாக கொடுத்தாள் .

” அந்த ஸ்ரீ க்கு தெரியுமா சௌமி “என்று மகி  கேட்கும் போது , அந்த அறை  கதவை திறந்து ஸ்ரீ வந்திருந்தான் . அவன் சந்தியா அருகில் செல்ல நினைக்கும்போதே  அவனை தன் கைகளை காட்டி  தடுத்திருந்தாள் மகி

” இப்போ எதுக்கு இங்க வந்த செத்துட்டாளா இல்ல உயிரோட இருக்காளானு பார்க்கவா ” என்று கத்த

ஸ்ரீ ” மகி நிறுத்து “

” என்னாடா நிறுத்த  உன்னை நம்புனா பாறு இவள சொல்லனும்  வெட்கமா இல்லை இப்படி நம்புன பெண்னை கைவிட  “

” மகி நா ஏற்கனவே நொந்து போய் இருக்கே பிலிஸ் ” என சோகமாக இருப்பது போல் முகத்தை மாற்றிக் கொள்ள 

” ஓஓஓஓ…நொந்து வேற இருக்கியா சந்தியாவை உன் வாழ்க்கையை விட்டு  போக சொன்னியாமே  அதுக்கு அவ தானே அப்படி இருக்கனும் “

” மகி என்ன நடந்ததுனு புரியாம பேசாத “

” என்ன டா என்ன ..லவ் பண்ணுவிங்க , பிடிக்கலேனா போய்ருவிங்க , பொண்ணுங்க என்ன உங்களுக்கு பொம்மையா “

” மகி புரிஞ்சிக்கோ “

” ஸ்ரீ இப்போ நீ இங்க இருந்து போகல  நடக்குறதே வேற… மரியாதையா போக சொல்லு சௌமி இவன “

” மகி புரிஞ்சுக்கோ எங்க அப்பா சந்தியாவ கொள்ள பாத்தாறு அதான்  நான் அவள  என்னை விட்டு போக சொன்னேன் ” என்கவும் அனைவரும் சற்று அதிர்ச்சி ஆனார்கள் . மீண்டும் ஸ்ரீயே தொடர்ந்தான்

” ஆமா மகி  , எங்க அப்பாவுக்கு சந்தியாவை பிடிக்கல  அவ வேற ஜாதியாம்  ” என்று கூறும் போதே தலை குனிந்துக் கொண்டான்  .

” நா அவ கூட தான் இருப்பேனு சொன்னே அவரு சந்தியாவ கொள்ள போறேன்னு சொன்னாரு  , அதான் வேற வழி இல்லாம  நா அவள என் வாழ்க்கையை விட்டு போக சொன்னேன் “

” ச்சீ…இந்த காரணத்தை சொல்ல வெட்கமா இல்லை , ஜாதி ஜாதினு அது என்ன தருது  உங்களுக்கு  சோறு போடுதா , இல்லை  அன்பு , காதல் , பாசம் இதுல எதாச்சும்  தருதா  இல்லை… எல்லாம் கௌரவம் வரட்டு கௌரவம் .   உங்க அப்பா  சந்தியாவ வேணாம்னு சொன்னா நீ அவள கூப்பிடு எங்கையாச்சு போய்ருக்கனும் , அவரு கொள்ளுவேனு சொன்னா என்னை கொன்னு போட்டுட்டு அவ மேல கை வைங்கனு சொல்லிருக்கனும்  அதை விட்டுட்டு அவள போக சொல்லிருக்க . நீங்க எல்லாம் சாப்பிட்டும் போது மட்டும் எந்த ஜாதி காரன் விளைவிச்சானு தெரியாம ஏன் சாப்பிடுறிங்க , அதை மட்டும் எதுக்கு யோசிக்காமல் சாப்பிடுரிங்க  , என் ஜாதி காரன் உருவாக்கும் அரிசியை தான் சமைச்சு சாப்பிடுவேனு சொல்லுங்க பாப்போம் . உன் மேல எவ்வளவு காதல் வச்சிருந்தா  சந்தியா இந்த முடிவுக்கு வந்துருப்பா ” என்று மகி கோபத்துடன் கத்த , ஸ்ரீ சந்தியாவை பார்த்தான் . அவளோ கண்ணீரை வடித்துக் கொண்டு இருந்தாள் .

” இப்போ சொல்லு சந்தியா உனக்கு இவன் வேனுமா ” என்க அவள் வேனும் என்பது போல லேசாக தலையை ஆட்ட , மகிக்கு  கோபம் ஏறியது

” சந்தியா அவங்க அப்பா சொன்னாங்கனு உன்ன விட்டவன் ,  நாளைக்கு கல்யாணம் ஆனாலும் இப்படி பன்ன மாட்டானு என்ன நிச்சயம் ” என்று  ஸ்ரீயை பார்த்துக் கொண்டே ஏளனமாக கூற , அவனோ போலி  கண்ணீர் வடிய தலை குனிந்து கொண்டான்  .

”  உன் வாயால் இப்போவே அவன  வேணாம்னு சொல்லி  ஸ்ரீய வெளிய போக சொல்லு ” என்று பொறுமையாக கூற , எங்கே சந்தியா வாயை திறந்தாள் தானே !!

அதில் கோபமுற்று  மீண்டும் அவளை அறைய போக , இந்த முறை சௌமியா முன் வந்து  தடுத்திருந்தாள்

” மகி யூ ஃபர்ஸ்ட் ஸ்டாப் இட்  (mahi you first stop it )  அவளாச்சு தன்  காதலுக்காக கொஞ்சமாகச்சு போறாடுறா , நீ எல்லாம் பேசாத காதலை சொல்லாம மறைச்சு வாழுற நீ காதலை பத்தி பேசாத. காதல விட்டு கொடுக்கிறது நாள உனக்கு  தியாகி  பட்டம் கொடுக்க மாட்டாங்க . உன் மனச ஏமாத்திட்டு ஒரு போலியான வாழ்க்கையை வாழுற நீ சந்தியாவுக்கு அட்வைஸ் பண்ணாத ” என்கவும் மகி அமைதியானாள் .

” முதல் நீ சித்தார்த் ஆ காதலிச்சத அவன்கிட்ட போய்  சொல்லு  , அப்பறம் வந்து இவளுக்கு அட்வைஸ் பண்ணு ” என்று   சௌமியாவும் பொறுக்காமல் கத்திவிட்டாள் .

இவ்வளவு நேரமும் நண்பர்களை தொல்லை செய்யாமல் வெளியே நடந்ததை கேட்டுக் கொண்டிருந்த உருவம் கதவை திறந்து அதிர்ச்சியாக பார்க்க , சௌமியாவும் சற்று பயந்து விட்டாள் . ஓவராக போய்விட்டோமோ என்றும் தோன்றியது.  ஒரு வேளை பேசியதை கேட்டிருப்பானோ என்று அவனை பார்க்க , அவனோ  தலையை குனிந்து கொண்டிருக்கும் மகியை பார்த்துக் கொண்டு இருந்தான் .

மறக்க நினைத்தேன் முடியவில்லை  !!என்னை மாற்ற நினைத்தேன் அதுவும் முடியவில்லையே !!
மயங்க மறுத்தாலும்,  மயங்குகிறேன்
என் மாய கண்ணனிடம் !!

என் வாழ்வில் வந்தது ஏனோ என் உயிரே  ??!… 😍💋

பிரியாமல் தொடரும் 😍💋…..

உங்களின் புல்லட் வெடி 🎉

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
21
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    13 Comments

    1. ரைட்டு….மகி லவ் பண்ணது சித்தார்த தான்னா அப்போ கண்ணா சித்தார்த் தானே….இவள் தான் அவன லவ் பண்ணியிருக்காள்னா அவன் ஏன் அமிழ லவ் பண்ணனும்…அதுவும் ஏற்கனவே வேற ஒருத்தன லவ் பண்றவள! இப்போ கதவை திறந்துட்டு வந்தது சந்த்ருவா? இல்ல சித்தார்த்தா? உண்மை தீரகஞ்சா இந்த சித்தார்த் அதுக்கும் நீ என்னை ஏமாத்திட்ட….வேணும்னே உண்மைய மறைச்சிருக்க அப்படி இப்படினு மகிய திட்டுவானே….யாருகண்டா அமிழ கல்யாண மண்டப்த்துல இருந்து தொரத்தினதே அவள் தான்னு சொன்னாலும் ஆச்சரகயப்படுறதுக்கு இல்ல….இன்னும் என்னென்ன நடக்க போகுதோ!!!!

    2. Ama Mahi sollurathu crt tha ipo ellarum caste tha pakurangale thavira yarum manasa paakamaaturangaaa😖😏 appa solli vittu tu poraven epdi life full la irupanu nichiyam crt ta keta mahii🔥🔥🔥…..apro suicide tha ellathuku answer nu illa athu yarukum teriyamaatinguthu …keta paru kelvi mahi Yoda frd ….Mahi ku answer pannave mudila apro yara irukum kathava thuranthathuuuuuu……🤔🤔🤔 waiting for next epi❣️❣️❣️

    3. மகியோட கண்ணா சித் தானா?

    4. என்னாது மகி லவ்ஸ் பண்ணது சிடுமூஞ்சி சித்தையா 😳😳😳😳 இது எப்போ அப்போ மாய கண்ணா சித்தாஆஆஆ

      1. Author

        நீங்க நம்பலனாலும் அதான் நிஜம் 😁😁😂😂

    5. கதை மாந்தர்கள் மனதை கொள்ளை கொண்டு விட்டனர். மனதிற்கு பிடித்தமான காதல் கதைக்களம். சிறப்பான எழுத்து நடை. மேலும் படைப்புகளை தொடர வாழ்த்துகள்.

    6. Wooow appo naan ninaichathu sari…
      Kannavum siduvum onnu…
      Amil urugi urugi love panna naval varthayil nu sidh solluvanla antha eluthellam mahi yodatha irukkanum