Loading

என்னவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து…

உன்னை பார்த்த முதல் நாள்,
பசுமரத்தாணியாக உள்ளது
என் மனதில்,,,,

கண்டவுடன் காதல் இல்லை,,,
என்றாலும்!!! ஏதோ ஒரு சலனம்
என்பது உண்மை தான்….

உன்னைப் பற்றி முன்பே
கேட்டிருந்ததால் இந்த
தடுமாற்றமோ!!!!????

உன்னுடன் பழகிய பல நாட்களில்
வந்து வந்து போகும்,,,
நீ என்னவன் தான் என்று 🙂

உன்னை பார்க்க வேண்டுமென்றே
எதேட்சயாய் உருவாக்கப்பட்டது
பல சந்திப்புகள்….

உள்ளன்போடு நீ அனுப்பும்
ஒற்றை வார்த்தை குறுஞ்செய்தியை
ஓயாமல் படித்து பார்த்த
தருணங்கள் சொல்லும்
என்னவன் நீ என்று,,,,

எவ்வளவு தொலைவிலும்
பளிச்சிடும் உன் கண்கள்,,,,

தந்தையை இழந்துவிட்டேன்,,,,
என் தோழனை இழந்து விட்டேன்
என்று நீ சொன்ன தருணம் நான் உன்னை சமாதானம் செய்ய தவித்தது எல்லாம் இதோ என் கண் முன்னே,,,,

நட்போடு பேசினாயா????
காதலோடு பேசினாயா???
என நான் தவித்து,,,
உன் பேச்சின் உள்ளர்த்தம் உணர்ந்து
நான் புரிந்துகொண்டேன்,,,
உன் மனதில் நான் இருக்கிறேன் என்று,,,

புகழ்பெற்ற காதல்
கதாப்பாத்திரங்களுக்கு நம் பெயர்
வைத்து குறும்பாய் நம் பெயரை
இணைத்து பார்த்த நாட்கள்
அழகானவை…

வாய்விட்டுச் சொல்லவில்லை
நான்..,, உன் மீதான என் காதலை…
ஆனாலும் நீ என்னவன் தான்…..

மேகம் மறைக்கும்
முழு நிலவு போல
என்னையே ஏமாற்றி
என் மனதை மறைக்க
முற்பட்ட நாட்கள் பல…..

வளைக்க வளைக்க
வீறுகொண்டெழும் மூங்கிலைப் போல
விஸ்வரூபமாய் வளர்ந்து கொண்டே
போனது என் காதல்..,
நான் என்ன செய்ய!!!!

குரங்காய் மனம் மாறி
மறைக்கவோ!!!! ஒதுக்கவோ!!!!
முற்பட்டாலும்,,,, விடவில்லை,,,,
உன் மீதான என்
பொல்லா காதல்…:-/

சட்டென்று வெளிவந்தது
என் காதல் பல புற்றீசலாய்….

உயிர்வாழாது என தெரிந்தும்
வெளி உலகத்தை
காணும் ஆவலைப் போல….

நீ கேட்டாய்,,, அதிர்ந்தாய்,,,
சிரித்தாய்,, என்னவனே….
”’என்னவள் நீயடி” என்ற
ஒற்றை வார்த்தையில்
என்னை உன்னவள் என்று
உறுதிப்படுத்தினாய்….

நாட்கள் நகர்ந்து நமக்குள் உள்ள
காதல் அதிகரிக்கும்
என நினைத்தேன்….
ஆனால் என் காதல் கருகும்படி
எனை விட்டு விலகுவாய் என
நினைக்கவில்லை….

கருகாத என் காதல்
மீண்டு எழுந்தது….
உன்னிடம் வந்து முறையிட்டது..

மறுபடியும் நீ கேட்டாய்,,,,
அதிர்ந்தாய்,,,
இப்போது நீ சிரிக்கவில்லை…
என்னவள் நீயடி என்று
உரைக்கவும் இல்லை….
அதற்கு மாறாக
மனம் வருந்தினாய் என்னவனே.!!!!

என்னை மீளச்செய்ய
நீ மீண்டு வந்தாய்,,,,
என் சொல்ல????

எதையும் புரிந்துகொள்ளவில்லை
என் பாழ் மனது!!!
என் காதலைத் தவிர,,,,

செய்து முடிக்கவேண்டிய கடமைகளால்
நீ கட்டுண்டு இருக்கிறாய்
என நான் அறிவேன்…..

எனவே நீ பேசினாய்…..
வினவினாய்,,, கலங்கினாய்,,,
விளக்கினாய்,,,,, அரட்டினாய்,,,,
வேண்டாமென மன்றாடினாய்….

அத்தனையையும் மெத்தன
காதல் பார்வையில் தானே
பார்த்து ரசித்துக் கொண்டிருந்தது
என் கல் மனது….

ஐந்து வருடம் இருப்பாயா
என்னை பாராமல், பேசாமல்,
இதே காதலுடன் என்றாய்….
பின்னாளில் உன்னை
மறந்துவிடுவேன் என நினைத்து….

அதற்கும் ”ஏன் இருக்க மாட்டேனா????
ஐம்பது வருடம் ஆனாலும் காத்திருப்பேன்”’ என்றேன்
ஏளனப் புன்னகையுடன்….

என்னைக் கண்டு காதல் வரவில்லை..
உனக்கு,,,, அதற்கு மாறாக
வந்த அனுதாபத்தில் வருந்தினாய்
எனக்காக நீ….

என்னை கொஞ்சம் கொஞ்சமாக
புரிந்துகொள்வாய்
என தான் நினைத்தேன்….

சுற்றி வரும் நிழலாக
தொடர்ந்து வரும் சுவாசமாக
மனக்குளத்தில் நினைவலையாக
காலை சுற்றிய
பாம்பாகவும் இருந்தேன் நான்,,…

உன்னை பற்றிய
என் ஆயிரம் ஆயிரம் கற்பனை
ஆழ் மனதில் வலிகளாக
வலம் வந்தாலும்
உன்னை விடவில்லையே
என் காதல் மனது,,,,,,

எத்தனை எத்தனை வேதனை,,,
எத்தனை எத்தனை போராட்டம்,,,
எத்தனை எத்தனை குழப்பம்..,,
அத்தனையையும் தாண்டி
என்னிடம் சொன்னாய்….
”நான் வேறு ஒருவளை
நேசிக்கிறேன்,,,
அவளை தான் மணம் புரிவேன்”’
என்று,,,,

இதற்காக தானா
என் மனதை விதையிட்டு
என் உயிரை உருக்கி
ஊற்றி வளர்ந்தேன்
என் காதல் மரத்தை…..
🙁 🙁

உயிரே யார் என்னை
புரிந்துகொள்வார்,,,
எனது குழந்தை மனதை,,,,

வறண்ட நாவில் தேனைப் போல
உயிரின் விளிம்பில்
இருந்த என்னை,,,,
உனதுயிரால் உன்னவள் ஆக்கினாய்….

பத்து மாதம் சுமந்த தாயின்
துயர் போக்க மலர் முகம் காட்டும்
பச்சிளம் குழந்தை போல

போராடிக் கொண்டிருந்த
என் வாழ்விற்கு அர்த்தத்தை கொடுத்த
கடவுள் நீ….

உனக்கென வாழ்வதில்
அத்தனை அத்தனை சந்தோஷம்
என் உயிர்க்கு…
உனக்கென துடிப்பதில்
அத்தனை அத்தனை மகிழ்ச்சி
என் இதயத்திற்கு….

நீ என்னை விட்டு தூரம்
போனாலும் என் காதல் மனது
உன்னிடமே வருகிறது,,,,

என்னை நீ எவ்வளவு வெறுத்தாலும்
என் உயிரானவன் நீ மட்டுமே,,,,
இதை விட வேறென்ன
வேண்டும் ஒரு பெண்ணானவளுக்கு….
வரமாய் கிடைத்த வரம் நீ….

உன்னிடம் பொய் சொல்ல தெரியாது
இந்த காதல் மனதிற்கு,,,,
சொன்னாலும் கண்டுபிடிக்கும்
உன் மனது,,,, என் கண்களைப் பார்த்து அல்ல,.,, என் குரலைக் கேட்டு
நீ சிறிது முகம் காட்டினாலே
பொசுக்கென்று வரும் கண்ணீர்..
நீ சமாதானம் பேசினால்
வந்த இடம் தெரியாமல்
அப்போதே மறைந்து விடும்…
என் கனவினில் மட்டும்….

எதற்கெடுத்தாலும் அழும்
பெண்ணல்ல நான்….
இப்போது எதற்கெடுத்தாலும்
அழுகிறேன்…..
நீ வருவாய் எனும் தைரியத்தில்….

பிறரை சார்ந்து வாழாதே என்பேன்,,,
உன்னை சார்ந்திருப்பதே
என் வாழ்க்கையானது இன்று,,,,

என் பேராசையால்
எனக்கென்று பிறந்த உனக்கு
இன்று பிறந்தநாளாம்..,
என்னவனுக்கு பிறந்தநாளாம்…
இதை என்னிடம் நீயோ!!! நம் உறவுகளோ சொல்லவில்லை
உயிரானவனே!!!!

உன்னுடன் நான் பேச ஆரம்பித்த
அந்த ஆரம்ப நாட்களில்
உன்னிடம் வந்து பேசிய
முகநூல் கணக்கில் நான் பார்த்த
உன் பிறந்தநாள் தேதி இதுவே,,,

இந்த தேதி தான் உனது உண்மையான
பிறந்தநாள் தேதியா???
என்பது கூட தெரியாது..,
இருந்தாலும் இந்த இனிய நன்னாளில்
உனக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல
ஆயிரம் சொந்தங்கள் இருக்கலாம்,,,

கோடிக்கணக்கில் வாழ்த்துக்கள் குவியலாம்,,,
உன் மனம் கவர்ந்த பெண்ணிடம் இருந்து விதவிதமான கவிதை தொகுப்புகளும், புகைப்படங்களும்
பரிசாக கிடைக்கலாம்,,,,
உன் அன்னை உன்னை பெற்ற இந்த நாளை எண்ணி பூரிப்படையலாம்,,,

என் மனம் கவர்ந்த கணவனே
என் காதலனே,,,, உனக்கு பிறந்தநாள் பரிசாக கொடுக்க
என் பாழாய்ப் போன
உணர்வு பூர்வமான
என் காதலை தவிர
என்னிடம் வேறொன்றும் இல்லை,,,

இந்த இனிய நன்னாளில்
நீ பார்ப்போற்றும் தலைமகனாக அல்ல,,உன் தாய் போற்றும் குலமகனாக,,,
உன் நண்பர்களின் இனிய தோழனாக
உன் காதலியின் அன்பான காதலனாக
என் நினைவுகளின் உரிமையாளனாக
என்னவனான நீ என்றென்றும் வளமுடன் வாழ வாழ்த்துகிறேன்,,,,

என் மனமார்ந்த வாழ்த்து உனை சேருமா என தெரியாது,.,,
இருந்தாலும் இறைவனிடம் வேண்டி வாழ்த்துகிறேன்….

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்