Loading

                         அத்தியாயம் 7

யோகேஷ் அவ்வாறு கேட்டதும் தன் தலையை  கீழே தொங்க போட்டு அமர்ந்திருந்தவனின் கண்ணில் இருந்து கண்ணீர் நிற்காமல் வழிந்து கொண்டிருந்தது.

ஆணவனின்  விழி நீரின் வெம்மையானது பெண்ணவளின் பாதம் தொட பதறி துடித்தவள். அவன் தலை நிமிர்த்தி ” அச்சோ அண்ணா இப்போ நீ எதுக்கு அழுகுற அதான் உனக்காக நாங்க எல்லாரும் இருக்கோம்ல தயவுசெஞ்சு  இனிமேல் இப்படி பேசாத” என்று கூறியவள். அவனின் கண்ணீரை துடைத்துவிட்டாள்.

“அங்க பாரு நம்ம பாஸூ எவ்வளவு கோவமா இருக்காருனு எல்லாம் உன்னால தான்..நான் வரதுக்கு முன்னாடி உனக்கு எல்லாமுமா ,அவர் தானே இருந்தாரு. அப்படி இருக்கும் போது நீ அவர்  முன்னோடியே இப்படி பேசலாமா? சொல்லு. அவர் மனசு எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்குமுனு..கொஞ்சமாவது யோசிச்சு பார்த்தியா..  போய் அவரை சமாதானப்படுத்து” போ என்றாள்.

வருண் பற்றி சிறு அறிமுகம்:

வருணின் தாய், தந்தையார் காதலித்து வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டவர்கள்.அவர்களின் காதலின் அடையளமாக வருண் பிறந்தான்.அவன் பிறந்த சில காலங்களில் அவன் தந்தை வாழ்கையில் ஒரளவிற்க்கு உயரத்தை எட்டினார். அவர்களின் வாழ்க்கையும்,மகிழ்ச்சியாகவும்,நிம்மதியாகவும் சென்று கொண்டிருந்த தருணத்தில் தான் வியாபார நிமித்தமாக வெளியூர் செல்ல நேர்ந்தது.வெளியூர் பயணத்திற்க்கு தான் மட்டும் சென்று வருவதாக கூறியவரை தானும் உடன் வருவேன் என்று வற்புறுத்தி அவனின் தாயும் அவருடன் பயணம் மேற்கொண்டார்.வருணின் பள்ளி படிப்பை காரணம் காட்டி அவனை வீட்டிலேயே விட்டு சென்றனர். அப்படி செல்லும் பொழுது எதிர்பாரத விதமாக இருவரும் விபத்தில் மாட்டி தங்கள் இன்னுயிரை அங்கேயே நிர்த்தனர்.தன் தாய் தந்தை இறந்த செய்தியை கேட்டு அச்சிறு பிஞ்சோ அழுது ஆர்பரித்து துவண்டு போனான்.அன்றிலிருந்து அவனுக்கு தனிமையே துணையாக கிடைத்தது. அப்படி இருக்கையில் வரமாய் கிடைத்தது தான் யோகேஷ் உடனான நட்பு தான் படிக்கும் பள்ளியில் தன் வகுப்பிற்க்கு புதிதாக வந்து சேர்ந்தவன் தான் அவன்‌.சிறு வயதிலிருந்தே அனைவருடனும் இலகுவாக பழகும் குணம் கொண்டதால் யோகோஷ் உடனும் எளிதாக நட்பு பாராட்ட ஆரம்பித்து நாளடைவில் இவனுக்கு எல்லாமுமாக மாறியும் விட்டான் அவன்.அன்றிலிருந்து இன்று வரை இவ்விருவம் இணைபிரியா நட்போடும், அளப்பரியா அன்போடும் உல வருகின்றனர்.

அப்படி இருக்கையில் இவன் இப்படி ஒரு வார்த்தையை உதிர்த்தால் யாருக்கு தான் கோவம் வராது??

யோகோஷ் எவ்வளவே வற்புறுத்தி தன்னுடனே தன் வீட்டில் அவனை தங்க சொல்ல அவனே இன்றளவும் அதை மறுத்து தனியே இருந்து வருகிறான்.

யாழினி அவ்வாறு கூறியதும் தான் அவன் தவறை  உணர்ந்து அவனிடம் மன்னிப்பு வேண்டினான்,”மச்சான் சாரி டா நான் அப்பாடி சொல்லி இருக்க கூடாது தான்.ஏதே என்னை அறியமாலே அப்படி சொல்லிட்டேன் டா.யாழியை பார்த்ததும் எனக்கு ஒரு மாதிரி ஃபீல் ஆகிடுச்சு டா ஏதே எனக்கு ரொம்ப நெருங்குன சொந்தம் மாதிரி தோணுச்சு.அதான் என்று கூறி பாவமாக முகத்தை  வைத்து கொண்டான் அவன்.

அவனுடைய பாவமான முகத்தை பார்த்து சிறிது நேரம் பேசமால் இருந்தவன் பின்பு ” நீ இப்படி பேசுறது இதுவே கடைசியா இருக்கட்டும் இனிமேல் அப்படி பேசுனா பேச வாயிருக்கும் நீ இருக்க மாட்ட பார்த்துக்க”..என்று மிரட்டல் விடுத்தவாறே அவனை கட்டி தழுவிக்கொண்டான்.

பின்பு இருவரும் கிளம்புவதாக கூற..யாழினியின் தாயார் அவர்களை இரவு உணவு உண்ட பின் தான் செல்ல வேண்டும் என்று அன்பு கட்டளை விடுத்து ,அவர்கள் இருவரையும் சென்று விடமால் பார்த்து கொள்ளுமாறு யாழியிடம் கூறி விட்டு உணவு தயாரிக்க சமையலறைக்கு சென்று விட்டார்.

அவர் சென்றதும் இவர்கள் மூவரும் தங்களின் பள்ளி பருவ காலங்களை பேச ஆரம்பித்து விட்டனார். அதில் நேரம் போனதே தெரியமால் பேசிக் கொண்டிருந்தவர்களை யாழினியின் தாயார் உணவு உண்ண வருமாறு அழைத்து மூவருக்கும் உணவை பரிமாறினார்.

 சிறிது நேரத்தில் உணவை உண்டு முடித்தவர்கள் அவர்களிருவரிடமும் சொல்லி கொண்டு புறப்பட்டனர்.

வருணை அவன் இல்லத்தில் இறக்கி விட்டவன்.தன் இல்லம் நோக்கி காரை செலுத்தியவனின் நினைவுகள் முழுவதும் “யாழி” ஒருத்தியே  ஆக்கிரமிப்பு செய்து இருந்தாள்.அவள் நினைவுகளினுடே இல்லம் வந்தவன்.தன் அறை நோக்கி சென்றவனை அவன் தாய் தடுத்து நிறுத்தினார்.

“கண்ணா ஏன் ப்பா லேட்?” என்றவரை பார்த்து..

“கொஞ்சம் வேலை இருந்தது ம்மா அதை முடுச்சுட்டு வர லேட் ஆகிடுச்சு.நீங்க ஏன் இன்னும் தூங்கமா இருக்கீங்க”?என்றான் அவன்.

“உனக்காக தான் கண்ணா வெயிட் பண்ணேன்.சாப்பாடு எடுத்து வைக்கனும்ல.என்றவரை பார்த்து…

“ம்மா உங்களுக்கு எத்தனை தடவை சொல்லிருக்கேன் இப்படி நான் வர வரையும் முழுச்சு இருக்காதீங்கனு ஏன் ம்மா கேட்கவே மாட்டீங்குறிங்க” என்று சலிப்படைந்த குரலில் கூற…

அவரே அதை சிறிதும் சட்டை செய்யாமல் “என் பையனுக்காக நான் முழுச்சு இருக்குறது ஒன்னும் எனக்கு கஷ்டமா தெரியலை,அப்புறம் நீ காலைல மட்டும் தான் வீட்டுல சாப்புடுற மதியம் ஆபிஸ்லயே பாத்துக்குறேன் சொல்லிட்டே அதையும் நீ ஒழுங்க சாப்புடுறயா இல்லையானு தெரியமா எனக்கு பைத்தியமே புடுச்சுடும் போல அதான் நைட்டுலயாவது நீ வர வரை முழுச்சு இருந்து சாப்பிட வெச்சுட்டு போய் படுக்குறேன்”.என்று நீண்ட உரை ஆற்றியவரை பார்த்து பெருமூச்சு ஒன்றை விடுத்தவன்…

“என்னம்மோ போங்க மா நீங்க நான் சொல்லுறதவே கேட்க மாட்டிங்க. சரி நான் இன்னைக்கு வெளியவே சாப்பிட்டு வந்துட்டேன்.அப்புறம்  நாளைல இருந்து லன்ஞ்ச் ஆபிஸ்க்கே குடுத்துவிட்டுங்க போதுமா?இப்போ போய் தூங்குங்க காலைல பார்க்கலாம்” என்று கூறிவிட்டு தன் அறைக்கு சென்றுவிட்டான்.

தன் அறைக்கு வந்தவன் குளியலறை சென்று தன்னை தூய்மை படுத்திக்கொண்டு படுக்கையில் விழுந்தவன் யாழினியை பற்றி சிந்தித்தவாறே அவளின் நினைவுகளில் மூழ்கி தூக்கத்தை தொலைத்து விடியும்வேளையில் தான் கண்ணயர்ந்தான்.

மறுநாள் காலையில் வழக்கம் போல் எழுந்தவன் தன் வேலைகளை முடித்துக் கொண்டு அலுவலகம் செல்ல கிளம்பி வந்தவன் சமையலறையிலிருந்த தன் அன்னையிடம்”அம்மா பசிக்குது சாப்பாடு எடுத்துட்டு வாங்க”என்று குரல் கொடுத்தான்.

இதோ வந்துட்டேன் டா கூறியவரே, அவன் தட்டில் இட்லியை வைத்து சட்னி சாம்பார் ஊற்றி அவனை உண்ணுமாறு கூறிவிட்டு அவன் அருகினிலே அமர்ந்து பரிமாறிக் கொண்டிருந்தார்.

“கண்ணா மதியம் என்ன சாப்பாடு குடுத்துவிடட்டும் சொல்லு”?

“எதையாவது செய்து குடுத்து விடுங்க ம்மா”.

சரி ப்பா நான் 12 மணி போல நம்ம டிரைவர் கிட்ட சாப்பாடு குடுத்து விடுறேன் நீ மறக்கமா சாப்பிட்டுடு.

சரி ம்மா… என்றவன் ஆமா எங்க நம்ம குட்டிமாவ காணேம் இன்னோரத்துக்கு கிளம்பி வந்துருப்பாலே என்னாச்சு என்று வினாவினான்.

அவளுக்கு இன்னைக்கு லீவு சொன்ன டா…எக்ஸாம் வருதுல அதுனால ஸ்டடி ஹாலிடே விட்டுருக்காங்கலாம்.அதான் தூங்கிட்டு இருக்க.பாவம் புள்ளை நைட் ரொம்ப நேரம் முழுச்சு இருந்து படுச்ச அதான் கொஞ்ச நேரம் தூங்கட்டுமுனு விட்டுட்டேன்.

ஓஓஓ அதான் இன்னைக்கு வீடே ரொம்ப அமைதியா இருக்க‌ என்று கேட்டவன் உண்டு முடித்து விட்டு தன் அன்னையிடம்”சரி ம்மா அவ எழுந்ததும் அவள தீட்டதிங்க… பாவம் புள்ளை சாப்புட்டு படிக்க சொல்லுங்க நான் ஈவினிங் வந்து அவளை பார்க்குறேன்”.என்று கூறி விட்டு தன் அலுவலகத்திற்க்கு கிளம்பிவிட்டான். 

சிறிது நேரத்தில் அலுவலகத்திற்க்கு வந்தவன். தன் வேலைகளை மும்முரமாக பார்த்து கொண்டு இருந்தவனின் கவனத்தை கலைப்பது போல் யாழியின் நினைவுகள் அவனை படாய்படுத்தியது.

‘ ச்சே என்ன டா யோகேஷ் இது எனக்கு ஏன் நேத்துல இருந்து அந்த பெண்ணு நினைப்வே இருக்கு.அவ என்னை ரொம்ப டிஸ்டார்ப் பண்ணுற.ஒருவேளை நான் அவளை விரும்புறேனா?இது தான் பார்த்ததும் வர லவ்  னு சொல்லுவாங்களோ? ச்சை என்ன டா இது நமக்கு வந்த சோதனை’என்று தன் மனதிற்க்குள்ளே புலம்பியவன். தன் மனம் எடுத்துரைத்த செய்தியை கண்டு அதிர்ச்சியடைந்து குழம்பியவன்‌.தன் முன் இருந்த மடிக்கணினியை மூடி வைத்து விட்டு  இருக்கையில் கண் மூடி அமர்ந்துவிட்டான்.

இவனை இவ்வாறு தவிக்க விட்டவளே தன் இல்லத்தில் உணவுக்காக தன் அன்னையிடம் சண்டையிட்டு கொண்டிருந்தாள்.

பார்த்ததும் காதல் கொண்ட யோகேஷ் தன் காதலை தனக்கானவளிடம் கூறுவனா?.தன் லட்சியத்தை அடைய துடிக்கும் யாழினி யோகேஷின் காதலை ஏற்பளா?.பொருத்திருந்து பார்ப்போம்.

                             _தொடரும்.

                         அத்தியாயம 7

பார்த்ததும் காதல் கொண்ட யோகேஷ் தன் காதலை தன்னவளிடம் கூறுவனா?.தன் லட்சியத்தை அடைய போராடும் யாழினி யோகேஷின் காதலை ஏற்பளா?.பொருத்திருந்து பார்ப்போம்.

                             _தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. கதை மாந்தர்கள் மனதை கொள்ளை கொண்டு விட்டனர். மனதிற்கு பிடித்தமான குடும்பக் கதை. நகைச்சுவையும், அழுத்தமும் கொண்ட சிறப்பான எழுத்து நடை. மேலும் படைப்புகளை தொடர வாழ்த்துகள்.