மருத்துவர், “சாரி டு சே மிஸ்டர். ஆர்யான்… நாங்க எங்களால முடிஞ்ச அளவு முயற்சி பண்ணோம்…” எனக் கூறும் போதே ஆர்யானின் இதயம் வேலை நிறுத்தம் செய்வது போலிருந்தது.
ஆர்யான், “எ… என்… என்ன சொல்… றீங்க… டாக்டர்…” என பயத்துடன் வினவ,
“அவங்க கோமா ஸ்டேஜுக்கு போய்ட்டாங்க…” என ஆர்யானின் தலையில் இடியை இறக்கி வைத்தார் டாக்டர்.
டாக்டர், “அவங்க ரிப்போர்ட்ஸ் பார்த்தேன் நான்… ஆல்ரெடி மூணு தடவ அவங்களுக்கு ஃபிட்ஸ் வந்திருக்கு… அவங்களுக்கு ட்ரீட்மன்ட் பார்த்த டாக்டர் சொல்லி இருப்பாங்கன்னு நினைக்கிறேன்… இப்படி தொடர்ந்து ஃபிட்ஸ் வரது ஒருத்தங்களோட ப்ரைன டேமேஜ் பண்ணும்… இதனால உயிர் போற நிலமை கூட ஏற்பட வாய்ப்பு இருக்கு… பட் சிதாரா கோமா ஸ்டேஜுக்கு தான் போய் இருக்காங்க… ஆல்ரெடி மென்டலி டிஸ்டர்ப்டா இருந்தவங்கள அங்க நடந்த விஷயம் இன்னும் பாதிச்சிருக்கு… அதனால தான் சிதாரா கோமாக்கு போய் இருக்காங்க… ” என்க,
தன்னை சமன் செய்து கொண்ட ஆர்யான், “பட் அவ சரி ஆகிடுவா தானே…” என பரிதவிப்புடன் கேட்டான்.
“கோமாக்கு போய் உடனே சுயநினைவை அடஞ்சவங்களும் இருக்காங்க.. சிதாரா கூட இப்பவே கூட ரிக்கவர் ஆகலாம்… ஒரு நாள் போகலாம்… ஒரு மாசம் போகலாம்.. ஒரு வருஷம் இல்ல பல வருஷம் போகலாம்… ஏன் சுயநினைவு வராம கூட போகலாம்… அவங்களுக்கு நீங்க பேசுறது எல்லாம் கேட்கும்… பட் அவங்களால ரியாக்ட் பண்ண முடியாது… நீங்க போய் அவங்க கூட பேசுங்க… உங்க அருகாமைய அவங்களுக்கு உணர்த்துங்க… ஏன்னா அவங்க உங்க பேர தான் சொல்லிக்கிட்டே இருந்தாங்க… அவங்க ரொம்ப ஆசைப்படுற இல்ல எதிர்ப்பார்க்குற விஷயத்த அவங்க கிட்ட சொல்லுங்க… சீக்கிரம் குணமாகிடுவாங்க… முயற்சி பண்ணுங்க… கடவுள் உங்களுக்கு துணை இருப்பாரு… ஆல் தி பெஸ்ட்.. ” என்று விட்டு சென்றார் டாக்டர்.
விடாது வடிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்ட ஆர்யான் ஒவ்வொரு எட்டுகளாக வைத்து ஐ.சியுவை நெருங்கினான்.
ஆர்யானால் ஜடம் போல் படுத்துக் கிடக்கும் சிதாராவைப் பார்க்க முடியவில்லை.
உள்ளே செல்லாமல் ஐ.சி.யு கதவின் துவாரம் வழியாக சிதாராவைப் பார்த்தவன் தன் உள்ளங்கையை இறுக்கி மூடி தன்னைக் கட்டுப்படுத்தியவன்,
“இல்ல மினி… உன்ன இந்த நிலமைக்கு ஆளாக்கினவனுக்கு ஒரு முடிவு கட்டாம நான் உன் கிட்ட வர மாட்டேன்… ” என்றவன் யாருக்கோ அழைத்து பேசி விட்டு ஹாஸ்பிடலில் இருந்து வெளியேறினான்.
_______________________________________________
நியுயார்க் போலீஸ் ஸ்டேஷனில் தயாவைப் போட்டு வெளுத்துக் கொண்டிருந்தான் ரவி.
ஆனால் தயாவோ ரவி அடிப்பதைக் கூட பொருட்படுத்தாது சிரித்துக் கொண்டிருந்தான்.
சற்று நேரத்திலே ஆர்யானும் அங்கு வர அவனைக் கண்டு இகழ்ச்சியாகப் புன்னகைத்த தயா,
“நைஸ் டு மீட் யூ அகைன் ஆர்யான்…” என்றான்.
ஆத்திரத்தை அடக்க முடியாமல் அவனை அறைந்தான் ஆர்யான்.
ஆர்யான், “ஏன்டா இப்படி பண்ண… உன்ன நான் நல்ல ஃப்ரெண்டா தானே பார்த்தேன்… எதுக்குடா என் மினிக்கு இப்படி பண்ண… சொல்லுடா…” என தயாவை மாற்றி மாற்றி அறைய கத்தி சிரித்தான் தயா.
ஆர்யானைத் தடுத்த ரவி, “என்ன சொல்ற ஆரு… உனக்கு இவன முன்னாடியே தெரியுமா…” என்க,
தனக்கும் தயாவுக்குமான தொடர்பைக் கூறத் தொடங்கினான் ஆர்யான்.
நான்கு வருடங்களுக்கு முன்
ஆர்யான் அப்போது ஃபோர்தம் யுனிவர்சிட்டியில் இரண்டாம் வருடம் படித்துக் கொண்டிருந்தான்.
ஆதித்யாவும் அங்கே தான் படித்தான்.
ஆர்யான் எப்போதும் தன்னைச் சுற்றி உள்ளவர்களை கலகலப்பாக வைத்துக் கொண்டிருப்பதால் அனைவருக்கும் அவனைப் பிடிக்கும்.
தொழில் ஆரம்பித்து சில நாட்களிலே தன் கடின உழைப்பால் முன்னேறி தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருந்தார் ரஞ்சித்.
அதனால் வசதி வாய்ப்பிலும் ஆர்யானுக்கு குறைவில்லை.
அவனின் தந்தை தான் அவனுக்கு எப்போதும் முன்மாதிரியாக இருப்பார்.
தந்தையைப் போலவே தானும் சொந்தக் காலில் நின்று முன்னேற வேண்டும் என்ற நோக்கில் ரஞ்சித்துடன் சண்டை பிடித்து மேற்படிப்புக்காக நியுயார்க் கிளம்பினான்.
AR GROUPS OF COMPANIES இற்கு அடுத்த இடத்தில் இருப்பது SM GROUPS OF COMPANIES.
அதன் உரிமையாளர் ராஜசேகருக்கு எப்படியாவது தனது நிறுவனத்தை முதல் இடத்திற்கு கொண்டு வர வேண்டும் என ஆசை.
பலவாறு முயன்றும் இரண்டாம் இடத்தைத் தான் பிடிக்க முடிந்தது.
ராஜசேகரின் ஒரே மகன் தான் ஆதித்யா.
நினைவு தெரிந்த நாள் முதல் தன் தந்தையை ரஞ்சித் பிஸினஸில் தோற்கடிப்பதாக தன் மனதில் பதிய வைத்துக் கொண்டவன் ரஞ்சித்தை தன் எதிரியாகவே பார்க்க ஆரம்பித்தான்.
ஆதித்யா, ஆர்யான் இருவருமே ஒரே வயதினர்.
யுனிவர்சிட்டியில் கூட அனைவரும் எப்போதும் ஆர்யானை சுற்றியே இருக்க ஆர்யான் மீது பொறாமை ஏற்பட்டது.
எப்படியாவது அனைவர் முன்னும் ஆர்யானை மட்டம் தட்டி விட்டு தான் முன் நிற்க வேண்டும் என நினைத்தவன் நண்பன் என்ற முகமூடியை மாட்டி ஆர்யானுடன் நட்புக் கரம் கோர்த்தான்.
அவனின் நோக்கமே ஆர்யானை வைத்து ரஞ்சித்தை தலை குணியச் செய்வது தான்.
அனைவருடனும் நட்பாக பழகும் ஆர்யான் ஆதித்யாவின் மனதில் இருக்கும் பொறாமையை அறியவில்லை.
சில நாட்களிலே இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆகினர்.
ஆதித்யாவை தயா என்றே அழைப்பான் ஆர்யான்.
நாட்கள் செல்ல ஆர்யானுக்கு தெரியாமல் மற்றவர்களிடம் அவனைப் பற்றி தவறான எண்ணம் பதிய வைத்தான்.
யாரையும் ஆர்யானிடம் நெருங்க விடவில்லை.
ஆர்யானும் படிப்பில் கவனம் இருந்ததால் ஆதித்யாவின் செயலை அறியவில்லை.
ஆதித்யாவின் பிறந்த நாளுக்கு ஆர்யான் D என்ற எழுத்திட்ட ப்ரேஸ்லட் ஒன்றை அவனுக்கு பரிசளித்தான்.
ஆதித்யாவுக்கு குடிப்பழக்கம், புகை பிடித்தல் என எல்லா தீய பழக்கமும் உண்டு.
இவை எதையுமே ஆர்யானுக்கு தெரியாமல் மறைத்தான்.
ஆர்யான் யுனிவர்சிட்டி நண்பர்களைப் பற்றி பெரிதாக வீட்டில் பேசாததால் ஆதித்யா ராஜசேகரின் மகன் என்பதையும் அறியாமல் போனான்.
அன்று ஒரு நாள் ஆதித்யா ஸ்போர்ட்ஸ் பிராக்டிஸ் இருப்பதாகக் கூறி வகுப்புக்கு வரவில்லை.
வகுப்பு முடிந்து வெளியே வந்த ஆர்யானின் பார்வையில் பட்டது ஆதித்யா ஒரு பெண் அழ அழ அவளிடம் ஏதோ கோவமாக பேசிக் கொண்டு இருந்ததை.
அங்கு சென்ற ஆர்யான், “என்னாச்சு தயா… ஏன் இந்த பொண்ணு அழுதுட்டு இருக்கா..” என்க,
ஆர்யானை அங்கு எதிர்ப்பார்க்காத ஆதித்யா, “அ.. அது.. ஒன்னுமில்ல ஆரு…. இது எனக்கு தெரிஞ்ச பொண்ணு தான்.. சின்ன பிரச்சினை ஒன்னு.. நான் பாத்துக்குறேன்…” என்றான் சமாளிப்பாக.
அவனை நம்பாத பார்வை பார்த்த ஆர்யான் அப் பெண்ணின் முகம் நோக்க,
அவளோ இன்னும் அழுதபடி தான் இருந்தாள்.
அந்தப் பெண், “இல்ல அண்ணா.. இவர் பொய் சொல்றாரு… ” என்க,
ஆதித்யா அவசரமாக, “இவ சும்மா ஏதோ ஒலருரா… நீ போ ஆரு..” என்றான்.
அவன் சட்டையைப் பிடித்த அந்தப் பெண், “நான் பொய் சொல்றேனா… பொய் சொல்றேனா… ஒரு வருஷமா லவ் பண்ணுறதா என்னை ஏமாத்தி என்னை கர்ப்பமாக்கிட்டு இப்போ இந்த குழந்தைக்கு நான் அப்பனே இல்லன்னு சொல்ற… நீ தான்டா பொய் சொல்ற…” என அழவும் அதிர்ந்தான் ஆர்யான்.
“இந்தப் பொண்ணு என்ன சொல்றா தயா… ஒழுங்கா உண்மைய சொல்லு…” என ஆர்யான் கோவமாகக் கேட்க,
ஆதித்யா, “அதெல்லாம் பொய்டா… உனக்கு தெரியாதா என்ன பத்தி…” என்க,
அந்தப் பெண், “இவன நம்ப வேணாம் அண்ணா… இவன் அப்பா பெரிய பிஸினஸ்மேன்… அதனால எங்க கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டாங்க… இதே நமக்கு குழந்தை பிறந்தா எப்படியும் கல்யாணம் பண்ணி வைப்பாரு அது இதுன்னு சொல்லி என்னை இப்போ இந்த நிலமைல நிற்க வெச்சிட்டான் பாவி…” என்க,
ஆர்யான் அந்தப் பெண்ணிடம், “பெரிய பிஸினஸ்மேனா.. யாரம்மா சொல்ற..” எனக் கேட்க,
“எஸ்.எம் கம்பனி ஓனர் ராஜசேகர்…” என்கவும் மேலும் அதிர்ந்தான் ஆர்யான்.
ஆர்யான், “ஏன் தயா என் கிட்ட இதெல்லாம் மறைச்ச..” என அழுத்தமாகக் கேட்க,
“அது… இல்லடா… நான்..” என ஆதித்யா ஏதோ கூற வரவும் அவனின் கன்னத்தில் அறைந்தான் ஆர்யான்.
“ஏய்…..” என ஆத்திரமாக ஆர்யானின் காலரைப் பற்றிய ஆதித்யா,
“ஆமாடா… பொய் தான் சொன்னேன்… உன்ன ஏமாத்த தான் உன் கூட ஃப்ரெண்டா பழகினேன்… உன்னையும் உன் அப்பனையும் எல்லாரு முன்னாடியும் தலை குனிய வைக்கனும்.. அதுக்காகத் தான் இதெல்லாம் பண்ணேன்..” என தான் இது வரை செய்த அனைத்தையும் கூற,
கோவத்தில் அவனைப் போட்டு ஆர்யான் அடிக்க இருவருக்கும் கை கலப்பானது.
ஆதித்யா செய்தவை பற்றி யுனிவர்சிட்டி முழுவதும் பரவ அவனை யுனிவர்சிட்டி விட்டே அனுப்பினார்கள்.
ஆர்யான் ரவியிடம் தனக்குத் தெரிந்த வரையில் அனைத்தையும் கூற சத்தமாக சிரித்த ஆதித்யா,
“நீ வேணா அதுக்கப்புறம் என்ன மறந்து இருக்கலாம் ஆர்யான்… பட் நான் மறக்கல… உன்னால நான் பட்ட அவமானத்தையும் மறக்கல… ஒவ்வொரு செக்கனும் உன்ன நான் கண் காணிச்சிக்கிட்டு தான் இருந்தேன்…” என்றவன் அதன் பின் நடந்தவற்றைக் கூறத் தொடங்கினான்.
ஆர்யானைப் பழி வாங்க வேண்டும் என வன்மத்தை வளர்த்துக் கொண்ட ஆதித்யா ராஜசேகரின் செல்வாக்கால் தனக்கென அடியாட்கள் வைத்து ஆர்யானைக் கண்காணித்தான்.
ரஞ்சித்தின் கம்பனியில் நடப்பவற்றை ஜீவா மூலம் அறிந்து ரஞ்சித்துக்கு கிடைக்க இருக்கும் டென்டர்களைக் கைப்பற்றினான்.
ராஜசேகரும் இதற்கு ஆதித்யாவுக்கு உடந்தையாக இருந்தார்.
ஆனால் அவர் பெயர் வெளி வர விரும்பாததால் தான் ஆர்யான் ஜீவாவிடம் கூட தான் யார் என்பதை வெளிப்படுத்தவில்லை.
இவ்வாறிருக்க தன் அடியாட்கள் மூலம் சிதாராவின் புகைப்படம் அவனுக்கு கிடைத்தது.
பார்த்ததுமே அவள் அழகில் மயங்கியவனின் மனம் அவளை அடையத் துடித்தது.
அப்போது தான் ஆர்யானுடன் மட்டும் தான் சிதாரா நெருக்கமாக இருப்பதை அறிந்தவன்,
“இது வரைக்கும் எல்லாத்துலயும் நீ முன்னாடி இருந்து இருக்கலாம் ஆர்யான்… ஆனா இந்த தடவ நான் தான்… ஐம் கமிங் ஃபோர் யூ பேபி…” என சிதாராவின் புகைப்படத்துடன் பேசினான்.
அதன் பின் சிதாராவும் ஆர்யானும் இந்தியா சென்றிருப்பதை அறிந்தவனுக்கு திடீரென இருவருக்கும் திருமணம் நடக்க இருப்பதை அறிந்து சிதாராவைக் கடத்த முயன்றான்.
ஆனால் ஆர்யான் வந்து தடுத்ததால் அம் முயற்சி தோல்வியடைந்தது.
நாட்கள் செல்ல ஆதித்யாவுக்கு ஆர்யான் மீதிருந்த வெறுப்பும் பொறாமையையும் விட சிதாராவை அடைந்தே ஆக வேண்டும் என்ற வெறி மேலோங்கியது.
வாய்ப்புக் கிடைக்கும் வரை காத்திருந்தவனுக்கு சிதாரா பல நாள் கழித்து தனியே கிடைத்ததும் அவளைக் கடத்தினான்.
ஆதித்யா, “நீ இன்னும் கொஞ்சம் லேட் ஆகி வந்திருந்தாலும் என் பேபிய முழுசா எனக்கு சொந்தமாக்கி இருப்பேன்… ஆனா இந்தத் தடவையும் நீ என்ன தோற்கடிச்சிட்ட….” என்றவன்,
“ஆனாலும் பேபியோட பக்கத்துல இருந்தாவே தன்னால போதை ஏறும் மச்சான்… அதே அவள….” என்று இழுத்து நிறுத்தியவன் நக்கல் புன்னகையுடன் ஆர்யானைப் பார்த்து,
“பேசாம ரெண்டு பேரும் பேபிய ஷேர் பண்ணிக்கலாமாடா… என்ன இருந்தாலும் நான் உன்னோட க்ளோஸ் ஃப்ரெண்ட் இல்லையா…” என்க,
“என்ன தைரியம் இருந்தா என் கிட்டே என் மினிய பத்தி தப்பா பேசுவ…உன்ன கொல்லாம விட மாட்டேன்டா…” என்றவன் ஆதித்யாவைக் கீழே தள்ளி அடித்தான்.
ரவி ஆர்யானைத் தடுக்க அதற்குள் அங்கு வந்த போலீஸ் ஆதித்யாவைப் பிடித்து சென்றனர்.
ரவி, “இனிமே நான் இவன பாத்துக்கிறேன் ஆரு… இந்தியா போல இல்ல.. இங்க ரூல்ஸ் ரொம்ப ஸ்ட்ரிக்ட்… அதனால இவனுக்கு நான் தண்டனை வாங்கி குடுக்குறேன்… இவன் அப்பனால கூட இனிமே இவன காப்பாத்த முடியாது… ஆதாரமெல்லாம் பக்காவா இருக்கு…” என்க,
அவனுக்கு சரி என தலையைசைத்த ஆர்யான் வெளியே வந்தான்.
அங்கிருந்து சிதாராவை அனுமதித்திருந்த ஹாஸ்பிடல் வர சிதாரா இருந்த அறைக்கு வெளியே அமர்ந்திருந்தவனை நெருங்கிய ஆர்யான் அவன் தோள் தொட்டு,
“ரொம்ப தேங்க்ஸ் நீங்க பண்ண உதவிக்கு…” என்க,
“தேங்க்ஸ் எல்லாம் எதுக்கு ஆர்யான்… தாராக்கு நான் பண்ண பாவத்துக்கு ஒரு பிராயச்சித்தமா தான் நான் இதை பண்ணேன்..” என்றான் பிரணவ்.
_______________________________________________
நிச்சயம் அன்று சிதாராவை யாரோகடத்த முயன்றதும் ஏற்கனவே பிரணவ் தன்னிடம் சவால் விட்டதால் அவனாக இருக்கும் என்று எண்ணினான் ஆர்யான்.
அபினவ்வும் நிச்சயத்துக்கு இரண்டு நாள் முன் பிரணவ் வேலை விஷயமாக வெளியூர் சென்றிருப்பதாகக் கூறவும் அவனின் சந்தேகம் வலுவானது.
அதனால் போலீஸாக இருக்கும் தன் நண்பன் ரவியிடம் உதவி கோரினான்.
ரவியும் ஆர்யான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க பிரணவ்வைக் கண்காணித்தான்.
சரியாக ஆர்யான், சிதாரா இருவரின் திருமணத்தன்று மீண்டும் பிரணவ் சென்னைக்கு வர ரவி அவனைப் பின் தொடர்ந்தான்.
ஒருநாள் ரவி ஸ்டேஷனில் இருக்கும் போது அவனை சந்திக்க பிரணவ் வரவும் அதிர்ந்தான்.
பிரணவ், “வேலை நேரத்துல உங்கள டிஸ்டர்ப் பண்ணதுக்கு சாரி சார்… பட் நீங்க கொஞ்ச நாளா என்ன ஃபாலோ பண்ணிட்டு இருக்குறத நான் அவதானிச்சேன்… எதனாலன்னு தெரிஞ்சிக்கலாமா..” என்க,
முதலில் பிரணவ்வைக் கண்டு அதிர்ந்த ரவி அவனின் கேள்வியில் கேலியாகப் புன்னகைத்தவன்,
“ஹ்ம்ம்.. ரொம்ப தைரியம் தான்… போலீஸ் கிட்டயே வந்து எதுக்கு என்ன ஃபாலோ பண்றன்னு கேக்குற அளவுக்கு நல்லவனா நீ…” என்றான் கோவமாக.
பிரணவ் அவனைப் புரியாமல் பார்க்கவும், “எதுக்காக சிதாராவ கடத்த முயற்சி பண்ண…” என ரவி கேட்கவும் அதிர்ந்தான் பிரணவ்.
பிரணவ், “என்ன சொல்றீங்க சார்… நான் எதுக்கு தாராவ கடத்தனும்… ” என்க,
ரவி, “சும்மா நடிக்காதேடா… நீ தான் கொஞ்ச நாளுக்கு முன்னாடி ஆர்யான் கிட்ட எப்படியாவது சிதாராவ உன் கிட்ட வர வைக்கிறதா சேலேன்ஜ் பண்ணி இருக்க…” என்க,
“நான் ஆர்யான் கிட்ட அன்னைக்கு அப்படி சொன்னது உண்மை தான்… அது நான் தாராவுக்கு பண்ண தப்ப உணர்ந்தேன்… தாரா என்ன ரொம்ப லவ் பண்ணா… ஆர்யானுக்கு என்னை பிடிக்கல… அதனால தான் நான் அப்படி சொன்னேன்… ஆனா என் மனசுல இப்போ அப்படி எந்த எண்ணமும் இல்ல சார்..” என பிரணவ் கூற அவனை சந்தேகமாய் நோக்கினான் ரவி.
சற்று அமைதி காத்த பிரணவ் பின், “தாராவுக்கு ஆர்யான் கூட கல்யாணம்னு தெரிஞ்சப்ப எப்படியாவது இந்த கல்யாணத்த நிறுத்தனும்னு நான் நெனச்சது உண்மை தான்… ஆனா அவங்க என்கேஜ்மன்டுக்கு ரெண்டு நாள் முன்னாடி நான் வேலை விஷயமா வெளியூர் போனேன்… போன இடத்துல எனக்கு ஒரு ஆக்சிடன்ட்… அதனால என்னால இனிமே எப்பவும் ஒரு குழந்தைக்கு அப்பாவா ஆக முடியாதுன்னு சொல்லிட்டாங்க… தாராவுக்கு நான் பண்ணின அநியாயத்துக்கு தான் எனக்கு இப்படி ஒரு தண்டனை கிடைச்சிருக்குறதா நான் நெனச்சேன்… அப்போவே முடிவு பண்ணேன் தாரா இனிமே சந்தோஷமா இருக்கனும்னு… நிச்சயம் ஆர்யானால தான் அவள சந்தோஷமா வெச்சிக்க முடியும்… அதனால அதுக்கப்புறம் நான் தாராவ டிஸ்டர்ப் பண்ணல…” என்க,
“நீங்களும் சிதாராவ கடத்தலன்னா வேற யாரா இருக்கும்… ஆர்யானுக்கு கூட கால் பண்ணி மிரட்டி இருக்கான்… பட் சேட்டலைட் ஃபோன் யூஸ் பண்றதால எங்களால அவன ட்ரேஸ் பண்ண முடியல…” என்றான் ரவி.
பிரணவ், “உங்களுக்கு ஓக்கேன்னா என்னால தாராவ யாரு கடத்த ட்ரை பண்ணாங்கன்னு கண்டுபிடிக்க உங்களுக்கு ஹெல்ப் பண்ண முடியும்…” என்கவும் அவனைக் கேள்வியாய் நோக்கினான் ரவி.
“காலேஜ் டேய்ஸ்ல நான் ஹேக்கிங் படிச்சிருக்கேன்… அத வெச்சி என்னால கண்டு பிடிக்க முடியும்னு நினைக்கிறேன்… தாராவ கடத்த முயற்சி பண்ணவங்க எவ்வளவு உஷாரா இருந்தாலும் எங்கயாவது ஏதாவது சின்ன தப்பாவது பண்ணி இருப்பாங்க… அதை வெச்சி அவங்கள பிடிக்க முடியும்…” என பிரணவ் கூறவும் ரவி சம்மதித்தான்.
பிரணவ் சென்ற பின் ஆர்யானிடம் கூற அவனுக்கு முதலில் நம்ப முடியவில்லை என்றாலும் தன்னவளின் நலனுக்காக அதற்கு சம்மதித்தான்.
ஆர்யான் பிரணவ்வுக்கு அழைக்க அவனும் சிதாராவுக்கு செய்த தப்புக்கு பிராயச்சித்தமாக செய்வதாகக் கூறினான்.
ஜீவாவிடமிருந்து பெற்ற எண்ணையும் பிரணவ்விடம் வழங்கி யாரெனக் கண்டு பிடிக்கக் கூற அவன் அது நியுயார்க்கிலிருந்து வந்த அழைப்பு எனக் கூறியதும் சிதாராவைக் கடத்த முயன்றவனுக்கும் ஜீவாவிடமிருந்து தகவல் பெறுபவனுக்கும் ஏதோ தொடர்பு இருப்பதாக ரவிக்குப் புரிந்தது.
அதனைக் கண்டு பிடிப்பதற்காக ரவி முதலில் நியுயார்க் செல்ல அவனுக்கு உதவியாக பிரணவ்வையும் வரவழைத்தான்.
ஆர்யான் திடீரென அழைத்து சிதாராவைக் கடத்தி விட்டதாகக் கூறி நடந்ததைக் கூறவும் பிரணவ் சிதாராவின் எண் கடைசியாக சிக்னல் கட் ஆன இடத்தைக் கண்டு பிடித்தான்.
ஆர்யான், ரவி, பிரணவ் மூவரும் அங்கு செல்ல அங்கு ஒரு வேன் மட்டும் யாருமின்றி தனியே கிடந்தது.
ரவி அதன் எண்ணை வைத்து யாருடைய பெயரில் அந்த வேன் பதியப்பட்டிருப்பதைத் தேட அதுவோ மிஸ்ஸிங் கேசில் பதியப்பட்டிருந்தது.
என்ன செய்ய என யோசிக்கும் போது தான் ஆர்யானுக்கு தன் வீட்டின் அருகே கிடைத்த பிரேஸ்லெட் ஞாபகம் வந்தது.
ஆர்யான் ரவியிடம், “டேய்.. எனக்கொரு டவுட் இருக்கு… பிரணவ்.. நீங்க நான் சொல்ற நம்பர் இருக்குற இடத்த ட்ரேஸ் பண்ணுங்க… நான் நினைக்கிறது சரின்னா மினி அங்க தான் இருக்கனும்…” என்க,
பிரணவ் உடனே ஆர்யான் தந்த ஆதித்யாவின் எண்ணை ட்ரேஸ் செய்து அது இருக்கும் இடத்தைக் கண்டு பிடித்தான்.
ரவி நியுயார்க் போலீஸ் உதவியுடன் அங்கு சென்று ஆதித்யாவைப் பிடித்தான்.
_______________________________________________
பிரணவ், “சரி ஆர்யான்.. அப்போ நான் கிளம்புறேன்… நான் இதை உங்க கிட்ட சொல்லனும்னு அவசியமில்ல… தாராவ நல்லா பார்த்துக்கோங்க… ஆல்ரெடி அப்படி தான் பாத்துக்குறீங்க… ” என்க,
ஆர்யான், “மினிய பார்த்துட்டு போகலையா..” எனக் கேட்டான்.
அவனைப் பார்த்து புன்னகைத்த பிரணவ், “இல்ல ஆர்யான்… அவ இப்போ சுயநினைவு இல்லாம இருக்கலாம்… ஆனா எனக்கு நம்பிக்கை இருக்கு.. நீங்க அவ கூட இருந்தா நிச்சயம் அவ சரி ஆகிடுவா… தாராக்கு என்னை பத்தி எதுவும் தெரிய வேணாம்… அவ லைஃப்ல நான் முடிஞ்சு போன செப்டர்… அது அப்படியே இருக்கட்டும்… எனக்கு தெரியும் தாராவுக்கு நான் பண்ணின காரியத்துக்கு உங்களுக்கு என் மேல கோவம் இருக்கும்… முடிஞ்சா நீங்களும் என்னை மன்னிச்சிடுங்க… நான் போறேன்…” என்றவன் ஆர்யானின் தோளில் தட்டி விட்டு சென்றான்.
பிரணவ் சென்றதும் சிதாரா இருந்த அறைக்குள் நுழைந்தான் ஆர்யான்.
❤️❤️❤️❤️❤️
சாரி மக்களே… நைட் பிக் போஸ் பாக்க போய் யூடி எழுத கிடைக்கல.. அதான் லேட் ஆகிடுச்சு… அநியாயத்துக்கு டைம் வேஸ்ட் ஆனது தான் மிச்சம்… படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க… சீக்கிரம் அடுத்த யூடியோட வரேன்… நன்றி..
– Nuha Maryam –
மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதலோடு சேர்த்து குடும்ப உறவுகளின் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.