Loading

 

 

ஈர்ப்பு 11

 

கண்களைத் திறந்து பார்த்த எனக்கு ராகுலின் கோபமான முகமே என் கண்முன் தெரிந்தது. 

 

‘அச்சோ இவன் எதுக்கு இப்படி முறைச்சு பார்த்துட்டு இருக்கான்?’ என்று நான் யோசிக்கும் போதே இன்னும் அவன் கைகளிலிருந்து விடுபடவில்லை என்பதை உணர்ந்து  விலக முயன்றேன். நான் நெளிவதைக் கண்டு அவனே என்னை விலக்கி நிறுத்தினான்.

 

“பொண்ணா அடக்க ஒடுக்கமா இருக்க தெரியாதா? ஓடி பிடிச்சு விளையாட இதென்ன ப்ளே கிரௌண்டா?” என்று திட்டிவிட்டு சென்று விட்டான்.

 

நாங்கள் இருவரும் மற்றவர்களிடமிருந்து சற்று தொலைவில் இருந்ததால் அவன் திட்டியது வேறு யாருக்கும் தெரியவில்லை. ப்ரியா என் அருகில் வந்ததும் அவளிடம், “உன் பிரெண்டு எதுக்கு இப்போ என்னை திட்டுனான்? ஓடுனது ஒரு தப்பா? அதுக்கு இவ்ளோ பெரிய அட்வைஸ் தேவையா?” என்று என் ஆதங்கத்தை வெளிப்படுத்தினேன்.

 

“ஹே லூசு அவன் நீ ஓடுனதுக்காக ஒன்னும் திட்டல. நீ ஓடும்போது முன்னாடி யாரு இருக்காங்கன்னு பார்க்கமாட்டியா?” என்று ப்ரியா வினவ, “அதெல்லாம் இடிக்காம தான ஓடுனேன்.” என்று எனக்கு நானே பாராட்டு பத்திரம் கொடுத்துக் கொண்டேன்.

 

“நீ இங்க சுத்தி சுத்தி ஓடிட்டு இருந்ததை பார்த்து ரெண்டு பேரு உன்னை தப்பா இடிக்க ட்ரை பண்ணாங்க. அப்போ தான் அவங்க உன்னை இடிக்காம இருக்க ராகுல் உன் காலுக்கிடைல ஸ்டூல்ல தள்ளி உன்னை விழாம காப்பாத்துனான். கொஞ்சம் மிஸ் ஆகிருந்தா இந்நேரம் அவங்க உன்கிட்ட தப்பா பிஹேவ் பண்ணிருப்பாங்க. இது தெரியாம அவனை திட்டிட்டு இருக்க.” என்றாள் ப்ரியா.

 

ஒரு நிமிடம் நடக்கவிருந்த சம்பவத்தை நினைத்து நான் பதறினேன். மறு நிமிடமே இயல்பான நான். “சாரி ப்ரியா என்ன நடந்துச்சுன்னு தெரியாம உன் பிரெண்டை திட்டிட்டேன். இதையெல்லாம் அவன்கிட்ட சொல்லிட்டு இருக்காத. ஓகே வா?”  என்று சமாதானத்திற்கு சென்றேன்.

 

முதலில் சற்று சீரியசாக ஆரம்பித்தாலும் பின் பாதியை கண்ணடித்துக் கொண்டே தான் கூறினேன்.

 

“அடிப்பாவி நான் கூட பீலிங்ஸ்ஸா பேசப் போறன்னு நினைச்சா, இப்படி காமெடியா ஆக்கிட்டியே டி! ஆமா அது என்ன எப்போ பார்த்தாலும் உன் பிரெண்டுன்னு அவனை சொல்ற, உனக்கு அவன் யாரு?” என்று கேட்டாள்.

 

லேசான புன்சிரிப்புடன், “நீ தான உன் பிரெண்டுன்னு இண்ட்ரோ கொடுத்த, அதான் உன் பிரெண்ட்னு கூப்பிடுறேன்.” என்று நேரடியாக பதில் சொல்லாமல் மழுப்பினேன்.

 

“அப்போ ஆனந்தை எப்படி கூப்பிடுவ?” என்றாள் சந்தேகத்துடன்.

 

“ஹாஹா, அவன் என் பிரெண்டு. சோ பேர் சொல்லியே கூப்பிடுவேன்.” என்று தோளை குலுக்கினேன்.

 

பக்கத்தில் வந்து கொண்டிருந்த ஆனந்தைக் கண்டு லேசாக சிரித்தேன். அவனும் புன்னகைத்துக் கொண்டே வந்தவன், “இங்க என்ன சீரியஸ் டிஸ்கஷனா இருக்கு? அதுவும் என்னைப் பத்தி தான் போல.” என்றான்.

 

“அஃப் கோர்ஸ், உன்னைப் பத்தி தான். நீ என் பிரெண்ட்னு சொன்னேன்.” என்று நான் கூற, ப்ரியாவோ, “அது எப்படி பார்த்து ரெண்டே நாள்ல இவ்ளோ திக் பிரெண்ட்ஷிப்?” என்று வினவினாள்.

 

“லவ் மட்டும் தான் பார்த்தவுடனே வருமா? பிரெண்ட்ஷிப்பும் அப்படி தான்! நாங்க இப்படி தான் முஸ்தபா முஸ்தபான்னு எங்க பிரெண்ட்ஷிப்பை கொண்டாடுவோம். உனக்கு இதுல என்ன பொறாமை?” என்று கேட்டுக் கொண்டே ஆனந்திடம் ஹை-ஃபை கொடுத்துக் கொண்டேன்.

 

“ஹ்ம்ம், எனக்கென்ன பொறாமை? அதெல்லாம் ஒன்னும் இல்ல!” என்று சொல்லிக் கொண்டே முன்னே நகர்ந்தாள் ப்ரியா.

 

நானும் ஆனந்தும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டோம்.

 

“மேடமுக்கு எங்க அவங்க பிரெண்ட்ஷிப்பை விட நம்ம பிரெண்ட்ஷிப் ‘திக்’காகிடுமோன்னு கவலை! அதான் ‘லைட்’டா பொறாமை.” என்று அவன் கூறினான்.

 

பின் என்ன நினைத்தானோ, “ஆமா கொஞ்ச நேரம் முன்னாடி வரைக்கும் மரியாதை கொடுத்து நல்ல பிள்ளை மாதிரி பேசுன, இப்போ அந்த மரியாதைல கொஞ்சம் கூட இல்ல?” என்று வினவினான்.

 

“அதான் நான் உன்னை பிரெண்டா ஏத்துக்கிட்டேன்ல. சில விஷயங்கள் வேணும்னா சிலதை இழக்கத்தான் வேணும். அதான் இன்னைலயிருந்து உனக்கு மரியாதை கட்!” என்று கூறி அவனிடம் பிடிபடாமல் வெளியே வந்துவிட்டேன்.

 

அங்கு மகிழுந்தின் அருகில் ராகுலும் ப்ரியாவும் எங்களுக்காக காத்திருந்தனர். ராகுலோ ஒரு காலை மகிழுந்தின் மீதும் இன்னொரு காலை நிலத்தின் மீதும் வைத்து ஸ்டைலாக நின்றான். திரும்பியும் சைட்டடிக்க துடித்த மனதை அடக்கி அவனிடம் சென்றேன்.

 

அவன் திட்டியதும் கோபம் வந்தது உண்மை தான். ஆனால், காரணத்தை அறிந்ததும் மனம் அமைதியடைந்தது. அவனிடம் சிறிது விளையாடிப் பார்க்கத் தோன்றியதும், ‘பேபி மா, உன் கெத்தை விட்டுடாத! இவ்ளோ நாள் அவன் முறைச்சு முறைச்சு பார்த்தான்ல இப்போ உன் டர்ன்.’ என்று மனதிற்குள்ளே கூறிக் கொண்டேன்.

 

அவன் அருகில் சென்று வேண்டுமென்றே அவனை கவனிக்காமல் ப்ரியாவிடம் கிளம்பலாமா என்று கேட்டேன். அவள் ஆனந்தை கூப்பிட அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள்.

 

அதுவரையிலும் அவனை பார்க்காமல் இருக்க வெகுவாக என்னை கட்டுப்படுத்திக் கொண்டு இருந்தேன். ப்ரியா அங்கிருந்து அகன்றதும் ஓரக் கண்ணால் அவனைப் பார்த்தேன். அவனோ காலுக்கடியில் பூமியை ஆராய்ந்து கொண்டிருந்தான்.

 

‘அடப்பாவி கொஞ்சம் கூட கண்டுக்க மாட்டிங்குறயே! உன்னை கல்யாணம் பண்ணி நான் என்னென்ன பாடுபட போறேனோ!’ என்று அலுத்துக் கொண்டேன்.

 

ஆனந்த் வந்ததும் நால்வரும் காரில் ஏறினோம். ராகுல் ஓட்டுநருடன் முன்பக்கம் அமர நாங்கள் மூவரும் பின்பக்கம் அமர்ந்தோம். காரில் இசைப்பானிலிருந்து கசிந்த பாடலுடன் எங்கள் பயணமும் துவங்கியது.

 

 

என்னோட வா வா என்று சொல்ல மாட்டேன்

உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்

 

செல்ல சண்டை போடுகிறாய்

தள்ளி நின்று தேடுகிறாய்

ஆ ஆ ஆ அன்பே என்னை தண்டிக்கவும்

புன்னகையால் மன்னிக்கவும்

உனக்கு உரிமை இல்லையா?

 

இந்த பாடல் தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்றவாறு இருந்தது எனக்கு சிரிப்பையே கொடுத்தது. ஆனாலும், சிரிப்பை கட்டுப்படுத்திக் கொண்டு கண்களை மூடிக்கொண்டேன்.

 

கன்னம் தொடும் கூந்தல் ஒதுக்க

நீ சாய்வதும் என்னைக் கொஞ்சம் பார்க்கத்தானடி

கண்ணை மூடி தூங்குவதை போல்

நீ நடிப்பது எந்தன் குரல் கேட்கத்தானடி

இன்னும் என்ன சந்தேகம் என்னை இனி எந்நாளும்

தீயாக பார்க்காதடி….

 

இந்த வரிகளில் சட்டென்று கண்களைத் திறந்து அவனைப் பார்த்தேன். அவனும் சிரித்துக் கொண்டிருந்திருக்க வேண்டும் இன்னும் அவன் இதழின் ஓரத்தில் சிரிப்பின் சாயல்!

 

 

சின்ன பிள்ளை போல நீ அடம்பிடிப்பதென்ன சொல்ல

என்னை விட யாரும் இல்லை அன்பு செய்து உன்னை வெல்ல

சண்டை போட்ட நாட்களைத்தான் எண்ணி சொல்ல

கேட்டு கொண்டால் கணக்கும் பயந்து நடுங்கும்

 

அந்த இதமான மாலையில் பாடலுடன் ஐக்கியமாகிவிட்டேன் நான். 

 

 

கன்னத்தில் அடிக்குமடி முத்தத்தாலே வேண்டுமடி

மத்ததெல்லாம் உன்னுடைய இதழ்களின் இஷ்டப்படி

எந்த தேசம் போனபோதும் என்னுடைய சொந்த தேசம்

உனது இதயம் தானே

 

இந்த வரிகளைக் கேட்கையில் என் கன்னங்கள் தானாக சிவக்க ஆரம்பித்தன. மறந்தும் அவனை நிமிர்ந்தும் பார்க்கவில்லை.

 

 

என்னோட வா வா என்று சொல்ல மாட்டேன்

உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்

 

இங்கு ஒரு பாடலில் இவ்வளவு களேபரம் நடந்துக் கொண்டிருக்க அங்கு ஆனந்தும் ப்ரியாவும்  அவர்களின் பேச்சு உலகத்திலிருந்து வெளிவரவில்லை. 

 

*****

 

நாங்கள் பார்ட்டி ஹாலிற்குள் செல்லும் முன்பே பார்ட்டி ஆரம்பித்து விட்டது. அனைவரும் கூட்டம் கூட்டமாக அங்கங்கே நின்று சிரித்துப் பேசி மகிழ்ந்திருந்தனர். ஒரு பக்கம் அறையையே அதிர வைக்கும் இசையும் மறுபக்கம் ஊற்ற ஊற்ற குறையாது  நிரம்பி வழியும் வண்ண வண்ண பானங்களும் என்று அந்த பார்ட்டி களைக்கட்டியது.

 

ப்ரியா முன்சென்று அவளின் தோழமைகளோடு கலந்துவிட நானும் அவள் பின்னே சென்று நின்று கொண்டேன். அங்கிருந்தே சுற்றி வேடிக்கை பார்த்து கொண்டிருந்தபோது ராகுலும் ஆனந்தும் அங்கு பானங்கள் அடுக்கி வைக்கப்பட்ட மேஜையருகில் சென்றனர். நானோ அவனை சுவாரசியமாக பார்த்தேன்.

 

‘இவன் குடிப்பானா? ச்சே சான்சே இல்ல! இவன் தான் எல்லாத்துலயும் பெர்ஃபெக்ட்டா இருப்பானே. அப்பறம் எப்படி?’ என்று நான் யோசிக்கும்போதே அவன் என்னைப் பார்த்து புருவத்தை உயர்த்தினான்.

 

‘இவன் வேற அடிக்கடி இப்படி பண்ணி என்னை ‘லவ்’ மூடுக்கு மாத்துறானே!’ என்று நான் அலுத்துக் கொள்ளும்போதே என் மனசாட்சி என்னைப் பார்த்து ‘உனக்கே ஓவரா இல்ல! என்னமோ நீ உன் லவ்வை அவன்கிட்ட சொன்ன மாதிரியும், அவனும் உன்னை லவ் பண்ற மாதிரியும் உன் இஷ்டத்துக்கு யோசிச்சுட்டு இருக்க. உன் மனசுனா என்ன வேணும்னாலும் யோசிப்பியா? இதுல ‘லவ் மூட்’ ஒன்னு தான் குறைச்சல்!’ என்று என்னை காறித் துப்பியதை துடைத்துவிட்டு மீண்டும் அவனைப் பார்த்தேன்.

 

இந்த பார்வை விளையாட்டு சுவாரசியமாக இருக்க அவனை வெறுப்பேற்றவென்று என் கைகளை அவனையும் அவன் முன்பு இருந்த பானத்தையும் நோக்கி நீட்டி, ‘நீ அதுக்கெல்லாம் சரி பட்டு வர மாட்ட!’ என்பது போல் சைகை செய்தேன்.

 

அவனோ என்னை ஒரு முறை பார்த்துவிட்டு அந்த க்ளாஸ்ஸை எடுத்து குடித்துவிட்டான். அதை முடித்ததும் என்னைப் பார்த்து ‘எப்படி’ என்பது போல் மீண்டும் புருவங்கள் உயர்த்தினான்.

 

நானோ ‘அவ்ளோ தானா’ என்பது போல் வெளியில் பார்த்தாலும் உள்ளுக்குள் ‘என்ன ஒரே கல்ப்ல ஃபுல்லா குடிச்சிட்டான்? ஒருவேளை அவனுக்கு குடிக்கிற பழக்கம் இருக்குமோ! நம்ம தான் இது தெரியாம மிஸ்டர். பெர்ஃபெக்ட்டுன்னு பேரு வச்சுட்டோமோ?’ என்று என் எண்ணங்கள் தறிகெட்டு ஓட என் மனச்சாட்சியை காப்பாற்றவென அங்கு வந்தாள் ப்ரியா.

 

“ஹே என்ன டி, ட்ரிங்க்ஸயே வெறிச்சு வெறிச்சு பாத்துட்டு இருக்க. வேணும்னா போய் குடி.” என்றாள் ப்ரியா.

 

“ச்சீய், அதை போய் நான் எப்படி குடிக்க?” என்றேன் லேசான அருவருப்புடன்.

 

“வாயால தான்!” என்று கூறி அவள் சிரிப்பதைப் பார்த்து முறைத்துக் கொண்டு நின்றேன்.

 

“எனக்கெல்லாம் குடிக்கிற பழக்கம் இல்ல.” என்று நான் வெடுக்கென்று கூற, “அட லூசே! அங்க இருக்குறது ஆல்கஹால் இல்ல. எல்லாம் சாஃப்ட் ட்ரிங்க்ஸ் தான். அப்படியே ஆல்கஹாலிக் ட்ரிங்கா இருந்தாலும் அதுல ஆல்கஹால் லெவல் கம்மியா தான் இருக்கும்.” என்று விளக்கினாள் ப்ரியா.

 

“ஓஹ், அப்போ உன் பிரென்ட் குடிக்கிறது?” என்று காரியத்தில் கண்ணாக இருக்க, “அது ஸ்ப்ரிட்ஸ். அவனுக்கு அது தான் பிடிக்கும்” என்றாள் என்னை ஒரு மாதிரியாக பார்த்துக் கொண்டே.

 

பின் அவளே, “வா அவங்க கூட போய் ஜாயின் பண்ணிக்கலாம்.” என்று என்னை இழுத்துச் சென்றாள்.

 

அவள் ஒரு மோஜிட்டோவை வாங்கி அருந்தத் துவங்கினாள். என்னையும் ஏதாவது வாங்க சொன்னாள். நான் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருப்பதை பார்த்து மிரண்டுபோய் ஒரு ஆரஞ்சு ஜூஸ் கேட்டேன். அந்த பார்டெண்டெரோ என்னை ஒரு மாதிரி பார்த்துவிட்டு அதைக் கொடுத்தான்.

 

நான் அதை பருகிக் கொண்டே எதேச்சையாக திரும்பியபோது ராகுல் என் கண்ணில் பட்டான். இதுவோ அவன் முறை, என்னை ஏளனமாகப் பார்ப்பது. அந்த பார்வையை சகிக்கமுடியாமல் அவனுக்கு எதிரே திரும்பி குடித்து முடித்தேன்.

 

குடித்துவிட்டு திரும்பிய நான் அங்கு கண்ட காட்சி என்னை எரிச்சல் படுத்தியது. அப்படி நான் கண்டது இதுவே. ராகுலை சுற்றி நான்கைந்து  பெண்கள் எதுவோ சொல்வதும் அதற்கு அவன் சிரித்துக் கொண்டே மறுப்பதும் தான்.

 

‘ச்சே, இவனை மட்டும் எப்படி தான் எல்லா பொண்ணுங்களுக்கும் பிடிக்குதோ? விட்டா மேலேயே விழுந்துடுவாளுங்க  போல!’ என்று திட்டிக்கொண்டே அவர்களை முறைத்தேன். அதற்கு பின் தான் ஞாபகம் வந்து ஆனந்தையும் ப்ரியாவையும் தேடினேன்.

 

ப்ரியா அவளின் தோழியுடன் அரட்டையில் இருந்தாள். ஆனந்தோ கைப்பேசியில் யாருடனோ பேசிக் கொண்டே வெளியே சென்று கொண்டிருந்தான்.

 

இவர்களை தேடிவிட்டு திரும்பி பார்த்தால் அங்கு எல்லாரும் சேர்ந்து செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தனர். ஒருத்தி அவன் தோளில் தொங்கியபடியும் ஒருத்தி அவன் மேல் லேசாக சாய்ந்தபடியும் போஸ் கொடுத்துக் கொண்டிருந்தனர்.

 

நான் இங்கிருந்து பார்ப்பதை உணர்ந்ததாலோ என்னை திரும்பிப் பார்த்தான். நானோ கோபத்தில் அவனை முறைத்தேன். ஆனால், அவனோ என்னை கண்டுகொள்ளாமல் மீண்டும் போஸ் கொடுக்க ஆரம்பித்துவிட்டான். அதற்கு மேல் அங்கிருந்தால் கோபத்தில் கத்திவிடுவேன் என்பதால் சட்டென்று வெளியே வந்தேன்.

 

என்னை கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டிருக்கும்போது என் தோளில் படிந்த கைகளை உணர்ந்த நான் திட்ட திரும்பினேன். ஆனால் அங்கிருந்ததோ ஆனந்த். அவன் முகத்தில் எப்போதும் இருக்கும் புன்னகை மறைந்து ஒரு வித பதட்டதோடு இருந்தான்.

 

நான் எதுவும் கேட்காமலே அவன், “சீக்கிரமா உங்க அம்மாக்கு கால் பண்ணு.” என்று கூறினான்.

 

ஒரு நொடி நெற்றியைச சுருக்கி யோசித்தேன். அதற்குள், “இப்போ யோசிக்கலாம் டைம் இல்ல.” என்று என்னை அவசரப் படுத்தினான் ஆனந்த்.

 

என் அலைபேசியை எடுத்து பார்த்தபோது அதில் என் அம்மாவிடமிருந்து இருபத்தியோரு விடுபட்ட அழைப்புகள் இருந்தன. அதைக் கண்டதும் பதட்டம் என்னை சூழ்ந்து கொண்டது.

 

அவசரமாக என் அம்மாவிற்கு அழைத்தேன். என் அம்மாவோ நான் ‘ஹலோ’ சொல்வதற்கு கூட காத்திராமல், “நாளைக்கு காலைல முதல் பஸ்ஸ பிடிச்சு வீட்டுக்கு வா.” என்று கூறினார்.

 

“ஏன் என்னாச்சு?” என்று கேட்பதற்குள்ளே, “அதைப் பத்தி இப்போ பேசுறதுக்கு டைம் இல்ல. இங்க வந்து பேசிக்கலாம். நீ சீக்கிரம் கிளம்பி வா.” என்று கூறி வைத்துவிட்டார்.

 

நானோ குழப்பத்துடன் ஆனந்தை ஏறிட்டு பார்க்க அவனோ, “இப்போ ஹோட்டலுக்கு போய் பேக் பண்ண ஆரம்பிச்சா தான் கரெக்டா இருக்கும்.” என்று கூறினான்.

 

“அப்போ உனக்கு இதைப் பத்தி தெரியும்ல.” என்று கேட்டதற்கு தலையை மட்டும் அசைத்து, “இப்போ நான் அதை உனக்கு சொல்ல முடியாது. நீயே உங்க வீட்டுக்கு போய் தெரிஞ்சுக்கோ.” என்று எங்கோ பார்த்துக் கொண்டு கூறினான்.

 

நான் இன்னும் குழப்பத்தோடு நின்றிருக்க ஆனந்தே உள்ளே சென்று ப்ரியாவிடமும் ராகுலிடமும் கூறிவிட்டு என்னை அழைத்துச் சென்றான்.

 

ஹோட்டலுக்கு வந்த நான் அங்கு சிதறிக்கிடந்த என் ஆடைகளை பையில் திணித்தேன். பின்பு மணியை பார்த்தாலோ அது நள்ளிரவு பன்னிரெண்டைக் காட்டியது. 

 

ஆனந்தும் “இப்போ போறது சேஃப்ட்டி இல்ல. ஏர்லி மோர்னிங் உன்னை பஸ் ஏத்தி விடுறேன். இப்போ கொஞ்ச நேரம் தூங்கு.” என்று கூறிச் சென்றுவிட்டான்.

 

எனக்கு தான் அந்த இரவு தூக்கமில்லாத இரவாக மாறியது. என்னவென்றே சொல்லாமல் கிளம்பி வா என்று சொல்லும் அம்மா, விஷயம் அறிந்தும் அதை என்னிடம் சொல்லாமல் இருக்கும் நண்பன், இவை எல்லாம் என் மூளையை குடைந்து கொண்டே இருந்ததில் ராகுலின் நினைவு கூட பின் சென்றுவிட்டது.

 

ஈர்ப்பான்(ள்)…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
9
+1
20
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்