Loading

   மாத்திரையை போட்டுக்கொண்டு உறங்கியவன் , நல்லதொரு உறக்கத்தில் மூழ்கி இருந்தான். 

        நன்கு உறங்கிக் கொண்டு இருந்தவனின் போன் அலறி அவனை தூக்கத்தில் இருந்து எழுப்பி விட்டது. 

அவனுடைய போன் இரண்டு…. மூன்று  முறை ரிங்காகி கட் ஆனது. 

     தன்னுடைய கண்களை மெதுவாக திறந்து தன்னுடைய போனை எடுத்து “யார் எனக்கு அழைப்பு விடுத்து இருப்பது? என்று யோசித்துக்கொண்டே போனை பார்த்தான்”. அதில் மதி டியர் என்று இருக்கவும் , மீண்டும் அந்த எண்ணிற்கு அழைப்பு விடுவித்தான். 

         அந்த முனையில் அழைப்பு ஏற்றவுடன் என்ன மது டியர் ? எதுக்காக எனக்கு இத்தனை முறை அழைத்து இருக்கிறீர்கள்? 

          “டேய் பங்கு! என்ன டா பண்ற ? ஏன் இன்னைக்கு காலேஜ் வரவில்லை? நீ வருவ …. வருவ என்று இவ்வளவு நேரம் காத்து இருந்தேன். நீ வரவில்லையா நானே உன்னுடைய பங்கு சமோசாவையும் உன்னுடைய பெயர் சொல்லி நானே சாப்பிட்டுக்கொண்டு இருக்கின்றேன். 

        அட போ பங்கு , நைட் என்ன நடந்தது தெரியுமா? என்றவன் இரவுத் தொடங்கி இப்பொழுது வரை நடந்த அனைத்தையும் அவளிடம் ஒப்புவித்தான். 

         வாயை மூடி சிரித்தவளால் ஒரு கட்டத்திற்கு மேல் முடியாமல் போக சத்தமாகவே சிரிக்க ஆரம்பித்துவிட்டாள். “ஆ….ஆ ” என்ன பங்கு இப்படி மானத்தை வாங்கி இருக்க? உன்னுடைய மனதில் என்ன சின்ன குழந்தை என்று நினைப்பா? 

உன்னுடைய அண்ணா மடியில் போய் ஒளிந்து இருக்க ? உன்னை எல்லாம் என்னுடைய கூட்டாளி என்று சொல்லவே ரொம்ப வருத்தமாக இருக்கு டா!

        வேணாம் பங்கு! நீ மட்டும் என்ன ரொம்ப தைரியசாலி என்று நினைப்போ? போன வாரம் தானே இருட்டில் உங்க அப்பா முகத்தை பார்த்து பயந்துபோய் மயக்கம் போட்டு விழுந்தாயே ? அதை மறந்து விட்டாயா? இரண்டு நாள் காய்ச்சல் வந்து லீவு எடுத்துவிட்டு வீட்டில் இருந்தாயே அதை மறந்து விட்டீயா? தன்னுடைய வரலாற்றை ஒரு முறை நினைவு படுத்திக்கொண்டு மற்றவர் வரலாற்றை பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டும் பங்கு. 

         சரி…. சரி நமக்குள்ள என்ன பங்கு . நீ எப்ப வருவ ? 

       நாளைக்கு வந்துவிடுவேன். எனக்கு பசிக்கிறது நான் சாப்பிட போறேன் பாய் பங்கு என்று கூறி போனை கட் செய்துவிட்டு , பாத்ரூம் சென்று முகத்தை கழுவி கொண்டு வந்து நேராக தன்னுடைய அண்ணனிடம் சென்று “அண்ணா! பசிக்கிறது எனக்கு”.

       தேவ், பார்த்துக்கொண்டு இருந்த ஃபைலை அப்படியே மூடி வைத்துவிட்டு , தன்னுடைய தம்பியுடன் சேர்ந்து உணவை உண்ண ஆரம்பித்தான். 

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

       என்னது நான் வதனியை காதலிக்கிறேனா ? அதிர்ச்சியுடன் மித்ரனை பார்த்துக் கேட்டான் பாபு.

       அந்த வழியாக போய்க்கொண்டு இருந்த வதனியின் காதுகளில் இவர்கள் இருவரும் பேசிக் கொண்டது கேட்க , ” இவர்கள் தன்னைப் பற்றி என்ன பேசுகிறார்கள்! என்று அமைதியாக சற்று தள்ளி நின்று கேட்க தொடங்கினாள் வதனி “.

          எதுக்காக இப்படி ஷாக் ஆகுற ? ஷாக்கை குறை. நீ வேற அந்த பொண்ணு திரும்பியே பார்க்காமல் போகுது, எப்ப பாரு எதையோ இழந்த மாதிரி இருக்கு. யாரிடமும் சரியாக பேசாமல் இருக்கு என்று சொன்னாயா?     

அதனால் நான் என்ன நினைத்தேன் என்றால் நீ அந்த வதனியை காதலிக்கிறாய் என்று நினைத்தேன். அதைத்தான் உன்னிடம் கேட்டேன். அதற்கு பதில் எஸ் ஆர் நோ சொல்லாமல் எதுக்கு இப்படி சத்தம் போட்டு “நாம ஊரார் கதை தான் பேசிக்கொண்டு இருக்கிறோம் என்று எல்லோருக்கும் காட்டி கொடுக்கிற? ” 

         நான் ஒன்றும் வதனியை  காதலிக்கவில்லை. வதனி பார்க்க என்னுடைய தங்கை மாதிரியே இருக்கு. என்னுடைய தங்கையின் பெயர் வனிதா. ஆனா வீட்டில் எல்லோரும் வதனி…. வதனி தான் கூப்பிடுவாங்க. ஆபிஸ்ல வதனியை பார்க்கும் போது எல்லாம் என்னுடைய தங்கச்சி நியாபகம் தான் வரும். அதனால் தான் என்னுடைய தங்கச்சி  நியாபகம் வரும் போது எல்லாம் வதனியை பார்ப்பேன். அவங்ககிட்ட பேச வேண்டும் என்று நினைப்பேன். ஆனா அவங்க என்கிட்ட பேசாம போய் விடுவாங்க. அப்போ எல்லாம் எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கும் . 

         நீ ஏன் இவங்களிடம் பேசவேண்டும் என்று நினைக்கிற ? நீ உரிமையா உன்னுடைய தங்கச்சியிடமே பேசலாமே! உரிமை இல்லாத இடத்தில் நாம் எதையும் செய்யவும் கூடாது! எதையும் எதிர்ப்பார்க்க கூடாது.

         நீங்க சொல்வது சரிதான். ஆனால் நான் என்ன செய்வது? நான் தான் பாவம் செய்துவிட்டேன் போல? அவள் மட்டும் நிம்மதியாக என்னைவிட்டு போய் மண்ணடியில் உறங்குகிறாள். என்னையும் அழைத்து இருந்தால் நானும் அவ கூட வே போய் இருப்பேன். நான் தான் பாவி ஆகிவிட்டேன் . அதனால் தான் என் வாழ்நாள் முழுவதும் மனதில் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று என்னை விட்டு தனியா போய்விட்டாள் அந்த மகராசி. இப்ப நான் தனியா பைத்தியம் மாதிரி புலம்பிக் கொண்டு இருக்கேன். இதை கூறி முடிக்கும் போது பாபுவின் கண்களில் இருந்து கண்ணீர் சில துளிகள் வெளியே எட்டிப்பார்த்தது. 

        பாபுவை ஆதரவாக அணைத்துக்கொண்டு “கடவுள் இருக்கார் நீ கவலைப்படாதே! எல்லாம் நல்லதே நடக்கும் “. 

        பாபு , தன்னுடைய வலியை மறைத்துக்கொண்டு போலியாக வெளியே புன்னகை செய்து விட்டு , இங்க பாரு மித்ரன் என்னுடைய தங்கச்சியை என்று அவனுடைய போனை எடுத்து அதில் கல்யாண கோலத்தில் சிரித்த முகமாய் இருந்த பெண்ணைப் பார்த்து மித்ரனும் சற்று அதிர்ந்து தான் போனான். முதலில் பாபு ஏதோ சற்று பொய் கூறுகின்றான் என்று நினைத்தான். ஆனால் அவனின் கண்ணீர் இவனை கொஞ்சம் கரைத்து தான் பார்த்தது. இப்பொழுது பாபுவின் ஃபோனில் கல்யாண கோலத்தில் பாபுவின் தோளில் சாய்ந்த படி சிரித்துக்கொண்டு இருந்த வனிதா அப்படியே வதனி போல தான் இருந்தாள். 

        வதனியும் இவர்கள் இருவருக்கும் தெரியாமல் அந்த புகைப்படத்தை எட்டிப் பார்த்து கொஞ்சம் அதிர்ச்சி ஆனாள். சில நொடிகள் கழித்து மற்றவர்கள் தன்னை பார்க்கும் முன் தன்னுடைய இடத்திற்கு சென்று விட வேண்டும் என்று தன்னுடைய இருக்கைக்கு சென்று அமர்ந்துக் கொண்டாள்.

          தன்னுடைய இருக்கையில் அமர்ந்தவளுக்கு  தலையில் தீடீரென வலி தோன்ற அமைதியாக தன்னுடைய இரு கைகளையும் எடுத்து  தலையை பிடித்துக்கொண்டு , கைகளின் முட்டியை மேசையின் மீது முட்டுக் கொடுத்து இருந்தாள்.  ஏற்கனவே இதயத்தின் வலி இதயத்தை வெடிக்க செய்யும் அளவிற்கு இருக்கிறது. இதில் ஏனோ புதிய வலி தோன்றுகிறது. இதற்கு என்ன பெயர் வைப்பது என்று கூட எனக்கு தோன்றவில்லையே? எதற்காக இந்த மன வலி? வனிதா என்னைப் போன்று இருப்பதில் “ஆ”? இல்லை பாபு  இத்தனை நாட்களாக என்னிடம் பேசவேண்டும் என்று நினைத்து என் பின்னே வந்தவரை நான் கவனிக்காமல் இருந்ததில் தானா? நான் ஒன்றும்  வேண்டும் என்றே  அவரின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்காமல் போகவில்லை. அவருடைய உணர்வுகள் எல்லாம் என்னை வந்த அடையவில்லை என்றே சொல்லலாம்.  

           அலுவலகத்தில் இருந்த அனைவரும் அவர்களின் வேலைச் செய்துக்கொண்டு இருந்தார்கள். பாபுவும் மித்ரனும் கூட அவரவர் வேலையை பார்க்க சென்றுவிட்டனர். 

       கீதா , என்ன டி’ என்ன ஆச்சு ? தலை எதாவது வலிக்கிறதா? ஏதாவது பிரச்சனையா ? அலுவலகத்தின் உள்ளே வந்ததும் முதலில் பார்த்தது தலையை தன்னுடைய கையால் பிடித்துக்கொண்டு இருந்த வதனியை தான். தன்னுடைய தோழிக்கு என்ன ஆச்சு ? என்ற தன்னுடைய கேள்விக்கு பதில் கிடைக்க வேண்டி , இத்தனை கேள்விகளை கேட்டுக்கொண்டு இருந்தாள். 

         எப்பொழுதும் போல்  தன்னுடைய தோழியை பார்த்து லேசான புன்னகை செய்து விட்டு , “எனக்கு எதுவும் இல்லை டி. ஐயம் ஆல் ரைட் “. 

          வதனியின் பதிலில் கடுப்பு ஆனவள் , உன்னை எல்லாம் திருத்தவே முடியாது டி என்று கூறிவிட்டு , நேராக கேண்டீன் சென்று இருவருக்கும் தேநீர் வாங்கிக்கொண்டு வந்தாள். ஒரு கப்பை அவளிடம் கொடுத்துவிட்டு , இன்றொன்றை கீதா குடிக்க ஆரம்பித்தாள். 

         எப்பொழுதும் தேநீர் வேண்டாம் என்று மறுப்பவள் இன்று அமைதியாக வாங்கி குடித்துக் கொண்டு இருந்தாள். 

       தேநீர் குடித்ததும் சற்று தலைவலி குறைந்தது போல இருந்தது வதனிக்கு. சில நிமிடங்கள் கண்களை மூடி இருந்தவள் மெதுவாக கண்களைத் திறந்து தன்னுடைய வேலையை பார்க்கத் தொடங்கினாள். 

       வதனியை விசித்திர பிறவி போல பார்த்துவிட்டு தன்னுடைய வேலையை பார்க்கத் தொடங்கினாள். 

        கீதாவின் வயிறு சத்தம் போட அப்பொழுது தான் தன்னுடைய கைக்கடிகாரத்தை பார்த்தாள். மணி இரண்டு என காட்டவும்”அச்சச்சோ! சாப்பிடுற நேரம் வந்துவிட்டது. அதனால் தான் என்னுடைய வயிறு அலாரம் போல சத்தம் போடுது” என நினைத்தவள் , வேலையே கண்ணாக இருக்கும் தன்னுடைய தோழியை அழைத்துக்கொண்டு சாப்பிட சென்றாள்.  

         இருவரும் மரத்தடியில் உட்கார்ந்து தங்களின் டிபன் பாக்ஸ்யை திறந்து கொண்டு  இருந்தார்கள். வதனியையே ஏக்கமாக பார்த்துக்கொண்டே போய்க்கொண்டு இருந்தான் பாபு. 

        வதனி , அவனைப் பார்த்து புன்னகை செய்ய , 

           பாபுவோ இது உண்மையா? பொய்யா? தன்னைத்தானே ஒருமுறை கிள்ளிப் பார்த்துக் கொண்டான். “ஆ” வலிக்கிறது இது உண்மை தான் என்று நினைத்தவன் மீண்டும் வதனியை பார்க்க ,

        வதனி , புன்னகையுடன் தன்னுடைய கை அசைத்து அருகில் வரும் படி அழைத்தாள். 

         முகம் முழுவதும் புன்னகையுடன் அவர்கள் அருகில் வந்து நின்றான்.  

வதனி அவனை தனக்கு அருகில் உட்காரும் படி சைகை  செய்தாள். அவனும் மகிழ்ச்சியுடன் அவளின் அருகில் உட்கார்ந்துக் கொண்டு அவளின் முகத்தையே பார்க்க ,

      வதனி , தான் கொண்டு வந்த உணவை அவனிடம் கொடுத்து சாப்பிடு  எனக் கூற , மகிழ்ச்சியுடன் அவள் கொடுத்த உணவை எடுத்து சாப்பிட போனேன். 

         என்னுடைய சாப்பாட்டை உனக்கு தந்தேன் தானே? அதேப்போல் உன்னுடைய சாப்பாட்டை எனக்கு தர வேண்டும் என்று உனக்கு தோன்றவில்லையா? 

       வேகமாக தன்னுடைய சாப்பாட்டு பையை எடுத்து அவளிடம் கொடுத்துவிட்டு சாப்பாட்டிலே கண்ணாக இருந்தான். சாப்பிட்டு முடிக்கும் வரை அவ்வப்பொழுது அவளை புன்னகையுடன் பார்த்துக்கொண்டு இருந்தான்.  

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்