Loading

எனதழகா – 43 ❤️

அர்ஜுன் , அசோக் மற்றும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஆகாஷையும் அடித்து இழுத்து ஆதிரா  அழைத்தசென்ற இடம் ஒரு உணவகத்திற்கு. ஒரு சில நொடிகளில்  ரியாவும் வந்து சேர்ந்தாள் .

காலையில் எழுந்ததிலிருந்து பச்சை தண்ணீர் கூட குடிக்க விடாமல் அனைவரையும் இழுத்து கொண்டு வந்தாள். ரியா வருவதற்காக தான் காத்துக் கொண்டிருக்கிறாள் என்று இவர்கள் மூவரும் நினைத்து கொண்டிருக்க, அதை முறியடிக்கும் விதமாக ரியா வந்த பின் ஆர்டர் கேட்பதற்காக வந்த சர்வரை நோக்கி அனைவருக்கும் லெமன் ஜூஸ் மட்டும் ஆர்டர் செய்தாள்.

அனைவரும் அதிர்ந்து விட்டனர். பக்கத்து டேபிளில் வகை வகையாக அடுக்கி வைத்திருக்கும் அசைவ உணவுகளை வாயில் ஜொல்லு ஊற்றும் அளவிற்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர் ஆகாஷ் மற்றும் ரியா. இவள் ஆர்டர் செய்வதை கண்டவுடன் ஆசையுடன் மெனு கார்ட்டை பார்த்தவருக்கு அதிர்ச்சியை கொடுத்ததன் பலனாக பதற்றத்தில் தண்ணீரை கீழே ஊற்றி விட்டான் ஆகாஷ்.

அதில் வழக்கம் போல் அர்ஜுன் முறைக்க , ” இவன் ஒரு லூசுப்பய !உன்னை போய் அந்த பிள்ளை லவ் பண்ணுது. பின்னாடி என்னல்லாம் கஷ்டப்படப் போகுதோ ”  என்று ஆகாஷ் புலம்பினான்.

அர்ஜூன் அடுத்து எதுவும் எதிர்வினை காண்பிப்பதற்குள் அசோக் இருவரையும் அடக்கி பிடித்ததை ஆர்டர் செய்யும் படி கூறி, அனைவரும் உண்டு கொண்டிருந்த பொழுது உள்ளே நுழைந்தனர் காவ்யா மற்றும் அனு.

அவர்கள் வந்ததை யாரும் அதிசயமாகவும் பார்க்கவில்லை ,அதிர்ந்தும் பார்க்கவில்லை. எதிர்பார்த்தது தான் என்பது போல் தான் அனைவரும் அமர்ந்திருந்தனர் .

பஞ்ச பாண்டவர்களுடன் இவர்கள் வந்தமர, “என்ன மா வேடிக்கை பாக்குற? பிடிச்சத எடு !” என்று கூறி கையில் உள்ள வஞ்சர மீன் வறுவலை அவர்கள் முன் நீட்டினான்.

ஒரு அடி பின்னே நகர்ந்தவள், மூக்கை மூடி “அய்யோ!🤢நான் வெஜிடேரியன். இது எல்லாம் நான் சாப்பிட மாட்டேன்” என்று அவள் கூறிய நொடி ஆகாஷ் அதிசயத்து வாயை திறந்து பார்த்ததினால், வாயில் வைத்திருந்த லாலிப்பாப் சிக்கன் தானாக கீழே விழுந்தது.

அர்ஜுன் அனைவரின்  கவனமும் தன் மேல் விழ வேண்டும் என்று நினைத்தானோ தெரியவில்லை, புரை ஏறியது அவனுக்கு. அதில் அவனை அனைவரும் திரும்பி பார்க்க, ஒரு சில நொடிகளில் ஆகாஷ் மற்றும் ரியா விழுந்து விழுந்து சிரித்தனர். அர்ஜுனுக்காக பாவம் பார்த்த ஆதிரா மற்றும் அசோக் கூட இவர்களைப் பார்த்து சிரித்து விட்டனர்.

இவர்கள் ஐவரும் எதற்கு சிரிக்கிறார்கள் என்று புரிந்ததால் காவ்யாவும் சிரித்தாள். அனுவிற்கும் கூட சிரிப்பு வந்தது. தன்னவனின் மனம் வாடுமே என்ற காரணத்தில் கடினப்பட்டு சிரிப்பை அடக்கினாள்.

அர்ஜுன் தான் நிதானத்திற்கு வந்து தண்ணீர் கையில் கொஞ்சம் அள்ளி ஆதிரா மற்றும் ஆகாஷின் முகத்தில் தெளித்து விட்டு, தனது அருகில் அமர்ந்திருந்த ரியாவின் பின்னந்தலையில் அடித்து தள்ளி அமரவிட்டு அனுவின் அருகில் அமர்ந்து அவளின் கையை பிடிக்க முயன்றான்.

அதற்குள் ஆதிரா அவளின் கையைப் பிடித்து கொண்டு, அனுவின் தாடையைப் பிடித்து தன் பக்கம் திரும்பி “எப்போ , எப்படி லவ் சொன்னான்? ” .

” ஹே, நானே அதை சொல்லுறேன் டி! இப்போ அதுவா முக்கியம் ? ” என்று அர்ஜுன் பல்லிடுக்கில் கூறினான்.

திரும்பி பார்த்த அனு “லவ்வை விட நான் வெஜ் முக்கியமா உங்களுக்கு? ” என்று அதிர்ந்து கேட்டாள்.

ஆகாஷ் மற்றும் காவ்யா ” அதானே !” என்று ஒரு சேரக் கூறினர். அர்ஜுன் ஆகாஷ் மற்றும் காவ்யாவை முறைத்து விட்டு அனுவிடம் கண்களால் காதல் புரிந்தான்.

அதைப் பார்த்த ரியா ” அய்யோ!அய்யோ! இவன் என்ன இப்படி மாறிட்டான்” என்று கூறி வாயில் அடித்துக் கொண்டாள். அர்ஜுன் ஒரு நிமிடம் கண்களை மூடி தலை கோதிவிட்டு நிமிர்ந்து  ரியாவை பார்க்க சமத்து பாப்பாவாக கண்களை அங்கும்  இங்கும் சுழல விட்டு லெமன் ஜூஸை உறிஞ்சி குடித்துக் கொண்டிருந்தாள்.

அவளை ஒரு மாதிரி மட்டமாக பார்த்து விட்டு அனுவிடம் திரும்பி  “நிஜமாவே உனக்கு நான் வெஜ் பிடிக்காதா? ” என்று கூறிய அடுத்த நொடி யோசிக்காமல் தலையை இடவலமாக ஆட்டினாள்.

“கேள்வியை கரெக்ட்டா  கேளு மேன் ” என்று கூறி, கூலர்ஸை மாட்டிக் கொண்டு “டேய ஷா, உனக்கு நான்வெஜ்  சமைக்க தெரியுமா? “என்று கேட்டதற்கு “ம்ம்” என்று கூறி தலையாட்டி விட்டு அர்ஜுனை ஒரு மாதிரி பார்த்தாள்.

ஆதிரா ” அது ஒன்னுமில்லை ! அவன் மூச்சில்லாம கூட இருப்பான். நான் – வெஜ் இல்லாமல் இருக்க மாட்டான் . அதான் கேட்டான். சரி அதை விடு உப்பு சப்பு இல்லாத மேட்டர் அது . நீ சொல்லு. எப்போ எப்படி லவ் சொன்னான்? “

“இதுவும் உப்பு சப்பில்லாத மேட்டர் தான் ” என்று காவ்யா கூறினாள். அனுவும் அர்ஜுனும் முறைக்க, “கிளுக் ” என்று சத்தம் கேட்டவுடன், அர்ஜுன் திரும்பி ரியாவை முறைக்க, மறுபடியும் ஜூஸை முன்பு போல் குடித்து கொண்டிருந்தாள்.

“அது ஒன்னுமில்லை சீனியர்! திடீரென்று ஒரு பொண்ணு சீனியர் உன்னை கூப்பிடுறாங்கனு சொன்னாள். நாங்க எங்க காலேஜ் சீனியர் தான் கூப்பிடுறாங்கனு நினைச்சு கேண்டின் பக்கம் போனோம். அப்போ தான் அர்ஜுன் அண்ணா வந்தாரு. வந்தவர் காம்பவுண்ட் வெளியில் கூட்டிட்டு போயி ஒரு நகை கடை வாசலில் நின்னுட்டு ஒரு நிமிஷம்னு சொல்லி உள்ள போயிட்டு வந்து இரண்டு மோதிரம் எங்ககிட்ட காண்பிச்சாரு .நான் தான் செலக்ட் பண்ணேன். ஒகேனு சொல்லி  இவள் கையில மாட்டினாரு. இவளும் ஓகே சொல்லிட்டாள்” விளக்கவுரை கொடுத்தாள் காவ்யா.

“என்ன மச்சான் இது உனக்கு இப்படி ஒரு சான்சா ? ” ஆகாஷ் பொறாமையில் பொங்கினான்.

“ஹே , என்ன உளருற !”ரியா, ஆதிரா மற்றும் காவ்யா கேட்டனர்.

“உங்களுக்கெல்லாம் புரியாது . ஒரு பொண்ணை ஒகே பண்ண வைக்கிறது எவ்ளோ கஷ்டம்னு ” என்று சொன்னவுடன் அனு அவனைப் பார்த்து முறைத்தாள்.

அனுவின் முறைப்பை ஓரங்கட்டி விட்டு “டேய் ஷா! இவன் சொல்ல மாட்டான். நீ சொல்லு. எப்போ லவ் சொன்னான்? ” என்று ஆர்வத்துடன் கேட்டான் ஆகாஷ்.

“ஒரு மாசம் ஆச்சு நண்பா இங்கு பாரு ஒரு மாசம் முடிஞ்சதுக்கு செலபிரேசனை” என்று கூறி அனுவின் போனில் எடுத்த புகைப்படத்தை காண்பித்தாள்.

அனைவரும் அதிர்ந்து விட்டனர். ஆதிரா ஃபோர்க்கை தட்டில் குத்த,நெஞ்சில் கை வைத்து ஆகாஷ் ,

துரோகம் துரோகம்
துரோகம் துரோகம்
துரோகம் துரோகம்
துரோகம்

கடவுள் தூங்கும்
நேரம் பார்த்து
சாத்தான் ஆடும் ஆட்டம்  

மனிதன் தூங்கும்
நேரம் பார்த்து
பாசம் போடும் வேஷம்

துரோகம் துரோகம்
துரோகம் துரோகம்
துரோகம் துரோகம்
துரோகம்

எனதழகா – 44 ❤️

ஆகாஷ் பாடியவுடன் அனுவிடம் திரும்பி “ஹே ,அவன் தான் லவ்வு வந்துருச்சு ஃபிரண்ட கழட்டி விட்டுடான். நீயாவது என்கிட்ட கூட வேணாம் உங்க அண்ணன் கிட்ட சொல்லிருக்காம்ல “ஆகாஷ் முடிந்தளவு பற்ற வைத்தான்.

அனு” நான் சொன்னேன் அண்ணா “

காவ்யா” ஆனால், அர்ஜுன் அண்ணா பக்கத்துக் கடையில் ஒரு  பிஸ்கட் பாக்கெட் வாங்கிட்டு வந்து அண்ணணை பார்த்து குரைச்சுக் கிட்டு இருந்த  நாய்க்கு பிஸ்கட் போட்டாங்க “

“சரிரிரிரிரி…….” ஆகாஷ் சிக்கன் 65 ஒன்னு, கோலா உருண்டை ஒன்னு என்று சாப்பிட்டு கொண்டே கேட்டான்.

காவ்யா”ஏன் இப்படி செய்ரீங்கனு கேட்டேனா? “

ஆகாஷ்”ஹாங்ங்….. “

ரியா”எதுக்கு இப்போ பேனர்ஜி வடிவேல் மாறி பேசுற? “

“நல்லாயிருக்குல ” என்று 32 பல்லையும் காட்டிக் M சிரித்தான்.

ஆகாஷ் திரும்பி காவ்யாவை பார்த்தவுடன்
” இந்த நாயைப் கரெக்ட் பண்ண மாதிரி ஆகாஷை கரெக்ட் பண்ணிடலாம் அப்படினு சொன்னாரு “

“ஓஓஓ….. என்ன? ” ஆகாஷ் அதிர்ந்து அர்ஜுனையும் ஐட்டத்தையும் மாறி மாறி பார்க்க,  “பரவாயில்லை ஆதவன் ஸ்டைலையே முடிச்சுட்டா” என்று ரியா நக்கலாக கூறினாள்.

இவ்வாறு கேலி விளையாட்டுடன் இவர்களின் நட்பும் நன்றாக சென்றுக் கொண்டிருந்தது. அது போல், அர்ஜுன் மற்றும் அனுவின் காதலும் நன்றாக சென்று கொண்டிருந்தது.

ஒரு நாள் காலையில் பிருந்தாவனத்தில் பாமா தனது மகனை எழுப்பி கொண்டிருந்தார். விழித்தவன் “மீ…..” என்று அழைத்து அவரை இறுக அணைத்தான்.

அவரும் அணைத்து கொண்டு ” என்னடா முகமெல்லாம் பிரகாசமா இருக்கு. என்ன விஷயம் ? ” என்று புருவம் உயர்த்தி மென் பற்கள் தெரிய சிரித்துக் கொண்டே கேட்டார்.

உள்ளுக்குள உதறல் எடுத்தாலும் வெளியில் பதட்டம் இல்லாமல் “யாரு சொன்ன ஈஸ்வரி அம்மாவா இல்லை ஆகாஷா ? ” என்று  கேட்டான்.

“அத எதுக்கு உனக்கு? நீ யாருனு சொல்லு? ” என்று சக தோழி போல அவளை நச்சரித்தார்.

அவரின் குழந்தைத் தனத்தை எண்ணி மனதிற்குள் சிரித்து விட்டு “அன்பு மா அவள் ☺️”

“அன்பா! பேர் அனு தான சொன்னான் ?” என்று கூறி நாக்கை கடித்தார பாமா.

“தெரியும் அந்த நாய் தான் சொல்லிருக்கும்னு கவனிச்சிருக்கிறேன் . அவளுக்கு இரண்டு பேரு அனு நிதி என்ற அன்பரசி” என்று விளக்கம் கொடுத்தான்.

அதன் பின் அவளைப் பற்றியும், அவளை சந்தித்த நாளிலிருந்து நண்பர்களுடன் நடந்த மாநாடு வரை அனைத்தையும்  கூறினான். அமைதியாக கேட்டு கொண்டிருந்தவர் “இதெல்லாம் சரியா வருமா? ஆருஷியை உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கனும்னு மீரா அண்ணி தீவிரமா இருக்காங்களே ? ” என்று பீதியுடன்  கேட்டார்.

தன் அன்னையை முறைத்து விட்டு ” இங்க பாருங்க ஆருஷி எனக்கு பவி மாதிரி தான். இரண்டாவது நான் இன்னும் காலேஜ் முடிக்கல. எனக்கு செட்டில் ஆக கொஞ்சம் வருஷம் ஆகும். நான் தனியா தான் தொழில் தொடங்க போறேன் ” என்று தனது திட்டத்தை பற்றியும் மெதுவாக கூறினான்.

“என்னது தனித் தொழிலா😱? உங்க அப்பாவுக்கும், தாத்தாவுக்கும் யாரு பதில் சொல்லுறது ? என்னடா புதுசு புதுசா சொல்லுற? உன் லவ் பத்தியே எப்படி பேசுறதுனு யோசிக்கிறேன். இதுல இது வேறயா? அப்பா பாவம்டா! ரொம்ப ஓடிட்டாரு உழைச்சுட்டாரு. அவருக்கு தான் ரெஸ்டு கொடுக்கலாம்ல ? ” என்று தனது மகனின் தாடையைப் பற்றி கெஞ்சினார் பாமா.

” என்ன புருஷனுக்கு ஆதரவா? அன்பும் இந்த மாதிரி பேசுவா? ” என்று காலரைத் தூக்கி விட்டு “அப்பா தொழிலைப் பார்க்க மாட்டேனு சொல்லல! எனக்குனு ஒரு அங்கீகாரம் வேணும் . அதுக்கு சொல்லுறேன் ” என்று கூறி அன்பின் புகைப்படத்தை காட்டி விட்டு இவன் காலேஜிற்கு சென்று விட்டான்.

இதை மறைவில் இருந்து கவனித்து கொண்டிருந்த மீரா வெங்கடேஷனிடம் கூறி அன்பரசியைப் பற்றி விசாரிக்க கூறினார்.

“இதெல்லாம் தேவையா ? அதான் அவன் தெளிவா சொல்லிட்டான்ல? ஆருஷி பவி மாதிரி தான் பாக்குறேனு ! போய் வேற வேலையை பாரு!”என்று கூறிவிட்டு இவர் சென்று விட்டார்.

மீரா தான் இவரிடம் கூறினால் வேலை நடக்காது என்று நினைத்து வேறு யாரிடம் சொல்லி விசாரிக்க சொல்லலாம் என்று யோசிக்கையில் ஆருஷி தான் கண் முன் நின்றாள்.

கல்லூரியில் செமஸ்டர் நடந்து கொண்டிருப்பதால் ஒரு வாரத்திற்கு தொந்தரவு தர வேண்டாம் என்று கூறியதால் ஆருஷி விடுமுறைக்கு வீட்டிற்கு வருவதற்கு ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தார். ஆனால், ஆருஷி மேலும் ஒரு வாரம் படிப்பு சார்ந்த பயிற்சியை மேற்கொள்வதற்கு தங்கி விட்டாள்.

இந்த இருவாரமும் மீராவிற்கு தான் நெஞ்சே வலிப்பது போல் இருந்தது. ஒரு வழியாக நாளை வந்து விடுவாள் என்று ஆனந்தத்தில் மீரா தனது அறையில் தொலைக்காட்சியில் படம் பார்த்துக் கொண்டிருந்தார்.

அச்சமயம் வெளியில் சத்தம் கேட்டு வெளியில் வந்தார் மீரா.அங்கே அர்ஜுன் ஆக்ரோசமாக உணவருந்தும் கண்ணாடி மேஜையை உடைத்து அதிலிருந்த பதார்த்தங்கள் அனைத்தும் கீழே விழுந்து சிதறியது.

சுற்றி பார்த்த பொழுது வீட்டிற்கு யாரும் இன்னும் வரவில்லை என்று புரிந்து கொண்டார் மீரா. வேறு வழியில்லாமல் அர்ஜூன் அருகில் செல்ல அப்பொழுது தான் கவனித்தார் பாமாவும் ஒரு ஓரத்தில் கண்கள் கலங்கி நிற்பதை.

தன் அண்ணியை பிடிக்கததால் வேகமாக தன் அண்ணன் மகனிடம் சென்றார். என்ன என்று வினவிய போது அர்ஜுன் பாமாவை முறைத்துக் கொண்டிருந்தான்.

பாமா தான் ஏதோ தப்பு செய்திருக்கிறார் போல என்று நினைத்து அர்ஜுனின் தோளில் தட்டிக் கொடுத்துக் கொண்டே, “உங்களுக்கு இந்த சமையல் தவிர எதுவும் தெரியாது ! எதுக்கு தேவையில்லாமல் பிள்ளைகள் விஷயம்லாம் தலையிடுறீங்க. அதெல்லாம் அண்ணா பார்த்துக்க மாட்டாங்க. எதுக்கு தான் இப்படி இருக்கிங்களோ !ச்சை…. முதலில் அண்ணா வேலையில் பிரச்சனை பண்ணீங்க . இப்போ அர்ஜூன் .உங்களுக்கு தெரியலைனா ஒதுங்க வேண்டி தான? “என்று அருகில் ஒரு பைலில் உள்ள தாள்கள் அனைத்தும் கீழே  கிடப்பதை வைத்து மனதிற்குள் அவரே சித்தரித்துக் கொண்டார்.

மீரா பேசுவதற்கு  அனைத்துக்கும் அர்ஜுன் பாமாவைத் தான் முறைத்துக் கொண்டிருந்தான். உள்ளே நுழைந்த கேசவர் ” என்ன என்னாச்சு? “என்று வினவி கொண்டே உள்ளே நுழைந்தார்.

” இல்லைண்ணா ! அர்ஜுன் சம்பந்தம் உள்ள தாளை ஏதோ அண்ணி செஞ்சுட்டாங்க போல. அதான் அர்ஜுன் கோபமா இருக்கான் போல ” என்று மீராவை பாமா மற்றும் அர்ஜுன் பேசுவதற்கு முன் பதில் கூறினார்.

“ஏம்மா பார்த்து பண்ண வேண்டியது தான? ” என்று கேசவர் கூறிய நொடி, அவரின் நெற்றியில் பட்டு தெறித்தது  அலைபேசியின் ஒரு பாகம்.

கீர்த்தி ☘️

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்