Loading

எனதழகா  – 41 ❤️

இவர்களின் குரல் வளத்தைக் கண்டு கலையரங்கமே கரகோஷம் எழுப்பியது. இதில் அசோக் அதிர்ந்திருந்தான் என்றால் ஆகாஷ் வாயை பிளந்து கொண்டு பார்த்துக் கொண்டிருந்தான்.

கேசவர் நடத்தும் கல்லூரி என்பதால் கிடைக்கும் நேரத்தில் எல்லாம் ஆதிராவும், ஆகாஷும் இங்கே தான் இருப்பார்கள். அப்படித்தான் அனுவும், அர்ஜுனும் இடித்த பின் நடந்த சம்பாஷணைகள் ஆதிராவின் காதிற்கு எட்டியது.

அதில் வழக்கம் போல் ஆதிரா குதித்து கொண்டிருந்தாள். ஆகாஷ் தான் அவளின் தலையில் கொட்டி “ஏன், ஸ்கூல் படிக்கும் போது ஒருத்தனை அடிக்க பாஞ்ச! அவன் ஆம்பள பையன் . அமைதியா போனான். இப்போ இடிச்சது ஒரு பொண்ணு . அதுவும் கூட ஒன்னு இருக்கே . அது ஒரு பஜாரி. அந்த பொண்ணுக்கிட்டலாம் பேசவே / ” என்று அவன்ப்பாட்டிற்கு பேசிக்  சென்றான்.

ஆதிரா தான் பக்கத்தில் வைத்திருந்த ஒரு புத்தகத்தை எடுத்து அவன் தலையில் பதம் பார்த்து விட்டாள். அவன் துடித்து எழ, கையால் வாயை மூடி அமைதியாக இருக்கும்படி செய்கையால கூறிவிட்டு, ஆகாஷின் அருகில் வந்தாள்.

ஆதிரா கையை நீட்டி, பதறி ஒரு அடி பின்னே நகர்ந்தான் ஆகாஷ். அவனைப் பிடித்து நிறுத்தி அவனின் பர்ஸை எடுத்துக் கொண்டு கேண்டினில் ஆர்டர் செய்தாள்.

“திமிரு எடுத்தவ, என்னையே அடிச்சுட்டு என் பர்ஸை எடுத்து சாப்பிட போகுது. வரட்டும் வெளுக்குறேன் “என்று குனிந்து தலையை தேய்த்து கொண்டே கூறினான்.

அந்நேரம் அவனின் பின்னால் யாரோ கை வைக்க, அதிர்ந்து திரும்பிய ஆகாஷ் ” அய்யோ! அடிச்சுறாதடி. சும்மா தான் சொன்னேன் ” என்று வாங்கிய அடியின் பலனாக தன்னை அறியாமல் வார்த்தையை உதித்தான்.

” அப்போ ஏதோ சொல்லிருக்க ? உன்னை அப்புறம் கவனிச்சுக்கிறேன் ” என்று பல்லிடுக்கில் கூறிவிட்டு ” இவங்க இரண்டு பேரும் அங்க ஒரமா நின்னுக்கிட்டு அர்ஜுனையே பார்த்துக்கிட்டு இருந்தாங்க. அதான் பாவமேனு கூட்டிட்டு வந்தேன் ” என்று கூறி அருகிலிருக்கும் திண்டில் எதுவும் தெரியாதது போல் ஐஸ் கிரிம்மை சுவைத்து கொண்டே அமர்ந்து கொண்டாள்.

அங்கு நின்றது அனுவும் காவ்யாவும் தான். ஆதிரா அவர்களின் தாவணியை வைத்தே அவர்கள் கலைக் கல்லூரி தான் நிர்ணயித்து விட்டாள். இவர்கள் தான் இடித்தவர்களோ என்று சந்தேகம் இருந்தது அவளுக்கு. அதனாலேயே தூரத்தில் இருந்து அவர்கள் நோட்டமிடுவதை கண்டு விட்டு தான் அழைத்து வந்தாள்.

அவர்களை ஏற இறங்க பார்த்துக் கொண்டே இருந்தாள். ஆகாஷ்”எதுக்கு இப்போ வெறிக்க வெறிக்க அவங்க இரண்டு பேரையும் பார்க்கிற? “

“இல்லை, இந்த  சம்பவம் ரொம்ப வருஷம் முன்னாடி நடந்த மாதிரியே இருக்கே ” என்று ஒரு சேர ரியாவும், அசோக்கும் கேட்டனர்.

அதில் ஆச்சர்யப்பட்ட ஆதிரா ” அதே தான் நானும் நினைச்சேன். ஆரியனுக்கு வேற போன் பண்ணனும் ” என்று கூறிய நொடி, ” அவனுக்கு எதுக்கு  போன் செய்யனும் ?” என்று சீறிப் பாய்ந்தான் அர்ஜுன்.

” இவனும் இவன் பொஸிவ்வும் ” என்று ஆகாஷ் முணங்குவதை கவனித்த அர்ஜுன் ஆழ் காட்டி விரலை நீட்டி எச்சரிக்கை விடுத்தான்.

அந்நேரம் ஒரு ஜோடி கண்கள் அர்ஜுனை சுட்டெரித்தது. யாரும் அறியும் முன்னர் தன்னை சமன்படுத்தி கொண்டனர்.

அசோக் தான் இவர்கள் பிரச்சனை தீராது என்று அனுவிடம் “நல்லா பாடுன மா! சூப்பர்…. வாழ்த்துக்கள்! அடுத்து அடுத்து வர போட்டியில கலந்துக்க முயற்சி பண்ண . நல்ல சான்ஸ் கிடைக்கும். ” என்று மனதாரப் பாராட்டினான்.

ஆகாஷும் அனுவைப் பாராட்டி விட்டு காவ்யாவிடம் வம்பிழுக்க ஆரம்பித்து விட்டான். “ஏம்மா, அந்த பொண்ணுக்கு மாதிரி உனக்கும் ஏதாச்சும் திறமை இருக்கா இல்லை இப்படி சிங்குசாங்  தானா ?

காவ்யா”பர்சேஸிங் பவர் னா என்ன ? “

ஆகாஷ் “ஏன் ? “

காவ்யா “அட சொல்லுங்க அப்படினா என்ன? “

ஆகாஷ் “பர்சேஸிங் பவரா ? அது என்னது? எனக்கு எப்படி தெரியும் ? நான் டாக்டர் மா!😎” என்று வெள்ளந்தியாக கூறினான்.

“தெரியுதுல !உங்க சப்ஜெக்ட் இல்லைனு. அதோட டாக்டர் இல்லை. படிச்சுட்டுதான்  இருக்கிங்க. டாக்டராமல்ல டாக்டர் ….”என்று காவ்யா படபடவென பொறிந்து விட்டாள்.

“ஏன் மா இப்படி “என்று காவ்யா பேசிய பேச்சில் அதிர்ந்து கேட்டான் ஆகாஷ்.

“ஒருத்தவங்களுக்கு ஒரு திறமை இருக்கு பொழுது , அவங்களை சுற்றி உள்ளவங்களுக்கும் அந்த திறமை இருக்கணும்னு அவசியம் இல்லை. இந்த மாதிரி கேள்வி எல்லாம் அடுத்து வரக் கூடாது “

இப்படி தான் ஆகாஷ் மற்றும் காவ்யாவின் நட்பு ஆரம்பித்தது. காவ்யா பேசியதற்கு ஆகாஷிடம் அனு மன்னிப்பு கோரியதோடு
அவன் கேட்ட கேள்விக்கு அவனுக்கு புண்படாதவாறு பதிலளித்தாள்.

இதில் அனு மற்றும் ஆகாஷின் நட்பு வளர்ந்தது. அதோடு அசோக்கும் அனு மற்றும் காவ்யாவை தங்கை போல் சித்தரித்து பழக ஆரம்பித்தான். அதில் ரியா கூட சில நேரம் அவர்களிடம் உரையாடுவாள். ஆனால், அர்ஜுனும் ஆதிராவும் அவர்களிடம் எந்தவொரு சூழ்நிலையிலும் பேசவில்லை.

காவ்யா அவர்களை பெரிதும் கருத்தில் கொள்ளவில்லை . ஆனால், அனு தான் அர்ஜீனின் கடைக்கண் பார்வைக்காக காத்துக் கொண்டிருந்தாள். ஆனால், இவள் பார்ப்பது யார் கண்ணிற்க்கும் புலப்படாதவாறு  பார்த்துக் கொண்டாள்.
ஆனால், அர்ஜுனின் கண்களுக்கு அதை தென்படாமல் இல்லை. ஆனால், ஏனோ மற்ற பெண்களைப் போல் இவளை ஒதுக்க தோணவில்லை அவனுக்கு .

ஒரு அழகிய ரம்மியமான மாலை பொழுதினில், கடல் அலைகளின் சத்தத்திற்கு இடையில் மழைகள் மலர்களாக தூவ அழகான எளிய முறையில்  பேஸ்டல் கலர் என்று கூறப்பட்டும் நிறங்களில் பூக்களால் உருவாக்கப்பட்ட ஒரு அழகான மேடையில் அர்ஜுனும் வெள்ளை சட்டை, பேன்ட் அதற்கேற்றவாறு வெள்ளை கோட் அணிந்து கொண்டு நிற்க, அழகிய வேலைப்பாடு நிறைந்த பேஸ்டல் பச்சையில் சேலை உடுத்தி கழுத்திற்கு அழகான ஒரு மாலையும்,   கைகளில் சேலைக்கேற்ற நிறத்தில் இரு பெரிய கெட்டி வளையல்களும், நெற்றியில் ஒரு சின்ன கல் பொட்டும், நெற்றி சுட்டியும், காதில் பெரிய காதணியும் இடுப்பின் கீழ் வரை உள்ள முடியை பின்னலிட்டு , பாதி பின்னலின் நீளம் வரை பூச்சூடி அன்னநடை இட்டு நடந்து வந்தாள் அனு.

எனதழகா – 42 ❤️

அர்ஜுனின் பார்வை அனுவின் மேல் மட்டுமே. அவ்விடத்தில் அவர்களைத் தவிர வேறு யாருமே இல்லை. அவன் அருகில் இவள் வர வர, இவனின் இதயத்துடிப்பு பல மடங்காக எகிறியது. இவ்வுலகம் அனைத்தும் அவன் கையில் கிடைத்த பேரினந்தத்தில் திளைத்தது போல் இருந்தது.

மேடையின் அருகில் வந்தவுடன், நிமிர்ந்து அவனைப் பார்த்து புன்னகை புரிந்தாள். அதில் சிலிர்த்து விட்டான். அப்பொழுது தான் அவனை எப்பொழுதும் கட்டி இழுக்கும் அவளின் தாடையில் இருக்கும் மச்சம் இப்பொழுதும் அவனை கிறங்க வைத்தது.

அவள் நெருங்கியவுடன், அவனின் கைப்பிடித்து மேலே ஏறி அவனருகில் நின்றாள் .அவனவளாக மாறப் போக நொடிக்காக இருவரும் காத்துக் கொண்டிருந்தனர்.

இருகைகளிலும் சேர்த்து தாலியை வாங்கி அதை ஒரு கையில் மாற்றி விட்டு, அவளிடம் இன்னும் நெருங்கி அவளின் பிடறியில் கை வைத்து, அவளின் முகத்தை தன் முகத்திற்கு நேராக பார்க்கும்படி வைத்து   அவளின் பார்வை தன் மேல் விழும் வரை காத்திருந்து நிமிர்ந்துவுடன், எப்பொழுதும் சுண்டியிழுக்கும் தாடை மச்சத்தில் முத்தமிட்டு, அவளின் அதரங்களை தன் அதரங்களால் முற்றுகையிட்டான்.

அவளின் இதழ் சுவைத் தேனைவிடத் தித்தித்தது. தொடங்கினால் முடிவு ஒன்று இருக்கும் காரணத்தினால் மட்டுமே அவளின் இதழை விடுத்தான். விடுத்த பின்பும், அச்சுவை உதட்டின் ஈரத்தில் இன்னும் இருந்தது போல் உணர்ந்தான். அதை கண்மூடி லயித்து  தன் நாவால்  உதட்டை வருடி சுவைத்தான்.

ஒரு நொடி தான் “த்தூ…த்தூ….. த்தூ….. “.அர்ஜுனின் அலறலில் அருகில் உறங்கி கொண்டிருந்த அசோக்கும் அலறி விட்டான். சமைத்துக் கொண்டிருந்த ஈஸ்வரியும் பதறிக் கொண்டு ஓடி வந்தார்.ஆகாஷ் பாவமாக அவனைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

ஈஸ்வரி”ஏன்டா, என்னாச்சு? காலங்காத்தால கத்திக்கிட்டு இருக்க? “

” அம்மா!என்ன புள்ளை வளத்திருக்க நீ ? “என்று அர்ஜுன் கோபமாக கேட்டான்.

ஈஸ்வரி” நான் எங்க வளத்தேன்? அதுவா தான் வளந்துச்சு . ஏன் வாணரம் என்ன பண்ணுச்சு?

“மம்மி!😡ஒரு அளவுக்கு தான் ப்ரோ!” ஆகாஷ் பொங்கி விட்டான்.

“ச்சீ…. பேச்சை குறை…. என்னடா பண்ண? இப்படி துப்பிக்கிட்டு இருக்கான்? “ஈஸ்வரி எரிச்சலுடன் கேட்டார்.

“உப்பு வாயில போட்டான் மா ! த்தூ…..த்தூ… ” மறுபடியும் துப்பிக் கொண்டே அர்ஜுன் கூற,

ஆகாஷ் “அம்மா, அவனை நம்பாத. நான் கொஞ்சம் தான் போட்டேன் அதுவும் அவன் உதடுல தடவுனேன் “

அசோக்”அடச்சீ…. கருமம்  …….”

ஆகாஷ்”அவன் பண்ணத விட கருமம் இல்லை .அவன் பண்ணத விட கருமம் இல்லை . நான் கொஞ்சம் போட்டவுடனே தித்திப்பா இருக்கு. இன்னும் கொஞ்சம் அப்படினு கேட்டான்”

ஈஸ்வரி அவனை ஒரு மார்க்கமாக பார்த்து விட்டு சென்று விட்டார். அவர் சென்றதை உறுதி செய்து விட்டு அசோக் அர்ஜூன் அருகில் வர , அர்ஜுனோ ஆகாஷ் தலையில் கொட்டினான்.அவர்களை பிரித்து விட்டு “என்ன விஷயம்  சொல்லு? யாராச்சும் லவ் பண்ணுறீயா ? ” என்று அசோக் வெட்கப்பட்டு கொண்டே கேட்டான். அதற்கு அர்ஜுனும் போர்வையை பிடித்துக் கொண்டே ஒரு மார்க்கமாக சிரித்தான்.

அசோக்”பரவாயில்லை சொல்லுடா “

“ச்சீ….. உவக்” ஆகாஷ் ஒரு மார்க்கமாக வைத்துக் கொண்டு கூறினான்.

அதில் முறைத்த இருவரையும் கண்டு கொள்ளாமல் “என்ன கருமம் வேணாலும் பண்ணு வெட்கப்படாத “என்று அர்ஜுனைப் பார்த்துக் கூறி விட்டு, “அவன் தானா லவ் பண்ணுறான் . அதுவும் வேற ஏதோ ஒரு பொண்னை. என்னமோ உன்னை லவ் பண்ணுற இப்படி ரியாக்சன் கொடுக்கிற ? “

அசோக் மற்றும் அர்ஜுன் “டேய்! “ஒரு சேரக் கூவ,

” நிறுத்து ! அப்பப்ப வர எனக்கே தெரியும் அவன் யாருக்கு ரூட் விடுறானு . கூட இருக்க உனக்கு தெரியாதா ? ” என்று கூறி ஆகாஷ்  அசோக்கை கேவலமாக பார்த்தான்.

அசோக்”யாரை லவ் பண்ணுறான்? “

ஆகாஷ்” அந்த ஆர்ட்ஸ் பிள்ளை தான். அந்த ஆர்ட்ஸ் பிள்ளையை தான் “

அசோக்”எது காவ்யா அனுவா ? “

ஆகாஷ் “இரண்டுபேரும் இல்லை. அனு மட்டும் தான் ” என்று கூறி டீயை ஒரு மிடறு  குடித்தான்.

அர்ஜுன் மற்றும் அசோக் மறுபடியும் முறைக்க, அதைக் கண்டு கொள்ளாமல் “மம்மி, இந்த வெட்டி பயலுக்காக வெஜ் மட்டும் சமைக்காத. நல்லா நாட்டு கோழி வாங்கி சமை . நான் ஆர்டர் போடவா  மம்மி ” என்று கூறி அடுப்பறைக்குள் சென்று ஈஸ்வரியை கட்டிக் கொண்டான் ஆகாஷ்.

“உனக்கும் அர்ஜீனுக்கும் தான் டா தனியா  சமைக்கிறேன் ” என்று கூறி இவர்களின் பாசப்பிணைப்பில் இருக்க, அறையில் அர்ஜுன் அனுவை காதலிப்பதை அசோக்கிடம் ஒப்புக் கொண்டான்.

அசோக் கட்டியணைத்து ஆறுதல் சொல்லும் நொடி அர்ஜுனின் போனும் ஒலித்தது. வெளியில் காலிங் பெல் சத்தமும் கேட்டது. அர்ஜுன் போனை எடுக்க , ஈஸ்வரி கதவை திறந்தவுடன் ” யாரைக் கேட்டு இந்த முடிவு எடுத்தான் அவன். என் கிட்ட ஒரு வார்த்தை சொன்னானா . அப்போ நான் யாரு அவனுக்கு ” என்று பட்டாசாக வெடித்து கொண்டே உள்ளே வந்தாள் ஆதிரா.

அதே நேரம் ரியாவும் வீடியோ காலில் அர்ஜுனை இதே கேள்வி கேட்டு வறுத்து எடுத்துக் கொண்டிருந்தாள். ஒரு நிமிடத்தில் நிகழ்ந்த இந்நிகழ்வால் அதிர்ந்து முழித்து விட்டான்.

கடினப்பட்டு இவர்களை இருவரையும் சமாதானப்படுத்துவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது அர்ஜீனோடு சேர்த்து அசோக்கிற்கும்.

ஆனால், வகையாக மாட்டி கொடுத்த ஆகாஷ் சிக்கன் 65 யை தட்டில் எடுத்துக் கொண்டு இவர்கள் சம்பாஷனைகளை கிரிக்கெட் மேட்ச் பார்பது போல் பார்த்து கொண்டிருப்பதோடு “மம்மி, இன்னும் கொஞ்சம் எடுத்துட்டு வா ….சூடு  இல்லை…காரம் இன்னும் கொஞ்சம் போடுங்க ” என்று கூறி அவன் பாட்டிற்கு சாப்பிட்டு கொண்டிருந்தான்.

கீர்த்தி☘️

 

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்