Loading

எனதழகா – 31 ❤️

“ஹலோ மாமா! “

அபியும், நிவானும் அதிர்ந்து விட்டனர். வெங்கடேஷனுக்கு ஆச்சர்யம், ஆருஷி எதற்காக இங்கு பேச வேண்டும் என்று யோசித்துக் கொண்டே அமைதியாக இருந்து விட்டார்.

அபி தான்  ” என்ன மேடம் , என்ன காத்து நிவான்  போனுக்கு அடிக்குது. எனக்கு தான பண்ணுவ. அவனுக்கும் உனக்கும் ஏழாம் பொருத்தம் ஆச்சே”

ஆருஷி கெட்டிக்காரி .அருகில் யாரோ இருக்கின்றனர் என்று சட்டென்று புரிந்து கொண்டாள்.

“டேய், உனக்கு எவ்ளோ நேரம் போன் பண்ணுறது? ஒரு அவசரத்துக்கு கூட எடுக்க மாட்டியா?” என்று அவள் திட்டிக் கொண்டே போக,

“இவள காப்பதலாம்னு நம்ம உதவி பண்ணா, நம்மளையே திட்டுறா ” என்று மனதிற்குள் கருவிக் கொண்டான் அபி. நிவானோ கடினப்பட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டிருந்தான். வெங்கடேஷனோ சிரித்துக் கொண்டே “பாப்பா ” என்று அழைக்க,

” அய்யோ அப்பா !நீங்க அங்கையா இருக்கீங்க எனிதிங் சீரியஸ்? என்ன மூணு பேரும்?.”ஆருஷி முதலில் தடுமாறினாலும்  பின்பு எதுவும் பிரச்சனையோ என்று பயந்தாள்.

வெங்கடேஷன்”அதுலாம் ஒன்றுமில்லைடா, ஐஸ்ட் ஒரு கேசுவல் மீட்டிங் தான். நீ ஏன் ஆபிஸ் டைமிங்கில நிவானுக்கு கால் செய்யுற ? ” என்ன தான் சுதந்திரத்தோடு பிள்ளைகளை வளர்க்க ஆசைபட்டாலும் தகப்பனுக்கே உரிய பயம் அவருக்கும் இருக்கிறது.

ஆருஷி “நத்திங் சீரியஸ் பா! அபி ஜாப்க்கு ரெஃவர் பண்ண சொன்னான். என் ஃபிரண்ட் கிட்ட சொல்லிருந்தேன். நவ் ஷி கால் அண்ட் ஆஸ்க் ஹிஸ் ரெஸ்யூம். தட்ஸ்  ஒய் “.

“ஓஹோ, அதுக்கு தான் கால் பண்ணியா . ஒகே ஒகே அனுப்புறேன் ” என்று அபிக் கூறி விட்டு காலை கட் செய்து விட்டான் .

இங்கு அபியும், அங்கு ஆருஷியும் ஒரு சேர மூச்சு விட்டு ஆசுவாசப் பட்டுக் கொண்டனர். ஆனால், நிவானோ தனக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என்பது போல் அமர்ந்திருந்தான்.

வெங்கடேஷன் “தீனா போனது நினைச்சு கவலைபடாத. போனத விட்டுட்டு அடுத்த வேலையைப் பாரு. நமக்கு நிறைய வேலை இருக்கு” என்று கூறி வண்டியை ஓரத்தில் நிறுத்தினர்.

இதுவரை இருந்த அமைதியான சூழல் வெங்கடேஷனின் பேச்சால் மறுபடியும் மனதிற்குள் பாரம்  கூடியது. அதற்குள் வண்டியையும் நிறுத்த எரிச்சல் மூண்டது.

ஆனால் வெங்கடேஷனோ இது அவருக்கு புரிந்தாலும், கருத்தில் கொள்ளாமல் “அளவா குடி. அட்வைஸ் பண்ணுறேனு நினைக்காத ” என்று கூறி ஒரு சில நோட்டுகளை அபியிடம் கொடுத்து விட்டு இறங்கி வேறு காரில் ஏறி பயணம் மேற்கொண்டார்.வெங்கடேஷனின் அக்கறையை பார்த்து அபிதான் நிவானை கலாய்த்து விட்டான். 

🌿🌿🌿🌿🌿
லெனினும் ஈஸ்வரியும் சோலனூரில் இருந்து திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

அப்பொழுது லெனின் “ஏன் மா உனக்கு என்ன தோணுது  உண்மையில் தம்பி இறந்து விட்டாரா இல்லை அண்ணனா? “.

ஈஸ்வரி “எனக்கும் அதே சந்தேகம் தான் ஆனால்,வெங்கடேஷனைப் பார்த்தா அப்படி தெரில “

லெனின் கலகலவெனச் சிரித்தார்.” என்ன? நான் தப்பா அனுமானிக்கிறேனா?” என்று ஈஸ்வரி கேட்டார்.

” இல்லை, இல்லை. வக்கில் வக்கில் தான். நீங்க சொல்லுற மாதிரி குணா நல்லவன் தான் ஆனா கொஞ்சம் கெட்டவன்.ஆனா, தீனா ரொம்ப நல்லவன் அதே சமயம் அவன் ரொம்ப கெட்டவன் . அது தான் டவுட். இப்போ இருக்கிறது யாருனு ? ” என்று லெனின் தனது சந்தேகத்தை கேட்டார்.

இருவருக்குள்ளும் உள்ள சந்தேகங்களை கேட்டு தீர்த்து கொண்டும், விவாதித்து கொண்டும் வந்து சேர்ந்தனர்.

🏥மருத்துவமனை

இன்றோடு பதினைந்து நாட்கள் ஆகிவிட்டது. இன்னும் மீரா கண் விழிக்கவில்லை. வசுதேவரையும் நார்மல் வார்டிற்கு மாற்றி விட்டனர். அவர் நன்கு தேறி வர முயற்சி செய்யும் பொழுது அவரது மனம் மீராவை நினைத்து வருந்தும். அதில் மீண்டும் நோய்வாய்படுவார்.

அதனால், அவருக்கு மீராவை கண்டாலே ஒரளவுக்கு புத்துணர்ச்சி ஏற்படும் என்று மீராவின் அறை அருகிலேயே அவருக்கு அறை கொடுத்தனர்.

இவருக்கும் முன்னேற்றம் ஏற்படலாம் , மீராவிற்கும் முன்னேற்றம் ஏற்படலாம் என்று தான் இவ்வாறு செய்தனர். அதில் சிறிது வெற்றியும் கண்டனர்.

வசுதேவரை அழைத்து மீராவின் அறைக்கு கூட்டிச் சென்றால், மீராவின் கண்கள் சூழலும். அது போல், வசுதேவர் பேசினால் கண்களிலிருந்து அழுகை வரும். கைகள் கூட ஒரு சில நேரம் அசையும். அதனால், வசுதேவரின் உடலும் தேறியது.

அதை போல் மற்றவர்கள் செய்தால் , மீராவிடம் எந்த எதிர்வினையும் இருக்காது வெங்கடேஷன் மற்றும் ஆருஷி உட்பட. பின்பு, ஆகாஷ் தனது டீனிடம் பேசி  ப்ரைன் ஸ்பெஷலிஸ்ட் ஒருவரை அணுகினான்.

அவரிடம் பேசி, இங்கு வரவழைத்தனர். அவர் வந்த பிறகு , மீராவை முழுதாக சோதித்து பார்த்து விட்டு சில பல டெஸ்டுகளை எடுக்கக் கூறினார். ஆனால், இதில் வெங்கடேஷனுக்கு விருப்பமே இல்லை. அவரை கனடாவிற்கு அழைத்து செல்ல வேண்டும் என்று ஒத்தக் காலில் நின்றார்.

வீட்டில் உள்ளவர்களோ இவ்வாருவரை மட்டும் பார்ப்போமே என்று ஆருஷி மூலம் பேசி ஒத்துக் கொள்ள வைத்தனர். இவரும் டெஸ்ட் எடுக்க சொல்ல , வெங்கடேஷன் கொந்தளித்து விட்டார்.

“இன்னும் எவ்ளோ நாள் தான் வெயிட் பண்ணனும் “என்று கூறி தனது மாமியாரான லஷ்மி அம்மாவிடம் பாய்ந்தார்.

அவரும் பாவம் என்ன செய்வது என்று கைகளை பிசைந்து கொண்டிருந்தார். ஆருஷி, அர்ஜுன் என அனைவரும் கூறிய பிறகும் அவர் கொந்தளித்து கொண்டே இருந்தார்.”மருமகனே, இந்த ஒரு தடவை மட்டும் வாய்ப்பு கொடுங்க” என்று வசுதேவர் தான் கடைசியாக கெஞ்சினார். அதன் பின் தான் வெங்கடேஷன் கொஞ்சம் சாந்தம் ஆனார்.

சொன்ன டெஸ்டுகளை எடுத்தப் பின், அந்த டாக்டர் வெங்கடேஷனை அழைத்தார். கூடவே கேசவரும், அர்ஜுனும் சேர்ந்து போனார்கள். அவர் அனைத்தையும் அலசி ஆராய்ந்து விட்டு இவர்களை பார்த்து நிமிர்ந்து “சார், அவங்க தற்கொலை பண்ணல. யாரோ அவங்களை கொலை செய்ய முயற்சி பண்ணிருக்காங்க “.

“எனக்கும் அந்த சந்தேகம் இருந்துச்சு ” என்று கேசவரும், ” எனக்கு முன்னாடியே தெரியும் அவங்க தற்கொலைலாம் பண்ண மாட்டாங்கனு ” என்று வெங்கடேஷனும் ஒரு சேரக் கூறினார்கள். அதை அர்ஜுன் குறித்துக் கொண்டான் பின்பு கேட்டு கொள்ளலாம் என்று.

டாக்டர் “சார், நீங்க எப்படி நினைச்சீங்கனு தெரில. அவங்க உடம்புல பெர்பசைனு ஒரு மருந்தை டோசேஜ் அதிகமா கொடுத்து இருக்காங்க. என்னோடு கெஸ் படி அதை கத்தியில் தடவியிருப்பாங்கனு நினைக்கிறேன் “

“பெர்பசைன் “அர்ஜுன் யோசனையுடன் கேட்க, “கிட்டதட்ட தூக்க மருந்து தான். ஆனால், இது அவங்களுக்கு தூக்கம் மாதிரி இருக்கும். ஆனா, இது அவங்க உடல் உறுப்புகளை அரெஸ்ட் செஞ்சுடும். கொஞ்சம் கொஞ்சமா மூளையை பாதிக்கும். கிட்ட தட்ட ஸ்லோ பாய்சன் தான் “

மூவரும் அதிர்ந்து விட்டனர். அவ்வளவு விரோதம் யாருக்கு தன்மேல் என்று ?

நான் குறிப்பிட்டு இருக்கும் மருத்துவ விஷயங்கள் அனைத்தும் கற்பனையே.

ஹலோ , நான் இந்த கதையை தொடர ஆரம்பிச்சுட்டேன். கொஞ்சம் நாள் விட்டதால்  முன்னாடி படிச்சுக்கோங்க.
பெரும்பாலும் புரிஞ்சிடும்.

அப்புறம், நான் போன பாகத்தில் போட்ட சில செய்திகள் கூகுளில் ஆராய்ந்து எடுத்தது. அது சரியாக தான் இருக்கும் என்று எனக்கு தெரியாது. கொஞ்சம் உண்மையும், நிறைய கற்பனையும் கலந்தே எழுதியுள்ளேன்.

எனதழகா – 32 ❤️

அனுவும், ஆகாஷும் ஒரு உணவகத்தில் அமர்ந்து கதையளந்து கொண்டிருந்தனர். ஆகாஷ்  மட்டும் பேச, அனு கேட்டுக் கொண்டிருந்தாள்.

ஒரு கட்டத்திற்கு மேல் முடியாமல் அனு ” அண்ணா” என்று கூறி, அடுத்து எதுவும் சொல்லாமல் அமைதியாக அருகில் இருந்த பழச்சாறை ஒரே மிடறில் குடித்து முடித்தாள்.அவள் செய்வதை வேடிக்கை பார்த்தவன் சிரித்து கொண்டே அவனும் பழச்சாறை எடுத்து குடித்தான். ஆனால், அவள் போல் இல்லாமல் முடிந்தளவு அவளுக்கு  தலைவலி  கொடுக்கும் படி ஒவ்வொரு மிடறாக ரசித்து ருசித்து குடித்துக் கொண்டிருந்தான்.

ஒரு கட்டத்திற்கு மேல் முடியாமல் அவனின் பழச்சாறை வாங்கி அவளே குடித்து விட்டு ஆகாஷை திரும்பி பார்த்தாள். ” என்ன கடுப்பாகுதா? ” என்று ஆகாஷ் நக்கலாக கேட்டான். ஆனால், அதில் கோபம் இருந்தது.

“அண்ணா அது வந்து ….. சந்தர்ப்ப சூழ்நிலை அப்படி ? ” என்று அனு வார்தைகளை மென்று முழுங்கினாள். ” இங்கு பாரு ஷா!உனக்கு தெரிஞ்சத நான் திரும்ப சொல்றது  உனக்கு கோபம் வரது மாதிரி நீ சொல்லாம போயிட்டு எங்களை பின்தொடரது  எனக்கு அதை விட கோபமா வருது ! எங்களை பார்த்தா கேனப்பய  மாதிரி இருக்கா? ” என்று மூச்சு விடாமல் ஆகாஷ் கேட்டான்.

“பார்த்தா தெரியாது பார்க்க பார்க்க தெரியும் ” என்று சிரிக்காமல் பதிலுரைத்தாள் அனு .

ஆகாஷ்”எதே ?🤯 “

அனு சிரித்துக் கொண்டே ஏதோ கூற வர, “நிறுத்து ! முதல இருந்து வருவோம். சரியா பதில் சொல்லனும் இப்போ ? ” என்று தொண்டையை கரகரத்து விட்டு, நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டான்.

“பாக்க பாக்க என்ன தெரியும் ?” என்று நகத்தை கடித்து வெட்கபட்டுக் கொண்டே  கேட்டான் ஆகாஷ்.

அனு”நீங்க ஒரு கேனப்பயனுத்தான் 🫢”

“இல்லை, இல்லை ! தப்பு தப்பு அதெல்லாம் நீ ஏன் சொல்லுற ? அதெல்லாம் நீ சொல்லக் கூடாது” என்று கூறி மறுபடியும் நிமிர்ந்து உட்காந்தான். மறுபடியும் கேட்க, மறுபடியும் இவள் கேலியாக கூற, திரும்ப ஆரம்பித்தான்.

” அய்யோ , அண்ணா !என்னை விட்டுங்க.நீங்க ஒரு நல்லவர் , வல்லவர்,நாலும்  தெரிஞ்சவர் போதுமா ” என்று கையெடுத்து கும்பிட்டே பின்னே தான் ஆகாஷ் விட்டான்.

“உங்களை எல்லாரும் வச்சு செய்வாங்க. ஆனால், உங்களுக்கு என்னை வச்சு செய்யலைனா மனசு ஆறாதே ” என்று அனு முறையிட்டாள்.

“என்னம்மா இப்படி சொல்லிட்ட ? நீ என்னோடு ஒன் அண்ட் ஒன்லி சிஸ்டர் ” என்று கூறி, பொது இடத்தில் இருக்கிறோம் என்பதை மறந்து, அவனது கைப்பேசியில் பாடலை ஒட விட்டு  ,

உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
தாய் போல நான் காக்கணும் எப்போதுமே என் வாழ்க்க வரமாக
அட நீயும் பொறந்தாயே
என் உயிரே உறவாக
என் நெஞ்சில் கரைஞ்சாயே
பசி தூக்கத்த மறந்து நீயும்
அடி பாசத்த பொழிஞ்சாயே
தெனம் உன் முகம் பார்த்து பூக்கும்
புது விடியலும் தந்தாயே
நீ எனக்கு சாமி இந்த பூமி
அட எல்லாம் நீ தானே
உன் சிரிப்பு போதும் நீ கேட்டா
என் உசுர தாரேனே

என்று அதற்கேற்ப நடித்துக் கொண்டிருந்தான்.

அப்பாடல் முடிந்தவுடன், அவ் உணவகத்தில் ,

உறங்கும் போதும்
இவனின் கவனமும்
உறங்கி போகாது
கனவில் கூட காவல் செய்யும்
கடமை மறவாது
 உலகமே இவளென
இவன் வாழும் அழகை பாராடா
மகள் என வளர்கின்றான்
இவன் உயரம் குறைந்த தாயடா
இவனின் அன்பை அளந்திடா
எந்த மொழியும் போதாது
இவன் அண்ணன் பாதி
தந்தை மீதிஆனானே ஆனானே
தம்பி என்ற நிலையை கடந்து
போனானே போனானே!

என்ற பாடல் ஒலித்தவுடன் , அனு சிரிக்க,மேஜையின் மேல் நின்று ஆடிக் கொண்டிருந்தவன் அதிர்ந்து “யாருடா அது ? எனக்கே டஃப் கொடுக்கிறது “என்று திரும்பி பார்க்க,

“மச்சான் நான் தான் “என்று ஒடி வந்தாள் காவ்யா .

“மச்சான் வாடா வாடா வாடா……. “என்று ஆகாஷ் கீழே குதிக்க ,

“வாடா வாடா தோழா “என்று இவளும் அவனிடம் ஒட, அங்கே கச்சேரிக்கும் கலகலப்புக்கும் பஞ்சமில்லாமல் இருந்தது.

🌿🌿🌿🌿🌿

மருத்துவர் கூறியதை கேட்டு நெஞ்சு வலியே வந்தது போல் இருந்தது கேசவருக்கு.வெங்கடேஷனோ பாறையை முழுங்கியது போல்  முகத்தை இறுக்கமாக வைத்திருந்தார்.

அர்ஜூன் அதிர்ந்தாலும் ஒரு சில நொடிகளில் சுதாரித்து விட்டான். பின்பு, மருத்துவரிடம் கேட்க தொடங்கும் நேரம் மருத்துவர் கையசைத்து நிறுத்த சொல்லி மணியை அடித்து நர்ஸை வரக் கூறினார்.

அவர் வந்தவுடன் கேசவரை அழைத்து சென்று பிபி பார்க்கும் படி கூறி, தூக்கத்திற்கு  டிரிப் மூலம் மருந்து ஏத்த சொல்லி வலுக்கட்டாயமாக கேசவரை அனுப்பி வைத்தார்.

பின்பு அர்ஜுனிடம், “சார்,நீங்க பெரிய குடும்பம். உங்களுக்கு எதிரி நிறைய இருக்கலாம் . அதனால், நீங்க உங்களுக்கும், உங்க குடும்பத்துக்கும் இன்னும் பாதுகாப்பு போட்டுக்கோங்க” என்னு கூறி விட்டு,

வெங்கடேஷிடம் திரும்பி “சார், நான் அவங்களுக்கு ட்ரீட்மெண்ட் ஆரம்பிக்கனும். சீக்கிரமா சொல்லுங்க. எங்க போனாலும் இதேதான் சொல்லுவாங்க” என்று கூறினார். வெளியே வெங்கடேஷன் கத்தியதை கண்டு விட்டு அவரின் அனுமதிக்கு காத்து கொண்டிருந்தார்.

அர்ஜுன் தான் மன்றாடினான். “மாமா, டைம் இல்லை. இங்கேயே பாப்போமே. அத்தையை காப்பாத்திடலாம்  ” என்று இன்னும் நிறைய கூறி அவரின் மனதை கரைக்க பார்த்தான். அவர் எதற்கும் பதில் கூறாமல் , அமைதியின் உருவமாய் அமர்ந்திருந்தார்.

பின்பு, ஆருஷியிடம் கூறி வெங்கடேஷனை ஒப்புக் கொள்ள முயற்சி செய்யலாம் என்று நினைத்து ஆருஷியை அணுகினான்.

ஆருஷியிடம் கூறியவுடன், ஆருஷியின்  கண்களில் தண்ணீர் வழிந்தது. ஒன்றும் கூறாமல், கண்ணை அழுந்த துடைத்து வெங்கடேஷனிடம் செல்லாமல் டாக்டரிடம் சென்று “டாக்டர், அவங்க என் அம்மா தான். எனக்கும் எல்லா உரிமையும் இருக்கு. அவர்க்கிட்ட அனுமதி வாங்கிறதும் ஒன்னு தான். என்கிட்ட வாங்கிறதும் ஒன்னுதான். அதனால், நான் சொல்றேன் டிரீட்மென்ட் ஆரம்பிங்க ” என்று கூறிவிட்டு வெங்கடேஷனை ஒரு பார்வை பார்த்து விட்டு சென்றாள்.

டாக்டரின்  அறையிலிருந்து இறுதியாக ஆருஷியின் பார்வை வரை அமைதியாக வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான் அசோக். ஏனென்றால், மீரா தற்கொலை செய்யவில்லை என்று உறுதியாக கூறியதில் சந்தேகம் எழுந்து அசோக்கை  கவனிக்க சொல்லியிருந்தான் அர்ஜுன்.

அவனுக்கு எதுவும் வித்தியாசமாக தென்படவில்லை . இறுதியில் ஆருஷி வெங்கடேஷனிடம் பேசாமல் அவரை பார்த்து விட்டு சென்றது தான் அசோக்கிற்கு வித்தயாசமாக இருந்தது.

அதை அர்ஜுனிடம் கூறாமல் ஈஸ்வரிக்கு தகவலாக அனுப்பி விட்டான். பின்பு, ரியா போன் செய்து கீழ் தளத்திற்கு வரச் சொன்னவுடன் அர்ஜுனிடம் கூறி விட்டு சென்று விட்டான். ஆதிராவிற்கு அழைத்து அர்ஜுனுக்கு துணையாக இருக்கும்படி கூறி விட்டு ரியாவைக் காணச் சென்றான்.

🏨🍱உணவகம்

ஆகாஷ், காவ்யா மற்றும் அனு வெகு நாட்கள் கழித்து சேர்ந்ததால் சந்தோஷத்தில் இருந்தனர். பல தெரிந்த கதைகளும், சில தெரியாத கதைகளையும் உண்டுக் கொண்டே பேசிக்  கொண்டிருந்தனர் .

இந்தர் உணவகத்திற்கு உள்ளே வந்தான். அவன் வந்தவுடன் கலகலப்பு மறைந்து கடுமை நிறைந்தது அவ்விடத்தில் .
பொதுவான  விஷயங்கள் பேசிவிட்டு, இறுதியில் இந்தரே  கூற ஆரம்பித்தான் .

இந்தர்”ஆகாஷ் , நேத்து ரியாவை ஹாஸ்பிட்டலில் வைத்து கொல்ல பாத்தது …”

ஆகாஷ் “அந்த  அபி கூட்டாளி தான? “

அனு “அபிக்கு இந்த விஷயம் தெரிஞ்சா அபியே அவனை கொன்றுவான்”

ஆகாஷ் “யாரு அந்த பையன்? அவனை நான் பாத்ததே இல்லை .இதுல வெங்கடேஷ் அங்கிள் வேற குணா, தீனானு சொல்லிட்டு இருக்காரு. சில்லி பாய்ஸ் “

இந்தர் அனுவையும், காவ்யாவையும் கடுமையாக முறைத்து கொண்டிருந்தான்.

🏥மருத்துவமனை

அதே நேரம் ரியா தனது கைப்பேசியில் வந்த புகைப்படத்தை கண்டு காதில் புகை வராத குறையாக கோபமாக அமர்ந்திருந்தாள்.

கீர்த்தி☘️

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்