Loading

னதழகா 12❤️

“என்னம்மா எப்படி இருக்க?”

அன்பரசி, ” ம்ம்ம்…. இருக்கேன் அண்ணா அர்ஜுன் எப்படி இருக்கான்? “

“ம்ம்ம் … நல்லா  இருக்கான். காலேஜ் வந்துட்டு வேலையைக் கொடுத்துட்டு போய்ட்டான் “

“ஹம்ம்…எப்போது நான் அவரை பார்க்கிறது? ” என்று  கூறி பெரு மூச்சு விட்டாள் அன்பு.

“அதற்கான நேரம் வரும் பொழுது தான். நான் எதுக்கு இருக்கேன். நான் பார்த்துக்கிறேன். வச்சிடுறேன்”

“சரி அண்ணா, பாய்” என்று கூறி போனை வைத்தவுடன் அன்பு “என் நிம்மதியை கெடுத்த உனக்கு, நான் கொடுப்பது   உன் நிம்மதியை நான் அழிப்பதே” என்று  சூளுரைத்துக்கொண்டாள்.

காரில் கண்கள் மூடி சிறிது நேரம் அமர்ந்த பின்பே மனம் அழுத்தம் குறைந்தது.
அசோக் கார் கதவைத் தட்டியப் பின்பு தான் நிகழ் உலகிற்கு வந்தான்.

“உனக்கு ஆதிரா கால் பண்ணிட்டே இருக்கலாம்  நீ எடுக்கவே இல்லையாம்?” அசோக் பேப்பர்ஸ் அடுக்குவதில்  கவனம் வைத்துக் கொண்டேக் கேட்டான்.

“ஏன்? நீ தான் சொன்னியா  நான் இங்கு இருக்கிறேனு?”எகிறிக் கொண்டு கேட்டான் எதற்காக கூறினாய் என்று குற்றம்
சாட்டுவது போல்.

” ஆமா, அதுக்கு தான் நான்
பிறந்திருக்கேன் பாரு ? ” என்று பின் சீட்டில் இருந்து குரல் கொடுத்தாள் ஆதிரா.

அதிர்ந்து திரும்பிய அர்ஜுன், ” ஹே, எப்படி உள்ள வந்த? எப்படி காலேஜ் வந்த? என்ன சொல்லுற?” என்று கேட்டான்.

“ஹாங்… , நீ உன்  ஃப்ளாஷ்பேக்  நினைச்சு ஃபீல் பண்ணும் போதே வந்துட்டேன்” ஆத்திரமாக ஆதிரா கூறினாள்.

” போன் பண்ணவுடனே வீட்டிலிருந்து  இங்க வந்துட்டியா  ?” என்று நக்கலாக கேட்டான் அர்ஜுன்.

“போடாங்…” என்று ஆதிரா அடுத்து திட்ட வருவதற்குள் அர்ஜுன் திரும்பி அவளை முறைத்தான்.

” இவரு பெரிய ஹீரோ, இவர் ஃபீல் பண்ணுறாருனு நாங்க கை காசு போட்ட உன் மொக்க கதையை கேட்க வந்தோம் பாரு?” என்று அவள் பொரிந்து தள்ள அர்ஜுன் பற்களைக் நறநறவெனக் கடித்து  கோபத்தைக் காண்பித்தான் தான் அசிங்கப்பட்டதை சமாளிப்பதற்கு.

இவ்வளவு செய்தும் ஆதிரா விடாமல் “எவ்ளோ கால்ஸ் செய்தேன். ஒரு கால்  எடுக்கலை. அப்புறம் அசோக்கிற்கு கால் செய்து நீ இருக்கும் இடம் அறிந்து இங்கு வந்தேன். அதுவும் என் கை காசு போட்டு இந்த 12 மணி வெயிலில் அதுவும் ஆட்டோ பிடிச்சு வந்தேன். சரி வந்து கார் ஏசில உட்காருவோம்னு பார்த்தா கத்துறேன் ஏதோ கோமால போனவன் மாதிரி கண்ண மூடி உட்கார்ந்திருக்க?” என்று கிழித்து தொங்க விட்டாள் .

“கதவை தட்ட வேண்டியது தான?” என்று அறிவாளி போல் கேள்வி கேட்க

மூக்கு விடைக்க, “படுபாவி, மனசாட்சி இல்லாம பேசுற. ஏற்கனவே வெயில வந்த  கடுப்புல கதவ தட்டுறேன் தட்டுறேன் முக்கால் மணி நேரமா தட்டுறேன்.கதவ திறக்கவே இல்லை. இந்த  சின்சியார்ட்டிக்கு கால் பண்ணி சொல்றேன். வேலை இருக்கு  ,சோ அங்கையே வெயிட் பண்ணு சொல்லிட்டு போனை வச்சுட்டான்” கடகடவென  பேசினாள்

“போதும் டி , இப்போ எதுக்கு வந்த அதை மட்டும் சொல்லு? “எரிச்சலுடன் கேட்டான் அர்ஜுன்.

“ஹம்ம்..எனக்கு தான் நிச்சயதார்த்தம் . அதனால்….ம்க்கும்…. எனக்கு ஷாப்பிங் போகனும் ” என்று வார்த்தைகளை பாதி முழுங்கி  கூறினாள்.

இருவரும் திரும்பி அவளை அதிர்ந்து பார்த்தனர். அசோக் ஒரு படி மேலே போய் , ” ஏண்டி, காலையிலிருந்து ஒரு வாய் தண்ணீ குடிக்காம வேலை வேலைனு அலைந்துட்டு இருக்கோம். மனசாட்சியே இல்லாம ஷாப்பிங் போகனும்னு சொல்லுற ?” கூறி கையைப் பிடித்து வளைத்தான்.

“அப்போ என்ன யாரு கூட்டிட்டு போவாங்க? “என்று உதட்டை பிதுக்கிக் கொண்டு கேட்டாள்.

“எப்பவும் தனியா தான போவாய் அப்புறம் என்ன? “என்று அர்ஜுன் கேட்டான்.

” அதைதான் நானும் சொல்கிறேன். எப்பொழுதும் தனியாகத் தான் போறேன். எனக்கு நடக்கிற முதல் விசேஷம் அப்பா அம்மா இருந்தா அவங்க கூட போகலாம்.அவங்களும் இல்லை. அப்போ உங்கக் கூடத் தான போகனும்” என்று தன் கைப்பையில் எதையோ தேடிக் கொண்டே கூறினாள்.

அவள் சாதாரணமாகக் கூறி விட்டாள். இவர்கள் மனம் ரணமாகியது. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு அர்த்த பார்வை வீசினர்.

“சரிடி ஈவ்னிங் ஐந்து மணிக்கு உன்னை கூட்டிட்டு போறோம்”அர்ஜுன் கூற

ஆதிரா “நீயாப்பா சொல்லுறது . சரி அப்போ ஒகே. என்னை அப்படியே அபார்ட்மெண்டில் இறக்கி விடுங்க.”

“ஹே, அப்பார்ட்மெண்ட் இந்தப் பக்கம் ஆபிஸ் அந்தப் பக்கம். மனசாட்சியே இல்லாம சொல்லுற ?” என்று பொங்கிக் கொண்டு கூறினான் அசோக்.

“ஹாங், உங்களுக்காக நான் என் கை காசு … ” என்று ஆதிரா கூறி முடிப்பதற்குள்
அர்ஜுன் அவள் புறம் திரும்பி கை எடுத்து கும்பிட்டு “நானே காசு தரேன். ஆட்டோ பிடிச்சுப் போ”

“நோ,நோ , நோ..என்கேஜ்மெண்ட் வருது. வெயிலில் போனால் டான் (tan) ஆகிடும்.”என்று வேகமாக சீட் பெல்ட்டை மாற்றினாள்.

“சரி…. கேப் புக் பண்ணி போ. நான் காசு தரேன்” என்று அசோக் கூற

“நோ, நோ, நோ… ஏசி இருக்காது. அதுலாம் முடியாது. என்னை விட்டுட்டு போங்க” என்று பிடிவாதமாகக் கூறினாள் ஆதிரா.

அதன் பின்பு, அவளை  அவள் வீட்டில் விட்டு விட்டு தனது ஆபிஸிற்கு சென்றனர்.

தாத்தாவுடைய ப்ராஜெக்ட் ஒன்று  நடந்து கொண்டிருந்தது. ரியா அதன் சைட்டிற்கு சென்று அந்த வாரம் ரிவ்யூ பார்ப்பதற்கு சென்றாள்.

அங்கு கிளைண்ட்டும் நின்றுக் கொண்டிருப்பதைக் கவனித்த ரியா  அவருக்கு மரியாதை நிமித்தமாக வணக்கத்தை சொல்லி விட்டு வேகமாக அனைத்து மாடிகளுக்கும் சென்று  நிறை குறைகளை எழுதினாள்.

பின்பு, அவரிடம் வந்து அவருடைய கருத்துகளையும் கேட்டு குறிப்பேட்டில் குறித்துக் கொண்டிருக்கும் பொழுது அவள் பின்னால் ஒருவர் வந்து நின்றார்.

அக்கிளைண்ட்  பின்னால் இருப்பவருக்கு வணக்கம் சொல்லி உபசரித்தார்.திரும்பி பார்த்த ரியா ஒரு நிமிடம் தன்னை மறந்து அவனை ரசித்தாள்.

அவனின்  கவர்ந்திழுக்கும் பார்வையும், சீர் படுத்தாமல் காடு போல்  வளர்ந்திருக்கும் தாடியும் மீசையும், அவன் வயதை சுட்டிக்காட்டாத உடல் அமைப்பும், அதற்கேற்றார் போல் அணிந்திருக்கும்  கேஷ்வல் சட்டையும், அவனுக்கே அடங்காத அவன் தலை முடியும் அதை அவன் கைகள் மூலம் அடக்க முயற்சிக்கும் அவன் மேனரிஸமும் அவளை மொத்தமாக அவனிடம் இழுத்து சென்றது.

இரண்டு மூன்று முறை கிளைண்ட்  கத்திய பின்னே சுதாரித்து அவரைத் திரும்பிப் பார்க்க “மேம் . இவங்க அபிஷேக். என்னுடைய பார்ட்னர்.அபி இவங்க ரியா. மிஸ்டர் வ சுதேவரோட பி.ஏ. “

“ஓஹோ”எனக் கூறி அவனின் பார்ட்னரிடம் பேசத் தொடங்கி விட்டான். மரியாதை நிமித்தமாக கை நீட்டியவளைக் கண்டுக்காமல் பேசவும்  அவளுக்கு கோபம் வந்து விட்டது.

அமைதியாக கிளைண்டிடம் மட்டுமே கூறி விட்டு கிளம்பியவளை தடுத்து நிறுத்தி
தான்  வெளியூர் செல்வதாகவும் ஒரு மாதத்திற்கு அனைத்து ரிவ்யூஸும் அபியிடம் கொடுக்குமாறு கூறினார் அக்கிளைண்ட்.

சரி என்று கூறிவிட்டு வெளியேறியவளை தன் கூலர்ஸால் மறைந்திருக்கும் கண்களை வைத்து அவளை பருகினான்.

கீர்த்தி☘️

 

              

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்