” ப்பா எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம் ப்பா ” என்று ஈனக்குரலில் பத்தாவது முறையாகக் கூறினாள் சாஹித்யா .
” ஏன் நீயும் யாரையாவது விரும்புறியா” என்று நைந்துபோன குரலில் கேட்டார் அவளின் தந்தை விஸ்வானந்தம் .
” ஐயோ இல்ல ப்பா . நான் எந்த நிலை ல இருக்குறேன் உங்களுக்குத் தெரியாதா ப்பா… ஐ கான்ட் . வேண்டாம் ப்பா… “
” நீ அடிக்கடி சொல்லுவியே உங்களுக்கு எல்லாம் நான் என்ன செய்ய போறேனே தெரியல இப்படி ஒரு அன்பான குடும்பம் கிடைச்சதுக்கு னு … இதைப் பண்ணி எங்களுக்கு நன்றிக்கடனைத் தீத்துக்க ” என்று எப்படியாவது அந்த திருமணத்தை நடத்துவதை முழு முனைப்பில் கூறினார் சாரதா.
” ம்மா … சொன்னா புரிஞ்சுக்க ம்மா…”
” என்ன புரிஞ்சுக்கணும் … ஒருத்தி முகத்துல கரிய பூசிட்டா… நீயுமா முடியாது … ஒன்றில் இந்த கல்யாணம் நடக்கணும்… இல்லையா அதோட என்னை விட்டுப் போயிடணும் நீ… அதாவது என் குடும்பத்தை விட்டு… ”
” ப்பா… ” என்று கதற, ” அப்படி கூப்பிட கூட உனக்கு உரிமை இல்ல ” என்றவர் அந்த அறையை விட்டு நகர, பின்னாலே தாயவளும் கடந்திருந்தாள். அந்த அறையினுள்ளே விம்மி விம்மி அழுதிருந்தாள்; கதறி அழுதால்தான் வெளியிலிருப்போருக்குத் தெரிந்துவிடுமே…
****
” எப்படி மச்சான்… “
” அதுலாம் அப்படித்தான் ”
” சரி நம்ம ஆரா எங்கடா ”
” அவளா சமையல் பண்ணுற இடத்தில் இருந்து சிக்கன் சாப்பிட்டு உக்கார்ந்து இருக்கா … ”
” நாம ஃப்ராடுதனம் தானேடா பண்ணுறோம்… அந்தத் தின்னிப்பண்டாராம் ப்ளானை மட்டும் சொதப்பட்டும் அப்புறம் இருக்கு… ” என்றவன் நடந்தவை எண்ணிட, தன்னை மறந்து சிரிக்க ஆரம்பித்தான்.
” இப்ப எதுக்கு சிரிக்குறடா ”
” இல்ல நடந்ததை நினைச்சேன் சிரிச்சேன் ” என்றிட , உதிரனுக்கும் புன்னகை அரும்பியது.
” சரி தூங்கு… நல்லா ஃப்ரெஷ்ஷா இருக்கணும் ல ” என்றவன் சுவிட்சுகளை அணைத்துவிட்டுப் படுத்திட , நடந்தவை நினைவினில் வந்தது .
*****
மண்டபம் உறவினராலும் நண்பர் குழுவாலும் நிறைந்திருக்க, ஒருவன் உதிரனிடம் ஓடிவந்து , ” எண்ணே… பொண்ணு மயக்கம் போட்டு விழுந்துருச்சு ணே ” என்றிட , அவர்களும் , ” ஓ… ” என்று கோரசாகக் கூறிவிட்டு கைபேசியில் புகைப்படங்களை மேலும் எடுத்துத் தள்ள, வந்தவனும் தன் வேலை முடிந்தது என்பதுபோல கிளம்பியிருந்தனர்.
அடுத்த சில நிமிடத்தில் இன்னொரு நபர் வந்து நின்றிருந்தார்.
” என்ன மாமா இப்படி நிக்குறீங்க ”
” அது ஒண்ணும் இல்ல மாப்ள. உன் அத்தைகாரி நேரம் காலம் தெரியாம சின்னபுள்ளத்தனமாட்டும் கையக்கீறி வச்சுருக்குறா… அவ வீட்டுலயே ஒரு மிளகாய ஒழுங்கா நறுக்க மாட்டா… இங்ஙன வந்து சமையலுக்குக் காய் நறுக்கப்போயிருக்கா… அதான் ஃபர்ஸ்ட் எய்ட் பாக்ஸ் எடுக்க வந்தேன் ” என்று கூறி முடிக்க , ” ஐயோ அத்தே ” இருவரும் அரக்கப்பரக்க ஓடிட , அறையிலே இருந்த நண்பர்களுக்குத்தான் மூளை குழம்பியதுபோன்று இருந்தது. அதில் ஒருவன் வந்திருந்த உதிரனின் மாமனிடம் கேட்டே விட்டான்.
” ஐயா ”
” சொல்லுங்க தம்பி “
” நான் உதிரனோட ஸ்கூல்மேட். நாங்களும் வந்ததில் இருந்து பாக்குறோம். இதோட மூணு முறை யாருலாமோ மயங்கி விழுந்ததா தகவல் வந்துடுச்சு. ஆனா கல்யாண பையன் இரண்டு பேரும் எதுவுமே பேசல… ஆனா சின்னதா கை கீறியதுக்கு இப்படி ஓடுறாவ… ” என்று தன் சந்தேகத்தை முன்வைத்திருந்தான்.
” அது ஒண்ணும் இல்ல ப்பா … மயக்கம் எங்க ஃப்ரெண்ட்ஸ் மாதிரி… அந்த கல்யாண பொண்ணு இதோட 50 முறை கல்யாண பேச்சு தொடங்கியதுல இருந்து மயக்கம் போட்டிருச்சு. அந்த பொண்ணால மயக்கத்துக்கு உண்டான மரியாதையே போயிடுச்சு… என்னத்த சொல்ல ” என்று சோககீதம் வாசித்தபடி வெளியே இல்ல இங்கிருந்தவர்கள் தான் ‘ ஙே… ‘ என்று பார்த்திருந்தனர்.
••••
முன்னோட்டம் எப்படி இருக்கிறதென உங்களுடைய கருத்துகளைப் பதிவிட்டுச் செல்லத் தாழ்மையாய்க் கேட்டுக் கொள்கிறேன் . கதையின் நிறைகள் மட்டும் அல்லாது குறைகளும் வரவேற்கப்படுகின்றன . தவறுகளைக் கண்டிப்பாகத் திருத்திக் கொள்கிறேன்
– என்றும் அன்புடன்
குட்டி சைரன் வெடி 🙈😜