ஆவி -4
கதிர்வேலனின் குடும்பம் ஒரு போக்கில் சென்று கொண்டிருந்தது.
இங்கே ஜேபியை தனது சேட்டைகளால் நோக வைத்துக் கொண்டிருந்தாள் தேவான்ஷி.
“உனக்கு தான் ரூம் தந்திருக்கேனே அங்கேப் போய் தூங்க வேண்டியது தானே…!! இங்க ஏன் என் முகத்தை பார்த்துட்டு உட்கார்ந்து இருக்க… “சுள்ளென விழுந்தான் ஜீவன்.
“யார் என்னை எழுப்பி விட்டாங்களோ அவங்க கூட தான் இருக்கணும்னு ரூல்ஸ் எனக்கு… நான் போக மாட்டேன்… ” கறாராக பதில் அளித்தாள் தேவான்ஷி.
“என்னைப் பிடிச்ச பெரிய பேய்டி நீ… !!”
“சார் நான் சின்ன பேய் தான் இருக்கிறதுலயே ஜூனியர் நானு தெரியுமா உங்களுக்கு….”
“ஆமா நீ போனது காலேஜுக்கு பாரு… பைத்தியமே நீ இருந்தது சுடுகாட்டுல அந்த நினைவு இருக்கா இல்லையா?? ”
“அது இடுகாடு சார்… ” திருத்தினாள் ஜீவனை
“ரொம்ப முக்கியம்… யம்மா தாயே எனக்கு முக்கியமான பூஜை ஒண்ணு இருக்கு நீ போறீயா நான் தூங்கணும்…” கையெடுத்துக் கும்பிட்டான்.
“என்ன பூஜை சார்… ஆயுத பூஜையா… பொரி கடலை எல்லாம் தருவீங்களா… ?? அதுல கொஞ்சம் வெல்லம் கலந்து தர்றிங்களா டேஸ்டா இருக்கும்… ” நாக்கை சுழற்றியவளைப் பார்த்து பல்லைக் கடித்தான் ஜீவன்.
“ஆமா…. நீ நிஜமாகவே பேய் தானா…. இல்ல அஞ்சாங் கிளாஸ் படிச்சுட்டு இருந்தவளை தெரியாம தூக்கிட்டு வந்துட்டேனா… ?? கடவுளே ஏன் எனக்கு மட்டும் இந்த சோதனை… ??”
“சோதனையா அப்படின்னா… தமிழ் அர்த்தம் என்ன…??”
“பத்து மணிக்கு என்னை பாடம் எடுக்க வைக்காத… ஒழுங்கா போய் தூங்கு…. பிடிச்சது தான் பிடிச்சேன் ஒரு அறிவாளிப் பேயை பிடிச்சிருக்க கூடாது…” தலையிலடித்துக் கொண்டு இழுத்து போர்த்தி உறங்கப் போனான்.
அரைமணி நேரம் கூட ஆகி இருக்காது… முக்காடு போட்டு இருந்த போர்வையை விலக்கினாள் தேவான்ஷி.
“சார் தூங்கிட்டிங்களா…??”
“ம்ம்ம் இல்ல தூர் வாரிட்டு இருக்கேன் வர்றியா ரெண்டு பேரும் சேர்ந்து வாரலாம்… ” கோபத்தை காட்டினான்.
“தூர் னா என்ன… இந்த மழைத்தூறுமே அதுவா…. !!”
“அட சந்தேகத்துக்கு பிறந்தவளே… !!” என்றவனோ “டேய் வேதா… ” என்று கத்த அவ்வளவு தான் மீண்டும் ஏறிக் கொண்டாள் அலமாரியின் மேல்.
“நடுராத்திரியில் யாரோ தாலாட்டு பாடுறாங்க… ” என்ற வேதாந்த் உறக்கத்தை தொடர்ந்தான்.
ஜீவனோ இங்கே தன் ஜீவன் போகும் அளவிற்கு திட்டி தீர்த்தான் தேவான்ஷியை.
“சார் உங்களுக்கு டயர்டாவே இல்லையா… ! திட்டு வாங்குன எனக்கு காது வலிக்குது ஆனா திட்டுற உங்களுக்கு வாய் வலிக்கவே மாட்டேங்கிதே… நான் ஆவியானதும் இவ்வளவு திட்டு வாங்குவேன்னு தெரிஞ்சுருந்தா… !!”
“தெரிஞ்சிருந்தா என்ன பண்ணி இருப்ப.. ??”
“ம்ம்ம் உயிரோடவே இருந்து கல்யாணம் பண்ணி குழந்தை பெத்திருப்பேன்” என்றாள் சலித்தபடி.
“நல்ல வேளை ஒரு ஆண் தப்பிச்சான்… !” என்றான்.
“ஏன் சார்…??” பாவமாக கேட்டாள்.
“பின்ன உன்ன கல்யாணம் பண்ணி அவன் ஆவியா அலையிறதுக்கா… !!” நக்கலடித்தவனை முறைத்து விட்டு அலமாரியிலேயே உறங்க ஆரம்பிக்க ஜீவனோ மேலும் கடுப்பானான்.
“இங்கப் பாரு… நீ என் பெட்ல கூட தூங்கு அலமாரியில் வேண்டாம்.. ” என்றான் வேகமாக
“ஏன் சார்… ??” என்றாள் பாவமாக
“ம்ம்ம் நீ பாட்டுக்கு தூக்க கலக்கத்தில் கீழ விழுந்து காலையோ கையையோ உடைச்சு வச்சா ட்ரீட்மெண்ட் யார் பார்க்கிறது… ? ஆவிக்கு வைத்தியம் பார்க்கிற டாக்டர் எல்லாம் எனக்கு தெரியாது… இதுக்காக நான் சுடுகாட்டுல போய் டாக்டர் ஆவியை எல்லாம் தேட முடியாது… “என்றான் முறைப்பாக..
ஏதோ முணுமுணுத்து கொண்டே அலமாரியில் இருந்து தொம்மென்று குதித்தவள் மூக்கு நுனியை மட்டும் இடவலமாக திருப்பி முகத்தை ஒரு வெட்டு வெட்டி விட்டு அவனுடைய போர்வையை இழுத்து போர்த்தி கொண்டு உறங்கி விட்டாள்.
எதிரில் இருந்த ஷோபாவில் அமர்ந்தபடியே.,” இவ நிஜமாகவே ஆவி தானா, இல்ல டிராமா போடுறாளா…. முதல்ல சாமி கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கணும் அதுக்கு முன்னாடி சாமி சொன்ன பூஜையை முடிக்கணும்” என்று எண்ணியபடி அலாரத்தை பதினொன்றரை மணிக்கு வைத்து உறங்கிப் போனான்.
அலாரம் ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை அடித்து நின்றது தான் மிச்சம் ஜீவன் எழுந்ததென்னவோ காலையில் ஏழு மணிக்கு தான்…
ஜீவா தாமதமாக எழுந்தவன், கோபத்துடன் தேவான்ஷியை தேட , அவள் அவ்விடத்திலேயே இல்லை… வேதாந்திடம் கண் காட்டி விட்டு அவனது அறைக்குள் ஒளிந்திருந்தாள்.
“என்ன ஆச்சு ஜேபி டென்ஷனா இருக்க…. ??” புரியாமல் கேட்டான் வேதா.
ஜீவன் “ம்ம்ம்…. ஒரு பேய் என் தூக்கத்தை கெடுத்துடுச்சு …. “முறைப்புடன் கூறி விட்டு ஷோரூமிற்கு கிளம்பினான்.
“என்னடா உளறிட்டுப் போறான்… ??” மணிமேகலை கேட்க
“அது ஒண்ணும் இல்ல அத்ஸ் புதுசா ஒரு பேயை பிடிச்சிருக்கான் அதான்… “வெகு சாதாரணமாக கூறிய வேதாவிடம்… ” டேய் என்னடா லவ்ஸா நிஜமாவா சொல்லவே இல்லை அந்தப் பொண்ணு டார்ச்சர் எதுவும் பண்றாளோ அதான் டென்ஷன் ஆகறானோ…. ??” கேள்விகளை இணைத்து அவரே விடை தேடி கற்பனையில் ஒரு கோட்டையும் கட்டி விட்டார் மணிமேகலை.
“அத்ஸ்… ரொம்ப கற்பனை கோட்டை கட்டாதீங்க…. ஒரு நிமிஷம் “என்றவன் .,”தேவான்ஷி” என்றழைத்தான்.
“யாருடா… ??”
“ஒரு நிமிஷம் இருங்க… தேவா வெளியே வா…” என்றதும் நெளிந்து வளைந்தபடி வெளியே வந்தாள் தேவான்ஷி.
“அடப்பாவி வீட்டுக்கே கூட்டிட்டு வந்துட்டீங்களா… !! அதான் அன்னைக்கு ஏதோ பொண்ணு பேசுற சத்தம் கேட்டதா… !!! எதுக்குடா என் கிட்ட இருந்து மறைச்சீங்க…. ??” மீண்டும் கேள்வி அம்புகள் வேதாவின் பக்கம் பாய்ந்தது .
வேதா சலித்தபடி “உங்க ஃபேமிலியே இப்படி கேள்வி கேட்டு தான் கொல்லுவிங்களா..?, ஒரு நிமிஷம் சத்தம் போடாம சொல்றதைக் கேளுங்க “என்றவன் நடந்த அனைத்தையும் கூறி முடித்தான்.
கன்னத்தில் கை வைத்தபடி அமர்ந்து விட்டார் மணிமேகலை.
“இதுக்கே சலித்து விட்டால் எப்படி இன்னும் எவ்வளவோ இருக்கு” என்றான் அசால்டாக.
“இன்னும் என்ன டா ட்விஸ்ட் வச்சிருக்கீங்க …??”
“அதை உங்க அண்ணன் மகன் கிட்ட தான் கேட்க வேண்டும்… ” என்றான் விட்டேறியாக.
“அதுவும் சரி தான்…. என் அண்ணன் போன பிறகு தான் பாசம் வருதோ உன் ஃப்ரெண்டுக்கு… சரி விடு அவனை சொல்லியும் ஒண்ணும் ஆகப் போறது இல்லை” என்ற மணிமேகலையும் ஷோரூம் கிளம்பிட அதுவரை பார்வையாளராக இருந்த தேவான்ஷி வாயைத் திறந்தாள்.
“அக்கா எனக்கு போர் அடிக்குது என்னையும் அழைச்சுட்டு போறீங்களா… ??”
“அக்காவா….??”
“ம்ம்ம்…”
“நானா… !!”
“ம்ம்ம் ம்ம்ம்… ” தலையை வேகமாக ஆட்டினாள் தேவான்ஷி.
மணிமேகலை சிரித்து விட்டு “இதுக்கே உன்னை அழைச்சுட்டு போகலாம் ஆமா நீ எல்லார் கண்ணுக்கும் தெரியுறப் பேயா ?? இல்லை தெரியாதப் பேயா…. ??” சந்தேகத்தையும் கேட்டுக் கொண்டார்.
“அது என் விருப்பம் தான்… நான் யார் கண்ணுக்கு தெரியனும் னு ஆசைப்படுறேனோ அவங்களுக்கு மட்டும் தெரிவேன்…. அது மட்டுமில்லாமல் நான் எல்லார் கூடவும் இருக்க தான் ஆசைப்படுறேன் ஸோ நான் எல்லாருடைய கண்ணுக்கும் தெரிவேன்… “
மணிமேகலை “அப்போ ஒண்ணும் பிரச்னை இல்லை நீ வா போகலாம்… ” என்றதும் தேவா வேதாவைப் பார்த்தாள்.
ஜேபி எதற்கோ உள்ளே வந்தவன் ,இவர்களது பேச்சை கேட்டு விட்டு அமைதியாக வெளியேறினான்.
“தேவ் ஒரே வார்த்தையில் அத்ஸை கவுத்துட்டியே நீ கில்லாடி தான்… போயிட்டு வா “என்று வாழ்த்திய வேதா , சிரித்தபடியே கிளம்பினான் கதிர்வேலனின் அலுவலகத்திற்கு.
இங்கே மந்திரவாதி ஜேபியை கண்காணிக்க ஒரு ஆளை நியமித்தார்..
இதனிடையே ஒரு கும்பல் , ஒரு பெண்ணின் புகைப்படத்தை வைத்துக் கொண்டு தீவிரமாக தேடிக் கொண்டிருந்தது சேலத்தில்.
….. தொடரும்.
யாரு அந்த பொண்ணு நிஜமாலே தேவா மர்கையா வா🤔🤔🤔🤔 சொல்லுங்க…சொல்லுங்க….
சொல்லுங்க
விரைவில் விடை தருகிறேன் நன்றி சகி
எந்த பொண்ண இப்படி வலைவீசி தேடுறாங்க? வேதாவும் தேவாவும் அப்பப்போ பேசிக்குறத பாத்தா ஏதோ பிளான்ல இருக்க மாதிரியே இருக்கே!!
இவைங்க பேசுறத பாத்தா தேவா மெய்யாலுமே ஆவியா?இல்லனா ஜேபிய ஏமாத்த வந்த பாவியானு தெரியலயே….
சீக்கிரம் சொல்லிடுறேன் சிஸ்டர் நன்றி மா
ennada ithu? deva aavi thaanaa, illa summa act panraalaa?? entha oorlada aavi porikadalaila vellam pottu sapdum??? ore marmamaa irukke…
மர்மத்தை விலக்கிடுவோம் டியர் நன்றி மா
‘உடல் பொருள் ஆவி நீயடி’ ஒரு ஜாலியான, இன்டெரெஸ்டிங்கான, ஹாரர் ஸ்டோரி.
இதோட பாசிட்டிவ்ஸ் வந்து,
1. தேவான்ஷி. இந்த ஸ்டோரிய புடிச்சு நிக்குற தூணே இவ தான்னு சொல்ற அளவுக்கு, செமயா என்டர்டெயின் பண்றா.
2. பேய்க் கதைன்னு ரொம்ப பயம் காட்டாம, ஜாலியா எழுதிட்டுப் போற விதம். காமெடி எல்லாமே வேற லெவலா இருக்கு.
3.க்ரைமா, ஃபிக்ஷனான்னு தெரியாத மாதிரி, ரெண்டையுமே டச் பண்ணி கொண்டு போற ரைட்டிங் ஸ்டைல், உண்மைலயே வேற லெவல்.
அப்புறம் நெகட்டிவ்ஸ்,
1. கொஞ்சம் ஸ்பெல்லிங்க் மிஸ்டேக்ஸ்.
2. தேவா, பேயாயிட்டாளேன்னு ஒரே ஃபீலிங்கா இருக்கு. அப்டியே உயிரோட கொண்டு வாங்களேன், ப்ளீஸ்…
3. ஜீவா எல்லா ஃப்ரேம்லயும் மொறைச்சுட்டே இருக்கான். அவன கொஞ்சம் சிரிக்க வச்சா, நல்லாருக்கும்😀😀😀
ஓவர் ஆலா, இந்த ஸ்டோரி படிக்கிறப்போ, செம ஜாலியா இருக்கு. அதே நேரம் அடுத்து என்ன நடக்கும்னு யோசிக்கவும் வைக்குது. சூப்பர் ஸ்டோரி…
மிக்க நன்றி சகோதரி ஆனால் எழுத்துப்பிழை எந்த இடத்தில் இருக்கிறது என்று தெரியவில்லை கொஞ்சம் கூறினால் நன்றாக இருக்கும் மன்னியுங்கள் நிஜமாகவே எனக்கு தெரியவில்லை அதனால் தான் கேட்கிறேன்
ஹாஹா..🤣🤣🤣🤣🤣
ஆரம்பத்திலிருந்து என்னை அதிகம் ஈர்த்த கதை உங்களோடது. தேவா பேயா பொண்ணா தெரியல…. ஆனா ரொம்ப நல்லா இருக்கு. இதே மாதிரி நிஜமா நடந்தா எப்படி இருக்கும்னு யோசிக்க தோணுது. ஜேபி எதுக்கு இவ்வளவு டென்ஷன்……. டீசர் ல எங்க போற? அப்பாவ கூட்டிட்டு வர போறேன்.
இந்த வார்த்தையில அதிகம் ஈர்த்த கதாபாத்திரம் தான் ஹீரோ. இப்ப வரைக்கும் எந்த சலிப்பும் இல்ல கதையில. அழகா கொண்டு போறிங்க. மணி கதாபாத்திரம் ரொம்ப நேர்த்தியா இருக்கு. அவங்களுக்கு சரிசமமான ஜோடிதான் அவன் வீட்டில் தான் உண்மையான பேய் ‘ங்க நிறைய இருக்கு போல. ஒரு மனுஷனுக்கு வாழ்க்கை கிடைக்குது அத நினைச்சு சந்தோஷ படாம… இப்படி சொத்து கேட்டு அலையுதுங்க பிசாசுங்க. யூ டி வேகமா கொடுத்தா ரொம்ப நல்லா இருக்கும். யாருடா அந்த மந்திரவாதி….
வாழ்த்துக்கள்
இதுவரைக்கும் அழகாய் எழுதிட்டு வரீங்க. சிறப்பா தொடரட்டும்.
மிக்க நன்றி சகி மகிழ்ச்சி அளிக்கிறது விரைவில் யூடி தருகிறேன் சகி
1. போட்டியில இரண்டு காமெடி பேய் கதை இருக்கு. இதுல சிங்கிளா இருந்து உயிரோட இருக்கிறவங்களோட உயிர வாங்குற உங்க பேய் தனியா துண்டா அழகா தெரியுது.
2. தேவா, வேதா காமெடி சென்ஸ் , டைமிங் அல்டிமேட்.
3. ஜெபி கேரக்டர் அப்பாவ திரும்ப கொண்டு வரனும்னு நினைக்கிறப்பவும் சரி இந்த அவிட்ட இருந்து விடுதலை கிடைக்கனும்னு நினைக்கிறப்பவும் சரி செய்ய கியூட்.
நெகடிவ்
1. ஸ்பெல்லிங் எரர்ஸ்
2. மேற்கோள் எரர்ஸ்
3. நோ ரெகுலர் யூடி.
மத்தப்படி கதை அப்படியே ஆவி பறக்குது…
மிக்க நன்றி சகோதரி விரிவான விமர்சனத்திற்கு மன்னிக்கவும் எழுத்துப் பிழைகள் எங்கே இருக்கிறது என்று சுட்டிக் காட்டினால் நன்றாக இருக்கும் திருத்திக் கொள்வேன் மன்னிக்கவும் தவறாக கேட்டு இருந்தால்
நண்பர்களின் குறும்பு அட்டகாசம். நட்பின் பிணைப்பை வெகு ஆழமாகவும் அதே நேரம் மனதை வருடும் படியும் அமைத்துள்ளார் எழுத்தாளர். வேற லெவல். பல இடங்களில் வாய் விட்டு சிரிக்க முடிந்தது.
நல்லா சிரிச்சேன் 🤣🤣 ரொம்ப நல்லா இருக்கு. சில வார்த்தைகள் தெரியல ஃபார்மெட் மாத்துங்க. ஹீரோயினி செத்தானு நம்ப முடியல. ஆனா அந்த சுடு காட்டு ஆளு அப்படி சொல்லி வச்சுருக்காரு . பார்ப்போம். அந்த சாமியார் வில்லன் போலயே… ஹீரோ அம்மா ரீ என்ட்ரி இருக்குமா ? நிறைய கேள்விகள். சீக்கிரம் கதையோட எபி சோட் போடுங்க ஆல் தி பெஸ்ட்.❤️