Loading

இசை – 5

தேவி தம்மை தேடுகிறார் என்பதை அறிந்த நதி மகிழ்ச்சியின் கடலில் திளைத்து, “தேவியே தாங்கள் எம்மை தேடுவது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது” என்றது குதூகலத்துடன்.

“ப்ச் மொதல்ல நீ யாரு? உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்.. இப்படி உயிரை வாங்கிட்டு இருக்க?” என்று பொங்கிய சினத்துடன் பிறை வினவ, ஆர்பரித்து குதித்த சத்தம் சட்டென்று அடங்கி அவ்விடமே மயான அமைதியில் திளைத்தது.

இதில் பிறைக்கு தான் கோவம் எல்லை மீறி சென்றது.. “உனக்கு நான்தான் தேவைனா என்னைய மட்டும் எடுத்துட்டு மத்தவங்களைய விட்டுரு.. அவங்களுக்குனு ஒரு குடும்பம் இருக்கும்” என்றாள் பொறுமையை இழுத்து பிடித்து கொண்டு.

“தேவியே” என்ற நதியின் வாசகங்கள் கலங்கி வர, “அய்யோ அந்த தேவி யாருமா முதல்ல? எனக்கு ஒண்ணுமே புரில.. இன்னும் ஒரு மாசத்துல எனக்கு கல்யாணம்.. அந்த நேரத்துல ஊரு பேரு தெரியாதவன் கூட சேர்த்து வெச்சு பார்க்கற” என்றவளுக்கு உண்மையிலே தலை கிறுகிறுவென வந்தது.

“தேவியே தங்களுக்கு எவ்வாறு புரிய வைப்பேன்.. அன்று இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அவர் மட்டும் தான் என் மணவாளன் என்று கூறியதை!” என்ற நதி தவித்து போனது.

நதியை இன்னும் சோதிக்காமல் ஆற்றிலிருந்து எழுந்தார் முனிவர் ஒருவர்.. நெற்றியில் பட்டை தீட்டி காவி வேட்டியில் நீண்டு வளர்ந்திருந்த தாடியுடனும் எழுந்தவரை கண்டு “வணக்கம் முனிவரே” என்று நதி ஆர்பரித்து தன் வணக்கத்தை செலுத்தியது.

“தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! சிவ சிவ! தங்களுக்கிட்ட வேலையை சரியாக செய்து தேவியை வரவழைத்து விட்டீர் அழகருவியே”என்று முனிவர் வாழ்த்தியதும், “அனைத்தும் அப்பனின் செயல்கள் தான் முனிவரே” என்றது எவ்வித ஆர்ப்பாட்டமுமின்றி.

திடீரென்று வந்தவரை கண்டதுமே பிறை தன்னிலை மறந்திருக்க, “மகளே எப்படிமா இருக்கிறாய்?” என்ற கேள்வியில் திருதிருவென முழித்து பின்பு “நான் எப்படி இருந்தா உங்களுக்கு என்ன? என்னைய ஏன் இப்படி மாறி மாறி டார்ச்சல் பண்றீங்க?” என்றாள் எகிறலுடன்.

இதற்கு சின்ன சிரிப்பை பதிலளித்தவர் தாடியை நீவியபடி “அனைத்தும் பரம்பொருளின் ஆணைப்படி தான் நடக்கிறதுமா” என்றவர் “காலம் மாறினாலும் உன் கோவம் மட்டும் மாறவில்லை வெண்பிறையாள்” என்றதும் புன்னகை தழும்பியது முனிவருக்கு.

‘இவருக்கு எப்படி என் பேரு தெரிஞ்சுச்சு’ என்று ஙே வென விழிகளை பிறை உருட்டிட, தேவியே என ஆரம்பித்த நதிக்கு பெரிய கும்பிடு போட்டு “அய்யோ நிறுத்துமா நீ தேவி தேவினு சொல்லி என் காதுல இருந்து ரத்தம் வருது” என்றாள் கதறலுடன்.

பின்பு அவளே “நான் என்ன பண்ணணும்.. இங்க இருக்கற மலையை தூக்கி அங்க வெக்கணுமா? இல்ல திடீர் திடீருனு குரல் குடுத்து பயப்படுத்தற உனக்கு மோட்சம் அளிக்கணுமா? நான் ஒண்ணும் அவ்ளோ வொர்த் இல்லமா” என்று வேதனை குரலில் மொழிந்தாள்.

பிறையின் மொழிக்கு பதிலின்றி “தேவன் அவர்களே தாங்கள் ஏன் அங்கு நிற்கிறீர்கள்.. வாருங்கள்.. உங்களின் வரவுக்காக தான் நான் காத்திருந்தேன்” என்று முனிவர் ஆத்ரேயன் நின்றிருந்த திசையை நோக்கி கை காட்டினார்.

மரத்தின் பின்னே ஆத்ரேயன் மறைந்து தான் நின்றிருந்தான்.. இருந்தும் எப்படி இவர் கண்டு பிடித்தார் என்ற குழப்பத்தை தாங்கியபடி முன்னால் வர, அவனை எரிக்கும் விழியால் பொசுக்கி தள்ளினாள் வெண்பிறை.

‘ப்ச் இவ வேற? ஆவூனா முறைச்சு தள்ளறது’ என்று முகத்தை கடுமையாக்கியவன் “யோவ் யாருயா நீ?” என்று முனிவரிடம் கேட்க, சிவ சிவ என்று கைகளை விரித்து வானத்தை பார்த்தவர் “அன்றும் இன்றும் ஒரே வினாவை தான் தொடுக்கிறாய் என்னிடம்! பரம்பொருளாகிய அவனின் திருவிளையாடல் இதுவோ!” என்றார் சிரித்து கொண்டே.

“அவன் விளையாடறாரோ இல்லயோ நீங்க நல்லா விளையாடறீங்க” என்று நினைத்த ஆத்ரேயன் “சொல்றதை புரியற மாதிரி சொல்லுங்க இல்ல எதுவும் சொல்லாதீங்க” என்றவன் தலையை உலுக்கி கொண்டான்.

இதற்கும் பதிலில்லாமல் சன்னமாய் சிரித்த முனிவரை இருவரும் கடுப்புடன் பார்க்க, “சர்வம் சிவமயம்.. உலகெல்லாம் அவன் மயம்.. சிவ சிவ! உங்களிடம் நான் சொல்வதை விட நீங்களே தெரிந்து கொள்வது தான் நல்லது”

“முதலில் பஞ்சமி அருவியை அடைந்து அங்கு வீற்றிருக்கின்ற வாராகி அம்மனை தரிசியுங்கள்.. அதன்பின் அனைத்தும் உங்களுக்கே புரிய வரும்.. காலத்தை விரயமாக்காமல் உடனே பஞ்சமி அருவியை அடைவது காலச்சிறந்தது” என்று அப்பேச்சை முடித்தார் முனிவர்.

ஒன்றும் விளங்காமல் தன்னருகில் நின்றிருந்த பிறையிடம் “ஹேய் இவரு என்ன உன் ஒன்றுவிட்ட அப்பனா என்ன?” என்று ஆத்ரேயன் வினவ, அவனை விட கடுப்பில் நின்றிருந்த பிறை “என் அப்பாவை இதுல இழுத்த வாயை உடைச்சுருவேன்” என்று சீறினாள்.

“ம்ம்ம்ம்க்க்கும் அப்படியே கிழிச்சுட்டாலும்.. யோவ் நீ பாட்டுக்கு திடீருனு மறைச்சு போய்ராம அது எங்க இருக்குனு சொல்லிட்டு போயா” என்று முனிவரின் பக்கம் பேச்சை திருப்பினான்.

“உங்களிடம் இதையை சொல்வது மட்டும் தான் எனக்கிட்ட ஆணை.. பஞ்சமி அருவியை கண்டுபிடித்து அங்கு செல்வது உங்கள் சமார்த்தியம்.. நீங்கள் அருவியை நெருங்க நெருங்க இங்குள்ளவர்களுக்கு ஆபத்து நெருங்கினாலும் எவ்வித காயமுமின்றி முதலில் எந்த இடத்தில் இருந்தார்களோ அங்கு சென்று விடுவார்கள்.. அதோடு இங்கு நடந்ததையும் மறந்திருப்பார்கள்”

“மற்றவர்களை கருத்தில் கொள்ளாமல் நீங்கள் முன்னேறி கொண்டே இருக்க வேண்டும்.. தங்களுடன் வந்தவர்களை தவிர மற்ற எவராலும் பஞ்சமி அருவியை காண இயலாது.. இன்னும் இரண்டு நாட்களில் பஞ்சமி வர இருக்கிறது.. அதற்குள் நீங்கள் அருவியை அடைந்து விட்டால் எவரின் உயிருக்கும் ஆபத்து நேரிடாது”

“இல்லையென்றால் நம் கையில் எதுவுமில்லை.. பரம்பொருளான சிவனின் மீது பாரத்தை போட்டு விட்டு நடப்பதை ஏற்று கொள்ள தான் வேண்டும்.. நினைவில் கொள்ளுங்கள் இருவரின் கையில் தான் இங்குள்ளவர்களின் உயிர் உள்ளது என்பதை!”

“சென்று வா மகளே! வாராஹி மீது நீ வைத்திருந்த நம்பிக்கையும் பக்தியும் உம்மை ஒருபோதும் தோற்க விடாது” என்றவர் கண்களை மூடி ஏதோ முணுமுணுத்து பின்பு “சோர்ந்து போகின்ற நேரத்தில் பஞ்சமி அன்னையே! என்று அழைத்து பார்.. ஏதாவது ஒரு ரூபத்தில் உம்மை காக்க வாராஹி ஓடோடி வருவாள்” என்றதும் முனிவரும் மறைந்தார்.

ஆத்ரேயனும் பிறையும் சுயத்திலே இல்லை.. நடப்பது அனைத்தும் கனவோ? என்ற ரீதியில் நின்றிருந்தவர்கள் இமைகளை தேய்த்து பின்பு சுற்றியும்  ஏறிட்டவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை.

குழப்பத்தில் உழன்றிருந்த ஆத்ரேயன் “ஏய் கருவாச்சி” என்று பிறையை அழைத்திட, சிந்தனைகளுள் தம்மை பொருத்தி இருந்த பிறைக்கு இவ்வழைப்பு கடுப்பை கிளப்பியது.

“யாருடா கருவாச்சி?” – பிறை

“ம்ம்ம்ம் நீதான்” – ஆத்ரேயன் 

“இனி அப்படி சொன்னா பல்லை உடைப்பேன்.. என்னமோ சாரு அழகன் என்ற நினைப்புல இருக்காரு” – பிறை

“நீ சொன்னாலும் சொல்லலனாலும் நான் அழகன் தான்டி கருவாச்ச்ச்சிசி” என்று ஆத்ரேயன் இழுத்து கூற, அவ்வழைப்பை முற்றிலும் வெறுப்பவள் உஷ்ணம் பொங்கிய சினத்தை வெளியிட்டாள்.

எப்போதும் போல் இப்போதும் மதனின் மீதே இவனின் கோவம் திரும்ப “ச்சை இவகூட மனுசன் பேச முடியுதா? நான் பாட்டுக்கு சிவனேனு நானுண்டு என் வேலையுண்டுனு இருந்தேன்.. தங்கச்சியை சரி பண்ணலாம்னு மச்சானு இங்க கூட்டிட்டு வந்தான் பாரு அந்த பரதேசியை மொதல்ல மிதிக்கணும் இருடா வர்றேன்” என்றபடி அகன்றான்.

இதை எதையும் அறியாமல் மதனோ “அப்பறம் பாஸ் சாரு சிங்கிளா? இல்ல மிங்கிளா?” என்று வேதாவிடம் வினவியபடி இருக்க, முதுகு காட்டியபடி அமர்ந்திருந்த தளிர் ஆர்வமிகுதியில் காதை கூர்மையாக்கினாள்.

ஹாசினியின் புறம் திரும்பாமலே “நான்… நான்.. நானெல்லாம் சிங்கிளுக்கே ஹெட் பாஸ்” என்று சட்டை காலரை தூக்கி விட்டு கூறினான்.

“அவன் பொய் சொல்றான் ப்ரோ” – ஹாசினி

“ஹாசினி வாயை மூடு” – வேதா 

“ஏன் பாஸ் என்ன ஆச்சு” – மதன்

“ஒண்ணுமில்ல பாஸ்.. அதுக்கு அடிக்கடி பைத்தியம் பிடிச்சுரும் அதான்” – வேதா

யாருக்கும் கேட்காதவாறு வருண் “ஹாசு நம்ம என்ன நிலைமைல இருக்கோம்னு தெரிஞ்சும் உன் காதல் தான் முக்கியம்னு மாதிரி பேசிட்டு இருக்காத” என்று கண்டிப்பை காட்டிட, இதில் விலுக்கென்று ஹாசினியின் கண்களை கண்ணீர் துளிகள் நனைத்தது.

“சாரு மிங்கிளா?” – வேதா 

“அட ஏன் பாஸ் நீங்க வேற?” – மதன்

“நான் என்னயா பண்ணுனேன்” – வேதா

“இதுக்கு பேரு மொக்கை காமெடி பாஸ்” – மதன்

“அவன் அப்படிதான் பாஸ் அடிக்கடி நட்டு லூசாகி பேசுவான்” – வருண்

“என் வயித்தெறிச்சலை கிளப்பாதீங்க பாஸ்.. இப்ப அடிச்ச காத்துல கூட நான் பறந்தற கூடாதுனு மரத்தை தான் கட்டிப்பிடிச்சு நின்னுருந்தேன்” என்றவனை ஆத்ரேயன் எட்டி மிதிக்க, “அம்மாடி” என்று கத்தியபடி உருண்டு எழுந்தான் மதன்.

“ஏன்டா ஏன்.. சரி சரி நான் சிங்கிள் இல்ல போதுமா?” என்று சமாதானப்படுத்துவது போல் ஆத்ரேயனின் தாடையை பிடித்து கொஞ்ச, மூக்கில் மீண்டும் ஒரு குத்து!

மூக்கை பிடித்து கொண்டு மதன் கத்த, “உன்னால தான்டா இந்த நிலைமை.. நான் பாட்டுக்கு இருந்தேன் பெரிய இவன் மாதிரி தளிரை சரிப்படுத்தலாம்னு இங்க கூட்டிட்டு வந்து இப்படி மாட்ட வைச்சுட்ட?” என்று மீண்டும் அடிக்க பாய்ந்தான்.

அவன் அடிப்பதை விட “அய்யோ அய்யோ இவன் எதுக்கு அடிக்கறானு தெரிலயே” என்று நொந்தபடி அடியை வாங்கிய மதனை மற்றவர்கள் விசித்திரமாக பார்த்திட, அடித்து அடித்து ஓய்ந்த ஆத்ரேயன் கல்லில் அமர்ந்து விட்டான்.

அடி வாங்கிய மதனோ சர்வசாதாரணமாக “ஏன் நண்பா என்ன ஆச்சு?” என்று கேட்க, “டேய்ய்ய்” என்று சீறிய ஆத்ரேயன் நடந்த அனைத்தையும் உரைத்ததும் “சோலி முடிஞ்சுச்சா?” என்று தலையில் கை வைத்து அமர்ந்தான் மதன்.

*****

“ஏங்க இந்த பிறை வேற எங்க போனானு தெரிலயேங்க.. மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்தா என்னங்க சொல்றது?” என்று கவலையாக கணவனிடம் கேட்டார் பிறையின் அன்னை லேகா.

பிறையின் தந்தை அன்பு சுந்தரமோ “மொதல்ல உன் பையனை தட்டி வெச்சுருந்தா இவளும் அடங்கி இங்கயே இருந்துருப்பா” என்று வேதாவின் மீது கோவத்தை காட்டினார்.

“திட்டறது பொறுமையா திட்டிக்கலாம்ங்க.. இப்ப மாப்பிள்ளை இங்க வர்றாருனு சம்பந்தியம்மா போன் பண்ணுனாங்க.. அவங்ககிட்ட என்ன சொல்றது” – லேகா

“ஏதாவது சொல்லி தான் ஆகணும்.. வேற வழி” – அன்பு

“எனக்கு என்னவோ பிறை நம்ம சொல்றதை கேட்க மாட்டானு தோணுதுங்க.. வேதா கூட நம்ம மிரட்டுனா அடங்கிருவான் ஆனா பிறை அப்படியா?” – லேகா

“இப்ப என்னடி சொல்ல வர்ற?” – அன்பு

“இத்தனை நாளா எங்கையும் போகாம கல்யாண நாள் நெருங்குனதும் சொல்லாம கொள்ளாம இப்படி போய்ருக்கனா என்ன அர்த்தம்ங்க” – லேகா

“அப்படி மட்டும் ஏதாவது பண்ணிட்டு வந்தா அவளையும் சரி அவ கட்டுனவனையும் சரி உயிரோட பார்க்க முடியாது” – அன்பு

இதை கேட்டதும் லேகாவிற்கு பக்கென்றிருக்க “ஏங்க” என்று அலறியே விட்டார். ஆனால் அன்பே இல்லாத அன்பு சுந்தரமோ “சம்பந்தி என்ன லேசுப்பட்ட ஆளுனு நினைக்கறீயா? அவரு பையன் நம்ம பொண்ணு மேல ஆசைப்பட்டானு தான் நம்ம கூட சம்பந்தம் பண்றதே.. அவரு பையனுக்கு கிடைக்காதவ வேற யாருக்கும் கிடைக்க விட மாட்டாரு” என்றார் சீறலுடன்.

“முதல்ல அந்த வருண் பையன் எங்க இருக்கானு அவன் அப்பன்கிட்ட கேளு அதுக இருக்கற இடத்துல தான் இவனும் இருப்பான்” என்று கூடுதல் தகவலையும் அளித்து “பெத்த ரெண்டும் பெரிய தலைவலி தான்” என்று மகளையும் மகனையும் கருவினார்.

அன்பு சுந்தரம் – லேகா தம்பதியர்களின் வாரிசுகள் தான் வெண்பிறையும் வேதாவும்.. திருமணமாகி ஐந்து வருடங்கள் கழித்து தான் குழந்தை ஜனிக்க,  அப்போதும் அன்பு சுந்தரத்திற்கு பாசம் என்று ஒன்று வரவில்லை.. தான் நினைத்தது நடக்க வேண்டும் அவ்வளவே அவரின் வாழ்க்கை.

தந்தைக்கும் மகளுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம்.. தந்தையை பற்றி தெரிந்தும் பிறை தன் கனவை கனவாக விடாமல் ஐஏஎஸ் படித்து வேலையையும் வாங்க, வேலைக்கு செல்ல கூடாது என்று கண்டித்த தந்தையை பிறை மட்டுமின்றி வேதாவும் கண்டு கொள்ளவில்லை.

லேகாவிற்கு சந்தோசம் தான் மகளின் வளர்ச்சியை கண்டு! இருந்தும் கணவனின் மீதிருந்த பயத்தில் மகளுக்கு எதிராகவே நிற்க, அன்றிலிருந்து தாயையும் வெறுக்க ஆரம்பித்து விட்டனர் அக்காவும் தம்பியும்.

மினிஸ்டரின் தம்பி மகனான லோகேஷ் மழைகால பேரிடத்தில் பிறையை முதன்முதலாக கண்டான்.  அவளின் தைரியமும் துணிச்சலும் வெகுவாக அவனை கவர, தன் விருப்பத்தை பிறையிடம் கூறும் முன்பு தந்தையிடம் கூறி விட்டான்.

மகனின் விருப்பத்திற்கு குறுக்கே நிற்க விரும்பாமல் பிறையை மருமகளாக்கி கொள்ள பரிபூரண சம்மதத்தை வழங்கியவர் பிறையின் பெற்றோரிடமும் சம்மதம் கேட்டனர்.. சமூகத்தில் பெரிய இடத்தில் இருக்கும் மனிதர் வீடு தேடி வந்து பெண் கேட்டால் அன்புவுக்கு என்ன கசக்கவா செய்யும்.

மகளின் விருப்பமறியாமல் சம்மதத்தை வழங்கிட, இதை கேள்விப்பட்டதும் தந்தையிடம் பிறை சண்டையிட்டும் தன் முடிவை அவர் மாற்றி கொள்ளாமல் இருக்க, “நான் லோகேஷிடம் பேசி கொள்கிறேன்” என்றெடுத்த முடிவும் அவனிடம் பேசாமலே முடிவு பெற்றது.

ஆம் திருமணத்தை நிறுத்த முயன்றால் எங்களை உயிரோடு பார்க்க முடியாது என்று அனைத்து பெற்றோரும் எடுக்கும் முடிவை இவர்களும் எடுக்க, தந்தை சொன்னதை செய்து விடுவார் என்பதை அறிந்திருந்த பிறை அம்முடிவை அப்போதே கைவிட்டாள்.

என்னதான் அவள் மாவட்ட ஆட்சியராக இருந்தாலும் பெற்றவர்களுக்கு மகள் அல்லவா! அந்நிலையில் பெற்றவர்களா? இல்லை கட்டாய திருமணமா? என்று யோசித்தால் பெற்றவர்களே முன்னால் வர, விருப்பமில்லாத திருமணத்தை ஏற்று கொள்ளவும் தயாராக இருந்தாள். 

பெற்றோரின் சாவுக்கு காரணமாகி அதன்பின் தன்னால் நிம்மதியாக வாழ முடியுமா? என்ற யோசனையில் நடப்பது நடக்கட்டும் என்று அமைதியாக நாட்களை கழித்தாள்.

திருமணத்திற்கு இன்னும் ஒரு மாதம் இருக்கும் நிலையில் பிறையை மனநிலையை மாற்றவே நண்பர்கள் அங்கு அழைத்து வந்திருக்க, இதுதான் அவளின் வாழ்க்கையையே மாற்றி அமைக்க போகின்றது என்பதை அவர்கள் அப்போது அறியலர் போலும்! 

வாசலில் கார் சத்தம் கேட்டதும் ஏகத்துக்கும் துடித்த மனதை கட்டுப்படுத்தி கொண்டு எழுந்த லேகா, என்ன சொல்வது என்று விளங்காமல் முழித்திருக்க, உள்ளே வந்தான் லோகேஷ்.

*********

“ஐ ஜாலி அப்ப பிறை கல்யாணம் நின்னுரும்ல” என்று வேதா குதிக்க, “அடேய் அவனவன் உயிரோட போவோமானு பயந்தா சின்ன பிள்ளை மாதிரி குதிச்சு விளையாடற?” என்ற மதன் அவனை மொத்தினான்.

“அண்ணா என்ன சொல்ற?” – தளிர்

“சொன்னது காதுல விழுகலயா?” – வருண்

“மாட்டுனதும் மாட்டிட்டோம்.. அப்படி என்னதான் காட்ட போகுதுனு பார்ப்போம்” – ஆத்ரேயன்

“ஆமா அது ஷோ காட்ட போகுது.. நீ உக்காந்து பார்த்துட்டு வா.. ஏன்டா மனுசனை போட்டு சாவடிக்கற?” – மதன்

“பிறை என்னடி என்ன என்னமோ சொல்றாங்க.. நீ இப்படி அமைதியா இருந்தா எப்படி?” என்று ஹாசினி சிறிது பயத்துடன் கேட்க, “ம்ம்ம்ம் அமைதி உண்மைக்கு அர்த்தம்னு படிச்சுருக்கேன்” என்றான் வேதா.

மௌனமாக இருந்த பிறை கண்ணை மூடி திறந்து “சொல்றது எல்லாம் உண்மைதான்.. அதோட இப்ப நான் சொல்ல போறதும உண்மைதான்” என்று பீடிகை போட்டவளை என்னவென்று காண, எச்சிலை விழுங்கிய படி பிறை கூறி முடித்ததும் திகிலுடன் அவ்விடத்தை நோட்டமிட்டனர் அனைவரும்!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
4
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    5 Comments

    1. Archana

      என்னவா டா இருந்தீங்க போன ஜென்மத்திலே நதி இம்புட்டு பீல் பண்ணுது, dr multi shot வெடி ஒரே ஒரு டவுட்டு இந்த தளிர் ஆத்ரேயனோட தங்கச்சி மதன் அவனுக்கு பிரண்டு கரெக்டா. அதே போல, ஹாசினியும் வருணும் அண்ணன் தங்கச்சியா இல்ல பிரெண்ட்ஸா😅😅😅இதை க்ளியர் செய்யவும்

      1. Multishot vedi
        Author

        Athana enava da erunthinga😂😂😂😂😂😂😂 ஆத்ரேயன் தங்கச்சி தான் தளிர்.. மதன் தான் வார்த்தைக்கு வார்த்தை என் நண்பனு சொல்றாரே.. வருணும் ஹாசினியும் பத்தி இன்னைக்கு யூடில வரும்

    2. Janu Croos

      அடேய் போன ஜென்மத்துல என்னத்தடா பண்ணி தெலைச்சீங்க….இந்த நதி உங்களுக்கு இப்படி சொம்பு தூக்குது…இம்புட்டு நாள் நதிதான் பேசிச்சுனா இன்னைக்கு வதியில இருந்து வந்து முனிவர் பேசுறாரு…அவராவது டிடெயிலா சொல்ல வேணாமா…கமல்ஹாஸன் மாதிரி புரியாமலே பேசிட்டு போறாரு….
      இதுல பிறையோட அப்பா அம்மா வேற…சாவப்போறோம்னு மெரட்டினா டக்குனு ஒரு பாட்டில விஷத்தை எடுத்து ரெண்டு பேத்து வாயிலயும் ஊத்தி விட்டுட்டு கொம்சநேரம் பயமுறுத்தினதுக்கு அப்புறம் காப்பாத்தி விட்டிருககனும்…அப்போ சாவ நினைச்சு பயம வந்திருக்கும்….இந்த பிறையும் ழேதாவும் அதுங்களுக்கு அடிபணிஞசு போறதால தான் இப்படி ஆடுதுங்த….