Loading

ஆட்சியர் கனவு 7 💞

 

ஆதியை ஒரு வழியாக சமாதானம் செய்து மைதானத்திற்கு அனைவரும் சென்றனர்.

ஆதி “எல்லாரும் டெய்லி இப்டி தான் சாப்டுவிங்களா? ஆனா நாலு நாளா ஏன் யாரும் இப்டி சாப்டல.?” என்று கேள்வியாய் வினவினான். 

கௌசி “நம்ம கேங்ல ரெண்டு பேர் இல்லல, சோ யாரும் சாப்டல.” என்றாள்.

ஆதி “ரெண்டு பேரா.?” என யோசனையுடன் கேட்க,

கவி “ம்ம். திவி, சுப்ரியா. ரெண்டு பேரும் வரலல.” என்று இயல்பாக கூறினாள்.

திவி “ம்ம், நானும் வந்ததுல இருந்து அவள பத்தி கேக்கணும்னு நினைச்சேன், மறந்தே போய்ட்டேன். இன்னைக்கு  என்னான்னு அவ வீட்ல போய் பாக்குறேன்”

“நான் இல்லன்னா தான் எல்லாரும் சந்தோசமா இருப்பீங்கள்ள.? அப்ரோம் என்ன அக்கரையா இருக்க மாதிரி பேச்சு?” என்று குரல் வந்த திசையை நோக்கி அனைவரும் திரும்பினர்.

அங்கு சுப்ரியா, கண்ணில் கோபமும், உதட்டில் வெற்றுப் புன்னைகையுடனும் அவர்கள் அருகே வந்தாள்.

அப்போது ஆதியின் கைப்பேசி அலற, அதை எடுத்தவன்  “சொல்லு ஷக்தி. என்ன அதிசயமா போன்லாம் பண்ணி இருக்க?” என்று ஆச்சர்யத்துடன் கேட்டான்.

மறுமுனையில் சக்தி கூறியதை கேட்டு ஒரு நொடி திகைத்தவன், தன்னை நிலைப்படுத்திக்கொண்டு “அரைமணி நேரத்துல அங்க இருப்பேன். என்று விட்டு மற்றவர்களிடம் நான் கிளம்புறேன், ஒரு இம்பார்ட்டண்ட் ஒர்க்” என்று விட்டு அவசர அவசரமாக விரைந்தான்.

அவசரத்தில் அவனது தலைக்கவசத்தை மறந்து விட, அதை திவிக் கவனித்து,”நான் போய் குடுத்துட்டு வந்துடுறேன்” என்று விட்டு ‘ஆதி ஆதி‘ என கத்திகொண்டே அவன் பின் சென்றாள்.

சுப்ரியா “நாலு நாளா ரெண்டு பேர் வரலனு சாப்பிடலையா?. இல்ல, திவி வரலன்னு சாப்பிடலையா?” என்று அழுத்தமாக கேட்க,

ரவீ “ஏன், நீ தப்பாவே புரிஞ்சிக்குற?” இன்னைக்கு என்ன நடந்ததுன்னு தெரியுமா? தெரியாம.. நீ பாட்டுக்கு ஏதாவது கற்பனை பண்ணாத!” என்று சூழ்நிலை விளக்கம் கூற,

சுப்ரியா “எனக்கு எந்த விளக்கமும் தேவ இல்ல. அதான் நேர்ல பாத்தேனே. அவ வந்த உடனே என்னய மறந்துட்டீங்கள்ள?” என்று கூற,

கனகா “அப்டிலாம் ஒன்னும் இல்ல. எல்லார்க்கும் எல்லாரும் முக்கியம் தான் பிரியா.” என்று அழுத்தமாய் கூறினாள்.

சுப்ரியா “எல்லார்க்கும் எல்லாரும் முக்கியம்… ஆனா, நான் யாருக்குமே முக்கியம் இல்ல.!” என்று கூறி விட்டு, ‘நான் தான் எல்லாத்துக்கும் முக்கியம்னு உங்க வாயாலேயே சொல்ல வைக்குறேன். திவி இனிமே என்னோட ஆட்டத்தை பாரு. ஜஸ்ட் வெய்ட் அண்ட் வாட்ச்.’ என்று மனதில் சூளுரைத்துக் கொண்டாள்.

இது எப்போதும் நடக்கும் விஷயம் என்பதால், ஆண்கள் அனைவரும் தங்கள் அதிமுக்கியமான வேலையான உண்பதையே கவனித்துக் கொண்டு இருந்தனர். அதில் மேலும் கடுப்பான சுப்ரியா தன் வாய்க்கு வந்ததை எல்லாம் கத்தி விட்டு கிளம்பினாள். அவள் சென்ற பிறகு எதுவும் நடவாதது போல அனைவரும் உணவில் கவனத்தை செலுத்தினர்.

ரவீணா தான் ‘இவளை எவ்வாறு மாற்றுவது.?’ என்று தீவிர யோசனையில் இருக்க, சபரி “சாப்பாடு வேணாம்னா என்கிட்ட குடுத்துடு. இப்படியே எவ்ளோ நேரம் வச்சு இருப்ப? தூசி விழுந்திடும்ல ரவீணா!” என்று அக்கறையாக கூறினான்.

கவி “சோறு வேணும்னா நேரடியா கேளு. அக்கறை சக்கரன்னு எதுவும் சேக்காத” என்று அவனை வார,

சபரி “நான் நேரா தான் கேட்டேன். உனக்கு பங்கு வேணும்னா நீ என்கிட்ட கேளு. சும்மா சும்மா தேவ இல்லாதத பேசாத” என்று உளறினான்.

கவிதா நமட்டு சிரிப்புடன் “புரிஞ்சா சரி” என்று விட்டு அனைவரும் உண்டனர்.

ஆதி ஆதி என்று கத்திக்கொண்டு சென்றவளின் ஆற்றலை வீணாக்காது, அவனும் என்னவென்று திரும்ப திவி கையில் தலைக்கவசத்துடன் ஓடி வருவதை பார்த்து புன்னகையுடன் வண்டியின் அருகே நின்றான்.

திவி மேல்கீழ் மூச்சு வாங்க, ஒரு நொடி நின்றவள், “இந்தா ஆதி!” என்று அவனிடம் ஹெல்மெட்டை நீட்ட,

ஆதி “இதுக்கா இவ்ளோ தூரம் ஓடி வந்தீங்கே மேடம்?” என்று தன் ஒற்றை புருவத்தைத் தூக்கி கேலியுடன் கேட்க,

திவி முறைத்துவிட்டு, “பாவம் பையன் ஏதோ அவசர வேலையா போரானே, ஹெல்மட்ட வேற மறந்துட்டு போறான்னு முக்கியமா செஞ்சுட்டு இருந்த வேலைய பாதிலேயே விட்டுட்டு வந்தேன் பாரு என்ன சொல்லணும்” என்று தலையில் அடித்துக் கொண்டாள்.

ஆதிக்கு அப்போதுதான் சக்தி சொன்னது நினைவு வர, “சரி திவி நான் கிளம்புறேன்” என்று அவசர கதியில் கூறியவனை ஒரு நிமிடம் கூர்ந்து கவனித்து, ஆதி என அழுத்தமாக அழைத்தவளை பார்க்க,

திவி “ஏதோ பிரச்னைன்னு உன் முகத்தை பாத்தாலே தெரியுது. என்ன ஏதுன்னு எனக்கு தெரியாது. எந்த பதட்டமும் இல்லாம, தெளிவா எதுவா இருந்தாலும் செய். எதுவும் இல்லை, எல்லாம் சரி ஆகிடும்.” என்று புன்னைகையோடு சென்றாள்.

அவனும் ஒரு நிமிடம் நிதானித்து இறுதியில் அவள் கூறிய வார்த்தையை கேட்டு அதிர்ந்து விட்டான். “திவி!” அவள் புன்னைகையோடு திரும்ப, “என்ன சொன்ன?” என்று ஒரு வித எதிர்பார்ப்புடன் கேட்க, அவள் புன்னகை மாறாமல், “பாத்து போய்ட்டு வா. ஒர்க் முடிஞ்ச உடனே எனக்கு கால் பண்ணு இல்லன்னா மெசேஜ் பண்ணு” என்று விட்டு சென்றாள்.

நண்பர்கள் அனைவரும் அவர் அவர் வீட்டிற்கு செல்ல, அங்கு நடந்த எதையும் யாரும் மறந்து கூட, திவியிடம் தெரிவிக்கவில்லை.

தன் வண்டியில் விரைந்து தன் கம்பெனிக்கு செல்ல, அங்கு, அங்கும் இங்குமாக அனைவரும் அலைந்து கொண்டு இருந்தனர்.

இவன் உள்ளே நுழைந்த உடன் ஷக்தி “ஆதி, உனக்கு ஒன்னும் இல்லலடா.? நியூஸ் கேட்ட உடனே நான் ரொம்ப பயந்துட்டேன். கரெக்டா உன்னோட கேபின்ல தான்டா பயர் புடிச்சு இருக்கு” என்று கூற,

ஆதி “யாருக்கும் ஒன்னும் ஆகலல?” என்று சிறிது பயத்துடனே கேட்டான்.

சக்தி “இல்லடா, யாருக்கும் ஒன்னும் ஆகல  ஆமா, நீ இந்நேரம் கம்பெனிக்கு வந்து இருக்கனும்லடா?. நல்ல வேலை நீ லேட்டா வந்த. இல்லனா என்ன ஆகி இருக்கும்னு நினச்சு பாத்தாலே ஒரு மாதிரி இருக்கு.” என்று கூறினான்.

ஆதி “அதான் ஒன்னும் ஆகலலடா.  டென்ஷன் ஆகாதடா. ஆனா இது யாரோ பிளான் பண்ணி செஞ்சு இருக்காங்கன்னு தோணுது?” என்று யோசனையுடன் வினவ,

ஷக்தி “ம்ம்ம்.. ஆமா டா. எனக்கும் அதே டௌப்ட் தான்.” என்று அதை ஆமோதித்தான்.

ஆதி “விட்றா பாத்துக்கலாம். எல்லாம் சரி ஆகிடும்.” என்று புன்னகைக்க,

சக்தி “டேய், இது யது சொன்னது தான? அப்போ நீ யதுவ பாத்தியா?” என்று ஆச்சர்யமாக கேட்டான்.

ஆதி “இது யது சொன்னது தான்டா! ஆனா இத இன்னைக்கு திவி சொல்லிக் கேட்டேன்.” என்று கூற,

ஷக்தி “என்னடா சொல்ற? திவி சொன்னாங்களா?” என்று யோசனையுடன் கேட்டான்.

ஆதி “ம்ம்ம்.. எனக்கு திவியும் யதுவும் ஒரே ஆளுன்னு தோணுதுடா!”

சக்தி “என் இன்வெஸ்டிகேசன் இன்னும் கொஞ்ச நாள்ல முடிஞ்சுடும்டா. சீக்கிரம் நீ யதுவ பார்ப்ப.” என்றான்.

இவர்களின் கண்டுபிடிப்பு ஒரு பக்கம் இருக்க, தான் செய்த திட்டம் பலிக்காமல் போனதை எண்ணி தன் கையில் இருந்த கண்ணாடி குடுவையை ஓங்கி எறிந்தான், கோகுல்.

மேலும் தன் திட்டம் அவளால் தான் கெட்டது என்று அறிந்தவனுக்கு அவளின் மேல் மிகுந்த கோபமும் அவளை பழிவாங்கியே தீர வேண்டும் என்ற ஆத்திரமும் வந்தது.

அப்டி இப்டி என்று ஒரு மாதம் கல்லூரி நாட்கள் கடந்து இருக்க, நண்பர்கள் கூட்டமும் நெருங்கி விட்டது. இவர்களின் நட்பு பட்டாளத்தை குலைக்க பல முயற்சி எடுத்தும் பயனில்லாமல் போக, திவியின் மேல் தீரா வெறுப்புடன் இருந்தாள் சுப்ரியா.

தன் இரு சக்கர வண்டியில் அந்த  கல்லூரிக்கு வந்தான் சக்தி. அங்கு அவன் திவியை எதிர்பாராதவிதமாக கண்டு, அவளிடம் கேட்ட விஷயங்கள் திவியை அதிர்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு சென்றது.

கனவு தொடரும் 🌺🌺🌺🌺

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
9
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்