Loading

ஆட்சியர் கனவு – 6

கண்ட காட்சிகள் யாவும்
காட்சிப்பிழையாகி
போனது ஏனோ.?
அல்ல
காட்சியானது
கோணத்தின்
பிழையாகியதா.?
அறியேன் யான்.
எது எப்படியோ
என்னவள்(ன்) நீ தான் என்று
உள்ளக்கிடங்கு
உந்துதல் செய்யும்
மாயம் தான் யார் அறிவாரோ..!
 

ஆதியும் திவியும் பேசிக்கொண்டு வர, திவியின் முன் ஒரு மாணவன் வந்து நின்றான். அது வரை தன் முகத்தில் சூட்டியிருந்த புன்னகையைக் கழட்டி வைத்து விட்டு, வெறுப்பு கோவம் என்ற வன்னகையை சூடிக்கொண்டாள் திவி.

திவி “என்ன தூதா.?” என்று கேட்க, அந்த மாணவன் ஆம் என்பது போல் தலையசைத்தான். திவி முறைத்து விட்டு “அவங்கள வர சொல்லுங்க” என்றாள்.

அவன் மறைந்து இருந்தத் தன் நண்பனை அழைத்தான்.

திவி “இப்போ உங்களுக்கு என்ன வேணும் ஹரி?”

ஹரி “நான் உன் கூட தனியா பேசணும்!” என்று விட்டு ஆதியை பார்க்க,

ஆதி “நீ பேசிட்டு வா திவ்யா! நான் முன்னாடி போறேன்!” என்று விட்டு நகர்ந்தான்.

திவி முறைத்து விட்டு “ஆதி, இப்டிதான் ஒரு பெண்ணை ரெண்டு தடி மாடுங்க கிட்ட தனியாவிட்டுட்டு போவிங்களா.?” என்றதில் ஆதி அமைதியாக நின்று விட்டான்.  ஹரியிடம் எதுவா இருந்தாலும் இங்கேயே பேசலாம்.” என்றாள் தன் கைபேசியை பார்த்துக்கொண்டே!.

ஹரி அவள் கூறிய வார்த்தைகளால் அவளை முறைத்துக் கொண்டு
“அ..அ..அது.. திவி!” என்று அவன் முடிக்கும் முன்பே,

 

திவி கையை அவன் முன் நிறுத்தி, “உங்க இஷ்டத்துக்கு பேர ஷார்ட் பண்ற வேலயெல்லாம் என்கிட்ட வேணாம். என்னமோ நீங்க வச்ச பேர் மாதிரி திவின்னு கூப்டுறீங்க?. அப்டி  கூப்டுர வேலயெல்லாம் வச்சிக்காதிங்க!” என்று எகிறினாள்.

ஆதி, திவியின் கோபத்தில் அவளை பார்த்துக் கொண்டு இருந்தான்.

திவி “இப்போ உங்களுக்கு என்ன வேணும் ஹரி?”

ஹரி “நேத்து தான் சொன்னேன்ல. உன் முடிவு என்ன திவ்யா?”
 
திவி “ஓ ஓ ஓ .. அதுவா? எத வச்சு நான் உங்க லைஃப்க்கு ஆப்ட் ஆனவன்னு நீங்க எனக்கு ப்ரொபோஸ் பன்னிங்க.?”

ஹரி “உன்ன பாத்த உடனே புடிச்சு போச்சு. இந்த செகண்ட் எனக்கு உன்ன பத்தி என்ன தோணுதோ அதே தான் என் வாழ்க்கை முழுக்க தோணும். நீ என் லைஃப்ல வந்தா நான் மட்டும் இல்ல, என் பேமிலி கூட சந்தோசப்படுவாங்க” என்று விட்டு திவியை பார்க்க, அவளோ முக்கிய வேலையான தன் போனில்  டெம்பல் ரன் விளையாடிக்கொண்டு இருந்தாள்.

அதில் கடுப்பான ஹரி, “உன் கிட்ட தான் நான் பேசிக்கிட்டு இருக்கேன்!” என்றான்.

திவி அவன் செயலில் முறைத்து “கேக்குது. இப்போ நான் என்ன பதில் சொல்லணும்னு நீங்க எதிர்ப்பாக்கிறீங்க.?” என்று கையை குறுக்கேக் கட்டி கொண்டு கேட்க,

ஹரி “உன்னோட பதில், எதுவா இருந்தாலும் நான் அக்செப்ட் பன்ணிக்குறேன்” என்றான்.

திவி “ஓ..ஓ.. வெல். எனக்கு இதுலலாம் சுத்தமா இன்டர்ஸ்ட் இல்ல. சோ, நீங்க உங்க வேலைய பாத்தா நல்லா இருக்கும். நீங்க இதுக்கு ரீசன் கேட்கலாம். சோ நானே சொல்லிடுறேன். உங்க பேமிலி பத்தி நான் விசாரிச்சேன். இட்ஸ் நாட் வெல் பார் மீ! அண்ட் நீங்க 8 அரியர். இட்ஸ் ஆல்சோ நாட் குட்.

எனக்குலாம் வந்தோமா படிச்சோமா டைம் பாஸ் பண்ண நாலு பசங்களோட சுத்துனோமான்னு இருக்கணும். உங்க கேரக்டரும் என் கேரக்டரும் சுத்தமா செட் ஆகாது. சோ நீங்க என் லைஃப்ல வராம இருந்தா பெட்டரரா இருக்கும்” என்று கூறினாள்.

ஹரி “நான் கூட உன்ன என்னமோ நினைச்சேன். ஆனா நீ இவ்ளோ கேவலமா இருப்பன்னு நினைச்சி கூட பாக்கல.. ச்சே.. நல்ல வேல உன்ன பத்தி முன்னாடியே என் ப்ரண்ட் சொன்னது சரியா போச்சு. நான் அவன் சொன்னது உண்மையா இருக்கக் கூடாதுனு நினைச்சேன்.! ஆனா நீயே உன் வாயால சொல்லிட்ட. தாங் காட். குட் பை!” என்று விட்டு அவன் நண்பனை அழைத்துக் கொண்டு சென்று விட்டான்.

திவி எதுவுமே நடக்காதது போல, ஆதியிடம் திரும்பி “வாங்க க்ளாஸ்க்கு டைம் ஆச்சு போலாம்.” என்று கூறினாள்.

அவள் பேசிய வார்த்தைகள் இன்னும் இவன் காதில் ஒலித்துக்கொண்டு இருக்க, எதுவும் கூறாமல் முன்னேறி நடந்தான். வகுப்பு வரும் வரை ஆதி மௌனத்தையே கடைபிடித்துக் கொண்டு வந்தான்.

இருவரும் வகுப்பிற்குள் வந்து அவர் அவர் இடத்தில் அமர்ந்தனர். வழக்கமான நல விசாரிப்போடு வகுப்புத் தொடங்கியது.

ரவீ “திவி, இன்னைக்கு எல்லாருமே அசைன்மெண்ட் சப்மிட் பண்ணனும் திவி. மேடம் உண்ண பிரேக்ல கலெக்ட் பண்ண சொன்னாங்க. நானும் கௌசியும் ஆல்ரெடி எல்லாரோடதும் வாங்கிட்டோம். பிரேக்ல போய் நீ  மேடம் கிட்ட குடுத்துட்டு வந்துடு.!” என்றாள்.

திவி எதுவும் பேசாமல், தலையை மட்டும் ஆட்டினாள்.

ஆதியின் முகத்தை ஆராய்ந்த விஷ்ணு “என்னடா ஆச்சு? வந்ததுல இருந்து பாக்குறேன் உன் மூஞ்சே சரி இல்லையே?” என்று வினவ,

ஆதி திவியை ஒரு முறை பார்த்துவிட்டு விஷ்ணுவிடம் காலையில் நடந்ததை கூறினான். விஷ்ணு “அதான் அவ அப்டி இருக்காளா.? நீ அமைதியா இரு என்கிட்ட சொன்னதா காட்டிக்காத” என்றான்.

ஆதி “ம்ம்ம்.. என்ன பண்ண போற.? நிஜமாவே திவி சொன்னது உண்மையா?” என்று கேட்க,

விஷ்ணு அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு “அவ எது பண்ணாலும் ஒரு ரீசன் இருக்கும். அவகிட்டேயே கேட்கலாம். வெய்ட் பண்ணு. ஆமா நீ அப்போவே அவ கிட்ட எதுவும் கேட்கலயா?” என்று கேட்க,
ஆதி மறுப்பாக தலையசைத்தான்.

பிரேக்கில் அசைன்மெண்ட்டை டிபார்ட்மெண்ட்டில் கொடுத்து விட்டு வெளியே வந்தவள் ஒருவரிடம் பேசிவிட்டுக் குழப்ப ரேகைகளோடு வகுப்பிற்குள் நுழைந்தாள். அதற்குள் காலையில் நடந்ததை விஷ்ணு அவன் கேங்கிற்கும் சொல்லி விட்டான்.

ரவீ “நில்லு திவி!”  திவி அவளை ‘என்ன‘வென்று பார்க்க, காலைல என்ன நடந்துச்சு?” என்று கேட்டாள்.

திவி “ஏன், ஆதி எதுவும் உங்க கிட்ட சொல்லலயா?” என்று தன் ஒற்றை புருவத்தைத் தூக்கி ஆதியை ஒரு பார்வை பார்த்துக் கொண்டுக் கேட்டாள்.

கனகா “எதுக்கு திவ்யா நீ அப்டிலாம் பேசி இருக்க? நீ ஏன் அப்படி பேசுனன்னு எங்க யாருக்குமே புரியல” என்க,

கவிதா “உனக்கு பயமா இல்லயா திவி?” என்று கேட்டாள்.

விஷ்ணு “யாரு அவன்? அவன்கிட்ட எதுக்கு உன் கேரக்டரை தப்பா சொல்லிவிட்டு வந்து இருக்க?”

ஆதி “உன்கிட்ட தான எல்லாரும் கேக்குறாங்க? பதில் சொல்லு திவ்யா!” என்று இது வரை அடக்கி வைத்து இருந்த மொத்த கோபத்தையும் சுவரின் மேல் ஓங்கி குத்தியபடி கேட்டான்.

திவி எல்லாரையும் பார்த்துவிட்டு “நீங்க ஏன் அமைதியா இருக்கீங்க? உங்களுக்கு எந்த கேள்வியும் தோணலயா?” என்று கௌசி, சபரி, பிரவீன் பார்த்து கேட்க, அவர்கள் என்ன கூறுவது என்று முழித்துக்கொண்டு இருந்தனர்.

திவியே தொடர்ந்தாள், “எல்லாரும் பர்ஸட் இதை சீரியஸ்ஸா பாக்கிறத நிறுத்துங்க. எல்லார் வாழ்க்கைலயும் இந்த மாதிரி நடக்கும். அத சீரியஸ்  டாபிக்ஆ எடுத்துக்கக் கூடாது. நானே எனக்குலாம் ப்ரொபோஸ்லாம் பண்றாங்கன்னு ஒரு எக்ஸைட்மெண்ட்ல இருக்கேன். நீங்க வேற!” என்று தலையில் அடித்துக் கொண்டு கூறினாள்.

ரவீ “திவி, விளையாடாத! ஏன் அப்படி சொன்ன?”

திவி “அட ரவீ நீயுமா? இங்க பாருங்க பக்கீஸ்.. அந்த பையன் நேத்து கோவில்ல என்கிட்ட ப்ரொபோஸ் பண்ணான். அப்போவே அவன பத்தி விசாரிச்சேன். அவனுக்கு அப்பா இல்ல, அம்மா ரெண்டு தங்கச்சிங்க. அவன் நல்லா படிக்குற பையன் தான். வீட்டுல ப்ராபலம்னால அவன் லாஸ்ட் செம்ல எல்லாமே அரியர். அவன் ஒழுங்கா படிச்சாதான் அவங்க பேமிலிய நல்லா பாத்துக்க முடியும்.

எப்படியும் நான் ஷாஃப்ட்டா சொல்லி இருந்தா அகேயின் சுத்துவான். இல்லனா தப்பான முடிவா எடுப்பான். அதான் எனக்கு தெரிஞ்ச பையன வச்சு என்ன பத்தி தப்பா சொல்ல சொன்னேன். அவன் எப்படியும் அவன் சொன்னத நம்பாமா என்கிட்ட வந்து கேட்பான். அதனால தான்  அவன்கிட்ட இப்டிலாம் பேசுனேன்.

அண்ட் எனக்கு எப்பவும் என் லட்சியம் தான் முக்கியம். எனக்கும் ரெண்டு தங்கச்சிங்க இருக்காங்க. நான் வழி தவறி போய்ட்டா அவங்க நிலமை? லவ் பண்றதுனால பசங்களுக்கு மனரீதியான எந்த பிரச்சனையும் அவ்ளோவ வராது. அப்டியே வந்தாலும் அத சரி பண்ண சிகரெட் , தண்ணின்னு எப்படியோ அவங்கள நியூட்ரல வச்சுக்குவாங்க! ஆனா பொண்ணுங்க? உடல் ரீதியாவும் மன ரீதியாவும் நெறய பிரச்சனையை பேஸ் பண்ணனும். அதுக்குன்னு லவ்வே தப்புனு சொல்லல! சரியா அதை நாமா பேலன்ஸ் பண்ண கத்துக்கணும் அவ்ளோதான்.

எப்பவும் எல்லாத்தையும் சீரியஸ்ஸா எடுத்துக்க கூடாது. அப்ரோம் நமக்கு இருக்க கொஞ்சூண்டு மூளையும் வேல செய்யாது. ஆல்ரெடி இருக்குறதும் வேல செய்ய மாட்டிங்குது” என்று சலிப்போடு கூறினாள்.

சபரி “ஸ்ஸ்ப்ப்பா…போதும் போதும் .. பெரிய சொற்பொழிவு.. தண்ணிய குடி தண்ணிய குடி” என்று அவளிடம் தண்ணீரை கொடுத்தான்.

திவி “இந்த காரணம் போதுமா? இல்ல..?” என்று கேட்க,

கவி இரு கைகளையும் தலையில் வைத்து  கும்பிட்டு “போதும்.! இதுவே ஜாஸ்தி” என்றாள்.

பிரவீன் “ஹான் ஹான். சங்கத்தை கலைங்க” என்று விட்டு நகர்ந்தான். அனைவரும் அவர் அவர் இடத்திற்கு சென்று அமர்ந்து கொண்டனர்.

சிறிது நேரம் பிறகு ஆசிரியர் வகுப்பு எடுத்துக்கொண்டு இருக்க,
 

சிரிக்கலாம் பறக்கலாம் இறக்கைகள் முளைத்ததே
மிதக்கலாம் குதிக்கலாம் கவலைகள் மறக்குமே

சிரிக்கலாம் பறக்கலாம் இறக்கைகள் முளைத்ததே

மிதக்கலாம் குதிக்கலாம் கவலைகள் மறக்குமே!..

 
என்று வகுப்பில் ஒரு மாணவனின் கைபேசி அலற, அனைவரும் சப்தம் வந்த திசையை பார்க்க, ஆதியின் அருகில் இருந்த மாணவன் கையில் இருந்த கைபேசி கீழே விழ போக, ஆதி அதை பிடித்தான். அப்போதும் பாடல் ஒலித்துக்கொண்டு இருந்தது.

இதை கவனித்த ஆசிரியர் ஆதியை திட்ட ஆரம்பித்தார். “அறிவு இருக்கா? உனக்கு? எப்டி இருக்கும், செகண்ட் இயர்ல தான் ஜாய்ண்ட்  பண்ணி இருக்க? அதுக்குள்ள இவ்ளோ பண்றீங்க? இப்டிதான் உங்க அப்பா அம்மா உன்ன வளத்துவச்சி இருக்காங்களா?” என்று கத்தினார்.

இதுவரை அவர் பேசிய வார்த்தைகளை அமைதியாக கேட்டுக்கொண்டு இருந்தவன், இறுதியாக கூறிய வார்த்தையின் வீரியத்தில் கண் கலங்க நின்றான்.

ஆசிரியர் “கெட் அவுட்” என்று கூறிவிட்டார். ஆதியும் வெளியில் சென்று விட்டான். கால் போன போக்கில் ஆதி நடந்து கொண்டு இருந்தான். இறுதியில் கல்லூரி முன் இருக்கும் விநாயகர் கோவிலில் அவன் கால்கள் தன்னிச்சையாக நின்று விட்டது!

ஆதி கடவுளை பார்த்து ஒரு வெற்று புன்னகை இட்டு, ‘என் வாழ்க்கை எந்த திசைல போகுதுனே தெரியல! சின்ன வயசுலயே அப்பா அம்மா  கிட்ட இருந்து என்ன பிரிச்ச, அப்ரோம் ஒரு நல்ல மனுசன் கண்ணுல பட்டதுனால கொஞ்ச வருஷம் சிரிச்சேன். அதுவும் உனக்கு பொறுக்கல, அவரையும் உன்கூட கூப்பிட்டுகிட்ட. அதுக்கு அப்ரோம் ஆறு வருஷம் முன்னாடி யதுவால ஒரு நாள் சந்தோசப்பட்டேன். அதுவும் உனக்கு பொறுக்கல. இது வரை அவள நீ என் கண்ணுல காட்டுல! தொழில்ல கூட நெறய பிரச்சனை அதுல என் உயிர்க்கு உயிரான என் நண்பன ஓட தம்பிய என் கையாலேயே சாகடிக்க வச்ச. அந்த குற்ற உணர்ச்சில தினமும் செத்துகிட்டு இருக்கேன். இன்னும் என்ன தான் நான் அனுபவிக்கணும்?’ என்று மானசீகமாக கடவுளிடம் வாதாடிக்கொண்டு இருந்தான்.

திவியும் மற்ற நண்பர்களும் கல்லூரி முழுக்க ஆதியைத் தேடிக்கொண்டு இருந்தனர்.

திவி “அண்ணா அவங்களுக்கு போன் போட்டியா?”

விஷ்ணு “15 தடவ போட்டுட்டேன்.. அவன் எடுக்கவே இல்ல!”

ரவீ “எல்லாரும் ஆளுக்கொரு பக்கம் தேடுங்க. நானும் திவியும் காலேஜ்க்கு வெளில  பாக்குறோம்”

இருவரும் வெளியில் ஆதியின் நிலையைக் கண்டு திகைத்துத்தான் போயினர். ஒரு ஆணின் கண்ணீர் இருவரையும் ஏதோ செய்தது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு அவனருகில் சென்றனர்.

ரவீணா மற்ற நண்பர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி அனைவரையும் வர சொல்லி இருந்தாள்.

திவியும் ரவீயும் ஒரு சேர, ஆதி என்று அழைக்க, அவன் நிமிர்ந்து பார்த்தான். திவி அவன் அருகில் சென்று அமர்ந்தாள். ரவீ மற்றவர்கள் வருகிறார்களா என்று பார்த்துக்கொண்டு இருக்க,

ஆதி “என்னை தேடியா வந்திங்க.? ஏன் உங்க எல்லார்க்கும் கஷ்டம். நான் எப்படி போனா என்ன?’ என்று விரக்தியுடன் கூறினான்.
 

ரவீ “ஏன்னா நீ எங்க பிரண்ட். சோ நீ எப்படியோ போனா எங்களுக்கு என்னனு எங்களாலா இருக்க முடியாது.”

ஆதி “வேண்டாம் ரவீணா! எனக்கு எதுக்குமே குடுத்துவைக்கல. கொஞ்ச நேரம் சந்தோசமா இருந்தா கூட, என் கூட இருக்கவங்களுக்கு ஏதோ ஆகிடும். இல்ல எனக்கு ஏதோ ஆகி எங்கயோ போயிடுவேன். தேவ இல்லாம இந்த அநாதைக்காக யாரும் கஷ்ட பட வேண்டாம்.” என்று கூற,

திவி பளாரென்று அவன் கன்னத்தில் அறைந்து இருந்தாள். “நானும் பாத்துகிட்டே இருக்கேன். எப்ப பாரு எனக்கு யாருமே இல்லை யாருமே இல்லன்னு சொல்லிக்கிட்டு இருக்க.? அப்போ எங்களலாம் பாத்தா மனுசங்க மாதிரி தெரியலையா? அப்போ ஏன் என் கிட்ட உன்ன ப்ரெண்ட்டா ஏத்துக்க சொன்ன? உனக்கு பிரண்ட்ன்னா வெறும் வார்த்தை தான். ஆனா எங்களுக்கு எனக்கு அப்டி கிடையாது. சும்மா பிரண்ட்ன்னு சொல்லிக்கிட்டு அவங்கள பத்தி கவலை படாம இருக்க முடியாது.

வெற்றியோ தோல்வியோ பிரண்ட் நாங்க எப்பவும் உன் கூட உனக்காக இருப்போம்.” என்று அழுத்தமாகவும் ஆழமாகவும் கூறினாள்.

விஷ்ணு “கரெக்ட்டா சொன்ன திவி!” நல்லா அந்த மண்டையல உரைக்குற மாதிரி சொல்லு. இன்னும் நாலு அரை அரைஞ்சு சொல்லு!” என்று கத்தினான்.

ஆதி குனிந்த தலை நிமிராமல் இருக்க, கனகா “இங்க பாரு ஆதி. வெளில எப்படியோ அத பத்தி எனக்கு தெரியாது. ஆனா காலேஜ்க்கு வந்துட்டா எப்பவும் எல்லாத்துக்கும் நாங்க இருக்கோம்ன்னு மனசுல வச்சிக்கோ. புரியுதா?” என்று கூறினாள்.

கவி “பர்ஸ்ட் நீ எல்லாத்துக்கும் சீரியஸ் ஆகுறத நிறுத்து. எதுவா இருந்தாலும் பாத்துக்கலாம்!”

சபரி “டேய், பசிக்குதுடா. வாங்க டா!” என்று கதற,

திவி “சாப்டியா ஆதி?” என்று கேட்டாள்.

ஆதி “இந்த அனா… என்று நாக்கை கடித்து விட்டு, இல்ல திவி” என்று கூறினான்.

திவி அதில் அவனை முறைத்துவிட்டு, “சரி வா சாப்பிட்டலாம்.” என்று அவனை இழுத்துகொண்டு அனைவரும் க்ரவுண்டிற்கு விரைந்தனர்.

ஆதி திவியிடம். “சாரி” என்று கேட்க, அவள் எதற்கு என்று  பார்க்க, நான் உன்னை திவின்னு கூப்பிடத்துக்கு” என்று கூறி கீழே குனிந்தான்.

திவி “ஓ.ஓ..ஓ.. அப்போ இன்னும் என்ன நீ உன் ப்ரெண்ட்டா ஏத்துக்கலையா?” என்று முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு கேட்க,

ஆதியோ திருத்திருவென முழித்தான்.

கவிதா “அட, லூசு.. எப்ப பாரு முழிக்காத. அவ உன்ன ப்ரெண்ட்டா அக்செப்ட் பண்ணிக்கிட்டா. இன்னுமா உனக்கு புரியல.?” என்று கூற அப்போது தான் ஆதிக்கு உரைத்தது.

ஆதி புன்னகையோடு அவளிடம் கேட்க்க, அவளும் ம்ம் என்று தலையசைத்தாள்.

ஆதி மகிழ்ச்சியில் விஷ்ணுவை கட்டிப்பிடித்து சுற்ற, அனைவரும் “கருமம் எங்க வந்து ரெண்டும் ரொமான்ஸ் பன்ணுதுங்க  பாரேன்” என்று தலையில் அடித்துக்கொண்டு அமர்ந்தனர்.

அனைவரும் அவர் அவர் உணவை பையில் இருந்து எடுக்க, ஆதி அமைதியாக இருந்தான். திவியின் மூடியில்  சிறிது உணவை அவனுக்குக் கொடுக்க, அனைவரும் அதே மூடியில் அவனுக்கு வைத்தனர். ஒரே தட்டில் பல வீட்டு உணவு, அனைவரின் நட்பு மழையில் குடை இல்லாமல் ஆதி நனைந்து தான் போனான்.

அப்போது ஆதியின் கைபேசி கத்த, அதை எடுத்தவனின் முகம் மகிழ்ச்சியில் ஒரு புன்னகையை சிந்தியது.

ஆதி “சொல்லுடா ஷக்தி. என்ன அதிசயமா இப்போ கால் பண்ணி இருக்க?” என்று கேட்டான். மறுபுறம் சக்தி கூறியதை கேட்டு  சட்டென்று எழுந்தான். அனைவரிடமும் நான் கிளம்புறேன் என்று விட்டு வேகமாக சென்றான்.

அனைவரும் ‘இவனுக்கு என்ன ஆச்சு?’ என்று ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு இருந்தனர்.

கனவு தொடரும்..

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
7
+1
2
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்