Loading

ஆட்சியர் கனவு 44 💞

முதல் நாள் பயணம் இனிதே முடிய, களைப்பில் அனைவரும் விடுதி வந்து சேர்ந்தனர்.

அன்வர் “இன்னைக்கு ட்ரிப் நல்லா இருந்ததுல ரேஷ்?”

ரேஷ்மா “ஆமா அன்வர். அதுவும் திவி நம்ம கூட ரொம்ப ஜோவியலா இருக்கா. ஐ லைக் ஹெர்”

அன்வர் “யெஸ்… கண்டிப்பா ஒரு நாள் அவங்கள நாசிக் கூட்டிட்டு போனும் ரேஷ்”

ரேஷ்மா “கண்டிப்பா”

என்றபடி இருவரும் கைகோர்த்து கொண்டே  நடந்தனர் அவ்விடுதியில் இருந்த பூங்காவில்…

சுப்பிரியா “அக்கா, ஐ காண்ட். இதை தவிர வேற எதாவது ஐடியா சொல்லேன்?” என்று ஆயிரமாவது முறை கேட்டு விட்டாள்.

சந்தனா “இல்ல பிரியா. லுக், இப்போ நீ இதை செய்யலானாலும் கண்டிப்பா வேற ஒருத்தர வெச்சு செய்வேன். நியாபகம் இருக்கட்டும். அண்ட் உனக்கும் இதை விட்டா அவள பழி வாங்க முடியாது.” என்று கூற, அரை மனதாக ஒப்புக் கொண்டாள் சுப்ரியா.

உணவு அருந்தும் பானத்தில் மயக்க மருந்து கலந்து வைத்திட, திவியும் ரவீயும் அவ்விடம் வந்தனர்.

ரவீ “எனக்கு ரொம்ப தல வலிக்குது திவி… டயர்டா இருக்கு”

திவி “நீ இங்க உட்காரு. நான் உனக்கு குடிக்க ஏதாவது கொண்டு வரேன்.”

சுப்ரியா “நானே கொண்டு வந்துட்டேன் திவி. நம்ம மூணு பேருக்கும்.” என்று ஆளுக்கு ஒன்றாய் நீட்ட,

திவி “இல்ல ப்ரியா எனக்கு வேண்டாம். எனக்கு சாப்பிட்டதே ஃபுல்..”

சுப்ரியா “இதை கொஞ்சம் குடி. சரியா இருக்கும்..” என்று வற்புறுத்த, வேறு வழியின்றி அதனை பருகினாள்.

ரவீ “திவி ரூம் போலாமா.? என்னால முடியல டி”

திவி “சரி டி.. வா போலாம். பிரியா நீ வரல..”

சுப்ரியா “நீங்க போங்க நான் வரேன்..” என்று வானத்தை வெறித்து கொண்டு இருந்தாள்.

அவர்கள் சென்றதை உறுதிப்படுத்தி கொண்டு, சந்தனவிற்கு அழைத்து “அக்கா, நீ சொன்ன மாதிரி மயக்க மருந்து குடுத்துட்டேன். எப்படியும் அவ எந்திரிக்க 8 ஹவர்ஸ் ஆகும். “

சந்தனா “வெரி குட் டி.. நீ என் தங்கச்சின்னு ப்ரூவ் பண்ணிட்ட. நீ அவ மயக்கமானத கன்ஃபார்ம் பண்ணிட்டு கிளம்பி வா.”

சுப்ரியா “சரி… அக்கா..” என்றபடி திவியை பின் தொடர்ந்தாள்.

ரவியை கைதாங்களாக அழைத்து வந்தவள், அவளை படுக்க வைத்து விட்டு, குளியலறை புகுந்தாள்.

ரவீ ‘எப்போ சக்தி வருவீங்க.? ஈஸியா சொல்லிட்டேன் வெய்ட் பண்ணுங்கன்னு. நீங்களும் வெய்ட் பண்ணிட்டு இருக்கீங்க. ஆனா என்னால தான் உங்கள பாக்காம இருக்க முடியல. ப்ளீஸ் ஒரு தடவை என்ன வந்து பாருங்க. நான் உங்க கூடவே வந்துடுறேன்.’ என்று சக்தியின் புகைப்படத்தை பார்த்து கொண்டு கண்ணீர் உகுத்தாள் காரிகை இவள்.

அங்கே அவனும் இதே நிலை தான். “என்னால முடியல ரவீணா. உன்னை ஒரு தடவ பாத்தா போதும். உன்னை விடவே மாட்டேன். ஐ லவ் யூ டி.. இங்க வேற என்னென்னமோ நடக்குது. அந்த சந்தனாக்கும் எனக்கும் நிச்சயம் பிக்ஸ் பண்ண போறாங்க. அதுவும் நாளைக்கே. திவியும் அங்க இருக்கா. ஆதியும் ஏதோ யோசனைலயே இருக்கான். மனசு ஏதோ சரி இல்லன்னு சொல்லுது டி.. முடியல” என்று புலம்பி கொண்டு இருந்தான் ஆடவன்.

திவிக்கு தூக்கம் வராது போக, பூங்காவில் வீசும் இளங்காற்றை ரசித்த படியே அமர்ந்திருந்தாள்.
இத்தருணத்தை தன்னவன் உடன் கழிக்க விரும்ப, ஆதிக்கு அழைத்தான்.

ஆதி “சொல்லு யது”

திவி “ஆதி..?”

ஆதி “ம்ம்ம் சொல்லு.!”

திவி “என்ன ஆச்சு? ஏன் குரல் ஒரு மாதிரி இருக்கு.?”

ஆதி “ப்ச் அதுலாம் ஒன்னும் இல்ல.. என்ன பண்ற.?”

திவி “டோன்ட் சேஞ் தி டாபிக். என்ன ஆச்சு?”

ஆதி வீட்டில் நடந்தவற்றை உரைக்க,
திவி சற்று அதிர்ந்தாலும், “எப்போ நிச்சயம்.?”

ஆதி “நாளைக்கு டி.”

திவி “ஓ.. “

ஆதி “எனக்கு சுத்தமா என்ன நடக்குதுன்னு புரியல யது. அப்பா ஏன் இப்படி நடந்துக்குறாரு. உனக்கும் அப்பாக்கும் என்ன தான் பிரச்சனை.?”

திவி “அதான் அன்னைக்கு அத்தை கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கிட்டள்ள அப்ரோம் என்ன டா.?”

ஆதி “எனக்கு அது சரியான காரணமான்னு தெரியல. நீ உடனே கிளம்பி வா.. இல்ல இல்ல நீ இரு நான் வரேன்..”

திவி “ப்ச்.. ஆதி..என்ன ஆச்சு இப்போ.. இங்க பாரு இப்போ நீ சக்தி அண்ணா கூட தான் இருக்கணும். கண்டிப்பா நிச்சயம் நடக்காது. அப்டியே நடந்தாலும் கல்யாணம் நடக்காது. நாம ஒன்னும் பண்ண தேவை இல்லை. அவளே நிறுத்துவா..”

ஆதி “எனக்கு எதுவோ சரியா படல யது. பீ ரெடி டுமாரோ. நாளைக்கு நான் வந்து கூட்டிட்டு போரேன். அவ்ளோதான்” என்று விட்டு இணைப்பைத் துண்டித்தான்.

திவிக்கு தான் அயோ என்றானது. ஏகாந்த பொழுதை ரசிக்க அழைத்தால், இறுகளுடன் இருக்கும் இவனிடம் என்ன சொல்வது என்று குழம்பியவள், தன்னறைக்கு செல்ல எத்தனிதாள். அப்போது காதல் குயில்கள் கவி வரைந்திட,
புன்னகையோடு அன்வர் ரேஷ்மா அருகே சென்றாள்.

திவி “ஹாய்..!”

ரேஷ்மா “ஹே.. ஹாய் திவி.. தூங்கல.?”

திவி “இல்லை ரேஷ்மா.. போனும்.. ” என்றிட,

அன்வர் “என்ன திவி ப்ரோ போன் பன்னாரா.?”

திவி “ஹான் ஆமா அன்வர். பேசிட்டு தான் வரேன்.”

ரேஷ்மா “அப்ரோம் எப்படி தூக்கம் வரும்.. என்ன திவி போய் கனவுல டூயட் தான்” என்று இருவரும் கலாய்க்க, மூவரும் அப்படியே பேசிக்கொண்டு இருந்தனர்.
திடீரென்று திவி மயங்கி விழ, அன்வரும் ரேஷ்மாவும் அதிர்ந்தனர்.

திவியைத் தேடி அறை வந்த சுப்ரியா, படுக்கையில் இருக்கும் திவி மயங்கி விட்டதை உறுதிப்படுத்திக் கொண்டு, அங்கிருந்து புறப்பட, சக்தி அவசர கதியில் சென்னை புறப்பட்டான்.

தன்னவளை ரசித்துக்கொண்டு இருந்த சக்தி, புதிய எண்ணிலிருந்து அழைப்பு வர, இணைத்து செவிக்கு கொடுத்தான்.

“என்ன மிஸ்டர் அசிஸ்டண்ட் கமிஷ்னர் சார். உங்க லவ்வர்ர நினைச்சிட்டு ஜாலியா இருக்கீங்க போல.?”

சக்தி “ஏ..யாரு நீ.? இந்த நேரத்துல போன் பண்ணி பேசுற.?”

“உங்களுக்கு ஒரு சாக் நியூஸ் இருக்கு.. பட் இப்போ நீங்க வேற லவ் மூட் ல இருக்கீங்க.. என்ன பண்ணலாம்?”

சக்தி “பர்ஸ்ட் வை போன” என்று துண்டிக்க போக,

“சார்.. சார்.. திவி இருக்காள்ள?”

சக்தி “ஹெலோ. ஹெலோ.. திவி.. திவிக்கு என்ன..?”

“பார்ரா.. அவள சொன்னா இங்க கொதிக்குது.? அப்படி எல்லாரையும் மடக்கி வெச்சு இருக்கா போல.?”.

சக்தி கடுங்கோவத்தில் “திவிக்கு என்ன ஆச்சு.?”

“சொல்றேன்.. சொல்றேன்.. இன்னும் 3 ஹவர்ஸ் ல நீ சென்னை போல.. உன் திவி பல பேருக்கு நைட் விருந்தாகிடுவா..” எள்ளலுடன்..

சக்தி “ஹே.. யூ.. யார் நீ.?”

“அவசியம் தெரியனுமா..? ம்ம்ம். உங்க மாமா பொண்ணு தான். “

சக்தி “சந்தனா.?”

சந்தனா “கிரேட்.. இந்த விஷயம் ஆதிக்கு தெரிஞ்சா கவலை இல்லை.. பட் அங்க திவியும் உன் அருமை காதலியும் பார்சல் ஆகி இருப்பாங்க.. மைண்ட் இட்..” என்று இணைப்பைத் துண்டித்தாள்.

இரவு 1 மணியாகிட, விடுதியில் திடீரென காவல் துறையினரும் பத்திரிகை நிரூபர்களும் குவிந்தனர்.

இங்கு ஆதியின் வீட்டில்..

சந்தனா “அத்தை மாமா.. இங்க எவ்ளோ பெரிய விஷயம் நடந்து இருக்கு.. வாங்க வெளிய எல்லாம்” என்று கத்த…

தூக்கத்தில் இருந்து விடுபட்டு அனைவரும் விரைந்து கூடத்திற்கு வந்தனர். மறுநாள் நிச்சயம் என்பதால் அனைவரும் அங்கே தான் குழுமி இருந்தனர்.

“இந்நேரத்துல என்ன உனக்கு பிரச்சினை.?” என்று கடுகடுத்தவாரே வெளியே வந்தான் ஆதி.

சந்தனா “வாங்க மிஸ்டர் ஆதி.. எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. பட், சென்னை போன உங்க பொண்டாட்டி இப்போ என்ன பண்ணி வெச்சி இருக்கா தெரியுமா.?”

தெய்வானை “அச்சோ, திவிக்கு என்ன ஆச்சு?”

சந்தனா “பதறாதீங்க அத்தை. அவ செஞ்ச காரியத்துக்கு நீங்க அவளை வீட்டை விட்டே துரத்துவீங்க..”

அனைவரும் அவளை குழப்பமாகவும் கோவமாகவும் பார்க்க, ஆதியோ யோசனையாய் பார்த்தான்.

“என்ன சொல்ற நீ.?” என்றார் தெய்வானை சற்றே எரிச்சலுடன்.

பெருமாள் “அப்டி அவ என்ன பண்ணா மா..?”

சந்தனா “சொல்றேன்.. நீங்க நினைக்கிற மாதிரி திவி அவ்ளோ ஒன்னும் நல்லவ கிடையாது. இப்போ திவியும் சக்தியும் ஒண்ணா ஒரே ரூம்ல இருக்காங்க” என்றால் தெள்ளத்தெளிவாக. “என்ன பண்ண, திவிக்கு இந்த வயசு கோளாறு. ஆதி மாமா வேற படிப்பு முடிஞ்சு தான் எல்லாம் ன்னு சொல்லிட்டாங்க.  அவளுக்கு தேவை பணம். அதுக்கு என்ன வேணாலும் செய்வா.. “

அவ்வளவுதான் அங்கு அனைவரும் கத்தியே விட்டனர்.

தெய்வானையின் விரல்கள் அவளின் கன்னத்தை பதம் பார்த்து இருந்தது.

பெருமாள் “ஏ.. என்ன பண்ற.? அவ நம்ம மருமக.!” என்றவரை உஷ்ண பார்வை பார்த்தவர்,

“வாய் இருக்குன்னு என்ன வேனாலும் பேசுவியா.? இவ நம்ம மருமகளா.? என் மருமக எப்போவும் திவி தான். அவளுக்கு சமமா இவ நிக்க கூட தகுதி இல்ல.. என்ன வார்த்தை சொன்ன.? பணத்துக்காக என்ன வேணாலும் செய்வாளா.? கொன்றுவேன்.  அவள பத்தி பேச இங்க யாருக்கும் தகுதி கிடையாது.” என்று சீறினார்.

தேவ் அமைதியாக இருக்க, அவனை யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் ஆதி.

தெய்வானை “டேய் ஆதி. நீ என்ன டா பேசாம நிக்குற.? அவள போ சொல்லுடா.. என் மருமக பத்தி இப்படி பேசுறவ இனிமே என் கண் முன்னாடி வந்தா நான் மனுஷியா இருக்க மாட்டேன்..”

ஆதி அமைதியாக “ஆதாரம் இருக்கா.?” என்றான் ஒற்றை புருவம் உயர்த்தி.

சந்தனா “ஓ.. “என்றுவிட்டு அன்று தேவ் பாரதி கடத்தலில் திவி ஆதியிடம் பேசியதை சுப்ரியா காணொளி எடுத்து இருக்க, அதை காட்டியவள், இது மட்டும் இல்ல, அன்னைக்கு கூட, தேவ் ரூம் ல இருந்து வரா உன் பொண்டாட்டி. சக்தி  மாமா சக்தி மாமான்னு ரொம்ப தான் வழியிறா. இதுல இருந்தே தெரியல.. அவ அண்ணன் தம்பி எல்லாரையும் வளச்சி போட்டு இருக்கான்னு.. ? அவளே சொல்லி இருக்கா பாருங்க. பணத்துக்காக என்ன வேணாலும் செய்வேன் ன்னு.. அவளும் எவ்ளோ நாள் கல்யாணம் ஆகியும் அமைதியா இருப்பா.? ” என்று நாக்கில் நரம்பு இருப்பதை மறந்து பேசினாள்.

“ஆதி, தேவ், சக்தி.. என்னமோ கோகுல் தான் தப்பிச்சான். விட்டா எல்லாரையும் மடக்கி சொத்தை அடைய என்ன வேணாலும் செய்வா போல..”

அங்கு பெருத்த அமைதி தான் நிலவியது.

தெய்வானையால் அங்கு நடந்ததை ஏற்று கொள்ளவே முடியவில்லை. ‘இல்லை’ என்று அவர் மனது ஆணித்தரமாக மறுத்தது.

தேவ் ‘என்னதான் அண்ணி மேல கோவம் இருந்தாலும் அவங்க இப்படி செய்றவங்க கிடையாது’ என்று ஒருபுறம் துடிக்க,

ஆதியோ ‘தான் பேசியது எவ்வளவு பெரிய இக்கட்டில் சிக்க வைத்து உள்ளது’ என்று எண்ணிய குமைந்து போனான். ஆனால் அவனைக் கண்ட மற்றவர்களோ ஆதி திவியை சந்தேகம் கொள்கிறான் என்றே நினைத்தது..

கனவு தொடரும்..🌺🌺🌺🌺

கமெண்ட்ஸ் சொல்லிட்டு போங்க பா..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
7
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்