Loading

ஆட்சியர் கனவு 38 💞

ஆதி செய்து வைத்திருந்த செயலில் திவி அதிர்ந்தே விட்டாள்.

திவி “ஏய் என்னது இது.?”

ஆதி “பாத்தா தெரியல.? புக்ஸ் டி. உனக்கு சொல்லி கொடுக்க தான் எடுத்து வச்சிட்டு இருக்கேன்” என்றான் புத்தகங்களை ஆராய்ந்தபடி.

திவிக்கு தான் அயோ என்றானது.. ‘அவசரப்பட்டு வார்த்தையை விட்டுட்டோமோ. இவன் என்ன கம்யூனிகேஷன் புக்லாம் எடுத்து வச்சிட்டு இருக்கான்.?’ என்று எண்ணி கொண்டு இருந்தாள்.

ஆதி “என்ன அங்கேயே நின்னுட்ட.? வா வா.. ” என்று அவளை அமர வைத்தான்.

திவி “ஆதி… என்ன எல்லா புக்ஸும் இவ்ளோ பெருசா இருக்கு.?” என்று உதட்டை பிதுக்க,

ஆதி “மேனேஜ்மென்ட் புக்ஸ் வேற எப்டி இருக்கும்.. ” என்று கூறி, முதலில் தொலைத்தொடர்பு பற்றின பாடத்தை எடுத்தான்.

திவி என்னென்னவோ நினைத்து இருக்க, ஆதியின் அணுகுமுறை அவளை ஆச்சர்யத்தில் தான் ஆழ்த்தியது. இரண்டே மணி நேரத்தில் அனைத்தையும் எளிய முறையில் விளக்கிட, திவிக்கோ ‘எங்க இவன் கேள்வி கேட்பானோ.?’ என்ற பயம் தான் வந்தது.

ஆதி “என்ன ஓகே வா?” என்று கேட்க,

திவி “ம்ம்.. நெக்ஸ்ட் என்ன?” என்று கேட்டாள் ஆர்வமாக.

ஆதி “அடுத்து கொஞ்சம் ரெஸ்ட் டி.. என்னால முடியல” என்று அவன் அவள் தோளில் சாய்ந்து கொண்டான்.

திவி “டேய்.. ரெண்டு நாள்ல நீ தானே அந்த பிளான்ன முடிக்கணும்னு சொன்ன.? மறுபடியும் என்னால அடி வாங்க முடியாது டா.. ஒழுங்கா சொல்லி குடு” என்று கதறினாள்.

ஆதி “நான் ஏன் அடிச்சேன்னு உனக்கு தெரியாத.? சாரி டி.” என்று வருந்த,

திவி “ஏன் அடிச்சன்னு தெரியும்.. இருந்தாலும் வலிக்குது டா” என்றாள் முகத்தை சுருக்கியப்படி.

ஆதி புத்தகங்களை ஓரம் வைத்து விட்டு, அவளை ஒரு பக்கமாய் அணைத்தவாறு அமர, திவி “சார் என்ன செய்றீங்க.?” என்று கேட்டாள்.

ஆதி “அடிக்குற கை தான் அணைக்கும்னு சொல்லுவாங்க.. அதுனால” என்று அவள் கன்னம் நோக்கி குனிய,

திவி “அதுனால”

ஆதி{“அதுனால” என்று அவள் இதழ் நோக்கி குனிய, சரியாக அவனின் அலைபேசி அலறியது..

திவி நமட்டு சிரிப்புடன் “நான் பேலன்ஸ்அ படிக்குறேன்.. நீங்க பேசிட்டு வாங்க” என்று நகர்ந்தாள்.

ஆதி “நான் என் பொண்டாடிகூட ரொமான்ஸ் பண்ணா ஒன்னு என் தம்பிக்கு மூக்கு வேர்த்திடும் இல்ல இவ அண்ணனுக்கு மூக்கு வேர்த்திடும்.. பர்ஸ்ட் இந்த பசங்க கூட்டணியை ஒழிச்சாதான் நான் நிம்மதியா இருக்க முடியும்” என்று புலம்பியவாறே இணைப்பை இணைத்தான்.

ஆதி “சொல்லு டா”

சக்தி “டேய் அறிவு இருக்கா உனக்கு..? கேட்க ஆள் இல்லன்னு நினைச்சியா.? ஹான்.? நான் கூட இல்லன்னா என்ன வேணா பண்ணுவியா?” என்று பொரிந்து தள்ள,

ஆதி “டேய்.. டேய்.. டேய்.. கொஞ்சம் கேப் விடு டா.. என்னன்னு சொல்லலாமா நீ பாட்டுக்கு திட்டுற.? அப்டி நான் என்ன பன்னேன்?” என்றான் ஏகத்துக்கும் கடுப்பாகி..

சக்தி “அட நாயே.. எதுக்கு டா திவியை இன்னைக்கு சைட்ல அடிச்ச.?”

ஆதி “நான் என் பொண்டாட்டிய சைட் அடிப்பேன்.. உனக்கு என்ன டா.. இதுக்கு கூட உன்கிட்ட பர்மிஷன் வாங்கணுமோ.?”என்றிட,

சக்தி “செவிடா டா நீ.. நீ ஏன் சைட் அடிச்சன்னு கேட்கலை.. சந்தனா பேச்ச கேட்டு சைட்ல ஏன் திவியை அடிச்சன்னு கேட்டேன் டா.. பக்கி.. உனக்கு சந்தனா அவ்ளோ முக்கியமா போய்ட்டாளா.? அவ சொன்னான்னு என்ன ஏதுன்னு விசாரிக்காம அடிப்பியா.. நினைச்சது உனக்கு ஈஸியா கிடைச்சதுன்னு திவியை அடிப்பியா டா.? ” என்றான் பல்லை கடித்து கொண்டு.

ஆதி ” டேய் டேய்.. இரு டா.. நான் சொல்றத கேளு டா” என்று கூற

சக்தி “என்ன கேட்கணும்.. ஹான்.. என்னத்த கேட்க..? மதி சொல்லி எவ்ளோ பீல் பன்னான்னு தெரியுமா.? அப்போ திவி எப்டி பீல் பண்ணி இருப்பா.?

ஆதி தன் பொறுமையை இழக்கும் தருணம், திவி “ஹெலோ.. ஏன்.. ஏன் ரெண்டு பேரும் இப்டி சண்டை போடுறீங்க.?” என்று கேட்க,

சக்தி “திவி.. திவிமா.. அவன் உன்னை அடிச்சான்ல.. அதான் டா.. கல்யாணம் பண்ணா என்ன வேணாலும் பண்ணலாமா.. இதுலாம் ஒரு மேட்டர்ன்னு அடிச்சு இருக்கான்.. நான் அங்கே வந்து பேசிக்குறேன்” என்று கத்தினான்.

திவி “அண்ணா.. அவன் ஏன் என்ன அடிச்சான்னு எனக்கு தெரியும்… சும்மா சும்மா அடிக்க ஆதி என்ன லூஸா.? இல்ல அடி வாங்க நான் என்ன லூஸா.? சந்தனா நமக்கு எதிரா ஏதோ பிளான் பண்ணுறா ண்ணா.. அவளுக்கு தெரியும் ஆதி சின்ன விஷயத்துக்கு கோபம் படமாட்டான்னு.. அந்த பிராஜக்ட் சரியா வரலன்னா ஆதி கொஞ்சம் டென்ஷன் ஆவான்.. அதுவே அது சந்தனா மேல தப்புன்னா ஆதி கண்டிப்பா கோபம் படுவான்.. அந்த கோபத்தை அவ என் மேல திருப்பி விட்டு நான் கஷ்டப்படனும்னு நினைச்சா.. இது ஆதிக்கும் தெரியும்.. அவன் இதுக்கு அடிப்பான்னு எதிர்பார்த்தா.. அவள நம்ப வைக்க அவனும் அடிச்சான்.. நானும் வாங்கிகிட்டேன்.. ஆதியால எனக்கு எந்த பிரச்சனையும் வராது ண்ணா.. ஏன்னா அவன பத்தி எனக்கு தெரியும்” என்றாள் புன்னகை மாறாமல் தன்னவனின் முகத்தை பார்த்து கொண்டே..

சக்தி எதுவும் கூறாமல் “ஓகே நாம நேர்ல பேசிக்கலாம்” என்று இணைப்பினை துண்டித்தான்.

அவளின் புரிதலில் ஆதிக்கு தான் உள்ளெங்கும் பரவசம். அவனும் சந்தனாவை நம்பவைக்கும் பொருட்டே திவியை அறைந்தானே தவிர, வேறு எவ்வித காரணமும் இல்லை. திவி அலைபேசியை வைத்துவிட்டு தன்னவனை நோக்க, அவனோ அவளை தன் கையில் ஏந்தி இருந்தான்..

திவி “ஏய்.. என்.. என்ன பண்ற? ” என்று அவள் வார்த்தை வராமல் தடுமாற

ஆதி “பேசாம இரு டி” என்று தன் மடி மேல் அமர வைத்தான் தன்னவளை.

இரு விழிகளும் நோக்கிட, தன்னவளின் புரிதலில் அவள் மேல் இன்னமும் இன்னமும் காதல் பெருகியது அவள் மேல்..

அவள் முகத்தை தன் கையில் ஏந்தியவன் “நான்னா உனக்கு அவ்ளோ புடிக்குமா டி.?” என்று கேட்க,

திவி மறுத்து தலையசைக்க,  ஆதி தன் முகத்தை பாவம் போல் வைத்து கொண்டு “அப்போ புடிக்காதா..?” என்றான் சிறுப்பிள்ளையாக..

திவி அவனின் முகத்தை நிமிர்த்தி “உன்னை மட்டும் தான் டா அவ்ளோ பிடிக்கும்” என்றிட, ஆதி அவளின் நுதலில் தன் இதழ் முத்திரையை பதித்தான். இதழ் யுத்தம் தொடங்கும் சமயம்தனில் அவனின் அறைக்கதவை தேவ் தட்ட, ஆதியோ பயங்கர கடுப்பானான்.

ஆதி “இவனுங்க ரெண்டு பேரும் தான் டி எனக்கு வில்லனுங்க. கொஞ்சம் கூட நான் ரொமான்ஸ் பண்ணா போதும்.. எங்க இருந்து தான் எனக்குன்னு வராங்களோ” என்றான் தலையில் அடித்தபடி..

 

அவனின் செயலில் பெண்ணவள் சிரிக்க, “போ போய் உன் கொழுந்தனுக்கு என்ன வேணும்னு கேளு” என்று துரத்தி விட, திவி சிரித்துக்கொண்டே கதவை திறந்தாள்.

அங்கு தேவ் புத்தகங்களுடன் நின்று கொண்டு இருக்க, “சொல்லு டா என்ன இந்நேரத்துல.?” என்று திவி கேட்க,

தேவ் “அண்ணி.. எக்ஸாம்ஸ் வருது. எனக்கு சில சம் டௌப்ட்டா இருக்கு. சொல்லி தாங்க அண்ணி” என்று கேட்க, இளையவனின் கேள்வியில் தன்னவனை அவள் திரும்பி பார்க்க,

ஆதி “வா டா உள்ள வா” என்று தன் ஒப்புதலை தெரிவித்தான் அவன்.

திவி “எந்த சம் டா.?” என்று கேட்டு அதற்கான விளக்கத்தை அளிக்க,

தேவ்வும் அதை குறித்து கொண்டான். மணி ஒன்றை தொட, தேவ்விற்கோ உறக்கம் கண்ணை கட்டியது..

ஆதி “டேய்.. போதும்… இவ்ளோ நேரம் ஆகுது போய் தூங்கு” என்றிட, தமயனின் சொல்லிற்கு மதிப்பளித்து தன் அறைக்கு செல்லபோனான்.

ஆதி “இரு.. ஏன் இந்நேரம் வரை முழிச்சிட்டு இருக்க டா.? இவ்ளோ ஸ்ட்ரைன் பண்ணிலாம் படிக்க வேண்டாம்.. புரியுதா” என்றிட,

தேவ் சிறு சிரிப்புடன் “எப்போவும் சீக்கிரம் தூங்கிடுவேன் அண்ணா.. இன்னைக்கு ரொம்ப டௌப்ட்ஸ்.. அண்ணியையும் சரி உன்னையும் சரி பார்க்குறதே அதிசயமா இருக்கு.. எனக்கு முன்னாடி ரெண்டு பேரும் கிளம்பிடுறீங்க.. நான் தூங்குனத்துக்கு அப்ரோம் தான் வரீங்க..  அதான் இன்னைக்கு இவ்ளோ நேரம்” என்றான்.

திவி “இனிமே டௌப்ட்ன்னா காலைல சீக்கிரம் எந்திரிச்சு என்கிட்ட கேளு டா.. நைட் வேண்டாம்” என்றிட, அண்ணனின் பாதியானவளுக்கு சிறு தலையசைப்பை தந்தவன் “குட் நைட் அண்ணா” என்று விடைபெற்றான்.

ஆதியும் திவியும் உறக்கத்தை தழுவ, அடுத்த நாள் பொழுது பல கேள்விகளுடன் புலர்ந்தது..

சக்தி “டேய் மதி.. நீ சொல்றத வச்சு பாத்தா எனக்கும் உன்னோட கவி கொச்சின்ல தான் இருப்பாங்களோன்னு தோணுது டா..” என்று தன் சந்தேகத்தை முன் வைத்தான்.

மதி “இப்போவே போலாமா டா.. அங்க போய் பாக்கலாம்.. ப்ளீஸ் டா” என்றிட,

சக்தி “நீ வேண்டாம் டா.. நீ இங்கேயே இரு.. நீ வந்தா சந்தனாக்கு சந்தேகம் வந்திடும்.. சொன்னா கேளு” என்று சமாதானம் உரைக்க,

மதி “நீ இந்த அட்ரஸ் ல போய் பாரு டா.. இது சந்தனா கிட்ட இருந்து தான் எடுத்தேன்.. எனக்கு எப்படியாவது என் கவிய கண்டுபுடிச்சு குடுத்துடு டா” என்று அழுதான் மதி.

சக்தி அவனை அரவணைத்து “பீல் பண்ணாத டா.. நான் இருக்கேன். ஆதி இருக்கான்.. கண்டிப்பா அவங்கள கண்டுபிடிச்சிடலாம்” என்று சமாதானம் உரைத்து, கொச்சின் நோக்கி தன் பயணத்தை எடுத்து வைத்தான்.

தன் மகிழுந்தை ஒரு ஆதரவற்றோர் இல்லம் முன்பு நிறுத்தினான் சக்தி.

“ஆராணு அவடே.? எந்து வேணும்.?” என்று கேட்டுக்கொண்டே உள்ளே இருந்து வந்தார் ஒரு பெண்மணி..

சக்தி “சேச்சி.. எண்ட பேர் சக்தி.. ஞான் ஒரு பெண்குட்டியை தேடி வன்னிருக்குன்னு” என்று கூற,

சேச்சி “ஆராணு.?” என்றிட, தான் சேகரித்த விவரபட்டியலை அவருக்கு புரியும்படி கூறினான்.

சக்தி “அதான் ஈ பெண்குட்டி.. பேர் கவி.  ஞிங்கள் அவளை காணுன்னுண்டோ.?  ஞின்னகரியாம்.?”

சேச்சி சிறிது நேரம் அந்த புகைப்படத்தை சற்று உற்று நோக்கி விட்டு அவசர அவசரமாக “இல்லா.. எனக்கறியில்லா” என்றாள்.

சக்தி அவளை நம்பாத பார்வையுடன் “ஞான் அகத்துக்கே வரட்டே.?” என்றான்.

சேச்சி “புறத்தேன்னினுள்ளவர் அகத்தே வரருது” என்றாள்.

சக்தி “ஞான் போலீஸ்” என்ற ஒற்று சொல், பெண்ணவள் வாய்க்கு பூட்டிட்டுக்கொண்டது.

சக்தி உள்ளே செல்ல, அங்கு நடந்த கொடுமை அவனால் காண சகியவில்லை..

அத்தனை பெண் குழந்தைகளும் வன்முறையாய் பாலியல் கொடுமைக்கு ஆட்படுத்தி கொண்டு இருந்தனர்.. இதனை கண்ட சக்திக்கு தலையே சுற்றியது..

அந்த சேச்சி பயந்து அமைதியாய் நிற்க, உள்ளே தடிமாடாய் இரண்டு தடியன்கள் வந்தனர்..

“எந்தா சேச்சி.. ஆரு ஈ ஆளு.?” என்று கேட்டுக்கொண்டே வர,

சேச்சி “ஒரு ஐட்டம் நோக்கா இவட இடம் வரனுட்டு”

“ஹான்.. வரு வரு..நின்னலுக்கு இது என்னனனு வேணும்.?”

சக்தி “பேரு கவி.. ஆ பெண்குட்டியை தேடிட்டு வந்து.. ஆ பெண்குட்டி தான் ஐட்டம்.. ” என்று கூற,

“ஓ.. பக்சே ஆ பெண்குட்டியை ஞான் இன்னலே நாக்பூருக்கு ஆயிச்சு” என்றிட,

சக்தி ஒரு பணக்கட்டை அவனிடம் தூக்கி எறிந்து “ஞான் இவட வந்த விஷயத்தை ஆரிடமும் பரையருது” என்று எச்சரித்து விட்டு சென்றான்.

இவன் அங்கு இருந்து கிளம்பிய மறு நொடி, அங்கு போலீஸ் ரைட் நடந்து அனைத்து குழந்தைகளும் காப்பாற்றபட்டனர்.

காலையில் திவிக்கு அவசர அவசரமாக ஆதி ஊட்டிக்கொண்டு இருக்க, பாரதி அங்கு வந்தாள்.

பாரதி “என்ன மாமா, இன்னமும் அக்காக்கு ஊட்டி விடுறீங்க.? அக்கா என்ன சின்ன புள்ளையா.?”

திவி “உனக்கு என்ன டி.. என் புருஷன் எனக்கு ஊட்டி விடுறான்.. உனக்கு ஏன்.? என்ன இங்க திடீர் விஜயம்.?” என்றிட,

ஆதி “நான் தான் திவி வர சொன்னேன்.. அம்மாக்கு உடம்பு சரி இல்லல்ல.. நீயும் ஆபிஸ் போயிடுவ.. அதான் ” என்றிட, மருமகளாய் தன் கடமையை எண்ணி கவலை கொண்டாள் பெண்ணவள்.

திவி “நான் காலேஜ்க்கு லீவ் போட்டுடுறேன் ஆதி. அத்தையை நானே பாத்துக்குறேன்.” என்றாள் வருத்தம் தோய்ந்த குரலில்.

ஆதி “யது… அந்த பிராஜக்ட்ட பினிஷ் பண்ணனும் டி.. நீ இன்னைக்கு கண்டிப்பா ஆபிஸ் வரணும்” என்றிட,

திவி “இல்ல ஆதி..” என்று பேச வருகையில்,

தெய்வானை “நீ கிளம்பு திவி.. எனக்கு ஒன்னும் இல்ல.. சொன்னா அவனும் கேட்க மாட்டிங்குறான்.. நீ கிளம்பு மா..” என்று அவளை அனுப்பி வைப்பதற்குள் போதும் போதும் என்றானது.

தேவ் “என்ன டி முட்டக்கன்னி, அதிசயமா வந்து இருக்க.?”

பாரதி “ஹான்.. வீட்ல இருக்க போர் அடிச்சது. அதான் தேவாங்கு என்ன பண்ணுதுன்னு பாத்துட்டு போலாம்னு.?”

தேவ் “அதுக்கு நீ உன்னையே கண்ணாடில பாக்கலாம்ல.. ஏன் மெனக்கெட்டு இது வரை வந்து இருக்க.?” என்று அவளை வாரினான்.

பாரதி கடுப்பாகிட, அப்போது கோகுல் படி இறங்கி வந்தான்.

தெய்வானை “வா கோகுல்.. சீக்கிரம் சாப்டு போ..”

கோகுல் “இல்ல பெரிம்மா. டெக்ஸ்டைல்ல ஒர்க் இருக்கு.. அண்ணாவும் எவ்ளோ பார்ப்பாங்க.. நான் அங்கே போய் சாப்ட்டுகிறேன்”

பாரதி “என்ன மாமா, சாப்டமா போனா உடம்பு என்ன ஆகுறது..? சாப்பிட்டு போங்க” என்று வலுக்கட்டாயமாக அவனை அமர வைத்து உணவு பரிமாற, இங்கு தேவ்விற்கோ சொல்ல முடியாத ஏதோ ஒரு உணர்வு.

கோகுலும் சாப்பிட்டு கிளம்பி விட, பாரதி தெய்வானையுடன் சமையல் அறைக்கு சென்றாள்.

தேவ் “அம்மா நான் கிளம்புறேன்” என்றிட,

தெய்வானை “சாப்பிட்டு போ டா” என்று உள்ளே இருந்து குரல் கொடுக்க, பாரதி வெளியே வந்தாள்.

தேவ் “ஸ்பெஷல் க்ளாஸ்க்கு டைம் ஆகுது.. நான் கிளம்புறேன்” என்றிட,

பாரதி “எப்படியும் போய் சும்மா தான் வேடிக்கை பாக்க போற.. அதுவே கொட்டிக்கிட்டு போனா என்ன.? ஒழுங்கா சாப்பிட்டு போ எரும”

தேவ் “நானும் உனக்கு மாமா தானே.. மாமான்னு கூப்டு டி” என்று அவளின் முடியை இழுக்க,

பாரதி “தின்னுட்டு போ ன்னு சொன்னா மாமான்னு கூப்டுன்னு சொல்ற.. நீ என்னமோ பண்ணு மாமான்னுலாம் கூப்பிட முடியாது” என்று அவனின் முடியை பிடித்து இழுத்து உள்ளே ஓடிவிட்டாள்.

தன் இரு சக்கர வாகனத்தில் சென்ற கோகுல் நிறுத்திய இடம் சக்தியின் அலுவலகம்.

கோகுல் கேட்ட கேள்வியில் சக்தி உறைந்தே விட்டான்.

கனவு தொடரும்🌺🌺🌺…

கொஞ்சம் உங்க கமெண்ட்ஸ்அ சொல்லிட்டு போங்கோ.. அடுத்த எபி ஆன் தி வே…🌺🌺🌺🌺

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
8
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்