Loading

ஆட்சியர் கனவு – 31💕

மறுநாள் பொழுது புலர, திவிக்கு கால்கள் இன்னும் வீக்கமாகத்தான் இருந்தது. அதனைப் பொருட்படுத்தாமல் தன்னவனைக் காண ஆயுத்தமானாள்.

ஆதி அவளுக்கு பிடித்த பிளாக் அண்ட் வைட் காம்போவில் அலுவலகத்திற்கு தயாரானான். கிளம்பி வந்தவனை வலுக்கட்டாயமாக தெய்வானை உணவு அருந்திவிட்டு தான் அனுப்பினார். தன் அலுவலகத்திற்கு வந்தவன், திடீரென்று ஏற்பாடான மீட்டிங்கிற்கு சென்று விட்டான்.

ஆதியின் அலுவலகத்திற்கு தன் ஸ்கூட்டியில் விரைந்தாள் திவி. பார்க்கிங்கில் வண்டியை நிறுத்தியவள் ஆதியின் அலுவலகத்தை கண்டு விழி உயர்த்தினாள். இதற்கு முன் வந்தபோது அன்று இருந்த சூழ்நிலையால் அலுவலகத்தை அவள் சரியாக காணவில்லை.

“AD Group of Company”  என்ற பெயர் பலகையை கண்டு விழி விரித்தவள், “ப்பாஆஆ.. எவ்ளோ பெரிய பில்டிங்.. நம்மாளு செம கெத்து தான்.. இவ்ளோ பெரிய ஆஃபீஸ்ஸா.. இங்க தான் நான் பார்ட் டைம் வேலை பாக்கப் போறேனா.? ஓ.. திவி.. யூ சோ லக்கி.. இந்த பில்டிங்காகவே இங்க வேலைப் பார்க்கணும்” என்று தனக்குள் பேசிவிட்டு, உள்ளே நுழைந்தாள்.

நுழைந்தவள் மீண்டும் பிரமித்துப் போனாள். உள்ளே பார்க்கும் இடமெல்லாம் அழகிய வேலைப்பாடுகள் நிறைந்து இருந்தது. வரவேற்பாளினியிடம் சென்றவள், “எக்ஸ்க்யூஷ்மி.!” என்றாள்.

அங்கு இருந்த அனைவரும் ஃபார்மல் ஆடையில் வந்து இருக்க, திவியோ சற்று எளிமையாக வந்ததில், வரவேற்பாளினி இவளை ஒரு மாதிரியாக பார்த்து விட்டு “யெஸ்.. வாட் கேன் ஐ டூ ஃபார் யூ.?” என்று வினவினாள்.

திவி “யா.. ஐம் திவ்யதர்ஷினி. கேன் ஐ மீட் மிஸ்டர். ஆதி.?” என்றிட,

வரவேற்பாளினி ” சாரி.. பாடன்!” என்றாள்.

திவி”கேன் ஐ மீட் மிஸ்டர்.ஆதி. ஆதித்யா சரவணப்பெருமாள்?” என்று கேட்டாள் அழுத்தம் திருத்தமாக..

வரவேற்பாளினி “ஆர் யூ ரெஃபர்ஸ் டூ அவர் எம்.டி?” என்று கேள்வியாய் கேட்க,

திவி “ஹ்ம்.. யெஸ்.” என்றாள்.

வரவேற்பாளர்  சற்று யோசித்து விட்டு, “டூ யூ ஹேவ் அப்பாய்ன்மெண்ட் லெட்டர்.?” என்றிட,

திவி “நோ..” என்றாள். மனதிற்குள் ‘அடேய்.. லூசு..வர சொன்னீயே.. இவ்ளோ ப்ரோசிஜர் இருக்குன்னு சொன்னீயா டா.?’ என்று அவனை திட்டிக்கொண்டு இருந்தாள்.

வரவேற்பாளினி “சாரி மேம்.! அப்பாயின்மெண்ட் லெட்டர் இல்லாம சார்ர பாக்க முடியாது” என்றாள் திட்டவட்டமாக.

திவி “ஓ. காட்.. அவன் என்று சொல்ல வந்த நாக்கை கடித்துவிட்டு, மரியாதை நிமித்தமாக, அவர் தான் வர சொன்னாரு” என்றாள்.

வரவேற்பாளினி ” ஓகே மேம்.. உங்க நேம் அண்ட் கான்டாக்ட் நம்பர் இதுல ஃபில் பண்ணுங்க. சார் ஒரு மீட்டிங்ல இருக்காங்க..  சார்ரோட பி.ஏ. வந்த உடனே நான் பாக்க சொல்றேன்.. நீங்க வெய்ட் பண்ணுங்க..” என்றாள்.

திவி “ஓகே.. தாங்க் யூ..”என்று விட்டு, கதிரையில் சென்று அமர்ந்தாள். “ஹோ.. சார்க்கு ஏற்கனவே ஒரு பி.ஏ. இருக்காங்க போல.. இவனுக்கு எத்தனை பி.ஏ வேணும்.. வரட்டும் பேசிக்கலாம்” என்று பொறுமைக் காத்தாள்.

தன் அலைபேசியை எடுத்தவள் புலனத்தில் ஆதியிடம் குறுந்செய்தியைப் பகிர்ந்தாள். “ஓய்.. எங்க இருக்க? என்ன பண்ற.?”  எதிர்த்தகவல் தான் வந்தபாடு இல்லை.

முழுதாக இரண்டு மணிநேரம் கழித்து மீட்டிங் முடிந்து தன் கேபினுக்குள் வந்தான் பிசினஸ் மேக்னட் ஆதித்யா.  வந்தவன் தன் அலைபேசியை எடுத்திட தன்னவளிடம் வந்த செய்தியைப் பார்த்து குறுநகை புரிந்துவிட்டு பதிலளித்தான்.

ஆதி “நான் ஆஃபீஸ்ல தான் டி இருக்கேன்.. இப்போதான் மீட்டிங் முடிஞ்சது.. ஆமா நான் உன்னை வர சொன்னேன்ல.. எங்க டி சுத்திக்கிட்டு இருக்க ஹான்.?” என்று அனுப்பிட,

திவி”ஏன் டா கேட்க மாட்ட, நீ ஏன் கேட்க மாட்ட.? கால்வலியோட வந்து உனக்காக ரெண்டு மணி நேரம் ரிசப்ஷன்ல வெய்ட் பன்றேன் பாரு என்ன சொல்லணும்.. நான் சுத்திக்கிட்டு இருக்கேனா.?” என்று பொரிந்து தள்ள,

ஆதி தன் நாக்கை கடித்துவிட்டு, “வரவேண்டியது தான.. அங்க ஏன் வெய்ட் பண்ற.?”  என்றிட,

திவி “டேய்.. லூசுபயலே.. அப்பாய்ன்மெண்ட் லெட்டர் இல்லாம உன் ரிசப்ஷனிஸ்ட் உள்ளே விட மாட்டிங்குறாடா” என்று புலம்பினாள்.

சத்தமாக சிரித்த ஆதி “ஓகே.. இப்போ என் பி.ஏ. வருவா.. அவதான் உன்னை இன்டர்வியூ பண்ணுவா! ஓகே.. பீ ரெடி ஃபார் தட்” என்று அனுப்ப, திவி அதிர்ந்தாள்.

திவி “என்ன.. இன்டர்வியூவா.? நான் எதுவுமே பிரிப்பேர் பண்ணல டா.. பயமா இருக்கு” என்று கதற,

ஆதி மேலும் சிரித்துவிட்டு “நீ இன்டர்வியூ போற.. டாட்.! பை” என்று கூறி இணையத்தை முடுக்கினான்.

திவி “டேய்.. டேய்.. ” என்று கதறத்தான் முடிந்தது அவளால்.

அந்த ஏ.சியிலும் திவிக்கு வேர்த்து கொட்ட,  திவி ‘அய்யோ.. இப்போவே அடிவயித்துல என்னனென்னவோ பண்ணுதே.. இன்டர்வியூக்கு சர்டிபிகேட்லாம் வேணுமே.. நான் தான் கைவீசம்மா கைவீசு ஆபிஸ் போலாம் கைவீசுன்னு வெறும் கையை வீசிக்கிட்டுல வந்து இருக்கேன்.. பேசாம இங்க இருந்து எஸ் ஆயிடலாமா?’ என்று மனதிற்குள் கதறிக்கொண்டு இருந்தாள்.

மற்றொரு மனமோ “வேலை வேணும்னா இன்டர்வியூ அட்டெண்ட் பண்ணி தான் ஆகணும்.. இதுக்கு போய் பயப்புடுற.. பீ கான்ஃபிடன்ஸ்” என்று தைரியமூட்ட, ஒரு வித பயத்துடனே அமர்ந்து இருந்தாள்.

அப்போது நவ நாகரீக யுவதி முழங்கால் தெரியும் வரை ஸ்கர்ட்டும் மேல்சட்டையும் அணிந்து முகத்தில் அதீத ஒப்பனையுடன், அரை அடி ஹீல்ஸ் காலணி அணிந்து வந்தாள் சந்தனா என்ற பெயர் பேட்ச்சை தாங்கி.

அவளைப் பார்த்த உடனே திவியின் முகம் அஷ்டகோணாலாய் மாற, அவள் அருகே வந்தவள், “யூ ஆர்…?’ என்று நிறுத்திட,

திவி “ஐம் திவ்யதர்ஷினி..” என்றாள்

சந்தனா “ஹான். யெஸ்.. ஹாய் ஐம் சந்தனா.. சந்தனா ஆதித்யா” என்றாள்.

இதைக்கேட்ட திவி மயங்காத குறைதான்.

திவி அதிர்ந்து, “வா..வாட்.?” என்று புரியாது பார்க்க,

சந்தனா “என்ன வாட்..? ஐம் சந்தனா ஆதித்யா” என்றாள் தோளை குலுக்கியபடி.

திவி அதிர்ச்சி குறையாமல் “ஆதித்யா…?” என்று நிறுத்திட,

சந்தனா சிரித்துவிட்டு “ஹி இஸ் மை ஹஸ்பண்ட்.. ஃபுயூச்சர் ஹஸ்பண்ட்.. அண்ட் ஹி இஸ் தி எம்.டி ஆஃப் திஸ் கம்பெனி” என்றாள் அழுத்தம் திருத்தமாக..

அவ்வளவுதான் திவி சந்தனாவை கொலைவெறியில் பார்த்தாள்.

சந்தனா கூறியதைக் கேட்ட திவி, தான் கேட்டது உண்மையா என்று அதிர்ச்சியில் இருந்தாள்.

சந்தனா அவள் முன் சொடுக்கிட்டு “ஹே.. வாட் ஹாப்பெண்ட்.?” என்று கேட்டிட, ஏற்கனவே இருந்த குழப்பம், மேலும் அதிகரித்திட, திவியோ “என்ன டா நடக்குது இங்க..? அப்போ நான் யாரு.?” என்ற ரீதியில் அவளைப் பார்த்து, திட்ட வாயெடுக்க,

அவள் மனமோ “ஏய்.. ஏய்.. என்ன பண்ண போற.? திட்ட போறியா.? கொஞ்சம் யோசி.. இப்போ நீ திட்டுனா நீ ஆதியை சந்தேகப்படுற மாதிரி ஆகிடும்.. அதுமட்டும் இல்ல, இவ அப்படியே பிளேட்ட திருப்பிப் போட்டு ஆதி கிட்ட ஒன்னுக்கு ரெண்டா சொன்னா என்ன பண்ணுவ? சோ பீ பேஷன்ட்” என்று கூற,

சந்தனா அவளை உலுக்கி, “என்ன ஆச்சு.?” என்று மீண்டும் கேட்க,

திவி “ஹான்… அது.. அது.. சாரி.. என்னோட பியூச்சர் ஹஸ்பண்ட் நேம் கூட ஆதித்யா தான்” என்று இழுக்க,

சந்தனா “ஓ.. வாட் அ கோ இன்ஸிடன்ட்.. நமக்குள்ள என்ன ஒரு ஒற்றுமை பாத்தியா.. அதனால தான் இப்போவே அவர் கூட கனவா.?” என்று அவளை ஓட்ட,

திவி மனதில் அவளைக் கருவிக்கொண்டே, வெளியில் அசடு வழிந்தாள்.

சந்தனா ” ஓகே.. ஓகே.. எப்படி எம்.டிய தெரியும்?” என்று வினவ,

திவி ‘என் புருஷன எனக்குத் தெரியாதா.?’ என்று மனதில் நினைத்தவள், ” என் அண்ணனோட பிரண்ட் தான் ஆதி சார்.. பார்ட் டைம் ஜாப்க்கு கேட்டு இருந்தேன். அதான் இங்கேயே ஜாய்ண்ட் பண்ணிக்க வர சொன்னாரு ” என்றாள்.

சந்தனா “ஹோ.. சூப்பர்.. சால் வீ கோ ஃபார் ஆன் இன்டர்வியூ.?”

திவி “யா.. ஸ்யூர்” என்று நேர்க்காணலுக்கு சென்றனர்.

நேர்க்காணலில்  திவி கூறிய பதில்கள் சந்தனாவை ஈர்த்திட, முதல் பார்வையிலேயே சந்தனாவிற்கு திவியை பிடித்து விட்டது.

சந்தனா “ஐம் இம்ப்ரெஸ்ட்” என்று கூற,

திவி ‘உன்னையை இம்ப்ரெஸ் பண்ணி நான் என்னப் பண்ணப்போறேன்..? போடி இவளே.’ என்று நினைத்தாலும், வெளியில் சிரித்துக் கொண்டே “தேங்க் யூ மேம்” என்று கூறினாள்.

சந்தனா “ஹே.. ஜஸ்ட் கால் மீ சந்தனா.. ஓகே.? சால் வீ மீட் எம்.டி.?”

திவி’இதற்கு தானே ஆசைப்பட்டாய் திவி..! அங்க போய் அந்த எருமை மாட பாத்துக்குறேன்’ என்று நினைத்து விட்டு, சந்தனாவை நோக்கி சரியென தலையசைத்தாள்.

சந்தனா அங்கு வேலை செய்த ஒருவரிடம் திவிக்கு அப்பாயின்ட்மெண்ட் ஆர்டரை டைப் செய்யுமாறு பணித்து விட்டு,

என் காதல் சொல்ல நேரம் இல்லை

உன் காதல் சொல்ல தேவை இல்லை

நம் காதல் சொல்ல வார்த்தை இல்லை

உன்னை மறைத்தாலும் மறையாதடி

உன் கையில் சேர ஏங்கவில்லை

உன் தோளில் சாய ஆசை இல்லை

நீ போன பின்பு சோகம் இல்லை

என்று பொய் சொல்ல தெரியாதடி

உன் அழகாலே உன் அழகாலே

என் வெயில் காலம் அது மழை காலம்

உன் கனவாலே உன் கனவாலே

மனம் அலைபாயும் மெல்ல குடை சாயும்..

என்ற பாடலை பாடியவாரே சென்றாள்.

அதைக்கேட்ட திவியும் பின்னே சென்றாள் கடுப்பாக..

ஆதி முக்கியமாக தன் கணினியில் வேலை செய்து கொண்டு இருக்க, “ஹாய்.! ஆதி பேபி.!” என்று கூறியவாறே, கதவைத் திறந்து உள்ளே சென்றாள்.

ஆதி கணினியில் இருந்து முகத்தை எடுக்காமல் “ஹாய்.. சந்து.. கம்.!” என்று கூறியவன், அவள் பின்னே திவி வர முகம் தெளஷண்ட் வாட் பல்ப் போல மின்ன, திவி முறைத்த முறைப்பில், பீஸ் போன பல்ப் ஆக மாறியது..

“இவ ஏன் இப்படி இருக்கா.? ” என்று யோசனையில் இருக்க, சந்தனா கூறிய வார்த்தையில் திவி ருத்ரகாளியாய் மாற, ஆதியோ தன் விலோசனங்கள் வெளியே வந்து விழுந்திடும் அளவுக்கு விழித்தான்.

சந்தனா “ஓய் பேபி.. யுவர் சிஸ்டர் வெரி ஸ்மார்ட் அண்ட் டேலண்ட் பர்சன் டூ!” என்றிட, திவியை பற்றி சொல்லவா வேண்டும்.. கட்டுக்கடங்கா கோவத்தில் இருந்தாள்.. ஆதியோ சந்தனா கூறியதில் திவியை நோக்கிட அவள் இருந்த கோவத்தில் ஆதி என்ன செய்வது என்று புரியாமல் இருதலைக்கொல்லியாக தவித்துக் கொண்டு இருந்தான்.

திவி இப்போது ஆத்திரத்தை அடக்க இயலாமல் “ஹலோ! நான் ஒன்னும் இவருக்கு தங்கச்சி இல்ல.. இவரோட பிரண்ட் சக்திக்கு தான் தங்கச்சி..” என்று பல்லைக் கடித்துக் கொண்டு கூற,

ஆதி இவளின் கோவத்தில் சிவந்த அவள் நாசியில் ஈர்க்கப்பட்டு வைத்தக் கண் வாங்கிடாமல் அவளையே பார்த்துக்கொண்டு இருந்தான்.

சந்தனா “ஹே.. சோ வாட்.? பிரண்டோட தங்கச்சி இவனுக்கும் தங்கச்சி தான.?” என ஆதியைப் பார்த்துக்கூற,

ஆதியோ திவியேக் கூறட்டும் என அவளை ரசிக்க, திவியோ ஆதியை மனதில் வறுத்துக்கொண்டு இருந்தாள் ‘நிக்கிறான் பாரு.. தடிமாடு.. வாயை தொறந்து சொல்லலாம்ல.. இவ என்னோட பியான்சின்னு.. அட்லீஸ்ட் என் பிரண்ட்டுன்னாவது சொல்லலாம்ல.. எருமை’ என்று திட்டிக்கொண்டு இருந்தாள்.

திவி சந்தனா கூறியதற்கு பதில் கூறாமல், ஆதியை நோக்கி, “ஓகே சார்.! தான்க் யூ சோ மச் ஃபார் திஸ் ஆஃபர்சுனிட்டி சார்.. அண்ட் நான் ஒன் வீக் கழிச்சு ஜாய்ண்ட் பண்ணிக்குறேன் சார்” என்று சார்க்கு அழுத்தம் கொடுத்து பேச, ஆதி புரிந்துகொண்டான் அவளின் நிலையையும், கோபத்தையும்..

சந்தனா “ஏன் ஒன் வீக் கழிச்சு?” என்றிட,

திவி “எனக்கும் என் ஆதிக்கும் ஒன் வீக்ல மேரேஜ்.. சோ மேரேஜ்க்கு அப்ரோம் ஜாய்ண்ட் பண்ணிக்கிறேன் சந்தனா” என்றாள் ஆதியைப் பார்த்தவாறே..

சந்தனா “வாவ்.. சூப்பர் திவி.. பேபி உனக்கு தெரியுமா? இவங்க லவ் மேரேஜாமா.. அவங்களோட உட்பி நேம் கூட ஆதித்யா தானா.. “என்று கூற,

ஆதிக்கோ என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. “திவிக்கு எவ்வளவு நேரம் எடுத்துவிடும் இவன்தான் தான் திருமணம் செய்து கொள்பவன் என்று கூற” என்று நினைத்தவனுக்கு தலை வேறு வலி கொடுத்தது.

சந்தனா மேலும் ஆதியின் அருகில் சென்று “நாம எப்போ பேபி கல்யாணம் செஞ்சிக்க போறோம்.?” என்று கேட்டதில், திவி அடங்கா ஆத்திரத்துடன் வெளியில் சென்று விட்டாள். ஆதியோ அவள் கூறியதில் வெகுவாக அதிர்ந்தான்.

ஆதி “என்ன .? என்ன உளற சந்தனா.?” என்று புருவம் உயர்த்தி கோபத்துடன் கேட்டிட,

சந்தனா “யெஸ் பேபி.. இந்த மென்லினஸ்.! இந்த அதிகாரம்.. இது.. இது.. இதில தான் டா நான் விழுந்தேன்.. காலேஜ்ல இருந்தே உன்னை லவ் பன்றேன் ஆதி.. யெஸ்.. ஐம்.. ஐம் இன் லவ் வித் யூ” என்று காதல் வசனம் பேசிட,

ஆதி பயங்கர கோபத்தில் சந்தனாவை எரித்துவிடும் பார்வை பார்த்துவிட்டு திவியைத் தேடி வெளியில் வந்தான்.

திவியோ தன் ஸ்கூட்டியில் அமர்ந்தவாறு முன்பக்கம் தலைவைத்து இருக்க, ஆதியோ வேகவேகமாக அவளை நெருங்கினான்.

ஆதி “யது..” என்றிட, மெதுவாக தன் தலையை நிமிர்த்திப் பார்த்தவளின் கண்கள் கண்ணீரை அடக்கியதில் சிவந்து இருக்க, ஆதி நொறுங்கி போனான்.. அவன் மீண்டும் ஏதோ கூற வர,

திவி “கார் கீ எங்க.?” என்று கேட்டாள்.

ஆதி “என்கிட்ட தான் இருக்கு யது.” என்று அதனை எடுக்க,

திவி “காரை எடு” என்றாள் கட்டளையாக.

ஆதி அவள் கூறியதில் வேகவேகமாக காரை எடுத்தவன், அவள் அருகில் நிறுத்த, அவள் அமைதியாக முன் சீட்டில் அமர்ந்து கொண்டாள்.

அமர்ந்தவள் “போ ” என்றிட, ஆதி மறுப்பேதும் கூறாமல் மகிழுந்தை இயக்கினான்.

அவன் வெளியேறிய நொடிதனில் சந்தனா குழப்பமாய் வர, இறுதியில் அவள் கண்டது ஆதியின் கார் கேட்டை தாண்டுவதை தான். உடனே ஆதியை அழைக்க, ஆதி அவளின் அழைப்பை எடுக்கவே இல்லை. சிறிது தூரம் மௌனமாய் கடந்திட,

திவி “வண்டியை நிறுத்து” என்றாள் மெதுவாக, ஆனால் அதில் அத்துணை கோபம்..

ஆதியும் நிறுத்திட, திவி “போனை எடு” என்றாள். அவனும் சாவி கொடுத்த பொம்மை போல் அவள் கூறியதை மறுக்காமல் செய்தான்.

சரியாக அப்போது சந்தனா மீண்டும் அழைத்திட, திவி “அட்டெண்ட் பண்ணி பேசு” என்று கூறினாள்.

ஆதி அவளை புரியாமல் பார்க்க, திவி “அட்டெண்ட் பண்ணி பேசுன்னு சொன்னேன்” என்று அழுத்தமாய் கூறினாள்.

ஆதி அழைப்பை ஏற்று ஸ்பீக்கரில் போட, சந்தனா “ஹோ.. காட்.. இப்போவாவது அட்டெண்ட் பண்ணியே.. நான் இப்போ என்ன சொன்னேன்னு நீ எதுக்கும் ரெஸ்பான்ஸ் பண்ணாம போன ஆதி.? அப்படி என்ன நான் தப்பா கேட்டேன்? உன்னை லவ் பன்றேன்னு சொன்னது தப்பா.? என்னை உனக்கு பிடிக்கலையா ஆதி பேபி ?” என்று கேள்வியாய் அடுக்கிக்கொண்டே செல்ல,

பாவம் ஆதி திவியையே பார்த்துக் கொண்டு இருந்தான். அவன் மனதில் இதை எப்படி கையாள்வது என்று புரியாமல் இருக்க, திவி தன்னை சந்தேகப்படுகிறாள் என்று எண்ணியவன் மனதளவில் ஒடிந்து போனான்.

அவன் பதில் கூறாமல் இருக்க, திவியோ கண்களை மூடி அமைதியாகவே இருந்தாள். அந்த அமைதியை கலைத்து பேசினாள், சந்தனா “நான் கேட்கேறேன்ல.. சொல்லு ஆதி.. ஏன் என்னை பிடிக்கலையா.? நான் நல்லா இல்லையா ஆதி.? என்று இயலாமையுடன் கேட்டு பின், “நல்லா கேட்டுக்கோ.. இப்போ நீ என்னை அவாய்ட் பண்ணிட்டு வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைச்ச..? உன்னை ஒன்னும் பண்ண மாட்டேன்.. அவள நான் சும்மா விட மாட்டேன்.. நியாபகம் வச்சுக்கோ” என்று மிரட்டிட,

அதில் திவிக்கு சிரிப்பு வந்துவிட, ஆதியைப் பார்த்தாள். சந்தனா இறுதியாக கூறிய வார்த்தையில் ஆணின் சினம் மேலும் துளிர்க்க, “நான் இப்போ என் வெய்ஃப் கூட இருக்கேன்.. உன்னால முடிஞ்சத பாத்துக்கோ” என்று அழைப்பை துண்டித்தான்.

அவன் கூறிய பதிலில் திவிக்கோ மேலும் புன்னகை வர, சந்தனாவோ கோபத்தின் உச்சிக்கே சென்றாள்.

சந்தனா மீண்டும் ஆதிக்கு அழைக்க, இம்முறை அழைப்பை ஏற்றது ஆதியின் யதுவே..

திவி “ஹலோ.. சொல்லுங்க.” என்று மென்மையாக கேட்க,

சந்தனா “ஏய்.. யாரு டி நீ? ஆதி போனை நீ எடுக்குற.?” என்று கத்த,

திவி “நானா.. நான் யது.. ஆதியோட வைஃப்” என்றாள் கர்வத்துடன்..

சந்தனா “வாட்.? என்ன காமெடி பண்றியா.? எவ்ளோ வாங்குன.? அவன் கிட்ட இந்த டயலாக்க சொல்ல.?” என்று நக்கலுடன் கேட்க,

திவிக்கு இதில் கோபம் வந்தாலும் “எவ்ளோ வாங்குனேன்.? என்று இழுத்து, கம்மி தான்.. ஒரே ஒரு மஞ்ச கயிறு.. அதான் இவ்ளோ பேசுறேன்” என்றாள் திமிராக.

அதில் எரிச்சலடைந்த சந்தனா “ஏய்.. அவன் என் ஆதி” என்று கத்த,

திவி “ஏய்.. கத்தாத.. காது கொய்ங்க்குது.. இரு.. இரு..” என்று விட்டு, ஆதியின் புறம் திரும்பி அவன் முகம் பற்றி, அப்படி இப்படி திருப்பினாள். மீண்டும் போனில் “இல்லையே, ஆதி உடம்புல எங்கேயும் உன் பேர் இல்லையே..” என்று நக்கலா தொனியில் கூற,

சந்தனா மீண்டும் கத்தி, “ஏய்.. பிட்ச்” என்று கூற,

திவி “நானா..? அப்போ நீ யாரு?.. அவன் என் ஆதி ” என்றாள் திமிராக.

சந்தனா “அப்போ உன் பேர் மட்டும் இருக்கா.?” என்று நக்கலாக கேட்டிட,

திவி ஆதியின் நெஞ்சில் கைவைத்து, “ஓ.. இருக்கே.. அது என் ஆதிக்கும் தெரியும்” என்று கூற, ஆதி தான் அவள் செய்கையில் வெட்கி போனான்.. அவன் அப்படியே திவி கை மேல் தன் கையை வைத்துக்கொள்ள, திவி அதை கண்டுகொள்ளாமல் சந்தனாவிடம் பேசுவதிலேயே குறியாக இருந்தாள்.

சந்தனா”ஏய்..!” என்று மீண்டும் கத்தினாள்.

திவி “ப்ச்.. ஏய்க்கு அடுத்து பி.. இதுக்கூடவா தெரியாது.. இங்க பாரு சந்து மா.. நீ ரொம்ப டிப்ரஷன் அண்ட் கன்பியூஷன்ல இருக்க. சோ உன் உடம்புல ஹீட் அதிகமாகிடுச்சு.. ஒரு ஃபிரீ அட்வைஸ் கேட்டுக்கோ.. ஒரு எலுமிச்சம்பழம் வாங்கி உச்சந்தலையில நல்லா தேய்.. யூ ஃபீல் பெட்டர்..” என்று கேலியாக கூறி விட்டு, அண்ட் ஹீ இஸ் மைன் ஆல்வேஸ்.. மைண்ட் இட்” என்று கூறி இணைப்பைத் துண்டித்தாள்.

ஆதிக்கு ஒரு புறம் மகிழ்ச்சியாக இருக்க, இன்னும் அவனவள் தன்னிடம் பேசவில்லை என்று வருந்தி “யது” என்று அழைத்தான் திவியை..

அவ்வளவு தான்.. திவிக்கு வந்ததே கோபம், அவன் நெஞ்சில் இருந்த அவளின் கை இப்போது ஆதியின் கன்னத்தில் இருந்தது பளார் என்ற சத்தத்துடன்..

ஆதி மீண்டும் “யது” என்றிட, மறுகன்னத்தில் மற்றொன்று.. அவள் மாறி மாறி இருகன்னங்களையும் சிவக்க வைக்க ஆதி எதுவும் பேசாமல் அமைதியாக அறைகளை வாங்கி கொண்டவன், அவளின் கைகளை பிடித்துக்கொண்டு “ஏய்.. வலிக்குதுடி” என்றான் பாவமாக..

திவி “வலிக்கட்டும்.. நல்லா வலிக்கட்டும்.. ஏன்டா நீ இன்டர்வியூ எடுக்க மாட்டியா.? ஹான்.? வந்த உடனே என்னத் தெரியுமா சொன்னா அவ.? சந்தனா ஆதித்யாவாம்.. ஹீ இஸ் மை ஹஸ்பண்ட்.. ஃபியூச்சர் ஹஸ்பண்ட்..ம்ம்ம்… அப்போ நான் யாருடா.? ஹான்? நான் யாரு.? எப்படி வழியுறா. அவ? பேபியாம் பேபி.. இந்த அறை அவளுக்கு விழ வேண்டியது.. நீ என்ன சொன்ன ஹான்.? சந்து வா.. சந்து..? ” என்று மேலும் அடிக்க,

அவன் “ஏய்.. ஏய்..” என்று அலற, “அப்ரோம் சார் அப்படியே அவ என்னை தங்கச்சின்னு   சொன்னப்போ கூட அமைதியா இருக்கீங்க இல்ல… ஏன், சொல்ல மாட்ட நீ அவ என் வைஃப்ன்னு.? அதவிட்டுட்டு என் மூஞ்ச பாக்குற.. என் மூஞ்சுல என்ன படமா ஓடுது ஹான்.?” என்று அவனிடம் கத்த,

ஆதி அவளின் இரு கைகளையும் பிடித்து கொண்டு, அவள் அருகில் நெருக்கமாக சென்று “என் குல்பி அவ்ளோ அழகு” என்றிட, அவனின் செயலும் அருகினில் அவனது சூடான மூச்சு காற்றும் பெண்ணவளின் தேகத்தை சிலிர்க்க வைக்க, திவிக்கோ உள்ளுக்குள் ஏதேதோ நடக்க, கடினப்பட்டு தன்னை ஒரு நிலைக்கு கொண்டுவரவே பிரம்மபிரயத்தனப்பட்டாள் அலரவள்.

அவனை தள்ளிவிட்டு, “டேய்.. பேச்ச மாத்தாத.. நான் இப்போ உன் மேல கோபமா இருக்கேன்” என்றாள் அவனிடம் இருந்து பார்வையை விளக்கி.

ஆதியோ “ஆஹான்… அப்படியா குட்டச்சி ஓகே! ஓகே!” என்று சிறுபிள்ளை போல் வாயில் விரல் வைக்க, அவன் செயலில் திவிக்கு சிரிப்பு வர, கடினப்பட்டு அடக்கிக்கொண்டவள், அவனை முடிந்தவரை முறைத்தாள்.

பின் திவி காரைவிட்டு வெளியில் இறங்கி நின்றாள். ஆதியும் அவளருகில் நிற்க, இப்போது திவி சீரியஸ்ஸாகவே கேட்டாள் ஆதியிடம் “ஏன் நீ அவகிட்ட சொல்லல” என்று.

ஆதி அவளின் கைவிரல்களுக்கு இடையில் தன் விரல்களை கோர்த்து “யது..  சத்தியமா இந்த சுவிட்சுவேசன்ன எப்படி ஹாண்டில் பண்றதுன்னு தெரியல டி.. அதான் சைலண்ட்ஆ இருந்துட்டேன்” என்றான் பாவமாக.

திவி அவன் கைவிரல்களுக்குள் இருந்த தன் கைவிரல்களால் அழுத்தம் கொடுத்து, “எல்லா நேரத்துலயும் அமைதியா இருக்குறது சரி இல்ல தியா.. பேசவேண்டிய நேரத்துல அமைதியா இருக்குறதும் ஆபத்து தான் தியா” என்றவளின் கூற்றில் அவன் கூறியிருக்க வேண்டும் என்ற கருத்து ஆழமாய் இருந்தது.

ஆதி பதில் ஏதும் கூறாமல் இருக்க, திவி”கிளம்பலாம்” என்றாள் அவனை பாராது.

தன்னவளின் பாராமுகம் தனக்குள் வலியை ஏற்படுத்திட, அமைதியாக மகிழுந்தை செலுத்தினான் தன் அலுவலகம் நோக்கி..

யதுவிடம் பேசிவிட்டு போனை வைத்த சந்தனா வெறிப்பிடித்தவள் போல் தன் மகிழுந்தை ஓட்டியவள் நிறுத்தியது அவளின் வீட்டின் முன்னாள். உள்ளே சென்றவள் தன் கைக்கு கிடைத்த பொருட்களையெல்லாம் தூக்கி போட்டு உடைக்க, அங்கு பணிபுரியும் பணியாட்கள் இந்த செயலில் யாருக்கோ அழைப்பு விடுத்து கூற, எண்ணி பத்தாவது நிமிடத்தில் அங்கு இருந்தார் ராஜரத்தினம் சந்தனாவின் தந்தை..

உள்ளே வந்த ரத்தினம் தன் மூத்த மகளின் நிலையைக் கண்டு பதறி அவளிடம் சென்றார். “சந்து மா” என்று மென்மையாய் அழைத்திட, “எனக்கு அவன் வேணும்.. எனக்கு ஆதி வேணும்… நீங்க என்ன பண்ணுவீங்க. ஏது பண்ணுவீங்க எனக்கு தெரியாது..? அவன் பொண்டாட்டி உயிரோட இருக்க கூடாது.. இந்த ஜென்மத்துல அவனுக்கு பொண்டாட்டின்னா அது இந்த சந்தனா மட்டும் தான்”. என்று அலறினாள்.

ரத்தினம் “டேய்.. அவனுக்கு இன்னும் கல்யாணம் ஆகல சந்து மா.. ரிலாக்ஸ்.. அவன் உனக்கு தான்.. அப்பா சொல்றேன்ல.. இந்தா இந்த மாத்திரை போடு” என்று கொடுக்க,

சந்தனா “நான் என்ன பைத்தியமா… ஆஆஆஆ… வேணும் எனக்கு ஆதி தான் வேணும்” என்று அங்கு இருந்த பொருட்களை மீண்டும் தூக்கி போட்டு உடைக்க,

ரத்தினம் அவள் அறியாது வேறு வழியும் இன்றி, தான் கொண்டு வந்த ஊசியினை அவளுக்கு செலுத்தினார். “எனக்கு ஆதி வேணும்… ” என்று முனகியவாறே தன் தந்தை மேல் விழுந்தாள் சந்தனா.

அவளை மெதுவாக படுக்கையில் கிடத்தி போர்வை போரத்தி விட்டார் ரத்தினம்.  தன் மகள்களிடம் மட்டுமே இவ்வாறு தன் மென்மை முகத்தை காட்டிடும் ராஜரத்தினம், வெளியில் அரசியல்வாதியாகவும், மறைமுக தொழிலதிபராகவும், அண்டர்கிறவுண்ட் மாஃபியாயாகவும் வலம் வருகிறார்.

 

 

தன் அலுவலகத்தில் வண்டியை நிறுத்தினான் ஆதி. வரும் வழியில் இருவருக்கும் இடையில் மௌனமே மொழியாக இருக்க, அவன் பேசட்டும் என்று அவளும், அவள் பேசட்டும் என்று அவனும் வர, காலம் நான் பேசுகிறேன் என்று கூறி தன் கடமையை செவ்வனே செய்தது.

திவி இறங்கி எதுவும் கூறாமல், தன் ஸ்கூட்டி அருகே செல்ல, ஆதியும் அவள் பின்னே சென்றான்.

ஆதி”தர்ஷினி….”

திவி திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு தன் வண்டியை இயக்க, ஆதி “ஏய்… பேசு டி.. அதான் அவ்ளோ அடி அடிச்சல.. இன்னும் நாலு அடி கூட சேத்து அடி.. பேசாமா மட்டும் இருக்காத” என்று கெஞ்ச,

திவி எதுவும் காதில் வாங்காமல் “எனக்கு டைம் ஆச்சு.. பை” என்று கூறி சென்றுவிட்டாள்.

அவளின் பாராமுகமும், அலட்சிய பேச்சும் மேலும் தனக்குள் வலியை கொடுப்பதை உணர்ந்த ஆதி ஏதும் கூறாமல், தன் இல்லம் நோக்கி பயணித்தான்….

கனவு தொடரும்🌺🌺🌺🌺🌺….

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
5
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்