Loading

ஆட்சியர் கனவு 26 💞

ஆதியிடம் அழைப்பு வந்ததும் திவியின் மனதில் பதற்றம் கூடியது. அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் பேசினாள்.

திவி”சொல்லு ஆதி..”

ஆதி”யது… “

திவி”ம்ம் சொல்லு டா..”

ஆதி”தேவ்.. பாரதி..”என்று இறுகிய குரலுடன் கூற,

திவி மேலும் பதற்றம் ஆனாள்.

“அவங்களுக்கு என்ன ஆச்சு? சொல்லு ஆதி..”

ஆதி”அவங்கள யாரோ கடத்திட்டாங்க யது.. சீக்கிரம் வா..” என்றான் இறுகிய குரலில்.

திவி எதுவும் கூறாமல் மனதை நிலைப்படுத்தி கொள்ள முயன்று அதில் வெற்றியும் கண்டாள்.

துரிதமாக செயல்பட்டவள் உடனே சக்திக்கு அழைத்து அனைத்தும் கூறி ஆதியின் அலுவலகத்திற்கு சென்றாள்.  திவி மறுத்தும் உடன் விஷ்ணு, ரவீணா, சுப்ரியா சென்றனர்.

 

 

ஒரு அறையில் தேவ்வும் பாரதியும் கை வாய் கட்டப்பட்டு இருக்க, முதலில் கண் விழித்தது பாரதி தான்.

பாரதி “நாம ஸ்கூல்ல தான இருந்தோம், இங்க எப்டி வந்தோம்.? இது யாரு?” என்று கண்ணை கடினப்பட்டு திறந்து பார்த்தவள் அதிர்ந்தாள். ‘இந்த எருமையையும் எதுக்கு கடத்தனும்.? எல்லாம் இவனால தான் இருக்கும். எவன் கிட்டயாவது வம்பு இழுத்து இருப்பான். அதான் தட்டி தூக்கிட்டாங்க போல’ என்று எண்ணியவள், ‘நம்மல எதுக்கு கிட்ணாப் பண்ணி இருக்காங்க.? நாமலாம் அவ்ளோ வொர்த் இல்லயே’ என்று யோசித்து கொண்டு இருந்தாள்.

இவள் யோசனையில் இருக்க, தேவ்வும் கண் விழித்தான். இருவரும் முதலில் எதை எதையோ முயற்சி செய்து தன் வாயில் உள்ள பிளஸ்திரியை எடுத்தனர். எடுத்த அடுத்த நொடி,

தேவ்”ஏய், முட்டக்கண்ணி.. என்ன டி பண்ணி தொலைச்ச.? யார் கிட்ட ஒரண்டை இழுத்த.? உன்கூட இருக்க பாவத்துக்கு என்னையும் சேத்து கடத்திட்டாங்க. அயோ கடவுளே.! அன்னைக்கே சொன்னேனே. நான் சொன்னேனே.. இவ கூடலாம் கூட்டு சேர வைக்காதன்னு..” என்று தன் போக்கில் புலம்ப, பாரதி கடுப்பானாள்.

பாரதி “நீ என்ன வம்பு இழுத்த மாதிரி வேற யாரை வம்பு பன்ணியோ யாருக்கு தெரியும்.? உன்கூட சேந்து ஒரே ஒரு தப்பு பன்னேன். அதுக்கு இன்னும் என்னலாம் நான் அனுபவிக்கணுமோ தெரியல..” என்று சண்டை இட,

தேவ் “ஏய், சும்மா சும்மா என்ன சொல்லாத. நீ சொன்னதுனால தான் நான் அவன அடிச்சேன்.. அதுக்கு அவன் கடத்துவான்னு எனக்கு எப்டி தெரியும்.?”

பாரதி “நீ என்னமோ பன்னு. ஆனா, சீக்கிரம் என்ன காப்பாத்து டா. முடியல.. ஒரே புழுக்கமா இருக்கு..”

தேவ் “ஆமா இவ பெரிய மைசூர் மகாராணி.. இவங்கள ஆல் இந்தியா டூர் கூட்டிட்டு வந்து இருக்கோம். புழுக்கமா இருக்காம்.. ஏன் டி கடுப்ப கிளப்புற.? கொஞ்சமாவது உன் இல்லாத மூளையை யூஸ் பண்ணு.. என்னையும் சேத்து தான் கடத்திட்டு வந்து இருக்காங்க..”

பாரதி “உனக்கு மட்டும் இருக்கா.. எனக்கு இல்லன்னு சொல்ற.. போடா போண்டா மூக்கா..”

தேவ் “ஏய்.. எதை பத்தி வேணா பேசு.. ஆனா என் மூக்கை பத்தி பேசாத.. அப்ரோம் உன் முட்டக்கண்ண நொண்டி ஆம்லெட் போட்ருவேன்.. “

பாரதி “கருமம்.. என்ன டேஸ்டோ உனக்கு.. “

தேவ் “ம்ம் ஆமா.. எனக்கு டேஸ்ட் இல்ல தான்.. உன் முட்டக்கண்ண விட, ரோட்டு கடை ஆம்லெட் நல்லா இருக்கும் தெரியுமா.?”

பாரதி”டேய், லூசு.. இப்போ எதுக்கு டா ஆம்லெட்ட நியாபகம் படுத்துற.? ஆல்ரெடி இங்க பசி உயிர் போகுது.” என்று சிணுங்க..

அப்போது யாரோ வரும் அரவம் கேட்டது.

தேவ்”ஏய் அமைதியா இரு.. நம்மல கடத்துனவங்க வராங்க போல.. உஸ்.. உஸ்”

பாரதி”ச்சு..ச்சு.. வந்தா போய்ட்டு வாடா எருமை.. அத விட்டுட்டு உஸ் உஸ்னு இங்க போய் தொலைச்சிடாத..” என்று அவனை வார,

தேவ்”கொஞ்ச நேரம் அமைதியா இரு டி”

அப்போது கோகுலும் ஹரியும் உள்ளே வர, தேவ்வும் பாரதியும் அதிர்ந்தனர்.

தேவ்” கோகுல்.. அண்ணா..”

பாரதி “ஹரி அண்ணா.. ” என்று இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.

ஹரி”பார்ரா.. முழிச்சிக்கிட்டீங்களா.? இன்னும் கொஞ்சம் நாம லேட்டா வந்து இருந்தா தப்பிச்சு போய் இருப்பாங்க போல?” என்று கூறி இருவரும் அவர்கள் முன்னிலையில் ஒரு கதிரையில் அமர்ந்தனர்.

கோகுல்”யாரு யாருக்கு டா அண்ணா.? என் குடும்பத்த என்கிட்ட இருந்து பிரிச்சு கொன்னுட்டு ஆதி மட்டும் சந்தோசமா இருக்க விட்ருவேனா.?” என்று கத்தினான்.

“அவனை எது பண்ணாலும் உன் அக்கா, தடையா இருக்கா.. அவனை பாதுகாக்க தெரிஞ்ச அவளுக்கு உங்களை பாத்துக்க தெரியல.” என்று ஏதோ கெமிகல்களை எடுக்க,

ஹரி”என்ன டா பண்ணலாம் இவங்கள.? பாவம் அக்காக்காக இவளும், அண்ணனுக்காக இவனும் போய் சேரட்டும்.” என்று கூற,

இவன் கூற்றில் இருவரும் அதிர்ந்து தான் போயினர்.

கோகுல்”இல்ல டா… இவங்கள கொன்னுட்டா வலி தெரியாது டா. ஆதிக்கும் திவிக்கும் வாழ்நாள்ல மறக்க முடியாத வலிய கொடுக்கணும்”

ஹரி”ம்ம்ம்ம்… அப்போ என்ன பண்ணலாம்.?”

கோகுல்”நீ என்ன பண்ற நான் சொல்ற மாதிரி செய்” என்று கூற, ஹரியும் அதை ஆமோதித்தான்.

தேவ்வும் பாரதியும் பயத்துடன் அவர்களை நோக்க, ஹரி”ரெடி டா.. ” என்றான் தன் மொபைலில் வீடியோ ஆன் செய்த படி.

கோகுல்”என்ன நாங்க என்ன பண்ண போறோம்னு தெரியலையா.? தன் கையில் வைத்து இருந்த கெமிக்கலை காட்டியவாறு, இது இருக்குள்ள ” என்று கூற வர,

பாரதி ‘இவன் ஏன் இந்த நேரத்துல கெமிஸ்ட்ரி க்ளாஸ் எடுக்குறான்? கடவுளே எப்படியாவது எங்களை காப்பாத்து’ என்று மனதில் கதறி கொண்டு இருந்தாள்.

தேவ்”என்ன எங்களை கொல்லபோறியா? கண்டிப்பா நீ அதை பண்ண மாட்ட.. ஒழுங்கா எங்களை விட்டுடு… இல்லன்னா பின் விளைவுகள் ரொம்ப அதிகமா இருக்கும்” என்று கூற, கோகுலும் ஹரியும் மேலும் ஆத்திரம் அடைந்தனர்.

பாரதி ‘அயோ! இவன் வேற சவால்லாம் விட்டுகிட்டு இருக்கான்.’ என்று நினைத்து விட்டு, “அண்ணா நீங்க ஆதி மாமாவ பழிவாங்கணும்னா இவன ஏதாவது பண்ணுங்க.. என்ன விட்டுடுங்க அண்ணா..” என்று அப்போதும் அவனை மாட்டி விட,

தேவ்”ஏய் முட்டகண்ணி! என்ன டி என்ன ஏதாவது பண்ண சொல்ற.? அவனுங்க என் மேல கைய வச்சாங்க அண்ணா கிட்டயும் அண்ணி கிட்டயும் சாவடி வாங்குவானுங்க..”

கோகுல் கோவத்தில் தேவ்வை அறைய, உதட்டில் ரத்தம் கசிந்தது.

ஹரி”தோ பார்ரா..! அதுக்குள்ள அண்ணியா.? நாங்க என்ன பண்ண போறோம்னு சொல்ல வேண்டாம்னு இருந்தோம், சின்ன புள்ளைங்க பயந்துடுவீங்கணு. ஆனா இப்போ சொன்னாதான் பயத்துலயே காலம் முழுக்க இருப்பீங்க. டேய் சொல்லுடா.. அந்த கெமிக்கல் என்ன பண்ணும்னு”

பாரதி ‘அப்போ இவனுங்க நம்மள கொல்ல மாட்டாங்க.. வேற என்ன செய்ய போறாணுங்க.. அய்யோ கடவுளே.. அக்கா சீக்கிரம் வந்து இந்த மூணு லூசுங்க கிட்ட இருந்து காப்பாத்து’ என்று அவளால் மனதிற்குள் புலம்ப மட்டுமே முடிந்தது.

இதற்குள் கோகுலிற்கு ஒரு அழைப்பு வர, ஹரியுடன் வெளியில் சென்றான். அழைப்பை ஏற்று பேசியவன், மீண்டும் உள்ளே வந்து, “உங்களுக்கு இப்போ நேரம் நல்லா இருக்கு போல, கொஞ்ச நேரத்துக்கு அப்ரோம் உங்களை என்ன பண்ண போறோம்னு யோசிச்சு யோசிச்சு பயத்துலயே இருங்க” என்று விட்டு, கிளம்பினர்.

பாரதி அவர்கள் சென்று விட்டதை உறுதி செய்தாள். “தேவ், எனக்கு ரொம்ப பயமா இருக்குடா… சீக்கிரம் தப்பிக்கனும்டா..!” என்று கூற,

தேவ்விற்கும் பயம் இருந்தாலும் அவன் அதை வெளியில் காட்டி கொள்ளவில்லை. “ஏய் லூசி… பயப்படாத. நாம கண்டிப்பா தப்பிச்சிடுவோம்.. அவன் கைல ஒரு கெமிக்கல் பாட்டில் வச்சி இருந்தான் அது மட்டும் என்னனு தெரிஞ்சா நமக்கு ஒரு வழி கிடைக்கும்”

பாரதி”ஆமா, நீ பெரிய சைன்டிஸ்ட்.? அது தெரிஞ்சா வழிய கண்டு பிடிப்பியா?”

தேவ்”இது விளையாடுற நேரம் இல்லை.. அப்டியே உன் சேர்ர நகத்திக்கிட்டு வந்து எப்டியாவது இந்த கட்ட அவுறு.. ” என்றான்.

பாரதியும் முயன்று, அவனருகில் நாற்காலியை நகர்த்தி கொண்டு சென்றாள்.  தேவ் “எருமை.. என் பக்கத்துல வந்தா கழட்ட முடியாது. என் பின்னாடி வா” என்று இவன் நகர, அவளும் அவனை மனதில் கருவிக்கொண்டு பின்னே சென்றாள். “இரு டா.. இங்க இருந்து முதல்ல தப்பிக்கனும் அப்ரோம் இருக்கு உனக்கு..” என்று விட்டு எப்படியோ அவன் பின்னே சென்றாள்.

பின்னே சென்றவள் “இப்போ என்ன பண்றது.?”

தேவ்”ஹான்.. பூரி கிழங்கு பண்ணு. சாப்டுலாம்.. கேள்வியை பாரு.. கயிறை கழட்டு “

பாரதி அவள் கைகளை கொண்டு கயிற்றை அவிழ்க்க முயல, தேவ்”ஏய் என்ன பண்ற.. கூசுது டி”

பாரதி”டேய் கொஞ்ச நேரம் அமைதியா இரு டா..” என்றவள், எப்படியோ அந்த கயிற்றை இலகுவாக்கினாள். அதில் அவன் வேகமாக கயிற்றை அவிழ்த்து விட்டான். பின் அவளின் கைகளையும் அவிழ்த்து விட, இருவரும் அடுத்து என்ன செய்வது என்று யோசிக்களானார்கள்.

 

 

திவி மற்றும் அவளின் நண்பர்கள் ஆதியின் அலுவலகம் செல்ல, சக்தியும் வந்து இருந்தான்.

சக்தி”எப்டி ஆச்சு..? யாரு கடத்துனா.?”

திவி”தெரியல ண்ணா.. ” என்று விட்டு யோசனையில் ஆழ்ந்தாள்.

விஷ்ணு”ஒரு வேலை கோகுலா இருப்பானோ.?”

சக்தி”இல்லையே.. அவன் நம்ம கஸ்டடில தான் இருக்கான். அவன் எப்படி?”

விஷ்ணு”அவன் எங்க நம்ம கஸ்டடில இருக்கான்.. அடுத்த நாளே நானும் திவியும் அவங்க ரெண்டு பேரையும் அனுப்பிட்டோமே” என்க, சக்திதான் அதிர்ந்தான்.

சக்தி”அடப்பாவிங்களா.! சொல்லவே இல்லை.. ” என்க,

திவி”ஹான்.. ஆமா.. இதை மைக் போட்டு ஊர் முழுக்க சொல்றேன்.. அதை விடுங்க.. ஆதி எங்க.?”

ரவீணா தான் இவர்கள் பேசுவது ஒன்றும் புரியாமல் நின்று கொண்டு இருந்தாள். இவர்கள் வரும் வழியிலேயே சுப்ரியாவை ஏதோ காரணம் சொல்லி கழட்டி விட்டு தான் வந்து இருந்தனர்.

ஆதி வேகமாக அவன் கேபினுக்குள் வர, திவி பதற்றம் இல்லாமல் அமர்ந்திருப்பதை கண்டு கோபத்தின் உச்சிக்கே சென்றான்.

ஆதி அமைதியாக இருக்க, சக்தி”திவி ஆதி வந்துட்டான்.” என்றான்.

திவி”ஹான் வந்துட்டானா.. ஓகே.. இப்போ நான் சொன்ன மாதிரி செய்ங்க ண்ணா.. அண்ட் அவன் என்ன சொன்னாலும் என்ன பண்ணாலும் நீங்க எதுவும் கேட்க கூடாது.” என்று விட்டு, ஆதியின் அருகில் சென்றாள்.

ஆதி”என்ன நடக்குது யது.. சீக்கிரம் அவங்கள காப்பாத்தனும்.. நீ இவ்ளோ அசால்ட்டா இருக்க.? ஹான். உனக்கு என்ன நீ நல்லா இருந்தா போதும்.. உன்னை சுத்தி இருக்குறவங்க எப்டி போனா என்ன.? ஆனா உன் சுயநலத்துக்காக நீ உன் தங்கச்சியையும் பலி கொடுப்பன்னு நான் நினச்சு கூட பாக்கல டி.. உன்னை லவ் பன்னது ஒரு தப்பா டி… சின்ன வயசுல இருந்த நீ மாறவே இல்ல.. அப்டி என்ன டி என் மேல உனக்கு கோவம்..? ” என்று கர்ஜித்தான்.

சக்திக்கு அவனின் கோபம் தெரியும் என்பதால் அமைதியாக இருந்தான். அந்நேரம் சரியாக உள்ளே வந்த சுப்ரியா நடப்பதை தன் செல்பேசியில் வீடியோ எடுக்க ஆரம்பித்தாள் யாரும் அறியா வண்ணம். திவியோ உள்ளுக்குள் நடுங்கினாலும் முகத்தில் காட்டாமல் இருந்தாள். இதற்கு முன்பும் அவனின் கோபத்தை கண்டு இருக்கின்றாள், ஆனால் அது தனக்கான கோபம் என்று அறிந்ததால் எதுவும் அவளுக்கு பயம் இல்லை.  ஆனால் இன்று இவனின் இந்த முகம் உள்ளுக்குள் பயத்தை ஏற்படுத்தியதை அவளால் உணர முடிந்தது.

மற்ற இருவரும் இதுவரை கண்டிராத ஆதியை கண்டு அதிர்ச்சியின் பிடியில் இருந்தனர். குறும்பு, கண்ணீர், சிரிப்பு கலந்த முகம் இன்று இறுக்கம், கோபம் என்ற உணர்வுகளை தாங்கி நின்றது.

தன்னை சமன்படுத்திக்கொண்ட திவி”ஆமா நான் சுயநலவாதி தான். என்னை எதுக்கு லவ் பண்ற..? அதான் உன்னை கல்யாணம் பண்ணிக்க தோ அவ இருக்காலே.. அவளையே கல்யாணம் பண்ணிக்கோ.. “

ஆதி”என்ன பேசுற யது நீ..? அப்போ நீ என்ன காதலிக்கலயா.?”

சுப்ரியா”அவ உங்கள காதலிக்கல மாமா.. உங்க பணத்தை தான் காதலிச்சா” என்ற கூற்றில் ஆதி திவியை பார்க்க, அவளின் முகம் எந்த வித உணர்வையும் பிரதிபலிக்க வில்லை. அவனால் எதையும் புரிந்து கொள்ளவும் முடியவில்லை.

திவி”ஆமா நான் உன் பணத்துக்காக தான் காதலிச்சேன்.. அது உன்னோடது இப்போ இல்லன்னு எனக்கு தெரியும்.. உன்கிட்ட இருந்து எப்டி விலகுறதுனு நினைச்சேன்.. அதுனால தான் தேவ்வயும் பாரதியையும் கடத்தி உன்கிட்ட இருந்து பணம் வாங்குலாம்னு நினைச்சேன்.. ஆனா நீ கண்டுபிடிச்சிட்ட.. நான் உன்னை காதலிக்கல” என்று கூற, அனைவரும் அதிர்ந்தனர்.

சக்தி”என்ன திவி சொல்ற.? இப்போ ஏன் நீ இப்டி எல்லாம் பேசுற.? நீ அவனை எவ்ளோ லவ் பண்ண?”

திவி”இட்ஸ் வேஸ்ட் ஆஃப் டைம்.. நான் அவனை லவ் பண்ணல.. ” என்று கூற, ஆதியின் முகம் மேலும் இறுகியது. ஆனால் அவனின் மனதோ இன்னும் அவளின் கூற்றை ஏற்க மறுத்தது.

ஆதி”அப்போ பணத்துக்காக என்ன வேணாலும்.. எவன் கூட வேணாலும்” என்று நிறுத்த, அவனின் பேச்சில் பெண்ணவள் உடைந்து தான் போனாள்.

திவி”வேண்டாம் ஆதி.. நீ பேசுறதுல வேற அர்த்தமும் இருக்கு” என்றாள் கண்ணீரை கட்டுப்படுத்தி கொண்டு.

ஆதி”ஏய்.. என்ன டி.? போதும் நிறுத்து.. ஒழுங்கா அவங்க ரெண்டு பேரையும் கூட்டிட்டு வரல, உன்னை கொல்ல கூட தயங்க மாட்டேன்” என்றான்.

சக்திக்கும் மற்ற இருவருக்கும் என்ன செய்வது என்றே புரியவில்லை. ‘ஏன் இவள் இவ்வாறு பேசுகிறாள்? என்ன ஆயிற்று.?’ என்று எதுவும் புரியவில்லை.

சுப்ரியா இதை அனைத்தையும் பார்த்து கொண்டு மகிழ்ந்து தான் போனாள்.

திவி ஏதோ பேச வர, ஆதி”இதுக்கு மேல ஏதாவது சொன்ன நான் மனுஷனா இருக்க மாட்டேன். கெட் அவுட்” என்று கத்தினான். “சாரி ஆதி.” என்று மனதில் அவனிடம் மன்னிப்பு கேட்டு விட்டு, அவள் வெளியில் செல்ல, மற்ற அனைவரும் யாருக்கு ஆறுதல் கூறுவது என்று புரியாமல் இருக்க, “நீங்களும் தான் வெளில போங்க.” என்றான்.

அனைவரும் வெளியில் செல்ல, தன் அழைப்பேசி அடிக்க திவி அவசர அவசரமாக எடுத்தாள். கைகள் நடுங்க அட்டெண்ட் செய்தவள் “ஹலோ” என்றாள்.

“ம்ம்.. பரவாலயே.. சொன்ன மாதிரி செஞ்சிட்ட. வீட்ல போய் பாரு” என்று விட்டு இணைப்பு துண்டிக்கப்பட்டது.

அவள் அருகில் வந்த சக்தி அவளை அழைக்க, “திவி…”

திவி, கண்களை அழுந்த துடைத்து கொண்டு, “வீட்டுக்கு போலாம்.. அவங்க வந்துட்டாங்க” என்றாள்.

விஷ்ணு”முதல நீ என்ன நடந்ததுன்னு சொல்லு..! ஏன் நீ ஆதிக்கிட்ட அப்டி பேசின திவி.?”

திவி”உண்மைய தான சொன்னேன்.”

ரவீ”உன் பேச்சு திறமையை என்கிட்ட காட்டாத.. அங்க நீ சொன்னது எல்லாம் பொய்.. உண்மைய சொல்லு.. ஏன் அப்டிலாம் பேசுன.?”

சக்தி”உன் கேரக்டரை நீயே ஏன் மா இப்டி பேசுற.?”

திவி”நாலு உயிரை காப்பாத்தணும்னா என் கேரக்டர் தப்பா இருக்குறதுல ஒன்னும் தப்பு இல்லையே” என்றாள் விரக்தி புன்னகையுடன்.

ஆதிக்கு வீட்டில் இருந்து இருவரும் வந்து விட்டதாக அழைப்பு வர, வெளியில் வந்தவன் திவியின் கூற்றில் சிலையாய் நின்று விட்டான்.

விஷ்ணு”என்ன திவி சொல்ற.? என்ன நடந்துச்சுன்னு சொல்லு.?”

திவி அனைத்தையும் கூற தொடங்கினாள். “அன்னைக்கு நைட் நாம கோகுலயும், ஹரியையும் கடத்தினோம்ல, ஆனா அவங்கள நம்மள தவிர வேற யாரோ கடத்த ட்ரை பண்ணி இருக்காங்க.. அதுக்கு முன்னாடி நாம அவங்கள கடத்திட்டோம்.

அன்னைக்கு அவங்க பேசுனத வச்சு கோகுல் மனசு அளவுல தான் பாதிக்கபட்டு இருக்கான்னு புரிஞ்சிகிட்டேன். அடுத்த நாள் ஆதிக்கு பர்த்டே.. காலைல கோகுல பாக்க நானும் விஷ்ணுவும் போனோம்.

திவி”ஏன் நீ ஆதியை கொலை பண்ண இவ்ளோ ட்ரை பண்ற கோகுல்.?”என்று கேட்டு கொண்டே அவன் முன் அமர,

கோகுல்”உனக்கு தெரியாதா? மிஸ். திவ்யதர்ஷினி.?”

திவி “நீயே சொன்னா நல்லா இருக்கும்! இல்லனா” என்று விஷ்ணுவை பார்க்க, அவன் ஹரியின் கையில் திருப்புளி வைத்து குத்தினான். அவன் வலியில் அலற, திவி “நீ அமைதியா இருக்க ஒவ்வொரு நிமிஷம் உன் நண்பன் சாவான்” என்றால் தோலை குலுக்கியபடி.

கோகுல் “சொல்றேன்.. அவன ஒன்னும் பண்ணாத..” என்று விட்டு கூறத் தொடங்கினான். “சின்ன வயசுல எனக்கு ஒன்னும் தெரியல.. ஆதியும் என்னை நல்லா தான் பாத்துகிட்டான்.. ஆனா நாள் ஆக ஆக அப்பா என்கிட்ட பேசுறதயே நிறுதிட்டாரு.! ஆதியும் என்கிட்ட இருந்து விலக ஆரம்பிச்சான். இதுவே என் அண்ணன் என்கூட இருந்து இருந்தா நான் தனியா இருந்து இருக்க மாட்டேன்ல.?

எல்லாம் ஆதி வந்த நேரம். என் அம்மா அண்ணா என்கூட இல்ல, அப்பா என்னையே சந்தேகப்பட்டு வீட்டை விட்டு போக சொல்லிட்டாரு. அதுக்கு அப்ரோம் அப்பாவும் இல்ல. சொத்து எல்லாம் அவன் பேர்ல இருக்கு.  அவனை நான் தான் 8த் படிக்குறப்போ கொல்ல முயற்சி பன்னேன். அப்போ நீ காப்பாத்திட்ட. அதுக்கு அப்ரோம் ஆதியை என்னால நெருங்க கூட முடியல. சென்னைக்கு அனுப்பிட்டான். செய்யாத தப்புக்கு போலீஸ் புடிச்சிட்டு போச்சு.. அப்போ கூட ஆதி என்ன நம்பல நான் அந்த நிமிஷம் எவ்ளோ உடஞ்சி போய்ட்டேன் தெரியுமா.?

அதுக்கு அப்ரோம் வீட்ல என்ன அடைச்சு வச்சான். நான் அங்கே இருந்து தப்பிச்ச உடனே, என் ரூம் முழுக்க எரிஞ்சது.. என்ன கொல்ற அளவுக்கு ஆதி போய்ட்டான்னு அப்போ தான் எனக்கு புரிஞ்சது. அவன பொறுத்த வரை நான் செத்துட்டேன்.  அப்டியே இருக்கட்டும்.. அப்போ தான் அவனை கொன்னாலும் பழி என் மேல வராதுன்னு நினைச்சேன். மறுபடியும் கேபின்ல கொல்ல முயற்சி பண்ணேன். நீ அப்போவும் காப்பாத்திட்ட, சுப்ரியா மூலமா உனக்கு தான் கெமிக்கல்ல கொடுக்க நினைச்சேன். ஏனா உன்னை கொன்னாதான் ஆதியை கொல்ல முடியும். ஆனா அவன் நேரம் அதை அவனே சாப்பிட்டான். அப்போவும் நீ அவன காப்பாத்திட்ட.. இப்போ என்ன அனாதையா விட்டுட்டு அவன் மட்டும் குடும்பத்தோட சந்தோசமா இருக்க போரானா.? அவன விடமாட்டேன்.

நான் மட்டும் இல்ல, அவன கொல்ல இன்னும் ஒருத்தர் வேற துடியா துடிக்குறாங்க. நானே விட்டாலும் அவங்க கண்டிப்பா ஆதியையும் உன்னையும் கொல்லுவாங்க” என்று அனல் தெறிக்க கூறினான்.

அவன் வார்த்தைகளில் அதிர்ந்தவள், “உண்மை என்னான்னு தெரியாம நீ பேசுற கோகுல்.. உண்மை தெரிஞ்சா நீ இப்படி பண்ண மாட்ட..” என்று கூற,

கோகுல்”என்ன பயத்துல என்ன என்னமோ சொல்ற ? நீ எது சொன்னாலும் நம்பிடுவேன்னு நினைச்சியா.? “

திவி”உன் அப்பா அம்மா இல்ல தான். ஆனா அவங்க எப்டி இறந்தாங்கனு தெரியுமா? அவங்க ஆக்சிடெண்ட்ல சாகல. அவங்கள கொன்னுட்டாங்க!” என்றதில்,

கோகுல் அதிர்ந்தாலும் “இது என்ன புது கதை ? நான் அவனை கொன்னுடுவேன்னு எதையோ சொல்லி என்ன ஏமாத்துறியா.?”

திவி”நான் ஏன் உன்னை ஏமாத்தனும்.. இதான் உண்மை. இதை பத்தி நீ இன்னும் தெரிஞ்சிக்கணும். அதுக்கு நான் சொல்ற மாதிரி நீ செய்யனும்” என்றிட,

கோகுல்”நீ சொல்றத செஞ்சா? செத்து போனவங்க திரும்பி வந்துடுவங்களா.?”

திவி”அது எனக்கு தெரியாது.. ஆனா உயிரோட இருக்க உன் அண்ணன் வருவாங்கல.?” என்றாள் இரு புருவம் உயர்த்தியபடி.

அவள் கூறிய வார்த்தைகளை கிரகித்து கொள்ள கோகுலிற்கு நேரம் ஆனது “உன்.. உண்மையாவ சொல்ற.? என் அண்ணா உயிரோட தான் இருக்காங்களா.? நீ.. நீ பொய் சொல்லலல.?”

திவி”ம்ம் நிஜம் தான். ஆனா அதுக்கு முன்னாடி நான் சொல்றத செய்யனும். செய்வியா.?”

கோகுல்”ம்ம்..” என்றிட,

திவி”உன்ன தவிர வேற யாரு ஆதியை கொல்ல நினைக்கிறா.?”

கோகுல்”அது எனக்கு தெரியாது.! அன்னைக்கு ஒரு நாள் அவனே எனக்கு போன் பண்ணி பேசுனா. ” என்று கூற,

திவி”என்ன சொன்னா.?”

கோகுல்”அவன் சொல்ற மாதிரி செஞ்சா, ஆதியையும் உன்னையும் கொன்னுட்டு, சொத்த பிரிச்சிக்கலாம்னு சொன்னா.! அவன கொல்றதுல உனக்கு என்ன லாபம்னு கேட்டேன்.. எனக்கு அவங்க ரெண்டு பேரும் எதிரி. எதிரிக்கு எதிரி நண்பன் தான.  எனக்கு நீ உதவியா இருந்தா போதும். எனக்கு அவங்க ரெண்டு பேரும் சாகனும்னு சொன்னா. அதுக்கு அப்ரோம் நானும் ஹரியும் தான் தினமும் உன்னை ஃபாலோ பண்ணி எல்லாமே அவனுக்கு சொல்லுவோம். உனக்கு போன் பண்றதும் அவன்தான். ஆனா உண்மையாலுமே அவன நாங்க பாக்கல” என்றான்.

இவன் கூற கூற, திவியின் குழப்பங்கள் மேலும் அதிகம் ஆக, ஏதோ யோசித்தவள் “இனிமே நீங்க அவன் சொல்றது செய்ங்க.. ஆனா அவன் என்ன செய்ய சொல்றான்னு எனக்கு தெரியணும்.. கண்டிப்பா அவன் உன்னையும் சும்மா விட மாட்டான். நீ இதை செஞ்சா கண்டிப்பா உன் அண்ணா கிட்ட நான் உன்னை கூட்டிட்டு போவேன்”

கோகுலும் இதற்கு ஒப்புக்கொள்ள, திவி இருவரையும் போக சொன்னாள்.

“இன்னைக்கு காலைல எனக்கு போன் வந்தது. யாருன்னு தெரியல. அப்ரோம் கோகுல் போன் பண்ணா. “திவ்யா, எனக்கு போன் பண்ணி தேவ்வையும் பாரதியையும் கடத்தி ஆதிக்கு கொடுத்த அதே கெமிக்கல் கொடுக்க சொல்லி இருக்கான். அது மட்டும் இல்ல, அந்த கெமிக்கல்லோட சுயநினைவு இழக்க வச்சு ரெண்டு பேரையும் தப்பா வீடியோ எடுக்க சொல்லி இருக்கான்”. அவன் சொன்னத்துல எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல.

அவன் சொன்ன மாதிரி கொஞ்ச நேரத்துல ஆதி எனக்கு போன் பண்ணி ரெண்டு பேரையும் கடத்திட்டதா சொன்னா.. உங்க கூட வந்தப்போ சுப்ரியாவ இறக்கி விட்டோம்ல அப்போ எனக்கு ஒரு வீடியோ வந்தது. அதுல தேவ் பாரதி இருந்தாங்க.. ஒரு வேல அவங்கள கோகுல் காப்பாத்திட்டா, கோகுலயும் ஹரியையும் கொல்ல வெளில ஆட்கள் இருந்தாங்க. மறுபடியும் வந்த கால்ல அவன் ஆதிக்கிட்ட நான் தான் கடத்துனேன்னு சொல்ல சொன்னான். முதல்ல நான் அவங்கள தான் காப்பாத்தனும்னு நினைச்சேன் அதான் இப்படி பேசுனேன். இதுல என்ன தப்பு இருக்கு.?” என்றாள்.

இவள் கூறியதை கேட்டு அனைவருக்கும் வார்த்தையே வரவில்லை. சுப்ரியா முன்னமே சென்று இருந்ததால் இவர்கள் பேசியது அவள் அறியவில்லை.

இதை அனைத்தையும் கேட்டு ஆதி என்ன கூறுவது என்று புரியாமல் தான் இருந்தான். தன்னுள் தீர்க்கமாக ஒரு முடிவினை எடுத்தான் ஆதி..

கனவு தொடரும் 🌺🌺🌺🌺

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
8
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்