Loading

ஆட்சியர் கனவு 32💞

வானவில்ல கொண்டு வந்து 🎶

வளைச்சு கட்டி பந்தல் போடு🎶🎶

விண்மீன் எல்லாம் கொட்டி வந்து 🎶

சீரியல் பல்பா மாத்தி போடு🎶🎶

ஆகாயம் பாத்து சூரியன் கேட்டு 🎶

ஆரத்தி தட்டா எடு🎶🎶

வந்தோருக்கெல்லாம் முத்துக்கள் 🎶

அள்ளி அட்சத பூவா போடு🎶🎶

உள்ள சொந்தமெல்லாம் 🎶

சேர்ந்து வந்து திருமனத்த நடத்துரப்போ🎶🎶

அடடா ஆட்டம் பாட்டம் தான்🎶🎶

அந்த கல்யாணமே

அழகா பூத்த தோட்டம் தான்🎵🎵

அடடா ஆட்டம் பாட்டம் தான்🎶🎶

அந்த கல்யாணமே

அழகா பூத்த தோட்டம் தான்🎵🎵..

என்ற பாடலின் ஒளி மூலம், ஆதியின் வீடே கோலாகலமாக ஜொலித்து, மாவிலை தோரணம் கட்டி, பந்தக்கால் நட்டு இருக்க, ஆளுக்கு ஒரு பக்கம் வேலை செய்து கொண்டிருந்தனர். பின்னே, மறுநாள் நம் திவியின் ஆதிக்கும், தியாவின் யதுவிற்கும் திருமணம் ஆயிற்றே.! கோலாகலம் என்பது செய்யும் ஆடம்பரத்தில் இல்லை. அங்கு சூழ்ந்து இருக்கும் உறவுகளின் உள்ளத்தில் உள்ளது.

என்ன தான் அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்தாலும், திளைக்க வேண்டிய இருமனமும் பாராமுகமாகவே இருந்தது. திவி இன்னும் ஆதியிடம் பேசவேயில்லை. இதற்கிடையில் ஆதி சந்தனாவை வேலையில் இருந்த நீக்க முடிவெடுக்க, திவி வேண்டாம் என்று விட்டாள் திட்டவட்டமாக. அதுவும் அவள் அதை சக்தியிடம் தான் கூறி அனுப்பினாள். திவியின் குடும்பம் அனைத்தும் ஆதியின் வீட்டில் தான் இருந்தனர்.

மறுநாள் கோவிலில் திருமணம். திவி கல்லூரி முடித்த பிறகு மேற்கொண்டு அனைத்தும் செய்யலாம் என்று அனைவரும் முடிவு எடுத்து இருந்தனர். கல்லூரியில் யாருக்கும் ஆதி திவியின் திருமணம் விஷயம் அறியாது. ரவீணா, விஷ்ணு தவிர.

தன் அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான் ஆதி. அப்போது நேற்றைய சம்பவம் நினைவில் வர, மெலிதாய் புன்னகைத்து வெட்கமும் சூழ, அந்த நிகழ்வை நோக்கி பயணமானான் தியா.

திருமணப் பந்தக்கால் நட, அனைவரும் வந்திருக்க, பெண்ணவள் ஆதியின் கண்களில் சிக்காமல் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டு இருந்தாள். எல்லா சம்பிரதாயமும் முடியும் தருவாயில் குழிக்குள் மஞ்சள் நவதானியம் இட, திவியை அழைத்தார் தெய்வானை.

தெய்வானை “வா திவிமா.. வந்து இதை போடு. எல்லாம் நல்லபடியா நடக்கணும்னு நினைச்சிகிட்டே போடு” என்று அவள் கையில் நவதானியம் மற்றும் மஞ்சளை கொடுத்தார்.

ரவீ திவி காதில் “அப்படியே ஆதிக்கு கொஞ்சம் அறிவையும் கொடுன்னு நினைச்சிக்கோ திவி” என்றிட, திவி அவளை இடித்துவிட்டு, தெய்வானை கூறியவாறு செய்தாள். செய்து முடித்தவள் மீண்டும் மாயம்.

ஆதி “டேய் எங்கடா அவ.? அவ இன்னும் என்கிட்ட பேசல டா! நீங்க என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ எனக்கு தெரியாது அவளை பார்க்க ஏற்பாடு பண்ணுங்க டா” என்று சக்தியிடமும் விஷ்ணுவிடமும் கதறினான்.

விஷ்ணு “ஏன் ஆதி அவ இன்னுமா உன் கிட்ட பேசல.?” என்று கேட்க,

ஆதி “இல்லை” என்று தலையசைக்க,

சக்தி “எப்படி பேசுவா.. அந்த சந்தனாவை நாலு அறை விட்டு இருந்தா பேசியிருப்பா.. அதுகூட வேண்டாம் அவள் தான் நான் கட்டிக்க போறவன்னு சொன்னா என்னடா.?” என்று கூற

ஆதி முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு “சத்தியமா எனக்கு அத ஹேண்டில் பண்ண தெரியல டா” என்றான்

சக்தி “எவ்வளவு பெரிய பிசினஸ்மேன் நீ.. நீயா இப்படி சொல்ற?” என்று விழி விரித்து கேட்க,

ஆதி “பிசினஸ்ல கூட எவ்வளவு ப்ராப்ளம் வந்தாலும் அசால்ட்டா முடிச்சுடுவேன் டா.. ஆனால் இவளை எப்படி ஹேண்டில் பண்றதுன்னு தெரியல டா.. இவ எனக்கு மேல இருக்கா” என்றான் பாவமாக.

இருவரும் சிரிக்க, ஆதி “சிரிக்காம அவளை என் கண் முன்னாடி காட்டுங்கடா” என்று புலம்பினான்.

அப்போது தேவ்வும் பாரதியும் அங்கு வர பாரதி “என்ன ஆச்சு.? ஏன் மாமா புலம்பிக்கிட்டு இருக்கீங்க.?” என்றாள்.

ஆதி “எல்லாம் உன் அக்கா நாளதான்.. எங்க அவ கண்ணுலயே சிக்க மாட்டேங்கிறா.?” என்று கேட்க,

தேவ் “நீங்க பூதக்கண்ணாடி வச்சுப் பார்த்தாலும் உங்க கண்ணுல சிக்க மாட்டாங்க” என்றான் சிரித்துக்கொண்டே..

ஆதி “ஏன்டா.?” என்று புரியாமல் கேட்க,

தேவ் “அண்ணி இங்க வந்ததுல இருந்து உங்க பின்னாடி தான் சுத்திகிட்டு இருக்காங்க இவ்வளவு நேரம் கூட இங்க தான் இருந்தாங்க. நாங்க வந்த உடனே ஆள் எஸ்கேப்” என்றான் சிரித்துக் கொண்டே..

இதைக்கேட்ட சக்தியும் விஷ்ணுவும் வாயை பிளந்தபடி நிற்க, ஆதிக்கோ மனதில் சொல்லமுடியாத குறுகுறுப்பு. அவன் பதில் ஏதும் கூறாமல் சென்று விட்டான். இப்போது நினைத்தாலும் அந்த குறுகுறுப்பு மாறவில்லை அவன் மனதில்.

கேடி என்ன என்ன வேலை பாக்குற. இருடி இன்னைக்கு தப்பிப்ப, நாளைக்கு இந்த மாமாகிட்ட சரண்டர் ஆகி தானே ஆகணும்’ என்று மனதுக்குள் அவளை திட்டுவது போல் கொஞ்சி கொண்டிருந்தான்.

திவி அறையில் திவிக்கு கைகளில் மெஹந்தி வைத்துக் கொண்டு இருக்க ரவீ “ஏன் நீ ஆதி கிட்ட பேச மாட்டேங்குற திவி.?” என்று கேட்டாள்

திவி “கோபம்தான்…  குறைஞ்சா நானே பேசிடுவேன்” என்றாள் மெல்லிய புன்னகையுடன்.

பாரதி “அப்படி என்ன கோபம் மாமா மேல.?” என்று கேட்க,

திவி “அது உன் மாமாக்கு தெரியும்.. அவன் பண்ண வேலை அப்படி” என்றாள் சிரித்துக்கொண்டே..

பவித்ரா “கோபம் போகணும்னா மாமா என்ன பண்ணனும்.?” என்று ஆர்வமாய் கேட்க, இந்த கேள்விக்கான பதிலை எதிர்நோக்கி பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் ஆவலாக காத்துக் கொண்டிருந்தனர்.

எல்லாம் கோகுலின் கைவண்ணம் தான்.. ஆதி திவியிடம் பேசவில்லை என்றாலும் அவளின் குரலைக் கேட்டால் நன்றாக இருக்கும் என புலம்ப கோகுல் தன் கைபேசியை பவித்ராவிடம் கொடுத்து அனுப்பினான்.

பவி கேட்ட கேள்வியில் திவ்யா அமைதியாக யோசித்து கொண்டு இருக்க ரவீனா அவளை உலுக்கவும் சுயநினைவு பெற்றவள் “ஹான்..என்ன ரவீ.?” என்றாள் ரவி

“என்னது..? என்ன ரவியா.? ஏய் லூசு திவி, கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் கனவு கண்டுக்கிட்டு இருக்கியா.? என்ன கனவுல ஆதியா.?” என்று சத்தமாக ஆரம்பித்து இறுதியில் ஹஸ்கி வாயிசில் முடித்தாள்.

அவளை ஒரு முறைத்துவிட்டு “அதெல்லாம் ஒன்னும் இல்ல. பதில் சம்பந்தப்பட்டவன் கிட்ட சொல்லிக்கிறேன்.. உங்ககிட்ட நான் சொல்ல மாட்டேன்” என்றாள் உதட்டை சுளித்துக் கொண்டே..

இவளின் பதிலில் அங்கிருந்த அனைவரும் “ஓ” என்று கத்த, மறுபக்கம் ஆதி புன்னகையைக் கட்டுப்படுத்திக் கொண்டு இருந்தான்.

சக்தி “சம்பந்தப்பட்டவன் கிட்ட தான் சொல்லுவாங்கலாமா” என்று விஷ்ணுவிடம் கூற,

விஷ்ணு “அப்போ சம்பந்தப்பட்டவங்க கிட்ட சம்பந்தப்பட்டவங்கள ஒப்படைச்சிட்டா போச்சு..”என்று கண்ணடித்து விட்டு விஷ்ணுவும் தேவ்வும் வெளியில் சென்றனர்.

ஆதியோ அவள் தன்னிடம் பேசவில்லை என்று மீண்டும் முகம் வாட, கோகுல் “வாங்க அண்ணா கொஞ்ச நேரம் மாடியில் இருக்கலாம்” என்று வலுக்கட்டாயமாக அழைத்து சென்றான். சக்தியும் உடன் சென்றான்.

விஷ்ணுவும் தேவ்வும் அறைக்குள் நுழைய போக, பாரதியும் ரவீயும் அவர்களை தடுத்தனர்.

ரவி “ஹோய்.. பொண்ணுங்க இருக்க இடத்தில உங்களுக்கு என்ன வேலை” என்று கேட்க,

விஷ்ணு “திவிய பாக்கணும்.. எங்க..?” என்று நுழைய போக, அவனை தடுத்த

ரவி “கேட்ட கேள்விக்கு பதில்” என்றாள்.

தேவ் “அது… என்று இழுத்து விட்டு அண்ணி இன்னும் சாப்பிடலல..  கீழ ரொம்ப கூட்டமா இருக்கு.. அதான் என் ரூம்ல சாப்பிட கூப்பிடலாம்னு வந்தோம்” என்றான்.

பாரதி “யார் ரூமுக்கு போனாலும் அக்கா சாப்பிட மாட்டாங்க.. நீங்க ரெண்டு பேரும் கிளம்புங்க “என்றாள்

தேவ் “ஏன் அண்ணி வர மாட்டாங்க.? என்னாச்சு.?” என்று கேட்க,

பாரதி “ஏய், லூசே! அக்கா கையில மெஹந்தி இருக்கு.. அதனால  சாப்பிட முடியாது.. நாங்க சாப்பாடு கொடுத்துக்குறோம்.. நீங்க கிளம்புங்க” என்று இருவரையும் துரத்திவிட,

உள்ளேயிருந்த திவி வெளியே வந்து பார்த்தாள். அங்கு நின்று கொண்டிருந்த விஷ்ணுவையும் தேவ்வையும் கேள்வியாக பார்த்துவிட்டு,  ரவியிடம் தனக்கு பசி எடுக்கின்றது என்று கூறினாள்.

விஷ்ணு “சரி வா சாப்பிடலாம்” என்று கூற

திவி “வேண்டாம்! பரவாயில்ல. நான் இங்கேயே சாப்டுக்குறேன்” என்றாள்.

 

தேவ் வலுக்கட்டாயமாக “இல்லை நீங்க வாங்க என் ரூம்ல சாப்பிடுங்க நீங்க” என்று கூற, திவி மறுக்க,

விஷ்ணு “நீ என்ன அண்ணனா பாத்தா வந்து தான் ஆகணும்” என்று கூற,

தேவ்வும் “ஆமா..  அப்புறம் நான் உங்க கிட்ட பேசவே மாட்டேன் அண்ணி” என்று கதற,

திவி சிரித்துக்கொண்டே “ரொம்ப பண்ணாதீங்க டா… வரேன் வரேன் நீங்க போங்க நான் வரேன்..” என்று கூறினாள்.

விஷ்ணுவும் “சரி நீ அவள அங்க கூட்டிட்டு போ..  நான் சாப்பாடு எடுத்துட்டு வரேன்” என்று கூற, திவியும் தேவ்வும் தேவ்வின் அறைக்கு சென்றனர்.

உள்ளே சென்று இருவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, தேவ் “அண்ணி ஏன் அண்ணா கூட பேசல.?” என்று கேட்க,

அவள் அவனை முறைத்துவிட்டு “இதுக்கு தான் என்ன தனியா கூட்டிட்டு வந்தீங்களா.?” என்று கேள்வியாக பார்த்தாள்.

தேவ் “இல்ல அண்ணி..அது வந்து..” என்று இழுக்க,

“போதும் தேவ்.. அது இதுன்னு.. ஆரம்பிக்காத.. உங்க அண்ணன்கிட்ட எப்ப பேசணும்னு எனக்கு தெரியும் நான் பேசுவேன்.. பேசாமல் இருக்க மாட்டேன்.. ப்ளீஸ் லீவ் திஸ் டாபிக்” என்று கூறினாள்.

அதற்கு மேல் ஒன்றும் கூறாமல் தேவ், “இங்கேயே இருங்க அண்ணி.. விஷ்ணு அண்ணா சாப்பாடு எடுத்துட்டு வருவாங்க நான் வெளியே இருக்கேன்” என்று கூறிவிட்டு செல்ல எத்தனிக்க, 

திவி “எங்க போற உட்காரு டா.. அண்ணனுக்கும் தம்பிக்கும் கோவதுக்கு மட்டும் கொரச்சல் இல்ல.. தனியா நான் இங்க என்ன பண்றது.?” என்று கூற,

தேவ் சிரித்துகொண்டே.. “இருங்க அண்ணி… ” என்று அவனை சமாளித்து விட்டு வெளியே வர,

விஷ்ணு சாப்பாட்டுடன் வந்தான். உள்ளே வந்தவன் உள்ளே செல்லாமல் வெளியே நின்று கொண்டு “போய் உங்க அண்ணா கூப்ட்டு வாடா.. எங்கே போன இந்த நேரத்துல.?” என்று ஆதியைத் தேட,

தேவ் “சரி அண்ணா” என்று அழைத்து வந்தான்.

“என்னடா எதுக்கு வர சொன்ன.?” என்றான் பாவமாக..

விஷ்ணு “அட டேய்.. முதல்ல முகத்தை இப்படி வைக்கிறது நிறுத்து. உள்ள திவி உக்காந்துட்டு இருக்கா. இந்த சாப்பாடு அவ இன்னும் சாப்பிடல, போய் அவளுக்கு சாப்பாடு ஊட்டிவிட்டு அப்படியே சமாதானப்படுத்துற வழியை பாரு டா..” என்று கூறிய, விஷ்ணுவை ஆதி அள்ளி அணைத்துக்கொண்டு “நீதாண்டா என் மச்சான்.. செமடா.. தேங்க்ஸ்டா” என்று கூற,

சக்தி தலையில் அடித்துக்கொண்டு “அட பைத்தியம்! இதை உள்ள போய் பண்ணுடா போ டா”என்று உள்ளே அனுப்பினான்.

திவி அமைதியாக சாளரத்தில் நிலவை ரசித்து கொண்டு இருக்க, ஆதி உணவை மேஜையில் வைத்துவிட்டு அவள் அருகே சென்று, அவள் தோளை பிடித்து தன் பக்கம் திருப்பினான்.

அங்கு அவனை எதிர்பாராத திவி அதிர்ந்தாலும்,  அந்த அதிர்ச்சியை முகத்தில் காட்டாமல் தன்னை சமன்படுத்தி கொண்டு அவனை முடிந்த மட்டும் முறைத்துக் கொண்டிருந்தாள்.

ஆதி “சாரிடி ப்ளீஸ் டி.. பேசு டி.” என்றிட 

திவ்யா எதுவும் பேசாமல் அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளை அழைத்து வந்து கட்டிலில் அமரவைத்து அவளுக்கு உணவு ஊட்ட முகத்தை மறுபக்கம் திருப்பிக் கொண்டாள்.  அவன் அவளின் தாடையை தன் பக்கம் திருப்பி மீண்டும் உணவை அவள் வாயின் அருகே கொண்டு செல்ல “எனக்கு பசிக்கல.. எனக்கு வேண்டாம்” என்று கூறினாள் திவி.

ஆதி அவள் காதருகில் சென்று “என் செல்ல குட்டிக்கு எப்ப பசிக்கும் எப்ப பசிக்காதுன்னு எனக்கு தெரியும்.  இனிமேல் நான் நைட்டு ஊட்டிவிடுவேணாம் நீங்க சாப்பிடுவீங்களாம்.. ம்ம்ம்” என்று கூற,

அவனின் நெருக்கத்தில் தன்னை மறந்தவள் மீண்டும் இல்லாத கோபத்தை இழுத்துப் பிடித்துக் கொண்டு அவனை முறைத்துக் கொண்டிருந்தாள் “தள்ளு டா.. டேய்.. தள்ளு”  என்று அவனிடம் இருந்து விலக முயற்சித்தாள்.

ஆனால் ஆதியோ அவளின் இடை வளைத்து “இங்க பாரு உன் கையில் மெஹந்தி இருக்கு நான் என்ன செஞ்சாலும் உன்னால தடுக்க முடியாது எனக்கு தெரியும். ஆனால்..” என்று அப்படியே நிறுத்தினான்.

அவள் அவனை நிமிர்ந்து பார்க்க, அவன் குறும்பாக இவளைத்தான் நோக்கிக்கொண்டிருந்தான். ஆண்மகனின் இமைசூடு தாங்காமல் தன் பார்வையை தாழ்த்திக் கொண்டவளின் முகம் சிவந்து போனது.

ஆதி “திவி… குட்டச்சி… ப்ளீஸ்டி பேசுடி” என்று அவளின் முகத்தை தன் கையில் ஏந்தி கேட்க,

திவிக்கே  பாவமாக இருந்தது. பெருமூச்சை இழுத்து வெளியேவிட்டு, அவனை நோக்க, அவனோ இவளைதான் பார்த்துக்கொண்டிருந்தான்.

திவி “சரி இதுதான் ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்ட் ஓகேவா… இனிமே நீ புத்திசாலியா இருடா என் புருஷா” என்று கூற,

அவளின் அழைப்பில் பாவம் ஆதிக்கு தான் வெட்கம் வந்துவிட்டது.. ஆண்கள் வெட்கம் கொண்டால் அழகன் தான்.. அய்யோ இந்த திவி புள்ள நம்மள ஏன் முறைக்குது.. ஓஹோ.. நாம அவ ஆதியை ரசிக்குறோமா.. அய்யோ சாரிடி மா..

அவன் குறுஞ்சிரிப்புடன் அவளையே பார்க்க, அவள் “இன்னும் எவ்வளவு நேரம் பார்க்கிறதா உத்தேசம்? எனக்கு பசிக்குது டா “என்றாள் பாவமாக..

ஆதி “அச்சோ பாவம்.. என் தர்ஷினிக்கு பசிக்குதா.?” என்று கூற,

அவள் குழந்தையைப் போல் “ஆமாம்” என்று தலையசைத்தாள்.

அவளை அமரவைத்து அவளுக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்தான்.

திவ்யா அவனையே பார்க்க ஆதி “என்னடி என்னையே பாக்குற .? மாமா அவ்ளோ அழகா இருக்கேனா.? என்று கேட்க, 

திவ்யா “எப்பவும் சண்டை போட்டா எனக்கு இதே மாதிரி ஊட்டி விடுவியா டா.?” என்றால் கெஞ்சலாக..

அவனோ “அச்சோ திவி.. அப்படி எல்லாம் கேட்காத டி மாமாவுக்கு என்னென்னமோ பண்ணுது டி.. சாப்பிடு” என்றான்.

திவ்யா சிரித்துக்கொண்டே உணவை வாங்கினாள். சாப்பிட்டு முடித்த சமயம், அனைவரும் வந்துவிட “ஹப்பா ஒருவழியா ரெண்டுபேரும் பேசிட்டிங்களா.. உங்கள பேச வைக்கிறதுக்குள்ள நாங்க என்னென்ன வேலை பன்ணவேண்டி இருக்கு.?” என்றான் விஷ்ணுவும் தேவ்வும் சலித்துக் கொண்டே..

திவி புன்னகையோடு தலையை தாழ்த்திக் கொண்டு இருக்க, ஆதி “டேய் அதான் சேர்த்துவிட்டீங்கல.. போங்க டா..  போய் தொலைங்க..  ரெண்டு பேரும் தனியா இருந்தா உங்க யாருக்கும் பிடிக்காதே..  எவனோ ஒருத்தன் வந்து கெடுத்து விட்டுடுறீங்க..” என்று கத்த,

அவனின் கடுப்பில் சக்தி “சரி சரி மச்சான் கடுப்பாகாத.. போறோம் போறோம்” என்று கிளம்பினர்.

ஆதி “அப்புறம் அந்த  கதவை மூடிட்டு போங்கடா டேய்” என்று கத்தினான்.

“அட டேய்..  நாளைக்கு தான் டா.. கல்யாணம்.. முதல் அந்த பிள்ளையை அவ ரூம்க்கு அனுப்பு டா ” என்றான் சக்தி

ஆதி “அதெல்லாம் எனக்கு தெரியும்டா.. நீ மூடிக்கிட்டு போ டா.” என்று கூற, சக்தி “என்னது.?” என்று அதிர்ந்தான்.

ஆதி ” ஈஈ.. கதவை மூடிட்டு போ ன்னு சொன்னேன் மச்சான்” என்று கூற,

சக்தி “நீ நடத்துடா” என்று கூறி கதவை சாத்திவிட்டு சென்றனர்.

ஆதி “யது” என்று அழைக்க,

திவி “ம்ம்… சொல்லு ” என்றாள் குனிந்த தலை நிமிராமல்.

ஆதி “கீழ அப்படி என்ன தேடுற.? கொஞ்சம் நிமிர்ந்து தான் பாரேன்!”  என்று புன்னகையுடன் கூற,

திவி  முறைத்துக்கொண்டே அவனை நிமிர்ந்து பார்க்க, அவனோ கண்ணடித்து உதட்டை குவித்து முத்தம் தரும் தோணியில் இருக்க, மீண்டும் அவள் தலையை தாழ்த்தி கொண்டாள்.

ஆதி மறுபடியும் “ஓய் குட்டச்சி” என்று அழைக்க,

அவள் “சொல்லு கேட்குது” என்றாள் நிமிராமல்..

ஆதி “ஏய் இப்படி எல்லாம் வெட்கம் படாதடி மாமாவுக்கு மூடு மாறிடும்” என்றான் சிணுங்கிக்கொண்டே.

திவ்யா மனதில் ‘அச்சோ இப்படி எல்லாம் பண்ணாதடா என்னால முடியலடா தியா’ என்றாள் மனதில் கதறிக்கொண்டே.

திவி மூரலோடு ஆதியை ஏரிட, ஆதி “நான் உன்னை யதுவா பார்த்தது சின்ன வயசுல தான், ஆனால் திவ்யாவா எங்க  பார்த்தேன் தெரியுமா.? அதுவும் எப்படி பாத்தேன் தெரியுமா.?” என்றான் சிரித்துக்கொண்டே..

திவி புரியாமல் “எப்ப..? காலேஜ்ல பார்த்த.. ஜாயின் பண்ணுற அன்னிக்கு தானே…?” என்று கேட்டிட,

ஆதி மறுப்பாக தலையசைத்து  “என்னைக்கு தெரியுமா..? நான் காலேஜ் ஜாயின் பண்ணப்போ.. அதாவது பிபிஏ ஜாயின் பண்ண போ” என்று பாதியில் நிறுத்தி விட்டு,  திவியின் கையை பிடித்து மடக்கி “இந்த தழும்பு எப்படி வந்தது.?” என்றான் கேள்வியுடன்.

திவி, ” இதுவா டென்த் படிக்கிறப்போ… சைக்கில்ல போறப்போ… நான் கரெக்ட்டா தான் போனேன். ஏதோ ஒரு ஞாபகத்துல போய்ட்டு இருந்தேனா..  ஒருத்தன் வண்டியில் வந்து என் மேல இடிச்சுட்டான் பைத்தியக்காரன்..” என்று கூற,

ஆதி “நீ எந்த நியாபகத்துல போன.? நீ  கரெக்டா பாத்துதான் போன.? ம்ம்ம்” என்று அதை அழுத்தமாக கேட்க,

திவி “அது.. அது…  ஹான் எக்ஸாம் அதான் யோசிச்சுக்கிட்டு போன..” என்று கூற,

ஆதி “பொய் சொல்லாத ஒழுங்கா சொல்லுடி” என்று மறுபடியும் கேட்க,

திவி “அது வந்து…  அன்னைக்கு ஸ்கூல்ல பாத்ததுல இருந்து தினமும் உன்னை பார்ப்பேன்..  நீ காலேஜ் ஜாயிண்ட் பண்ணதுக்கப்புறம் பாக்கவே முடியல..  அன்னைக்கு யதுவும் கூட வரல..  உன்ன தான் எங்க பார்க்க முடியுமோன்னு  மனசுல நெனச்சிகிட்டு சைக்கிள் ஓட்டிட்டு வந்தேன்”  என்றால் ஒவ்வொரு வார்த்தையாக  இழுத்துக் கொண்டே கூறினாள்.

அவளின் பதில் ஆதிக்கோ மகிழ்ச்சி தாங்கவில்லை அவளை அள்ளி அணைத்து சுற்ற வேண்டும் போல் இருந்தது. அப்படி பரபரத்த கைகளை அடக்கிக் கொண்டு, “சரி சரி அந்த வண்டிக்காரன பார்த்தியா.?” என்று கேட்க,

திவி “அவன மட்டும் பார்த்தேன் அவ்ளோதான்..  அவனால தான் இந்த அடி..  ரெண்டு நாளா காய்ச்சல் வேற வந்துச்சு தெரியுமா… அவன் சரியான லூசு” என்று திட்ட,

ஆதி “அவனை பார்த்தா என்ன பண்ணுவ.?”

திவி “டேய் நான் அவன பாக்கவே இல்ல டா… அப்படியும் பார்த்தா என்ன பண்ணுவேன்..? ம்ம்ம்ம்…?? ஒன்னும் பண்ண மாட்டேன்..  என் மேலயும் தான் தப்பு… சோ அந்த பையன் பொழச்சி போகட்டும்” என்று கூற

ஆதி “அடியே உன்ன இடிச்சதே நான்தாண்டி அன்னைக்கு” என்று கூற,

அதில் சிறிது அதிர்ந்தவள் “என்னது நீயா..? நீ .?” என்று அவள் புரியாமல் பார்க்க,

ஆதி “நான் தான் நானே தான்..  அந்த ரெட்டை ஜடையில  எப்படி இருந்த தெரியுமா..?  சொல்லவே முடியாது.. ப்பா… நான் கண்டிப்பா எதிர் பாக்கலடி.. நீ தான் என்னுடைய யதுன்னு..  நீதான் என்னோட குட்டச்சின்னு.. நீதான் என்னோட திவின்னு… எப்படி பேசின தெரியுமா..? பெரிய பிராடுடி..   எனக்கு எப்படி இது எக்ஸ்பிளைன் பண்றதுன்னு தெரியல டி” என்று கூற,

திவி அவனை ரசனையோடு பார்த்துக் கொண்டிருந்தாள். ஆதி “எப்படி இருந்த தெரியுமா..? நீ போட்டு இருந்த அந்த ஸ்கூல் யூனிஃபார்ம் ல கீழே விழுந்தும் எந்திரிச்சு என்னைய திட்டி கிட்டு இருந்த..  என்ன வார்த்தை… ப்பா பேச்ச பாரு.. வாயாடி..”என்று அவள் கன்னத்தை பிடித்து கிள்ளி சிவக்க வைத்தான்.

திவி ” என்னடா சொன்னேன் உன்னைய.?” என்று கேட்க,

ஆதி “அது என்ன சொன்னா நல்லா திட்டுன.. என்ன வாய்..” என்று கூற,

திவி “டேய் போதும்டா..” என்றாள் புன்னகையூடே..

ஆதி “என் செல்ல குட்டிக்கு வெட்கம் வருதோ…? ஹான்..” என்று கேட்க,

திவி “ஹ்ம்ம்..  அப்படியும் வச்சுக்கலாம்…  ஆனா இப்போ உன் குட்டச்சிக்கு தூக்கம் வருது” என்றாள் சோம்பலாக.. “

ஆதி “வாடி வந்து படுத்துக்கோ.” என்று தன் மடியை காட்டா,

திவி “ஆசைதான் உனக்கு.. டேய் எனக்கும் என் மாமாவுக்கும் நாளைக்கு கல்யாணம்.. என்னை போக விடு..  நான் ரூம்ல போய் படுத்துக்குறேன்” என்று கூற,

ஆதி “என்ன சொன்ன…? என்ன சொன்ன.? யாருக்கும் யாருக்கும் கல்யாணம் .?” என்று மேலும் அவளை சீண்ட, 

அவள் “இப்பதானே சொன்னேன்.. எனக்கும் என்..” என்று இழுக்க,

ஆதி “உனக்கும் யாருக்கும் டி.? நீ சொல்லுடி” என்று சீண்டி விட,

திவி “அதான் தெரியுது இல்ல.. எதுக்கு மறுபடியும் கேட்கிற.? எனக்கு தூக்கம் வருது” என்று நழுவ,

ஆதி “ஏய் குட்டச்சி என்ன பாருடி..” என்று அவளின் முகத்தை நிமிர்த்தி அவனைக் காண செய்ய,

அவள் “என்ன” என்று புருவம் உயர்த்தி கேட்க, அதில் விழுந்தவன் “குட் நைட் டி.. குட்டச்சி”  என்றதில்,

அவள்தான் தலையில் அடித்துக்கொண்டு “போடா டியூப் லைட்டு.. இதுக்குதான் நிமிர சொன்னியா… டியூப் லைட்..” என்று கத்திக் கொண்டே வெளியில் ஓடி விட்டாள்.

ஆதி புன்னகைத்து விட்டு “அடியே.. என்னை ஏன் இப்படி பண்ணிட்டு போய்ட்ட..? ஏன்டி இப்படி பண்ற?” என்று தேவ்வின் அறையில் படுத்துக் கொண்டு கட்டிலில் புரண்டு கொண்டிருந்தான்.

அங்கு திவியோ “டேய் மாமா உன்னை எப்படி நான் வச்சு சமாளிக்க போறேன்னு தெரியல டா… கடவுளே இதே மாதிரி எப்பவும் நானும் என் மாமாவும் சந்தோஷமா இருக்கணும்” என்று வேண்டிக் கொண்டு தூக்கத்தை தழுவ, தூக்கம் அவளுக்கு தூரமானது. இங்கு இவனும் தூக்கம் இல்லாமல் படுத்துக் கொண்டே இருந்தான்.

இவர்களின் சேட்டையில் நிலாமகள் வெட்கம் கொண்டு தன்னவனை காணாமல் மறைந்து போக எத்தனிக்க, அவளை உடனே காணும் நோக்கில்  சூரியன் முந்திக்கொண்டு வர, ஆதியின் வீட்டில் விடியற்காலை 5 மணி முதல் 6 மணி வரை நடைபெறவிருக்கும் திருமணத்திற்கு அனைவரும் எழுந்து எறும்பு போல சுறுசுறுப்பாக வேலைகளை செய்து கொண்டிருந்தனர்.

ஆதி தன் அறையில் தயாராகிக் கொண்டிருக்க பல பல கனவுகள் அவன் கண் முன்னே.

தன் யாதுமாகிய யதுவின் கழுத்தில் மாங்கல்யத்தை பூட்டி மனதை திருடி, தன் மஞ்சத்தில் அவளைக் கொன்றுவிட்டு அதன் விளைவாக அவளைப் போல் ஒரு ஆண் மகனையும் தன்னைப் போல் ஒரு பெண் மகளையும் ஈன்றெடுத்து,  இருவரின் மத்தியில் இவர்களின் பாசப்பிணைப்பை எண்ணிக்கொண்டு, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி, குழந்தைகள் வளர்ந்து ஒவ்வொரு துறையிலும் சாதித்து, தன்னிடமும் தன்னவளிடமும் காட்டும் பரிசுகளை பார்த்து மகிழ்ந்து, அவர்களின் திருமண வயதில் அவர்களுக்கு திருமணம் செய்து வைத்து, தங்களின் பெயரப்பிள்ளைகளை கண்டு, அவர்களும் வளர்ந்து அவர்களுக்கும் திருமணம் செய்து வைக்கும் தருணத்தில் ஆதியும் யதுவும் ஒருவருடைய கையை ஒருவர் பிடித்துக் கொண்டு இருக்க, ஆதியின் தோளில் சாய்ந்து முதுமையிலும் அவர்கள் காதல் முதுமை அடையாமல் இருப்பதை எண்ணி மகிழ்ந்து கொண்டிருந்தான், ஆதி.

அவனின் கனவு உலகத்தை தேவ்வின் குரல் கலைத்தது, “அண்ணா.. ரெடியாயிட்டீங்களா.. வர சொல்றாங்க” என்று அழைக்க,

ஆதியோ ‘என் கனவுலயும் சரி, அவளை கரெக்ட் பண்றப்போவும் சரி, அதுல மண்ணள்ளிப் போடுறதே இவனுக்கு வேலையா போச்சு’ என்று அவனை மனதில் கறுவிக் கொண்டே, வெளியில் “வரேன்டா போடா” என்று அனுப்பி வைத்தான். 

அங்கு திவியின் அறையிலும் “இன்று எப்படியாவது அவனிடத்தில் விவாகரத்து வேண்டாம் என்பதை கூற வேண்டும்” என்று எண்ணிக் கொண்டும்,

அதே கனவை அவனோடு கைகோர்த்து, கடற்கரை மணலில் நடந்து, தான் கருவுற்றிருக்கும் நேரத்தின் போது அவனின் அரவணைப்பில் திளைத்து, மூச்சுக்கு முந்நூறு முறை ஆதியின் முகத்தில் முத்தத்தை பொழிந்து, அவன் அருகாமையில் தன்னை மறந்து என்றும் அவனவளாகவே இருக்கும் தருணத்தை எண்ணிக் கொண்டிருந்தாள் மணமகள்.

அவளின் அழகிய கனவை ரவீணாவின் குரல் கலைத்தது. “திவி சீக்கிரம் இந்த புடவை கட்டிட்டு வா” என்று கூற, திவ்யாவும் அன்று தன்னவன் எடுத்துக் கொடுத்த புடவையை அணிந்து வர தயாராகினாள்.

மங்கள வாத்தியம் முழங்க மணமேடையில் ஐயர் கூறின மந்திரங்களை அரைமனதுடனும்,  அவள் வருகைக்காக பாதி மனதை அவளிடம் விட்டு  சென்றுகொண்டிருந்த மீதி மனதை இழுத்துப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தான், ஆதி. 

அவன் மனதில் ‘ஐயரே..! இந்த மந்திரம் சொன்னது போதும். சீக்கிரம் பொண்ண அழைச்சிட்டு வாங்கோ. டயலாக் சொல்லுங்களேன்’ என்று புலம்பிக் கொண்டிருக்க, அவனின் புலம்பலை பொருட்படுத்தாது அவரோ முக்கியமாக மந்திரத்தையே கூறிக்கொண்டிருந்தார்.

மேலும் “தம்பி வேடிக்கை பார்க்காம, இங்க கவனத்தை செலுத்துங்கோ… ஓம குண்டத்தில் அதை எடுத்து போடுங்கோ” என்று கூற,

ஆதி ‘இந்த மனுசன’ என்று மனதில் நினைத்துக் கொண்டே,  “போடுறனே.. நல்லா போடுறனே..” ஆதி அந்த ஓமக்குச்சிகளையும் சில பொருட்களையும் போட்டுக் கொண்டிருந்தான்.

அப்போது சரியாக பார்ப்பனர் “பொண்ண.. அழைச்சிட்டு வாங்கோ” என்று கூற, ஆதிக்கோ மனதில் குத்தாட்டம் போட வேண்டும் போல் இருந்தது.

அவன் எதிர்பார்ப்பை பொய்யாக்காது, அவன் எடுத்துக் கொடுத்த நீலம் கலந்த வெண்மை நிறம் புடவையை அணிந்து கொண்டு வந்து கொண்டிருந்தாள் திவி. அவளைக் கண்டவுடன் விழிகளை அகற்றாது அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். 

முகத்தில் புன்னகையே பெரு நகையாக அமைய,  சிறிய ஒப்பனையுடன் சிறிய அளவிலான நகைகள் மட்டும் அணிந்து, அலட்டிக்கொள்ளாமல் ஆதியின் கண்களுக்கு தேவதையாக தெரிந்தாள் அவனின் யாதுமாகிய யது.

வேஷ்டி சட்டையில் தன்னவனை கண்டவுடன் அவனை அரவணைத்துக் கொள்ள துடிக்கும் கைகளை அடக்கிக்கொண்டு ‘டேய் எப்படி இருக்க நீ.. யூ ஆர் சோ ஸ்வீட் பேபி..  ரொம்ப அழகா இருக்க டா.. அய்யோ எத்தனை பேர் உன்னை சைட் அடிக்கும் போறாங்களோ.. கடவுளே… உன்னை அப்படியே’ என்று நினைத்துக்கொண்டே, அவனை கண்டு கொண்டே, அவன் அருகில் வந்து அமர்ந்தாள்.

இதற்கிடையே கோகுல் பவித்ராவையும், சக்தி ரவீணாவையும் சைட் அடித்துக் கொண்டிருக்க, தேவ்வும் பாரதியும் எப்போதும் போல் தன் கைவண்ணத்தில் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டிருந்தனர்.

அங்கு சென்ற விஷ்ணு, “இப்ப எதுக்கு ரெண்டு பேரும் அடிச்சுகிட்டு இருக்கீங்க.? அங்க தாலி கட்டப் போறாங்க.? சீக்கிரம் போங்க” என்று கூற,

தேவ் “ஆமா ண்ணா.. வாங்க நாம போலாம் இந்த முட்டைக்கண்ணி என்னமோ பண்ணட்டும்” என்று கூற,

விஷ்ணு “ஏன்..? என்ன பண்ணா…? என்னடா பண்ண.?” என்று பாரதியைப் பார்த்து கேட்க,

பாரதி “நான் ஒண்ணுமே பண்ணல.. நான் இந்த பாயசத்தை எடுத்ததக்கு வந்து அடிச்சுட்டு போறான்” என்று உதட்டை பிதுக்கி கொண்டே கூற,

விஷ்ணு “டேய் எதுக்கு டா அடிச்ச.?”

தேவ் “அண்ணா நீங்க என்ன லூசு மாதிரி பேசுறீங்க.. இன்னும் கல்யாணமே முடிக்கல அதுக்குள்ள வந்து பாயாசத்தை குடிக்கிறா. இவகிட்ட இருந்து எந்த சாப்பாடு பொருளை மறைத்து வைக்கவே முடியலை” என்று கதற,

விஷ்ணு “அவ என் தங்கச்சிடா அப்படித்தான் இருப்பான்..” என்று கூறினான்.

தேவ் “உங்களுக்கு எத்தனை தங்கச்சி.? ஆல்ரெடி அப்படிதான் திவி அண்ணிய சொல்லி இருக்கீங்க. இப்ப என்ன முட்டக்கண்ணியையும் அப்படி சொல்றீங்க.?”என்று கூற, 

விஷ்ணு “டேய்.. எனக்கு திவி தங்கச்சின்னா, திவ்யாவோட தங்கச்சியும் எனக்கு தங்கச்சி தான் டா..” என்றான்.

அவன் “ஆமாமா ஆளாளுக்கு தங்கச்சி தங்கச்சி ன்னு சொல்லுங்க யாரும் யாரையும் கரெக்ட் பண்ண விடமாட்டீங்க.” என்று முணுமுணுக்க, 

விஷ்ணு விழிவிரித்து “என்ன” என்று கேட்க

தேவ் “இல்ல.. இல்ல.. ஒன்னும் இல்ல வாங்க போகலாம்.. தாலி கட்ட போறாங்க..” என்று சமாளித்துக் கொண்டே அவ்விடம் விட்டு நகர்ந்தான்.

அனைவரின் ஆசியுடனும் தன் மனம் கவர்ந்தவன் கையால் மாங்கல்யத்தை வாங்கும் தருணத்திற்காக பெண்ணவள் எதிர்பார்த்து அமர்ந்து கொண்டிருந்தாள். அவளின் எதிர்ப்பார்ப்பை பொய்யாக்காது,

ஐயரும் “கெட்டி மேளம் கெட்டி மேளம்… மாங்கல்யம் தந்துனானேனா மமஜீவன ஹேதுநா” என்று மந்திரம் உரைக்க, ஆதித்தன் அவனவளின் கழுத்தில் தன்னவள் என்று அடையாளமாகத் திருமாங்கல்யத்தை பூட்டினான்.

அவள் கண்ணில் கண்ணீர் வடிய நிமிர்ந்து பார்த்தவள் கண்களை மூடி அதை மனதார ரசித்தாள். கண்கள் மூடி அதை ரசித்து இருந்தவள் தன் நெஞ்சை தொட்டு பார்க்கையில் அதில் அவன் கட்டிய மாங்கல்யம் கர்வத்துடன் தொங்கிக் கொண்டிருந்தது.

மீண்டும் அதை தொட போகையில், தன் 4 வயது மகள் “யது அம்மா பசிக்குது மா” என்று கூற தன் கடந்த கால நினைவுகள் இருந்து மீண்டாள் மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி ஆதித்யா. இப்போது அதே மாங்கல்யம் பாரமாக நெஞ்சில்… மனதில் பல வலிகளுடன்…

கனவு தொடரும்..🌺🌺🌺🌺

மீ எஸ்கேப் 🏃🏼‍♀️🏃🏼‍♀️🏃🏼‍♀️🏃🏼‍♀️🏃🏼‍♀️

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
6
+1
2
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்