Loading

ஆட்சியர் கனவு – 24 💞

திவியை என்ன செய்யலாம் என்று ஆதி யோசித்து கொண்டு இருக்க, அப்போது அவனுக்கு வரப்பிரசாதமாய் ஒரு வாய்ப்பு அமைந்தது.

அவன் யோசித்து கொண்டிருந்த வேளையில், அப்போது சரியாக பவியும் பாரதியும் “மாமா.. மாமா.. வாங்க ஒரு போட்டோ எடுத்துக்கலாம்” என்று அழைக்க, அவனும் திவி கடுப்பாவாள் என்று சரி என்றான்.

ஆனால் இவன் நினைத்தது வேறு, நடந்தது வேறு. திவி இதை எதையும் கண்டு கொள்ளவே இல்லை. ஆனால் சுப்ரியாவோ, வெந்துக் கொண்டு இருந்தாள்.

மூவர் அருகிலும் வந்தவள் “என்ன நீங்க அவன மாமான்னு இவன் பின்னாடியே சுத்துறீங்க. அவன் எனக்கும் தான் மாமா. சொல்ல போனா.. நான் தான் ஆதிய கல்யாணம் செஞ்சிக்க போறேன். இல்ல ஆதி மாமா?” என்றாள் கொஞ்சலாக. (சோலி முடிஞ்சது.. இந்த புள்ள இப்போ தான் சொல்லனுமா.. கடவுளே..எல்லாரும் மாட்டிக்கிட்டாய்ங்க🤣🤣 மீ எஸ்கேப்)

இதில் ஆதியின் பெற்றோரும் திவியின் பெற்றோரும் அதிர்ந்து தான் போயினர்.

சக்தி நக்கலாக ஆதியை பார்த்து “மாட்னா டா மவனே..” என்றான்.

ஆதி “நான் ஏன் டா மாட்ட போறேன்.. திவி தான் மாட்டுவா.. இப்போ அவ எப்டி சமாளிக்க போறா.?” என்று பாவமாய் இருவரும் திவியை பார்த்தனர்.

சுப்ரியா கூறியதை கேட்டு திவி தான் தலையில் அடித்து கொண்டாள்.

திவி “போச்சு. இவ நேரங்காலம் தெரியாம உளறி வச்சிட்டா.. இப்போ எப்டி சமாளிக்க போற திவி.?”

சிவஞானம் “நீ யாரு மா..? நீ எப்டி ஆதிய கல்யாணம் பண்ணுவ.?”

சுப்ரியா “ஆதி எனக்கும் தான் முறைப்பையன்.. ஆமா தான திவி” என்று அவளை கோர்த்து விட, அனைவரும் திவியை தான் பார்த்து கொண்டு இருந்தனர்.

திவி “என்ன எல்லாரும் நம்மள லுக் விடுறாங்க.?” என்று விட்டு ஆதியை பார்க்க, அவனோ இதற்கும் எனக்கும் சம்மந்தமே இல்லை நீயே சமாளி என்பது போல் முகத்தை வைத்து கொண்டான்.

“இவன் நமக்கு ஹெல்ப் பண்ண மாட்டான்.” என்று விட்டு சக்தியை பார்க்க, அவனோ வராத போனை காதில் வைத்து கொண்டு “ஹலோ..! நீங்க பேசுறது சரியா கேட்கலை.. இருங்க சிக்னல் கிடைக்குற இடத்துக்கு வரேன்” என்று விட்டு வெளியில் சென்றே விட்டான்.

திவி தான் மனதில் “ப்ருட்டஸ்..” என்று அவனை கருவினாள்.

சிவஞானம் “என்ன திவி சொல்றா இந்த பொண்ணு.?”

திவி “அது.. டார்லிங்க்..”

தெய்வானை “இந்த பொண்ணு சொல்றது உண்மையா திவி மா.?” என்றார் வருத்தமாக.

திவி எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, ரோஜா “உன்னை தானா எல்லாரும் கேக்குறாங்க.. பதில் சொல்லு திவ்யா” என்றார் சற்று அதட்டலாக.

திவி “ப்ச்.. இவ வேற யாரும் இல்லை.. ராணி அத்தையோட அண்ணா பொண்ணு தான்” என்றாள்.

சிவஞானம் எதுவும் பேசாமல் இருக்க, பெருமாள் “அப்டியே இருந்தாலும் ஆதிய கட்டிக்க போற உரிமை உனக்கு தான் திவி இருக்கு” என்றார்.

திவி அவர் கூறியதை சட்டை செய்யவே இல்லை. அதில் அவர் தான் அமைதியாகி விட்டார்.

தெய்வானை “சரி மா.. அப்டினாலும் நீ சரவணன் பசங்கல தான மா உரிமையோட கல்யாணம் செய்துக்கணும்..”

சுப்ரியா, “அவங்க.. அவங்க.. குடும்பத்துல தான் யாருமே இல்லயே அத்தை..” என்றாள் வருத்தமாக.

சிவஞானம் “யாருமா சொன்னா.? என் பையனும் மருமகளும் தான் இல்ல.. அவங்க பசங்க இருக்காங்க தானே.. என்ன திவி?” என்று கூறிட,

திவி தான் “அவசரப்பட்டு இந்த டார்லிங் கிட்ட எல்லாம் சொன்னது தப்பா போச்சு.. எல்லா குண்டையும் நீ இன்னைக்கு ஒரே நேரத்துல சமாளிக்கணும் திவி.. பீ ரெடி ஃபார் தட்.” என்று நினைத்து கொண்டு இருக்க, ஆதி தான் பேரதிர்ச்சியில் இருந்தான்.

சுப்ரியா திவியை முறைத்து கொண்டு இருக்க, திவி “இந்த லூசு ஏன் நம்மள முறைக்குறா.? கொஞ்சம் கூட அறிவே இல்ல.. சொன்னது அத்தை முறைக்குறது என்னையா.?” என்று ஆதியை பார்க்க, அவன் இவளை தான் பார்த்து கொண்டு இருந்தான்.

ஆதி திவியிடம் “அவங்க சொல்றது உண்மையா?” என்றான் உடைந்த குரலில்.

திவி ஆம் என்று தலையசைக்க, அப்படியே கீழே அமர்ந்தான் ஆதி.. விரைந்து அவன் அருகில் சென்றவள் “ஆதி.. என்ன பாரு ஆதி” என்று கூற,

அவளை நிமிர்ந்து பார்த்தவன் ‘இன்னும் என்கிட்ட என்ன என்ன மறச்சு வச்சி இருக்க?’ என்ற ரீதியில் பார்த்தான்.

திவி “என் மேல உனக்கு நம்பிக்கை இருக்கு தான ஆதி.?” என்றாள் நம்பிக்கையாக.

ஆதி “உன்னை நம்பாம வேற யாரை நான் நம்ப போறேன் யது.? நீ எது செஞ்சாலும் அதுல காரணம் இருக்கும்” என்று கூறினான்.

திவி “இது போதும் ஆதி..” என்று விட்டு அனைவரிடமும், எல்லாம் ஒரு நாள் கண்டிப்பா சொல்லுவேன்.. இப்போ பசிக்குது.. சாப்டலாமா.?” என்றாள் பாவமாக.

அனைவரும் சிரித்து விட்டு சாப்பிட அமர்ந்தனர்.

அனைவரும் கலகலப்பாக பேசி கொண்டு இருந்தனர். அனைத்தையும் மறந்து இன்று ஆதி மனம் முழுக்க நிம்மதியோடு சிரிப்பதை பார்த்து திவிக்கு தான் பேரின்பமாக இருந்தது.

சக்தி “என்ன திவி ஆதியை சைட் அடிக்குறியா..?”

திவி “வாங்க போலீஸ்கார்.. என்ன எல்லார்கிட்டையும் கோத்து விட்டுட்டு நீங்க என் பிரண்ட்ட சைட் அடிக்க போய்டீங்களா.?” என்றாள் கூர்மையாக,

சக்தி தான் திகைத்து என்ன கூறுவது என்று தெரியாமல் விழித்து கொண்டு இருந்தான்.

திவி “என்ன முழிப்பு. ம்ம்ம்..  எனக்கு எல்லாம் தெரியும்.. நானும் பாத்துட்டு தானே இருக்கேன். கண்ணும் கண்ணும் நோக்கியான்னு, ரெண்டு பேரும் பேசிக்குறத.. ஹ்ம்ம்.. அப்ரோம்.. எத்தனை நாளா.?” என்றால் ஆதியிடம் இருந்து பார்வையை திருப்பாமலேயே..

சக்தி “அது.. அது.. நான் மூணு வருஷம் திவி.. பட் அவ இப்போ தான்  ரெண்டு மாசமா” என்று இழுத்தான்.

திவி “என்னது மூணு வருசமாவா..? நான் சும்மா ஒரு பேச்சுக்கு தான் கேட்டேன்.. இப்டி சொல்லிடீங்க ப்ரோ..”

சக்தி “அப்போ நானா தான் உளறுனேனா ” என்றிட, திவி தான் சிரித்து கொண்டே ஆம் என்றாள். சக்தி தலையில் அடித்து கொண்டு “இப்போ தான் திவி அவ சும்மா பேசிக்கிட்டு இருக்கா.. நீ ஏதாவது கேட்டு என் லவ்ல மண்ண அள்ளி போட்டுடாத” என்றான் இரு கரம் கூப்பி.

திவி “கவலைப்படாதே மகனே.. யாம் உனக்கு துணையாய் இருப்போம்.. என் தோழி ரவீணாவை நான் உனக்கு கரெக்ட் செய்து தருகிறேன்..” என்றாள் ஆசிர்வாதம் செய்யும் பாவனையில்.

அருகில் வந்த விஷ்ணு “திவி… இப்போ நீ என்ன வேலை செஞ்சிக்கிட்டு இருக்கன்னு தெரியுதா.?”

திவி “மாமா வேலை தான் பாக்குறேன்னு தெரியுதுல. அப்ரோம் எதுக்கு வெங்காயம் கேள்வி கேக்குற.. அமைதியா இரு..” என்றாள்.

இவர்களின் அலப்பறையில் இரவு வந்திட, அனைவரும் கிளம்பினர்.

தெய்வானையின் வற்புதலின் பேரில் திவி குடும்பம் அங்கு இரவு தங்க சம்மதித்தனர்.

திவி ஆதியிடம் அவன் தங்கி இருந்த சரவணன் வீட்டில் சிறிது காலம் சக்தியும் செல்வி அம்மாவும் இருக்கட்டும் என்று கூறி இருந்ததால், அவன் தன் பெற்றோர்களுடன் இங்கேயே இருந்து விட்டான்.

அனைவரும் இரவு உணவு முடித்து விட்டு உறங்க சென்று விட, ஆதியை தேடி சென்றாள் திவி.

ஆதி வெண்ணிலவை ரசித்து கொண்டு இருக்க, மெல்ல அவனருகில் சென்றவள் அவனை பயமுறுத்த நினைக்கையில், அவன் அவளை கண்டு கொண்டு தன் பக்கம் இழுத்தான்.

திவி “அய்யோ.. பாத்துடியா.. ப்ச்.. ஓகே.!” என்று அவன் அருகில் நின்று இவளும் நிலவை பார்த்துக் கொண்டு இருந்தாள்.

ஆனால் அவன் எங்கே நிலவை பார்க்க, இவளைத்தான் பார்த்து கொண்டு இருந்தான்.

நீ அருகில் இருக்கையில்
உன்னைத் தவிர
வேறெதையும்
ரசித்திட மாட்டேன் என்கிறது
என் கரு விழிகள்.

நீ உடன் இருக்கையில்
உன்னைத் தவிர
வேறெதையும்
சீண்டிட மாட்டேன் என்கிறது
என் மூச்சு காற்று..!

ஆதிக்கு அப்போது தான் அவள் இன்னும் வாழ்த்து கூறவில்லை என்பது நினைவு வர, திவியை ஒரு ஆராய்ச்சி பார்வை பார்த்தான்.

திவி “ஆதி.. இந்த பர்த்டே.. உன்னால மறக்கவே முடியாதுல.?” என்று நிலவை ரசித்தபடி கூற,

ஆதி பதில் ஏதும் கூறாமல் அவளையே பார்த்து கொண்டு இருந்தான்.

திவி “என்ன பதில் காணோம்”என்று நினைத்து திரும்பியவள், அவன் தன்னை தான் பார்க்கிறான் என்று எண்ணி பார்வையை தாழ்த்தி கொண்டாள்.

ஆதி “நீ எனக்கு இன்னும் விஷ் பண்ணவே இல்ல யது” என்றான் வருத்தமாக..

திவி அதிர்ந்து “வாட்..?” என்று அவனை தீயாக முறைத்து கொண்டு இருந்தாள்.

ஆதி “என்ன வாட்..? இன்னும் நீ விஷ் பண்ணல டி குட்டச்சி.” என்றவனை,
சரமாரியாக அவனை அடித்தாள்.

ஆதி “ஆஆஆஆ… அடிக்காத டி.. ஏன்டி அடிக்குற.?’ என்று கத்த,

திவி “பண்ணி…எருமை.. நான் தான்டா உனக்கு பர்ஸ்ட் விஷ் பண்ணேன் லூசு” என்றாள் முறைத்து கொண்டே..

ஆதி முழித்து கொண்டு இருக்க, “என்ன டா முழிக்கிற தடிமாடு.. நைட் 12 மணிக்கு யார் டா உனக்கு விஷ் பண்ணா.?” என்று கேட்க,

அப்போது தான் அவனுக்கு புரிந்தது திவி உண்மையிலேயே வாழ்த்து கூறி இருக்கிறாள் என்று. “அப்போ.. அது கனவு இல்லயா.?” என்று கேட்க,

திவி “அட எருமை.. நீ அத கனவுன்னா நினைச்சிக்கிட்டு இருக்க ” என்று மேலும் அவனை அடித்தாள்.

அவன் கத்த கத்த அடி வெளுத்து வாங்கியவள், சிறிது நேரம் கழித்து “உன் வாட்ஸ் அப் கூட நீ பாக்கலையா.?” என்று கேட்டிட,

ஆதி இல்லை என்று தலையை ஆட்டியதில்  கோவத்தின் உச்சிக்கே சென்று விட்டாள்.

திவி “எருமை.. எருமை… நீயெல்லாம் எதுக்கு டா போன் வச்சி இருக்க.. பக்கி பயலே.. உனக்கு போன் ஒரு கேடு..” என்று திட்ட, ஆதி தான் பாவமாக முகத்தை வைத்து கொண்டு இருந்தான்.

திவி “என்கிட்ட நீ பேசாத டா.. எருமை.. எருமை.. அயோ இந்நேரம் உன்னை திட்ட கூட வார்த்தை வர மாட்டிங்குது.. லூசுபயலே..” என்று விட்டு சென்றாள், அவன் யது யது என்பதையும் காதில் வாங்காமல்.

அப்போது அங்கு தேவ் வர, ஆதியிடம் சென்றவன் “என்ன ஆச்சு ண்ணா.. ஏன் திவி கோவமா போறா.?” என்றிட,

ஆதி “டேய்.. அவ உன் அண்ணியா வர போரவ.. மரியாதையா பேசு டா ” என்றான் அதட்டலாக..

தேவ் சிரித்து விட்டு “ம்ம்ம் சரி.. அண்ணியார் ஏன் இப்போ இவ்ளோ கோவமா போறாங்க.?”என்று கேட்க,

ஆதி “அவ தான் என் பர்த்டேக்கு பர்ஸ்ட் விஷ் பண்ணாலாமா டா.. ஆனா நான் அத கனவுன்னு நினைச்சிட்டேன்.. அது மட்டும் இல்ல வாட்ஸ் அப்ல கூட ஏதோ சென்ட் பண்ணி இருக்காலாம் நான் பாக்கல டா. அதான் கோச்சிக்கிட்டு போறா.” என்றான் பாவமாக.

தேவ் “சரி தான்.. அவ்ளோ தூக்கத்துலயா இருந்தீங்க.. என்று விட்டு, இப்போவாவது வாட்ஸ் அப் பாருங்க அண்ணா..” என்றான்.

ஆதி வாட்ஸ் அப்பை பார்க்க, அதில் பல வாழ்த்துக்கள் வந்திருக்க, திவியின் எண்ணை தேடியவனின் கண்களில் சிக்கியது.

அதை எடுத்தவன் விழிகள் விரிய படித்து கொண்டு இருந்தான்.

தேவ் “அதுல அப்டி என்ன தான் அண்ணா இருக்கு” என்று கேட்க, வெட்கத்துடன் அவனிடம் போனை நீட்டினான்.

சரியாக மணி 12. “இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் என் தியா மாமா🎂🎂.. நீ எப்போவும் சந்தோசமா இருக்கணும்.. மாமா.. நீ அனாதை கிடையாது.. உனக்கு நெறய சொந்தம் இருக்கு.. ஏன் உனக்கு சொந்தமானவ நான் இருக்கேன்.. எப்பவும் உன் கூட இருப்பேன்..  உனக்கு தோழியா, உன் கஷ்டத்துல கூட இருக்க காதலியா, உன் கூட எப்போவும் மனைவியா இருப்பேன் டா எருமை மாமா.. ஹாப்பி பர்த்டே லூசு ”  என்று இருந்தது.

அடுத்து மணி காலை 6.00 “குட் மார்னிங் டா மை ரௌடி மாமா.. நீ செம கியூட் டா.. உன்னை பர்ஸ்ட் டைம் பாத்தேன்ல காலேஜ்ல அந்த மாதிரி ட்ரெஸ் தான் நீ இன்னைக்கு போடணும்..டா.. “

காலை 10.00 “உன் இதழ் முத்தத்தில் சிவந்த என் கன்னங்களை சிறைபிடிக்க, மீண்டும் உன் இதழை தயாராக வைத்து கொள்ள டா கள்வா..”

அவன் பெற்றோர்களை கண்ட போது “என்னால் நீ தொலைத்த பொக்கிஷங்களை நானே மீட்டு கொண்டு வந்து விட்டேன்.. இனி.. உன் புன்னகைக்கு நான் அடிமை.. என்றென்றும்.. காதலாக உன்னவள்..”

அடுத்து “நீ எந்த வித குற்ற உணர்ச்சியில் இருக்கிறாயோ அதை தூக்கி எறி.. நீ தவறு செய்யவில்லை.. என்னவன் என்றும் தவறு செய்ய மாட்டான்.”

இப்போது “எப்டியும் இப்போ தான் நீ இந்த மெசேஜ் எல்லாம் படிச்சி இருப்பனு தெரியும் நாயே.. பேயே.. டைம் வேஸ்ட் பண்ணாம சீக்கிரம் வந்து என்ன சமாதானம் படுத்து டா என் லூசு மாமா.”

இதை தேவ் வாசித்த அடுத்த நொடி திவியின் அறையில் இருந்தான் ஆதி..

அந்த அறை முழுக்க, மெழுகுவர்த்தியால் அலங்கரித்து இருக்க, உள்ளே வந்தவன் திவியை தேடினான்.

அவனை பின்னே இருந்து அணைத்து கொண்டவள் “லவ் யூ தியா” என்றாள் காதலாக..

அவளை தன் முன் கொண்டு வந்தவன், காதலாக, “ஒண்ணே ஒன்னு..” என்று அவள் இதழில் கை வைத்து கூற,

திவி தான் வெட்கத்தில் சிவந்து போனாள். மௌனமாக இருக்க, அதையே சம்மதம் ஆக்கியவன், அவள் இதழில் தஞ்சம் அடைந்தான். நொடிகள் நிமிடங்களாக எத்தனை நேரம் மூழ்கினானோ தெரியவில்லை, இருவரும் லயித்திருக்க, திவி மூச்சு விட முடியாமல் இருப்பதை அவன் உணர்ந்த பின்னே அறை மனதோடு அவளை விடுவித்தான்.

அவன் செயலில் சிவந்தவள், அவனின் காந்தபார்வை தாங்க இயலாது அவன் மார்பிலே சாய்ந்து கொண்டாள்.

அவனும் அவளை அணைத்து கொண்டே..”லவ் யூ சோ மச் யது.. ஐ நீட் யூ மேட்லி” என்றான் காதலாக.

அதில் மேலும் அவனுள் தஞ்சமடைந்தாள் திவி..

பின் தேவ் அங்கு வர, உடனே விலகினாள்.

ஆதி “இப்போ உனக்கு என்ன டா வேணும்.?” என்றான் கடுப்பாக.

தேவ் சிரித்து விட்டு “உங்க ரூம்க்கு போய் படுங்க.. அம்மா தேடுறாங்க” என்று விட்டு சென்றான்.

இருவரும் அரை மனதாக அவரவர் அறையில் உறங்க, இருவருக்கும் உறக்கம் என்பது தூரமாய் போனது..

கனவு தொடரும்..🌺🌺🌺

ஹாய் பிரண்ட்ஸ்…  அப்டியே.. கொஞ்சம் கமெண்ட் பண்ணுங்க..

ரெடி ஃபார் நெக்ஸ்ட் யூ.டி….

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
10
+1
3
+1
3

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்