Loading

ஆட்சியர் கனவு 15.💞

அடுத்த நாள் பொழுது இனிமையாக விடிய, ஆதவன் தன் செம்மை கதிர்களை விரித்து தன் வரவை காண்பித்தான்.

யது “திவி… எந்திரி.. டைம் ஆச்சு.. சீக்கிரம் போனும். இன்னையோட காம்ப் முடியுது”

திவி ” ப்ச்.. யது.. எப்பபாரு நீ சீக்கிரம் எழுந்து அம்மா கிட்ட என்ன திட்டு வாங்க வைக்குற.. இட்ஸ் டூஊஊ மச் டி”

யது சிரித்து விட்டு ஒரு பாடலை முணுமுணுக்க ஆரம்பித்தாள்.

உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள் நெஞ்சு சொல்கின்றது …
பூவோடு பேசாத காற்றென்ன காற்று ஒரு பூஞ்சோலை கேட்கின்றது… 
மண்ணில் ஏன் ஏன் ஏன் நீயும் வந்தாய் எந்தன் பெண்மை பூப்பூக்கவே …
நான் பிறக்கும் முன்னே அட நீ பிறந்ததேன் நான் பிறக்கும் போது நீ உந்தன் கையில் என்னை ஏந்தத்தானா..!

என்று பாட, அதை கேட்ட திவி அடுத்ததை தொடர்ந்தாள்.

மெல்லிய ஆண்மகனை பெண்ணுக்கு பிடிக்காது முரடா உன்னை ரசித்தேன்..
தொட்டதும் விழுந்துவிடும் ஆடவன் பிடிக்காது கர்வம் அதை மதித்தேன் ..
முடிகுத்தும் உந்தன் மார்பு என் பஞ்சு மெத்தையோ
என் உயிர் பிதுக்கும் முத்தம் அது என்ன வித்தையோ
உன்னை போலே ஆணில்லையே 
நீயும் போனால் நானில்லையே நீரடிப்பதாலே மீன் அழுவதில்லையே 
ஆம் நமக்குள் ஊடல் இல்லை..!

என்று பாடி முடிக்க, அங்கு யது அவளை தீயாய் முறைத்து கொண்டு இருந்தாள்.

திவி ‘இவ ஏன் நம்மள இப்டி முறைக்குறா.?’ என்று நினைத்து விட்டு, ஏன்டி பத்ரகாளி மாதிரி நிக்குற.?” என்று வினவினாள்.

யது “இப்போ எதுக்கு இந்த பாட்டை பாடுன.?”

திவி ” நீ பாடிட்டு இருந்த.. சோ கண்டிநியூ பன்னேன்..”

யது “… அப்டிலாம் பாடாத.. இனிமே அந்த பாட்டை நான் மட்டும் தான் பாடுவேன்..”

திவி ” ஏன் நீ மட்டும் தான் பாடனும்.? நான் அப்டி தான் பாடுவேன்..”

நீயொரு தீயென்றால் நான் குளிர் காய்வேன் அன்பே தீயாய் இரு 
நீயொரு முள்ளென்றால் நான் அதில் ரோஜா அன்பே முள்ளாய் இரு..

யது சிணுங்கி கொண்டே.. “திவி பாடாத டி” என்று கத்த,

திவி அதை காதில் வாங்காமல்,

நீ வீரமான கள்ளன் உள்ளூரும் சொல்லுது 
நீ ஈரமான பாறை என் உள்ளம் சொல்லுது
உன்னை மொத்தம் நேசிக்கிறேன் உந்தன் மூச்சை சுவாசிக்கிறேன்
நீ வசிக்கும் குடிசை என் மாட மாளிகை 
காதலோடு பேதமில்லை..!
உன்னோடு வாழாத…

யது “திவிவி… பாடாதன்னு சொல்றேன்ல” என்று அவள் மேல் தலையணையை வீச,

திவி “ஏன் யது.. அப்டி என்ன அந்த பாட்டுல இருக்கு.. ஏன் என்ன பாட வேண்டாம்னு சொல்ற.?”

யது “அதுல ஒன்..ஒன்னும் இல்ல…ஆனா நீ பாடாத”

திவி “ஏய்.. அந்த சாங் லவ் சாங் டி.. நீ என்ன உன் லவ்வர்க்கா பாடுற.? நான் பாடுனா உனக்கு ஏன் கோவம் வருது?” என்று கேள்வியாய் பார்க்க,

யது “ஹான்.. அது அது.. ” அதற்குள் ரோஜா அவர்களை அழைக்க,”ஹான் வரேன் மா.!” என்று ஓட,

வெளியில் செல்ல போனவளை தடுத்து  திவி யதுவிடம் “நான் பாடுனது தப்பா” என்று முகத்தை பாவாமாய் வைத்து கொண்டு கேட்டாள்.

யது “பாடுனது தப்பு இல்ல.. அது.. ” ‘அய்யோ எப்டி சொல்லுவேன்..என்ன சொல்லுவேன்.? சொன்னா இந்த வயசுல இதுலாம் தப்புன்னு தான் சொல்லுவாங்க.. சோ இப்போதைக்கு அமைதியா இரு யது… அப்ரோம் ஸ்கூல்ல ரெண்டு நாள் முன்னாடி மாமா பாத்தத இவை கிட்ட இன்னும் சொல்லல.. சொல்லாட்டி வேற கத்துவாளே.?’ என்று புலம்பி கொண்டு இருந்தாள்.

திவி “யது…. ஏதாவது என்கிட்ட சொல்லனுமா.?”

யது “இ..இல்ல.. திவி.. அதுலாம் ஒன்னும் இல்ல.. வா கிளம்பலாம்..”

திவி அவளை நம்பாத பார்வை பார்த்துவிட்டு,”ம்ம்.. சரி வா.. வா”

இருவரும் அறையை விட்டு வெளியே வர,

ரோஜா “உனக்கு இப்போ தான் பொழுது விடிஞ்சதா.?”

திவி “ரோஜாவின் அர்ச்சனை ஆரம்பம்..” என்று எதையும் கண்டு கொள்ளாமல் பாலை அருந்த சென்றாள்.

ரோஜா “ஏய்.. இங்க ஒருத்தி கத்திக்கிட்டு இருக்கேன்.. உனக்கு காது விழலயா.?”

திவி “உன்னலாம் திருத்தவே முடியாது.. பல்லு விலக்கிட்டு பால குடிடி.. வர்ஷினிய பாரு.. காலைல சீக்கிரம் எழுந்து எனக்கு கூட மாட ஹெல்ப் பன்ரா.. நீயும் இருக்கியே.. எப்ப பாரு எதையோ ஒன்ன நோண்டிக்கிட்டே இருக்குறது.. கேட்டா எதுவும் சொல்றது இல்ல..” என்று முணுமுணுத்து கொண்டு பாலை குடிக்க,

ரோஜா “உன்னலாம் திருத்தவே முடியாது.. பல்லு விலக்கிட்டு பால குடிடி.. வர்ஷினிய பாரு.. காலைல சீக்கிரம் எழுந்து எனக்கு கூட மாட ஹெல்ப் பன்ரா.. நீயும் இருக்கியே.. எப்ப பாரு எதையோ ஒன்ன நோண்டிக்கிட்டே இருக்குறது.. கேட்டா எதுவும் சொல்றது இல்ல..” கத்தி கொண்டு இருந்தார்.

யது சிரித்து கொண்டே “அம்மா.. டைம் ஆச்சு மா!” என்க,

ராஜா “ரோஜா டீ குடு”

பவித்ரா & பாரதி “அம்மா.. ஸ்கூல்கு டைம் ஆச்சு மா” என்று கத்த

ரோஜா “அவள நான் ஒன்னு சொல்லிட கூடாது.. ஆளாளுக்கு ஒரு வேலை சொல்லுவீங்க” என்று சொல்லி கொண்டே அடுப்படிக்கு சென்றார்.

ராஜா “தினமும் ஏன் திவ்யா திட்டு வாங்குற.? ஒரு நாள் சீக்கிரம் எந்திரிச்சா தான் என்ன..?”

திவி “அப்பா.. நான் என்ன பண்றது.. நைட் முழுக்க உட்காந்து எழுதினேன். அதுனால் அப்டியே தூங்கிட்டேன்.. ஆஆஆ” என்று சோம்பல் முறித்து கொண்டே கூற, “அதுவும் இல்லாம ரோஜா கிட்ட இன்னைக்கு திட்டு வாங்கலன்னா பொழுதே போகாது” என்றாள்.

ரோஜா “இன்னும் நீ குளிக்க போலயா..?” என்று குரல் கொடுக்க,

திவி “ஹான்.. போயாச்சு.. போயாச்சு..” என்று ஓடியே விட்டாள்.

அனைவரும் கிளம்ப, திவியும் யதுவும் தங்கள் மிதிவண்டியில் கிளம்பினார்கள்.
இருவரும் மிதிவண்டியில் பேசிக்கொண்டே சென்றனர்.

யது “திவ்ஸ்.. உன்கிட்ட ஒன்னு சொல்லனும்..”

திவி “நினைச்சேன்.. சொல்லு டி வர்ஷ்”

யது”அது ரெண்டு நாள் முன்னாடி.. நம்ம காம்ப்ல..” என்று இழுக்க,

திவி”லூசு.. இழுக்காம விஷயத்தை சொல்லு..”

யது”அன்னைக்கு நீ க்ளீன் பண்ண தண்ணி பிடிக்க போனல..?”

திவி”ம்ம் ஆமா.. அப்போ என்ன ஆச்சு.?”

யது”அப்போ.. அப்போ… “

திவி”சொல்லி தொல டி.. என்னமோ ஏதோன்னு பயமா இருக்கு.!”

யது”அப்போ மாமாவை பாத்தேன்டி” என்று கூறி கண்களை மூடி கொண்டாள். பின்னே ஒரு விஷயத்தை முன்பே கூறாமல் மறைத்து வைத்து இருந்தால் கன்னம் பழுத்துவிடும் அல்லவா.?அதுவும் திவியின் கையால்..

திவி சடன்பிரேக் போட்டாள்.. “என்.. என்னது.. மாமாவையா.? எந்த மாமா வ.?”

யது”பெ..பெருமாள் மாமாவ.”

திவி அதிர்ந்து”அ..அவர் உன்கிட்ட ஏதாவது சொன்னாரா?”

யது”நான் தான் அவரை பார்த்தேன்.. அவர் என்ன பாக்கல..” என்றாள்.

திவிக்கு இப்போதுதான் ஹப்ப்பா என்று இருந்தது. பின்னே சிறு வயதில் கூறியது இன்னும் அவள் மனதில் ஆழமாய் இருக்கிறதே.. அதை அப்படியே விடாமல் யதுவை பற்றிய அனைத்து உண்மைகளும் அவள் அறிந்தும் கொண்டாலே..

திவி”சரி சரி.. வா.. இனிமே அவரை பாத்தா பத்து அடி தள்ளியே இரு”

யது”ஏன் டி.. மாமா பாவம்ல.. ஆதிய காணோம்னு எவ்ளோ கஷ்டப்பட்டு இருப்பாரு”

திவி”சரி சரி.  உடனே ஆதி புராணம் பாடாத, சீக்கிரம் கண்டு பிடிச்சு தந்துடலாம்.” என்று விட்டு “எப்படியாவது தியாவை கண்டுபிடிக்க வேண்டும்” என்ற உறுதியில் இருவரும் பள்ளிக்கு சென்றனர்.

காலம் அதன் போக்கில் செல்ல, அனைவர் வாழ்விலும் விதி தன் ஆட்டத்தை ஆடியது..
திவியும் யதுவும் எட்டாம் வகுப்பில் நுழைய இருவருக்கும் மீனா என்ற புதிய தோழி அறிமுகம் ஆனாள்.

யது”ஹாய்.. மீனு”

மீனா”ஹாய் யது..! எங்க யது(திவி) வரல.?”

யது”ம்ம் வருவா.. மிஸ் கிட்ட பேசிக்கிட்டு இருக்கா.”

இருவரும் திவிக்காக காத்துகொண்டு இருந்தனர்.

திவி”மிஸ்.. நான் உங்ககிட்ட கேட்டு இருந்தேன். இன்னைக்கு சொல்றதா சொன்னிங்க.? மிஸ்”

ஆசிரியர்”ம்ம் ஆமா திவ்யா.. வா.. இங்க வந்து உட்காரு.” என்று அழைக்க,

திவி”பரவால்ல மிஸ்.. நான் நிக்குறேன்.. நீங்க பாத்தீங்களா மிஸ்.? என்ன என்ன படிக்கணும்.?”

ஆசிரியர் “பர்ஸ்ட் நான் கேக்கிற கேள்விக்கு சரியா யோசிச்சு பதில் சொல்லனும் சரியா.?”

திவி”ம்ம்.. ஓகே மிஸ்”

ஆசிரியர்”நீ ஏன் கலெக்டர் ஆகணும்னு ஆசை படுற.?”

திவி”என்னோட சின்ன வயசு லட்சியம் அதான் மிஸ்”

ஆசிரியர்”ம்ம் அதுக்கு ஒரு காரணம் இருக்கும்ல.. அத சொல்லு”

திவி யோசித்து விட்டு”மிஸ் அது சரியான காரணமா எனக்கு தெரியல.. ஆனா அந்த இன்சிடெண்ட்க்கு அப்ரோம் தான் எனக்குள்ள இந்த லட்சியம் ஆழமா பதிஞ்சுது. முதல் இன்சிடெண்ட் – என் மாமா பையன் நான் சின்ன வயசா இருக்கப்போ தொலைஞ்சு போய்ட்டான். அதுக்கு நான் தான் முழுக்காரணம். அப்போ கண்டுபிடிக்க எனக்கு விவரம் பத்தல.. இப்போ கண்டுபிடிக்க வயசு பத்தல. ரெண்டாவது- நான் 3வது படிச்ச ஸ்கூல். அந்த ஸ்கூல் ஒழுங்காவே இருக்காது. கிளாஸ்ரூம்ல இருந்து, வாஷ்ரூம் வரை.. அப்போ என் கிளாஸ் மிஸ் கிட்ட கேட்டபோ இதுலாம் நாம கேக்க முடியாது கேட்டா உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்குன்னு நம்மள திருப்பி கேப்பாங்கனு சொன்னாங்க. ஒரு ஸ்கூல் நல்லா இருந்தா தானே மிஸ் படிக்குற எங்களுக்கு சாட்டிஸ்பேக்ஸனா இருக்கும். அப்ரோம் நான் 6த் படிக்குறப்போ மிஸ்.. ஒரு அனாதை பொண்ண கேங் ரேப் பண்ணாங்க.. அந்த அக்கா இப்போ உயிரோட கூட இல்லை, அந்த கேஸ் இன்னும் போய்ட்டு தான் இருக்கு. அப்பா அம்மா கூட இருக்க குழந்தைங்களுக்கே இங்க பாதுகாப்பு இல்லன்னு தினமும் எங்க அம்மா அப்பா பல அறிவுரை பண்ணி அனுப்புவாங்க.. அப்போ அப்பா அம்மா இல்லாத குழந்தைங்க மிஸ்.? இதுலாம் எங்க அப்பா கிட்ட கேட்டேன். அவர் ஒன்னு நம்ம கைல அதிகாரம் இருக்கணும். இல்ல அதிகாரம் இருக்குற இடத்துல நாம இருக்கணும்னு சொன்னாரு.. நானும் நிறைய புக்ஸ் படிச்சேன். எந்த ஒரு மாற்றமும் மாணவர்கள் கிட்ட இருந்து தான் உருவாகுது.. அதனால தான் மிஸ் நான் கலெக்டர் ஆனா இந்த தப்புலாம் என்னால முடிஞ்ச வரை தடுபேன்ல மிஸ்”

ஆசிரியர் அவள் கூறிய வார்த்தைகளை கேட்டு ஆச்சர்யத்தில் ஆழ்ந்தார். அவளை அந்த சம்பவம் எவ்வளவு பாதித்து இருந்தால் வார்த்தைகள் இவ்வளவு ஆழமாக வரும் என்பதை அவர் உணர்ந்தார்.

ஆசிரியர்”ம்ம்ம் சரி திவ்யா.! எப்டி படிக்கணும்?”

திவி”அதான் மிஸ் எனக்கும் தெரியல.. அதான் உங்க கிட்ட கேட்டேன்.”

ஆசிரியர் சிரித்து விட்டு”ரொம்ப ஹார்டஒர்க் பண்ணனும் திவ்யா.. சாதாரண விஷயம் இல்லை.. சரியா.. “

திவ்யா”ம்ம் சரி மிஸ்.. கண்டிப்பா நான் நல்லா படிப்பேன்”

ஆசிரியர்”ம்ம் ஏதோ ஒரு டிகிரி பண்ணனும் திவ்யா. 10 & 12 ல நல்ல மார்க் வாங்கணும். அப்ரோம் ஐ.ஏ.எஸ் எக்ஸாம் மூணு பிரிவா இருக்கு. பிரிலிமினரி, மெய்ன்ஸ், லாஸ்டடா இன்டர்வியூ..”

திவி”மிஸ் இப்போதைக்கு இது போதும். நான் அப்ரோம் வந்து கேக்குறேன் மிஸ்.. பெல் அடிச்சிடுச்சு”

ஆசிரியர்”ம்ம் சரி.. பாத்து போ!”

திவி”தாங் யூ மிஸ்” என்று செல்ல,

ஆசிரியர்”திவ்யா.!”

திவி”மிஸ்”

ஆசிரியர்”நாளைக்கு நம்ம ஸ்கூல்ல மாவட்ட போட்டி நடக்குதுல. அதுக்கு நீ தான் வெல்கம் பேட்ச்லயும், புட் கொடுக்குற அப்போவும் இருக்கணும் ஓகே வா!”

திவி”ம்ம் சரிங்க மிஸ்!” என்று விட்டு சென்றாள்.

வகுப்பறையில்…

யது” இவ்ளோ நேரம் என்ன டி பண்ணுன.?”

திவி”அது ஒன்னும் இல்ல.. மீனா எங்க.?”

யது”தோ அங்க தான் இருக்கா!”

திவி”ஓய்.. மீனா.!”

மீனா”ம்ம் சொல்லு யது!”

திவி”ஒன்னு அவள யதுன்னு சொல்லு இல்ல என்ன யதுன்னு சொல்லு.. ரெண்டு பேரையும் கூப்பிட்டு எங்களை கன்பூயூஸ் பண்ணாதா.”

மீனா”ம்ம் சரி.. சரி.. டென்ஷன் ஆகாத.. நாளைக்கு எத்தனை மணிக்கு வருவ.?”

யது”ம்ம்.. 7.30 மணிக்குலாம் வந்துட்ரோம்.”

திவி”என்னது.. 7.30 மணிக்கா.? அவ்ளோ சீக்கிரம் வந்து என்ன பண்ண போறோம்.?”

யது” லூசு.. நாம தான் எல்லாம் பண்னனும்னு வினிதா அக்கா சொன்னாங்க”

திவி”ஏய்.. மிஸ் என்ன வெல்கம் டீம் அப்ரோம் புட் குடுக்குறதுக்கு தான் இருக்கணும்னு சொன்னாங்க! நீ என்ன 7.30 க்கு லாம் வர சொல்ற.?”

யது”லூசு செல்லம்.. வெல்கம் டீம் தான் சீக்கிரம் வரணும் லூசு”

திவி”சரி.. சரி. ரொம்ப பண்ணாத.. அய்யோ நாளைக்கு ரோஜாவோட அர்ச்சனை அதிகமா இருக்குமே” என்று புலம்பிவிட்டு அன்றைய வகுப்பிற்கு சென்றனர்.

மறுநாள் செம்மையானவன் தன் வருகையை தெரிவித்து வான்மகளை சிவக்க வைக்க, அன்றைய பொழுது விதி வசத்தால் அருமையாக விடிந்தது.

திவி இன்று அவளின் அம்மாவின் அர்ச்சனையை வாங்காமல் சீக்கிரம் எழ, “யது எந்திரி டி.. இன்னைக்கு நான் தான் பர்ஸ்ட்.. எந்த்ரி.. சீக்கிரம்”

யது”மாமா.. நீ சீக்கிரம் வா.. அந்த குட்டச்சி கிடக்கா.. நீ வா மாமா.. நான் அவளை பாத்துக்குறேன்..” என்று கனவில் ஆதியுடன் பேச,

திவி”என்னது மாமா வா.? ஏய்.. என்ன டி உளற.. எந்திரி டி.. “

யது எழுந்து திரு திருவென விழித்தாள்.

திவி அவள் முன் கோவமாய் நின்று கொண்டு இருக்க,

யது”ஈஈஈ.. என்று அசடு வழிந்து என்ன டி கிளம்பல.?”

திவி”என்னது நான் மட்டுமா.? கொன்னுடுவேன்.. எந்திரி.. நீயும் வா”

யது”நான் வெல்கம் டீம் ல இல்ல டி.. “

திவி”பரவால்ல நீயும் கிளம்பு”

யது”ஹான்.. சரி..” என்று கிளம்ப,

தொலைக்காட்சியில் பாடல் ஒலி கேட்டு அங்கு விரைந்தாள் யது..ஒலியை அதிகப்படுத்தி கொண்டு குளியலறைக்குள் சென்றாள்.

உன்னை நினைக்கவே நொடிகள் போதுமே
உன்னை மறக்கவே யுகங்கள் ஆகுமே
நீ கேட்கையில் சொல்லவே இல்லையே
நான் நினைக்கையில் ஓரமாய் வலிக்குதே
என் மார்பில் காதல் வந்து மையமிட்டதே

லல்லால்லா லால்லா
ஜேஜேஜே ஜேஜேஜே

நான் உன்னை மறந்த செய்தி
மறந்துவிட்டேன்
ஏன் இன்று குளிக்கும் போது நினைத்துக்கொண்டேன்
கண்மூடி சாயும் பொழுதிலும்-உன் கண்கள்
கண் முன்பு தோன்றிமறைவதேன் ஏன் ஏன் ஏன்
நீ என்னைக்கேட்டபோது காதலில்லை
நான் காதல் உற்ற போது நீயுமில்லை
ஒற்றைக் கேள்வி உன்னைக்கேட்கிறேன்
இப்போதும் எந்தன் மீது காதல் உள்ளதா
ஹார்மோன்களின் சத்தம் கேட்குதே
உன் காதிலே
என்று கேட்கும் இந்த சத்தம்

திவி வேண்டும் என்றே ஒலியை குறைத்து விட்டு மீத வரிகளை பாட,

என் சாலை எங்கும் எங்கும்
ஆண்கள் கூட்டம்
என் கண்கள் சாய்ந்ததுண்டு தில்லை
காட்சி யாவும் புதைந்து போனது
என் நெஞ்சம்
உன்னை மட்டும் தோண்டி பார்ப்பதேன்
ஓ ஓஒ
உன்னோடு அன்று கண்ட காதல் வேகம்
என்னோடு எட்டி நின்ற நாகரீகம்
கண்ணில் கண்ணில் வந்து போகுதே
என் நெஞ்சே கட்டில் மீது திட்டுகின்றதே
உன் தேடலோ காதல் தேடல் தான்
என் தேடலோ கடவுள் தேடும் பக்தன் போல

உன்னை நினைக்கவே நொடிகள் போதுமே
உன்னை மறக்கவே யுகங்கள் ஆகுமே..

யது”திவி…! என்று கத்திகொண்டே அவசர அவசரமாக வெளியே வந்தாள்.

திவி உணவு உண்டு கொண்டு இருக்க, “என்ன டி..?” என்றால் ஆசுவாசமாக,

யது”எத்தனை தடவை சொல்றது.? நான் பாடுற பாட்டை நீ பாடாதன்னு.. ஏன் பாடுற.?”

திவி”என்ன யது பேசுற..?இத்தனை நாள் நல்லா தான டி இருந்த.? மறுபடியும் லூசு மாதிரி பேச ஆரம்பிச்சிட்டியா.? என் பொருள் எல்லாம்.. உனக்கு.. உன் பொருள் எல்லாம் எனக்கு தான.! இப்போ பாட்டு பாடுனா தப்பா.?” என்று பாவமாய் கேட்க,

ரோஜா”டைம் ஆச்சு..ஒழுங்கா சண்டை போடாம சாப்டுங்க!”

யது”ம்மா..அவள நான் பாடுற பாட்டை பாட வேண்டாம்னு சொல்லுங்க ம்மா.”

திவி”நான் அப்டி தான் பாடுவேன்.. உன்னை நினைக்கவே.. நொடிகள் போதுமே.. என்று பாட,

யது அவளை அறைந்து இருந்தாள்..

கனவு தொடரும்🌺🌺🌺

கதையை படித்து விட்டு உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க..

இன்றைய நாள் இனிய நாளாக அமையட்டும்.

நன்றி..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
9
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்