Loading

ஆட்சியர் கனவு 22 💞

சுப்ரியா வீட்டில் நடந்த அனைத்தையும் ஆதி சக்தியிடம் கூறினான்.

சக்தி”டென்ஷன் ஆகாத டா.. நான் பேசுறேன் டா அவ கிட்ட!”

ஆதி”என்ன டா பேச போற.? ஹான் என்ன பேச போற.? திவி ஆதி உன்னை லவ் பன்றான். நீ ஏன் சுப்ரியாவ கல்யாணம் பண்ணிக்க சரின்னு சொல்லிட்டு வந்தன்னு கேட்கபோறியா.? இல்ல அவனுக்கு எல்லாமே தெரியும் திவினு சொல்ல போறியா.? என்று கத்த, சக்தி தான் அவனின் கோபத்தில் ஆடிப்போனான். பின்னே சிறு வயதில் இருந்து அவனின் கோவத்தை அறிந்தவன் ஆயிற்றே..

“நீ சொன்னா கூட, அந்த லூசு இதுலாம் புரிஞ்சிக்க மாட்டா டா.. அவள பொறுத்தவரை நான் அவளை லவ் பண்ணல.. யதுவ தான் லவ் பன்றேன்.. நான் தேவ இல்லாம இவள யதுன்னு மனசுல நினைச்சிக்கிட்டு இருக்கேன். உண்மை தெறிஞ்சா நான் அவளை வெறுத்துடுவேன்னு அவ நினைக்குறா.. அதான் மேடம் எனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சு தராங்களாம். கொஞ்சமாவது என்கிட்ட பேசுனா தான் டா தெரியும்.. நான் என்ன நினைக்குறேன்னு. அவளா ஒன்னு கற்பனை பண்ணிக்கிட்டு இருந்தா நான் என்ன டா பண்ணுவேன்” என்று கோபத்தில் வந்த வார்த்தைகள் இறுதியில் வலியில் முடிந்தது.

சக்தி”நீயாவது அவ கிட்ட பேச ட்ரை பண்ணிருக்கலாம்ல டா?”

ஆதி”பண்ணிருக்கமாட்டேன்னு நீ நினைக்கிறியா டா.? இன்னைக்கு எவ்ளோ டைம் முயற்சி பண்னேன் தெரியுமா.? நான் பக்கத்துல போனாளே விலகி போறவ கிட்ட என்னனு டா சொல்ல முடியும்.?” என்றான் விரக்தி குரலில்.

அப்போது தான் எதையோ உணர்ந்த சக்தி திரும்பி அறை வாயிலை பார்க்க, திவி சிலையாக நின்று கொண்டு இருந்தாள்.

ஆனால் அவள் மனதிலோ பெரிய யுத்தமே நடந்து கொண்டு இருந்தது.

“அப்போ அப்போ ஆதி என்ன தான் லவ் பன்றானா.? ஆனா அவன் யதுன்னு தான சொல்றான்.?” என்று யோசிக்க, அவள் மனமோ “லூசு திவி அவன் சொன்னதை கேட்டல.! உன் பேர்ல இருக்க யதுவ தான அவன் யதுன்னு கூப்டுறான்.. போ திவி உடனே போய் உன் லவ்வ சொல்லு”

“சொல்லி.? அவன் என்ன லவ் பண்ணலாம்.. ஆனா நான் இல்லையே!”என்று கூற, “லூசு திவ்யா நீ.. ஏன் உன்னையே நீ ஏமாத்திக்கிற.? ” என்று அவள் மனம் எகிற, “அவனுக்கு வேணா யது லவ் பன்னது தெரியமா இருக்கலாம்.. ஆனா எனக்கு தெரியும்ல.. அவ எவ்ளோ உயிருக்கு உயிரா ஆதிய காதலிச்சான்னு எனக்கு தெரியும். அவளுக்கு துரோகம் பண்ண நான் விரும்பல” என்றாள்.

“எப்டி எப்டி.. நீ அவளுக்கு துரோகம் பண்றியா.? அவ இப்போ உயிரோட இல்ல திவ்யா.. ஆதி உன்னை தான் லவ் பன்ரான். நீ யதுக்கு பண்றது துரோகம்னா ஆதிக்கு பண்றதும் துரோகம் தான்”

“ஆதிக்கு என்ன நான் துரோகம் பன்றேன்?”

“உன் காதல் மறச்சு அவனுக்கு வேற ஒரு பொண்ண கல்யாணம் செஞ்சு வைக்க நினைக்குறது துரோகம் இல்லயா? அவன் உன்னை மட்டும் தான் நினைச்சிக்கிட்டு இருக்கான். உன்னை நினைச்சிக்கிட்டு அவன் எப்டி இன்னொருத்திய கல்யாணம் செஞ்சிக்க முடியும். அத விடு எந்த உரிமைல நீ பாட்டுக்கு சுப்ரியாவ ஆதிக்கு கல்யாணம் செஞ்சு வைக்க அவள சம்மதிக்க வைப்பேன்னு சொன்ன.?” என்று மனம் கேள்வி கேட்டது.

பதில் அறியாமல் அவள் மேலும் குழம்பினாள். “சொல்லு திவி.. எனக்கு தெரியும் உன்கிட்ட இந்த கேள்விக்கு பதில் இல்லை.. ஆனா என்கிட்ட இருக்கு.. ஏனா நீ ஆதிய அவ்ளோ காதலிக்குற”என்று அவள் மனம் அவளுக்கு உரைக்க, திவி பெருமூச்சு ஒன்றை எடுத்து கொண்டு “புதஞ்ச என் காதல் அப்டியே இருக்கட்டும்.. எனக்கும் நிறைய கடமைகள் இருக்கு.. அதுக்கு கண்டிப்பா என்னோட காதல் தடையா இருக்க கூடாது.. ஆதி சந்தோசமா இருந்தா மட்டும் போதும்.. அவன அவன் குடும்பத்தோட சேக்கணும்.. இப்போ அது மட்டும் தான் முக்கியம் ” என்று ஒரு முடிவு எடுத்தாள். ஏதோ கூற வந்த மனதை கடினப்பட்டு அடக்கி கொண்டாள்.

அவள் மனமோ ‘அவனின் சந்தோஷமே நீ தானடி’ என்று கேலியாய் அவளை பார்த்து சிரித்து கொண்டது.

சக்தி”திவி.. வா.. உள்ள வா… “என்று கூற,

ஆதி தான் இறுகிய முகத்துடன் அங்கு நின்று கொண்டு இருந்தான்.

திவி”ஆதி…” என்றாள் மென்மையாக,

ஆதி அமைதியாக இருக்க, திவி”உன்னை தான் கூப்டுறேன்.. காதுல விழுகலயா ஆதித்யா.” என்றாள் சற்று உரக்கமாக.

சக்தி தான் அதிர்ந்து விட்டான். பின்னே, எவ்வளவு பெரிய பிசினஸ் மேன். அவனின் பார்வையே உணர்த்திவிடும் எவ்வளவு கம்பீரமானவன் என்று. அப்படி ஒரு ஆளுமை அதிகாரம் இருக்கும் அவனிடம். தன்னை எதிர்ப்பவர்களை அடுத்து யோசிக்க கூட விடாமல் தோற்கடித்துவிடுவான். ஆனால் இந்த காதல் ஒரு மனிதனை என்ன என்ன செய்கிறது என்று நினைத்து கொண்டு இருந்தவனின் நினைவில் அவளவனின் முகமே வந்து போனது.

ஆதி “திமிரு திமிரு.. உடம்பு முழுக்க திமிரு.. பண்றது எல்லாம் பண்ணிட்டு எவ்ளோ திமிருல கூப்டுரா பாரு ” என்று மனதில் கருவினான். திவி மீண்டும் “மிஸ்டர் ஆதித்யா சரவணப்பெருமாள். ஆர் யூ டெஃப்” என்று கேட்க,

ஆதியின் பொறுமை காற்றில் பறந்தது. அருகில் இருந்தவளின் கழுத்தை பிடித்து
“நானும் பாத்துட்டு இருக்கேன்.. ரொம்ப ஓவரா போற.? என்ன டி நினைச்சிக்கிட்டு இருக்க நீ.. ஹான்.. நீ எப்டி அவள சம்மதிக்க வைக்குறேன்னு சொல்ற.? ஹான்.. ” என்று கத்த, அவனின் கர்ஜனையில் திவி ஆடித்தான் போனாள்.

சக்தி”டேய் விடு டா.. ஆதி..” என்று கத்திய பிறகே, அவன் சிறிது அமைதியாக,

திவி சும்மா இருக்காமல், கழுத்தை நீவிக்கொண்டே “உனக்கு அவ சரியான ஜோடி ஆதி.. நீ அவள கல்யாணம் பண்ணிக்கிட்டா… ” என்று அவள் முடிக்கும் முன்பே அவளின் இதழை வன்மையாக தண்டிக்க ஆரம்பித்தான்.

சக்தி அமைதியாக வெளியில் சென்று விட, இவனின் தண்டனையோ மேலும் நீண்டது. திவி மூச்சு விட சிரமப்படுவதையும் அவன் கருத்தில் கொள்ளாமல், தடுத்த அவளின் கைகளையும் பிடித்து கொண்டு மேலும் அவளுள் மூழ்கினான்.

வன்மையான இதழ் தீண்டல் மென்மையாக மாற, அவளின் இதழ் சுவையில் தன்னையே மறந்தான் ஆதி.. மென்மையாக இதழ் தேன் பருகியவனின் இந்நிலை திவிக்கு மேலும் உடல் நடுக்கம் கொடுக்க, அவனின் முத்தத்தில் தன்னிலை மறக்க இருந்தவள் திடீரென அவனை தள்ளிவிட்டு வெளியேறினாள். அவளின் திடீர் விலகல் அவனுக்கு பெருத்த ஏமாற்றமே என்பதை அவனின் முகமே எடுத்துரைத்து.

திவி அழுதுகொண்டே சென்று விட, ஆதி”திவி.. திவி” என்று கத்தி கொண்டே ஹாலிற்கு வந்தான். சக்தி தான் அவனை கொலைவெறியில் முறைத்து கொண்டு இருந்தான்.

சக்தி”ஏன்டா.. டேய்.. பையன் ரொம்ப டென்ஷனா இருக்கான்னு கஷ்டப்பட்டு அவளுக்கு போன் போட்டு வர சொன்னா நீ என்ன வேல டா பண்ணி வச்சியிருக்க.?”

ஆதிக்கு அப்போது தான் தான் செய்த செயல் நினைவு வர தன்னையே நொந்து கொண்டான்.

வீட்டிற்கு வந்த திவி நேராக தன் அறைக்கு சென்று முடிந்த மட்டும் அழுது தீர்த்தாள். “கடவுளே..ஏன் இப்படி பண்ற.. காலைல கண்ட கனவு அதுக்குள்ள பலிக்குது… இன்னும் கொஞ்ச நேரம் அங்க இருந்து இருந்தேன்.. நானே சொல்லி இருப்பேன்.. ஆனா வேண்டாம்.. இதுலாம் சரி வராது.”
என்று புலம்ப,

அவளின் மனசாட்சி”நீயே தடுத்தாலும் அது உன்னால முடியாது மிஸ். திவ்யதர்ஷினி. ஏனா அவன் உனக்குள்ள தான் இருக்கான்.” என்று கூற, மற்றொரு மனமோ”திவி வேண்டாம்.. அவன் ஸ்டேட்டஸ் என்ன உன் ஸ்டேட்டஸ் என்ன.. மறந்துட்டியா.. அவன்னாலே உனக்கு பிடிக்காது சின்ன வயசுல இருந்து.. நியாபகம் வச்சிக்கோ.. நீ கலெக்டர் ஆகணும்.. இந்த காதல்லாம் வேண்டாம்” என்று உரைக்க,

இன்னொன்று”அப்டிலாம் இல்ல திவி.. லட்சியம் கூட காதல் அன்பு சேர்ந்தா, இன்னும் அந்த லட்சியத்தை அடைய ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும்” என்று கூற,

மற்றொரு மனமோ”வாய்ப்பே இல்லை.. அதுலாம் வேஸ்ட் ஆஃப் டைம்.. நீ உன் லட்சியத்துல மட்டும் கவனம் செலுத்து” என்று கூற, திவி தான் தலையை பிடித்து கொண்டு இருந்தாள்.

திவி”கொஞ்சம் நீங்க ரெண்டு பேரும் அமைதியா இருக்கீங்களா.. எனக்கு தெரியும் என்ன செய்யணும்னு” என்று இரண்டையும் அடக்கினாள்.

முகத்தை கழுவி கொண்டு வெளியில் வந்தவள் தன் அன்னையிடம் மறுநாள் செய்ய வேண்டியவற்றை கூற, அவரோ எதுவும் கூறாது சரி என்று மட்டும் தலையசைத்தார்.

மற்ற நண்பர்களுக்கு வேலைகளை பிரித்து கொடுத்து விட்டவள், சக்தியை அழைத்து கொண்டு ஒரு வீட்டிற்கு சென்றாள்.

இரவு 8.00 மணிக்கே அந்த இடம் பயங்கரமாக காட்சியளிக்க, திவியும் சக்தியும் அந்த வீட்டிற்கு சென்றனர். அங்கு விஷ்ணு வெளியில் நின்று கொண்டு இருக்க, அவனையும் அழைத்து கொண்டு உள்ளே சென்றனர்.

அங்கு இருவர் கை கால்கள் கட்டப்பட்டு, வாய் மூடியிருக்க, மயக்கத்தில் இருந்தனர் இருவரும்.

விஷ்ணு”இவனுங்க என்ன திவி.. இன்னும் எந்திரிக்காம இருக்கானுங்க.?”

சக்தி”இன்னும் அஞ்சு நிமிஷம் முழிப்பானுங்க பாரு” என்றான்.

விஷ்ணு “இவனுங்க இவ்ளோ ஈஸியா மாட்டுவாங்கன்னு நான் கொஞ்சம் கூட நினச்சு பாக்கல திவி”

திவி”நானே நினைக்கல.! பிளான் பண்ரானுங்க பாரு.. லூசு மாதிரி. சின்ன பசங்கன்னு செயல்லயே காமிக்குறானுங்கா..” என்று தலையில் அடித்து கொண்டாள்.

சக்தி”இவன எப்டி கண்டுபிடிச்ச திவி?”

திவி”நீயெல்லாம் ஒரு போலீஸ்.? உன்கிட்ட சொல்லி ஒரு வாரம் ஆச்சு.. நாளைக்குள்ள இவனுங்களை கண்டுபிடிக்கணும்னு சொன்னேன்ல” என்று கத்த,

சக்தி”என்ன டா மரியாதை குறையுது!” என்று நினைத்து விட்டு, “இல்ல திவி ஒரு முக்கியமான கேஸ்” என்று இழுக்க,

திவி”கொஞ்சம் க்ளோஸ் பண்ணு” என்றாள்.

அதில் விஷ்ணு தான்”ஹாஹாஹா.. அசிங்கப்பட்டார் அசிஸ்டண்ட் கமிஷனர்” என்று கிண்டலடிக்க, சக்தி”அமைதியா இரு டா.. இல்ல என்கவுண்டர்ல போட்ருவேன்” என்று கூற,

விஷ்ணு”தீபாவளி துப்பாக்கியை வச்சி காமடி பண்ணாதீங்க போலீஸ்கார். என்னால சிரிப்பை அடக்க முடியல” என்று
அவனை வார,

திவி தான்” ரெண்டு பேரும் கொஞ்சம் உங்க திருவாய மூடுங்க.. தோ அவன் கண்ணு முழிக்க போறான்.. ” என்றாள்.

கட்டிப்போட்டு இருந்தவர்களில் ஒருவன் கண்ணை திறக்க,”நினச்சேன்.. நீ தான் எங்களை கடத்தி இருப்பன்னு.. எவ்ளோ தைரியம் உனக்கு.. நீ என்ன நினைச்சாலும் அந்த ஆதியோட சாவு இவன் கைல தான்” என்று கத்தினான்.

விஷ்ணு”இவன் என்ன போலீஸ்கார் டயலாக்கை மாத்தி சொல்றான். எப்பவும் மயக்கத்துல இருந்து எழுந்திரிக்குறவங்க, நான் எங்க இருக்கேன்? நீங்கலாம் யாருன்னு தான கேப்பாங்க.?” என்று அதிமுக்கியமான கேள்வி கேட்க,

சக்தி தான் அவனை வெட்டவா குத்தவா என்ற ரீதியில் முறைத்தான்.

அவன் கூறிய வார்த்தைகளில் அருகில் இருந்தவனை ஒரு உதை உதைத்து “யாரு இவன் என் ஆதிய கொல்ல போறானா.? நீ என்கிட்ட லவ்வ சொன்னபோவே எனக்கு உன் மேல லைட்டா சந்தேகம் ஆனா உன் பேமிலி பேக்ரவுண்டு என்ன உன்னை பத்தி யோசிக்க விடல டா.. எப்போ இவன் கூட உன்னை சேத்து வச்சு பாத்தேனோ அன்னைக்கே என் டௌப்ட் கிளியர் டா “

சக்தி”இவனுங்களை என்ன பண்ண போற திவி.?”

விஷ்ணு”இன்னும் இவனுங்க கிட்ட என்ன பேச்சு வார்த்தை போட்டு தள்ளிட்டு போங்க போலீஸ்கார்” என்று கூறினான்.

திவி”அதுக்குள்ள கொன்னுட்டா எப்டி.? ” என்று இருவரையும் முறைக்க,

அப்போது மற்றொருவனும் கண் விழித்தான்.

அவன் கோபத்தில் விழிகள் சிவக்க, விஷ்ணு”என்ன டா கேள்வி கேட்காம முழிக்குற.. சின்ன பயலே”

“யாருடா சின்ன பையன்.. ஆதிய மட்டும் இல்ல.. உன்னையும் கொல்லாம விட மாட்டேன்” என்று கத்தினான்.

திவி”வெல் மிஸ்டர் கோகுல்.. ரெண்டு நாள் இங்கேயே இருங்க.. ரெண்டு நாள் கழிச்சு உங்கள மீட் பன்றேன்.. வரட்டா” என்று அவனின் கன்னத்தை தட்டி விட்டு சென்றாள்.

மூவரும் வெளியில் வர, சக்தி”இவங்கள எப்டி புடிச்ச திவி.?” என்றான் சந்தேகமாய்.

திவியும் விஷ்ணுவும் சிரித்து கொண்டே “இது தொழில் ரகசியம்” என்று விட்டு ஹைபை போட்டு கொண்டனர்.

சக்தி”இப்போ நீங்க மட்டும் சின்ன பசங்க மாதிரி பண்ணலையா..? லூசுங்களா.. அடா ச்சே சொல்லி தொலைங்க.” என்று கடுப்பாக கூறினான்.

திவி விழுந்து விழுந்து சிரிக்க, விஷ்ணு எதையோ சாதித்த மிதப்பில் விண்ணை நோக்கி கொண்டு இருந்தான்.

சக்தி”சத்தியமா உங்க ரெண்டு பேர் போஸும் நல்லாவே இல்ல.. அடா எருமை.. சொல்றா நன்னாரி பயலே. போஸ பாரு.. அப்டியே டெரரிஸ்ட்ட புடிச்ச மாதிரி போஸ் குடுக்குறான்” என்று அவன் தலையில் அடித்து, “பைத்தியம் சிரிச்சது போதும் சொல்லு” என்று திவியிடம் கேட்டான்.

விஷ்ணு”அத நான் சொல்றேன்”

திவி”இல்ல இல்ல நான் தான் சொல்லுவேன்”

சக்தி”கடுப்பேத்தாம யாரோ ஒருத்தர் சொல்லுங்க” என்றான் பல்லை கடித்து கொண்டு.

விஷ்ணு”அயோ அத எப்டி நான் சொல்றது” என்று மீண்டும் சிரிக்க,

சக்தி”நீ மூடு.. திவி நீயாவது சொல்லு!” என்றான் கெஞ்சும் குரலில்.

திவி”அவசரபடாதே மகனே.. கூறுகிறேன் கேள்” என்று செந்தமிழில் கூற, அவன் தலையில் கைவைத்து கொண்டான்.

திவி”நாங்க அப்டி ஒன்னும் பண்ணல.. ஆடு தானா வந்து சிக்குச்சு.. தோ இந்த லூசு என்ன அடிச்சுச்சுல.. அன்னைக்கு என்ன ஃபாலோ பன்னது நீங்க மட்டும் இல்ல.. கோகுலும் தான்.. எனக்கும் தெரியும்.. பட் ஆதிய அன்னைக்கு நான் கண்டுபிடிக்கல, அண்ட் அவனுக்கு என்ன நியாபகம் இருக்குறதே நீங்க சொல்லி தான் தெரியும். சோ அப்போதைக்கு கோகுல பத்தி நான் வெளில சொல்ல வேண்டாம்னு விட்டுட்டேன்..

அப்ரோம் ஒரு நாள் டிபார்ட்மெண்ட்லயே என்ன வந்து பாத்தான். ஆதிய கொல்லபோறேன் உன்னால முடிஞ்சத பாத்துக்கோன்னு. அன்னைக்கு ஆதிய கேபின்ல வச்சு கொல்ல ட்ரை பன்னதும் இவன் தான். என் டீடெயில்ஸ் தெரிஞ்சிக்க சார் ரொம்ப ட்ரை பண்ணி இருக்காரு.. ஆனா அவனுக்கே தெரியாதது ஹரி என்ன லவ் பன்னது.. அப்போ கூட எனக்கு டௌப்ட் வரல.. ஆனா நேத்து ஹரியோட தங்கச்சிய இவன் ட்ராப் பண்ணத பாத்தேன். விஷ்ணுவை வச்சு ஃபாலோ பண்ணேன். ஒரு கிளாஸ் சரக்கு உள்ள போன உடனே என்ன கடத்த போறதா உளறி இருக்கான். விஷ்ணு நான் ஹெல்ப் பன்றேன்னு ஆஜர் ஆகி, இங்க கூட்டிட்டு வந்துட்டான்” என்று சிரிப்பை அடக்கி கொண்டு கூறினாள்.

விஷ்ணு”அப்ரோம் என்ன.. போதையிலேயே இருந்தான்.. அவனே ஹரிக்கு போன் போட்டு இங்க வர சொன்னான். அவன் வரத்துக்கு முன்னாடி இவனுக்கு மயக்க மருந்து ஸ்ப்ரே அடிச்சு கட்டி போட்டேன். அவன் வந்த உடனே சேம் ஐடியா தான். அப்போ மயங்குனவங்க இப்போதான் எந்திருக்கிறானுங்க” என்றான்.

சக்தி”சூப்பர்.. டா.. சரி இப்போ இவன எதுக்கு இங்க அடைச்சு வச்சி இருக்கீங்க.?”

விஷ்ணு”அட போலீஸ்கார்.. இதுகூடவா தெரியல..? இவன ஆதிக்கிட்ட கூட்டி போகணும்”

சக்தி”கூட்டி போய்.?”

திவி தலையில் அடித்து கொண்டு
” உனக்குலாம் யாரு போலீஸ் வேலை குடுத்தா.. எல்லாத்துலயும் ஒரு காரணம் இருக்கு.. நீ கொஞ்சம் ஸ்கிரிப்ட்ட கொழப்பாமா இரு” என்றாள்.

அனைவரும் அவர் அவர் வீட்டிற்கு சென்று விட, திவியை தேடி அவள் வீட்டிற்கு வந்த ஆதி அவளைக் காணாமல் ரோஜாவிடம் புலம்பி கொண்டு இருந்தான்.

ஆதி”ஆண்டி நீங்க அவளுக்கு ரொம்ப செல்லம் குடுத்து இருக்கீங்க! மணி 10. இன்னும் அவ வீட்டுக்கு வரல”

பாரதி”நல்லா சொல்லுங்க பாஸ்.. நான் சொன்னா கேட்கவே மாட்டாங்க. இதுல எங்க அக்கா எங்களை டூர்க்கு கூட அனுப்பல தெரியுமா” என்றாள் வருத்தமாக,

ஆதி”ஏன்.?”

பவி”சின்ன புள்ளைங்க! தனியா எங்கயும் போக கூடாதாம்..அதான்” என்று சலிப்பாக கூறினாள்.

ஆதி”ஆனா உங்க அக்கா மட்டும் நல்லா ஊர் சுத்தலாம் அப்டி தான.?” என்றான் முறைப்பாக.

ரோஜாவிற்கு தான் பேரானந்தம். தன் அண்ணன் மகன் இவ்வளவு அக்கறை கொள்கிறான் என்று.

அப்போது சரியாக திவி உள்ளே வர, ஆதியை கண்டு அதிர்ந்தவள், தன்னை சமன்படுத்திக்கொண்டு எதையும் கண்டுகொள்ளாமல் உள்ளே சென்றாள்.

ஆதி”கண்டுக்குறாளா பாரு! என்று நினைக்க, “நீ பண்ண விஷயத்துக்கு உன்னை எதுவும் சொல்லமா போறாளேனு சந்தோஷப்படு.! பேச சொன்னா என்ன வேல பண்ணி வச்சி இருக்க நீ” என்று அவன் மனது கூற, ” நீ என் மனசு தான.. ஆனா எனக்கு மட்டும் சப்போர்ட் பண்ணாத.. அவளுக்கு பண்ணு” என்றான்.
“நியாயம் எவ்விடமோ அவ்விடமே நான்” என்று கூற, நீ கொஞ்சம் சட்டஅப் பண்ணு” என்றான்.

ஆதி”ஆண்டி நீங்க அவள ஒண்ணுமே கேட்கலை.. இப்டிலாம் பண்ணாதீங்க.. அப்ரோம் போற இடத்துல ரொம்ப கஷ்டப்படுவா” என்றான் சலிப்பாக.

பாரதி”அதுலாம் எங்க அக்கா பாத்துக்குவாங்க.. அண்ட் அது அவங்க ஹஸ்பண்ட் தான் கவலப்படனும்.. நீங்க ஏன்.?” என்றாள்

ஆதி “நான் தான கவலப்படனும்.. அதான் ” என்று முணுமுணுத்தான்.

திவி வெளியில் வந்து” நாளைக்கு ஒரு முக்கியமான இடத்துக்கு போனும்.. எல்லாரும் சீக்கிரம் போய் தூக்குங்க.. என்று விட்டு உள்ளே செல்ல, மீண்டும் வெளியில் வந்து”நீயும் தான்… வீட்டுக்கு போக வேண்டாம். மேல மொட்டை மாடில போய் தூங்கு’ என்று விட்டு உள்ளே சென்றாள்.

ஆதியோ அவள் தன்னிடம் பேசி விட்டாள் என்ற மகிழ்ச்சியில் இருக்க, ரோஜா”அவ கிடக்கிறா.. நீ மாடிக்குலாம் போகாதப்பா.. இந்த ரூம்ல படுத்துக்கோ” என்றார்.

ஆதி தான் அவள் வேண்டும் என்றே கூறுகிறாள் என்பதை அறிந்து “பரவால்ல ஆண்டி.. நான் மாடிலேயே படுத்துக்குறேன்” என்று விட்டு சென்றான்.

திவியை சமாதானம் செய்வதற்காகவும் நாளை தன் பிறந்த நாளிற்கு திவியை வெளியில் அழைத்து செல்லவும் அவள் வீட்டிற்கு வந்தவன், அவளை காணாது போக மூவரிடமும் நன்றாக பேசி ஒட்டிக்கொண்டான். ரோஜாவிற்கு அனைத்தும் தெரியும் என்பதால், அவர் திவியிடம் கூற, அவளோ அவனை இரவு இங்கேயே தங்க வைக்கும் படி கூறி இருந்தாள். இரவு அதிகம் நேரம் ஆகி விட்டது என்ற காரணம் கூறி அவனை இங்கே தங்கவும் வைத்து விட்டார் ரோஜா.

திவியின் நினைவில் ஆதி உறங்கி விட, திவியோ உறக்கம் துளைத்து வானை வெறித்து கொண்டு இருந்தாள். பிறகு பலவித யோசனையில் அவளும் உறங்கி விட்டாள்.

கனவு தொடரும்..🌺🌺🌺🌺🌺

கதையை பற்றி உங்க கமெண்ட்ஸ் சொல்லிட்டு போங்க.. நட்பூஸ்… 💞💞💞

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
7
+1
1
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்