311 views

  1. ஆட்சியர் கனவு – 14 💞

விளையாட்டாய்
செய்த வினை
வினையாகி
போனதே..
மாமன் அவன்
மனது
மதியிழந்து
போனானே
காரணம் அறிந்தவளோ
பெதும்பையாய்
கண்ணீர் உகுக்குகிறாள்
பேதை..!

இரவு ஆகியும் ஆதி வராமல் இருக்க, தெய்வானையும் பெருமாளும் பயந்து போயினர்.  நடந்தவற்றை சிவஞானம் மற்ற சிறுவர்களிடம் விசாரிக்க, ஆதி திவியை தள்ளி விட்டதால், திவி மயங்கி விழ, யது அவனை துரத்தி விட்டதாக கூறினர். இதை கேட்ட சரவணப்பெருமாள் கோபத்தின் உச்சிக்கே சென்றார்.

அங்கு இருந்து விரைந்து திவியின் வீட்டிற்கு செல்ல, இரவு நேரம் என்பதால் உறங்கி கொண்டு இருந்தனர் அனைவரும்.

பெருமாள் “யது.. ஏய்.. அந்நியாமா என் பையன இப்டி பண்ணிட்டியே.. ஏய் வெளில வா.. ” என்று கத்த,

ராஜா கதவை திறந்தார் “இப்போ எதுக்கு இந்நேரத்தில வந்து கத்திக்கிட்டு இருக்கிங்க.?”

பெருமாள் “என்னது கத்திக்கிட்டு இருக்கேன்னா..? என் பையன் வீட்டை விட்டு போனதுக்கு தோ.. இவ தான் உன் பொண்ணு தான் காரணம்.. அந்த அனாதையால தான் எல்லாமே.. எங்க அம்மாவ உலகத்தை விட்டே அனுப்புனா.. இப்போ என் பையன வீட்டை விட்டு அனுப்பிவிட்டா..” என்று கத்த,

ராஜா”உன் பையன் வீட்டை விட்டு போனதுக்கு அவ என்னா பண்ணுவா..? தேவ இல்லாம வார்த்தையை விடாதீங்க. மச்சான்.!”

பெருமாள் “இன்னும் என்ன மச்சான்..கிச்சான்னு.. அந்த அனாதையால தான் எல்லாமே..” என்று வார்த்தையை விட,

திவியும் யதுவும் அழுதுகொண்டு இருந்தனர். இதை கவனித்த ரோஜா,”ரெண்டு பேரும் உள்ள போங்க!” என்று அதட்ட,

இருவரும் உள்ளே சென்றனர்.

யது தேம்பி கொண்டே, “என்னால தான் ஆதி போய்த்தான்..” என்று அழுக,

திவி “இல்ல தி.. என்னால தான்.. நான் அப்தி பண்ணாம இருந்தா அவன் போய் இருக்க மாத்தான்ல” என்று இவள் ஒரு புறம் அழுது கொண்டு இருந்தாள்.

இரவு கத்தி விட்டு அவர் சென்று விட, ராஜாவும் ரோஜாவும் என்ன செய்வது என்று புரியாமல் இருந்தனர். என்ன இருந்தாலும் தவறு செய்தது தம் பிள்ளைகள் ஆயிற்றே.. அறியாமல் செய்து இருந்தாலும் தவறு தவறு தானே.

மறுநாள் பொழுது அனைவருக்கும் கனத்த மனதுடனே புலர, காலையில் எழுந்ததும் யது “வ்யா.. என்னால தான ஆதி போய்த்தான் வ்யா..!” என்று அழுக,

திவி “ப்ச்.. இல்லன்னு நேத்துல இருந்து சொல்தேன்ல யது.. நான் தான்.. என்னால தான் அவன் போய்த்தான்.” என்று இவள் கூற,

ரோஜா “என்னங்க போய் பாத்துட்டு வரலாம்.. அவனுக்கு என்ன ஆச்சோ ஏது ஆச்சோ.. எல்லாம் இவளால தான்.. இவ அப்போவே எழுந்து இருந்தா, வர்ஷினி அப்டி சொல்லி இருக்க மாட்டாள்ல” என்று கூற

ராஜா “இப்போ பேசி ஒரு பிரயோஜனமும் இல்ல, அப்போவே சொன்னேன் போக வேண்டாம்னு.. கேட்டா தான.. நீங்க அங்க போங்க. நான் ஸ்டேஷன் வர போய் என்னன்னு பாத்துட்டு வரேன்” என்றார்.

ரோஜா இருவரையும் அழைத்து கொண்டு செல்ல, தெய்வானை சோகமே உருவாக அமர்ந்து இருந்தார்.

அவரை அந்நிலையில் காண சகியாமல் ரோஜா இருக்க, திவியும் யதுவும் தன்னால் தான் அத்தை இவ்வாறு இருக்கிறார் என்று  அழுது கொண்டு இருந்தனர்.

யது “அத்தை.. அத்தை.. என்னால தான் அத்தை.. ” என்று அழுக,

திவி “ஏய்.. எத்தனை ததவ சொல்தது.. என்னால தான் ஆதி போய்த்தான்..” என்று அழுக, அந்த பிஞ்சுகளின் கண்ணீர் தாங்காது தெய்வானை கண்களை துடைத்து கொண்டார்.

தெய்வானை “நீங்க ரெண்டு பேரும் எதுவும் பண்ணல.. அவனையும் நான் கவனிச்சு இருக்கணும்.. எல்லாம் என் தப்பு தான்.. நீங்க அழாதீங்க மா!” என்று சமாதானம் படுத்தினார்.

இருவரும் அழுது கொண்டே இருக்க, ரோஜா அவர்களை அழைத்து சென்று விட்டார். எங்கு தேடியும் ஆதி கிடைக்காததால் பெருமாளும் தெய்வானையும் மனம் உடைந்து போயினர். இதில் தெய்வானைக்கு பிரசவ வலி வேறு வர, மனவலிமை இல்லாமலேயே அந்த குழந்தையை ஈன்று எடுத்தார் தெய்வானை. 

ஒரு வருடங்கள் பிறகு ராஜா ரோஜாவிற்கும் இரட்டை குழந்தைகள் பிறக்க, அனைவரும் கவலையை ஓரம் வைத்து விட்டு மற்றவற்றை கவனிக்க ஆரம்பித்தனர். இன்னும் யதுவும் திவியும் மனப்பாரத்துடன் இருக்க, அவர்களை இயல்புக்கு கொண்டு வரவே அவர்களின் பெற்றோருக்கு போதும் போதும் என்று ஆகியது.

காலம் அதன் போக்கில் செல்ல, திவியின் குடும்பம் ஆதியின் வீட்டிற்கு செல்வதையே தவிர்த்தனர்.

திவியும் யதுவும் பள்ளிக்கு செல்ல, விதி தன் விளையாட்டை ஆரம்பித்தது.

திவியும் யதுவும் பள்ளியில் தங்களை யது என்றே அறிமுகம் படுத்தி கொள்ள, திவ்யதர்ஷினியில் உள்ள யது என்ற பெயரை யது அழைக்க, யதுவர்ஷினியை யது என்றே அனைவரும் அழைத்தனர்.

திவி தன் ஏழாம் வகுப்பில் தெய்வானையை சந்திக்க நேர்ந்தது.

என்.எஸ்.எஸ். பயிற்சிக்காக, கோவில் சுத்தம் செய்யும் பணியில் திவியும் யதுவும் இருக்க, அன்று யது வராத காரணத்தினால் திவி மட்டும் கேம்ப்பிற்கு சென்றாள்.

தெய்வானை அக்கோவிலில் கடவுளை தரிசித்து கொண்டு இருக்க, அவர்களை நோக்கி திவி வந்தாள்.

திவி அவரையே ஆராய, தன் அத்தை தான் என்பதை உறுதி படுத்தி கொண்டாள்.

தெய்வானை “யாரு மா.. நீ..? என்ன ஏன் அப்டி பாக்குற.?”

திவி “என்ன தெரியலையா..?”

தெய்வானை “எங்கேயோ பாத்து இருக்கேன் மா.. ஆனா எங்கன்னு தான் தெரியல..” என்று அவள் அருகில் வர,

திவி “அத்தை… உங்க வயிறு ஏன் பெருசா இருக்கு..?”

தெய்வானை அவள் கூறியதை உணர்ந்தவள் “திவி…” என்று அவளை அள்ளி அணைத்து கொண்டார்.

திவி அழுது கொண்டே, “எப்டி அத்தை இருக்கீங்க..?” என்றாள்.

தெய்வானை “ம்ம். இருக்கேன் மா.. நீ எப்டி இருக்க.? வர்ஷினி எங்க..? அம்மா அப்பா எப்டி இருக்காங்க..? உன் தங்கச்சிங்க எப்டி இருக்காங்க?”

திவி “ஒவ்வொரு கேள்வியா கேளுங்க அத்தை.. இத்தனை கேட்டா எப்டி..? பரீட்சையில கூட எல்லாத்துக்கும் ஒண்ணா பதில் எழுத முடியாது.. நீங்க என்னடான்னா இவ்ளோ கேள்வி கேக்குரிங்க.?”

தெய்வானை”வாய்..வாய்.. சரி சொல்லு”

திவி சிரித்து விட்டு “நான் நல்லா இருக்கேன். யதுக்கு உடம்பு சரி இல்லை.. அதனால அவ இன்னைக்கு காம்ப்க்கு வரல, அம்மா அப்பா ரெண்டு பேரும் நல்லா இருக்காங்க.. தங்கச்சிங்க ரெண்டு பேரும் சூப்பர்.. ரெண்டு பேரும் 4வது படிக்குறாங்க”

தெய்வானை “அவ்ளோ வளந்துட்டாங்களா.. பரவாலயே”

திவி “டார்லிங் எப்டி இருக்காரு.? மாமா எப்டி இருக்காரு. ? உங்க வயிருக்குள்ள இருந்த பாப்பா எப்டி இருக்காங்க..?”

தெய்வானை ஒரு புன்னகை சிந்தி “எல்லாரும் நல்லா இருக்காங்க.. அவன் பாப்பா இல்ல!  தம்பி… அவன் இப்போ 5வது படிக்கிறான்.”

திவி “அத்தை.. ” என தடுமாற,

தெய்வானை “ம்ம் சொல்லு மா.!”

திவி “அவன் பேரு என்ன அத்தை.?”

தெய்வானை வருத்த புன்னகையோடு “தேவ் மித்ரன்.. என்று கூறி விட்டு, அவளுங்க பேர் என்ன.?”

திவி சிரித்துவிட்டு ” பவித்ரா, பாரதி” என்றாள்.

தெய்வானை “ஆதியும் இருந்து இருந்தா இந்நேரம் அவன் 10த் படிச்சிட்டு இருப்பான்ல ” என்றார், கண்களில் கண்ணீருடன்.

திவிக்கு இப்போது தான் செய்த தவறு முற்றிலும் உணர, “என்னால தான அத்தை .. நீங்க அழாதீங்க அத்தை.. கண்டிப்பா நான் பெரிய பொண்ணு ஆகி ஆதிய கண்டு பிடிச்சு தருவேன் அத்தை” என்றாள் கண்ணீர்உடன்..”அத்தை ஆதி போட்டோ இருக்கா.?” என்றாள் கேள்வியாக,

தெய்வானை”எதுக்கு டி.?”

திவி “என்ன அத்தை புரியாம பேசுறீங்க.? கண்டு பிடிக்கணும்ல. போட்டோ இருந்தா சீக்கிரம் கண்டு பிடிக்கலாம்ல” என்றாள்.

தெய்வானை தன்னிடம் வைத்து இருந்த ஆதியின் சிறு வயது போட்டோவை அவளிடம் கொடுத்து”பத்திரம் திவி.. இது மட்டும் தான் இப்போ என்கிட்ட இருக்கு.. பத்திரமா வச்சிக்கோ” என்றார்.

திவி “கண்டிப்பா அத்தை.. நீங்க இனிமே அழக்கூடாது.. ப்ராமிஸ்.. நான் கண்டிப்பா ஆதிய கண்டு பிடிச்சு உங்க கிட்ட கொண்டு வருவேன்” என்றாள். 

இந்த வார்த்தை எவ்வளவு உண்மையாய் மாறி அவளின் வாழ்க்கையை மாற்றும் என்று அவளே அறிந்திருக்கவில்லை.

வீட்டிற்கு வந்த திவி அனைத்தையும் யது விடம் கூற, யது மகிழ்ச்சியில் திக்குமுக்கு ஆடி போனாள்.

யது”நீ.. நிஜமாவா சொல்ற திவி.?”

திவி “ம்ம்ம் ஆமா டி.. உண்மை தான்.. அத்தைய பாத்து ஆதி போட்டோவை வாங்கிட்டு வந்துட்டேன்.. இனிமே எப்படியாவது அவன கண்டுபிடிச்சுடலாம்.. எல்லாம் உனக்காக தான் யது.. இனிமே நீ நைட் ஆனா அழக்கூடாது சரியா.. உண்மையாலுமே தப்பு பன்னது நான் தான்.. என் மேல சத்தியமா நீ அழக்கூடாது.. நீ அழுதா என்னால தாங்க முடியாது.. “

யது “ரொம்ப.. ரொம்ப தான்க்ஸ் டி.. கண்டிப்பா நான் அழ மாட்டேன்.. ஆனா இது அப்பா அம்மாக்கு தெறிஞ்சா.?”

திவி “அத பத்தி நீ கவலைபடாத! நான் பாத்துக்குறேன்”

யது “திவி.. நான் அவங்க போட்டோவ பாக்கவா.?”

திவி “எவங்க போட்டோ?”

யது “அதான் டி. ஆதி மாமா போட்டோ.?’

திவி “என்ன டி மாமான்னு சொல்ற.? அந்த எருமை உனக்கு மாமா வா.?”

யது “திவி அப்டி சொல்லாத டி.. இப்படி பேசி பேசி தான் நாம அவங்கள தொலைச்சிட்டோம். இனிமே அப்டி பேசாத டி.. அன்னைக்கே நாம மாமான்னு சொல்லி இருந்தா இன்னைக்கு இவ்ளோ பிரச்னை வந்து இருக்காது தான” என்றாள்

திவியும் குற்ற உணர்ச்சியில் ஆம் என்று தலையசைத்து போட்டோவை அவளிடம் கொடுத்து விட்டு சென்றாள்.

திவி தன்னை சுத்தபடுத்தி கொண்டு கடவுளிடம் தன் வேண்டுதலை வைத்தாள் “முருகா..! சின்ன வயசுல இருந்து உன்கிட்ட கேட்டுட்டு இருக்கேன்.. ஆதிய கண்ணுல காட்டுன்னு. ப்ளீஸ் கடவுளே.. இனிமே நான் எந்த தப்பும் பண்ண மாட்டேன். சீக்கிரம் அவன கண்டு பிடிச்சு கொடுக்கணும். யது சந்தோசமா இருக்கணும். அம்மா அப்பா தங்கச்சிங்க எல்லாரும் யதுவ நல்லா பாத்துக்கனும். நீ என்ன கேட்டாலும் நான் செய்றேன். யதுவ நல்லா பாத்துக்கோங்க” என்றாள்.

அதே சமயம் யது கடவுளிடம் “கடவுளே..! என்னால தான் ஆதி மாமா தொலைஞ்சு போய்ட்டாரு.. என் மாமா வ சீக்கிரம் என் கண்ணுல காட்டு.. திவி மாதிரி ஒரு அக்காவ என் கண்ணுல காட்டுனத்துக்கு ரொம்ப நன்றி.. அவ எப்பவுமே சந்தோசமா இருக்கணும். அதே மாதிரி ஆதி மாமாவை நான் கல்யாணம் பண்ணிக்கிட்டு அவரையும் சந்தோசமா பாத்துக்கனும். இதை மட்டும் செஞ்சிடு..! உனக்கு நான் கிடா வெட்டி பொங்கல் வைக்குறேன்.. என்று விட்டு தலையில் அடித்து கொண்டு சாரி சாரி.. நீ சைவம்ல, சோ உனக்கு தேங்காய் உடைச்சு பொங்கல் வைக்கிறேன்”என்று வேண்டி கொண்டாள்.

இருவரின் வேண்டுதலில் எது நிறைவேறுமோ அது ஆண்டவனின் கையில் தான் உள்ளது..

உன் நலம் வேண்டி நான் பிரார்த்திக்கின்றேன்..
என் நலம் வேண்டி நீ பிரார்த்திக்கின்றாய்..!

உன் சந்தோசத்திற்காக நான் எதையும் தருவேன்…ஆனால் நீயோ என் மகிழ்ச்சிக்காக உயிரையும் தருவாய்..

நான் செய்த குற்றம் உன் வாழ்வை பாழாக்கியதால்.. என் வாழ்வையும் உனக்காக தருவேனடி..

நீயே என் தோழி..
நீயே என் சகோதரி..
நீயே என் தாயுமானாய்..
நீயே என் தந்தையுமானாய்..
நீயே என் ஆசானுமாவாய்…
நீயே தான் என் முதல் காதலும் கூட..

என் முதல் முத்தம் உனக்காக..
என் முதல் அணைப்பு உனக்காக..
என் உயிர் பிரிந்தாலும் அதுவும் உனக்காகதானடி…

தன் வேண்டுதல்களில் லயித்திருந்தவர்களை நிலவு மகள் நித்ரா தேவியை அனுப்பி உறங்கச்செய்தாள்.

கனவு தொடரும்..🌺🌺🌺🌺

நாளைக்கு அடுத்த யூ.டி வரும்.. ஹாப்பி ரீடிங்..

அப்ரோம் மறக்காம கருத்தை கமெண்ட் பண்ணுங்க.. ❤️❤️

நன்றி…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
5
+1
0
+1
3

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்