Loading

ஆட்சியர் கனவு 12💞

சக்தி “சொல்லிட்டியா திவி?” என்று கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தான்.

 

ஆதி “என்ன சொல்லணும்.?”

 

‘அயோ அவன் இருக்குறது மறந்துட்டியே சக்தி.’ என்று நினைத்து கொண்டே, “அதுவா… அது என்னமோ திவி உன்கிட்ட சொல்லணும்னு சொன்னா. அதான் சொல்லிட்டாளான்னு கேட்டேன்.” என்க,

 

ஆதி நம்பாத பார்வை பார்த்து விட்டு, “யது.. யது…”என்று சமயலறை நோக்கி குரல் கொடுத்தான்.

 

திவி “ஹான்.. வரேன்” என்றாள். “வாங்க அண்ணா.. சொல்லு தியா”

 

ஆதி “யது.. என்கிட்ட என்னமோ சொல்லனும்னு சொன்னியாமா.? என்னது.?”

 

திவி ‘அய்யோ உளரிட்டாங்களா.? சுத்தம்..’ என்று தலையில் அடித்து கொண்டு, “அ..அது ஒன்னும் இல்ல ஆதி.. ஒரு காம்படிஸன் வருது, அதுக்கு நம்ம காலேஜ் சார்பா நான் போறேன். அதான் உன்கிட்ட சொல்லனும்னு சொன்னேன்” என்று சமாளித்தாள்.

 

ஆதி “என்னா காம்படிஸன்.?”

 

திவி “தமிழ் இலக்கிய மன்றம் சார்பா வைக்குற போட்டி.. அங்க போய் தான் எதுல கலந்துக்கனும்னு முடிவு பண்ணனும்..”

 

ஆதி “ம்ம்ம் சரி…!!”

 

சக்தி “ஆதி… உன்கிட்ட ஒன்னு சொல்லனும்.. “

 

ஆதி “ம்ம் சொல்லு சக்தி”

 

சக்தி “நீ யதுவ கண்டு பிடிக்க தான காலேஜ் போன, இப்போ தான் கண்டுபிடிச்சாச்சுல! ஆபிஸ் போலாம்ல டா?”

 

ஆதி திவியை பார்க்க, திவியும் அதை ஆமோதித்தாள்.

 

ஆதி “யது நீ கொஞ்சம் உள்ள போறியா..?”

 

திவி “ஏன்..? என்ன உள்ள அனுப்பிட்டு அப்டி என்ன ரகசியம் பேச போறீங்க.?”

 

ஆதி “ப்ளீஸ்.. சொன்னா கேளு. உள்ள போ யது”

 

திவி “உள்ள இருந்தவள வர சொல்லிட்டு, மறுபடியும் உள்ள போன்னு சொல்றான்.. எருமை.. லூசு..” என்று கருவிக்கொண்டு சென்றாள்.

 

ஆதி சக்தியை பார்த்து “கொஞ்சம் இங்க வாயேன்”

 

சக்தி “பரவால்ல டா.. இங்கேயே இருக்கேன்.. சொல்லு காது கேக்குது மச்சான்.”

 

“அட, போங்க! அவன் எவ்ளோ ஆசையா கூப்டுறான்.” என்று விஷ்ணு கூறிக்கொண்டே உள்ளே வந்தான். அவனுடன் நண்பர்கள் படையும் உள்ளே நுழைந்தது. 

 

ஆதி “வாங்க வாங்க. என்ன இங்க திடீர் விஜயம்..?”

 

கனகா “திவ்யா வீட்டுக்கு போனோம். அவ இங்க வந்து இருக்குறதா அம்மா சொன்னாங்க. உன் வீடும் பாத்தது இல்லல. அதான் வந்தோம்.”

 

திவி வெளியில் பேச்சு சத்தம் கேட்டு வந்து “ஏய்… வாங்க டி.” என்று கூறினாள்.

 

ரவீ “திவி, உனக்கு எப்டி ஆதி வீடு தெரியும்.?”

 

திவி “நேத்து நானும் வந்து தான் விட்டுட்டு போனேன்..”

 

சுப்ரியா “ஆதி இப்போ எப்டி இருக்கு.?”

 

ஆதி “ம்ம் பரவால்ல. ரெஸ்ட் எடுக்க சொல்லி இருக்காங்க.”

 

கவி “ப்ப்பா.. எவ்ளோ பெரிய வீடு… ஆதி உங்க வீடு செமையா இருக்கு..”

 

பிரவீன் “வாங்க அப்டியே சுத்தி பாத்துட்டு வரலாம்”

 

சுப்ரியா “ம்ம் வாங்க வாங்க..!”

 

பிரவீன், சபரி, கவி, கனகா (ம) சுப்ரியா செல்ல, ரவீ மற்றும் திவி செல்வி அம்மாவிற்கு உதவி செய்ய உள்ளே சென்றனர்.

 

ஆதி, விஷ்ணு மற்றும் சக்தியை மட்டும் தனியே அழைத்து “விஷ்ணு, நீயே சொல்லு நேத்து தான உங்ககிட்ட சொன்னேன். அவள நான் லவ் பன்றேன்னு. ஆனா, இந்த எருமை இனிமே நீ காலேஜ்க்கு வர வேண்டாம், ஆபீஸ் போன்னு சொல்றான்.” என்றான் கடுப்பாக.

 

விஷ்ணு “ம்ம்ம் ஆமா டா.. அவர் சொல்றதும் சரிதானா.?” என்று அவனை மேலும் சீண்ட,

 

ஆதி “டேய்.. வேண்டாம் டா. என் கோவத்தை கிளராதிங்க.”

 

இருவரும் ஒன்றாய் “என்னடா பண்ணுவ.?” என்க,

 

ஆதி “அழுதுருவேன் டா!”

 

சக்தி சிரித்து விட்டு,”டேய் நீ எவ்ளோ பெரிய பிசினஸ் மேன். ஏன் டா இப்டி பயப்படுற?”

 

ஆதி “லவ் பண்ணி பாரு டா. தெரியும். என்னா ஒரு பீல் தெரியுமா.?”

 

விஷ்ணு “நல்ல பீல் தான் டா. போய் சொல்லு.. ஆறு வருசமா சார் வெய்ட் பண்ணி இருக்கீங்க.. லவ்வ சொல்லலனா எப்டி..?”

 

ஆதி “அவகிட்ட சொல்லதான்டா பயமா இருக்கு. வயிருக்குள்ள என்னென்னமோ பண்ணுதுடா..” என்று பாவமாய் சொல்ல,

 

சக்தி “என்னப் பன்ணுது..? மறுபடியும் எதையாவது தின்னு தொலச்சியா டா.?” சீரியசாய் கேட்டான்.

 

ஆதி “டேய்.. விளையாடாதீங்க டா..”

 

விஷ்ணு “டேய்.. மனசுக்குள்ளேயே வச்சிக்கிட்டு இருக்காத டா! சீக்கிரம் சொல்லு”

 

சுப்ரியா அனைத்தையும் கேட்டு கொண்டே, எதுவும் கேட்காதது போல் “என்ன சீக்கிரம் சொல்லனும்..?” என்று கேட்டுக்கொண்டே அவர்களருகில் வந்தாள்.

 

சக்தி சொல்ல வாய் எடுக்க, ஆதி கண்களாலேயே வேண்டாம் என்றான்.
இதை கவனிக்காத விஷ்ணு ” ஆதி ஒரு பொண்ண லவ் பன்றான். அத பத்தி தான் பேசிக்கிட்டு இருந்தோம்..”

 

ஆதி தலையில் அடித்து கொள்ள, சுப்ரியா “ஏய்..சூப்பர் ஆதி.. யார் அந்த லக்கி கேர்ள்.?”

 

விஷ்ணு “வேற யார்.. நீ தான்” என்று கூற,

 

சுப்ரியா “ஹான்.. என் .. என்ன சொல்ற.?” என்று அதிர்ந்துக் கேட்டாள்.

 

சக்தி “இல்லமா. அவன் சும்மா சொல்றான். லவ்லாம் இல்ல. பிஸினஸ்ல கொஞ்சம் ப்ராப்ளம் மா. அதான் பேசிக்கிட்டு இருந்தோம்” என்று கூறினான்.

 

சுப்ரியா ‘ம்ம் சரி ண்ணா. என்று விட்டு,  எப்டியும் திவி உன் லவ்வ ஏத்துக்க மாட்ட ஆதி.. நீ என்ன தான் லவ் பண்னனும்.. அவளே சொல்லுவா.’ என்று நினைத்து விட்டு சென்றாள்.

 

அனைவரும் அரட்டை அடித்துக்கொண்டே ஹாலில் அமர்ந்து பேசி கொண்டு இருக்க,

 

திவி “சாப்பாடு ரெடி! ருசிச்சு சாப்பிடுங்க சந்தோசமா இருங்க..” என்று அனைத்தையும் டைனிங் டேபிளில் வைத்தாள்.

 

ரவீயும் செல்வியும் மற்றவற்றை எடுத்து கொண்டு வந்தனர்.

 

செல்வி “ம்ம்.. எல்லாரும் உட்காருங்க.. நான் பரிமாறேன்.”

 

திவி அவரை அமர வைத்து விட்டு, “நீங்க உட்காருங்க மா. நான் எல்லார்க்கும் பரிமாறேன். ரவீ நீயும் வா!”

 

ரவீயும் திவியும் அனைவருக்கும் பரிமாற, விஷ்ணு “இந்தா திவி!” என்று அவளுக்கு ஊட்டி விட்டான்..

 

அவளும் வாங்கி கொண்டு அவனுக்கும் ஊட்டி விட, இருவரையும் ஏக்கத்துடன் பார்த்தார்கள் ஆதியும் சக்தியும். அதை கவனித்த ரவீ ஆதிக்கு ஊட்டி விட, ஆதி எதுவும் பேசாமல் அவளுக்கும் ஊட்டி விட்டான். சக்தி தான் தட்டில் கோலமிட, திவி அவன் தலையில் அடித்து “என்ன பழக்கம் இது..? ஹான்?” என்று அவனுக்கும் ஊட்டி விட்டாள்.

 

கவி “என்ன நீங்க மட்டும் தான் ஊட்டி விடுவீங்களா.? நாங்களும் தான் பண்ணுவோம்” என்று கனகாவிற்கு ஊட்டி விட, கனகா கவிக்கு ஊட்டி விட்டாள்.

 

சபரி பிரவீணை ஏறிட, அவனும் சபரியை தான் பார்த்தான். இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஊட்டிவிட்டு கொண்டனர். சபரி “எப்டியும் யாரும் நமக்கு ஊட்டி விட மாட்டாங்கள டா.! அதான். நமக்கு என்றுமே நட்பே துணை!” என்று அவன் தோலில் கையிட,

 

பிரவீன் “போதும் டா.. பசிக்குது.. நீ உன் தட்டில இருக்குறது சாப்டு.. என் தட்டுல இருக்குறது நான் சாப்டுறேன்..”

 

சபரி “ஏன் டா.?”

 

பிரவீன் “பின்ன என்ன டா.. நீயே எல்லாத்தையும் சாப்டுருவ போல, எனக்கு கொஞ்சமா ஊட்டிட்டு நீ அனகோண்டா சைஸ்க்கு வாய திறக்கிற.?”

 

சபரி “உன்கிட்ட எக்ஸ்பிரேசன எதிர்பாத்தேன் பாரு என்ன சொல்லனும். வேஸ்ட் ஃபிலோ..”

 

பிரவீன் “யாரை பாத்து என்ன சொன்ன.? இந்தா டா நண்பா..” என்று அளவுக்கு அதிகமான உணவை அள்ளி அவன் வாயில் திணித்தான்.

 

சபரி உண்ண முடியாமல் தடுமாற, கவி “இது உனக்கு தேவையா.? கம்முன்னு சாப்டுறத விட்டுட்டு டயலாக் வேண்டி கிடக்கு.. தண்ணிய குடி.. தண்ணிய குடி’ என்று நீரை தந்தாள். அங்கு சிரிப்பிற்கு பஞ்சமே இல்லாமல் போனது.

 

அனைவரும் ஒரு வழியாக உண்டு முடிக்க, சுப்ரியா, சக்தி, விஷ்ணு, பிரவீன் வீடியோ கேம் விளையாடி கொண்டு இருக்க,
கனகா,கவி,சபரி,ஆதி, திவி, ரவீ அவர்கள் அருகில் அமர்ந்து இருந்தனர். செல்வி அம்மா திவி அருகில் அமர்ந்து கொண்டு ரவீணாவை ஆராய, ஒரு வித உணர்வில் அங்கு அமர்ந்து இருந்தாள் ரவீணா..

 

ஆதி “யது.. எப்போ போனும்.?”

 

திவி “எங்க தியா.?”

 

ஆதி “காம்படிஸின்கு போனும்னு சொன்னல. அங்க தான்.!”

 

திவி “அதுவா.. நாளைக்கு 8.00 மணிக்குலாம் அங்க இருக்கணும்..”

 

ஆதி “அப்போ நீ காலேஜ்கு வர மாட்டியா.?”

 

ரவீ “ம்ஹும்.. அவ 4 நாளைக்கு வர மாட்டா..! இந்த மன்றம் 4 நாள் நடக்கும் அது முடியுற வரை காலேஜ்கு வர மாட்டா..”

 

சபரி “நல்லா என்ஜாய் பண்ற திவ்யா, நீ.”

 

திவி “நான்… என்ஜாய்… நீ பாத்த..? போ டா.. கடுப்படிக்காம..”

 

ஆதி “ஏன்.. எப்டி இருக்கும்? என்ஜாய்லாம் பண்ண முடியாதா.?”

 

திவி “அவன் தான் லூசு மாதிரி கேக்குறான்னா.. நீயுமா? நான் என்ன பிக்னிக்ஆ போறேன். தமிழ் மன்றம் போறேன். கவிதை, கட்டுரை இந்த மாதிரி எழுதவே எனக்கு நேரம் சரியா இருக்கும். அது தான் எனக்கு என்ஜாய்.. எனக்கு அதுல தான் மனதிருப்தி.. “

 

ஆதி “கவிதைலாம் எழுதுவியா.?”

 

கவி “ம்ம் அதுலாம் நல்லா எழுதுவா.! நெறய காதல் கவிதை கூட எழுதி இருக்கா.!”

 

ஆதி “யது… இப்போ ஒரு கவிதை சொல்லேன்.. இன்ஸ்டன்ட்டா..”

 

திவி “இது என்ன காபியா? இன்ஸ்டன்ட்டா வர, கவிதை பா.. அதுலாம் மூட் வேணும்.”

 

ஆதி “என்ன மூட்.?”

 

திவி “என்ன மூட் னா. அத நான் பீல் பண்ணனும்.. அப்போ தான் வரும்.. உடனே கேட்டலாம் வராது..”

 

ஆதி “அப்போ நான் பீல் பண்ண வைக்கவா.?” என்று மெதுவாய் கூற, இது சரியாக ரவீணா காதில் விழ அவள் அவனை பே வென பார்த்து கொண்டு இருந்தாள்.

 

திவி “ஹான் என்ன சொன்ன.?”

 

ஆதி “ஹான்.. அ.. அது.. ஒன்னும் இல்ல.. ப்ளீஸ்.. ப்ளீஸ் யது.. சொல்லேன்..”

 

கவி “அதுக்கு முன்னாடி ஒரு டௌப்ட்..!”

 

சபரி “அவ இன்னும் சொல்லவே ஆரம்பிக்கல. அதுக்குள்ள டௌப்ட்டா.? கேளும் கேட்டு தொலையும்” என்றான்.

 

கவி “அவ பேர் திவ்யதர்ஷினி, உன் பேர் ஆதித்யா. ஆமா தான?”

 

சபரி “ரொம்ப பெரிய டௌப்ட், கேட்டுட்டா. சொல்லுங்க.!”

 

கவி “ப்ச்.. ஆமா தான.?”

 

திவி “ம்ம்ம் ஆமா டி.. இதுல உனக்கு என்ன சந்தேகம்.? ஏன் நீ ஏதாவது புது பேர் வைக்க போறியா.?”

 

கவி “இதுவே நல்லா தான் இருக்கு. நான் ஏன் கேட்டேனா.? ஆதி உன்னை யதுன்னு கூப்டுறான். நீ அவன தியான்னு கூப்டுர. யது பையன் பேர். தியா பொண்ணு பேர் தான? ஏன் ரெண்டு பேரும் லூசு தனமா மாத்தி மாத்தி கூப்டுறீங்க.?”

 

கனகா “ம்ம் ஆமா.. யாதவ், யது நந்தன் இந்த மாதிரி பேர யது ன்னு கூப்பிடுவாங்க. ஏன் உன் பேர கூட சுருக்கி தியான்னு கூப்டலாம் ஏன் மாத்தி கூப்டுறீங்க ?”

 

ஆதியும் திவியும் ஒருவரை ஒருவர் புன்னகையுடன் பார்க்க, ரவீ ஆதியின் காதில் “லுக் விட்டது போதும், பதில சொல்லுங்க.”

 

ஆதி “நான் பர்ஸ்ட் பர்ஸ்ட் அவள பாக்குறப்போ அவ பிரண்ட் இவள யதுன்னு தான் இன்ட்ரோ குடுத்தா. அந்த பேர் ஆழமா பதிஞ்சிடுச்சு.. அதுவும் இல்லாம அவ பேர் திவ்யதர்ஷினில அதுல சென்டர் பார்ட் யத அத தான் நான் யதுன்னு கூப்டுறேன்..” என்று திவியை பார்த்துக் கொண்டேக் கூறினான்.

 

திவி அவனை இமைக்காமல் பார்க்க,

 

கவி “நீ சொல்லு திவி.? நீ ஏன் தியான்னு கூப்டுர ?”

 

திவி ‘எப்டி சொல்லுவேன் கவி.? சின்ன வயசுல இருந்தே அவன அப்டி தான கூப்டுறேன். அவன் வேணா மறந்து இருக்கலாம். என்னால மறக்க முடியாது’ என்று மனதில் நினைத்து விட்டு, “ஆதித்யா அதுல பின்பாதி தியா தான, அதான்  தியான்னு கூப்பிடுறேன் கவி, அவனும் என்ன பசங்கள கூப்டுர மாதிரி கூப்டுறான்.. சோ நானும் பொண்ணுங்க பேர் வச்சு கூப்டுரேன்”. என்றாள்.

 

ஆதி அவளை நம்பாத பார்வை பார்க்க, அவனின் பார்வையை உணர்ந்தவள் இதற்கு மேல் நின்றாள் உண்மை வெளி வந்துவிடும் என்று எண்ணி ” செல்விமா.. வாங்க எல்லார்க்கும் டீ போடலாம்” என்று அவரை அழைத்தாள்.

 

செல்வி அவளின் கையை பிடித்து “எங்க திவி போற.? கவிதை சொல்லிட்டு போ” என்க,

 

திவி “ம்மா… நீங்களுமா?” என்று சிணுங்கினாள்.

 

கவி, கனகா, ரவீ, சபரி, பிரவீன் ஒன்றாக சேர்ந்து “கவிதை கவிதை கவிதை” என கோரஸ் பாட,

 

திவி தலையில் அடித்துக் கொண்டு “சும்மா சும்மா கவிதை எழுத முடியாது. ஒரு தலைப்பு இல்லன்னா சுவிச்சுவேசன் சொல்லனும். அதை நான் உணரணும் அப்போ தான் கவிதை எழுத முடியும்” என்றாள்.

 

விஷ்ணு “சுவிச்சுவேஷன் தான நான் சொல்றேன்”

 

ஆதி “இல்ல நான் தான் சொல்லுவேன்”

 

விஷ்ணு “நான்”

 

ஆதி “நான்”

 

விஷ்ணு “நான் தான் சொல்லுவேன்”

 

ஆதி “நான் தான் சொல்லுவேன்”

 

கவி “அடச்சே.. கம்முன்னு இருங்க..! பேசாம இங்கி பிங்கி பாங்கி போட்டு பாக்கலாம்” என்றாள்.

 

சபரி “என்ன டா இதுங்க சின்ன புள்ளைங்க மாதிரி பண்ணுதுங்க!” என்று பிரவீனிடம் கூற,

 

பிரவீன் “வா.. நாம ஓரமா உட்காந்து  சின் சான் பாக்கலாம்.” என்றான்.

 

சபரி “இது ஒரு நல்ல யோசனை” என்று இருவரும் சென்றுவிட்டனர்.

 

இவர்கள் செய்யும் அலப்பறையில் சக்தியும் வர, சுப்ரியா வேண்டாவெறுப்பாய் நின்றுக் கொண்டு இருந்தாள்.

 

கனகா “ஓகே.. பட் திவ்யாவே சொல்லட்டும்” என்று திவியின் கண்களை மூடி, இருவரையும் மாறி நிற்க சொன்னாள்.

 

திவியும் யோசனையுடனே ஒருவர் முன் கை நீட்ட, கண் திறக்கையில் அவள் கை காட்டியது அவளவனை.! சாட்சாத் ஆதியே நின்றுக் கொண்டு இருந்தான்.

 

இருவரும் மாறி நிற்பார்கள், தான் விஷ்ணுவை கூற சொல்லலாம் என்று எண்ணியவளுக்கு இருவரும் மாறாமல் ஒரே இடத்தில் இருந்தது ஏமாற்றத்தையே தந்தது.

 

அனைவரும் ஒன்றாய் ஓ..ஓ..ஓ.. என கத்த,
ரவீ “ம்ம்.. சொல்லு.. சொல்லு.. சுவிச்சுவேஷன் சொல்லு” என்றாள்.

 

ஆதி நீண்ட பெருமூச்சை விட, சக்தி “மூச்சு பலமா அடிக்குது.. பாத்து டா மச்சான், நல்ல சுவிச்சுவேஷனா சொல்லு” என்றான் நக்கலாக.

 

ஆதி “நீயும்..” என்று ஆரம்பிக்க,

 

திவி “வெய்ட். நான்… நான் இமாஜின் பண்ணிக்குறேன்” என்று கண்களை மூடிக்கொண்டு “சொல்லு” என்றாள். நாமும் அவளோடு கொஞ்சம் கற்பனைக்கு போய்ட்டு வருவோம்.

 

ஆதி “நீயும் உனக்கு ரொம்ப பிடிச்ச பையனும் ஒண்ணா நீர்வீழ்ச்சி இருக்க இடத்துக்கு போய்க்கிட்டு இருக்கீங்க.! உடம்பு சிலிர்க்கிற அளவுக்கு தென்றல் காற்று வீசுது.

 

அதை அனுபவிச்சிகிட்டே ரெண்டு பேரும் ஒரு பாறை மேல உட்காறீங்க. பறவைகளோட சத்தம், நீர்வீழ்ச்சி ஓட சத்தம் மட்டும் தான் கேக்குது. உன் கால அங்க இருக்க நீரோடை தண்ணீர்ல வச்சு அத பீல் பண்ணிக்கிட்டு இருக்க, அப்போ உன் காது கிட்ட யாரோ ஊதுறாங்க. அந்த காத்து உன் உடம்பு முழுக்க ஸ்ப்ரெட் ஆகி அப்டியே சிலிர்க்க வைக்குது….

 

மெதுவா கண்ணை திறந்து பாக்குற, அந்த பையன் முகம் உன் முகத்துக்கு ரொம்ப பக்கத்துல, ரெண்டு பேரோட கண்ணும் ஏதோ சொல்லத் துடிக்குது, அப்போ அந்த பையன் உன்கிட்ட அவனோட காதல்ல சொல்றான். அப்போ உன்னோட பதில் என்னவா இருக்கும் யது.?” என்று தன் காதலையும் சேர்த்து கூறி விட்டான்.

 

அவன் கூறிய நிகழ்வில் அனைவரும் மெய் மறந்து இருக்க, ஆதி “சொல்லு யது.. உன்னோட பதில் என்ன..?”

 

திவி அதை முழு மனதோடு ரசிக்க, அவள் நினைத்த முகம் ஆதியின் முகம் என்று சிறிது நேரம் கழித்தே உணர்ந்தாள்.

 

திவி கண்களில் கண்ணீரோடு, தன் உணர்வை கவிதையால் வெளிப்படுத்தினாள்.

 

காத்திருந்தேனடா கள்வா!..
உன் கைகோர்க்கும் 
அந்நொடிக்காக..!
உன் சுவாசத்தை உணரும் 
இந்நொடிக்காக..!

நீர்வீழ்ச்சியின் சப்தத்தைவிட
என்  இதய அறையின் சத்தம் 
அதிகமாகிறதே ஏன்..?
அதில் நீ இருப்பதாலா..?

கால்களில் உரசும் ஓடை
நீரை விட,
உன் கண்களில் காணும் 
காதல்நீர்
என் உயிரின் ஆழம் வரை 
தீண்டுகிறதே.. ஏன்..?
என் மெய்யில் நீ கலந்ததனாலா..?

சுற்றி இருக்கும் பறவைகளின்
ஒலி இனிய கீதம் வாசிக்க,
என் இதய சிம்மாசனத்தில் மணிமகுடம் சூட,
என் அனுமதியை நீ பெறாமல்விட்டது ஏனோ..?
என் உயிரில் நீ இணைந்ததனாலா.?

உன்னில் தொலைத்த என்னை
எங்கே என்றுத் தேடுவேன்.
கள்வனே.. என் காதலானாய் மாறிவிட்டாய்..

ஆனால்.. ஆனால்..
நம் காதல் கைகூடாதடா கள்வா..!

உன் அன்பிற்கு பாத்திரமானவள் நானில்லையடா மூடா..!
என்னுள் உயிராய் இருப்பவன் நீ..!
ஆனால் உனக்கானவள் நானில்லை…
என்னுள் உணர்வாய்
இருப்பவன் நீ..!
ஆனால் உன்னவள் நானில்லை..!

உன் கண்ணில் கண்ட
காதல் நீர் கானல்நீர்தானோ,
என்னைப்பற்றி நீ அறிந்த பிறகு..?

உன்னவள் உனக்கானவள் உன்னைத் தேடி வருவாள்..!
ஏழேழு ஜென்மமும் உன்னைத் தொடர்வாள்..!
ஆனால் அவள் நானில்லை..!.. 

 

என்று தன் பதிலை கவிதையால் ஆதிக்கு உணர்த்தினாள்.

 

அனைவருக்கும் கவிதையின் பொருள் புரிய, இருவருக்கும் இடையில் இருக்கும் காதலை உணர்ந்தனர்.

 

கவி “செம செம திவி.. கவிதை சூப்பர்”

 

திவி கண்களை யாரும் அறியாமல் துடைத்துக்கொண்டு “ம்ம்.. நான் கிளம்புறேன்” என்றிட,

 

செல்வி “அதுக்குள்ள ஏன் திவி.? இன்னும் கொஞ்ச நேரம் இருக்கலாம்ல”என்று கேட்டார்.

 

திவி “இல்லம்மா.. அம்மா கிட்ட சீக்கிரம் வரேன்னு சொல்லி இருக்கேன். “

 

சக்தி “ம்ம் சரி திவி.. வா நான் ட்ராப் பன்றேன்”

 

திவி “இல்லண்ணா.. நான் ரவீ கூட போய்க்குறேன்.. நானும் அவளும் கிளம்புறோம்.” என்றாள்.

 

சக்தி “ம்ம் பாத்து போய்ட்டு வாங்க”

 

திவி “ம்ம் சரி ண்ணா.. வரோம்மா.. பை.. ” என்று விட்டு சென்றாள்.

 

சபரி “ஓகே டா.  எங்களுக்கும் டைம் ஆச்சு.. நாங்களும் கிளம்புறோம்..”

 

விஷ்ணு “நீங்க கிளம்புங்க.. நான் கொஞ்சநேரம் கழிச்சு வரேன்..” என்றான்.

 

ஆதி திவியையே பார்த்துக் கொண்டு இருக்க, வாசல் வரை சென்றவள் திரும்பி கண்களாலேயே மன்னிப்பும் கேட்டுக் கொண்டு விடை பெற்றாள்.

 

இறுகிய முகத்தோடு ஆதி தன் அறைக்கு விரைந்தான். சக்தியும் விஷ்ணுவும் அவனை பின்தொடர்ந்தனர்.

 

ரவீயும் திவியும் ஆட்டோ பிடித்துக்கொண்டு கோவிலுக்கு சென்றனர். ரவீ “திவி….”

 

திவி “ம்ம்ம்.. சொல்லு ரவீ..”

 

ரவீ “ஆதி உன்னை…”

 

திவி பெருமூச்சு விட்டவள், “ம்ம் ஆமா ரவீ.. அவன் என்ன லவ் பன்றான்” என்றான் வலி மிகுந்த குரலில்.

 

ரவீ “என்.. என்ன திவி சொல்ற..? எப்போல இருந்து..?”

 

திவி “ஹாஸ்பிட்டல்லயே… அவன் கண்ணுல பாத்தேன் ரவீ..”

 

ரவீ “அப்போ.. நீ திவி”

 

திவி வெற்று புன்னகை ஒன்றை உதிர்த்தவள் “தெரியல ரவீ..” என்றாள்.

 

ரவீ “என்ன திவி சொல்ற..?”

 

திவி “ம்ம்ம்.. உன்கிட்ட நிறைய விஷயம் சொல்லனும் ரவீ. அப்போ தான் என் முடிவை சரியா சொல்ல முடியும். உனக்கே தெரியும். எனக்கு என்னோட லட்சியம் எவ்ளோ முக்கியம்னு, அத விட ஆதியோட சந்தோசம் எனக்கு முக்கியம் ரவீ.

 

ஒவ்வொரு நாளும் நான் ஒரு அனுபவத்தோட தான் கடக்குறேன். ஒரு வருஷம் முன்னாடி மீனா என்ன விட்டு போனப்போ மனித வாழ்க்கைல இழப்பு ஏத்துக்குற விஷயம்ன்னு புரிஞ்சிகிட்டேன். அந்த வலி இன்னும் என் மனசுல இருக்கு. அந்த வலியோட இன்னும் நெறய வலி நான் அனுபவிக்கணும் போல ரவீ. தண்டிக்குறத விட மன்னிப்பு எவ்ளோ பெரிய தண்டனைனும் உணர்ந்தேன். எப்போ ஆதிய பிரிஞ்சனோ அப்போவே கொஞ்சம் கொஞ்சமா குற்ற உணர்ச்சில செத்துகிட்டு இருக்கேன். இதுல காதல் கீதல்ன்னு அவன மறுபடியும் காயப்படுத்த விரும்பல ரவீ.. என்ன பத்தி முழு உண்மையும் தெரிஞ்சா அவன் என்ன முழுசா வெறுத்துடுவான்.. அது எனக்கு நல்லாவே தெரியும். அதான் இப்போவே அவன் காதல என்னால ஏத்துக்க முடியாதுனு சொல்லாம சொல்லிட்டேன். ” என்றாள் தழுதழுத்த குரலில்..

 

ரவீ “நீ என்.. என்ன சொல்ற திவி..?”

 

திவி ” கோவிலுக்கு போலாம் ரவீ. அங்க போய் சொல்றேன் ரவீ.. ” என்று இருவரும் பயணத்தை தொடர்ந்தனர்.

 

ஆதியின் வீட்டில்…

 

ஆதி இறுகிய முகத்தோடு அவனது அறையில் இருக்க, சக்தி “ஆதி… ” என்றான் மெல்லிய குரலில்.

 

ஆதி அவனை ஏறிட்டு, வெற்று புன்னகையுடன் “சொல்லு டா.”

 

விஷ்ணுவும் சக்தியும் அவனருகில் வந்து அமர, விஷ்ணு “ஏன் டா ஒரு மாதிரி இருக்க.?”

 

ஆதி “திவி சொன்ன கவிதை உனக்கு புரியலையா டா .?” என்றான் கேள்வியாக,

 

சக்தி “எனக்கு புரிஞ்சது டா. ஆனா அவ சுவிச்சுவேஷன்கு தகுந்த மாதிரி தான கவிதை சொன்னா.? அத ஏன் நீ சீரியஸ்ஸா எடுத்துக்கிட்டு இருக்க.?”

 

ஆதி “அவ கவிதைக்கு சொல்லல டா.. நான் சுவிச்சுவேசன்ன சொன்னப்போவே அவ என் காதலை புரிஞ்சிக்கிட்டா டா. அதனால தான் அவ அப்டி சொல்லி இருக்கா.”

 

விஷ்ணு “அவ முடியாதுன்னு சொன்னதுனால வருத்தப்படுறியா டா.?”
சக்தியும் அதே கேள்வியுடன் பார்க்க,

 

ஆதி “அவ முடியாதுன்னு சொன்னா கூட நான் எப்படியாவது ஒத்துக்க வச்சி இருப்பேன்டா. ஆனா.. ஆனா.. அவ… அவ என் காதலுக்கு தகுதி இல்லாதவன்னு சொல்ற டா..”

 

விஷ்ணு “என்ன டா சொல்ற ?” என்று சக்தியை பார்க்க,

 

சக்தியும் ஆம் என்று தலையசைத்தான்.

 

ஆதி “அவ சொன்ன கவிதை..
காத்திருந்தேனடா கள்வா!..
உன் கைகோர்க்கும் அந்நொடிக்காக..!
உன் சுவாசத்தை உணரும் இந்நொடிக்காக..! என்ற வரில காதலுக்கு காத்திருந்ததா சொன்னா..

நீர்வீழ்ச்சியின் சப்தத்தைவிட
என்  இதய அறையின் சத்தம் அதிகமாகிறதே ஏன்..?
அதில் நீ இருப்பதாலா..?

இந்த வரில அவ இதயத்துல நான் இருக்கேன்னு சொன்னா..

கால்களில் உரசும் ஓடை நீரை விட,
உன் கண்களில் காணும் காதல்நீர்
என் உயிரின் ஆழம் வரை தீண்டுகிறதே.. ஏன்..?
என் மெய்யில் நீ கலந்ததனாலா..?

அவ உடம்புல கூட நான் கலந்து இருக்குறதா சொன்னா,

சுற்றி இருக்கும் பறவைகளின்
ஒலி இனிய கீதம் வாசிக்க,
என் இதய சிம்மாசனத்தில் மணிமகுடம் சூட, என் அனுமதியை நீ பெறாமல்விட்டது ஏனோ..?
என் உயிரில் நீ இணைந்ததனாலா.?

அவ பர்மிசின் இல்லாம அவ மனசுல நான் இருக்கேன்னு சொன்னா,

உன்னில் தொலைத்த என்னை
எங்கே என்று தேடுவேன்.
கள்வனே.. என் காதலானாய் மாறிவிட்டாய்..

என் காதலை ஏத்துகிட்டதா சொன்னா..

ஆனால்.. ஆனால்..
நம் காதல் கைகூடாதடா கள்வா..!

ஆனா அந்த காதல் கைகூடாது..

உன் அன்பிற்கு பாத்திரமானவள் நானில்லையடா மூடா..!
என்னுள் உயிராய் இருப்பவன் நீ..!
ஆனால் உனக்கானவள் நானில்லை…
என்னுள் உணர்வாய் இருப்பவன் நீ..!
ஆனால் உன்னவள் நானில்லை..!

என் அன்பிற்கு காதலுக்கு அவ தகுதியானவ இல்லையாம். அவ மனுசல உயிர்ல உணர்வுல நான் இருக்கேன். ஆனா எனக்கானவ அவ இல்லையாம்.

உன் கண்ணில் கண்ட
காதல் நீர் கானல்நீர்தானோ..
என்னைப்பற்றி நீ அறிந்த பிறகு..?

அவள பத்தி நான் தெரிஞ்சிகிட்டா என் காதல் கானல்நீர் தான்னு சொல்றா..

உன்னவள் உனக்கானவள் உன்னைத் தேடி வருவாள்..!
ஏழேழு ஜென்மமும் உன்னைத் தொடர்வாள்..!
ஆனால் அவள் நானில்லை..!.. 

எனக்கானவ என்ன தேடி வருவாளாம், ஆனா அது அவ இல்லையாம். அவள பத்தி எனக்கு என்ன தெரியல.? ஏன் அவ அப்டி சொன்னா..? சொல்லுங்க டா..? ஏன் அவ அப்டி சொன்னா..?” என்று அறையே அதிரும்படி கத்தினான்.

 

கோவிலில் ரவீணாவிடம் அனைத்தையும் திவி கூற தொடங்கினாள்.

கனவு தொடரும்….🌺🌺🌺

 

கதையை பற்றி உங்க கமெண்ட்ஸ் ச சொல்லிட்டு போங்க பிரண்ட்ஸ்.. எப்படி போகுது.. கதை..?

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
6
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்